Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"அந்த டெக்னிக் மிஸ் ஆனதால் 40 வயதில் கர்ப்பம் ஆயிட்டேன்"

  • டாக்டர் சைலஜா சாந்து
  • பிபிசிக்காக
9 செப்டெம்பர் 2020
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கருத்தரிப்பு சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நான் உள்ளே காலடி வைத்தபோது, ஒருவர் வெளியே நின்று கொண்டிருந்தார். காலி தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்த அவர், வருத்தத்துடன் இருந்தார். நான் உள்ளே நுழைந்தபோது, அவர் விலகி நின்று எனக்கு வழிவிட்டார்.

ஸ்கேன் செய்யும் அறைக்குள் நான் சென்றபோது, ஒரு நோயாளி படுக்கையில் படுத்திருந்தார். எனது உதவியாளர் டாக்டர் வர்ஷிதா ஸ்கேன் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நான் பின்னால் நின்றிருந்தேன்.

அந்த நோயாளி எதிர்புறம் தலையைத் திருப்பி, அழுது கொண்டிருந்தார். புடவைத் தலைப்பால் முகத்தை மூடியிருந்தார்.

ஒருவேளை அது வலியாக இருந்திருக்கலாம்.

 

நோயாளியை நான் பார்த்தேன். வயிற்றின் மீது ஸ்கேன் சாதனத்தை நகர்த்துவதற்கும், அவருடைய வலிக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஸ்கேன் படத்தை நான் பார்த்தேன்.

அவருடைய கருப்பைக்கு அருகில் வளையம் போன்ற ஒரு அமைப்பு இருந்தது.

ஸ்கேன் கருவிக்கு அருகே நான் சென்றேன். கருப்பைக்கு வெளியே, கரு தரித்திருந்தது.

சில நேரங்களில் கருப்பைக்குள் கரு தங்குவதில்லை. ஆனால் அருகில் உள்ள குழாயில் உருவாகிறது. அந்தக் குழாயின் அகலம் குறைவானது என்பதால், இரண்டு மாதங்களுக்கு மேல் கரு வளர முடிவதில்லை.

அதன் அளவை வர்ஷிதா சோதித்துப் பார்த்தார். ``மேடம் 4.2 சென்டிமீட்டர்கள் உள்ளது'' என்று என்னிடம் கூறினார். மிகச் சிறிய கருதான். அதில் லேசான இருதய துடிப்பு இருந்தது.

குழாயில் கரு தங்கினால், ஊசி மருந்து மூலமாக சில நேரங்களில் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் அளவு 3.5 சென்டிமீட்டருக்கு மேலாக இருந்தால் அல்லது இருதய துடிப்பு உணரப்பட்டால், அறுவை சிகிச்சை மூலமாக கூடிய சீக்கிரத்தில் அதை நாம் அகற்றியாக வேண்டும். உடனடியாக அதற்கு சிகிச்சை தராவிட்டால், சில நேரங்களில் குழாயில் வெடித்துக் கொள்ளும் ஆபத்து உள்ளது.

``சாப்பிடவில்லையா'' என்று நான் மெதுவாகக் கேட்டேன்.

எப்போது சாப்பிட்டீர்கள் என்று நோயாளியிடம் வர்ஷிதா கேட்டார். ஏதாவது அருந்தினீர்களா என்றும் கேட்டார்.

அந்தப் பெண்ணுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்வதற்கு வசதி இல்லை. இருந்தாலும் வெறும் வயிற்றுடன் இருக்கிறாரா என உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

அப்படி இருந்தால் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு அவர் ஏற்பாடு செய்யலாம்.

``உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்?''

``கணவர் வெளியே நிற்கிறார் மேடம்.''

அந்தப் பெண்ணின் தகவல்களை நாங்கள் உறுதி செய்து கொண்டோம்.

அவருக்கு நாற்பது வயதுக்கு மேல் ஆகிறது. கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகள் உள்ளனர்.

அறைக்குள் வந்ததில் இருந்து அந்தப் பெண் சப்தமாக அழுது கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

கருத்தரிப்பு சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வலியால் அவர் அழுகிறார் என நினைத்துக் கொண்டு, ஸ்கேன் சாதனத்தில் ஒட்டியிருந்த ஜெல் பசையை வர்ஷிதா சுத்தம் செய்தார்.

``வலிக்கிறதா மேடம்'' என்று வர்ஷிதா விசாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் தலையை ஆட்டினார். ஆனால் அவருடைய துன்பம் முழுக்க அவரது முகத்தில் அப்படியே தெரிந்தது.

``வலியாக நினைக்க வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். வலி இருக்காது என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது குறைவானது தான். அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்துவிடும். இது லேப்ராஸ்கோபிக் முறையில் செய்வதால் தையல்கள் எதுவும் இருக்காது. இரண்டாவது நாளே நீங்கள் வீட்டுக்குச் சென்றுவிடலாம். ஒரு வாரத்தில் பழையபடி வேலைகளைச் செய்யலாம்'' என்று அவரிடம் நான் விளக்கினேன். இப்போதும்கூட முகத்தில் இருந்து முந்தானையை அவர் எடுக்கவில்லை. தேம்பிக் கொண்டிருந்தார்.

``அறுவை சிகிச்சை என்பதால் பயப்படுகிறீர்களா?''

``இல்லை.''

``வேறு என்ன?''

``அவர் என்ன சொல்வாரோ என எனக்குத் தெரியவில்லை. எப்போதும் அவருக்கு சட்டென கோபம் வந்துவிடும்.''

``அவர் ஏன் எதுவும் சொல்லப் போகிறார்?''

``இதுவரை இப்படி நடந்தது கிடையாது.''

``உண்மையிலேயே இது கருத்தரிப்புதானா?''

``பீட்டா எச்.சி.ஜி. எவ்வளவு'' என்று வர்ஷிதாவிடம் கேட்டேன்.

``600 மேடம்'' என்றார் அவர்.

``கருத்தரித்த காரணத்தால் அந்த ஹார்மோன் அவ்வளவுக்கு உயர்ந்துள்ளது. கருத்தரிக்காதிருந்தால் அது பூஜ்யமாக இருந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் ஸ்கேன் செய்யும்போதே நாங்கள் கருத்தரிப்பை அறிந்து கொள்வோம். ஆனால் கருப்பையில் கருத்தரிப்பதற்குப் பதிலாக குழாயில் உருவாகியுள்ளது.

உங்களுக்கு ஏன் சந்தேகம் என்று சொல்லுங்கள்?''

``இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் எப்போதும் கவனமாக இருப்போம்.''

``கவனமாகவா? அதாவது நீங்கள் கருத்தடை மாத்திரைகள் அல்லது ஊசி மருந்து எதுவும் பயன்படுத்துகிறீர்களா?''

``இல்லை மேடம்'' என்று கூறிய அவர் சொல்லத் தயங்கினார்.

``இதுபோன்ற விஷயங்களை அவர் தான் செய்து கொள்வார்...''

``ஓ! காண்டம் பயன்படுத்துகிறீர்களா? சில நேரங்களில் அதுவும் கூட கைவிட்டு விடுகிறது.''

அந்தப் பெண்ணை நாங்கள் பார்த்தபோது, அவரை நாங்கள் சங்கடப்படுத்துகிறோம் என்று தோன்றியது.

கண் பார்வையை உயர்த்தாமல் எங்களுக்கு அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

``இல்லை, இல்லை. அதுமாதிரி எதுவும் செய்வதில்லை. அவர் மட்டுமே முன்னெச்சரிக்கைகளை செய்து கொள்வார்."

கருத்தரிப்பு சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாங்கள் இருவரும் அதை கேட்டுக் கொண்டிருந்தோம்.

```கடைசி நேரத்தில்,'' அவர் நிறுத்திவிட்டு சொன்னார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.

விந்து வெளியாகும் நேரத்தில் இருவரும் பிரிந்து கொண்டு, பெண் உறுப்புக்குள் விந்து வெளியேறாமல் வெளியில் வெளியேறச் செய்கிறார்கள் என்று தெரிந்தது.

``பல ஆண்டுகளாக இப்படிதான் செய்து வருகிறோம். ஒருபோதும் இதுமாதிரி நடந்தது இல்லை.'' என்று கூறினார்.

``இதுவரை நடக்கவில்லை என்பது உங்கள் அதிர்ஷ்டம். மற்ற கருத்தடை வழிமுறைகளுடன் ஒப்பிடும்போது, இதுதான் மிகவும் குறைவான நம்பகத்தன்மை கொண்டது.''

``சொல்லப் போனால், நான் எப்படி கருத்தரித்தேன் என்பதில் அவர் கோபமாக இருக்கிறார்.''

``ஏன் கோபப்பட வேண்டும்? அவர் எதற்கு கோபம் கொள்ள வேண்டும்/'' என்று வர்ஷிதா கோபமாகக் கேட்டார்.

``நீங்கள் கடைப்பிடித்த நடைமுறை சிறந்தது கிடையாது. கருத்தரிப்பை இது 100 சதவீதம் தடுக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பது தவறானது. இது எப்படி நடந்திருக்கும் என்று அவரிடம் நான் சொல்கிறேன். கவலைப்பட வேண்டாம்!''

``நீங்கள் எப்படி சொல்வீர்கள்'' என்று சந்தேகத்துடன் அவர் கேட்டார்.

இதுபோன்ற விஷயங்களை தன் கணவருடன் வர்ஷிதா பேசுவாரா என அவர் சந்தேகிக்கிறார். அப்படியே கணவரிடம் சொன்னாலும் அவர் எளிதில் அதை நம்ப மாட்டார். எளிதாகப் பிரச்சினை தீர்ந்துவிடுமா? இவைதான் அவருடைய சந்தேகங்கள்.

``எங்கள் பாணியில் நாங்கள் சொல்வோம்! உங்கள் எதிரில் தான் நான் விளக்குவேன். இதில் எப்படி தோல்வி ஏற்படுகிறது என்பதை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும்.''

``இல்லை, இல்லை. தயவுசெய்து அப்படி செய்ய வேண்டாம்.''

இதுபோன்ற விஷயங்களை தன் மனைவி கேட்பதை அவர் விரும்ப மாட்டார் என அவர் அறிந்திருந்தார்.

``இது ஒன்றும் அவ்வளவு மோசமான விஷயம் கிடையாது. தனிப்பட்ட முறையில் நாம் செய்யும் எல்லா விஷயங்களும் தவறாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக நாம் தனியாகத்தான் குளிக்கிறோம்.''

``நான் தான் உங்களை சொல்லச் சொன்னேன் என்று அவர் நினைத்தால்''

``அப்படி நினைக்க வாய்ப்பு கிடையாது. சந்தேகங்களைத் தீர்ப்பது தான் அறிவியலே தவிர, சந்தேகங்களை உருவாக்காது.''

மறுபடியும் ஒருசுற்று அழுது முடித்தார்.

திருமணம் ஆகாத பெண்கள் இதுபோன்ற சூழ்நிலையில் என் அலுவலகத்தில் அழுததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் 40 வயதைக் கடந்த பெண்மணி. பள்ளிக்கல்வித் துறையில் அதிகாரியாக இருக்கிறார். உயர் பதவியில் இருக்கிறார்.

இந்த வயதில் கருத்தரிப்பு. அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. கணவர் தன்னை நம்பவில்லை என்பது துயரம். முதல் இரு பிரச்சினைகளைவிட மூன்றாவது தான் பெரிய பிரச்சினை.

கணவர் வெளியே வராந்தாவில் காத்திருக்கிறார். அவருடைய முகத்தில் மகிழ்ச்சி இல்லை. உள்ளே வரும்படி அழைத்தபோது, பாட்டிலை வீசி எறிந்துவிட்டு வந்தார்.

விளக்கம் சொன்னதும் அறுவை சிகிச்சைக்கு அவர் ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன், தேவையான ஒப்புதல் படிவங்களை மேசை மீது வர்ஷிதா தயாராக எடுத்து வைத்திரு்தார்.

அவருடைய மனைவி கருத்தரித்துள்ளார். வழக்கமாக கருப்பையில் கரு தங்காமல், அருகில் உள்ள குழாயில் உருவாகிவிட்டது. அதனால் அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற வேண்டும் என்று நான் விளக்கினேன்.

``அவர் இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும்.'

``அவருக்கு ஏதாவது மருந்து கொடுங்கள். வீட்டில் எல்லாம் அப்படியே கிடக்கின்றன. நாங்கள் செல்ல வெண்டும்.''

``மருந்துகளால் எதுவும் செய்ய முடியாது.''

``ஏன் முடியாது? என் மைத்துனரின் மனைவிக்கும் கூட குழாயில் கரு தங்கிவிட்டது. அவர்கள் மருந்துகள் கொடுத்தார்கள். பிரச்சினை தீர்ந்துவிட்டது. இதை ஏன் அவர்களிடம் நீ சொல்லவில்லை என்று மனைவியிடம் கோபமாகக் கேட்டார்.

கணவரைப் பார்த்துவிட்டு அவர் தலையைக் குனிந்து கொண்டார்.

கணவர் எரிச்சலானார். வீட்டுக்குச் செல்ல அவர் விரும்பினார். சீக்கிரம் வீட்டுக்குச் சென்றால், தன் கோபத்தை எல்லாம் வீட்டில் காட்ட முடியும். தன் மனைவி, டாக்டர் மற்றும் உதவியாளர்கள் முன்னிலையில் இருப்பது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

டாக்டரின் அறையில் அமர்ந்து கொண்டு, அவர் கூறும் அனைத்துத் தகவல்களையும் கேட்க அவர் விரும்பவில்லை.

``சகோதரரே, உங்களிடம் சில விஷயங்களை நான் சொல்ல வேண்டும்.''

``ஆம். சகோதரர்கள் மற்றும் ஆண்களுக்கு, சில விஷயங்களைத் தெரியப்படுத்த வேண்டும்.''

நான் வர்ஷிதாவைப் பார்த்தேன். எங்கள் 4 பேருக்கும் அவர் பேப்பர் கப்பில் காபி எடுத்து வந்தார்.

``தயவுசெய்து நான் சொல்வதை 5 நிமிடங்கள் கேளுங்கள். உங்களுக்குத் தெரியாத எதையும் நான் சொல்லப் போவதில்லை. இருந்தாலும் கேளுங்கள்! முன்னதாக கொஞ்சம் காபி குடியுங்கள்!''

வேண்டுகோளையும், காபி குடிக்குமாறு அறிவுறுத்தலையும் ஒன்றாக அளிக்க நான் கற்றுக் கொண்டுவிட்டேன்.

கருப்பை மற்றும் குழாய்களின் படங்களை ஒரு தாளில் நான் வரைந்தேன்.

``பாருங்கள். இந்தக் குழாய்கள் கருப்பையை ஒட்டி உள்ளன. இவை மெல்லியதாக இருக்கும். இங்கேயே கருத்தரிப்பு நடக்கும். அதாவது கரு முட்டையும் விந்தணுவும் இந்தக் குழாயில் சேரும்'' பேனாவால் படம் வரைந்து நான் காட்டினேன்.

``கருத்தரிப்பு நிகழ்ந்ததும், அது பல செல்களாகப் பிரிந்து ஒரு பந்து போல உருவாகும். அது மெல்ல சரிந்து சென்று கருப்பையின் சுவர்களில் ஒட்டிக் கொள்ளும். பிறகு குழந்தை வளரத் தொடங்கும்.

கருப்பையைப் பொருத்த வரையில், அதன் சுவர்கள் பலமானவை. ஒன்பது மாதங்கள் வரை வளரும் குழந்தையின் எடையைத் தாங்கக் கூடியதாக அவை இருக்கும். 3 அல்லது 4 கிலோ எடை உள்ள குழந்தைகளையும் அதனால் தாங்க முடியும். சில நேரங்களில் இரட்டைக் குழந்தைகளையும் தாங்கும்.

இப்போது குழாயிலேயே கரு உருவாகியுள்ளது. அந்தக் குழாய் மிகவும் மெல்லியதாக இருக்கிறது. நான் வைத்திருந்த பேனாவைக் காட்டி, ``இந்த அளவுக்கு மெல்லியதாக இருக்கும். அதனால் கருவை சுமக்க முடியாது. வலி இருக்கும். ரத்த ஓட்டம் இருக்கும். உடனடியாக சிகிச்சை செய்யாவிட்டால், குழாய் வெடிப்பதற்கான பெரிய ஆபத்து உள்ளது'' என்று விளக்கினேன்.

கருத்தரிப்பு சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

``அது வெடித்தால், ஆபத்தானதா?''

``ஆம், உள்ளுக்குள் ரத்தம் கசியும். அதிகம் ரத்தம் வீணானால் நோயாளிக்கு அதிர்ச்சி ஏற்படலாம்.''

``ஆனால் எங்கள் விஸ்வத்தின் மனைவிக்கு கருக் குழாயில் கரு தங்கியது. அவருக்கு சில மருந்துகள் தான் கொடுத்தார்கள் என்று நினைவிருக்கிறது.''

``ஆமாம். அப்படியும் சிகிச்சை தரலாம். ஆனால் அதற்கு கருவின் அளவு 35 மில்லி மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும். கருத்தரிப்பு ஹார்மோன் அளவு 1500க்கும் 5000க்கும் இடையில் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, கருவில் இதயத் துடிப்பு உணரப்பட்டால், நாங்கள் மருந்துகள் கொடுக்க முயற்சிக்கக் கூடாது. அறுவை சிகிச்சை செய்வது மட்டும்தான் சரியான சிகிச்சையாக இருக்கும்.''

``எனக்குப் புரியவில்லை. எங்கே கரு உண்டாகி இருந்தாலும், குழாயிலேயே உண்டாகி இருந்தாலும், இவ்வளவு கவனமாக இருந்தும் எப்படி கருத்தரிக்க முடியும்.''

``கருத்தடை வழிமுறைகள் ஒவ்வொன்றிலும் சிறிதளவு தவறுகள் நடக்கின்றன. சிலவற்றில் அது அதிகம் நடக்கிறது, சிலவற்றில் குறைவாக நடக்கிறது.''

``கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்கு அது பலன் தராமல் போகலாம். ஆனால் உங்களுடையது இயற்கையான நடைமுறை. இதில் 20 சதவீதம் வரையில் என்ற அதிக அளவில் தோல்வி ஏற்பட வாய்ப்பு உள்ளது!''

``அப்படி என்றால்??''

``நூறு பேர் இந்த நடைமுறையை ஓராண்டு காலத்துக்குப் பின்பற்றுகிறார்கள் என்று நாம் எடுத்துக் கொண்டால், ஐந்தில் ஒருவர் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.''

``அதெப்படி சாத்தியம்? விந்தணுக்களை வெளியில் வெளியேற்றுவதால் எப்படி கருத்தரிக்க முடியும்?''

``அங்கே தான் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள். விந்தணுக்கள் எல்லாமே பெண் உறுப்புக்கு வெளியில் தான் வெளியேறுகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அப்படி இல்லை. வி்து வெளியேறுவதற்கு முன்பு அது ஒரு திரவத்தில் உருவாகும்போதே, சில விந்தணுக்கள் அதில் இருக்கும். உங்களை அறியாமலே அவை கருப்பையின் நுழைவாயிலை அவை அடையக் கூடும்."'

`ஆனால் இதுவரையில் அப்படி நடந்தது கிடையாது.''

``நாம் தினமும் தான் நடந்து போகிறோம். மிக அபூர்வமாகத்தான் கீழே விழுகிறோம்.''

தெளிவு பெற்றதைப் போல தெரிந்த நிலையில் அவர், படிவங்களில் கையெழுத்திட்டார். அதன்பிறகு அவர் எனக்கு பல முன்னெச்சரிக்கைகள் செய்தார். மனைவிக்கு தைரியம் சொல்லி எங்களை அறுவை சிகிச்சை அரங்கில் அனுப்பி வைத்தார்.

அறுவை சிகிச்சை நடந்தபோது அவர் வெளியே நின்றிருந்தார். அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்ததா என அவர் கேட்டார். ஆரம்பத்தில் இருந்த எரிச்சல் காணாமல் போயிருந்தது.

அவரை கலந்தாய்வு அறைக்கு அழைத்துச் சென்று, அறுவை சிகிச்சையின் போது நாங்கள் எடுத்திருந்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டினேன்.

``குழாயை நாங்கள் வெளியே அகற்ற வேண்டியதாயிற்று. மற்ற உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளன.''

``டாக்டர், எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.''

``சொல்லுங்கள்!''

``கருப்பை நுழைவாயிலை அடையும் விந்தணு, குழாய் வரை செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?''

``சுமார் அரை மணி நேரம்.''

அதன்பிறகு உரையாடலைப் போன்ற ஒரு பயிற்சி இருந்தது. அதன் முடிவில், எங்கள் பேராசிரியர்கள் கேட்பதைக் காட்டிலும் சிக்கலான சில கேள்விகளை அவர் கேட்டார்.

``விந்தணு வெளியேறிய பிறகு எவ்வளவு நாட்களுக்கு உயிர்ப்புடன் இருக்கும்?''

``கருமுட்டை விடுவிக்கப்பட்ட பிறகு, கருத்தரிப்புக்குத் தயார் நிலையில் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?''

``குழாயில் உருவாகும் கரு கருப்பைக்குச் செல்ல எவ்வளவு காலம் ஆகும்?''

சில கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடிந்தது.

``கருப்பைக்குப் பதிலாக, குழாயில் கருத்தரிப்பதைத் தடுக்க ஏதும் மருந்துகள் அல்லது நடைமுறைகள் இருக்கின்றனவா?''

``கருக் குழாயில் கருத்தரிப்பதைத் தடுக்க விசேஷ முன்னெச்சரிக்கைகள் எதுவும் இல்லை. பயன்தரக் கூடிய கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துதல் அல்லது நடைமுறைகளைப் பின்பற்றுவது தான் ஒரே வழி.''

``இல்லை. அப்படி கேட்கவில்லை. விவரமாகத் தெரிந்து கொண்டால், உறவுக்கான காலத்தை நாங்கள் முடிவு செய்து கொள்ளலாம். இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம்.''

``சாலையில் செல்லப் போகிறீர்கள் என்றால், போக்குவரத்து விதிகளை நீங்கள் அறிந்திரு்தால் போதும். ஒட்டுமொத்த போக்குவரத்தையும் நிறுத்த வேண்டியதில்லை. அது சாத்தியமற்றதும் கூட.''

கருத்தரிப்பு சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறுநாள் தன் மனைவியை அவர் அழைத்துச் செல்லும்போது மருத்துவமனைக்கு வெளியே அவரை நாங்கள் சந்தித்தோம்.

``உங்கள் வீடு எங்கே இருக்கிறது?''

அவர் வசிக்கும் காலனி பெயரை சொன்னார்.

``பிறகு ஏன் இந்தப் பக்கம் செல்கிறீர்கள்?''

``விரைவுப் பாதையை அவர்கள் மூடிவிட்டார்கள். எனவே துவாரகா நகர் வழியாக செல்ல திட்டமிட்டிருக்கிறேன்.''

சரி என சொல்லிவிட்டு நான் நகர்ந்தேன்.

``டாக்டர், ஒரு சந்தேகம்!''

``சொல்லுங்கள்''

``நீங்கள் ஒரு குழாயை அகற்றிவிட்டீர்கள். அதாவது ஆபத்துக்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது. இப்போதும் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமா.''

``ஆமாம், உங்களுக்கு அது தேவை.''

அவர் இன்னும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

``இரண்டாவது குழாய் உள்ளது. முன்னெச்சரிக்கைகள் தேவை. விரைவு சாலையை மூடிவிட்டாலும், துவாரகா நகர் பாதை வழியாக நீங்கள் வீட்டுக்குச் செல்ல முடியும். சரிதானா? அதுபோலத்தான்.''

ஒவ்வொரு தலைக்குள்ளும், சிந்திக்கும் ஒரு முளை இருக்கத்தான் செய்கிறது.

https://www.bbc.com/tamil/india-54062764

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 மனித இனப்பெருக்கம் தொடர்பான விடயங்களை இலகுவாக உரையாடல் வடிவில் தந்திருக்கிறார்கள் - இணைப்பிற்கு நன்றி. சில அவதானிப்புகள்:

1. ஆசிய சமூகத்தில், பாலியல் கல்வியின் தரம் இன்னும் குறைவு தான். எவ்வளவு குறைவு என்பதற்கு ஒரு உதாரணம் சில ஆண்டுகள் முன்பு சண்டே ரைம்சில் கட்டுரையாக வந்தது. மணம் முடிக்கப் போகும் பெண்ணின் "கன்னித் திரை" (hymen) சேதமாகாமல் இருக்கிறதா என பரிசோதிக்கும் படி பெண் நோயியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்ற கஸ்ரமர்களுள் சில மருத்துவர்களே இருந்திருக்கிறார்கள்! 😂மருத்துவர்களுக்கே hymen என்பது உடலுறவோடு தொடர்பற்றது என்பது தெரியா விட்டால், சாமான்ய மக்களின் நிலை என்ன?

2. இந்த அரைகுறைப் பாலியல் கல்வியின் தரம் பல்லிளித்த இன்னொரு சந்தர்ப்பம், இலங்கை மருத்துவர் ஷாபியின் மீதான பொய் வழக்கு. "மருத்துவர் ஷாபி எங்களுக்குத் தெரியாமல் எங்களுக்குக் கருத்தடை செய்து விட்டார்" என்று முறைப்பாடு கொடுத்த ஆயிரக்கணக்கான பெண்களின் சூலகம் பத்திரமாக இருந்தமை பரிசோதனையில் தெரியவந்தது. அப்படியானால், எப்படிப் பிள்ளை உருவாகிறது என்பதே தெரியாமல் பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பெண்கள். அதை விட மோசமாக, இன்று வரை உலகம் கண்டுபிடிக்கப் போராடும் ஒரு கற்பனையான "நிரந்தரக் கருத்தடை மருந்தை" ஷாபியும், முஸ்லிம் கொத்து ரொட்டிக் கடைக்காரர்களும் பாவித்திருக்கலாம் என்று இங்கே யாழிலேயே சிலர் வாதிட்டார்கள்!😎

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்க ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக உள்ள அண்ணா ஒருவர் குறிப்பிட்ட சம்பவம் நினைவு வருகிறது. 
பெண்கள் கர்ப்பமடைந்துள்ளமைக்கான முதல் அறிகுறி என்ன? என வினவியபோது பலரும் தவறாகவே பதில் கூறினராம். இந்தக் கேள்விக்கு சரியான பதில் கூறுங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஏராளன் said:

இங்க ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக உள்ள அண்ணா ஒருவர் குறிப்பிட்ட சம்பவம் நினைவு வருகிறது. 
பெண்கள் கர்ப்பமடைந்துள்ளமைக்கான முதல் அறிகுறி என்ன? என வினவியபோது பலரும் தவறாகவே பதில் கூறினராம். இந்தக் கேள்விக்கு சரியான பதில் கூறுங்கோ?

மாதவிடாய் ஒரு மாதம் முதல் ஆறு வாரங்கள் தள்ளிப் போனால் கர்ப்பமாக இருக்கலாம்!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Justin said:

. அதை விட மோசமாக, இன்று வரை உலகம் கண்டுபிடிக்கப் போராடும் ஒரு கற்பனையான "நிரந்தரக் கருத்தடை மருந்தை" ஷாபியும், முஸ்லிம் கொத்து ரொட்டிக் கடைக்காரர்களும் பாவித்திருக்கலாம் என்று இங்கே யாழிலேயே சிலர் வாதிட்டார்கள்!😎

தேடிப்பார்த்தேன் யாழில், கிடைக்கவில்லை, இணைப்பை தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/4/2023 at 23:29, Justin said:

 மனித இனப்பெருக்கம் தொடர்பான விடயங்களை இலகுவாக உரையாடல் வடிவில் தந்திருக்கிறார்கள் - இணைப்பிற்கு நன்றி. சில அவதானிப்புகள்:

1. ஆசிய சமூகத்தில், பாலியல் கல்வியின் தரம் இன்னும் குறைவு தான். எவ்வளவு குறைவு என்பதற்கு ஒரு உதாரணம் சில ஆண்டுகள் முன்பு சண்டே ரைம்சில் கட்டுரையாக வந்தது. மணம் முடிக்கப் போகும் பெண்ணின் "கன்னித் திரை" (hymen) சேதமாகாமல் இருக்கிறதா என பரிசோதிக்கும் படி பெண் நோயியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்ற கஸ்ரமர்களுள் சில மருத்துவர்களே இருந்திருக்கிறார்கள்! 😂மருத்துவர்களுக்கே hymen என்பது உடலுறவோடு தொடர்பற்றது என்பது தெரியா விட்டால், சாமான்ய மக்களின் நிலை என்ன?

2. இந்த அரைகுறைப் பாலியல் கல்வியின் தரம் பல்லிளித்த இன்னொரு சந்தர்ப்பம், இலங்கை மருத்துவர் ஷாபியின் மீதான பொய் வழக்கு. "மருத்துவர் ஷாபி எங்களுக்குத் தெரியாமல் எங்களுக்குக் கருத்தடை செய்து விட்டார்" என்று முறைப்பாடு கொடுத்த ஆயிரக்கணக்கான பெண்களின் சூலகம் பத்திரமாக இருந்தமை பரிசோதனையில் தெரியவந்தது. அப்படியானால், எப்படிப் பிள்ளை உருவாகிறது என்பதே தெரியாமல் பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பெண்கள். அதை விட மோசமாக, இன்று வரை உலகம் கண்டுபிடிக்கப் போராடும் ஒரு கற்பனையான "நிரந்தரக் கருத்தடை மருந்தை" ஷாபியும், முஸ்லிம் கொத்து ரொட்டிக் கடைக்காரர்களும் பாவித்திருக்கலாம் என்று இங்கே யாழிலேயே சிலர் வாதிட்டார்கள்!😎

ஏன் இன்னும் உங்களுக்கு இணைப்பு கிடைக்கவில்லையா, எமது நாட்டில் உருவாகிய பல மருந்துவ மாணவர்கள் உலகில் பல நாடுகளில் வேலை செய்கின்றனர், அவர்களுக்கு நல்ல அறிவிருக்கு இந்த கன்னிதிரையைவ பற்றி, உங்களுக்கு ஏன் மருத்துவ மாணவர்களில் கடுப்பு????????

இங்கு கருத்துகள் உங்களுக்கு சார்பாக நீக்கபடுவது ஏனோ தெரியவில்லை, ஆதாரம் கேட்பது தப்பென்றால் இதே Justin மற்றவர்களிடம் பல திரிகளில் ஆதரம் கேட்பதை விட்டு வைத்திருப்பது ஏனோ, குருக்கள் என்னவும் செய்யலாம் யாழில்?

கடுப்பாகாதீர்கள் ஆறுதலாக அமைதியாக கோப படாமல் நிதானமாக செயற்படுங்கள் நடுநிலையாக👍

 

 

  • Like 1
  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.