Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சாதி இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க. நிர்வாகி கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்குள் நுழைந்த பட்டியல் சாதி இளைஞரை ஆபாசமாக திட்டிய தி.மு.க. நிர்வாகி கைது

திமுக நிர்வாகி
30 ஜனவரி 2023, 14:18 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சேலம் மாவட்டத்தில் திருமலைகிரி கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞரை தி.மு.க. நிர்வாகி ஒருவர் ஆபாசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மேற்கு வட்டத்தில் இளம்பிள்ளை செல்லும் சாலையில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கோவிலில் தற்போது திருவிழாவும் கும்பாபிஷேகமும் நடந்து வருகிறது. இந்த நிலையில், கோவில் கும்பாபிஷேகம் முடிந்து வேறு பூஜைகள் நடைபெற்று வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான பிரவீன் என்பவர் கோவிலுக்குள் வழிபடச் சென்றிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தாங்கள் அந்தக் கோவிலுக்குள் வரமாட்டோம் என அங்குள்ள ஆதிக்க ஜாதியினர் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட திருமலைகிரி திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், கடந்த 27ஆம் தேதி அந்தப் பட்டியலின இளைஞரை ஊர் மக்கள் முன்பாக ஆபாசமாகத் திட்டினார். "யாரு சொல்லிடா கோவிலுக்குள்ள வந்த? சொல்றா... ஊர்லயே இருக்க முடியாது, ஞாபகம் வச்சுக்க... ஊர் நல்லா இருக்கனும்னு விடிய விடிய தூங்காம உக்காந்துக்கிட்டிருக்கிறேன்... இங்க நோம்பு போடலைனா உங்க ஊர்லையும் போட முடியாது. அப்படியே பேத்துப்புடுவேன்.. இத்தனை பேருக்குத் தெரியாததை நீ சொல்றியா... எங்க ஊர்ல பாதிப்பேர் கோவிலுக்கே வர மாட்டேங்கிறான். கோவிலே வேணாங்கிறான்... இந்தக் கோவிலைக் கட்ட ஒங்க ஆயாலும் அப்பனும் பணக் கொடுத்தாங்களா...? பல்லு கில்லெல்லாம் கழட்டிப்புடுவேன். யாரு சொல்லி இதைக் கேக்குறாங்கன்னு சொன்னா, பேத்துப்புடுவேன். ரோட்டுல எங்கையும் நடமாட முடியாது." என்று பேசிய மாணிக்கம், தனது பேச்சின் நடுவே அந்த இளைஞரையும் அவரது உறவினர்களையும் மிக மோசமான கெட்ட வார்த்தைகளாலும் திட்டுவதாக காட்டுகிறது அந்த வீடியோ.

இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடுமையான கண்டனைத்தை வெளியிட்டுள்ளது. விரைவில் அந்தக் கோவிலில் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம் சேலம் மேற்கு வட்டத்தில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் தலித் சமூகத்தைச் சார்ந்த பிரவீன் என்பவர் முதல் முறையாக கோவிலுக்குள் சென்று வழிபட்டிருக்கிறார். இதனை அறிந்த சாதியவாதிகள், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் கோவிலுக்குள் வந்து விட்டதால் கோவில் தீட்டாகிவிட்டது என்றும், சாதி இந்துக்கள் கோவிலுக்குள் வரமாட்டோம் எனத் தெரிவித்ததாகக் கூறி, ஒன்றிய திமுக செயலாளரும் திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான திரு.டி.மாணிக்கம் என்பவர் கடந்த 27ஆம் தேதி கிராமத்து மக்கள் அனைவரையும் கூட்டி வைத்து ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாய்க்கு, வாய் ஆபாச சொற்களை வைத்து பேசியதோடு, கிராமத்து மக்களை "கிராமத்து விட்டே விரட்டி விடுவேன், கொலை செய்து விடுவேன்" என்றும் நேரடியாக மிரட்டுகிறார். இந்தச் செய்தியை அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய சேலம் இரும்பாலை காவல்துறையினர், வெட்கக்கேடான முறையில் பிரவீனை அழைத்து சமாதானப்படுத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. மாநில காவல்துறையும், மாநில நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு திமுக ஒன்றியச் செயலாளரை எஸ்சி எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து எங்கிருந்தாலும் கைது செய்ய வேண்டும். மாணிக்கத்தை அந்த கிராமத்தை விட்டே சட்டப்படி வெளியேற்ற வேண்டும்.

 

மேலும் ஓரிரு தினங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரிய மாரியம்மன் கோவிலில் தலித் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லும் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தும்" என்று கூறப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து இடைநீக்கம், கைது

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க. சேலம் மாவட்டம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளரான டி. மாணிக்கத்தை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்வதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

இருந்தபோதும், இந்த விவகாரம் குறித்து சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுவருகிறது. சம்பந்தப்பட்ட நபரை எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டுமென பலர் ட்விட்டரில் பதிவுசெய்து வருகின்றனர்.

 இதற்கிடையில், டி. மாணிக்கம் மீது பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் புகார் அளித்தார். இதையடுத்து காவல் உதவி ஆணையர் ஆனந்தி, மாணிக்கத்தை இரும்பாலை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்தார்.  வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அதற்குப் பிறகு அவர் கைதுசெய்யப்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cpw1djlg94zo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டியலின இளைஞரை திமுக நிர்வாகி மிரட்டிய விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
2 மணி நேரங்களுக்கு முன்னர்

சேலம் மாவட்டத்தில் கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின சமூக இளைஞரை திமுக நிர்வாகி ஒருவர் மிரட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாட்டின் அரசு தலைமைச் செயலாளர், டிஜிபி உட்பட ஐந்து பேருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம் மேற்கு வட்டத்தில் இளம்பிள்ளை செல்லும் சாலையில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கோவிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், கோவில் கும்பாபிஷேகம் முடிந்து வேறு பூஜைகள் நடைபெற்று வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான பிரவீன் என்பவர் கோவிலுக்குள் வழிபடச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தாங்கள் அந்தக் கோவிலுக்குள் வரமாட்டோம் என அங்குள்ள ஆதிக்க சமூகத்தினர் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட சேலம் மாவட்ட திமுக தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளரான டி.மாணிக்கம், கடந்த 27ஆம் தேதி அந்தப் பட்டியலின இளைஞரை ஊர் மக்கள் முன்னிலையில் எச்சரித்தார்.

 

 

இதையடுத்து, இளைஞர் பிரவீனை ஆபாசமாகத் திட்டி மாணிக்கம் மிரட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் காணொளி தொடர்பாக பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டி.மாணிக்கத்தை திமுக இடைநீக்கம் செய்தது. அதோடு, மாணிக்கம் கைதும் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலான காணொளியை அடிப்படையாக வைத்து இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 7 நாட்களுக்குள் தங்களுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை இயக்குநர், சேலம் மாவட்ட ஆணையர், சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட்டிற்கு உத்தரவிட்டுள்ளது.

 

அறிக்கையை நேரிலோ அல்லது ஃபேக்ஸ், தபால், மின்னஞ்சல் மூலமாக சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தவறும்பட்சத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c72l6ernrepo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.