Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூஸிலாந்து இலங்கை கிரிக்கெட் தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

Published By: DIGITAL DESK 5

22 MAR, 2023 | 02:55 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையான தோல்வி அடைந்த இலங்கை , அதே அணிக்கு எதிராக மற்றொரு சவாலை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எதிர்கொள்ளவுள்ளது.

இந்தத் தொடர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் (ICC Cricket World Cup Super League) தொடராக அமைவதாலேயே இலங்கை மற்றொரு சவாலை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்பற்றுவதற்கு இலங்கை நேரடி தகுதிபெறவேண்டுமானால் நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வசேத ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முழுமையாக வெற்றிபெறவேண்டும்.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் அணிகள் நிலையில் முதல் 7 இடங்களில் இருக்கும் இங்கிலாந்து (155 புள்ளிகள்), நியூஸிலாந்து (150), வரவேற்பு நாடான இந்தியா (139), பங்களாதேஷ் (130), பாகிஸ்தான் (130), அவுஸ்திரேலியா (120) ஆப்கானிஸ்தான் (118) ஆகியன  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன.

எட்டாவதாக எந்த நாடு தகுதி பெறும் என்பதைத் தீர்மானிக்கும் நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடரும் தென் ஆபிரிக்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான தொடரும் நடைபெறவுள்ளன.

அணிகள் நிலையில் 77 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் 107 புள்ளிகளுடன் உலகக் கிண்ண பிரதான சுற்றில் நேரடியாக விளையாட தகுதிபெறும்.

இலங்கை ஒரு போட்டியில் தோல்வி அடையும் அதேவேளை, 78 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் அதிகபட்சமாக 98 புள்ளிகளைப் பெற்று 8ஆவது நாடாக உலகக் கிண்ண பிரதான சுற்றுக்குள் நுழையும்.

தற்போது 8ஆவது இடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் 88 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் அவ்வணியின் போட்டிகள் யாவும் நிறைவடைந்துள்ளன. ஒருவேளை, தென் ஆபிரிக்காவும் இலங்கையும் தலா 2 போட்டிகளில் தோல்வி அடைந்தால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு உலகக் கிண்ணத்தில் நேரடியாக விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

எனினும் தென் ஆபிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தும் என எதிர்பார்க்க முடியாது.

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடர் ஓக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது போட்டி கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் 28ஆம்  திகதியும்   கடைசிப் போட்டி ஹெமில்டன் செடன் பார்க் விளையாடடங்கில் 31ஆம் திகதியும் நடைபெறும்.

இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் விளையாடப்பட்டுள்ள 99 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 - 41 என நியூஸிலாந்து முன்னிலையில் இருக்கிறது. 8 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

நியூஸிலாந்தில் இலங்கை 12 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 

கடைசியாக இரண்டு அணிகளும் 2019இல் நியூஸிலாந்தில் சந்தித்துக்கொண்டபோது 3 - 0 என்ற ஆட்டக்கணக்கில் நியூஸிலாந்து முழுமையான வெற்றியை ஈட்டியிருந்தது.

தென் ஆபிரிக்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் செஞ்சூரியனில் மார்ச் 31ஆம் திகதியும் ஏப்ரல் 2ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. 

https://www.virakesari.lk/article/151162

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்திடம் 198 ஓட்டங்களால் இலங்கை தோல்வி: உலகக் கிண்ண நேரடி வாய்ப்பை இழக்கிறது

25 MAR, 2023 | 03:08 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக ஓக்லண்ட், ஈடன் பார்க் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (25) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 198 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வி அடைந்தது.

இந்தத் தோல்வியினால் ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண சுப்பர் லீக் தொடரில் அவசியமான 10 புள்ளிகளை இலங்கை இழந்துள்ளதுடன் உலகக் கிண்ணப் போட்டியில் நேரடியாக விளையாடுவதற்கான அதன் வாய்ப்பும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

2503_nz_ecelebrate_vs_sl.jpg

கேன் வில்லியம்சன், அணித் தலைவர் டிம் சௌதீ, டெவன் கொன்வே, மைக்கல் ப்றேஸ்வெல் ஆகிய பிரதான வீரர்கள் இல்லாத நிலையிலும் நியூஸிலாந்து கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றதுடன் இலங்கையை 100 ஓட்டங்களுக்கு சுருட்டி வெற்றியை சம்பாதித்துக்கொண்டது குறிப்பிட்டுச்  சொல்லக்கூடிய விடயமாகும்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற போதிலும் தசுன் ஷானக்க களத்தடுப்பை தெரிவுசெய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக அமைந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 274 ஓட்டங்களைக் குவித்தது.

30ஆவது ஓவரில் 5ஆவது விக்கெட்டை இழந்தபோது நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை 152 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் க்ளென் பிலிப்ஸ், அறிமுக வீரர் ரச்சின் ரவிந்த்ர ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 64 ஓட்டங்கள் நியூஸிலாந்து கௌரவமான நிலையை அடைய உதவியது.

2503_ravindra_nz_vs_sl.jpg

பின்வரிசை துடுப்பாட்டத்தில் போதியளவு பங்களிப்பு கிடைக்காத போதிலும் அறிமுக வீரர் ரவிந்த்ர திறமையாகத் துடுப்பெடுத்தாடியதன் பலனாக நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கை 260 ஓட்டங்களைக் கடந்தது.

நியூஸிலாந்து சார்பாக பின் அலன் (51), ரச்சின் ரவிந்த்ர (49), டெரில் மிச்செல் (47), க்ளென் பிலிப்ஸ் (39), வில் யங் (26) ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடினர்.

இலங்கை பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 43 ஓட்ங்களுக்கு 4 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு குமார 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2503_chamika_karunaratne_sl_v_nz.jpg

275 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.

இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுதுவது போன்று அநாவசியமாக அதிரடியில் இறங்கியதாலும் தவறான அடி தெரிவுகளாலும் விக்கெட்களைத் தாரைவாரத்தனர்.

ஏஞ்சலோ மெத்யூஸ் (18), சாமிக்க கருணாரட்ன (11), லஹிரு குமார (10) ஆகிய மூவரே இரட்டை இலக்கை எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ஹென்றி ஷிப்லி 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் டெரில் மிச்செல் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ளயார் டிக்னர் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தனது 4ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஹென்றி ஷிப்லி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.

2503_henry_shipley_nz_vs_sl.jpg

இது இவ்வாறிருக்க, சுப்பர் லீக் அணிகள் நிலையில் தற்போது 8ஆவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 88 புள்ளிகளுடனும் 9ஆவது இடத்தில் தென் ஆபிரிக்கா 78 புள்ளிகளுடனும் 10ஆவது இடத்தில் இலங்கை 77 புள்ளிகளுடனும் இருக்கின்றன.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் தலா 2 போட்டிகள் இன்னும் எஞ்சியுள்ளன. சுப்பர் லீக்கில் கடைசி போட்டிகளாக அமையும் அந்த இரண்டு போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை விளையாட நேரிடும்.

தென் ஆபிரிக்கா ஒரு போட்டியில் தோல்வி அடைந்து இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் உலகக் கிண்ண போட்டியில் இலங்கை நேரடியாக விளையாடத் தகுதிபெறும்.

ஒருவேளை, தென் ஆபிரிக்காவும் இலங்கையும் தத்தமது எஞ்சிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் மேற்கிந்தியத் தீவுக்ள உலகக் கிண்ணத்தில் நேரடியாக விளையாட தகுதிபெறும். அப்படி நேர்ந்தால் தென் ஆபிரிக்காவும் இலங்கையும் தகுதகாண் சுற்றில் விளையாடும்.

https://www.virakesari.lk/article/151380

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்திக்கின்றது. உலக கோப்பையில் நேரடியாக பங்குபற்றி படு தோல்விகளை சந்திப்பதைவிட இந்த தடவை போட்டியில் பங்குபற்றாமல் விலகுவது கெளரவமானது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு காரணங்கள் எவை என பார்த்தால் ஆளுக்கு ஆள் மற்றவர்களை காட்டுவார்கள் பொறுப்பு வாய்ந்தவர்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ளை இன்னொரு பகிடியும் இருக்கு கண்டியளோ.....இந்தியா இலங்கை ரீமை கூப்பிட்டு ஒருநாள்  தொடர் மச் விளையாடப்போகினமாம்...இதிலை இந்தியா ஒரு 40 ரந்தான் அடிக்கும்....அதுக்குபிறகு ...நாங்கள்தான்  வன்டே சாம்பியன் என்று மஹேல அறிக்கை விட்டாலும் விடுவர்....இதை ரோகித்து வரவேற்று .....ஐ.பி எல் விளையாட சிரீலங்கா வீரர் வேணுமின்னு  அடம் பிடிக்கும்..🤣

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக துழவினம் .. பந்து மாட்டாவில்லை.. இந்த துடுப்பை கடலில் துழாவி இருந்தால் தனுஷ்கோடிய றச் பண்ணி திரும்பியும் இருக்கலாம்..👌

rowing-boat-on-the-kaladan-river-keren-s

ஊரில கூழ் துழாவி இருந்தால் நாலு சனம் பசியாறி இருக்கும்..👍

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் ஓவரில் தீக்ஷன, அசலன்க அசத்தல்; நியூஸிலாந்தை வென்றது இலங்கை

Published By: DIGITAL DESK 5

03 APR, 2023 | 09:10 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் ஓக்லண்ட் ஈடன் பார்க் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை சமநிலையில் முடிவைடைந்த முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சுப்பர் ஓவரில் இலங்கை வெற்றிபெற்றது.

நியூஸிலாந்துக்கான தற்போதைய கிரிக்கெட் விஜயத்தில் டெஸ்ட் (2 போட்டிகள்), சர்வதேச ஒருநாள் (3 போட்டிகள்) ஆகிய இரண்டு வகை தொடர்களில் மழையினால் கழுவப்பட்ட ஒரு போட்டியைத் தவிர்ந்த மற்றைய 4இலும் தோல்வி அடைந்த இலங்கை, இந்தப் போட்டி மூலம் ஒருவாறு முதலாவது வெற்றியை சுவைத்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்தும் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமநிலையில் முடித்தது.

சுப்பர் ஓவரில் தீக்ஷன 2 விக்கெட்களை வீழ்த்தியதுடன் சரித் அசலன்க 2 பந்துகளில் ஒரு சிச்ஸ், ஒரு பவுண்டறியை விளாசினார்.

மஹீத் தீக்ஷன வீசிய சுப்பர் ஓவரில் நியஸிலாந்து, 2 விக்கெட்களை இழந்து 8 ஓட்டங்களைப் பெற்றது.

சுப்பர் ஓவரில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 3 பந்துகளில் 12 ஓட்டங்ளைப் பெற்று வெற்றியீட்டியது. முதல் பந்தில் குசல் மெண்டிஸ் ஒரு ஓட்டத்தைப் பெற்றதுடன் அடுத்த 2 பந்துகளில் சரித்த அசலன்க 10 ஓட்டங்களைக் குவித்தார். அதில் கடைசிப் பந்து நோபோலாக மத்தியஸ்தரினால் அறிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னர் துடுப்பாட்டத்தில் அசலன்க அரைச் சதம் குவித்து அசத்தியிருந்தார்.

இலங்கை சார்பாக 16 மாத இடைவெளியின் பின்னர் மீண்டும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய குசல் ஜனித் பெரேரா மிக அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார். 45 பந்துகளை எதிர்கொண்ட குசல் பெரேரா 4 பவுண்டறிகளையும் ஒரு சிச்ஸையும் அடித்திருந்தார்.

அவரைவிட ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலன் 41 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார்.

அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 64 பந்துகளில் பகிர்ந்த 103 ஓட்டங்கள் இலங்கைக்கு கணிசமான ஓட்டங்கள் குவிவதற்கு வழிவகுத்தது.

அவர்களை விட குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 2 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷாம் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர்கள் இருவரும் முதல் 2 ஓவர்களில் ஆட்டமிழந்தபோது மொத்த எண்ணிக்கை 3 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால் அதன் பின்னர் அணித் தலைவர் டொம் லெதமுடன் (27) 3ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 64 ஓட்டங்களையும் மார்க் செப்மனுடன் (33) 4ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 56 ஓட்டங்களையும் டெறில் மிச்செல் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். டெரில் மிச்சில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 67 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜேம்ஸ் நீஷாம் (19), ரச்சின் ரவிந்த்ர (25), இஷ் சோதி (10 ஆ.இ.) ஆகியோரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி இலங்கையின் மொத்த எண்ணிக்கையை சமப்படுத்த உதவினர்.

இலங்கை பந்துவீச்சில் அணித் தலைவர் தசுன் ஷானக்க 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரமோத் மதுஷான் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

0204_charith_asalnka_sl_vs_nz.jpg

ஆட்டநாயகன்: சரித் அசலன்க

0204_kusal_perera_sl_vs_nz.jpg

0204_maheesh_theekshana.jpg

https://www.virakesari.lk/article/151980

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் ஏதோ ஒரு மாதிரி விளையாடி வென்றுவிட்டார்கள். பார்ப்போம் தொடர்ந்து என்ன நடக்கின்றது என.. 🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மில்னே பந்துவீச்சிலும், சீஃபேர்ட் துடுப்பாட்டத்திலும் அசத்தல்; நியூஸிலாந்துக்கு இலகுவான வெற்றி!

Published By: NANTHINI

05 APR, 2023 | 02:54 PM
image

(நெவில் அன்தனி)

லங்கைக்கு எதிராக டனேடின் பல்கலைக்கழக ஓவல் மைதானத்தில் இன்று புதன்கிழமை (5) நடைபெற்ற 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அடம் மில்னே பதிவு செய்த 5 விக்கெட் குவியலும், டிம் சீஃபேரட் குவித்த அரைச் சதமும் நியூஸிலாந்துக்கு 9 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

0504_adam_milne_nz_vs_sl.jpg

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை 1 - 1 என நியூஸிலாந்து சமப்படுத்திக்கொண்டுள்ளது.

சமநிலையில் முடிவடைந்த முதலாவது போட்டியில் சுப்பர் ஓவரில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து, 141 ஓட்டங்களை பெற்றது.

குசல் மெண்டிஸ் (9), பெத்தும் நிஸ்ஸன்க (10) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். (29 - 2 விக்.) 

0504_dananjaya_de_silva_sl_vs_nz.jpg

தொடர்ந்து குசல் பெரேராவும் தனஞ்சய டி சில்வாவும் 3ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களை பகிர்ந்து அணியை பலப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால், குசல் பெரேரா (35), தனஞ்சய டி சில்வா (37) ஆகிய இருவரும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன.

ஏனையவர்களில் சரித் அசலன்க (24) மாத்திரமே சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.

0504_kusal_perera_sl_vs_nz.jpg

நியூஸிலாந்து பந்துவீச்சில் அடம் மில்னே 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும், பென் லிஸ்டர் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

142 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து, 146 ஓட்டங்களை குவித்து இலகுவாக வெற்றியீட்டியது.

0504_tim_seifert_nz_vs_sl.jpg

செட் போவ்ஸ், டிம் சீபேர்ட் ஆகிய இருவரும் 20 பந்துகளில் 40 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

செட் போவ்ஸ் 7 பவண்டறிகளுடன் 31 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து டிம் சீஃபேர்ட், அணித் தலைவர் டொம் லெதம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 68 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்துக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

டிம் சீஃபேர்ட் 43 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் உட்பட 79 ஓட்டங்களுடனும், டொம் லெதம் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

கசுன் ராஜித்த 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: அடம் மில்னே

https://www.virakesari.lk/article/152187

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை – நியூஸிலாந்து ஆண்கள் போட்டியில் பெண் நடுவர்

Published By: SETHU

06 APR, 2023 | 01:54 PM
image

இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச இருபது20 கிரிக்கெட் போட்டியின் நடுவர்களில் ஒருவராக நியூஸிலாந்தின் கிம் கொட்டன் பணியாற்றினார். ஐசிசியின் முழு அங்கத்துவம் கொண்ட நாடுகளின் ஆண்கள் அணிகளுக்கு இடையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில் நடுவராக பணியாற்றிய முதல் பெண் இவராவார்.

டனடின் நகரில் நேற்று (05) நடைபெற்ற இப்போட்டியில், சக நாட்டவரான வெய்ன் நைட்ஸுடன் இணைந்து கிம் கொட்டன் நடுவராக பணியாற்றினார். இப்போட்டியில் நியூ ஸிலாந்துஅணி 9 விக்கெட்களால் வென்றது.

48 வயதான கிம் கொட்டன் ஏற்கெனவே பெண்களுக்கு இடையிலான 54 சர்வதேச இருபது20 போட்டிகளில் கள நடுவராகவும் தொலைக்காட்சி நடுவராகவும் பணியாற்றியிருந்தார். அத்துடன் பெண்களுக்கு இடையிலான 24 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கள நடுவராகவும் தொலைக்காட்சி நடுவராகவும்  பணியாற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளெய்ர் பொலோசாக், 2019 ஆம் ஆண்டு ஓமான், நமீபியா நாடுகளின் ஆண்கள் அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில்  நடுவராக பணியாற்றினார் இத்ன மூலம் சர்வசேத ஆண்கள் அணிகளுக்கிடையிலான போட்டியொன்றில் நடுவராக பணியாற்றிய முதல் பெண் எனும் பெருமையை கிளெயர் பொலோசாக் பெற்றிருந்தார்.

https://www.virakesari.lk/article/152259

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை போராடி வென்ற நியூசிலாந்து

 

NZ-vs-SL-1st-ODI-1024x576.jpg

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் இன்றைய தீர்க்கமான இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

நியூஸிலாந்தின் குயீன்ஸ்டவுனில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்போது, பெத்தும் நிசங்க 25 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையிலும், குசல் மென்டிஸ் 73 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதேவேளை, குசல் பெரேரா 33 ஓட்டங்களையும், தசுன் சானக்க 15 ஓட்டங்களையும், சரித் அசலங்க 3 ஓட்டங்களையும் மற்றும் தனஞ்ஜய டி சில்வா 20 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ஒரு பந்துவீச்சு மீதமிருக்கையில் 6 விக்கட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இதன்போது, ரிம் செய்ஃபெட் 88 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக அணிக்குப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் லஹிரு குமார 38 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

https://thinakkural.lk/article/248485

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.