Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை” – ஆங்கில நாளிதழுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

”திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை” – ஆங்கில நாளிதழுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி

Published By: Rajeeban

04 May, 2023 | 10:44 AM
image

திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே என்றும், அது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி இன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கூறி வரும் திராவிட மாடல் குறித்து அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

காவல்துறை அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு காவல்துறையின் சுதந்திரம் குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், தமிழ்நாடு காவல்துறை நன்கு பயிற்சி பெற்ற, திறமையான காவலர்களைக் கொண்டது என்றும், அது தற்போது அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.

கலைஞர் நூலகம் குறித்து கருத்து

மேலும், “சமீபத்திய பட்ஜெட் உரையில் மற்ற மொழிகளை தவிர்த்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அரசு அமைக்கும் என கூறப்பட்டுள்ளது. இது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் கருத்தியல் ஆகும்” என்று தெரிவித்தார்.

ஆளுநர் என்பவர் ராஜா அல்ல

பல்வேறு தரப்பினருடன் அவ்வப்போது சந்திப்புகளை நடத்துவதால் ராஜ்பவன் தேநீர் கடையாக மாறி வருகிறது என விமர்சகர்கள் கூறுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ”ஆளுநர் என்பவர் ராஜா அல்ல. ராஜ்பவன் என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம். அது மக்களுக்கான இடம். ’ராஜ்பவன்’ என்ற பெயரை ’லோக் பவன்’ ஆக மாற்ற வேண்டும் என நான் யோசித்து வருகிறேன். மாநில மக்களின் நலனுக்கான சக்தியாக ஆளுநர் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் தான் நான் அவ்வப்போது பல்வேறு தரப்பினரை ராஜ்பவனில் சந்திக்கிறேன்” என்று கூறினார்.

stalin.gif

பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்?

தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை விவரித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “அரசியலமைப்பு அனைவருக்குமானது. அதை மீற முயன்றால் கட்டுப்படுத்துவது ஆளுநரின் கடமை. ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தது, அரசின் கொள்கைகளோ அல்லது நலத்திட்டங்களோ இல்லை. அவை எல்லாம் பொய் பிரச்சாரங்களாகவே இருந்தன. நெருக்கடி கொடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியதால் பேரவையில் இருந்து வெளியேறினேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆளுநர் மாளிகை செலவினங்கள் குறித்து நிதியமைச்சர் கூறியது அப்பட்டமான பொய் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் ஒரு நல்ல மனிதர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான தன்னுடைய நட்புறவு குறித்து பேசிய ஆளுநர் ரவி, “மு.க.ஸ்டாலின் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அவர் ஒரு நல்ல மனிதர். நான் அவரிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறேன். அதேபோல் அவரும் என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறார். தனிப்பட்ட முறையில், எங்களுக்கு இடையில் நல்ல நட்புறவு இருக்கிறது” என்று கூறினார்.

தமிழ்நாட்டு வாய்ப்பை பாக்கியமாக உணர்கிறேன்

தமிழ்நாட்டு மக்களுடனான உறவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ் மக்கள் மிகவும் பண்பட்டவர்கள். ஆழ்ந்த ஆன்மீக உணர்வும், விருந்தோம்பல் பண்பும் கொண்டவர்கள். தமிழ் இலக்கியச் சிந்தனையின் ஆழமும், இலக்கியச் செழுமையும் என்னை வியக்க வைத்தது. தமிழ்நாட்டில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக உணர்கிறேன். இங்குள்ள மக்களுக்கும், அரசியலுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் தெரிகிறது. தமிழ்நாட்டு அரசியலில் நாகரீகத்தையும் கண்ணியத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டு மக்களிடம் அவற்றை பெற முடியும்” என்றார்.

 

https://www.virakesari.lk/article/154466

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட மாடல் காலாவதியானதா? ஆளுநர் ரவியின் கருத்துக்கு திமுக பதில் என்ன?

திராவிட மாடல்- ஆளுநர் ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,TNDIPR

35 நிமிடங்களுக்கு முன்னர்

திராவிட மாடல் என்ற ஒன்று இல்லை என்றும் அது காலாவதியான கொள்கை என்றும் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், தன்னிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று தெரிவித்துள்ள ஆளுநர், அரசு நிதியை பயன்படுத்துவதில் ஆளுநர் மாளிகை விதிமீறலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

திராவிட மாடல் குறித்த ஆளுநரின் பேட்டி சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின், `திராவிட மாடல் ஆட்சி நிர்வாகத்திற்கான மாடல்` என குறிப்பிட்டுள்ளார்.

திமுக கடந்த 2021இல் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திராவிட மாடல் என்ற சொல்லாடல் பிரபலமடைந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியை பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் திராவிட மாடல் ஆட்சி என்றே குறிப்பிட்டு வருகிறார். திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பதை தனது பணியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ள பேட்டியில், 'திராவிட மாடல் முறையை நான் பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார். முதலில், திராவிட மாடல் என எதுவும் இல்லை. அது ஒரு அரசியல் முழக்கம் மட்டுமே, காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சி. ஒரு பாரதம், ஒரே இந்தியா என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளாத சித்தாந்தம் அது.

தேசிய சுதந்திர போராட்டத்தை மட்டுப்படுத்தும் சித்தாந்தம் அது. தங்கள் இன்னுயிரையையும் அனைத்தையும் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களை வரலாற்றில் இருந்து அழித்துவிட்டு, மாறாக ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைத்தவர்களை மகிமைப்படுத்துகிறது. நாடு முழுவதும் மொழிசார் நிறவெறியை வெறித்தனமாக அமல்படுத்தும் ஒரு கருத்தியல் இது. வேறு எந்த இந்திய மொழியும் தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதில்லை.

சமீபத்திய பட்ஜெட்டில், 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அமைக்கப் போவதாக அரசு தெரிவித்துள்ளது. இதில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி நூல்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. வேறு மொழி நூல்கள் இல்லை. பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் சூழலை உருவாக்கிய ஒரு கருத்தியல். நான் அதை ஆதரிப்பேன் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்' என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

இதேபோல், ஆளுநர் மாளிகையிடமோ தன்னிடமோ எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று குறிப்பிட்ட அவர், `நான் 2021 செப்டம்பர் மாதம் பதவி ஏற்றுகொண்டபோது, 19 மசோதாக்கள் ஒப்புதலுக்கு வந்தன. அவற்றில் 18 மசோதாக்களுக்கு நான் ஒப்புதல் அளித்துவிட்டேன். மீதமுள்ள நீட் மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளேன். ஏனென்றால் கல்வி பொதுப்பட்டியலில் வருகிறது. 2022ல் 59 மசோதாக்கள் ஒப்புதலுக்கு வந்தது. இதில் 48க்கு நான் ஒப்புதல் அளித்து விட்டேன். 3 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்துள்ளேன். ஒன்றை அரசு திரும்பப் பெற்றுகொண்டது. 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, 2022ல் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை. 2023ல் ஏழு மசோதாக்கள் வந்தன. ஏழுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது` என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை அரசு நிதியை பயன்படுத்துவதில் விதிமீறலா?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரன். ரவி, அரசு நிதியை பயன்படுத்துவதில் விதிமீறலில் ஈடுபட்டதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த குற்றச்சாட்டுகளையும் இந்த நேர்காணலில் மறுத்துள்ளார் ஆளுநர் ரவி.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "அவர்கள் பண்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அமைச்சர் கூறியது அனைத்துமே பொய் மூட்டைகள்தான். முதலாவதாக, நிதி குறியீட்டின்படி ஆளுநரின் விருப்ப மானியத்தில் இருந்து சிறு தொண்டு நிறுவனங்களுக்கும், ஏழைகளுக்கு சில ஆயிரம் ரூபாய்களும் தரலாம் என்று அவர் கூறினார். 2000ஆம் ஆண்டிலேயே நிதி குறியீட்டில் இருந்து ‘Petty’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு விட்டது. ஆளுநரின் விரும்ப மானிய நிதியில் வரம்பு இருக்க முடியாது, இருக்க கூடாது என்று அது கூறுகிறது. அதாவது ஆளுநரின் விருப்புரிமை வரையறுக்கப்படக்கூடாது.

அடுத்ததாக, அக்‌ஷய பாத்திரம் குறித்து ஆளுநர் பேசியுள்ளார். 2000ஆம் ஆண்டில், ஏழை மாணவர்களின் இடைநிற்றல் குறித்து கவலைப்பட்ட அப்போதைய ஆளுநர், ஆரோக்கியமான இலவச உணவை வழங்க விரும்பினார். இது கற்றல் இடைநிற்றலைக் குறைக்கும் என்று அவர் நினைத்தார். அக்‌ஷய பாத்திரம், மிகவும் பிரபல அரசு சாரா அமைப்பாகும். அந்த அமைப்பு ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் ஏழைகளுக்கு இலவச உணவை வழங்குகிறது. அக்ஷய பாத்திரம் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு இலவச உணவை வழங்க முன்வந்தது.

அவர்கள் விரும்பியதெல்லாம் சுகாதாரமான சமையலறை மட்டுமே. அந்த சமையலறையின் மதிப்பீடு ரூ.5 கோடி. ஆளுநர் இந்த தொகையை தனது விருப்ப மானியத்தில் இருந்து தவணையாக விடுவித்து, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அரசின் குழுவை அமைத்தார். முதலில் ரூபாய் 4.5 லட்சமும், பணி முடிந்தவுடன் 50 லட்சமும் விடுவிக்கப்பட்டது. டிசம்பர் 2021இல், சமையலறை அமைக்கும் பணி முடிந்தது. குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்புக்கு அனுமதி கேட்டு மாநகராட்சியை அவர்கள் நாடினர்.

ஆனால், மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை. எல்லாம் நன்றாக இருப்பதாக கூறிய அவர்கள், முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாகவும் அனுமதி தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்தில் பேசி தீர்த்துக்கொள்ளும்படியும் அவர்கள் கூறினர்.

கடந்த 16 மாதங்களாக அக்ஷய பாத்திரம் திட்டத்துக்காக முதலமைச்சர் அலுவகத்தை நாடி வருகின்றனர். ஆனால், அவர்களால் முதலமைச்சரை சந்திப்பதற்கான அனுமதியை பெற முடியவில்லை. வங்கி பரிவர்த்தனைகள் உட்பட அனைத்து ஆவணங்களும் உள்ளன.

திராவிட மாடல்

அடுத்ததாக ஆளுநர் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து தேநீர் விருந்து நடத்துகிறார் என்று கூறுகின்றனர்.

பாரம்பரியமாக குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில், ராஜ் பவனில் ‘அட் ஹோம்’ - நடத்தப்படும். இது நமது சுதந்திரத்தின் கொண்டாட்டம் மற்றும் நாடு முழுவதும் நடக்கும். முன்னதாக, இதில் அதிகாரிகள்தான் அதிகளவில் பங்கேற்பார்கள். நான் அதை மாற்றினேன். அதிகாரிகள் எண்ணிக்கை சற்று குறைக்கப்பட்டு, விவசாயிகள், இளைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்கள், பாரம்பரிய கலைஞர்கள் என அனைத்துப் பிரிவினரும் பங்கேற்றனர். ‘அட் ஹோம்’ நிகழ்ச்சியில் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதனை ஆளுநரின் தேநீர் விருந்து என்று கூறுவது தமிழக மக்களையும் தேசிய தினத்தை கொண்டாடுவதையும் அவமதிப்பது ஆகும்.

இதேபோல் மத்திய குடிமைப்பணி குரூப் 1 தேர்வுக்கு தயாராவோருடன் கலந்துரையாட ஆளுநர் பணம் செலவழிப்பதாக தெரிவித்தனர். நான் அரசுப் பணியில் சேர்ந்தபோது, தமிழகம்தான் அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்களைக் கொண்டிருந்தது. இன்று நாம் பல மாநிலங்களுக்கு கீழே இருக்கிறோம். அதனால், 250 முதல் 300 பேர் வரை, ஏழை மாணவர்களை படிக்க வைக்க ஆரம்பித்தேன். நான் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறேன். தேர்வுக்கு எப்படி தயாராவது என்று அவர்களுக்கு வழிகாட்டுகிறேன். நான் அவர்களை பசியுடன் திருப்பி அனுப்ப முடியாது. நான் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். இதைப் பற்றி அரசாங்கம் ஏன் காழ்ப்புணர்ச்சி கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் (பிடிஆர்) இந்த பொய்களை எல்லாம் சொன்னார்.

"ஊட்டியில், ஆளுநர் தேநீர் விருந்து நடத்தி சில லட்ச ரூபாயை ஆளுநர் செலவு செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த தேநீர் விருந்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் நீலகிரியின் பழங்குடியின மக்கள். அவர்கள் என் விருந்தினர். நாங்கள் முழு மாலை பொழுதையும் அவர்களுடன் கழித்தோம். அவர்களின் குரலுக்கு செவிமடுத்தோம். எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்குமான உணவுக்கான கட்டணத்தை நான் செலுத்துகிறேன். ஆளுநருக்கு உள்ள சலுகைகளின் கீழ், ஆளுநர் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் நான் உணவுக் கட்டணத்தை தவறாமல் செலுத்துகிறேன். அவர்களால் என்னை நோக்கி விரலை உயர்த்த முடியாது," என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

திராவிட மாடல்- ஆளுநர் ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,YOUTUBE/ TAMIL NADU ASSEMBLY

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அன்றைய தினம், ஆளுநர் மாளிகை அரசு நிதியை கைளாவது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்தார்.

"ஆளுநருக்கு மூன்று தலைப்புகளில் அரசு நிதி ஒதுக்குகிறது. ஒன்று ஆளுநரின் செயலகத்திற்கானது. அடுத்ததாக ஆளுநரின் ஹவுஸ்ஹோல்ட். இதில் இரண்டு ராஜ் பவன்களின் வீட்டுச் செலவுகள் அடங்கும். அடுத்ததாக, விருப்புரிமை நிதி (Discretionary grants). 2.41 கோடி ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டு 2.86 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு 3.63 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆளுநரின் ஹவுஸ்ஹோல்ட் செலவு 11.6 கோடி ரூபாயாக இருந்ததை கடந்த ஆண்டு 15.93 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு 16.63 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

1937ல் உருவாக்கப்பட்ட நிதி நெறிமுறைகளின்படி விருப்புரிமை நிதி வழங்கப்படுகிறது. 2011-12ல் 8 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் இது எட்டு லட்ச ரூபாயாகவே தொடர்ந்தது.

2016-17ல் இது 5.44 லட்சம் ரூபாயாக இருந்தது. 2017-18ல் இது 1.57 லட்ச ரூபாயாக ஆகக் குறைந்தது. இப்படி ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாயாக இருந்த விருப்புரிமை நிதியை மூன்றே மாதத்தில் 50 லட்ச ரூபாயாகவும் பிறகு, ஐந்து கோடியாகவும் மாற்றியிருக்கிறார்கள்.

இதனை petty grant என்பார்கள். அதாவது இந்த ஆளுநரின் விருப்புரிமை நிதி என்பது பொதுத் துறை அல்லது அரசு - தனியார் பங்களிப்பில் செயல்படும் நிறுவனங்களுக்கும் அரசின் நிதியைப் பெறத் தகுதியான தனி நபர்களுக்கும் ஆளுநர் அளிக்கும் நிதி நல்கை ஆகும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் இதுதான் விதி.

எப்போதுவரை இது ஒரு லட்சமாக, ஐந்து லட்சமாக, எட்டு லட்சமாக இருந்ததோ அப்போதுவரை பிரச்னை இல்லை. இந்த நிதி ஐந்து கோடி ரூபாய் ஆக இருக்கும் நிலையில், விதி தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. அக்ஷயபாத்ரா என்ற காரணத்தைச் சொல்லி ஆளுநரின் ஹவுஸ்ஹோல்ட் வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. பிறகு, அந்தப் பணம் அக்ஷய பாத்ராவுக்கும் வேறு நபர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் விருப்புரிமை செலவு 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டதிலிருந்து ஆளுநருக்கான மொத்த செலவு 18 கோடியே 38 லட்சம் ரூபாய். அதில் 11 கோடியே 32 லட்ச ரூபாய் அவர்களது கணக்குக்கு மாற்றப்பட்டு, எங்கே செலவிடப்பட்டது என்பது அரசுக்கு தெரியாது. இது ஒரு விதிமுறை மீறல்.

petty என்றால் சிறு தொகை. அது ஐந்தாயிரமாக இருக்கலாம், ஐம்பதாயிரமாக இருக்கலாம். ஒரு லட்சமாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒரு கோடி ரூபாய், இரண்டு கோடி ரூபாயெல்லாம் வராது.

2021 செப்டம்பருக்கு பிறகு இந்தத் தலைப்பில் வந்திருக்கும் பில்களைப் பார்த்தால், யுபிஎஸ்சி மாணவர்கள் கூட்டத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.தேநீர் விருந்துக்கு 30 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் கலாச்சார நிகழ்ச்சிக்கு 3 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்தச் செலவுகள் எல்லாம் இந்தத் தலைப்பில் வந்திருக்கவே கூடாது. அதேபோல, ஒரே நபருக்கு திரும்பத் திரும்ப பணம் கொடுக்கக் கூடாது. ஆனால், ஒரே நபருக்கு ஆறு மாதங்களுக்கு ஐம்பத்து எட்டாயிரம் என்ற வகையில் சுமார் 3 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பணியார்களுக்கு போனஸ் ஆக ஒரு முறை 18 லட்சம் ரூபாயும் மற்றொரு முறை 14 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. நிதி நெறிமுறைகள் சொல்வதை மீறி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, நிதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வருந்தத்தக்க நிகழ்வு` என்று கூறியிருந்தார்.

தனது பேட்டியில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருப்பதாகவும், ஸ்டாலின் நல்ல மனிதர், ஆர் மீது தனக்கு மரியாதை உள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மாடல்- ஆளுநர் ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,FACEBOOK/ MK STALIN

திராவிட மாடல் ஆட்சி நிர்வாக ஃபார்முலா

இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில், அக்கட்சி தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், திராவிடல் மாடல் குறித்து குறிப்பிடும்போது, `திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து காலம் காலமாக அதன் மீது அவதூறுகளைப் பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்போர் இருக்கிறார்கள். திமுகவை திட்டியே வயிறு வளர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். கழகத்தை விமர்சித்தால்தான் தங்களுக்கு அடையாளமும் முகவரியும் கிடைக்கும் என்று அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள்.

திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது` என்று கூறியுள்ளார்.

திராவிட மாடல்- ஆளுநர் ஆர்.என்.ரவி
 
படக்குறிப்பு,

ஆர்.எஸ். பாரதி- திமுக அமைப்பு செயலாளர்

திமுக கூறுவது என்ன?

இதனிடையே, திராவிட மாடல் குறித்த ஆளுநரின் பேச்சுக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஆளுநர் இதுபோன்று பேசக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தனது பணியை ஆளுநர் பார்க்க வேண்டும். இவ்வாறு பேசுவது அவரது வேலை அல்ல. ஆளுநர் என்ன செய்ய வேண்டும் என்பதை தெலங்கானா ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. வரம்பு மீறி பேசினார் என்றால், ஆளுநராக இருக்கக் கூடிய தகுதி அவருக்கு இல்லை. உச்ச நீதிமன்றத்திற்கே சவால் விடுவதுபோன்று ஆளுநர் செயல்படுகிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

திராவிட இயக்க தலைவர்கள் சுதந்திரத்திற்கு போராடியவர்கள், கள்ளுக்கடை வேண்டாம் என்றதும் தன் வீட்டில் இருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிப் போட்டவர் பெரியார். இந்த வரலாறு எல்லாம் ஆளுநருக்கு தெரியாது. ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது என்பதால் அவர் இதுபோன்று பேசி வருகிறார். இதையே வேறு யாராவது பேசியிருந்தால் அவர்கள் வழக்கு தொடர்ந்திருப்போம்" என்றார்.

திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசியிடம் பேசுகையில், `இவ்வாறு சொல்வதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எப்போது அவர் அரசியல் பேசிவிட்டாரோ, அப்போதே அரசியலமைப்பு சட்டம் அவரை ஆளுநர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தயாராகி விடுகிறது. குடியரசு தலைவர் உடனடியாக அவரை திரும்பப் பெற வேண்டும். நான் அரசியல் அமைப்பு சட்டத்திற்குள் நின்று களமாடுகிறேன் என்று அவர் கூறுகிறார். அரசியல் சார்பற்ற கருத்துகளை அவர் பேசக்கூடாது. ஒரு கொள்கையை அவர் விமர்சிக்கிறார் என்றால், அதற்கு எதிரான கொள்கையை அவர் ஆதரிக்கிறார் என்றுதானே அர்த்தம்? சனாதனத்தை தூக்கிப் பிடிப்பதற்காக மக்களின் வரிப்பணத்தில் மிக பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு செய்யும் இந்த அரசியலை ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்க்க வேண்டும்` என்றார்.

திராவிட மாடல்- ஆளுநர் ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,SHIYAM

 
படக்குறிப்பு,

தராசு ஷ்யாம் - மூத்த பத்திரிக்கையாளர்

திராவிட சித்தாந்தம் என்பது சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி

ஆளுநர் கூறியிருப்பது அபத்தமானது என்று மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் கூறுகிறார்.

இது தொடர்பாக தனது கருத்தை பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட அவர், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றால் ஏன் வடநாட்டு தொழிலாளர்கள் இங்கு படை எடுக்கிறார்கள். ஆளுநர் ரவியின் சொந்த மாநிலத்துக்காரர்கள் இங்கு இருக்கிற அரசுக் கல்வி மற்றும் தனியார் கல்வி மாதிரி எங்கள் மாநிலத்தில் இல்லை என்று சிலாகிக்கிறார்கள். திராவிட சித்தாந்தம் என்பது சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி.

1977 ஜூன் 15 கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கிற தீர்மானத்தில் முதல்வர் எம்ஜிஆர் பதில் உரை ஆற்றும்போது மூன்று விஷயங்களில் திமுகவும் அதிமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று கூறினார்.

அவை, மொழி உரிமை, மாநில நலன் மற்றும் சமூக நீதி. 1962க்குப் பிறகே தனித் திராவிட நாடு கோரிக்கையை திமுக கைவிட்டுவிட்டது. அதை ஏற்று 1967 ல் மக்கள் தீர்ப்பு வழங்கி அன்று முதல் இன்று வரை தேசீயக் கட்சிகளுக்கு இங்கு ஆட்சி அதிகாரத்தில் இடம் அளிக்கவில்லை.

2006இல் கலைஞருக்கு மெஜாரிட்டி இல்லாதபோதும் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தரவில்லை. மாறாக புதுச்சேரியில் திமுகவுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறிவிட்டு இங்கு 5 ஆண்டு திமுக தனியாகத்தான் ஆட்சி நடத்தியது.

மொழிவாரி மாநிலப் பிரிப்பு சட்டம் வருவதற்கு முன்பே ஆந்திரா பிரிந்து விட்டது. பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தது இதற்கு காரணம். அதன் பின்னர் அன்றைய மெட்ராஸ் ராஜதானியில் இருந்து பல்வேறு மாநிலங்கள் பிரிந்து எஞ்சிய பகுதி மெட்ராஸ் ஸ்டேட் ஆனது. இது எங்கள் பள்ளி காலத்து வரலாறு. பின்னர் அண்ணா காலத்தில் தமிழநாடு என்று பெயர் மாற்றப்பட்டது.

ரவி முன்பு பணியாற்றிய நாகாலாந்து மாநிலத்திற்கு என்ன அர்த்தம் தருகிறது? நாகர் பூமி என்று தானே? அப்படியானால் அனைவரும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானவர்களா? சர்ச்சை நாயகனாக இருப்பதன் மூலம் பதவியின் மாண்பைச் ஆளுநர் ரவி சீர்குலைக்கிறார். வெற்று விளம்பரம் தேடுவதன் மூலம் நிர்வாக அமைதியைக் கெடுக்கிறார். இப்படியான கருத்தை வேறு எந்த மாநிலத்திலாவது இவர் வைக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c80y4kj6ke1o

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட மாடல் என்பது என்ன?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
23 பிப்ரவரி 2022
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
ஸ்டாலின் திமுக

பட மூலாதாரம்,MKSTALIN

தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சியை 'திராவிட மாடல்' ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகிறார். ஆனால் திராவிட மாடல் என்பது காலாவதியானது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்திருக்கிறார்.

உண்மையில் திமுக கூறும் திராவிட மாடல் என்பது என்ன?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானபோது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் , "தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கக் கூடிய அங்கீகாரம் இது," என்று குறிப்பிட்டார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வெற்றியைப் பற்றி குறிப்பிட்ட முதலமைச்சர், "ஒன்பது மாத கால 'திராவிட மாடல்' ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ் இந்த முடிவு" என்றும் குறிப்பிட்டார்.

2021இல் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 'திராவிட மாடல்' என்ற வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

2021-ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

ரகுராம் ராஜன், எஸ்தர் தஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், டாக்டர் எஸ். நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், எஸ்.நாராயணன் எழுதிய "Dravidian Years" நூலை மேற்கோள்காட்டிப் பேசினார்.

திராவிட மாடல் ஸ்டாலின்

பட மூலாதாரம்,S.NARAYANAN

"Dravidian Years" புத்தகத்தில் எஸ். நாராயணன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

"அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஒரு உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது."

இதை குறிப்பிட்ட ஸ்டாலின், "இதுதான் திராவிட மாடல். எல்லா சமூகங்களுக்குமான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது தான் திராவிட மாடல். எல்லோரையும் உள்ளடக்கிய இந்த பாணியில் தமிழ்நாடு வளர வேண்டுமென நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.

"மேலும், தொழில்துறை வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வியில் சாதனை போன்ற எல்லாமும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்க முடியாது. சமூக முன்னேற்றமும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல் ஆகிய ஐந்தும் முன்னேற்றமடைய வேண்டும். அம்மாதிரியான ஒரு வளர்ச்சியைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காண விரும்பினர். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி" என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.

இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டீன் கூறுகையில், "நம்முடைய முதலமைச்சர் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் இது பெரியாரின் பூமி என்பதைத்தான். பெரியார் எதையெல்லாம் இந்த சமூகத்தில் மாற்ற வேண்டுமென நினைத்தாரோ அதன் அடிப்படையில் அமைந்த அரசுதான் இந்த அரசு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் முதல்வர். ஆகவே தற்போது கிடைத்த வெற்றியை இந்த அரசின் திட்டங்களுக்கு, பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறார். பிறப்பொக்கும் எல்லா ரும் சமம். எல்லோரும் சமவாய்ப்பு. அதைத்தான் திராவிட மாடல் பாணி அரசு என முதல்வர் குறிப்பிடுகிறார்" என்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

"ஆனால், இதற்கு முன்பு மு. கருணாநிதி போன்றவர்கள் இதுபோன்ற முத்திரை வார்த்தையை பயன்படுத்தாத நிலையில், தற்போதைய முதல்வர் இதைப் பயன்படுத்துவது ஏன்? "காரணம் இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டு காலமும் எடப்பாடி பழனிசாமி என்ற முகமூடியை வைத்துக்கொண்டு, பா.ஜ.க. ஆட்சி செய்தது.

தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன. நம் வளங்கள் சுரண்ட வாய்ப்பளிக்கப்பட்டது. எல்லாவற்றிலும் ஒருமையைத் திணிக்க முயன்றார்கள். அதற்கு எதிரான மாடலாகத்தான் நம்முடைய மாடலை முன்வைக்க வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் முதல்வர் இப்படிக் குறிப்பிடுகிறார்," என்கிறார் கான்ஸ்டன்டீன்.

மூத்த பத்திரிகையாளரான ப்ரியன், முதல்வரின் திராவிட மாடல் கருத்தாக்கம் மீதான தமது பார்வையை விளக்கினார்.

திராவிட கொள்கையின் நீட்சி

"சமூக நீதி, சம நீதி, சுயமரியாதை, கூட்டாட்சி, மொழி பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிடம் சார்ந்த கொள்கையை திமுக நீண்ட காலமாகவே முன்வைத்து வருகிறது; அதன் தொடர்ச்சிதான் தற்போது முதல்வர் கூறும் திராவிட மாடல்," என்கிறார் அவர்.

"நாடாளுமன்றத்தில் அண்ணா பேசும்போது "I belong to Dravidian Stock" என்று குறிப்பிட்டார். அதன் தொடர்ச்சிதான் இது. சமூக நீதி, சம உரிமை என்ற திசையில் தி.மு.க. தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது. கருணாநிதி ஆட்சியின்போது, பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. அதேபோல, மொழி பாதுகாப்பு, கூட்டாட்சி போன்றவற்றில் கவனம் செலுத்தினார். மத்திய அரசு - மாநில அரசு இடையிலான உறவுகள் குறித்து பரிந்துரைகளை அளிக்க ராஜமன்னார் குழுவை அமைத்தார். இப்போது மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைச் செயல்படுத்தினார். பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் பயன்பட்டது. இதையே மு.க. ஸ்டாலின் தொடர்ந்து திராவிட மாடல் என குறிப்பிடுகிறார்" என்கிறார் ப்ரியன்.

தவிர, முன்பில்லாத வகையில் தொடர்ந்து திராவிட மாடல் என்ற தத்துவத்தை முன்வைக்க வேண்டிய தேவையும் இப்போது இருக்கிறது என்கிறார் ப்ரியன்.

"ஆர்.எஸ்.எஸ். சமயம் கிடைக்கும்போதெல்லாம் இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என கூறி வருகிறது. இந்தச் சூழலில்தான் இந்தத் தத்துவத்தை திமுக முன்வைக்க வேண்டியிருக்கிறது. காரணம், ஒரு தத்துவத்தை இன்னொரு தத்துவத்தின் மூலம்தான் எதிர்க்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை இன்னொரு அரசியல் கட்சியாக எதிர்கொண்டால் தோல்விதான் கிடைக்கும்.

ஆகவேதான் திராவிட மாடல், திராவிடன் ஸ்டாக் என்பதை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. பா.ஜ.க. தனது தத்துவமாக இந்துத்துவத்தை முன்வைக்கும்போது, அதற்கு எதிரான தத்துவமாக திராவிடத்தைத்தான் முன்வைக்க முடியும். தற்போது திராவிடத்தை முன்வைப்பதற்கான அ.தி.மு.க. இழந்துவிட்டது. ஆகவே, அதனை முன்வைப்பதற்கான ஒரே கட்சியாக தி.மு.கதான் இருக்கிறது. இதனால்தான் திரும்பத் திரும்ப மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் என்பதை முன்வைக்கிறார். அது சரியான உத்திதான்" என்கிறார் ப்ரியன்.

ஸ்டாலின் திமுக

பட மூலாதாரம்,MKSTALIN

திடீர் பிரபலமான சொல்லாடல்

திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையிலான அரசு அல்லது கட்சி என்பது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான் என்றாலும், 'திராவிட மாடல்' என்பது சமீபத்தில்தான் குறிப்பாக 2021ஆம் ஆண்டுக்குப் பிறகே அதிகம் பிரபலமானது.

சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர்களான ஏ. கலையரசனும் எம். விஜயபாஸ்கரும் எழுதி The Dravidian Model என்ற புத்தகம் வெளியானது. அந்த புத்தகம் வெளியான பிறகு, 1967க்குப் பிறகு தமிழ்நாட்டில் நிகழ்ந்த வளர்ச்சி பாணியைக் குறிப்பிட 'திராவிட மாடல்' என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.

திராவிட மாடல் என்றால் என்ன என்பது, அந்தப் புத்தகத்திலேயே விளக்கப்பட்டிருக்கிறது.

"பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த மாநிலங்கள், மனிதவள குறியீடுகளில் பின்தங்கியிருக்கின்றன. மனிதவள குறியீடுகளில் மேம்பட்ட மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் அந்த அளவுக்கு மேம்படவில்லை.

ஆனால், தமிழ்நாடு இந்தப் போக்கை முறியடித்திருக்கிறது. இங்கு மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியும் மனிதவள மேம்பாடும் இருக்கிறது. சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுக்கு மாறாக மக்களை ஒன்று திரட்டி, தமிழ்நாடு அடைந்திருக்கும் சமூக, பொருளாதார வளர்ச்சியை இந்தப் புத்தகம் விளக்குகிறது" என திராவிட மாடல் பற்றி அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-60489089

  • கருத்துக்கள உறவுகள்

"முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் ஆளுநர்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு
 
படக்குறிப்பு,

தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர்

39 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு நிதியமைச்சர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் பொதுவாக அவர் கூறியதை உண்மைக்கு புறம்பானது என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம் என்று தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள அசாதாரண நேர்காணலில் மாநிலத்தில் ஆளும் திமுகவின் செயல்பாடு, காவல்துறை செயல்திறன், சட்டம் ஒழுங்கு நிலவரம், பட்டியலினத்தவர்கள் பாதுகாப்பு, நிதி மேலாண்மை, சட்டப்பேரவை மாண்பு மற்றும் நடைமுறைகள், நிலுவை மசோதாக்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து சில கடுமையான குற்றச்சாட்டுகளையும் சுமத்தி உள்ளார்.

அவரது கருத்துக்கு ஆளும் திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் எதிர்வினையாற்றி வந்த நிலையில், தமிழ்நாடு அரசில் தொழிற்துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு அரசு தரப்பு எதிர்வினையை விரிவாக ஆற்றியுள்ளார். அதன் முழு விவரம்:

  • ஆளுநர் ரவி, 'ஆளுநர்' பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். திராவிடத்துக்குத் தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார்.
  • சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை ஆளுநர் மறைக்கிறார். தனக்குத் தோன்றும் புதிய காரணங்களை - புனைவு காரணங்களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சட்டத்துக்குப் புறம்பான விளக்கங்கள் சொல்கிறார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதையே பேசுகிறார்.
  • மதசார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் உள்ளதை மறந்துவிட்டு பேசுகிறார். தான் மேற்கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறி பொதுவெளியில் நிர்வாக விவரங்களைச் சொல்லி வருகிறார். இப்படி ஆளுநர் பதவிக்கு அழகில்லாத, அடிப்படையில்லாத செயல்களை மட்டுமே செய்து வருகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.
  • தனிப்பட்ட ரவியாக இருந்தால் அதனை மதிக்கத் தேவையில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் ஆளுநராக - அதுவும் தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பதால் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

அபத்தமான கருத்துகள்

ஆளுநர் ரவி வெளிநடப்பு
  • இங்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது முதல், அவர் சொல்லி வரும் அபத்தமான கருத்துகளுக்கும் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறது தி.மு.க. காரணம், அந்த அடிப்படையற்ற கருத்துகள் மறுக்கப்படாவிட்டால் அவை சரியானதோ என சிலரேனும் தவறாக நினைத்துவிடக் கூடும்.
  • தமிழ்நாட்டின் ஜனநாயகச் சக்திகளின் கடுமையான கண்டனத்துக்குரியவராக அவர் இருந்து வருவதை நாட்டுமக்கள் நன்கு அறிவார்கள். 40-க்கும் மேற்பட்டோரின் மரணத்துக்குக் காரணமான ஆன்லைன் ரம்மி தடை மசோதாவைக் கூட பல மாதங்கள் தனது நாற்காலிக்கு கீழே போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார் ஆளுநர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவரது நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய அன்றுதான் உடனடியாகக் கையெழுத்து போட்டு அனுப்பினார். இதன் மூலம், இவர் எத்தகைய மனிதர் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். இப்படி தடித்த தோலுடன் இருக்கக் கூடிய ஆளுநர், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டுக்கு ஒரு பேட்டியை இன்று வழங்கி இருக்கிறார். அந்த பேட்டியை முழுமையாகப் படிக்கும்போது, அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது.
  • கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ் பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார் என்பதைத்தான் அந்தப் பேட்டி காட்டுகிறது.

"பேரவை விதிகளை மீறியவர் ஆளுநர்"

ஆளுநர் ரவி
  • ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் சட்டமன்றம் கூடும்போது ஆளுநர் உரை இடம் பெறுவது என்பது மரபு ஆகும். அந்த உரையை தயாரித்து வழங்குவது மாநில அரசின் பணியே ஆகும். அதனை வாசிக்க வேண்டியதுதான் ஆளுநரின் வேலை. அப்படி மாநில அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையை வாசிக்காமல், திரித்தும் - மாற்றியும் - விட்டுவிட்டும் - புதிதாகச் சேர்த்தும் ஆளுநர் வாசித்தார். இது அவை மீறல் ஆகும். ஜனநாயக மீறல் ஆகும். எனவேதான், 'அரசால் அளிக்கப்பட்ட உரையே இடம்பெறும்' என்ற தீர்மானத்தை மாண்புமிகு முதலமைச்சர் கொண்டு வந்து அனைவர் ஆதரவுடன் நிறைவேற்றினார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும்?
  • ஆளுநரால் அவமானப்படுத்தப்பட்ட அவை மாண்பு, முதலமைச்சரின் தீர்மானத்தால் அன்றைய தினமே சரிசெய்யப்பட்டது. அவர்கள் எழுதித் தந்ததில் உடன்பாடு இல்லை என்கிறார் ஆளுநர். எழுதித் தந்ததைப் படிக்க வேண்டும் என்பதுதான் விதி; அதுதான் நடைமுறை. அது அவருக்கு விருப்பம் இல்லை என்றால், அவர் உரையாற்றவே வந்திருக்கக் கூடாது.
  • ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்ட பதவி அல்ல. அந்தப் பதவிக்கு வந்தவர், அதன் தன்மையோடுதான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் காட்ட முனையக் கூடாது.
  • எழுதி வழங்கியதை வாசிக்க வேண்டும், விருப்பம் இல்லாவிட்டால் அவர் வேறு வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவையின் மாண்பைக் குலைக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
  • 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பும் – அதன் பிறகு கலவரங்களும் நடந்தபோது, அந்த மாநில ஆளுநர், குஜராத் அமைதியில்லா மாநிலம் என்று உரையாற்றினாரா அல்லது குஜராத் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அப்படியே ஆற்றினாரா என்பதை ஆளுநர் கூற வேண்டும்.
  • அவை தொடங்கும்போது தேசிய கீதம் பாடவில்லை என்று ‘தேசபக்த திலகம்’ போல பேட்டி அளிக்கும் ஆளுநர், கடந்த 09/01/2023 அன்று தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் அவையை விட்டு வெளியேறியது ஏன்? இதுதான் அவரது தேசபக்தியா?

"எதிரிக்கட்சி அரசியல்வாதி போல செயல்படுகிறார்?

ஆளுநர் ரவி
  • கடந்த 23.10.2022 அன்று கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மாநிலம் தாண்டிய பரிமாணங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்பு இருந்ததால் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு உடனே மாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டார்கள். மாநில அரசின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் மத்திய முகமை தனது விசாரணையைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விடார்கள்.
  • கனியாமூர் பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறையை சில மணி நேரங்களுக்குள் காவல் துறை கட்டுப்படுத்தியது. துப்பாக்கிச் சூடு இல்லாமல் கட்டுப்படுத்தினோம் என்பதுதான் அதில் முக்கியமானது.
  • அரசு எடுத்த நடவடிக்கைகளை எல்லாம் மறைத்துவிட்டு, ஒரு எதிரிக்கட்சி அரசியல் தலைவரைப் போல எதற்காக ஆளுநர் வரிசைப்படுத்துகிறார்? மாநில அரசின் அங்கமாக இருக்கும் ஒருவர், மாநில அரசையே தவறாகக் குற்றம் சொல்வது எப்படி சரியானதாக - முறையானதாக இருக்க முடியும்?
  • ஆளுநர் ரவி, ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிப் பூங்காதான். அது இந்த மாநிலத்தின் வளர்ச்சியில் எதிரொலிக்கிறது. ஆனால், அவரது உரைகள், இந்த அமைதியைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளன என்பதுதான் உண்மை!
  • கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் அமர்ந்து விவாதித்து அனுப்பி வைக்கும் சட்டமசோதாக்களுக்கு - சட்டத்திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டியது ஆளுநரின் கடமையாகும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். அதுகுறித்து விவாதிக்க மாநில அரசு திறந்த மனத்தோடு தயாராக இருக்கிறது. அதே சட்டத்தை நாங்கள் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும். ஆனால் அதற்கும் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைக்கிறார் ஆளுநர் ரவி. இதுதான் கடுமையான கண்டனத்துக்குரியது. அவர் பார்த்தாக வேண்டிய அந்த ஒரு வேலையையும் பார்க்க மறுக்கிறார் என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு.

மசோதா விவகாரத்திலும் 'முரண்'

ஆளுநர் ரவி
  • இவரது இந்தச் செயல் மாநில நிர்வாகத்தை இயன்றவரை முடக்கி வைக்கும் முயற்சிதானே!? தமிழ்நாடு அரசு எத்தனை மசோதாக்களை தனக்கு அனுப்பிவைத்துள்ளது, அவற்றில் எத்தனை தன்னிடம் நிலுவையில் உள்ளது என்ற கேள்விக்கு, “தன்னிடம் எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை” என்ற பொய்யான தகவலை பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து, பின்னர் அவரே 8 மசோதாக்களைத்தான் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறி இருக்கிறார்.
  • நிலுவையில் இருப்பதற்கும், நிறுத்தி வைத்திருப்பதற்கும் உள்ள சட்ட வித்தியாசத்தை அவர்தான் விளக்க வேண்டும். இன்றைய நிலவரப்படி கடந்த சட்டமன்ற கூடத்தொடரின்போது நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களில் ஏழும், அதற்கு முன்பு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் என மொத்தம் அவரிடம் 17 மசோதாக்கள் உள்ளன.
  • நிர்வாகத்தைப் பொறுத்தவரை அவர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்; அவ்வளவுதான். வெறும் வார்த்தை ஜாலங்களில் அவர் அதனை மூடி கடந்திட கூடாது. அதனை இந்த அரசு அனுமதிக்காது.
  • இப்படி எளிதில் சரிபார்க்கக்கூடிய ஒரு விவரத்தையே தவறாகக் கூறும் ஆளுநரின் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகநீதி குறித்த கருத்துக்களை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள்.
  • தமிழ்நாட்டில் உயர்கல்வி குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கும் இவருக்கு தெரியுமா உலகின் மிகச் சிறந்த தொழில் நிறுவனங்கள் நமது மாநிலத்தை நாடி வரும் காரணம்? இங்குள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் நம் மாணவர்களைச் சிறப்பான பொறியாளர்களாக - திறமையான நிர்வாகிகளாக சமூகத்திற்கு வழங்கி வருகின்றன என்பதுதான் உண்மை.
  • கடந்த ஆண்டு, ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட ‘National Institutional Ranking Framework’-இல், மாநில கல்லூரி 3-ஆவது இடமும், லயோலா கல்லூரி 4-ஆவது இடமும் பெற்றுள்ளது. ஆளுநர் ரவி அந்தப் பட்டியலை எடுத்து முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் எத்தனை இருக்கின்றன என்பதையும் பொறுமையாக எண்ணிப் பார்த்து கணக்குச் சொல்லட்டும்.
  • அதுமட்டுமல்ல இந்த அரசின் உன்னதமான புதுமைப்பெண் திட்டத்தின் காரணமாக, உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை 26 விழுக்காடு உயர்ந்துள்ளது, அவரது சனாதனத்திற்கு எதிரானது என்பதால் நமது மாநில கல்வியை குறை கூறி மகிழ்கிறார் போலும்!
  • ஆளுநர் தனது நேர்காணலில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், ஆளுநரின் விருப்பத்தொகை சரியாகப் பயன்படுத்தபடாதது குறித்து கூறிய கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்துள்ளார்.
  • நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர், ஆளுநரின் விருப்பத்தொகை பயன்பாட்டைப் பற்றி கீழ்கண்ட முக்கிய குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

1. இந்த விருப்பத்தொகை, வழங்கப்படும் அதே நிதியாண்டில் பயன்படுத்தாவிட்டால் அந்த தொகை காலாவதி (கஹல்ள்ங்) ஆகிவிடும். ஆனால் மாண்புமிகு ஆளுநரின் அலுவலகம் இந்த தொகையை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் வேறு வங்கி கணக்கிற்கு மாற்றி அதை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த வங்கி கணக்குகள் தணிக்கை ஆளுகைக்கு உட்படாததால் இந்த நடைமுறை மிகவும் தவறானது என்று கணக்கு தணிக்கையாளர், பல முறை பல இனங்களில் எடுத்து கூறி உள்ளார். மேலும் இது Tamil Nadu Financial Code மற்றும் அனைத்து நிதி மேலாண்மை நடைமுறைகளுக்கும் மாறானது.

 

2. Tamil Nadu Financial Code-இன்படி இந்த விருப்பத்தொகை பொதுப்பணியில் ஈடுபட்டுள்ள சேவை நிறுவனங்களுக்கும், அரசு நிதியிலிருந்து உதவிபெற தகுதியான நபர்களுக்கு உதவி வழங்கத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த விருப்பத் தொகை Tamil Nadu Financial Code-இல் சொல்லப்பட்டுள்ள விதி முறைகளுக்கு மாறாக பலமுறை தொடர் செலவினங்கள் உள்ள இனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் Finance Code-படி தகுதி இல்லாத தனி நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

3. பல ஆண்டுகளாக ரூ.10 லட்சத்துக்கு குறைவாக இருந்த ஆளுநரின் விருப்பத்தொகை 2019-ஆம் ஆண்டில் ரூ.5 கோடியாக முந்தைய அரசால் உயர்த்தப்பட்டது. இந்த விருப்பத்தொகை Tamil Nadu Financial Code-இன் Article-213 (ன்) கீழ் வழங்கப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு, இந்த தொகையை ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டபோது சிறு செலவினங்களுக்கு (Petty grants) பயன்படுத்தப்படும் என்ற அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டில், சில்லறை (Petty) என்ற வார்த்தை நீக்கப்பட்டது என்று ஆளுநர் கூறுவது, 2019-ஆம் ஆண்டு உயர்வுக்குப் பின் பொருந்தாது.

"சரியான விளக்கத்தைத் தரவில்லை"

ஆளுநர் ரவி
  • மேற்கூறிய குற்றச்சாட்டுகளில் முதல் இரண்டிற்கு மாண்புமிகு ஆளுநர் அவர்களின் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமோ, பதிலோ அளிக்கப்படவில்லை. மூன்றாவது குற்றச்சாட்டிற்கு மட்டும் ஒரு பொருந்தாத விளக்கத்தை அளித்துள்ளார்.
  • தரவுகள் அடிப்படையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரால் சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட இந்த குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் அலுவலகம் உரிய விளக்கம் வழங்காமல் பொதுவாக நிதியமைச்சர் கூறியதை உண்மைக்கு புறம்பானது என்று சொல்வது சரியல்ல, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம்.
  • இவ்வளவு கேள்விகளைக் கேட்ட ஊடகவியலாளர், 'ஆன்லைன் சூதாட்ட கம்பெனி உரிமையாளர்கள் உங்களைச் சந்தித்தார்களா?' என்று ஏன் கேட்கவில்லை? அல்லது ஆளுநர் கேட்கக் கூடாது என்றாரா? ஆளுநர் ஆர்.என். இரவியை புரிந்து கொள்ள இது ஒன்றே போதும்! அவரைப் போல ஒரு பக்கம் பதிலளிக்கத் தேவையில்லை. இந்த ஒரு வரியே போதும் என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c3gn1k4r314o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“திமுக ஆட்சியின் முகம் சனாதனம் அல்ல சமூக நீதி”: ஆளுநருக்கு முதல்வர் பதில்!

SelvamMay 06, 2023 11:39AM
Screenshot-2023-05-06-113408.jpg

திமுக ஆட்சியின் முகம் சனாதனம் அல்ல சமூக நீதி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சி என்ற சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ஆயிரம் ஆண்டுகளாக சனாதனத்தால் அடிமைப்பட்டு கிடந்த திராவிட இனத்தை தன்னுடைய 95 வயது வரை ஓயாத உழைப்பால் சுயமரியாதை கொண்ட சமூகமாக மாற்றி காட்டியவர் தந்தை பெரியார். சுயமரியாதை பெற்ற இனம் தனக்கான உரிமைகளை பெற வேண்டும் என்று ஏழை எளிய மக்களுக்காக ஆட்சி அமைத்து காட்டியவர் பேரறிஞர் அண்ணா. தன்னுடைய ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் மூலம் ஆட்சி என்பதற்கான இலக்கணத்தை இந்தியாவிற்கே வழிகாட்டியவர் கலைஞர். இவர்கள் மூன்று பேரோடு அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவானந்தம், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என் மனதில் தோன்றினார்கள். 

முதல்வர் பொறுப்பை தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் நிறைவேற்றி காட்ட வேண்டும் என்ற தைரியம் எனக்குள் வந்துவிட்டது. 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் பல சோதனைகளை கடந்து வந்துள்ளேன். என்னால் முடிந்த அளவிற்கு ஓய்வில்லாமல் என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன். அந்த உழைப்பின் பயனை தமிழ்நாட்டின் மக்கள் முகங்களில் பார்க்கிறேன். திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மகிழ்ச்சியும் புன்னகையுமே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருக்குறள் சொல்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல். மக்களை சாதியால் மதத்தால் இனத்தால் அதிகாரத்தால் ஆணவத்தால் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது. திமுகவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்த மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது புரியும். மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருப்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நம் கடமையை செய்தால் போதும் என்ற குறிக்கோளோடு நான் செயல்படுகிறேன். இந்த ஆட்சியினுடைய முகம் சனாதனம் அல்ல சமூக நீதி. அதனால் தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
 

https://minnambalam.com/political-news/mk-stalin-says-dmk-government-is-not-sanatana-it-is-social-justice/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2023 at 14:43, கிருபன் said:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருக்குறள் சொல்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல்.

எல்லாம் உங்கள் குடும்பத்திடம் மட்டுதானே இருக்கு இப்ப😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.