Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
IMG-20230302-WA0085.jpg

 

 

நானோ டைஜஸ்ட் என்ற உலகளாவிய விஞ்ஞான இதழின் முதல் பக்கத்தில் தனது நான்கு சிறந்த நானோ கண்டுபிடிப்புக்களுக்காகக் கொண்டாடப்பட்டிருக்கிறார் தெய்வசாந்தி. இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில் வாழ்ந்து கொண்டு பல்லாயிரம் ரூபாய்கள் பெறுமானமுள்ள காப்பர், சில்வர் நானோ துகள்கள், கிராஃபைன் ஆகியவற்றைத் தயாரித்து ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்டோர்களுக்கு இலவசமாகவே வழங்கி உள்ளார்.

IMG-20230302-WA0071.jpg

 

 

தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான சோதனையில் நோபல் பரிசு பெற விழையும் பேராசிரியை தெய்வசாந்தி இராஜபாளையத்துக்கு அருகில் உள்ள சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் 1978 ஆம் வருடம் பிறந்தவர். எங்கே பிறந்தாலும் சாதனை புரியலாம் என்பதற்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. கணவர் திரு. சங்கர். இயற்பிலில் முனைவர் பட்டம் பெற்ற தெய்வசாந்தி முதலில் பாலிடெக்னிக்கிலும் பின்னர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். ஒரே நேரத்தில் நான்கு ப்ராஜெக்ட் கொடுத்துத்  தனது மாணவர்களையும் நானோ ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி வருகிறார். நிறையப் பொறியியல் கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் சிக்ரி போன்ற விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்துக்கும் கூட கெஸ்ட் லெக்சரராகச் சென்றுள்ளார். 200 க்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பல்வேறு சர்வதேச நாடுகளில் உரையாற்றிய பெருமையும் இவருக்குண்டு. 

 

டாக்டர் அழகர் அவர்களின் வழிகாட்டுதலுடன் நானோ டெக்னாலஜி துறையில் ஆராய்ச்சி செய்துள்ள இவரது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள்: 

1) தாவரப் பொருட்களில் "சூப்பர் பாரா மேக்னடிஸம்".தாவரங்களில் உயிர் பற்றிய சர் ஜகதீஸ் சந்திர போஸ் கண்டுபிடிப்பிற்குப் பின்பு, தாவரப் பொருட்களில் காந்தத் தன்மை பற்றிய ஆராய்ச்சிகள் நடப்பது இதுவே முதன் முறை.  புற்று நோய்க்கான ஹைபர்தெர்மியா சிகிச்சை, மருத்துவத் துறையில் ஸ்கேன்மற்றும் படம் எடுப்பதற்கு சூப்பர் பாரா மேக்னடிக் (Superpara magnetic) பொருட்கள் பயன்படுகின்றன. 

2) வைரஸ்களுக்கு எதிரான உலகின் மிக சிறிய நிலவேம்பு (ஆன்ரோகிராபிஸ் பனிகுலேட்டா- Andrographis paniculata) தாவர நானோ துகள்கள். 

3) விவசாய நானோ உயிர் உரங்கள் (Nanobio fertilizers). 

4) குறைந்த விலை கிராஃபின் (graphene). 

5) கொரோனா வைரஸ்களுக்கு எதிரான குறைந்த விலை நெகடிவ் அயன் ஜெனரேட்டர் (Negative ion generator).

6) சர்க்கரை நோயைக் (நீரழிவு) கட்டுப்படுத்தும் காய்கறி நானோ துகள்கள். ..

7) அதிக வலிமை, குறைந்த எடை உள்ள புல்லட் புரூஃப் உடைகள், ஹெல்மெட் மற்றும் வாகன உபகரணங்கள். 

😎 லித்தியம் சல்பர் (Lithium sulphur) / கிராஃபின் (graphene).பேட்டரி (battery) தொடர்பான ஆராய்ச்சி. எலக்ட்ரிக் வாகனம் மற்றும் அலைபேசி போன்ற உபகரணங்களுக்கு, இந்த லித்தியம் சல்பர் பேட்டரி ஆராய்ச்சிப் பணி உதவியாக இருக்கும். தற்போதைய  TOP 10 துறைகளில் Green Energy மற்றும் battery இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது இலட்சியம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய நோபல் பரிசினைப் பெறுவது.

பணியில் சாதனைகள் என்று சொல்ல வேண்டுமானால் கடந்த 8 வருடங்களில் 225 க்கும் மேற்பட்ட அறிவியல் கருத்தரங்குகளில் உரையாற்றிய சாதனை. அதில் குறிப்பிடத்தக்கது மலேஷியா சுகாதார அமைச்சகத்தில் உரை நிகழ்த்தியது.  மலேஷியா மற்றும் இலங்கையில் நடந்த அறிவியல் கருத்தரங்குகளில் உரையாற்றியதைத் தனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறார்.  இவர் எழுதியது: 3 புத்தகங்கள், 20 க்கும் மேற்பட்ட புத்தக அத்தியாயங்கள் மற்றும் 25 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

பெற்ற விருதுகள்: மதுரை மாவட்ட ஆட்சியர் அளித்த மகளிர் தினம் சாதனையாளர் விருது – 2013, 2015, 2016 & 2017 மூன்று வருடங்களில் 4 முறைகள் லிம்கா உலக சாதனை  (நானோ தொழில் நுட்பம் தொடர்பாக) உலகத் தர மதிப்பாய்வாளர் விருது 2018, லித்தியம் சல்பர் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்காக இந்திய அரசு இவரைத் தேர்வு செய்து 15 லட்சம் ரூபாய் நிதயுதவி செய்கிறது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினவிழா - 2023 கொண்டாட்டத்தில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, பணிபுரியும் பெண்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில், ஊரணி பவுண்டேசன் (சென்னை) சார்பாக "பல்துறை சாதனைப் பெண்மணிகள் விருது" இந்திய விஞ்ஞானி மயில்சாமி அவர்களின் தலைமையில் இவருக்கு வழங்கப்பட்டது.

இவர் தனது ஆராய்ச்சியின் மூலம் தாவரப் பொருட்களில் இருந்து கண்டுபிடித்த பாராமேக்னடிக் துகள்கள் “ சாந்தி துகள்கள்” என்று பெயரிடப்பட்டிருக்கின்றன. மேலும், சில ஆராய்ச்சிப் பணிகளுக்காக, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளேன். என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு மதிப்பளித்து கலசலிங்கம் பல்கலைக்கழகம் முக்கியத்துவம் தருகிறது என்கிறார்.

பிறந்தவுடன் தந்தையை இழந்ததால் தாயின் விருப்பப்படி இளம் வயதிலேயே திருமணமானவர் தெய்வசாந்தி. கணவரின் அனுமதியுடன் பி ஹெச்டி முடித்துப் பேராசிரியை ஆனார். இராணுவப் பணியாற்றித் திரும்பித் தற்போது மருந்தாளுனராக இருக்கும் தனது கணவரின் ஒத்துழைப்புடன் வீட்டைக் கவனித்து, ஏழு எட்டு மணி நேரப் பேராசிரியைப் பணியையும் முடித்து அத்துடன் பகுதி நேர ஆராய்ச்சியாளராகவும் சாதித்து உள்ளார். சொல்லப் போனால் இவர் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு சரி. இவரது கணவர் சங்கர்தான் தனது மனைவியின் உழைப்பை டைப் செய்து அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பத்திரிகளுக்கும் மேலும் சர்வதேச விஞ்ஞான இதழ்களுக்கும் அனுப்பி வைப்பாராம். இரு இனிமையான குழந்தைகள் கொண்ட தெய்வசாந்தி கொடுத்து வைத்த இல்லத்தரசியும் கூட!

தமிழ் மொழியிலேயே படித்த இவர் இளவயதுத் திருமணத்திற்குப் பின் சாதித்தது அதிர்ஷ்டம். ஆனால் வேறு ஒரு கொடுமை இவரைப் படுத்தி எடுத்தது. நடுவில் சோரியாஸிஸ் நோயால் ஒரு வருடம் கஷ்டப்பட்டிருக்கிறார். பணிக்குப் பஸ்ஸில் செல்லவும் யாரையும் பார்க்கவுமே மனச்சங்கடம். அது குணமாக ஒரு ஆண்டு பிடித்தது. கல்லூரியிலும் மாணவர்களையும் ஏன் எல்லா மனிதர்களையும் சந்திக்க இவர் மனதில் ஒரு அவஸ்தை அப்போது. நவீன மருந்துகளால் குணப்படுத்த முடியாத இந்நோயை உணவு முறைகளை மாற்றினால் பூரணமாகக் குணப்படுத்தலாம் என்பதைக் கண்டுகொண்டார். அது குணமாகி மீண்டு வந்து இன்னும் அதிகமாகத் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறார் தெய்வசாந்தி. இது எல்லாம் தன் ஃபேமிலி சப்போர்ட் இருந்ததாலேயே சாதிக்க முடிந்தது என்கிறார்.

மேலும் பெண்களால் முடியாதது என்று எதுவும் கிடையாது. தங்களது உயர்வான எண்ணங்கள் குறிக்கோள்களை எட்டத் தங்களைத் தாங்களே ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். நமது நோக்கம், சிந்தனை, செயல் இவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். எதையும் சாதிக்க வேண்டும் என நினைத்துவிட்டால் அப்போதே சாதிக்கமுடியும், அவர்கள் உயர்வுக்கு எல்லை இல்லை என்கிறார். இவ்வளவு மாபெரும் சாதனைகளுக்குப் பின்னேயும் இவரது எளிமையும் பணிவடக்கமும் ஒளிவிடுகின்றது. இவர் தனது கண்டுபிடிப்புக்கள் மனித குலத்துக்கு நன்மை பயப்பனவாக அமையவேண்டும் என்ற விருப்பம் கொண்டிருக்கிறார். நன்மனம் கொண்ட இவர் நிச்சயம் நோபல் பரிசைப் பெறுவார் என நம் வாசகியர் சார்பாக வாழ்த்துவோம்.

Posted by Thenammai Lakshmanan

http://honeylaksh.blogspot.com/2023/04/blog-post_12.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நனோ டெக்னாலஜி ஹிந்தியாவில் இப்ப தான் கவர்ச்சிகரமான தலைப்பாகியுள்ளது. மேற்கு நாடுகளில் இது 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிட்டுது. இந்த தொழில்நுட்பம் பல இடங்களில் பாவிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் சிக்கல் என்ன என்றால்.. பொலித்தீன்.. பிளாஸ்ரிக்.. மைக்குரோபீட்ஸ் (microbeads).. இவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு எப்படி கவர்ச்சிகரமாக அறிமுகமாகி பின் பாவனைக்கு வந்து இப்ப அவற்றின் பாதகவிளைவுகளால்.. இவை பாவனைக்கு தடைசெய்யப்படும் நிலைக்கு வந்ததோ.. அந்த நிலை நனோவுக்கும் வரும். ஏனெனில்.. இந்த நனோ துகள்கள் காற்றில் கலந்து அல்லது வேறு வகையில் உடலை அடைந்தால்.. அவற்றின் நீண்ட காலப் பாதிப்பு என்பது பாதகமானதாக இருக்கும்..! ஏலவே ஈயத்துகள்களின்.. இரும்புத் துகள்களின் தாக்கம் பல நோய்களுக்கான காரணியாக அமைந்திருப்பது போல்.. இந்த காபன் சார்ந்த நுண் துணிக்கைகளின் பாதிப்பு போகப் போகத்தான் தெரியும்.

கண்டுபிடிப்பதும் கவர்ச்சியாக்கி பாவிப்பதும் பிரச்சனையல்ல.. ஆனால்.. அவற்றின் பாதகமான விளைவுகளை முன்கூட்டியே அறிவதும்.. அறிவிப்பதும் தான் உண்மையான சமூக அக்கறையுள்ள.. சூழல் பாதுகாப்புக் கருதும்.. அறிவியலாக இருக்க முடியும். 

Edited by nedukkalapoovan


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதை எக்காரணம் கொண்டும் செய்ய மாட்டார்கள் என நினைக்கின்றேன். இராணுவமும் அதே நிலைகளில் இருக்கும். பல அனாவசிய அரச செலவுகளை அதிரடியாக குறைத்துக்கொண்டிருக்கும் அனுர தேவையில்லாத இராணுவ செலவுகளை குறைப்பாரா என அடுத்த வருடத்தில் பார்க்கலாம்.
    • புதுமைப் பெண்களடி . .........!  😍
    • மறவன்புலவும் சாவகச்சேரி ஏரியாதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 😂
    • ஓம்.  நான் கேட்ட கேள்விகளிலே இதற்கு பதில் இருக்கிறது 
    • வணக்கம் வாத்தியார் . .......! பெண் : அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் பெண் : விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது பெண் : விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது பெண் : வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது பெண் : நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது பெண் : {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்.......! --- அழகு மலராட ---
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.