Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலிஸ்தான் சர்ச்சையின் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலிஸ்தான் சர்ச்சையின் வரலாறு மற்றும் தற்போதைய நிலை என்ன?

பஞ்சாபி, காலிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜக்தர் சிங்
  • பதவி,பிபிசி
  • 24 மார்ச் 2023, 12:22 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

`நான் என்னை ஒருபோதும் இந்தியனாக கருதியது இல்லை. நான் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறேன் என்பதற்காக என்னை நீங்கள் இந்தியன் என கூற முடியாது. என்னை பொருத்தவரை அது ஒரு பயண ஆவணம் மட்டுமே`

இந்த வார்த்தைகள் அம்ரித்பால் சிங் கூறியது. இவர் காலிஸ்தான் ஆதரவாளர் மற்றும் `வாரிஸ் பஞ்சாப் டி` என்ற பஞ்சாப் இயக்கத்தின் தலைவர்.

சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை. அந்த தனி மாநிலத்தின் பெயரைதான் இவர்கள் காலிஸ்தான் என்று அழைக்கின்றனர். சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டுமென்ற இந்த எழுச்சியை மிகவும் உறுதியாக ஆதரப்பிவர் அம்ரித்பால் சிங். அதுகுறித்த பல சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததற்கும், பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதற்கும் இவர் மீது தற்போது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த காலிஸ்தான் கோரிக்கை எப்போது எழுந்தது, சீக்கியர்களுக்காக தனி மாநில கோரிக்கை எதற்காக எழுந்தது என்பதே இப்போது பஞ்சாப் அரசியலை சுற்றி எழுந்துள்ள பேச்சுகள்.

 

அதற்கான சில பதில்களை இந்த கட்டுரையில் உங்களால் காண முடியும்.

காலிஸ்தான் குறித்த பேச்சுகள் எழும்போதெல்லாம், இந்தியாவில் உள்ள பஞ்சாபிகளை நோக்கியே அனைவரது கவனமும் செல்கிறது.

சீக்கிய மதத்தை உருவாக்கிய குரு நானக் தேவ்-வின்பிறந்த இடமான நங்கனா சாஹிப் தற்போதைய நிலபரப்பு அமைப்பின்படி பாகிஸ்தானில் உள்ளது. இந்தியா பாகிஸ்தான் பிரிவிற்கு முன்பாக பஞ்சாப்பின் ஒரு பகுதியாகவே நங்கனா சாஹிப் அறியப்பட்டது. எனவே இந்த பகுதி சீக்கியர்களின் தாய்நிலமாக காணப்பட்டு வருகிறது.

முந்தைய காலகட்டத்தில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டுமென்ற போராட்டம் 1995ஆம் ஆண்டு இறுதியில் முடிவுக்கு வந்தது. ஆனால் சமீபத்தில் இந்த பேச்சு மீண்டும் எழுந்ததற்கு காரணம் எம்.பி. சிம்ரஞ்சித் சிங் மான் என்பவர்தான். இதற்கு அமெரிக்காவில் வாழும் சில சீக்கியர்கள் ஆதரவு தெரிவித்து வந்தாலும், இந்தியாவில் வாழ்ந்துவரும் பெரும்பாலான சீக்கியர்கள் இத்தகைய கோரிக்கைகளில் நாட்டம் காட்டவில்லை.

காலிஸ்தான் கோரிக்கை எப்போது உருவானது?

பஞ்சாபி, காலிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் தனி தேசமாக உருவாக வேண்டும் என்பதற்காக 1940களில் முஸ்லீம் லீக் லாஹூர் பிரகடனம் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் பிரகடனமாக காலிஸ்தான் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை முதன்முதலாக முன்மொழிந்தவர் டாக்டர் வீர் சிங் பாட்டி.

அதேபோல் 1966 இல் பஞ்சாப் மாநிலம் மொழியின் அடிப்படையில் 'மறுசீரமைக்கப்படுவதற்கு' முன், அகாலி தளத்தின் தலைவர்கள் 60களின் மத்தியில் சீக்கியர்களுக்கான இந்த சுயாட்சி பிரச்னையை மீண்டும் கையில் எடுத்தனர்.

இங்கிலாந்திலிருந்து வந்த சரண் சிங் பான்சி மற்றும் ஜகித் சிங் சௌஹான் போன்ற சில சீக்கிய தலைவர்களும்,1970களில் இது குறித்த கோரிக்கையை எழுப்பினர்.

1978ஆம் ஆண்டில் `தல் கல்சா` என்ற தனி அமைப்பை சில சீக்கிய இளைஞர்கள் உருவாக்கி, காலிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

பிந்திரன்வாலே காலிஸ்தானை ஆதரித்தாரா?

பஞ்சாபி, காலிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொற்கோயிலின் உள்ளே இருந்த சீக்கியர்களை வெளியேற்றுவதற்காக 1984ஆம் ஆண்டு இந்திய ராணுவப் படை தாக்குதலில் ஈடுபட்டது. இதனை ஆப்ரேசன் ப்ளூ ஸ்டார் என்று அழைத்தனர்.

பெரும்பான்மையான சீக்கிய மக்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஜர்னைல் சிங் பிந்திராவாலே இந்த தாக்குதலின்போது கொல்லப்பட்டார். ஆனால் அவர் காலிஸ்தான் என்ற தனி மாநிலம் வேண்டுமென்ற கோரிக்கையை தெளிவாக எந்த இடத்திலும் முன்வைத்ததில்லை. ஆனால் ஸ்ரீ சர்தார் தாஹிப்பின் இடத்தின் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், அது நிச்சயம் காலிஸ்தான் எழுச்சிக்கு பெரிய அடித்தளமாக அமையும் என அவர் கூறியிருந்தார்.

ஆனால் அகாலி தளம் செயற்குழுவால் முன்மொழியப்பட்டிருந்த, ஸ்ரீ அனந்தபூர் சாஹிப் தீர்மானத்திற்கு அவர் அழுத்தம் கொடுத்து வந்தார்.

அனந்தபூர் சாஹிப் தீர்மானம் என்றால் என்ன?

பஞ்சாபி, காலிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அனந்தபூர் சாஹிப் தீர்மானம் 1973ஆம் ஆண்டு முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.

அகாலி தளத்தின் அடிப்படைக் கொள்கையானது, புவிசார்-அரசியல் சூழலை உருவாக்குவதன் மூலமும், அரசியல் அமைப்பை உருவாக்குவதன் மூலமும் கல்சாவின் இந்த பிறப்பு உரிமையை நனவாக்க முயல்வதாகும். அதாவது ஆண்டவன் கட்டளையின்படியும், கல்சா பந்தின் ஆசைப்படியும் சீக்கியர்களுக்கான உரிமையை நிலைநாட்டுவதே இதன் நோக்கமாகும்.

இந்தியாவின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அகாலி தளம் செயல்பட்டு வந்தது.இந்தியாவிற்குள்ளேயே சீக்கியர்களுக்கு தனி மாநிலம் உருவாக்குவதையே அனந்த்பூர் தீர்மானம் வலியுறுத்தியது. ஆனால் தனி தேசத்தை அல்ல.

ஆனால் 1978ஆம் ஆண்டு நடைபெற்ற லூதியானா மாநாட்டில், அகாலி தளத்தின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

”இந்தியா பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் கூட்டாட்சி மற்றும் புவியியல் அமைப்பு என்பதை சிரோமணி அகாலி தளம் உணர்ந்துள்ளது. மத மற்றும் மொழி சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், ஜனநாயக மரபுகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவும், மத்திய மற்றும் மாநில உறவுகள் மற்றும் உரிமைகளை மறுவரையறை செய்வதன் மூலம் அரசியலமைப்பு உள்கட்டமைப்புக்கு கூட்டாட்சி வடிவம் கொடுக்க வேண்டியது அவசியம்”.

மேற்கூறிய கொள்கை மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் அனந்த்பூர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முறையாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் நோக்கம் என்ன?

பஞ்சாபி, காலிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலிஸ்தானுக்கான முதன் முதல் கோரிக்கை 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று போராளி அமைப்புகளின் கூட்டு முன்னணி பாந்தக் கமிட்டியால் அறிவிக்கப்படட்து.

”புனித அகல் தக்த் சாஹிப்பின் இந்த சிறப்பு நாளில், நாங்கள் அனைத்து நாடுகளுக்கும் அரசாங்கங்களுக்கும் முன்பாக அறிவிக்கிறோம், இன்று முதல் 'கலிஸ்தான்' கல்சா பந்தின் தனி இல்லமாக இருக்கும். கல்சா கொள்கைகளுடன்அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வாழ்வார்கள்” என்பதே அந்த அறிவிப்பாக இருந்தது.

இந்த வழிகளை பின்பற்றும் சீக்கியர்களுக்கு அரசாங்க நிர்வாகத்தை நடத்துவதற்கான உயர் பதவிகள் வழங்கப்படும், அவர்கள் அனைவரும் நன்மைக்காக உழைத்து, பக்தியுள்ள வழிகளில் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துகிறார்கள் என்று அதில் கூறப்பட்டது.

இந்திய காவல்துறையின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சிம்ரன்ஜித் சிங் மான், 1989 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையான பிறகு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டார், ஆனால் அவரது நிலைப்பாட்டில் பல முரண்பாடுகளைக் காணலாம். அவர் இப்போது சங்ரூரில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதாக சத்தியம் செய்துள்ளார். ஆனால் அதேசமயம் பாராளுமன்றத்திற்கு வெளியே அவர் அளித்த பேட்டிகளில் காலிஸ்தானை ஆதரித்தார்.

காலிஸ்தான் விவகாரத்தில் அகாலி தாலின் நிலைப்பாடு என்ன?

1992 ஆம் ஆண்டில், அகாலி தளத்தின் முன்னணி உறுப்பினர்களால் இந்த பிரச்சினை முறையாக கையாளப்பட்டது. இது தொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் அவர்கள் ஒரு குறிப்பாணையும் அளித்தனர்.

”சீக்கியர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கும், பஞ்சாபின் காலனித்துவ நீக்கம் ஒரு முக்கியமான படியாகும். உலகின் அனைத்து சுதந்திர நாடுகளைப் போலவே, சீக்கியர்களுக்கு ஒரு தேசம் வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின்படி, மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையும், காலனித்துவம் , அடிமைத்தனம் மற்றும் அரசியல்-விரோத தளங்களிலிருந்தும் அவர்களுக்கு சுதந்திரம் தேவை” என்பதே அந்த குறிப்பாணையின் கடைசி பத்தியாக இருந்தது.

இந்த குறிப்பாணையை சமர்ப்பிக்கும் போது, சிம்ரன்ஜித் சிங் மான், பிரகாஷ் சிங் பாதல் மற்றும் சிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவின் தலைவர் குர்சரண் சிங் தோஹ்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்குப் பிறகு பிரகாஷ் சிங் பாதலும், குர்சரண் சிங் தோஹ்ராவும் இந்தக் குறிப்பாணையை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.அகாலி தளத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரகாஷ் சிங் பாதல் பேசும்போது, ”அகாலி தளம் சீக்கியர்களை மட்டுமின்றி பஞ்சாபின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும். எனினும், இதற்கான முறையான தீர்மானம் எதுவும் வரவில்லை” என்று கூறினார்.

அமிர்தசரஸ் பிரகடனம் என்ன கூறியது? கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் எஸ்எஸ் பர்னாலாவின் நிலைப்பாடு என்ன?

பஞ்சாபி, காலிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிம்ரன்ஜித் சிங் மானின் அகாலி தளம் (அமிர்தசரஸ்) 1994 ஆம் ஆண்டு அரசியல் இலக்குகளை மீட்டமைத்தது. அதே நேரத்தில் கேப்டன் அமரீந்தர் சிங்கும் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார். பிரகாஷ் சிங் பாதல் இதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிய தற்காலிக விவகாரங்களின் மிக உயர்ந்த இடமான ஸ்ரீ அகல் தக்த் சாஹிப்பின் ஆதரவின் கீழ் மே 1, 1994 ஆம் ஆண்டு இது கையெழுத்திடப்பட்டது. இதனை அமிர்தசரஸ் பிரகடனம் என்று கூறினர்.

"ஹிந்துஸ்தான் (இந்தியா) என்பது வெவ்வேறு தேசிய கலாச்சாரங்களின் துணைக்கண்டம். ஒவ்வொன்றும் அதன் சொந்த பாரம்பரியம் மற்றும் முக்கிய நீரோட்டத்தைக் கொண்டுள்ளது என்று ஷ்ரோமணி அகாலி தளம் நம்புகிறது."

இந்த துணைக்கண்டமானது ஒரு கூட்டமைப்பு கட்டமைப்பின்படி மறுசீரமைக்கப்பட வேண்டும். இதனால் ஒவ்வொரு கலாச்சாரமும் மலர்கிறது. மேலும் இது உலகின் தோட்டத்தில் ஒரு தனித்துவமான நறுமணத்தை விட்டுச்செல்லும்.

இந்திய அரசாங்கத்தால் அத்தகைய அமைப்பு மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், காலிஸ்தானைக் கோரி போராடுவதைத் தவிர ஷிரோமணி அகாலி தளத்திற்கு வேறு வழியில்லை” என்று அமிர்தசரஸ் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆவணத்தில் கேப்டன் அமரீந்தர் சிங், ஜக்தேவ் சிங் தல்வண்டி, சிம்ரன்ஜித் சிங் மான், கர்னல் ஜாஸ்மர் சிங் பாலா, பாய் மஞ்சித் சிங் மற்றும் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

உலகளவில் எழுந்த காலிஸ்தான் கோரிக்கை:

இப்போது காலிஸ்தானுக்கான கோரிக்கையை அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் எழுப்பி வருகின்றனர். அந்தந்த நாடுகளில் இருக்கும் சீக்கிய அமைப்புகள் இதனை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பஞ்சாபில் இதற்கு அவ்வளவு ஆதரவு இல்லை.

`நீதிக்கான சீக்கியர்கள்` என்ற பெயரில் அமெரிக்காவை அடிதளமாக கொண்ட குழு ஒன்று இயங்கி வருகிறது. பிரிவினைவாத நிகழ்ச்சி நிரல் இருப்பதாகக் கூறி, UAPA வின் கீழ் 2019ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இந்திய அரசால் இந்த குழு தடை செய்யப்பட்டது.

இதற்கு ஓராண்டு கழித்து, அதாவது 2020ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் காலிஸ்தான் குழுக்களுடன் தொடர்புடைய 9 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது. மேலும் காலிஸ்தானை ஆதரித்து இயங்கி வந்த 40 வலைத்தளங்களை முடக்கியது.

சீக்கியர்களுக்கு ஒரு தன்னாட்சி நாட்டை உருவாக்குவதே இந்த குழுவின் நோக்கமாக இருந்தது. அதற்காக சீக்கிய சமூகத்தினரின் ஆதரவைப் பெற இந்த குழு முயற்சித்து வந்தது.

‘நீதிக்கான சீக்கியர்கள்` குழு 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. அதன் முன்னணி முகமாக இருந்தவர் குர்பத்வந்த் சிங் பண்ணு. இவர் பஞ்சாப் பல்கலைக்கழகம் சண்டிகரில் சட்டம் பயின்று, அமெரிக்காவில் சட்டப் பயிற்சியும் பெற்றவர்.

இவர் இந்த குழுவின் சட்ட ஆலோசகராகவும் இருந்தார். காலிஸ்தானுக்கு ஆதரவாக 'வாக்கெடுப்பு 2020' என்ற பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். கனடாவின் சில பகுதிகளிலும், மற்ற பிற இடங்களிலும் இது போன்ற 'வாக்கெடுப்பு' நடத்தப்பட்டது. ஆனால் சர்வதேச அரசியலில் அது பெரிதாக எடுபடவில்லை.

அகல் தக்த்தின் ஜாதேதாரின் நிலை என்ன?

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அகல் தக்த், சீக்கிய மத மற்றும் தற்காலிக விவகாரங்களில் முடிவெடுக்கும் மிக உயர்ந்த இடமாக அறியப்படுகிறது. அதன் தலைவர் ஜாதேதார் என்று அழைக்கப்படுகிறார். இவரோடு செயல்படும் மற்ற நான்கு தக்த்களின் தலைவர்களுடன் இணைந்து, சீக்கிய சமூகம் தொடர்பான முக்கியமான விஷயங்களில் இவர்கள் கூட்டாக முடிவுகளை எடுக்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டில், ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் நினைவு நாளையொட்டி, காலிஸ்தானின் கோரிக்கை நியாயமானதுதான் என்று அகல் தக்த் ஜதேதார், கியானி ஹர்ப்ரீத் சிங் கூறினார்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர், "சீக்கியர்கள் இந்த படுகொலையை (1984 ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்) நினைவில் கொள்கிறார்கள். காலிஸ்தானை விரும்பாத சீக்கியர்கள் இந்த உலகில் யாருமே இல்லை. இந்திய அரசாங்கம் காலிஸ்தானை கொடுத்தால், நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம்" என்று அவர் கூறியிருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cg31lq6080eo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.