Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து, முதல் பாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'அகநக முகநக' பாடல் வரிகள் எப்படி உருவானது ? - குந்தவையின் காதலை சிலாகிக்கும் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்

பொன்னியின் செல்வன், சினிமா

பட மூலாதாரம்,MADRAS TALKIES

31 நிமிடங்களுக்கு முன்னர்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து, முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல் வெளியான அன்றைய தினம், நடிகர்கள் கார்த்தி மற்றும் த்ரிஷா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வந்தியத்தேவன் மற்றும் குந்தவையாக உரையாடி வந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

”அகநக அகநக முகநகையே” என தொடங்கும் இந்த பாடல் வரிகள்தான் கடந்த இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் ரசிகர்களின் முனுமுனுப்பாக மாறியிருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த 2022ஆம்ஆண்டு இதன் முதல் பாகம் வெளியான நிலையில், தற்போது வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், பொன்னியின் செல்வனின் முதல் பாகம் மிகப்பெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு ஏ.ஆர் ரகுமானின் இசையும், பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தன. இதுவே இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

 

குறிப்பாக முதல் பாகத்தில், வந்தியத்தேவன் இளவரசி குந்தவையை படகில் சந்திப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியின் இடையே ”அகநக அகநக முகநகையே” பாடல் மிகவும் சிறிய அளவில் இடம்பெற்றிருந்தது. அப்போதே மக்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல், தற்போது முழுமையாக வெளியாகியிருப்பது, பொன்னியின் செல்வன் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாடல் உருவான விதம் குறித்தும், படத்தில் பாடல் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் குறித்தும் பேசுவதற்காக, இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

இரண்டெழுத்து சொற்களில் உருவான பாடல் வரிகள்:

பொன்னியின் செல்வன், சினிமா

பட மூலாதாரம்,FACEBOOK

 
படக்குறிப்பு,

பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்

“இந்த பாடலுக்கான மெட்டை ஏ.ஆர்.ரகுமான் மிகவும் கடினமாக அமைத்திருந்தார். அதற்கு ஏற்றாற் போல பாடல் வரிகளை அமைக்க வேண்டும் என்ற சூழல்தான் அகநக பாடல் வரிகள் உருவாவதற்கு காரணமானது” என்கிறார் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “பாடல் எப்படி உருவாக வேண்டும் என்று முதலில் நிறைய திட்டங்கள் மேற்கொண்டோம். சோழ தேசத்து இளவரசியான குந்தவை பிராட்டி தானே பாடுவது போன்ற பாடல் அமைய வேண்டும் என இயக்குநர் மணிரத்னம் கூறினார். இளவரசியான குந்தவைக்கு நிச்சயம் தன்னுடைய தேசத்தின் மீது மிகப்பெரும் காதல் இருக்கும். அந்த அதீத காதலால் தன் தேசத்தின் மீது அவளுக்கு தன்னுடைமை மனோபாவமும் இருந்திருக்கும். எனவே இதனை மையப்படுத்தி இந்த பாடலை எழுதலாம் என நான் முடிவு செய்தேன்.

ஆனால் இந்த பாடலுக்காக இசையமைப்பாளர் ஏர்.ஆர் ரகுமான் தேர்ந்தெடுத்த மெட்டு மிகவும் கடினமாக இருந்தது. அதாவது அந்த மெட்டில் ஒரு முடிவே இல்லாதது போன்ற அமைப்பு இருக்கும். ஆனால் அதேசமயம் அது மிகவும் இனிமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அதன் இயல்பு தன்மை மாறாமல் இருக்கும் வகையில், நான் பாடல் வரிகளை எழுத வேண்டும்.

அப்போதுதான் மிகவும் சிறு சிறு வார்த்தைகளில் பாடலை எழுதுங்கள் என ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் கூறினார். இரண்டு எழுத்து சொற்களால் வார்த்தைகளை கட்டமையுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். அப்படிதான் ”அகநக” பாடல் வரிகளை எழுத துவங்கினேன்” என்று தெரிவிக்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.

அந்தாதி இலக்கியத்தில் உருவாகியிருக்கும் அகநக பாடல் :

பொன்னியின் செல்வன், சினிமா

பட மூலாதாரம்,MADRAS TALKIES

“இரண்டெழுத்து சொற்களில் வார்த்தைகளை எழுத துவங்கியபோது, இந்த பாடலை ஏன் அந்தாதி இலக்கிய வகையில் எழுதக்கூடாது என எனக்கு தோன்றியது.

அந்தாதி என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. அதாவது பாடலின் முதல் வரியில் இடம்பெறக்கூடிய இறுதி வார்த்தையே, பாடலின் இரண்டாம் வரியின் துவக்க வார்த்தையாகவும் இருக்கும். இதுவே அந்தாதி பாடல் வகையின் இயல்பு” என்று கூறுகிறார் பாடலாசிரியர்.

“அகநக அகநக முகநகையே

முகநக முகநக முறுநகையே

முறுநக முறுநக தருநகையே

தருநக தருநக வருணனையே

யாரது.. யாரது”

என்ற இந்த வரிகளை கவனித்தால் அந்தாதி இலக்கிய இயல்பில் நான் இந்த பாடலை வடிவமைத்திருப்பது புரியும். ஏ.ஆர்.ரகுமான் தேர்ந்தெடுத்த மெட்டிற்கு அந்தாதி இலக்கிய வகைதான் பொறுத்தமாக இருந்தது. சக்திஸ்ரீயின் குரல் இந்த பாடலை மிகவும் உயிரூட்டமாக மாற்றியது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

வரிகளின் அர்த்தங்கள் :

பொன்னியின் செல்வன், சினிமா

பட மூலாதாரம்,MADRAS TALKIES

”அகம் மலர்ந்து, முகம் மலர்வது போல் ஒரு பூ மரம் (தரு) தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது என்பதையே இந்த வரிகளில் நான் கூறுகிறேன். ஒரு மலர் உருவாவதற்கு பல்வேறு பருவங்கள் இருக்கின்றன. அதில் மொட்டு உருவாவதற்கு முந்தைய நிலையான மலர்களின் இரண்டாம் பருவம்தான் ’நனை’ என்று கூறப்படுகிறது. இந்த ‘நனை’ (வருணனையே) என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியதற்கு காரணம் இருக்கிறது.

குந்தவைக்கு வந்தியத்தேவன் மீது இருக்கும் காதல் இப்படியொரு நிலையில்தான் இருந்தது. ஒரு பேரரசின் இளவரசியான குந்தவை, படை தளபதியான வந்தியத்தேவன் மீது ஈர்ப்பு கொள்வதை, அவளால் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்திவிட முடியாது. அப்போது குந்தவைக்கும், வந்தியத்தேவனுக்கும் இடையில் இருக்கும் அந்த தவிப்பான மனநிலையை குறிப்பிடவே இந்த வார்த்தையை பயன்படுத்தினேன். படத்தில் இது குறித்து காட்சிகள் அமைக்கப்படவில்லை, ஆனால் எனது பாடலில் இதை குறிப்பிட வேண்டும் என நான் நினைத்தேன்” என்று பாடல் வரிகள் குறித்து விவரிக்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.

முன்பே கூறியது போல், மரங்களில் ஆரம்பித்து பின் தன் நிலம் குறித்து குந்தவை பாடுவது போல் இதன் பாடல் வரிகள் நீள்கிறது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

மணிரத்னத்தின் பாராட்டு :

இந்த பாடல் வரிகளை இரண்டு நாட்களில் எழுதி முடித்ததாக கூறுகிறார் இளங்கோ கிருஷ்ணன். இந்த வரிகளை மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பது மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

அவர் மேலும் கூறும்போது, “பாடல் வரிகளின் அர்த்தம் மாறாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஓரளவு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பழந்தமிழ் சொற்களை மொழிபெயர்ப்பது எப்போதும் கடினமான காரியம்தான். இதற்கு முன்னதாக முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த தேவராளன் பாடலை கூட மற்ற மொழிகளில் மாற்றியமைத்தது மிகவும் கடினமாக இருந்தது என ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் தெரிவித்தார்.

அதேபோல் அகநக பாடல் உருவாக்கப்பட்டது இரண்டாம் பாகத்திற்காகத்தான். அது முதல் பாகத்தில் சிறியளவில் இடம்பெற்றதற்கு ரகுமானின் மேஜிக்தான் காரணம். அப்போது ரசிகர்களிடம் ஏற்பட்ட மிகப்பெரும் வரவேற்பே, தற்போது இந்த பாடல் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலாக வெளியாகியிருப்பதற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.

இயக்குநர் மணிரத்னம் தனிப்பட்ட முறையில் என்னுடைய எழுத்து குறித்து நிறைய பாராட்டியிருக்கிறார். என்னுடைய மொழி வளம் மிகவும் நன்றாக இருப்பதாக அவர் கூறுவார். அகநக பாடல் கூட அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் பாடலாசிரியார் இளங்கோ கிருஷ்ணன்.

https://www.bbc.com/tamil/articles/cz9j3le1jl9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகநக அகநக முகநகையே

முகநக முகநக முறுநகையே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது.......நன்றி ஏராளன்.....!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பொன்னியின் செல்வன்: பிரபலங்கள் வெளியிட்ட ரகசியங்கள்
7 மணி நேரங்களுக்கு முன்னர்

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ஆடியோ , டிரைலர் வெளியிட்டு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் மணிரத்னம் மற்று பொன்னியின் செல்வன் தொடர்பாக பல்வேறு ருசிகர தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

 

"நல்ல படங்களை எடுப்பது நம் கடமை. என்னிடம் எப்படி வேலைக்குச் செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் வேலைக்குச் சென்றே வெகுநாட்களாகிவிட்டது என்றேன். எனக்குப் பிடித்ததைச் செய்ய சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முடியாததன் மூலம், நல்ல கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு போய்விட்டது. மணிரத்னத்தைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது" என்றார் கமல்.

மேலும், "இது பொறாமைப்படுவதற்கான நேரமில்லை. எல்லோரும் சேர்ந்து அனுபவிப்பதற்கான நேரம். இதுபோல படம் எடுக்கத் தைரியம் வேண்டும். மணிரத்னம் நின்று அடித்திருக்கிறார். யாராவது சற்றுப் பிழையாகச் செய்திருந்தாலும் கனவு கலைந்திருக்கும். இது சோழர்களின் பொற்காலம் மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் பொற்காலம்" என்றார் அவர்.

பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீடு விழா சென்னையில் புதனன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா, `பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக எடுக்க எம்.ஜி.ஆருக்கு மிகுந்த ஆசை. ஒரு முறை நான், கமல், ஸ்ரீதேவி அமர்ந்திருக்கும்போது, இந்தப் படத்தை நான் இயக்க வேண்டுமென எம்.ஜி.ஆர். சொன்னார். கமல்தான் வந்தியத்தேவன் என்றார். நல்லவேளை அது நடக்கவில்லை. நான் சொதப்பியிருப்பேன்" என்றார்.

முன்னதாக பொன்னியின் செல்வம் 1 பாகத்தின் ஆடியோ, டிரையல் வெளியிட்டு விழாவில் பேசியிருந்த நடிகர் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவனான தானும், அருள்மொழி வர்மனாக கமலும் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சிவாஜி கூறியிருந்ததாக தெரிவித்தார். மேலும் தகவலுக்கு காணொளியை பார்க்கவும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பாடல் அறிவிப்பை வெளியிட்ட ‘பொன்னியின் செல்வன்’

அடுத்த பாடல் அறிவிப்பை வெளியிட்ட பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் -2 இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் அடுத்த பாடலான ‘வீரா ராஜ வீர’ பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகவுள்ளதாக கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து படக்குழு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/248502

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வன் படத்துக்கு தமிழ் - இந்தி ரசிகர்கள் தந்த வரவேற்பில் என்ன வித்தியாசம்?

பொன்னியின் செல்வன் விளம்பர நிகழ்ச்சி

பட மூலாதாரம்,RAJWANSH

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,கவியரசு வி
  • பதவி,பிபிசி தமிழ்
  • 19 ஏப்ரல் 2023, 06:22 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க, தன் தந்தையும் நடிகருமான சிவகுமார் அறிவுரையோ பயிற்சியோ வழங்கவில்லை என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். தென்னிந்திய ரசிகர்களும் ஹிந்தி ரசிகர்களும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றிற்கு தந்த வரவேற்பில் வித்தியாசம் இருப்பதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.

லைக்கா - மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது.

இதற்காக, நாடு முழுவதும் படக்குழுவினர் நடத்தும் புரோமொஷன் நிகழ்ச்சிகளில் அதில் நடித்துள்ள நடிகர், நடிகையர் கலந்து கொண்டு வருகின்றனர். டெல்லியில் அவ்வாறான நிகழ்ச்சி ஒன்றில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

"மூன்று தலைமுறை ரசிகர்களின் எதிர்பார்ப்பு" - நடிகர் விக்ரம்

மாணவர்களுடனான கலந்துரையாடலுக்குப் பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகர், நடிகையர் பதிலளித்தனர்.

 

பாகம் ஒன்றிற்கு ஹிந்தி ரசிகர்கள் அளித்த வரவேற்பு குறித்து பேசிய நடிகர் விக்ரம், “ பொன்னியின் செல்வம் என்ற காவியத்தை நாங்கள் உருவாக்க தயாராகும்போதே எங்களுக்கு தெரியும் இதை தமிழ் மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் என்று. பாகம் ஒன்று வெளியானபோது, நடக்க கூட முடியாத எத்தனையோ முதியோர்கள் தங்கள் குடும்பத்தார் உதவியுடன் திரையரங்குகளுக்கு படம் பார்க்க வந்தனர். காரணம் இது தமிழ் சினிமாவின் 70 ஆண்டுகால கனவு; மூன்று தலைமுறை ரசிகர்களின் எதிர்பார்ப்பு” என்று கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

ஹிந்தி ரசிகர்கள் அளித்த வரவேற்பு

தொடர்ந்து பேசிய விக்ரம், “ஹிந்தி ரசிகர்களுக்கு இந்த படத்தை புரிந்து கொள்வது அத்தனை எளிதாக இருந்திருக்காது. கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட உங்களுக்கு உச்சரிக்க சிரமமாக இருந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் கடந்து பாகம் ஒன்றிற்கு நீங்கள் தந்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் போடப்பட்ட முடிச்சுகளுக்கு விடை காண நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி. பாகம் ஒன்று ஒரு அறிமுகம் மட்டுமே. அத்தனை முக்கிய திருப்பங்களும் பாகம் இரண்டில் உங்களுக்காக காத்திருக்கின்றன” என்று கூறினார்.

 

“ இயக்குனர் மணிரத்னம் ஒருவரே படத்தில் எங்களுக்கு இருந்த இணைப்புப்புள்ளி” என்று பேசிய நடிகை திரிஷா, “ நாவல்களை படித்தவர்களையும் படிக்காதவர்களையும் இப்படம் முழுமையாக சென்றடைய அவர் எடுத்த முயற்சி அளப்பரியது” என்று கூறினார்.

“பொன்னியின் செல்வன் தூண்களே பெண்கள்தான்”

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அத்தனை பெரிய ஆண் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் நடிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகை ஐஷ்வர்யா லட்சுமி, “பொன்னியின் செல்வம் கதையின் தூண்களே பெண்கள் தான்” என்று கூறினார்.

“கட்டளை இடுபவர்களாக, முடிவெடுப்பவர்களாக, வழித்துணைகளாக கதை முழுக்க பெண் கதாபாத்திரங்களின் ஆளுமை தான் ஓங்கியிருக்கும். ஆண் கதாபாத்திரங்களுமே அதை ஒப்புக்கொள்வார்கள்” என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விளக்கியதை நடிகர்களும் கலகலப்பாக ஆமோதித்தார்கள்.

பொன்னியின் செல்வன்-2 விளம்பர நிகழ்ச்சி

பட மூலாதாரம்,RAJWANSH

தந்தை சிவகுமார் குறித்த கேள்விக்கு நடிகர் கார்த்தி ருசிகர பதில்

கடந்த முறை டெல்லி வந்திருந்த போது புதிதாக தோன்றிய இடங்களும் மனிதர்களும் இப்போது மிகவும் பழக்கமானதாக தோன்றுவதாக கூறி பேச தொடங்கினார் நடிகர் கார்த்தி

 

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக தன் தந்தை சிவகுமாரிடம் பயிற்சி எதாவது எடுத்து கொண்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, “நடிகர் எம் ஜி ஆர் காலத்தில் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சித்தபோது, வந்தியதேவன் கதாபாத்திரத்தில் என் தந்தை நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் எனக்கு எந்த பயிற்சியோ அறிவுரையோ வழங்கவில்லை. மாறாக கை நிறைய வரலாற்றுப் புத்தகங்களை அளித்தார். கதாபாத்திரங்களைப் படித்து உள்வாங்கிக்கொள்ள சொன்னார். மற்றதெல்லாம் தானாக நடந்தது” என்றார்.

“ஹிந்தி கற்றுக்கொள்கிறேன்” - நடிகர் ஜெயம் ரவி

பத்திரிகையாளர் ஒருவர் ஹிந்தியில் கேட்ட கேள்விக்கு ஹிந்தியிலே பதிலளித்த நடிகர் ஜெயம் ரவி, “எனக்கு ஹிந்தி சரளமாக தெரியாது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பேச கற்றுக்கொள்கிறேன். தவறு எதுவும் செய்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு பதிலளிக்க தொடங்கினார்.

 

படங்கள் திருட்டுத்தனமாக வெளியிடப்படுவதைத் தடுக்க ஹிந்தி சினிமா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பேசிய ஜெயம் ரவி, ”தயாரிப்பு நிறுவனங்கள் படம் வெளியாகி சில வாரங்களில் தொலைக்காட்சிகள் மற்றும் OTT-களில் படத்தை வெளியிட ஒப்புக்கொள்வதால் ரசிகர்கள் திருட்டுதனாமாக வெளியாகும் பிரதிகளை பார்ப்பது கணிசமான அளவில் குறைந்துள்ளது. ஹிந்தி சினிமா எடுத்து வரும் இது போன்ற முயற்சிகள் சினிமா வணிகத்துக்கு ஆரோக்கியமானது” என்று கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

ஜெயம் ரவி, திரிஷா இருவரும் ட்விட்டரில் ப்ளூ டிக்கை இழந்தது ஏன்?

பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பரத்திற்காக நடிகர் ஜெயம் ரவியும் நடிகை திரிஷாவும் தங்கள் டிவிட்டர் கணக்கின் பெயர்களை தாங்கள் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களாக மாற்றியிருந்தனர். இதனை தொடர்ந்து அவர்களுடைய கணக்குகளில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டது.

இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகர் ஜெயம் ரவி, “ டிவிட்டர் விதிமுறைகளின்படி உறுதி படுத்தப்பட்ட பெயரல்லாத காரணத்தால் ப்ளு டிக் நீக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை கணக்கில் இருந்த அருள்மொழி வர்மனின் படம் என் முக சாயலில் இல்லை என்று நினைத்து நீக்கியிருப்பார்கள்” என்று நகைச்சுவையாக கூறினார்.

 

தொடர்ந்து அது குறித்து பேசிய நடிகை திரிஷா நீக்கப்பட்ட ப்ளூ டிக்கை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

“பொன்னியின் செல்வன் எனக்கு ஒரு நல்வரவு”

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சோபிதா துலிபாலா பேசியபோது, “ ஹிந்தி நடிகையான எனக்கு தமிழ் திரையுலகில் நுழைய பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்வரவு அளித்தது. தமிழ் ரசிகர்கள் அன்பை வாரி வழங்குபவர்கள். வானதி கதாபாத்திரத்தின் மீது ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கும், எனக்கு அளித்துள்ள ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஹிந்தி உட்பட அனைத்து மொழி ரசிகர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக பாகம் ஒன்றின் கதைசுருக்கம் பாகம் இரண்டின் முதல் ஐந்து நிமிடங்களில் விளக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/c8v7d14mpjyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவான விதம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வனில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் - பிரபலங்கள் சொல்லும் காரணம்

கார்த்தி மற்றும் திரிஷா

பட மூலாதாரம்,LYCA PRODUCTION

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ச. பொன்மனச்செல்வன்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 53 நிமிடங்களுக்கு முன்னர்

’பொன்னியின் செல்வன்- 2’ படம் இந்தவாரம் திரைக்கு வரவுள்ள நிலையில், படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு முதல் பாகம் வெளியான நேரத்தில் பொன்னியின் செல்வன் வாசகர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், முதல் பாகம் உருவாக்கப்பட்டிருந்த விதம், கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றால் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்க, இரண்டாம் பாகத்தை நாவலை வாசிக்காதவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 

தொடராக வெளிவந்த 1950-களிலேயே வாசகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது ‘பொன்னியின் செல்வன்’. எம்.ஜி.ஆர், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் ஷங்கர் என தமிழ் சினிமாவின் பல ஆளுமைகள் படமாக எடுக்க முயன்று முடியாமல் போன இந்த நாவலை இயக்குநர் மணிரத்னமும் ஏற்கனவே ஒருமுறை முயன்று முடியாமல் போனது. ஆனாலும், மற்றொரு முயற்சியில் அது கைக்கூடியது. ஏராளமான கதாபாத்திரங்கள், சிக்கலான கதையமைப்பு கொண்ட நாவலை எப்படி திரைக்கதையாக்கி திரையில் படைக்கப்போகிறார் மணிரத்னம் என எல்லோரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வந்தது ‘பொன்னியின் செல்வன்’.

 

 
விக்ரம்

பட மூலாதாரம்,LYCA PRODUCTION

விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெட்சுமி, ஜெயராம், பிரபு, பிரகாஷ் ராஜ் என பிரபலமான பல நடிகர்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குநர் தோட்டா தரணி என இந்திய சினிமாவின் முன்னணி கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் என்ன கதாபாத்திரம் பிடிக்கும், அதற்கான காரணம் என்ன? என சில பிரபலங்களும், ரசிகர்களும் நம்மோடு பகிர்ந்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா

பட மூலாதாரம்,LYCA PRODUCTION

ஸ்ரீகணேஷ்- திரைப்பட இயக்குநர், சென்னை

ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் துயரம்தான் பொன்னியின் செல்வனின் ஒட்டுமொத்த ஆதாரமும் என்பதால், எனக்கு அந்த கதாப்பாத்திரத்தின் மீது பெரும் ஆர்வமுண்டு. அவ்வளவு பெரிய பேரரசையும் தன் காதலுக்காக துறந்து, மீளா துயரில் ஓயாதிருக்கும் ஆதித்த கரிகாலன், உணர்ச்சியே என்னளவில் அந்த கதைக்கான ஜீவன்.

 

ஆதித்த கரிகாலனும், அந்த கதாபாத்திரத்திற்குள் கச்சிதமாக பொருந்திப் போன நடிகர் விக்ரமும் அடுத்த பாகத்தில் என்னவெல்லாம் நிகழ்த்தப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தோடே பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன் என்கிறார்.

 

நீலிமா இசை, திரைப்பட நடிகை, சென்னை

குந்தவையின் சாணக்யத்தனமும், பூங்குழலியின் தைரியமும் வெகுவாக கவர்ந்தது.

 

ஒரு பெண் கதாப்பாத்திரம் ஒரு பேரரசின் அதிகார எல்லைகளுக்குள் எப்படி யோசிக்க முடியும், அதனை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதை குந்தவை கதாப்பாத்திரத்தின் வழியே நிறுவியிருப்பார் கல்கி. அந்த பாத்திரத்தின் வலிமை குறையாமல், திரைப்படத்திலும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

அரச குடும்பத்தில் பிறந்ததால் இயல்பிலேயே ராணிக்குரிய அம்சங்கள் குந்தவையிடம் இருக்க, மீனவ குலத்தில் பிறந்தாலும் ஒரு ராணிக்குரிய அத்தனை இயல்புகளையும் கொண்டவள் பூங்குழலி. சூறைக்காற்றும் துடுப்பால் புறந்தள்ளி, அருண்மொழி வர்மனை சேர்க்கும் வன்மையும், சொல்ல முடியா காதலை சுமந்திருக்கும் மென்மையும் என பூங்குழலி கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும். பெண்ணியம் என்பது என்ன என்றால், தயங்காமல் பூங்குழலி என சொல்ல முடியும்.

 

குந்தவையின் ராஜ தந்திரம் எவ்வாறு சோழர்களின் வரலாற்றை தீர்மானிக்கும், அதனால் நிகழும் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் என்ன, பூங்குழலி பொன்னியின் செல்வனிடம் காதலை சொல்வாளா என்பதை திரையில் காண ஆவலோடு காத்திருக்கிறேன். நாவல் மூலம் ஏற்கனவே முழுக் கதையும் தெரியும் என்றாலும், நாவலில் இல்லாததும் படத்தில் இருப்பதாக இயக்குநர் மணிரத்னம் சொல்லியிருப்பது மேலும் ஆர்வத்தை கூட்டியிருக்கிறது.

 

ச. கார்த்திக்- தொழில் முனைவோர், கோயம்புத்தூர்

பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்களில் எனக்குப் பிடித்தது நந்தினிதான். கல்கி அந்த நாவலை எழுதிய காலகட்டத்தில் அத்தனை துணிச்சல் மிகுந்ததாய் அந்த பெண் பாத்திரத்தை உருவாக்கியது இப்போதும் வியப்பாகவே இருக்கிறது. அதிகாரத்தின் மீதான போதையை ஒருவர் ருசித்துவிட்டால், அந்த வேட்கை எப்போதும் விடாது என்பதை நிறுவும் நந்தினியின் கதாப்பாத்திரம், நாவல் நெடுக துயரத்தையும் சுமந்தபடியே இருக்கும்.

 

கல்கி படைத்த நந்தினியை, இம்மி பிசகாமல் திரையில் உலவ வைத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். நந்தினி இப்படித்தான் இருப்பார் என வாசிப்பின்போது தோன்றிய எல்லா அம்சங்களும் பொருந்தும் ஐஸ்வர்யா ராயை, நந்தினி கதாப்பாத்திரத்திற்கு தேர்வு செய்ததிலேயே பாதி வெற்றி கண்ட படக்குழு, அவர் திரையில் தோன்றியதும் மீதியையும் வசமாக்கிக் கொண்டது. அதிலும், குந்தவையை சந்திக்கும் காட்சியில் நந்தினியின் கண்களில் தெரியும் குரோதமும், பெரிய பழுவேட்டரையரை தழுவும்போது கண்களில் மிளிரும் வஞ்சமும் என நந்தினி தேவியின் எல்லா தந்திரங்களையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்தார் ஐஸ்வர்யா ராய்.

 

ஐஸ்வர்யா ராயின் ‘நந்தினி’ கதாபாத்திரம் அடுத்தடுத்து என்ன செய்யும் என்பது நாவல் வழியாக ஏற்கனவே தெரியும் என்றாலும், திரையில் பார்க்கும் ஆர்வம் மிகுதியாகவே இருக்கிறது.

மணிரத்னம்

பட மூலாதாரம்,LYCA PRODUCTION

அமிர்தவள்ளி, குடும்பத் தலைவி, திருவாரூர்

பொன்னியின் செல்வன் நாவலை நான் என் கல்லூரி காலத்தில் வாசித்தேன். அப்போது, நான் உட்பட எங்கள் தோழிகள் பலருக்கும் பிடித்த கதாப்பாத்திரம் என்றால், அது வந்தியத்தேவன் கதாப்பாத்திரம்தான். நான் தஞ்சாவூர்காரி என்பதால், அந்த ஆடிப்பெருக்கும், காவிரி ஆற்றங்கரையும், குதிரையில் செல்லும் வந்தியத்தேவனும் நெருக்கமாக இருந்தது. பதின் பருவத்தில், வந்தியத்தேவன் போல் உண்மையில் ஒரு இளைஞன் இருப்பானா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அந்த துறுதுறுப்பும், வீரமும் எல்லோருக்கும் பிடிக்கச் செய்தது. வாசிக்கும்போது இருந்த வசீகரம், கொஞ்சம் குறைவுதான் என்றாலும் நடிகர் கார்த்தி, வந்தியத் தேவன் கதாப்பாத்திரத்திற்கு முடிந்தளவு உயிரூட்டியிருக்கிறார். இரண்டாம் பாகத்தில் நடக்கப் போகும் முக்கிய நகர்வுகள் பலவும் அந்தக் கதாப்பாத்திரத்தின் வழியாகவே இருக்கும் என்பதால், முதல்பாகத்தைக் காட்டிலும் வந்தியத்தேவன் இன்னும் விறுவிறுப்பாக இருப்பார் எனும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

 

திரிஷா

பட மூலாதாரம்,LYCA PRODUCTION

ராம்குமார், திரைப்பட உதவி இயக்குநர், சென்னை

விக்ரம்

பட மூலாதாரம்,LYCA PRODUCTION

பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரம்தான் ஒரு நங்கூரம் போல் பொன்னியின் செல்வன் கதையை தாங்கிப் பிடிக்கிறது. சிம்மாசனத்திற்கு எதிரானவராக அதே நேரம் நந்தினியின் சூழ்ச்சிக்குள்ளும் சிக்கிக் கொண்டு தடுமாறும் அந்தப் பாத்திரம் மிகவும் ஆர்வமூட்டக்கூடியது. சோழர்களுக்கு விசுவாசத்தை காட்டிக் கொண்டு, நந்தினியால் ஒருவித குற்றவுணர்ச்சியையும் சுமக்கும் பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தின் ஓட்டத்தை புரிந்துகொண்டால், மன்னராட்சி முறைகளையே முழுமையாக புரிந்து கொள்ள முடியும். நாவலில் இருக்குமளவிற்கு அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் திரையில் இல்லை என்றாலும், இனியான நகர்வுகள் பழுவேட்டரையருக்கு நெருக்கமானவை என்பதால் இரண்டாம் பாகத்தில் இன்னும் முக்கியத்துவத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கும் சாத்தியம் அதிகம்.

கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் தமிழ் வாசகர் பரப்பில் வெவ்வேறு வகையில், ரசிக்கப்பட்டுக் கொண்டே வரும் பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்கள் திரையில் உயிர்பெற்றிருப்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு மேலும் ரசிக்கும்படியானதாக உலவும் என்பதை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உறுதிபடுத்தியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cql3qg40jqdo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வன் எப்படி இருக்கிறது? இலங்கை தமிழர்களின் விமர்சனம்

பொன்னியின் செல்வன்
28 ஏப்ரல் 2023, 05:55 GMT
புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்

பொன்னியின் செல்வன் நாவலில் இலங்கையும் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் குறித்த இலங்கை தமிழர்கள் விமர்சனம் என்ன?

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளனர். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மாபன் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

 

முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

அருண்மொழி வர்மனும், வந்தியத் தேவனும் கடலில் மூழ்கிவிடுவது போல் முதல் பாகம் முடிந்த நிலையில், இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதா?

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2 பாகத்திற்கு தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிகள் திரையிடப்படவில்லை. அதே நேரத்தில், பிற பகுதிகளில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.

இலங்கையில் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக இருப்பதாக கூறுகின்றனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இரண்டாம் பாகம் பூர்த்தி செய்வதாக பலரும் தெரிவித்துள்ளனர். ஆதித்த கரிகாலன் - நந்தினி இடையேயான காட்சிகள் சிறப்பாக இருப்பதாக கூறுகின்றனர்.

பொன்னியின் செல்வன் 2

“முதல் பாகம் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்புகளுடன் நான் வந்தேன். இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புகளை தாண்டி சிறப்பாக உள்ளது. கட்டாயம் பெரிய திரையில் பார்க்க வேண்டியப் படம். ஆதித்த கரிகாலன் - நந்தினி இடையேயான காதல் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது ” என்று ஒரு ரசிகர் தெரிவித்தார்.

“ஒரு நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த புத்தகம் பொன்னியின் செல்வன் என்று சூப்பர் ஸ்டார் சொல்லியிருப்பார். அதை பார்த்துதான் நான் பொன்னியின் செல்வன் நாவலை வாசிக்க தொடங்கினேன். புத்தகத்தை அப்படியே படமாக்கியுள்ளனர். இரண்டாம் பகுதி கண்கலங்க வைத்தது. ஆதித்த கரிகாலன் - நந்தினி இடையேயான காட்சிகள் நன்றாக இருந்தது. கலை, திரைக்கதை சிறப்பாக வந்துள்ளது. மணி ரத்னம் என்றால் சொல்லவா வேண்டும்? ஏ.ஆர்.ரகுமானும் இசையில் அசத்தியிருக்கிறார். 40 வருச கனவு நினைவாகியிருக்கு. ” என்று மற்றொரு ரசிகர் கூறினார்.

பொன்னியின் செல்வன் 2

ஆதித்த கரிகாலன் சிறந்த காதலன், சிறந்த அரசன்

“முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி நன்றாக இருந்தது. நந்தினி, குந்தவை கதாபாத்திரங்களை நன்றாக வடிவைத்துள்ளனர். விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

“ஆதித்த கரிகாலன் சிறந்த காதலன், சிறந்த அரசன். ஆதித்த கரிகாலனை மிகவும் பிடித்திருந்தது” என்று விக்ரமின் நடிப்பை வெகுவாக சிலேகித்து ரசிகர் ஒருவர் கூறினார்.

ஒருசிலர் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக கூறினர்.

“ படம் சிறப்பாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராயின் நடிப்பு மிகவும் பிடித்துள்ளது ” என பெண்மணி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

படத்தில் எல்லாம் டாப் ஆக இருக்கிறது. கரிகாலன் கதாபாத்திரம் சிறப்பான வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ரசிகர் ஒருவர் குறிப்பிட்டார்.

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை போன்று 2ஆம் பாகம் இல்லை என்ற விமர்சனத்தை ஒருசில ரசிகர்கள் முன் வைத்தனர்.

“படம் சுமாராகதான் இருக்கு, முதல் பாகத்தை போன்று இல்லை. விக்ரம், ஐஸ்வர்யா ராயின் நடிப்பு மட்டும் பிடித்துள்ளது. ” என்று மற்றொரு ரசிகர் கூறினார்.

“படம் நல்லா இருந்தது. ஆனால், முதல் பாகத்தை போன்று சிறப்பாக இல்லை. முதல் பாகத்தில் நிறைய பாடல்கள் இருந்தன. இரண்டாம் பாகத்தில் பாடல்கள் இல்லை”

நாவலுடன் ஒப்பிடும்போது திரைப்படமாக பொன்னியின் செல்வன் வேறு விதமாக இருக்கிறதாக கூறும் ரசிகர்கள், ஒட்டுமொத்தத்தில் பொன்னியின் செல்வன் நாவலுக்கு முடிந்தளவு நியாயத்தை படம் செய்துள்ளது என்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cxxypel1klko

ஏராளன், சினிமா விமர்சனத்தினை தனித் திரியில் பதிவது தான் சரியாக இருக்கும். அது தான் யாழின் வழமையும், பொதுவான உலக வழமையும்.

சினிமாவில் என்ன நடக்குது என்பதை அறிவதை விட விமர்சனங்களை வாசிக்க மட்டும் என்று ஒரு வாகர் குழாம் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2023 at 18:29, நிழலி said:

ஏராளன், சினிமா விமர்சனத்தினை தனித் திரியில் பதிவது தான் சரியாக இருக்கும். அது தான் யாழின் வழமையும், பொதுவான உலக வழமையும்.

சினிமாவில் என்ன நடக்குது என்பதை அறிவதை விட விமர்சனங்களை வாசிக்க மட்டும் என்று ஒரு வாகர் குழாம் உள்ளது.

அப்ப மாற்றி விடுங்கோவன். நான் யாழில் இன்னும் கற்றுக் குட்டியாக இருப்பதால் யாழின் வழமையும் தெரியல, உலக வழக்கும் தெரியல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.