Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ஈஸ்டர், இயேசு, புனித வெள்ளி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஆண்ட்ரே பெர்னார்டோ
  • பதவி,பிபிசி பிரேசில்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஈஸ்டர் கொண்டாட்டங்களின் போது, இயேசு உயிர்த்தெழுந்ததாக நிலவும் நம்பிக்கையுடன் முட்டையும், முயலும் முக்கிய சின்னங்களாக பார்க்கப்படுகின்றன.

முட்டையும், முயலும் மறுபிறப்பின் சின்னங்களாக சில நாடுகளில் பார்க்கப்படுவதற்கும், இயேசு உயிர்தெழுதல் குறித்த நம்பிக்கைக்கும் இடையே தொடர்பு என்ன?

ஈஸ்டரும், நம்பிக்கைகளும்

இயேசு உயிர்த்தெழுதல் நம்பிக்கையுடன் தொடர்புடைய எந்த தலைப்பை எடுத்தாலும் அவை பல நேரங்களில் சர்ச்சைக்குரியதாக மாறுகின்றன.

மேலும் மத நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் இது தொடர்பாக பல கோட்பாடுகள் புழக்கத்தில் உள்ளன.

 

அவற்றுள் பல நூற்றாண்டுகளாகப் பரப்பப்படும் ஒரு கருத்தில் இயேசுவுக்கும், முயலுக்கும் இருக்கும் தொடர்பு விவரிக்கப்படுகிறது.

இயேசு, வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்ட பிறகு அவரது கல்லறைக்கு ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் மேரி மகதலேனா சென்றார். அப்போது இயேசுவின் உடலை அபிஷேகம் செய்ய தேவையான பொருட்களை எடுத்துச் சென்றார் மேரி.

கல்லறைக்குச் சென்று பார்த்தபோது, இயேசுவின் கல்லறை திறந்து கிடந்தது. அப்போது கல்லறையில் சிக்கியிருந்த முயல், இயேசு உயிர்தெழுந்ததை பார்த்த முதல் உயிரினம் என்று நம்பப்படுகிறது.

இதன் காரணமாக ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பாக்கியம் முயலுக்கு கிடைத்தது. எனவேதான் சாக்லேட்டையும், முட்டையையும் முயல் சுமக்கிறது என்ற நம்பிக்கை ஒரு பிரிவினரிடையே நிலவுகிறது.

அதனாலேயே முட்டையும், மறுபிறப்பின் ஒரு சின்னமாக பார்கப்படுகிறது.

முட்டைக் கொடுக்கும் வழக்கம்

ஈஸ்டர், இயேசு, புனித வெள்ளி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பண்டைய ரோமானிய மக்கள், பேரண்டம் நீள்வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது என்ற கருத்தைப் பரப்பினர். இடைக்காலத்தில் முட்டையின் ஓட்டிற்குள் உலகம் தோன்றியதாகவும் நம்பப்பட்டது.

பிற்காலத்தில், ஒருவருக்கொருவர் கோழி முட்டையை கொடுக்கும் வழக்கம் உருவானது.

சில வரலாற்றாசிரியர்கள், இந்த மரபு பாரசீகர்களிடையே தோன்றியிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். ஆனால் மற்றவர்கள் அதன் தோற்றம் சீனர்களிடம் இருந்து உருவானதாக கூறுகின்றனர்.

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரங்களில் தொடங்கவிடப்படும் உருண்டைகள் போல மரக்கிளைகளில் முட்டைகள் தொங்கவிடப்படுகின்றன.

"கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நிலநடுக் கோட்டு பகுதிகளில், குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும் தினமான மார்ச் 21 அன்று முட்டைகளை பரிமாறிக்கொள்வது ஒரு வழக்கமாக இருந்துள்ளது," என்று கிறித்துவ சட்டங்களில் வல்லுநரான மான்சிக்னர் ஆண்ட்ரே சம்பாயோ ஒலிவேரா விளக்குகிறார்.

"பிற்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் கொண்டாடத் தொடங்கியபோது, வசந்த கால கொண்டாட்டம் புனித வாரத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. அப்போது முதல் கிறிஸ்தவர்கள் முட்டையை இயேசு உயிர்த்தெழுந்ததின் சின்னமாக பார்க்கத் தொடங்கினர்."

ஈஸ்டர், இயேசு, புனித வெள்ளி

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரங்களில் தொடங்கவிடப்படும் உருண்டைகள் போல மரக்கிளைகளில் முட்டைகள் தொங்கவிடப்படுகின்றன

163 கோடி ரூபாய் ஈஸ்டர் முட்டை

ஈஸ்டரின் போது முட்டை கொடுக்கும் வழக்கம் உருவான பிறகு சில ஆண்டுகளிலேயே, அந்த முட்டைகளை அலங்கரிக்கும் வழக்கமும் மனிதர்களிடம் உருவானது.

இடைக்காலத்தின் போது, பரிசாக வழங்கப்படும் முட்டைகளின் ஓடுகளின் மேல் கைகளால் வண்ணம் பூசி வழங்கும் வழக்கம் இருந்தது.

"உலகம் முழுவதும் ஈஸ்டர் அன்று முட்டைகள் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன," என்று எழுத்தாளரும், ஆய்வாளருமான எவரிஸ்டோ எட்வர்டோ டி மிராண்டா கூறுகிறார்.

ஜெர்மனியில், வண்ணமயமான முட்டைகள் கிறிஸ்துமஸ் பந்துகளைப் போல மரக்கிளைகளில் தொங்கவிடப்படுகின்றன.

ரஷ்யாவில், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முட்டைகள் கல்லறைகளில் வைக்கப்படுகின்றன.

ஈஸ்டர் தினத்தன்று இத்தாலியில், இரவு உணவு மேஜைகள் வண்ணமயமான முட்டைகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

ரஷ்யாவின் ஜார் மன்னர்கள், இந்தப் பழக்கத்தை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் சென்றனர்.

1885 மற்றும் 1916ம் ஆண்டுக்கு இடையே, மூன்றாம் ஜார் அலெக்சாண்டரும், இரண்டாம் நிக்கோலஸ் மன்னரும் பிரபல ரஷ்ய நகை வியாபாரியான பீட்டர் கார்ல் ஃபேபர்கேவிடம் 50 முட்டை வடிவங்களை செய்து தரும்படி ஆர்டர் செய்தனர்.

ஈஸ்டர், இயேசு, புனித வெள்ளி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஜார் மன்னரான மூன்றாம் அலெக்சாண்டர் ஆர்டர் செய்த இந்த ஈஸ்டர் முட்டை வடிவ அலங்காரப் பொருள் 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது

அவற்றில் ஒன்றை, மூன்றாம் அலெக்சாண்டர் தனது மனைவியான அரசி மேரி ஃபியோடோரோவ்னாவுக்கு வழங்கியது. அதனுள் வைரம் மற்றும் நீலக்கற்களால் ஆன கைக்கடிகாரம் பதிக்கப்பட்டு இருந்தது.

ஏப்ரல் 2014 அன்று, 8.2 செ.மீ உயரம் கொண்ட இந்த முட்டையின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலராக(இந்திய மதிப்பில் சுமார் 163 கோடி ரூபாய்) இருந்தது.

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு மிட்டாய் உற்பத்தியாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை பரிசோதித்தனர்.

முட்டைகளுக்குள் இருக்கும் கருவை எடுத்துவிட்டு அதை சாக்லேட்டால் நிரப்பினர். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, ஈஸ்டர் அன்று இந்த சாக்லேட் முட்டைகளைத் தயாரிக்கத் தொடங்கினர். இந்த ‘காஸ்ட்ரோனமிக் கண்டுபிடிப்பு’ மத நம்பிக்கை இல்லாத நபர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.

முயல் சின்னம் வந்த கதை

ஈஸ்டர், இயேசு, புனித வெள்ளி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஈஸ்டருக்கும், முட்டைக்குமான தொடர்புக்கு பின்னால் ஒரு நம்பிக்கை கோட்பாடு இருப்பது போல முயலுக்கும் ஈஸ்டருக்குமான தொடர்பையும் சில கதைகள் இணைக்கின்றன.

முட்டையிடாத பாலூட்டி இனத்தை சேர்ந்த முயல், எப்படி கிறிஸ்தவ பண்டிகையின் அடையாளமாக மாறியது?

பண்டைய எகிப்து காலத்திலிருந்தே அழகான இந்த கொறித்துண்ணிகள் கருவுறுதலின் அடையாளமாக பார்க்கப்பட்டன.

சராசரியாக ஒரு முயல், ஆண்டுக்கு 4 முதல் 8 முறை கருத்தரிக்கும். ஒவ்வொரு முறையும் இவை 8 முதல் 10 குட்டிகள் வரை போடும்.

இதனால், காலப்போக்கில் முயல் மறுபிறப்பின் சின்னமாக மாறியது. குளிர்காலத்திற்குப் பிறகு வசந்தகாலம் தொடங்கும் முன் குகையிலிருந்து வெளியே வரும் முதல் விலங்கு முயல்கள் ஆகும்.

"முயல் ஏற்கனவே கிறிஸ்துவ கருத்தியலில் இயேசுவுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. கடவுள் கூறும் வார்த்தைகளை கேட்கும் வகையில் பெரிய காதுகளை அவை கொண்டிருந்தன," என்று ஆராய்ச்சியாளர் எவரிஸ்டோ டி மிராண்டா கூறுகிறார்.

"முயலுக்கும், ஈஸ்டர் முட்டைகளுக்குமான தொடர்பு எப்போது தோன்றியது என மிகச்சரியாக குறிப்பிட முடியாது. இது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவை அனைத்தும் வெவ்வேறு இன மக்கள், கலாசாரத்துடன் தொடர்பை கொண்டிருந்தன. அந்த கருத்துகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துருவுடனும் இருந்தன," என்று பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள கேம்பினாஸ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை முனைவர் பட்ட மாணவர் ஜெபர்சன் ரமால்ஹோ தெளிவுபடுத்தினார்.

கத்தோலிக்க திருச்சபையைப் பொறுத்தவரை, ஈஸ்டரின் உண்மையான சின்னம் 'பாஸ்கல் மெழுகுவர்த்தி' ஆகும்.

இது இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் ஒரு பெரிய வெள்ளை மெழுகுவர்த்தி. அதில் கிரேக்க எழுத்துக்களின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களான ஆல்பா, ஒமேகா ஆகிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது இயேசுவே தொடக்கமும், முடிவும் என்பதைக் குறிக்கிறது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/4/2023 at 17:53, ஏராளன் said:
 

சராசரியாக ஒரு முயல், ஆண்டுக்கு 4 முதல் 8 முறை கருத்தரிக்கும். ஒவ்வொரு முறையும் இவை 8 முதல் 10 குட்டிகள் வரை போடும்.

 

இதை அனுபவத்தில் இங்கு கண்டவன்🤣, ஆகா எத்தனை முயல்குட்டிகள், அத்தனையும் பெட்டியில் போட்டு மிருகங்கள் பறவைக்கள் விற்கும் கடையில் விடிகாலை நாலு மணியில் போய் வைத்த அனுபவத்தை மறக்க முடியுமா?😁 அதைவிட மகன் தன் முயல் குட்டியென வைத்திருந்த ஒன்றும் அதில் போய்விட்டது, பிறகு அந்த கடைக்கு போய் AUD60/- கொடுத்து மீண்டும் வாங்கி வந்ததை மறக்க முடியுமா😄

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
    • 22 DEC, 2024 | 09:49 PM   இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.' இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடமே பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரசாங்கத்தின் கெடுபிடிகளற்று இடம்பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/201905
    • ஆளணிப்பற்றாக்குறையே சுகாதாரத் தொண்டர்கள், தொண்டராசிரியர்கள் ஆகியோருக்கு வாய்ப்பாக அமைகிறது. தற்போது தொண்டராசிரியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலுள்ள திரியிலும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெளிவாக நிலைமைகளை எடுத்துச் சொல்கிறார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.