Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஏப்ரல் 25 கடையடைப்பு போராட்டத்துக்கு யாழ். வணிகர் கழகமும் ஆதரவு

Published By: Nanthini

20 Apr, 2023 | 09:56 AM
image

மிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

யாழ். வணிகர் கழகத்துக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (19) வணிக கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ்ப்பாண வணிகர் கழகம் அனைத்து கடைகளையும் பூட்டி, போராட்டத்துக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில், அதன் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

https://www.virakesari.lk/article/153276

Posted

வீரகேசரி செய்தி எழுதும்போது இந்தப் போராட்டம் ஏன் முன்னெடுக்கப்படுகின்றது என்ற சிறு குறிப்பையாவது போட்டிருக்கலாம்.

 

கூகிளில் தேடியது :
https://vanakkamlondon.com/world/srilanka/2023/04/191213/

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவுக்கு எதிர்ப்பு வெளியிடுவது மாத்திரமல்லாமல் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பை வெளிக்காட்டுவது இதன்நோக்கமாகும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வட, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் ஒற்றையாட்சி, 13 ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் - அருட்தந்தை சத்திவேல்

Published By: Nanthini

21 Apr, 2023 | 10:22 AM
image

டகிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டமானது ஒற்றையாட்சி மற்றும் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விழுமியங்களை அழித்தொழிக்கும் நச்சு சட்டமூலமாகும். இது, தனிமனித மற்றும் சமூகத்தினதும் உரிமைகளை அரசு பயங்கரவாத இயந்திரங்களான பொலிஸ் மற்றும் படைகளின் சப்பாத்தின் கீழே வைத்து துவம்சம் செய்யவே வழிவகுக்கும். 

மனிதனை மனிதனாக ஏற்றுக்கொள்ளாது, நடமாடித் திரியும் ஜடமாக வைக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடுமைகளை கடந்த 44 ஆண்டுகளாக அனுபவிக்கும் மக்கள் சமூகமாக இப்போது புதிய சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோருவதோடு, வடகிழக்கில் எதிர்வரும் 25ஆம் திகதி நடக்கவிருக்கும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்குகிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் காரணமாக தமிழர்களாகிய நாம் அரசியல் அழிவை சந்தித்துள்ளதோடு குடும்ப உறவுகளையும், சமூக உறவுகளையும் காவு கொடுத்திருக்கின்றோம். சமூகமாக சிதறுண்டு போயிருக்கின்றோம். பல நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் வாழ்விழந்துள்ளனர். இன்னும் பலர் இன்றும் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் விடுதலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையிலேயே நாட்டை திறந்தவெளி சிறைக்குள் வைக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட இருக்கின்றது. இது கொடூர முகத்தோடு தனது கோரப்பற்களை காட்டும் என்பது உண்மை. இதனை ஏற்றுக்கொள்வது, சமூக தற்கொலைக்கு விட்டுச் செல்லும் எனலாம்.

மக்களின் பாதுகாப்பு எனும் மாய்மாலத்தோடு கொண்டுவரப்படும் இச்சட்டமூலம் இதுவரை காலமும் நாட்டை கொள்ளையடித்து பொருளாதார வறுமைக்குள் தள்ளியவர்களையும், யுத்த குற்றவாளிகளையும் பாதுகாப்பதற்கான முன்னேற்பாடு என்பதோடு, இச்சட்டமூலத்தை அமுலாக்குவதன் மூலம் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும், ஆட்சியை தொடரவும் ஜனாதிபதி முயற்சிப்பதை நாம் உணரலாம்.

அது மட்டுமல்ல, நாட்டின் வளங்கள் ஏற்கனவே வெளி சக்திகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், கொடுப்பதற்கான திட்டங்களே உள்ளன. தற்போதைய நாட்டின் வங்குரோத்து நிலை மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகளே உள்ளன. இவற்றுக்கு எதிரான மக்கள் எழுச்சியை அடக்கவும், அனைத்து வகையான செயற்பாட்டாளர்களையும் அசைவற்றவர்களாக்கி அரசாங்கத்தை பாதுகாக்கவுமே திட்டமிடுகின்றனர்.

இச்சட்டமூலம் அமுலாக்கப்பட்டால், தற்போது வடகிழக்கில் நடக்கும் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம், தொல்லியல் திணைக்களத்துக்கு எதிரான போராட்டம், பௌத்தமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என அனைத்தையும் பயங்கரவாதமாக்க முடியும்.

இதனை விட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதேசத்தை மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கவும் முடியும். மாவீரர் துயிலுமில்ல பிரதேசங்களையும் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்க முடியும். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நினைவு நாள் சம்பந்தமாக செயற்படுகின்றவர்களை பயங்கரவாதிகளாக்கி சிறைக்குள் தள்ள முடியும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு தோன்றியிருக்கும் நிலையில் 44 வருட காலமாக பயங்கரவாத தடை சட்டத்தினால் அழிவுகளை சந்தித்த அனுபவம் கொண்டவர்களாக எந்த வகையிலும் புதிய சட்டமூலம் நடைமுறைக்கு வரக்கூடாது என்பதிலே உறுதிகொண்டு அதனை எதிர்ப்பதற்கான தார்மீக பொறுப்பும் எமக்கு உள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அத்தோடு புதிதாக முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் எத்தகைய திருத்தங்களுடனும் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது. அவ்வாறு நாடாளுமன்றத்துக்கு வந்தால் அதனை ஆதரிப்பவர்கள் மக்கள் துரோகிகள், தேசத் துரோகிகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள்.

அதேவேளை, விசேடமாக எதிர்வரும் 25ஆம் திகதி நடத்தப்படவிருக்கும் வடகிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அமைவதால், அரசாங்கம் ஒற்றையாட்சி அதிகாரத்தோடு இந்தியாவுடன் இணைந்து தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக திணிக்க முயலும் 13ஆம் திருத்தத்தை எதிர்ப்பதாகவும் போராட்டத்தை நடத்த வேண்டும். அதுவே இந்திய, இலங்கை அரசியலுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் தெற்கின் மக்களுக்கும் செய்தியாக அமையும் என தெரிவித்துள்ளார். 
 

https://www.virakesari.lk/article/153367

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் இருவருக்கும் மனம் வெம்புகிறது… ஆனால் அதை பொது வெளியில் ஒத்து கொள்ள ஈகோ விடுகுதில்லை என்பது உங்கள் கருத்துக்களிலேயே தெரிகிறது… @புலவர் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். @வீரப் பையன்26 என்ன புதிய, அரிய வகை முட்டுடன் வரப்போகிறார் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்🤣. ————-  கவுன்சிலிங் உதவி தேவை எனில் நான் தயார். முன்பு சம்-சும்-விக்கி யை ஆதாரித்து பின் நிலைமாறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்🤣. பிகு சீமானின் இந்த செயல் அவர் எப்படிபட்ட பச்சோந்தி என அறிந்தோருக்கு எந்த வியப்பையும் தராது.
    • உங்களுக்கு பொறாமை. வந்து வந்து விழுந்த ஆளை விட்டு விட்டோமே என்று?😋
    • ஊர் எல்லாம் எலிகாச்சல் வந்து சனம் சாகுது உங்கட ஆளுக்கு இன்னமும் தொற்ற வில்லையோ?😄
    • அப்படி பெரிய அழகனா @Nathamuni நாதம்ஸ்?🤣
    • என்னையா இது? அடிப்பொடி தன் தலைவனை பில்டப் பண்ணி ஒரு செய்தியை போட்டால் - அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் வந்து இப்படி ஒரு ஓவியத்தால் அத்தனையையும் கிழித்து தொங்க விடுவீர்கள்களா 🤣. இது முறையா? தர்மம்தானா?🤣 பார்ப்போம் இவரும் சும் சாணக்ஸ் போல போய் பாலிமெண்ட்டுக்கு வெளிய நிண்டு போட்டோ எடுத்து போடுறாரா என.   சந்திப்பு நடந்தால் இருதரப்பு அறிக்கை, படம் வரும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.