Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Untitled.jpg

ஒரு ஆலயம் ஆகும்..

 

41F நம்பர் பஸ்ல, ஒரு வயதான அம்மா வள்ளுவர்கோட்டம் ஸ்டாப்ல ஏறி மந்தைவெளிக்கு டிக்கெட் எடுத்தாங்க..

கூட்டம் அதிகமா இருந்ததால நின்னுக்கிட்டே வந்த அந்த அம்மா மீது பாவப்பட்டு கண்டக்டர் அவர் சீட்டுல இடம் கொடுத்து உக்கார சொன்னார்.

முன்னாடி எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டு, அவர் சீட் நோக்கி வரும்போது அந்த அம்மா அலறுனாங்க..!

“என்னம்மா..?”ன்னு அவர் கேட்டாரு.

“எவனோ கழுத்துல இருந்த செயின்ன திருடிட்டான்”னு அந்த அம்மா அழுதாங்க..

அந்த கண்டக்டர் பதட்டபடாம சுத்தி பாத்தாரு..

அந்த அம்மாகிட்ட “உங்க செயின் நிச்சயமாக திரும்ப கிடைக்கும் பதட்டபடாதீங்க.. பயப்படாதீங்க..!”ன்னு ஆறுதல் சொன்னார்..

அடுத்து வந்த எல்லா ஸ்டாப்லயும் பஸ் நின்னது.. சில பேர் ஏறுனாங்க.. சில பேர் இறங்குனாங்க..

ஆனால் கண்டக்டர் தேடவே இல்லை..

இந்த அம்மாவுக்கு பயம் அதிகமாகி கண்டக்டர்கிட்ட கேட்டாங்க..

“என்ன கண்டக்டர் தம்பி, செயின் கிடைக்குமுன்னு சொன்னீங்க.. ஆனால் இது வரை அதுக்காக நீங்க எதுவுமே பண்ணலையே..?”ன்னு கேட்டாங்க..

அந்த கண்டக்டர் அதுக்கு அமைதியா சிரிச்சிகிட்டே “உங்க செயின் 1 நிமிஷத்துல கிடைக்க போகுது..”ன்னு புதிர் போட்டார்..

அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல..

அந்த பஸ் டிரைவர் அடுத்த ஸ்டாப்ல நிறுத்த பஸ் ஸ்லோவ் பண்ணும்போது கண்டக்டர் ‘டபுள் விசில்’ கொடுத்தார்..

பஸ் அந்த ஸ்டாப்ல்ல நிக்காம மூவ் ஆகிடுச்சு...

அந்த சமயம் பார்த்து ஒரு குரல்..!

“யோவ் கண்டக்டர்..! பஸ் ஸ்டாப்ல நிக்காம போகுதுய்யா.. நான் இந்த ஸ்டாப்ல தான் இறங்கணும்..! பஸ்ஸ நிறுத்த சொல்லுய்யா..”ன்னு அந்த அம்மா முன் சீட்டு பக்கத்துல இருந்து ஒரு குரல்..!

கண்டக்டர் இப்போ அந்த செயின் பறிகொடுத்த அம்மாவை பார்த்து சிரிச்சிகிட்டே சொன்னாரு..

“அம்மா உங்க செயின் கிடைச்சாச்சி..”ன்னு சொல்லிட்டு அந்த ஸ்டாப்ல நிறுத்த சொன்ன அந்த ஆளை செக் பண்ணாரு.

அவன்கிட்ட தான் செயின் இருந்தது..!

அந்த செயின் வாங்கி அந்த அம்மாகிட்ட கொடுத்துட்டு, அந்த திருடனை பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சாரு கண்டக்டர்.

இப்போ அந்த அம்மாவுக்கு ஒரே ஆனந்தம்... அதோட ஆச்சரியமும் கூட..!

“அதெப்படி அவன் திருடன்னு அவ்ளோ துல்லியமா கண்டுபிடிச்சிங்க..?”ன்னு கேட்டாங்க..

அதுக்கு அந்த கண்டக்டர் “அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்தான் அவனை காட்டி கொடுத்தது..!”ன்னு சொன்னாரு.

“அப்படி என்னப்பா அந்த ஸ்டாப் பேரு..?”ன்னு அந்த அம்மா ஆர்வமா கேட்டாங்க.

கண்டக்டர் அந்த ஸ்டாப் பேர சிரிச்சிகிட்டே சொன்னாரு.

" ****** "

(அது ஒரு அரசியல் கட்சியின் அலுவலக பேருந்து நிறுத்தம் 😷😎)

படத்திலிருந்து நீங்கள் ஊகித்துக்கொள்ளுங்கள்..!

 

- டிவிட்டரில் ரசித்தது

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.