Jump to content

வெட்டிவேலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டிவேலை

அன்றாடம் பேசும் போது நமது சொல்லாடலில் அடிக்கடி பயன்படுத்துவது வெட்டிவேலை.  சோழர்கள் கால கல்வெட்டுகளில் அவர்களது வரி வகைகள் பற்றி படிக்கும் போது அதற்கானஅடிப்படை அங்கிருந்து வந்திருக்குமோ என்று எண்ன தோன்றுகிறது. சோழர்கள் காலத்தில் வெட்டி வரி என்று ஒரு வரி இருந்திருக்கிறது. எந்த ஒரு ஊதியமும் பெற்றுக்கொள்ளாமல் அரசுக்கு அல்லது ஊருக்கு செய்யும் ஊழியமே வெட்டி எனப்படுவதாகும். ஊழியமாக தரபட்டாலும் இதை வரி இனாமாக எடுத்து கொள்ளபடுவதே முறை. நீர் கிடைக்காத காலங்களில் ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டி ஊற்று நீரை தேக்கி செய்யும் ஊழியத்தை செய்நீர் வெட்டி என்று குறித்தனர். வெள்ளாமை சார்ந்த பணிகளுக்கு செய்யும் வேலைகளை வெள்ளான் வெட்டி என்று கூறுகின்றனர். குடும்பத்தக்கு ஒருவர் கோடை காலங்களில் நீர் பாசன வேலைகளை செய்வதை சுமா 30 - 35 ஆண்டுகளுக்கு முன் கூட கிராமத்தில் பார்த்திருக்கிறேன். வேலை செல்ல ஆள் அனுப்பாதவர்கள் அதற்குன்டான பணத்தை செலுத்த வேண்டும்.

எனவே நீங்கள் ஊதியம் பெறாமல் செய்யும் பொது காரியங்கள் அனைத்தையும் வெட்டி வேலை என்று கூறலாம்.

image.png

தமிழக தொல்லியல் துறைக்கு மிக்க நன்றி.  அவர்கள் அனைத்து தொல்லியல் கல்வெட்டுகள் சார்ந்த புத்தகம் மற்றும் அனைத்து வெளியீடுகளையும் இலவசமாக இணையத்தில் கொடுத்துள்ளார்கள்.  அதன் மூலம் பல வரலாற்று செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது.   https://www.tnarch.gov.in/e-publication-books

http://tamilfuser.blogspot.com/2021/03/blog-post.html

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.