Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் -செய்திகளின் தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Published By: DIGITAL DESK 5

20 APR, 2023 | 02:31 PM
image

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (20) காலை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டால் வவுனியா பத்தினியார் மகிழங்குளம், முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக  குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது 'சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை உருவாக்காதீர், இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி விடுங்கள், இலங்கை அரசே பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கதே' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது. 

IMG_20230420_101853.jpg

IMG_20230420_102225.jpg

IMG_20230420_102045.jpg

IMG_20230420_102003.jpg

IMG_20230420_102357.jpg

https://www.virakesari.lk/article/153321

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் - வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை 

Published By: VISHNU

20 APR, 2023 | 03:18 PM
image

 

( எம்.நியூட்டன்)

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசு உடனடியாக  கைவிட வேண்டும் என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமானது  கடந்த நான்கு தசாப்த காலத்துக்கு மேலாக இலங்கை அரசாங்கத்தினால்  மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கான கருவியாக பயன்பட்டு வருகிறது.  

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச  அழுத்தங்களுக்காகவும் இன்னும் இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான  மக்கள் குரலை அடக்கும்முகமாகவும் இலங்கை அரசாங்கம் தற்போது  பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட மூலத்தினை முன்மொழிந்து 2023 மார்ச் 17 மற்றும்  2023 மார்ச் 22 ஆகிய இரு தினங்களும் உத்தியோகபூர்வ அரசாங்க வர்த்தமானியில்  வெளியிட்டுள்ளது.  

ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டமான பயங்கரவாத தடைச் சட்டத்தினை (Pவுயு) பதிலீடு செய்யும் நோக்கத்திற்காக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்  சட்டமானது (யுவுயு) இ ஜனநாயக விழுமியங்களையும் சர்வதேச மனித உரிமை  நியமங் களையும் குழிதோண்டிப் புதைக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது.

பயங்கரவாத  எதிர்ப்புச் சட்ட மூலத்தினை இப்போதில்லாவிடில் எப்போதும் எதிர்க்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதனால் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த  அரக்கத் தனமான சட்டத்திற்கெதிராக குரல் கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  

இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட் டமானது ஏன் எதிர்க்கப்படவேண்டும்

ஏனெனில், இச்சட்டத்தில் “பயங்கரவாதம்” என்பதன் வரைவிலக்கணம் மக்களின் நியாயமான  மனித உரிமைகளை மறுக்கும் தடைசெய்யும் நோக்கோடு  வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் நாட்டின் மக்கள் எவரும்  சுதந்திரமான முறையில் ஒன்று கூடுதலும், கருத்துத் தெரிவிப்பதும் அரசின்  நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும், உரிமைகளுக்காக சட்டரீதியாக  முறைகளில் போராடுவதும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஏற்படுவதும் கூட  பயங்கரவாதம் என வரைவிலக கணப்படுத்த முடியும்.

∙ நீதித்துறை மேற்பார்வை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

∙ பொலிசாருக்கும் அரசின் நிறைவேற்றுத்துறை அதிகாரிகளுக்கும் உச்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக நீதவானின் மேற்பார்வையின்றி தடுப்புக்காவலுக்கான உத்தரவை நாட்டிலுள்ள எந்தவொரு பிரதிப் பொலிஸ்மா அதிபரும் வழங்க முடியும்.  

எந்த ஒரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் நீதிமன்றத்தில் இருந்து தடையுத்தரவுக்ளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பாராளுமன்ற மேற்பார்வையோ நீதித்துறை மேற்பார்வையோ இன்றி ஜனாதிபதிக்கு சட்டங்களை ஆக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை.

∙ ஜனாதிபதி தனது நம்பிக்கையின் அடிப்படையில் எந்தவொரு அமைப்பினையும்  தடை செய்யக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை.

∙ பொலிசார் அசையும் சொத்துக்களை தன்னிச்சையாக 3 நாட்களுக்குக் கைப்பற்றி பின்னர் குறித்த தடுப்பினை மேலும் 90 நாடகளுக்கு நீட்டிக்குமாறு நீதவானைக் கோர முடியும்

எந்தவொரு நபரையும் குற்றவாளி எனக் காண்பதற்கு முன்னரே புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்குரிய அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளமை.

கைது மற்றும் தேடுதலுக்கு இராணுவத்தைப் பயன்படுத்த முடியும். மரண தண்டனை விதிக்கப்பட முடியும்.  

கடந்த காலத்தில் இலங்கை மக்கள் அனுபவித்து வரும் மனித உரிமை மீறல்களை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் நோக்கத்தோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக அதனைவிட கொடிய சட்டத்தினை இலங்கை அரசாங்கம் முன்  மொழிந்திருக்கின்றது. 

ஏற்கனவேயுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இலங்கை  அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மட்டுமன்றி, ஈஸ்ரர் குண்டுத்தாக்கலின் பின் முஸ்லிம் மக்கள் மீதும் இறுதியாக அரகலய மக்கள் எழுச்சியில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள்,  மதகுருமார்கள் மீதும் தனது கோரக்கரங்களின் பிடியை இறுக்கி பிடித்தொயருந்தது.

இச்சட்ட  மூலமானது சட்டமாக்கப்பட்டால் மக்கள் இலங்கையின் அரசியல் அமைப்பில்  உத்தரவாதமளிக்கப்பட்ட தமது உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டு  நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியினதும் அவரது நிறைவேற்றுத்துறை  அதிகாரிகளினதும் எதேச்சாதிகாரமிக்க சர்வாதிகார ஆட்சிக்குள் நசியவேண்டிய நிலை  ஏற்படும். 

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு காரணமான பயங்கரவாத  தடைச்சட்டமானது இன்னொரு முகமூடியில் மேலும் பலம் கொண்டு வருவதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.  

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசினால் சர்வதேசத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை கேலிக்குள்ளாக்கி தற்போது கொண்டுவரவுள்ள  பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கெதிரான மக்கள் எதிர்ப்பையும் எழுச்சியையும்  வெளிப்படுத்துவதற்காக இன்றைய தினம் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலை வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் சார்பில்  மேற்கொள்கிறோம்.  

இன்றைய தினம் (20) மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இலங்கை அரசிடம் பின்வருவம்  விடயங்களை அறிக்கையிடுகிறோம்.  

∙ முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசு உடனடியாக  கைவிட வேண்டும்.  

∙ தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக  நீக்கப்படல் வேண்டும்.  

∙ பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்காக உரிய ஏற்பாடுகைள ஏற்கனவேயுள்ள சட்டங்களில் உட்புகுத்துவதை அல்லது சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு இசைவானதொரு சட்டத்தினை இயற்றுவதை அரசு  பரிசீலிக்க வேண்டும்.

புதிய சட்டமானத மனித உரிமை நியமங்களுக்கும்  ஏற்கனவேயுள்ள சட்டங்களுக்கும் அமைவானதாகவிருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/153327

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் வேண்டாம் எனத் தெரிவித்து அம்பாறையில் போராட்டம்

Published By: DIGITAL DESK 5

20 APR, 2023 | 03:47 PM
image

இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம் என்று கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு வியாழக்கிழமை (20) மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது.

அம்பாறை மாவட்டம்  மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. 

அதன் போது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இந்த கூட்டு முன்னணியின் சுமார் 300 பெண்கள் மும்மொழிகளிலுமான சுலோகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இறுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம் என்ற தலைப்பிலான மகஜரை பகிரங்கமாக வாசித்து கோஷம் எழுப்பி போராட்டத்தை நிறைவு செய்தனர்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் எனவும், கருத்து சுதந்திரம் பறிபோகும் என்றும், இது முற்றுமுழுதாக வேண்டாம் என்பதையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Q260__2_.jpeg

Q260__7_.jpeg

Q260__8_.jpeg

Q260__11_.jpeg

Q260__5_.jpeg

Q260__6_.jpeg

Q260__9_.jpeg

Q260__13_.jpeg

Q260__14_.jpeg

https://www.virakesari.lk/article/153336

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு எதிராக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: DIGITAL DESK 5

20 APR, 2023 | 04:03 PM
image

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்பட்ட உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட  கவனயீர்ப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சுற்று வட்ட பகுதியில் இடம்பெற்றது.

இதன் போது வடக்கு கிழக்கு பெண்கள்  கூட்டின்  பிரதிநிதிகளுடன் மன்னார் மாவட்ட பெண்கள் இணைந்து குறித்த  கவனயீர்ப்பு நிகழ்வை முன்னெடுத்தனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி குறித்த பெண்கள் அமைப்பினரால் கவன ஈர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு குறித்த நேரத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டது. மன்னாரில் நடைபெற்ற கவனயீர்ப்பு  நிகழ்வில் சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக நிறுத்த கோரி குறித்த பெண்கள் அமைப்பினரால் அறிக்கை ஒன்றும் மக்கள் பார்வைக்கு வெளியிடப் பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

DSC_0414.JPG

DSC_0408.JPG

DSC_0399.JPG

DSC_0394.JPG

DSC_0389.JPG

DSC_0385.JPG

DSC_0377.JPG

DSC_0383.JPG

https://www.virakesari.lk/article/153323

  • கருத்துக்கள உறவுகள்

உள்ள போடுறது தமிழனை தானே எண்டு இருந்தவயல் எல்லாம், அட இது நமக்குத்தான் ஆப்பு எண்டு வாரிச் சுருட்டிக் கொண்டு வந்து நிக்கிற அழகை பாருங்கோவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் - நீதி அமைச்சர் அமெரிக்க தூதுவருக்கு விளக்கம்

Published By: VISHNU

20 APR, 2023 | 04:11 PM
image

(எம்.மனோசித்ரா)

மனித உரிமைகள் மீறப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் இல்லை. மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு வியாழக்கிழமை (20) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே அமெரிக்க தூதுவரிடம் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இந்த சந்திப்பின் போது அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பிலும் , மறுசீரமைப்புக்கள் ஊடாக இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்பிலும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தூதுவருக்கு விளக்கமளித்தார்.

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அறிமுகப்படுத்துவதற்கான நோக்கம் சாதாரண மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவேயாகும் என்றும் , மனித உரிமைகள் மீறப்படுவதற்கான சந்தர்ப்பம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தினால் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் , பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய அமெரிக்க தூதுவர், பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறுகிய காலத்திற்குள் மீண்டெழுவதற்கான கட்டத்தை அடைந்துள்ளமைக்கு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.சுச்சல்க் ஆகியோருக்கிடையிலான சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் நிறுவப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பிலும் , இந்த ஆணைக்குழுவை நிறுவுவதற்காக தென் ஆபிரிக்காவின் அனுபவப்பகிர்வுகளைப் பெற்றுக் கொண்டமை தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளைப் போன்றே, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் தென் ஆபிரிக்கா ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் உயர்ஸ்தானிகர் அமைச்சரிடம் உறுதியளித்தார்.

https://www.virakesari.lk/article/153341

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் ஒற்றையாட்சி, 13 ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் - அருட்தந்தை சத்திவேல்

Published By: NANTHINI

21 APR, 2023 | 11:02 AM
image

டக்கு, கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டமானது ஒற்றையாட்சி மற்றும் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் அமையட்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விழுமியங்களை அழித்தொழிக்கும் நச்சு சட்டமூலமாகும். இது, தனிமனித மற்றும் சமூகத்தினதும் உரிமைகளை அரசு பயங்கரவாத இயந்திரங்களான பொலிஸ் மற்றும் படைகளின் சப்பாத்தின் கீழே வைத்து துவம்சம் செய்யவே வழிவகுக்கும். 

மனிதனை மனிதனாக ஏற்றுக்கொள்ளாது, நடமாடித் திரியும் ஜடமாக வைக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடுமைகளை கடந்த 44 ஆண்டுகளாக அனுபவிக்கும் மக்கள் சமூகமாக இப்போது புதிய சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கோருவதோடு, வடகிழக்கில் எதிர்வரும் 25ஆம் திகதி நடக்கவிருக்கும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு வழங்குகிறது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் காரணமாக தமிழர்களாகிய நாம் அரசியல் அழிவை சந்தித்துள்ளதோடு குடும்ப உறவுகளையும், சமூக உறவுகளையும் காவு கொடுத்திருக்கின்றோம். சமூகமாக சிதறுண்டு போயிருக்கின்றோம். பல நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் வாழ்விழந்துள்ளனர். இன்னும் பலர் இன்றும் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் விடுதலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையிலேயே நாட்டை திறந்தவெளி சிறைக்குள் வைக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட இருக்கின்றது. இது கொடூர முகத்தோடு தனது கோரப்பற்களை காட்டும் என்பது உண்மை. இதனை ஏற்றுக்கொள்வது, சமூக தற்கொலைக்கு விட்டுச் செல்லும் எனலாம்.

மக்களின் பாதுகாப்பு எனும் மாய்மாலத்தோடு கொண்டுவரப்படும் இச்சட்டமூலம் இதுவரை காலமும் நாட்டை கொள்ளையடித்து பொருளாதார வறுமைக்குள் தள்ளியவர்களையும், யுத்த குற்றவாளிகளையும் பாதுகாப்பதற்கான முன்னேற்பாடு என்பதோடு, இச்சட்டமூலத்தை அமுலாக்குவதன் மூலம் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும், ஆட்சியை தொடரவும் ஜனாதிபதி முயற்சிப்பதை நாம் உணரலாம்.

அது மட்டுமல்ல, நாட்டின் வளங்கள் ஏற்கனவே வெளி சக்திகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், கொடுப்பதற்கான திட்டங்களே உள்ளன. தற்போதைய நாட்டின் வங்குரோத்து நிலை மேலும் தொடர்வதற்கான வாய்ப்புகளே உள்ளன. இவற்றுக்கு எதிரான மக்கள் எழுச்சியை அடக்கவும், அனைத்து வகையான செயற்பாட்டாளர்களையும் அசைவற்றவர்களாக்கி அரசாங்கத்தை பாதுகாக்கவுமே திட்டமிடுகின்றனர்.

இச்சட்டமூலம் அமுலாக்கப்பட்டால், தற்போது வடகிழக்கில் நடக்கும் காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம், தொல்லியல் திணைக்களத்துக்கு எதிரான போராட்டம், பௌத்தமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் என அனைத்தையும் பயங்கரவாதமாக்க முடியும்.

இதனை விட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதேசத்தை மக்கள் கூடுவதற்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கவும் முடியும். மாவீரர் துயிலுமில்ல பிரதேசங்களையும் தடை செய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்க முடியும். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நினைவு நாள் சம்பந்தமாக செயற்படுகின்றவர்களை பயங்கரவாதிகளாக்கி சிறைக்குள் தள்ள முடியும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு தோன்றியிருக்கும் நிலையில் 44 வருட காலமாக பயங்கரவாத தடை சட்டத்தினால் அழிவுகளை சந்தித்த அனுபவம் கொண்டவர்களாக எந்த வகையிலும் புதிய சட்டமூலம் நடைமுறைக்கு வரக்கூடாது என்பதிலே உறுதிகொண்டு அதனை எதிர்ப்பதற்கான தார்மீக பொறுப்பும் எமக்கு உள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அத்தோடு புதிதாக முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் எத்தகைய திருத்தங்களுடனும் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது. அவ்வாறு நாடாளுமன்றத்துக்கு வந்தால் அதனை ஆதரிப்பவர்கள் மக்கள் துரோகிகள், தேசத் துரோகிகள் என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள்.

அதேவேளை, விசேடமாக எதிர்வரும் 25ஆம் திகதி நடத்தப்படவிருக்கும் வடகிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அமைவதால், அரசாங்கம் ஒற்றையாட்சி அதிகாரத்தோடு இந்தியாவுடன் இணைந்து தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக திணிக்க முயலும் 13ஆம் திருத்தத்தை எதிர்ப்பதாகவும் போராட்டத்தை நடத்த வேண்டும். அதுவே இந்திய, இலங்கை அரசியலுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் தெற்கின் மக்களுக்கும் செய்தியாக அமையும் என தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/153367

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு - கிழக்கில் ஹர்த்தாலை முன்னெடுக்க 6 கட்சிகள் கூட்டாக கோரிக்கை

Published By: VISHNU

21 APR, 2023 | 12:23 PM
image

வடக்கு - கிழக்கில் எதிர்வரும் செவ்வாய் கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்க 6 கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் க.சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஆகியோரின்  கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்,

எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, எமது சுயநிர்ணய உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் எமது தாயக மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் குடிப்பரம்பலை சிதைத்தல், எமது தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுககளை அழித்தொழித்தல், இதற்கு ஏதுவாக தமிழ் மக்களின் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுகளான சைவ ஆலயங்களை இடித்தும், அழித்தும், பௌத்த சின்னங்களை நிறுவியும், இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்த்தும்,

அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பொது கட்டமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 25.04.2023 அன்று எமது தாயகப் பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி வடக்கு - கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க தீர்மானித்துள்ளோம்.

இதற்கு அனைவரது ஆதரவையும் கோரி நிற்கின்றோம் என அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த அறிக்கையில் தமிழ் தேசிய கட்சிகளான தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டனி என்பன கையொப்பம் இடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/153385

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.