Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுள்ளதாக தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுள்ளதாக தகவல்!

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுள்ளதாக தகவல்!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக இலங்கைக்கு பெருந்தொகை நட்டஈடு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த டொலர் தொகை பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை தான் கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு எதிரான நட்டஈட்டை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்காத வகையிலேயே இந்த கையூட்டல் வழங்கப்பட்டுள்ளதாகவும், கப்பலின் காப்புறுதி நிறுவனத்தால் இந்த தொகை வைப்பலிடப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அந்த தகவலின் உண்மை தன்மை தொடர்பாக ஆராயும் பொறுப்பை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு தாம் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1330065

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பு விடயங்களை தாமதப்படுத்த இலஞ்சம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் கோரிக்கை!

Published By: RAJEEBAN

16 APR, 2023 | 05:23 PM
image

 

(எம்.ஆர்.எம்.வசீம்)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து நட்டஈடு பெறுவது தொடர்பில் கலந்துரையாடலின்போது இலங்கையின் ஒரு தரப்புக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 

இதுதொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருக்கிறேன் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

இலங்கை கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெறும் நடவடிக்கையில் ஒரு தரப்புக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எக்ஸ்பிரஸ பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து நட்டஈடு பெறுவது தொடர்பில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். 

ஆனால் சிங்கப்பூர் நிறுவனத்துக்கும் இலங்கை தரப்புக்கும் மத்தியில் இந்த நடவடிக்கை சில காரணங்களினால்  தாமதிக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த விடயத்தில் நான் தலையிட்டேன். வழக்கு நடவடிக்கைகளுக்கான அறிக்கைகளை வழங்காமல் இருந்தன. கடந்த வருடம் செப்டம்பர் 23ஆம் திகதி இறுதி திகதி என கூறி, அறிக்கைகளை வழங்குமாறு கூறினேன். ஆனால் வழங்கவில்லை.

என்றாலும் குறித்த அறிக்கைகள் இந்த வருடம் ஜனவரி மாதம் வழங்கப்பட்டன. அதனை உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்கினோம். 

இருந்தபோதும் இந்த நடவடிக்கையை தாமதப்படுத்த அல்லது வழக்கு தாக்கல் செய்யாமல் இருக்க காப்புறுதி நிறுவனம் ஒரு தரப்புக்கு இலஞ்சம் வழங்கி இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவல் உண்மையா பொய்யா என எனக்கு தெரியாது. ஒருவரின் லன்டன் கணக்கில் 250 மில்லயன் டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாக எனக்கு ஒருசில தினங்களுக்கு முன்னதாக தகவல் கிடைத்தது. இந்த தகவல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

அத்துடன் அவ்வாறு யாருடையதாவது கணக்குக்கு பணம் சென்றுள்ளதா? யார் வைப்பிட்டுள்ளார் என்பதை விசாரணை செய்யுமாறு தெரிவித்துள்ளேன். அதன் பின்னரான விடயங்களை நாங்கள் கண்டுபிடிப்போம் என்றார்.

எக்ஸ்பிரஸ பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்தமையால் இலங்கை கடற்பரப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்துக்காக 6,2 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கவேண்டும் என சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபை நிபுணர்குழுவை நியமித்து தயாரித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

https://www.virakesari.lk/article/152945

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

அந்த தகவல் உண்மையா பொய்யா என எனக்கு தெரியாது. ஒருவரின் லன்டன் கணக்கில் 250 மில்லயன் டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாக எனக்கு ஒருசில தினங்களுக்கு முன்னதாக தகவல் கிடைத்தது.

மஹிந்தவின் அமைச்சரவையில் இருந்த ஒருவரே வெளிப்படுத்தியுள்ளார் எப்படி இவருக்கு தெரியாமற் போனது?

14 hours ago, ஏராளன் said:

அவ்வாறு யாருடையதாவது கணக்குக்கு பணம் சென்றுள்ளதா? யார் வைப்பிட்டுள்ளார் என்பதை விசாரணை செய்யுமாறு தெரிவித்துள்ளேன்.

இதை வைத்து இவர் கையூட்டு பெற நினைக்கிறாரோ? இவர் அங்கும் இங்கும் ஓடி பண்ணாத திருவிளையாடலா? கோத்தாவை கைது செய்யாமல் தடுத்தாராம் நல்லாட்சி காலத்தில், இப்போ இன்னொரு நாடகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நியூ டைமன் கப்பல், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து : இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு - நீதியமைச்சர்

Published By: DIGITAL DESK 5

20 APR, 2023 | 01:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பல்,எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஆகியன தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் வெகுவிரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

தனியார் ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2021 ஆம் ஆண்டு நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகி கடல் வளத்துக்கு பாரிய சேதம் விளைவித்த எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் மற்றும் வழக்கு தாக்கல் செய்யும் விவகாரங்கள் கடந்த காலங்களில் தாமதப்படுத்தப்பட்டிருக்கலாம் ஆனால் தற்போது சகல விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் சமுத்திர வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை நியமித்த நிபுணர் குழு அறிக்கை கடந்த ஜனவரி மாதம் கிடைக்கப் பெற்றது.சர்வதேச நீதி நிறுவனத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

நட்டஈடு பெறும் விவகாரத்தில் ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாக நியூ டைமன் கப்பல் விவகாரத்திலும் ஒரு தரப்பினர் கையூட்டல் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

நியூ டைமன் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முழுமையாக மதிப்பிடாமல் கப்பலை வெளியேற இடமளிக்க வேண்டாம் என சட்டமாதிபர் திணைக்களம் அறிவித்தும்,அதனை செயற்படுத்தாமல் கப்பல் வெளியேற்றப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பில் வெகுவிரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/153303

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : இலஞ்சம் பெற்றது யார் ? : பகிரங்கப்படுத்துங்கள் - தர்ஷினி லஹந்தபுர நீதியமைச்சரிடம் கோரிக்கை

Published By: DIGITAL DESK 5

20 APR, 2023 | 03:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கும், சட்டமாதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்பட்டன.

நட்டஈடு பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்துமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவர் தர்ஷினி லஹந்தபுர தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் வியாழக்கிழமை (20)  இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நீர்கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் இரு தடவைகள் நங்கூரமிடப்பட்டுள்ள வெளிநாட்டு சரக்கு கப்பலில் இருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறுவதாக 2021.05.20 ஆம் திகதி மாலை 04.மணியளவில் கடல்வள பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. 2021.05.21 ஆம் திகதி காலை உரிய அதிகாரிகளுடன் கப்பலுக்கு அருகில் சென்றோம்.

நாட்டின் கடல் வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம்,விரைவாக கடல் எல்லையை விட்டு செல்லுங்கள் என 2021.05.21 ஆம் திகதி பகல் கப்பலின் கேப்டல்,கப்பல் நிறுவனம் உட்பட நான்கு பிரதான தரப்பினருக்கு உத்தியோகபூர்வ அறிவித்தோம்.தீயணைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கப்பல் நிறுவனம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.

தீ பரவல் 2021.05.24 ஆம் திகதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.2021.05.25 ஆம் திகதி கப்பலில் மீண்டும் தீ பரவ ஆரம்பித்து,பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டன.கடல் எல்லையை விட்டுச் செல்லுமாறு பலமுறை வழங்கிய அறிவுறுத்தலை கப்பலின் உரிய தரப்பினர் கவனத்தில் கொள்ளவில்லை.கப்பல் முழுமையாக தீக்கிரையாகி ஜீன் மாதமளவில் கடலில் முழுமையாக மூழ்கியது.

இந்த கப்பலில் 380 மெற்றிக் தொன் எண்ணெய் கடல் நீரில் கலக்காமல் இருப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.கப்பலில் சேமிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பரல்கள் நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான கடற்கரைகளில் கரையொதுங்கின.பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் கடல் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுத்தோம்.

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய தரப்பினருக்கு முறைப்பாடு செய்தோம்,சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமாதிபர் திணைக்களத்திடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தோம்.விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்வதற்கு 40 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்தோம்.

சிவில் வழக்குக்கு அமைய நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கு சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்வது குறித்து ஆரம்பத்தில் அவதானம் செலுத்தவில்லை.

இலங்கையின் சட்ட கட்டமைப்புக்குள் வழக்கு தாக்கல் செய்து நட்டஈடு பெற்றுக்கொள்ளவே எதிர்பார்த்தோம்.கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னரே சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கும், சட்டமாதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்பட்டன.

பிளாஸ்டிக் பரள்களை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான செலவுகளை டொலரில் வழங்க கப்பலின் காப்புறுதி நிறுவனம் ஆரம்பத்தில் இணக்கம் தெரிவித்து,இரு தவணைகளை டொலரில் செலுத்தியது

 மூன்றாவது தவணையை ரூபாவில் செலுத்துவதாக சட்டமாதிபர் திணைக்களம் ஊடாக அறிவித்தது,அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.இருப்பினும் எனது எதிர்ப்பு வெற்றி பெறவில்லை.

நட்டஈடு பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாக  விசாரணைகளை முன்னெடுத்து நாட்டு மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்துமாறு  நீதியமைச்சரிடம்   வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

https://www.virakesari.lk/article/153335

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கக்கூடியதெல்லாம் வாங்கி பதுக்கிறது, வாங்கியவர்களையும் பாதுகாக்கிறது, பிறகு எமக்கு ஒன்றும் தெரியாதென அப்பாவித்தனமான அறிக்கை வேறு, இல்லையென்றால் முடிஞ்சா நிரூபி என சவால் விடுறது. இதெல்லாம் புதுசா இந்த நாட்டுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் ; 8,000 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சிங்கள இலங்கையர் யார் ? - டலஸ் அழகபெரும

Published By: T. SARANYA

22 APR, 2023 | 10:23 AM
image

(இராஜதுரை ஹஷான்)

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடன் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்ய இன்னும் 27 நாட்கள் மாத்திரமே மிகுதியாக உள்ளன. வழக்கு தாக்கல் செய்வதை தடுப்பதற்கு 8,000 ஆயிரம் கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சிங்கள இலங்கையர் யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என  பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2021 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இந்த கப்பல் விபத்தினால் சமுத்திர வளங்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்ந்து நட்டஈடு மதிப்பீடு செய்ய நியமிக்கப்பட்ட குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கப்பல் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து 6.4 பில்லியன் டொலர் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என துறைசார் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். வழக்கு தாக்கல் செய்து நட்டஈடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்காக சிங்கள இலங்கையர் ஒருவருக்கு 250 மில்லியன் டொலர் அதாவது இலங்கையின் நாணய அலகின் பிரகாரம் 8,000 கோடி ரூபா  இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தி தவணை அடிப்படையில் பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ள 2.9 பில்லியன் டொலரை காட்டிலும் இந்த கப்பல் நிறுவனத்திடமிருந்து 6.4 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

8,000 கோடி இலஞ்சம் பெற்ற நபர் யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.நாட்டை சீரழித்து ஒரு தரப்பினர் இலாபம் பெறுவதை தேச துரோக செயற்பாடாக கருத வேண்டும்.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்கு கப்பலில் இருந்த 7,480 கொள்கலன்கள் கடலுக்குள் மூழ்கியுள்ளன. இதனால் இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான 80 ஆயிரம் மெற்றிக் தொன் இரசாயன பதார்த்தங்கள் கடலுக்குள் சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து 1,400 மெற்றிக்தொன் மாத்திரமே கரையொதுங்கியுள்ளன. மிகுதி இரசாயன பதார்த்தங்கள் இலங்கையின் கடல் வளத்துக்கு அழிவை ஏற்படுத்த கடலுக்குள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

கப்பல் விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்வதற்கு இன்னும் 27 நாட்கள் மாத்திரமே மிகுதியாக உள்ளன.

சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றதன் பின்னர் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. பேராசிரியர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதாக அச்சுறுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விவகாரத்தில் சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்ய விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/153461

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் குறித்த விசாரணைகள் தொடர்கிறது – சட்டமா அதிபர்!

எக்ஸ்-பிரஸ் பேர்லின் சேதத்திற்கு எதிராக வெளிநாட்டில் வழக்குத் தாக்கல்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் கடற்பரப்பில் ஏற்பட்ட சேதத்திற்கு எதிராக வெளிநாடு ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நீதி அமைச்சு கூறியுள்ளது.

அதற்காக 2 வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை தொடர்பு கொள்ளவுள்ளதாக நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2021 மே 19 அன்று கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல், 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு இருந்த போது, மே 20 அன்று தீ விபத்துக்குள்ளானது.

https://athavannews.com/2023/1330597

  • கருத்துக்கள உறவுகள்

பேர்ள் கப்பல் விவகாரம் : உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது குற்றப் புலனாய்வு பிரிவு

Published By: NANTHINI

23 APR, 2023 | 05:13 PM
image

 

(எம்.மனோசித்ரா)

மூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவரால் இலங்கை கடற்பரப்புக்குள் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் நாட்டின் கடற்பரப்புக்கு ஏற்பட்ட மாசுக்கான இழப்பீட்டினை பெற்றுக்கொள்வதற்காக வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கும்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் அரசாங்கத்தின் உயர் சட்டத்தரணி ஆகியோர் தமக்கான தனிப்பட்ட இலாப நோக்கத்துக்காக செயற்பட்டுள்ளதாக குறித்த நபர் காணொளிப் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையிலும், அரச உத்தியோகத்தர்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கும் சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும் இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்வைத்துள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இருவரால் இவ்வாறு குற்றப் புலனாய்வு பிரிவில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/153551

  • கருத்துக்கள உறவுகள்

பேர்ள் கப்பல் விவகாரம் : சமார குணசேகர என்பவர் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றதாக தகவல் - நீதியமைச்சர்

Published By: DIGITAL DESK 5

25 APR, 2023 | 03:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

எம்.பி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் சமுத்திர வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட குழு சமர்பித்த அறிக்கையின் ஒருசில உணர்வுபூர்வமான விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது.

நட்டஈடு தொடர்பான வழக்கு தோல்வியடைந்தால் அதன் பொறுப்பை சுற்றாடல் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஏற்க வேண்டும்.

வழக்கு தாக்கல் நடவடிக்கைளை தடுப்பதற்காக சாமர குணசேகர என்பவருக்கு 250 இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் சாட்சியம் கிடைக்கவில்லை. பொலிஸார் உண்மையை கண்டுப்பிடிக்க வேண்டும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இருபத்தேழு ,இரண்டின் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

2021 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வளங்களுக்கும்,கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வது தொடர்பில் கடல் வளங்கள் அபிவிருத்தி அதிகாரசபை 40 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமித்தது.

 துறைசார் நிபுணர்கள் நட்டஈடு தொடர்பில் இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாதிரிகளுக்கு அமைய கப்பல் விபத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்கு 6.4 பில்லியன் டொலர்  நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என அறிக்கையில்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் இடைக்கால பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சிங்கப்பூர் நாட்டு வணிக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய சட்டமாதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு வழக்கு தாக்கல்  செய்யப்பட்டுள்ளதால் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஏனைய உணர்வுபூர்வமான விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது.

நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒரு விடயத்தை பாராளுமன்ற விவாதத்துக்கு உட்படுத்த கூடாது என பாராளுமன்ற நிலையியற்கட்டளையின் 33  மற்றும் 36 ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.பி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் சுற்றாடல்துறை தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு  சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள்,சட்டத்தரணிகள் மற்றும் மீனவ சமூக பிரதிநிதிகள் ஆகியோரை மேற்பார்வை குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டமைக்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயத்தை பாராளுமன்ற தெரிவு குழுவில் விசாரணைக்கு உட்படுத்த முடியாது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஏதாவதொரு வழிமுறையில் தோல்வியடைந்தால் அதன் பொறுப்பை சுற்றாடல் துறை தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு ஏற்க வேண்டும்.இல்லாத அதிகாரத்தை இவர்கள் தவறாக பயன்படுத்துயுள்ளார்கள்.

நட்ட ஈடு பெற்றுக்கொள்வதற்கு வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குறித்த கப்பல் தரப்பினரால் இலங்கையர் ஒருவருக்கு 250 மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது,ஆனால் அதற்கு சாட்சியம் கிடைக்கவில்லை.இந்த விடயம் தொடர்பில் எனக்கு எதிராக அரசியல் மட்டத்தில் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் நபர் தொடர்பில் குறிப்பிடுவதற்கு  அச்சமடைய போவதில்லை. சாமர குணசேகர என்பவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளேன்.உண்மையை அவர்களே கண்டுப்பிடிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/153720

  • கருத்துக்கள உறவுகள்

நட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு முன் நியூ டைமன் கப்பலை வெளியேற்ற ஜயநாத் கொலம்பகே ஆலோசனை - நீதியமைச்சர்

Published By: T. SARANYA

25 APR, 2023 | 04:49 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நியூ டைமன் கப்பல் தீ விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்யாமல் நாட்டின் கடற்பரப்பில் இருந்து கப்பலை வெளியேற்ற வேண்டாம் என சட்டமாதிபர் திணைக்களம் மற்றும்,முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ள நிலையில் கப்பலை வெளியேற்றுமாறு வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மின்னஞ்சல் செய்தி ஊடாக அறிவித்துள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இருபத்தேழு ,இரண்டின் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் கடந்த 2020.09.09 ஆம் திகதி விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பல் விவகாரம்  பிறிதொரு பேசுபொருளாக காணப்படுகிறது.

இந்த கப்பல் விபத்தினால் சமுத்திர வளங்கள், தீ பரவலை கட்டுப்படுத்த நாரா நிறுவனம் செலவு செய்த நிதி தொகை,மீனவ சமூகத்துக்கு தொழிற்துறையால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஆகியவற்றுக்கு  250 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி குறித்த நிறுவனத்துக்கு எதிராக கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் மூன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 நியூ டைமன் கப்பல் விவகாரத்தில் யாருக்கு அழைப்பானை விடுப்பது என்பது பிரதான பிரச்சினையாக உள்ளது.நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு கோருவதற்கான மதிப்பீட்டை உறுதிப்படுத்த முன் நாட்டின் பரப்பில் இருந்து வெளியேற கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என சட்டமாதிபர் திணைக்களம் பலமுறை பொறுப்பான தரப்பினருக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.இருப்பினும் சட்டமாதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை பொருட்படுத்தாமல் கப்பல் வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்த கப்பலை வெளியேற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ  ஆலோசனை வழங்கியதாக குறிப்பிடுகிறது.இவ்விடயம் தொடர்பில் அவரிடம் பலமுறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.நட்டஈடு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின்  தீர்மானங்களை முழுமையாக செயற்படுத்துமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.கப்பலை வெளியேற்றுமாறு அவர் குறிப்பிட்டதாக  எவ்விடத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடற்பரப்பில் இருந்து கப்பலை வெளியேற்றுமாறு வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மின்னஞ்சல் ஊடாக பொறுப்பான தரப்பினருக்கு அறிவித்துள்ளார். இதனை கடல் வளங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர்  எவ்வாறு கப்பல் விவகாரத்தில் தலையிட முடியும் என்பது சந்தேகத்துக்குரியது.இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மறுபுறம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கடல் வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா கப்பலை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.தற்போது விடயங்கள் வெளிப்படுகின்றன.

நாட்டின் கடற்பரப்பில் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டைமன் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த  இந்திய கடற்படையின் ஒத்துழைப்பு  கிடைக்கப் பெற்றது.வழங்கிய ஒத்துழைப்புக்கு இந்திய கடற்படை 895 மில்லியன் ரூபா கோரியுள்ளது.இந்த நிதியை வழங்க வேண்டும்.ஆகவே இரு கப்பல்களையும் அடிப்படையாக கொண்டு தாக்கல் செய்துள்ள வழக்குகளில் இந்த நிதியையும் உள்ளடக்குமாறு சட்டமாதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.

https://www.virakesari.lk/article/153734

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயம் சூடு பிடிக்குமா அல்லது போக்கு காட்டி அணைந்து விடுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

இந்த விடயம் சூடு பிடிக்குமா அல்லது போக்கு காட்டி அணைந்து விடுமா?

மத்திய வங்கியில் இருந்த "80 தொன்" தங்கத்தையும் காணவில்லை என்று பரபரப்பாக பேசினார்கள்.
பின் அந்தக் கதையையே மறந்து விட்டார்கள்.
புது பிரச்சினை வர, பழையதை மறந்து விடுவார்கள்.
மனிதனின் மறதிக் குணம் அரசியல்வாதிகளுக்கு வரப் பிரசாதம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

மத்திய வங்கியில் இருந்த "80 தொன்" தங்கத்தையும் காணவில்லை என்று பரபரப்பாக பேசினார்கள்.
பின் அந்தக் கதையையே மறந்து விட்டார்கள்.
புது பிரச்சினை வர, பழையதை மறந்து விடுவார்கள்.
மனிதனின் மறதிக் குணம் அரசியல்வாதிகளுக்கு வரப் பிரசாதம். 

இப்போ அங்கு பாதுகாப்பாக வைத்த பணத்தை காணவில்லையாம். மத்திய வங்கியில் பணம் இல்லையென்றுதான் சொல்லி கடன் வாங்க வெளிக்கிட்டார்கள். இப்போ கதை என்னவென்றால்; பெருந்தொகைப்பணத்தை காணவில்லையாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

இப்போ அங்கு பாதுகாப்பாக வைத்த பணத்தை காணவில்லையாம். மத்திய வங்கியில் பணம் இல்லையென்றுதான் சொல்லி கடன் வாங்க வெளிக்கிட்டார்கள். இப்போ கதை என்னவென்றால்; பெருந்தொகைப்பணத்தை காணவில்லையாம்.

சாத்தான்... உங்களுக்கு 100 வயது.
இப்போ மத்திய வங்கி செய்தியை இணைத்துப் போட்டு வர,
நீங்கள் அதைப் பற்றி சொல்கிறீர்கள். 🙂

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நபருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்பு?

இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நபருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்பு?

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நபருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்ட மூலம் தொடர்பில் பெரிதாகப் பேசிக் கொண்டிருப்பவர்களின் அரசாங்கத்திலேயே இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு நீர் மற்றும் மின் கட்டணங்களை அதிகரிப்பது தீர்வாகாது.

ஊழல், மோசடியாளர்களை இனங்கண்டு அவர்களால் கொள்ளையிடப்பட்டு தேசிய சொத்துக்களை பறிமுதல் செய்தால் நாட்டின் பெருமளவான பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும்.

சாமர குணசேகர என்ற நபருக்கு அரசாங்கத்துடன் ஏதேனும் தொடர்புகள் காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காரணம் அரசாங்கத்துடன் தொடர்பற்ற ஒருவரால் இவ்வாறு செயற்பட்டிருக்க முடியாது.

எனவே இது தொடர்பில் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோருகின்றோம்.

இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு நாடாளுமன்றத்திலுள்ள சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க தீர்மானித்துள்ளோம்.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.“ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1330936

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a graphic of text

 

May be a doodle

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமாதிபர் திணைக்களத்துடன் தொடர்புடையவரே 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றிருக்க வேண்டும் - நாலக கொடஹேவா

Published By: VISHNU

27 APR, 2023 | 02:27 PM
image

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில்  இலங்கையர் ஒருவர் 250 மில்லியன்  டொலர் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிடுகிறார். வழக்கு தாக்கல் விவகாரத்தை சட்டமாதிபர் திணைக்களமே மேற்கொண்டுள்ளது.

அவ்வாறாயின் சட்டமாதிபர் திணைக்களத்துடன் தொடர்புடைய நபரே இலஞ்சம் பெற்றிருக்க வேண்டும்.நியூ டைமன் கப்பல் விவகாரத்தில் என்னை தொடர்புப்படுத்தி நீதியமைச்சர் குறிப்பிட்ட விடயங்கள் அடிப்படையற்றது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபை உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் கடற்பரப்பில் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தீ விபத்துக்கு உள்ளான நியூ டைமன்  கப்பல் விவகாரத்தில் என்னை தொடர்புப்படுத்தி நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் குறிப்பிட்ட விடயங்கள் அடிப்படையற்றது.

நியூ டைமன்  கப்பலை நாட்டின் கடற்பரப்பில் இருந்து வெளியேற்றுமாறு வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜயநாத் கொலம்பகே கடற்படை தளபதிக்கு அறிவித்துள்ளதாக நீதியமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.

நீதியமைச்சரின் முறையற்ற கருத்தால் சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிரான கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நியூ டைமன் கப்பல் தொடர்பில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் தொலைபேசியில் உரையாடிய போது அவர் 'பைத்தியமா,முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் கப்பலை வெளியேற்ற வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் நீங்களும் இருந்தீர்கள்.

சட்டமாதிபரின் ஆலோசனைக்கு அமைய  செயற்படுவது அவசியமானது என்று குறிப்பிட்டீர்கள் 'என்று குறிப்பிட்டார்.

மறுபுறம் முன்னாள் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜயநாத் கொலம்பகேவிடம் தொலைபேசியில் உரையாடிய போது அவர் 'இந்த விடயத்தில் நீதியமைச்சர் உங்களை ஏன் தொடர்புப்படுத்தினார் என்பதை நான் அறியவில்லை.

நியூ டைமன் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் இருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டதாக நானே கடற்படை தளபதிக்கு அறிவித்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.நியூ டைமன் கப்பலில்  இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான எண்ணெய் சேமிக்கப்பட்டிருந்தது.

துரதிஷ்டவசமாக கப்பலில் ஏற்பட்ட தீ தீவிரமாக பரவி கப்பல் கடலில் மூழ்கினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் இருந்து வெளியேற்றுமாறு அறிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

நியூ டைமன் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் இருந்து வெளியேற்றுமாறு யார் உத்தரவு பிறப்பித்தது என்பது தற்போது தெளிவாகி விட்டது.

ஆகவே இவ்விடயத்தில் என்னை தொடர்புப்படுத்தி கருத்துரைப்பதை நீதியமைச்சர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிணைமுறி மோசடியாளர், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்புதாரி என்று கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அவரை புகழ்பாடுகிறார்கள்.

நாட்டின் நிதியை நான் மோசடி செய்யவில்லை. அதனால் அரசாங்கத்தின் குறைப்பாடுகளை தற்துணிவுடன் சுட்டிக்காட்டுவேன்.குறுகிய அரசியல் நோக்கத்துக்காக ஆட்சியாளருக்கு புகழ்பாட வேண்டிய தேவை கிடையாது.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலங்கை பிரஜை 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.

வழக்கு தாக்கல் நடவடிக்கைகளை சட்டமாதிபர் திணைக்களமே மேற்கொண்டது, அவ்வாறாயின் சட்டமாதிபர் திணைக்களத்துடன் தொடர்புடைய நபரே இலஞ்சம் பெற்றிருக்க வேண்டும்.

இலஞ்சம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது,ஆனால் சாட்சியம் இல்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் அறிவில்லாதவர்கள் அல்ல என்றார்.

https://www.virakesari.lk/article/153900

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.