Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

டெல்லியில் இந்திய குடியரசுத் தின கொண்டாட்டம்!

January 26, 2023
spacer.png

இந்தியாவின் 74வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி கர்தவ்ய(கடமை) பாதையில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றினார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  பிரதமர் நரேந்திர மோடி,  மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்.

முன்னதாக, சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23-ஆம் தேதி ஒரு வார கால கொண்டாட்டங்கள் தொடங்கியது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனவரி 23, 24 ஆகிய திகதிகளில் டெல்லியில் நடன விழாவான ‘ஆதி ஷௌர்யா – பர்வ பராக்ரம்’ ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுகள் தியாகிகள் தினமான ஜனவரி 30 அன்று முடிவடையும்.

காலை 10 மணியளவில் போர் தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு வருகைபுரிந்த பிரதமர் நரேந்திர மோதி, மறைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து குடியரசுத் தின நிகழ்ச்சி நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு அவர் வந்தார். காலை 10.30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.

 

https://globaltamilnews.net/2023/186762/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெல்லியில் குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் வேலு நாச்சியார் முதல் ஒளவையார் வரை - சிறப்பம்சங்கள் என்ன?

டெல்லி குடியரசு தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

25 ஜனவரி 2023, 20:32 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் 74வது குடியரசு தின கொண்டாட்டம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி கலந்து கொள்கிறார்.

கடந்த ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையில், 75ஆம் ஆண்டு சுதந்திர தினமான ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்வின் அங்கமாக இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

முன்னதாக, சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி ஒரு வார கால கொண்டாட்டங்கள் தொடங்கியது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடன விழாவான ‘ஆதி ஷௌர்யா - பர்வ பராக்ரம்’ ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுகள் தியாகிகள் தினமான ஜனவரி 30 அன்று முடிவடையும்.

 

இந்த நிகழ்வுகளுக்கு இடையில்தான் இந்திய குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டு ஊர்தியில் என்ன சிறப்பு?

டெல்லியில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டின் சார்பில் இந்த ஆண்டு பங்கேற்கும் அலங்கார ஊர்தி, சங்க காலம் தொட்டு சமூக வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்கள் வழங்கிய பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தனை இயற்றிய ஒளவையார், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக தீரத்துடன் போரிட்ட வீர மங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

மையப்பகுதியில் கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி, அந்தக்காலத்திலேயே மருத்துவர்களாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார், 105 வயதிலும் வேளாண் துறையில் சாதித்து வரும் பாப்பம்மாள் ஆகியோரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ஊர்தியின் பின்பகுதியில் சோழப்பேரரசர் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலின் மாதிரி வடிவம் நிறுவப்பட்டுள்ளது. அலங்கார ஊர்தியுடன் கொம்பு மேளம், நாதஸ்வரம், தவில் வாசித்தபடி இசைக்கலைஞர்கள் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காத வகையில், தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், பாதுகாப்புத்துறை தேர்வுக்குழுவின் பரிந்துரைகளின்படி அலங்கார ஊர்தியின் அம்சங்கள் இல்லாததால் அந்த வாகனம் இறுதித் தேர்வில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை அங்கீகரிக்காமல் தேர்வுக்குழு அலைக்கழித்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாசாரம், சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி இடம்பெற்றுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

YouTube பதிவின் முடிவு

மிடுக்குடன் அணிவகுக்கும் வீரர்கள்

குடியரசு தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலை 10.30 மணி அளவில் தொடங்கும் குடியரசு தின அணிவகுப்பு, நாட்டின் வளர்ந்து வரும் உள்நாட்டு திறன்கள், பெண் சக்தி மற்றும் ‘புதிய இந்தியா’ உருவாவதை சித்தரிக்கும் ராணுவ வலிமை மற்றும் கலாசார பன்முகத்தன்மை ஆகியவற்றின் தனித்துவ கலவையாக இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குடியரசு தின நாளில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையுடன் அணிவகுப்பு விழா தொடங்கும்.

அந்த நினைவிடத்தில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். இதையடுத்து பிரதமர் மற்றும் பிற முக்கியஸ்தர்கள், கர்தவ்யா பாதையில் உள்ள நிகழ்ச்சி மேடைக்கு செல்வார்கள்.

 

அங்கு சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபர் வந்த பிறகு, குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ கர்தவ்ய பாதைக்கு வருகை தருவார். அவரை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர், முப்படை தளபதிகள் வரவேற்பர். இதையடுத்து பாரம்பரிய முறைப்படி கர்தவ் பாதையில் தேசிய கொடி ஏற்றப்படும். அந்த நேரத்தில் 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்படும்.

தேசிய மூவர்ண கொடி ஏற்றப்படும் நேரத்தில் இந்திய ராணுவத்தின் 105ஆம் ஹெலிகாப்டர் பிரிவைச் சேர்ந்த நான்கு எம்ஐ-17 1வி/வி5 ரக ஹெலிகாப்டர்கள் கர்தவ்யா பாதையில் இருக்கும் பார்வையாளர்கள் மீது மலர்களைப் பொழியும்.

இதையடுத்து குடியரசு தலைவர் வணக்கம் செலுத்தியவுடன் கர்தவ்ய பாதை அணிவகுப்புக்கு பொறுப்பு வகிக்கும் தளபதியும் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்றவருமான லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் தலைமையில் அணிவகுப்பு நடத்தப்படும். அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் மேஜர் ஜெனரல் பவ்னிஷ் குமார் அணிவகுப்பை வழிநடத்துவார்.

தீரச் செயல் புரிந்தவர்களுக்கான உயரிய விருதுகளான பரம் வீர் சக்ரா, அசோக் சக்ரா பெற்றவர்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

எகிப்திய குழு

குடியரசு தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கர்தவ்யா பாதையில் அணிவகுத்து செல்லும் எகிப்திய ராணுவ வீரர்கள் குழுவை அந்நாட்டின் ராணுவ கர்னல் மஹ்மூத் முகமது அப்தெல் ஃபத்தாஹ் எல் கரசாவி வழிநடத்த அப்படையின் ஒருங்கிணைந்த இசைக்குழு அணிவகுப்பில் செல்லும். அந்நாட்டுக் குழுவில் 144 வீரர்கள் இடம்பெற்றிருப்பர்.

 

இந்திய ராணுவ குழுக்கள்

61ஆம் குதிரைப்படைப் பிரிவின் முதல் குழு கேப்டன் ரைசாடா ஷௌர்யா பாலி தலைமையில் அணிவகுப்பில் செல்லும்.

இந்திய ராணுவத்தின் குதிரைப்படை வீரர்கள் அணிவகுப்பில் செல்ல, அதைத்தொடர்ந்து ஒன்பது சீருடை வீரர்களின் ஆறு அணிவகுப்புக் குழுக்கள் மற்றும் ராணுவ விமானப் படையின் மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் (ALH) குழுவினர் அடுத்தடுத்து அணிவகுப்பில் இடம்பெறுவர்.

இந்திய ராணுவத்தின் பிரதான போர் தளவாடங்களில் முக்கியமானவை ஆன அர்ஜுன் டாங்கி, நாக் ஏவுகணை அமைப்பு (NAMIS), பிஎம்பி-2 காலாட்படை போர் வாகனம், விரைவு எதிர்வினை வாகனம், கே-9 வஜ்ரா-கண்காணிக்கப்பட்ட சுய-இயக்க ஹோவிட்சர் துப்பாக்கி இயந்திரம், பிரமோஸ் ஏவுகணை, 10 மீட்டர் குறுகிய தூர பாலம், மொபைல் மைக் மொபைல் நெட்வொர்க் மையம் மற்றும் ஆகாஷ் (புதிய தலைமுறை உபகரணங்கள்) ஆகியவை அணிவகுப்பில் செல்லும்.

தரைப்படைப் பிரிவில் சிறப்புப்படைப்பிரிவு, பஞ்சாப் படைப்பிரிவு, மராத்தா லைட், டோக்ரா, பிகார் மற்றும் கூர்க்கா படைப்பிரிவுகள் உட்பட மொத்தம் ஆறு அணிவகுப்புக் குழுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுப்பில் செல்வர்.

டெல்லி குடியரசு தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆண்டு அணிவகுப்பின் மற்றொரு சிறப்பம்சமாக, 'இந்தியாவின் அமிர்த காலம் - படைவீரர்களுக்கு சமர்ப்பணம்' என்ற கருப்பொருளுடன் முன்னாள் படை வீரர்களின் புதிய அலங்கார ஊர்தி இடம்பெறும். கடந்த 75 ஆண்டுகளில் படைவீரர்களின் பங்களிப்புகள் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் முயற்சிகள் பற்றிய ஒரு பார்வையை பிரதிபலிக்கும் வகையில் இந்த அலங்கார ஊர்தி இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய கடற்படைக் குழு

டெல்லி குடியரசு தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதைத்தொடர்ந்து இந்திய கடற்படை சார்பில் லெப்டினன்ட் கமாண்டர் திஷா அம்ரித் தலைமையிலான 144 இளம் வீரர்கள் அணிவகுத்துச் செல்வர்.

இந்த குழுவில் முதல் முறையாக மூன்று பெண்கள் மற்றும் ஆறு அக்னிவீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, 'இந்திய கடற்படை - நம்பகமான, ஒருங்கிணைந்த மற்றும் எதிர்கால ஆதாரம்' என்ற கருப்பொருளில் வடிவமைக்கப்பட்ட கடற்படை தளவாடங்கள் அணிவகுத்துச் செல்லும்.

இந்திய கடற்படையின் பல பரிமாண திறன்கள், பெண் சக்தி மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட கடற்படை தளவாடங்கள் அலங்கார ஊர்தியில் செல்லும்.

கடலோர கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தப்படும் சிறிய ரக டோர்னியர் விமானத்தின் பெண்கள் விமானக் குழுவினர் கடந்த ஆண்டு மேற்கொண்ட கண்காணிப்புப் பணியை விளக்கும் காட்சி கடற்படை அலங்கார ஊர்தியில் இடம்பெறும்.

கடல் கமாண்டோக்களைப் பயன்படுத்தும் துருவ் ஹெலிகாப்டருடன் புதிய உள்நாட்டு நீலகிரி கிளாஸ் கப்பலின் மாதிரி அலங்கார ஊர்தியில் நிறுவப்பட்டிருக்கும். பக்கவாட்டில், உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்களின் மாதிரிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இந்திய விமானப்படை குழு

டெல்லி குடியரசு தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய விமானப்படையின் 144 விமான வீரர்கள் மற்றும் நான்கு அதிகாரிகள், ஸ்குவாட்ரன் லீடர் சிந்து ரே தலைமையில் அணிவகுப்பில் செல்வர்.

இதைத்தொடர்ந்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, இந்திய கடலோர காவல் படை, டெல்லி காவல்துறை, தேசிய மாணவர் படை, தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் ஆகியோரின் அணிவகுப்பு இடம்பெறும்.

இவர்களைத் தொடர்ந்து, தீரம், கலை, கலாசாரம், விளையாட்டு ஆகி துறைகளில் தன்னலம் கருதாது சாதித்த மற்றும் பிரதமரின் ராஷ்ட்ரிய பால விருதுகள் பெற்ற பதினோரு பேர் திறந்தவெளி ஜீப்பில் அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்படுவர்.

இது தவிர 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், ஆறு மத்திய அரசுத்துறைகள் ஆகியவற்றின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது.

இந்த 23 அலங்கார ஊர்திகளுக்குப் பின்னால் 497 கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். இந்த கலைஞர்கள் பெண் சக்தியை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் பரத பாவனைகளை கர்தவ்ய பாதையில் நிகழ்த்திக் காட்டுவார்கள்.

இதைத்தொடர்ந்து இந்திய ராணுவத்தின் துணிச்சல் மிகுந்த மோட்டார் சாகச குழுவினர் வியப்பூட்டும் சாகசங்களையும் நடமாடும் வாகனத்தில் யோகா கலையிலும் ஈடுபட்டு பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவர்.

நிகழ்ச்சின் நிறைவாக கர்தவ்ய பாதை வான் பகுதியில் இந்திய விமானப்படையினஅ 45 விமானங்கள் வான் சாகசத்தில் ஈடுபடும். ரஃபால், மிக்-29, சூ-30 எம்கே1 ஜாக்குவார், சி130, சி-17, டோர்னியர், டகோட்டா, எல்சிஹெச் பிரச்சாண்ட், அப்பாச்சே, சாரங், ஏஇடபிள்யு அண்ட் சி ரக விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் பறக்கும்போது வெவ்வேறு வடிவங்களில் துல்லியமாக பறந்து தங்களுடைய திறன்களை பறைசாற்றும்.

கடைசி நிகழ்வாக ரஃபால் போர் விமானம், வான் பகுதியில் தாழப்பறந்து மேலெழும்பி சாகசத்தில் ஈடுபடும்.

https://www.bbc.com/tamil/articles/c0x43ve95w7o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெல்லியில் இந்திய குடியரசுத் தின கொண்டாட்டம் : முழு விவரம்

இந்தியாவின் 74-ஆவது குடியரசுத் தினம்

பட மூலாதாரம்,DOORDARSHAN NATIONAL

26 ஜனவரி 2023, 05:06 GMT

இந்தியாவின் 74வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி கர்தவ்ய(கடமை) பாதையில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றினார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  பிரதமர் நரேந்திர மோதி,  மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். 

முன்னதாக, சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23-ஆம் தேதி ஒரு வார கால கொண்டாட்டங்கள் தொடங்கியது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடன விழாவான ‘ஆதி ஷௌர்யா - பர்வ பராக்ரம்’ ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுகள் தியாகிகள் தினமான ஜனவரி 30 அன்று முடிவடையும். 

காலை 10 மணியளவில் போர் தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு வருகைபுரிந்த பிரதமர் நரேந்திர மோதி, மறைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து குடியரசுத் தின நிகழ்ச்சி நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு அவர் வந்தார். காலை 10.30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.

 
இந்தியாவின் 74-ஆவது குடியரசுத் தினம்

பட மூலாதாரம்,DOORDARSHAN NATIONAL

இதைத் தொடர்ந்து 21 துப்பாக்கி குண்டுகள் முழக்கத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  நான்கு Mi-17 1V/V5 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவகப்பட்டன. இதை தொடர்ந்து முப்படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ஏற்றுகொண்டார். பிரமோஸ் ஏவுகணை, ஆகாஷ் ஏவுகணை போன்றவையும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.

இதன்பின்னர் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு தொடங்கியது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 17 அலங்கார ஊர்திகள் மற்றும் பல்வேறு துறைகளின் 6 அலங்கார ஊர்திகள் என மொத்தம் 23 அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றன. தமிழ் நாடு சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தி  தமிழ்நாட்டின் பெண்கள் முன்னேற்றம் மற்றும் கலாச்சாரம் என்னும் கருப்பொருளை கொண்டுள்ளது. 

தமிழ்நாட்டு அலங்கார ஊர்தியில் அவ்வையார், பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மருத்துவர் முத்துலட்சுமி, இயற்கை விவசாயம் செய்துவரும் பத்மஸ்ரீ பாப்பம்மாள் ஆகியோரது சிற்பங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான கரகாட்டத்தை அணிவகுப்பில் பங்கேற்றவர்கள் ஆடி சென்றனர்.

இந்தியாவின் 74-ஆவது குடியரசுத் தினம்

பட மூலாதாரம்,DOORDHARSAN NATIONAL

வந்தே பாரதம் நிகழ்ச்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 479 கலைஞர்களின் கலாச்சார நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது.  இந்த ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பில் இந்தியாவின் முப்படை வீரர்களுடன்,  எகிப்து ராணுவத்தைச் சேர்ந்த 180 பேர் கொண்ட ராணுவக் குழுவும் பங்கேற்கவுள்ளது.  60,000 முதல் 65,000 மக்கள் வரை இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், பாதுகாப்பிற்காக டெல்லியில் 6 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்றூம் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக பிடிஐ ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 

குடியரசுத் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசு தின வாழ்த்துகள். சுதந்திர தினத்தின் அமிர்த மஹோத்சவின் போது நாம் கொண்டாடுவதால் இம்முறை குடியரசுத் தின விழா சிறப்பு வாய்ந்தது. நாட்டின் மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க நாம் ஒற்றுமையாக முன்னேற விரும்புகிறோம். சக இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!” என குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல், பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்திய குடியரசுத் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

https://www.bbc.com/tamil/articles/cp62dd28d7ko



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.