Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியவள் ரசித்த சினிமா பாடல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

படம்:- மூன்றாம் பிறை

பாடியவர்:-கே ஜே ஏசுதாஸ்

இசைஅமைத்தவர்:- இளையராஜா

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்

ராரிராரோ ஓராரிரோ

ராரிராரோ ஓராரிரோ

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில் ஒரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்

உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்

கண்டேன் உனை நானே

Edited by இனியவள்

  • Replies 131
  • Views 49.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

படம் :- அலைபாயுதே

பாடல் :- எவனோ ஒருவன்...

பாடகர்கள்:- சுவர்ணலதா

பாடல் வரிகள்:- வைரமுத்து

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி

கண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

என்றோ என்றோ இறந்திருப்பேன்!

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலா

உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலா

இரக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தன் சோகம் தீர்வதற்கு

இதுபோல் மருந்து பிறிதில்லையே

அந்தக் குழலை போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

  • தொடங்கியவர்

படம் : டூயேட்

பாடல் : என் காதலே என் காதலே

பாடியவர்: S.P பாலசுப்ரமணியம்

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

என் காதலே என் காதலே

என்னை என்ன செய்யப் போகிறாய்

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள்

ரெண்டில் என்ன தரப்போகிறாய்

கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு

ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே....

காதலே நீ பூவெறிந்தால்

எந்த மலையும் கொஞ்சம் குளையும்

காதலே நீ கல்லெறிந்தால்

எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீழ்வதா இல்லை வீழ்வதா

உயிர் வாழ்வதா இல்லை போவதா

அமுதென்பதா விஷமென்பதா

இல்லை அமுத விஷமென்பதா

என் காதலே என் காதலே.........

காதலே உன் காலடியில்

நான் விழுந்து விழுந்து தொழுதேன்

கண்களை நீ மூடிக் கொண்டா

நான் குலுங்கிக் குலுங்கு அழுதேன்

இது மாற்றமா தடுமாற்றமா

என் நெஞ்சிலே பனி மூட்டமா

நீ தோழியா இல்லை எதிரியா

என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே.............

Edited by இனியவள்

  • தொடங்கியவர்

படம் : டூயேட்

பாடல் : அஞ்சலி அஞ்சலி.....

பாடியவர்: S.P பாலசுப்ரமணியம்

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி

பொண்னே உன் பெயருக்கு மொன்னாஞ்சலி

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி

கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

அஞ்சலி......

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி

காதலின் மொன் சங்கிலி இணைத்தது கண்மணி

கடலிலே மழவீழ்ந்தமின் எந்தத்துளி மழைத்துலி

காதலில் அதிபோல நான் கலந்திட்டேன் காதலி

திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்

தினமொரு புதுப்பாடல் படித்திவிட்டேன்

அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

பூவே....

சீதையின் காதல் அன்று விழி விழி நுழைந்தது

கோதையின் காதலின்று செவி விழி புகுந்த்து

என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது

இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது

இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்

தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்

அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி

அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி

கண்ணா உன் இசை வாழ உன் கீதஞ்சலி

கவியே உன் தழிழ் வாழ உன் கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி

பொண்னே உன் பெயருக்கு மொன்னாஞ்சலி

கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி

கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி

அஞ்சலி.....

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே

அஞசலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே

கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே

கண்மணி நீயில்லையேக் கவிதைகள் இல்லையே

நீயேன்ன நிலவோடு பிறந்தவளா

பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா

அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி

பூவே....

Edited by இனியவள்

கருப்புசாமி குத்தகைக்காரர் படத்தில் வந்த , இந்தப்பாடல் எனக்கு நல்லா பிடிக்கும்.... எல்லாரும் கேட்டுப்பாருங்களன்.....BOMBAY JAYASHREE இந்த பாடலை..... ரொம்ப நல்லா பாடியிருக்கின்றார்...! :huh:

Edited by அனிதா

சூப்பரான பாட்டு அனிதா, நல்லா இருக்கு..

குமாரசாமி என்டதும் நான் எங்கட கு.சா அண்ணாவப் பத்தி ஏதோ கிண்டல் அடிக்கிறீங்களாக்கும் என்டு நினைச்சன். :P

அட கு.சா அண்ணா பெயரிலையும் ஒரு படம் வந்திட்டுது. ;) எங்கட கு.சா அண்ணாவும் உண்மையில ஒரு குத்தகைக்காரர் தானே?

கலைஞன்...... இந்த படத்தின் பெயர் கருப்புசாமி குத்தகைக்காரர்........ கருப்புசாமி எண்டு எழுதினன் எப்படி குமாரசாமி என்று மாறினதெண்டு தெரியல ஹா ஹா B) :D:(

குமாரசாமி அண்ணா மன்னிச்சுக்கோங்க :o:)

  • தொடங்கியவர்

பாடல் கடவுள் தந்த அழகிய வாழ்வு..

படம்: மாயாவி

பாடகர்கள் :சரண்,S.P பாலசுப்பரமணியம்,கல்ப்பனா

பெண்:

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுதும் அவனது வீடு

கண்கள் முடியை வாழ்த்து பாடு

கருணை பொங்கும்... உள்ளங்கள் உண்டு

கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு

இன்னும் வாழலனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்

எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்கையை அன்பில்

வாழ்ந்து விடைப்பெருவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுதும் அவனது வீடு

கண்கள் முடியை வாழ்த்து பாடு

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குரையாது

வாழ்க்கையில் வாழ்க்கையில்

எனக்கென்றும் குரைக்கள் கிடையாது

ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

ஆண்:

ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ

அது வரை நாமும் சென்றுவிடுவோம்

விடைபெரும் ... நேரும் .வரம் பொதும் சிரிப்பினில்

நன்றி சொல்லிவிடுவோம்

பரவசம் இந்த பரவசம்

என்னாலும் நெஞ்ஜில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுதும் அவனது வீடு

கண்கள் முடியே வாழ்த்து பாடு

நாம் எல்லாம் சுவாசிக்க

தனி தனி காற்று கிடையாது

மேகங்கள்... மேகங்கள் ......

இடங்களை பாத்து பொலியாது

ஓடையில் இன்று இழையூதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்

வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்

குயில்களின் பாட்டு காற்றில் வரும்

முடிவதும் பின்பு தொடர்வதும்

இந்த வாழ்கை சொல்லும் பாடங்கள் தானே

.... கேலடி......

கடவுள் தந்த அழகிய வாழ்வு

உலகம் முழுதும் அவனது வீடு

கண்கள் முடியை வாழ்த்து பாடு

  • தொடங்கியவர்

படம் : குணா

இசை : இளையராஜா

வரிகள் : வாலி

குரல் : கமல்ஹாசன் & ஜானகி

ஆண்:

கண்மணி அன்போடு காதலன் நான் நான்

எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா

வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி

பெண்:

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

ஆண்:

பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்

மொதல்ல கண்மணி சொன்னேல்ல

இங்க பொன்மணி போட்டுக்க.

பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா

நான் இங்க சௌக்கியம்

பெண்:

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா

நான் இங்கு சௌக்கியமே

ஆண் :

உன்னை நெனச்சி பாக்கும் போது

கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது

ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா

இந்த எழுத்துதான் வார்த்த

பெண்:

உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது

ஆண்:

அதான்

பெண்:

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

ஆண்:

அதே தான் பிரமாதம் கவிதை படி

பெண்:

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே

உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....ஓஹோ

(கண்மணி...........)

ஆண்:

ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்

அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல

எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை

இதுவும் எழுதிக்கோ

நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே!

எல்லாம் போட்டுக்க

எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்

உன் உடம்பு தாங்குமா? தாங்காது

அபிராமி! அபிராமி! அபிராமி!

பெண்:

அதையும் எழுதணுமா?

ஆண்:

இது காதல்!

என் காதல் என்னன்னு சொல்லாம

ஏங்க ஏங்க அழுகையா வருது

ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ

அப்படின்னு நினைககும் போது

வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல

அதையும் தாண்டி புனிதமானது

பெண்:

உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன

மாயமென்ன பொன் மானே பொன் மானே

என்ன காயம் ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும்

உந்தன் மேனி தாங்காது செந்தேனே.....

எந்தன் காதல் என்னெவென்று

சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது

எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்

எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல

அதையும் தாண்டி புனிதமானது

ஆண்:

அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா

சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா

பெண்:

சுப லாலி லாலியே லாலி லாலியே!

அபிராமி லாலியே லாலி லாலியே!

இனியவள் மாயாவி படத்தில் உள்ள இந்தப்பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்... <_<

அனிதா... நல்ல காலம் இதை கு.சா அண்ணா வாசிக்கவில்லை போல இருக்கின்றது. ஆங்கிலத்தில் எழுதிதப்பட்ட தமிழை அவசரமாக வாசிக்கும்போது நானும் இப்படி பிழைகள் விடுவேன். அதை மீண்டும் வாசித்தபோது கறுப்புசாமியை நான் குப்புசாமி என்று நினைத்தேன். :P ஆனால், இந்தப்பாடலில் வரும் பாடல் காட்சிகள் எனக்கு பிடிக்கவில்லை. பாடலை மட்டும் தனிய கேட்கும்போது நன்றாக இருக்கின்றது. நான் இந்தப்பாடலை எனது அக்காவிற்கும் அனுப்பி இருந்தேன். இயற்கையான, இயல்பான விதத்தில் பாடல் நன்றாக பாடப்பட்டு உள்ளது என்று சொன்னா, மேலும் அந்த யூரியூப் லிங்கிற்கு போகும்போது BOMBAY JAYASHREE இன் மேலும் பல சூப்பரான பாடல்களை கேட்கக்கூடியதாக இருக்கின்றது என்றும் சொன்னா. :lol:

  • தொடங்கியவர்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

படம் : சின்னா

பாடல்: யார் யாரோ

இயக்குநர்: சுந்தர்.சி

இசை: டி. இமானின்

வரிகள் :சுவிற்மிச்சி

யார் யாரோ நான் பார்த்தேன் ..

யாரும் எனக்கு இல்லை.. ?

என் வழியில் நீ வந்தாய் ..

நானும் எனக்கில்லை ..

கண்ணிரீல் கருவானேன் ..

கடல் நீரில் உருவானேன்

உன்னாலே உயிர் ஆனேன்..

நீயாக நான் ஆனேன்

நீயாக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன் ..

யாரும் எனக்கில்லை ..

தாயை விடவும் நல்லவனாய்........

தேவதை உனை பார்த்தேன் ..

எங்கோ செல்லும் சாலையிலே .

உனக்குள் தங்கி விட்டேன்.........

எனை யார் என கேட்டால் ஒரு சொல் பொதும்

.. நீ என நான் சொல்வேன் ......

என் முகவரி கேட்டால் ஒரு வரி பொதும்..

உன் பெயர் நான் சொல்வேன் ..

உனை கடவுள் வந்து கேட்டாலும் ..

எதிர்ப்பேன்.... தர மாட்டேன்

எதிர்ப்பேன் ...தர மாட்டேன்

யார் யாரோ நான் பார்த்தேன்

யாரும் எனக்கில்லை ..

கோவம் ஓடும் நரம்புகளில் வீணையை மீட்டுகிறாய் ..

எரியும் தீயாய் நான் இருந்தேன்......!!

தீபம் ஏற்றுகிறாய்

அட இது வரை இங்கே வாழ்ந்தது போதும் .

என நான் நினைத்திருந்தேன் ..

நீ வாழ்க்கையின் சுவையை... அறிந்திட வைத்தாய்

மறுபடி பிறந்துவிட்டேன் ..

உனை உயிரின் உள்ளே நான் சுமப்பேன் ..

வெளியே விட மாட்டேன்

வெளியே விட மாட்டேன் ...........

யார் யாரோ நான் பார்த்தேன் ..

யாரும் எனக்கில்லை ..

என் வழியில் நீ வந்தாய் ..

நானும் எனக்கில்லை ..

கண்ணீரில் கருவானேன் ..

கடல் நீரில் உருவானேன்

உன்னாலே உயிர் ஆனேன்..

நீயாக நான் ஆனேன்

நீயாக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன் ..

  • தொடங்கியவர்

படம்:- மௌனராகம்

பாடியவர்:-ஸ்.பி. பாலசுரமணியம்

இசை:-இளையராஜா

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ..

அன்பே என் அன்பே..

தொட்டவுடல் சுட்டதென்ன கட்டளகு வட்டநிலவோ

கண்ணே என் கண்ணே...

பூபாளமே ..

கூடாதேன்னும் வானமுண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே....

தாமரை மோலே..

நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே ....

வாழ்வதற்க்கு ...

மாலையும்.. மேளமும் ..தேவையென்ன...

சொந்தங்களே ..

இலாமல் பந்த பாஷம் கொள்ளாமல்

பூவே உன் வாழ்க்கைதான் என்ன.. சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே ...

மேடையை போலே..

வாழ்க்கையல்ல ...நாடகம் ஆனதும் விலகிச்செல்ல....

ஓடையைப் போலே .....

உறவுமல்ல ....பாதைகள் மாறியே பயணம் செல்ல....

விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வார்ண நிலாவும்

என்னோடு நீவந்தால் என்ன.... வா

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே

தொட்டவுடல் சுட்டதென்ன கட்டளகு வட்டநிலவோ

கண்ணே என் கண்ணே பூபாளமே ....

கூடாதேன்னும் ........வானமுண்டோ சொல்...

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ

அன்பே ..என் அன்பே....

Edited by இனியவள்

  • தொடங்கியவர்

படம்:-யூலி கணபதி

பாடியவர்:-ஷ்ரேயா

இசையமைத்தவர்:-இளையராஜா

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக்கூட்டுமே

உதிர்வது .... பூக்களா...மனது வளர்த்த சோலையில்

காதல் பூக்கள் உதிருமா?....

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக்கூட்டுமே

உதிர்வது .... பூக்களா...மனது வளர்த்த சோலையில்....

காதல் பூக்கள் உதிருமா?.....

பித்துப் பிடித்தைப் போலே அடி பேச்சுக் குளறுதே

வண்டு குடைவதைப் போலே விழி மனசைக் குடையுதே

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே

குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்

காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக்கூட்டுமே

வெள்ளிக்கம்பிகளைப்போலே ஒரு தூறல்போடுதோ

விண்ணிம்மண்ணிம் வந்துசேர அது பாலம்போடுதோ

நீர்த்துளி தீண்டீனால் நீ தொடும் ஞாபகம்

நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன்ஸ்வரம்

ஆயிரம் மறவியாய் அன்பிலே நனைக்கிறாய்

வேதம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக்கூட்டுமே

உதிர்வது .... பூக்களா...மனது வளர்த்த சோலையில்....

காதல் பூக்கள் உதிருமா?.....

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

Edited by இனியவள்

  • தொடங்கியவர்

திரைப்படம்: என் சுவாசக் காற்றே

இயற்றியவர்: கவிப்பேரரசு வைரமுத்து

பாடியவர்: எம்.ஜி. ச்ரிகுமார்

இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

க்ளங்க் க்ளங்க் க்ளங்க் க்ளங்க்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

க்ளங்க் க்ளங்க் க்ளங்க் க்ளங்க்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி இரு துளி

சில துளி பல துளி

படபடபட தடதடதட சடசடசடவெனச் சிதறுது

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

(சின்னச் சின்ன.......)

சக்கரவாகமோ மழையை அருந்துமாம் - நான்

சக்கரவாகப் பறவை ஆவேனோ

மழையின் தாரைகள் வைர விழுதுகள்

இழுத்துப் பிடித்து விண்ணில் செல்வேனோ

(சின்னச் சின்ன........)

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன் துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தால் நவ தானியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது

அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது

இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

(சக்கரவாகமோ..............)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கருப்புக் கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்

கண்கள் மூடிக் கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்

ஓஹோஹோ ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோஹோ (3)

(சக்கரவாகமோ...........)

Edited by இனியவள்

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை

முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை

வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை

என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

(சின்ன)

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை

தென்றலைக் கண்டு மாலையிட ஆசை

மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை

சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை

கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை

(சின்ன)

சேற்று வயலாடி நாற்று நட ஆசை

மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை

வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை

பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை

சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

(சின்ன)

http://tamil-songs-hits.blogspot.com/2007/...-post_9201.html

  • தொடங்கியவர்

பாடல் : ஒரு ஜீவன் அழைத்தது

படம் : கீதாஞ்சலி.

உயிர் : இளையராஜா

குரல் : இளையராஜா, உமா ரமணன்

ஒரு ஜீவன் அழைத்தது

ஒரு ஜீவன் துடித்தது

இனி எனக்காக அழவேண்டாம்

இங்கு கண்ணீரும் விழவேண்டாம்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

(ஒரு ஜீவன்...)

முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய்

முள்ளை உள்ளே வைத்தாய்

என்னைக் கேளாமல் கன்னம் வைத்தாய்

நெஞ்சில் கன்னம் வைத்தாய்

நீ இல்லை என்றால் என் வானில் என்றும்

பகல் என்ற ஒன்றே கிடையாது

அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை

ஆகாயம் ரெண்டாய் உடையாது

இன்று காதல் பிறந்தநாள்

என் வாழ்வில் சிறந்த நாள்

மணமாலை சூடும் நாள் பார்க்கவே

(ஒரு ஜீவன் ...)

உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில்

மின்னல் உண்டானது

என்னை நீ கண்ட நேரம்

எந்தன் நெஞ்சம் துண்டானது

காணாத அன்பை நான் இங்கு கண்டேன்

காயங்கள் எல்லாம் பூவாக

காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல

கண்டேனே உன்னை தாயாக

மழை மேகம் பொழியுமா

நிழல் தந்து விலகுமா

இனி மேலும் என்ன சந்தேகமா?

(ஒரு ஜீவன்...)

  • கருத்துக்கள உறவுகள்

படம் :புன்னகை மன்னன்

பாடியவர்:சித்திரா

ஏதேதோ எண்ணம்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன்

நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானேபண்பாடும் பாடகன் நீயே

உன் ராகம் நானே

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்

உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்

தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்

சில பூக்கள் தானே மலர்கின்றது

பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது

கதை என்ன கூறு பூவும் நானும் வேறு

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா

கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா

நீயே அணைக்க வா தீயை அணைக்க வா

நீ பார்க்கும் போது பனியாகிறேன்

உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்

எது வந்த போதும் இந்த அன்பு போதும்

http://tamil-songs-hits.blogspot.com/2007/...-post_2686.html

  • தொடங்கியவர்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

படம் :ஜோடி

குரல்: ஹரிஹரன்

வரிகள்: வைரமுத்து

ஆஆஆ...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே...

உன் காதல் நான்தான் என்று...

அந்த சொல்லில்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...

அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

உன் காதல் நான்தான் என்று

அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

உன் காதல் நான்தான் என்று

அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம்

அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான்

ரொம்பப் பக்கம்பக்கம்தான்

பார்த்தால் ரெண்டும் வேறுதான்

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான்

பார்க்கும் கங்கள் ஒன்றுதான்

உண்டால் ரெண்டும் வேருதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில்

உயிர் வாழ்வேன்

இரவினைத் திரட்டி ...ஓ....

இரவினைத் திரட்டி கண்மணியின் என்

குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ

நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ...

ஓ ..விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து

மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ

வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்

கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ

ஆனால் ...பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

காதல் கண்ணே ....உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

உன் காதல் நான்தான் என்று

அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே

மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே

ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்

அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே

கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்

காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே

ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே

உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்

உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்

அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்

சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்

Edited by இனியவள்

  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவே

நினைவிலே புது சுகம் ....

தொடருதே தினம் தினம் ....

பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை

சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னொரமே

வென்னிலா வானில் அதில் என்னென்ன மேகம்

ஊர்கோளம் போகும் அதில் உண்டாகும் ராகம்

புரியாதோ என் எண்ணமே

அன்பே.....

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே

பூவான கோலங்களே

தென் காற்றின் பிம்பங்களே தேனாடும் ரோஜாக்களே

என்னென்ன ஜாலங்களே

கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்

கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்

இது தானே என் ஆசைகள்

அன்பே....

http://tamil-songs-hits.blogspot.com/2007/...-post_1134.html

  • தொடங்கியவர்

படம் : அமர்க்களம்

குரல் ஸ்.பி பாலசுப்பரமணியம்

மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு

மனம் சில்லென சிலப்போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னைப் போல என்னை யாரும்

மூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை

ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல

எரி அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை

மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

பிரிவென்று நேருமென்று தெரியும் பெண்ணே

என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்

எரியும் உடலென்று தெரியும் பெண்ணே

என் இளமைக்குத் தீயிட்டு எரிக்க மாட்டேன்

மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றே

என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்

துண்டுத்துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்

அடி தூயவளே உனக்குள் தொலைத்துவிட்டேன்

மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே

அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்

உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்

அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்

எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன்

அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்

இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டே

என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மூடிமூடி வைத்தாலும் விதைகளெல்லாம்

மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி

ஓடிஓடிப் போகாதே ஊமைப் பெண்ணே

நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி

மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு

சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு

மனம் சில்லென சிலப்போது சிலிர்த்ததுண்டு

மோகனமே உன்னைப் போல என்னை யாரும்

மூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை

ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல

எரி அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை

*அருமையான கவி வரிகளேடு இனைந்த இசையும் அருமை...

  • கருத்துக்கள உறவுகள்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

என் உள்நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்

எந்தன் பெண்மை பூப்பூக்குதே

நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில்

என்னை ஏந்தத்தான்

(உன்னோடு வாழாத)

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது

முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது

கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே

நீ போனால் நான் இல்லையே

நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையெ

ஆம் நமக்குள் ஊடலில்லை

(உன்னோடு வாழாத)

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வென்

அன்பே தீயாயிரு

நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா

அன்பே முள்ளாயிரு

நீ வீரமான கள்ளன் உள்ளூரம் சொல்லுது

நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது

உன்னை மட்டும் நேசிக்கிறென்

உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்

நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை

காதலோடு பேதம் இல்லை

(உன்னோடு வாழாத)

http://tamil-songs-hits.blogspot.com/2007/...-post_2451.html

  • தொடங்கியவர்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

என் உள்நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று

ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்

எந்தன் பெண்மை பூப்பூக்குதே

nunavilan உங்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்குமே?? :unsure:

எனக்கு மிகவும் பிடித்த பாடல்

நன்றி உங்கள் இனைப்புக்கு......

  • தொடங்கியவர்

படம் : பம்பாய்

இசை : A.R.ரஹ்மான்

வரிகள் : வைரமுத்து

குரல் : சித்ரா & குழு

குமுசுமு குமுசுமு குப்புச்சுப் குமுசுமு குப்புச்சுப்

குமுசுமு குமுசுமு குப்புச்சுப் குமுசுமு குப்புச்சுப்

சல சல சல சல சோலைக்கிளியே ஜோடியைத் தேடிக்கோ

சிலு சிலு சிலு சிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்கோ

மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ

மாமன் சொன்ன சங்கதி எல்லாம் மனசில வச்சிக்கோ

மாமன்காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ

மாமன் சொன்ன சங்கதி எல்லாம் மனசில வச்சிக்க

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே....

அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பேரும் தெரியாமலே...

உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே

வலி தீர வழி என்னவோ...

(கண்ணாளனே.......)

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்

தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்

எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்

பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதிகொதிக்கும்

உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல...

சித்தம் துடிதுடிக்கும்

புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல...

பனித்துளிதான் என்ன செய்யுமோ

மூங்கில் காட்டில் தீ விழும்போது

மூங்கில் காடென்று ஆயினள் மாது

(கண்ணாளனே........)

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்

உன்னோடு நான் கண்டுகொண்டேன்

ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்

என்னோடு நான் கண்டுகொண்டேன்

என்னை மறந்துவிட்டேன்

இந்த உலகத்தில் நானில்லை நானில்லை

உன்னை இழந்து விட்டால்

எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை

இது கனவா? இல்லை நினைவா

என்னைக் கிள்ளி உண்மை தெளிந்தேன்..

உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

(கண்ணாளனே....)

  • தொடங்கியவர்

படம் : தேவா

ஒரு கடிதம் எழுதினேன் - அதில்

என் உயிரை அனுப்பினேன்

அந்த எழுத்து வடிவிலே

நான் என்னை அனுப்பினேன்

காதலி என்னைக் காதலி ப்ளீஸ்

ஒரு கடிதம் எழுதினேன்

என் உயிரை அனுப்பினேன்

அந்த எழுத்தின் வடிவிலே

நான் என்னை அனுப்பினேன்

காதலி ஹாஹாஹாஹா

என்னைக் காதலி ஹேஹேஹேஹே

காதலி ஆஆஆஆஆ

என்னைக் காதலி ஆஹாஹாஹாஹா

ஒரு கடிதம் எழுதினேன்

என் உயிரை அனுப்பினேன்

கண்ணே உன் காலடி மண்ணை திருநீறு போலே

நானள்ளிப் பூசிடுவேனே என் நெஞ்சின் மேலே

அன்பே என் ஆலயம் என்று உன் வாசல் தேடி

அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி

ஆறு காலப் பூஜை செய்யும் ஏழை கொண்ட ஆசை

என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ

காதலி.......காதலி

என்னைக் காதலி.....என்னைக் காதலி

காதலி..... ஆஆஆஆஆ

என்னைக் காதலி......ஆஹாஆஆஆஆ

ஒரு கடிதம் எழுதினேன்

என் உயிரை அனுப்பினேன்

லாலாலா லலலா ஏஹேஹே ஏஹேஹே

நான் வாங்கம் ஸ்வாசங்களெல்லாம் நீ தந்த காற்று

நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு

ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி

அலைபாய்ந்து நான் இங்கு வாட அவைதானே சாட்சி

நீயில்லாத நானே குளிர் நீரில்லாத மீனே

நீ ஓடை போலக் கூட வேண்டுமே

காதலி My Darling

என்னைக் காதலி Please..

காதலி ஆஆஆஆஆஆஆஆ

என்னைக் காதலி ஆஹாஹாஹா

ஒரு கடிதம் எழுதினேன்

என் உயிரை அனுப்பினேன்

அந்த எழுத்தின் வடிவிலே

நான் என்னை அனுப்பினேன்

காதலி.......காதலி

என்னைக் காதலி.....என்னைக் காதலி

காதலி.......காதலி

என்னைக் காதலி.....என்னைக் காதலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.