Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளச்சாராய விவகாரம்: மரக்காணம், செங்கல்பட்டில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு - என்ன நடக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்
14 மே 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து சங்கர் மற்றும் தரணிவேலுவும் சுருண்டு விழ அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கி விழ அவர்களும் ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நேற்று கள்ளச்சாராயம் குடித்ததில் 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி. வசந்தா, வள்ளியப்பன், சந்திரா ஆகியோர் மரக்காணம் பகுதியில் இருந்து வாங்கிச் சென்ற விஷ சாராயம் குடித்து உடல் நலம் பாதிப்பதால் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மரக்காணத்தில் போலீசார் குவிப்பு

இந்த நிலையில் எக்கியார்குப்பம் கிராம மக்கள் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறையைக் கண்டித்து கிழக்குக் கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"சாராய வியாபாரி கைது"

கள்ளச்சாராய பலி சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளச்சாராய வியாபாரி எனக் கூறப்படும் அமரன் என்பவர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் பிடித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்படாத மொத்த சாராய வியாபாரி எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் - ஐஜி விளக்கம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் (14.5.2023) .

அப்போது, “விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தைக் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் தலைமறைவாக உள்ளனர், அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள், செங்கல்பட்டில் ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையின் மது விலக்கு பிரிவின் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது,” என்றார் .

மேலும், தொடர்ந்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்

மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி, உடல்நலன் பாதிக்கப்பட்டு, மரக்காணம் அரசு மருத்துவமனையில் 10 நபர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், 5 நபர்கள் மரக்காணம் அரசு மருத்துவமனையிலும், 2 நபர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், 1 நபர் புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவமனையிலும், 1 நபர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் சி.பழனி நேற்று பார்வையிட்டார். அப்போது அவர், “பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேக சிறப்பு சிகிச்சை அறை ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 நபர்களை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிக்கை

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கள்ளச்சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஞ்சிய குற்றவாளிகளைத் தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், சிகிச்சை பெற்று வருவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்

இதனிடையே ஜிப்மர் மற்றும் பிம்ஸ் மருத்துவமனையில் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேரின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி (14.5.2023), “தமிழகத்தில் கள்ளச்சாராயம், குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக முதல்வர் காவல்துறை மாநாட்டை நடத்தி, போதைப்பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவை உருவாக்கினார்.

அதனடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழகத்தில் போதைப்பொருள் தடுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் இதெல்லாம் புதிதாக நடைபெறுவது போலத் தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்கபட்டது. அதற்குத் துணைபோன அமைச்சர் மீது சிபிஐ விசாரணை நடத்தியது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். போதைப் பொருள் விற்பனையை கடந்த ஆட்சிக் காலத்தில் வளர்த்துவிட்டுச் சென்றனர்.

ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளார். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் வருத்தமளிக்கிறது,” என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/czkxgl7108eo

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர்.

16 - 11 = 5  தூரதிஷ்டசாலிகள். 😂
இந்த 5 பேருக்கும் முதல்வர் நிதியிலிருந்து... 10 லட்சம் ரூபாய் கிடைக்காது போலுள்ளது.🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people

வீட்டு செலவுக்கு,  பத்து லட்சம் தேவைப்படுது,
போய் ஒரு ரவுண்டு கள்ளச்சாராயம் குடிச்சிட்டு வான்னு சொன்னா...
மாட்டேன்னா அடம் பிடிக்கிற... 🤣

T Muthu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'ஊரே சுடுகாடாகிவிட்டது; எந்த துக்கத்திற்குச் செல்வது என்றே தெரியவில்லை' - கண்ணீர் கடலில் எக்கியார்குப்பம்

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மாயகிருஷ்ணன் க
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • இருந்துஎக்கியார்குப்பம், மரக்காணம்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருபதுக்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இன்று மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார். கள்ளச்சாராய சாவுகளுக்குக் காரணமான மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 13ம் தேதி எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்ட 40 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நேற்று வரை 13 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை கள்ளச்சாரயத்தால் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

எக்கியூர்குப்பம் கிராமத்தில் மட்டும் 14 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அங்கே, கள்ளச்சாராயம் விற்பனைக்கு வந்தது எப்படி? அந்த கிராமத்தின் தற்போதைய நிலை என்ன? என்பதை அறிய எக்கியார்குப்பத்திற்கு நேற்று காலையில் சென்றோம்.

 

“கள்ளச்சாராயத்திற்கு இறுதி பலி எனது தந்தையாக இருக்கட்டும்”

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
 
படக்குறிப்பு,

சௌந்தர்யா

நிசப்தமான சூழலில் ஊருக்குள் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தைக் கடந்து நடந்து சென்ற போது வலது புறம் வீட்டின் முன்பே 10க்கும் மேற்பட்டோர் சோகமாக அமர்ந்திருந்தனர். அது இறந்த சுரேஷ் என்பவரின் வீடு. அவரது மகள் கண் கலங்கியபடி நம்மிடம் பேசத் தொடங்கினார்.

 

“நான் பிபிஏ படித்துள்ளேன் எனக்கு இரண்டு தம்பிகளும் உள்ளனர். நாங்கள் மீனவர்கள். எனது அப்பா தினமும் கடலுக்குச் சென்று வந்து தான் எங்களை படிக்க வைத்தார். இப்பொழுது என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. எனது தாயாரையும், தம்பிகளையும் எப்படி காப்பாற்றுவது என்றும் புரியவில்லை. இது போன்ற துயரம் யாருக்கும் வரக்கூடாது. கள்ளச்சாராயம் என்பது முற்றிலும் அகற்றப்பட வேண்டும். கள்ளச்சாராய சாவுக்கு எனது தந்தை தான் கடைசி பலியாக இருக்க வேண்டும்,” என்றார்.

 

தொடர்ந்து துக்கம் விசாரிக்க வந்திருந்த தேன்மொழி என்பவர் நம்மிடம் பேசத் தொடங்கினார். “எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் மருத்துவமனையில் உள்ளனர். அதில் ஒருவர் இறந்து விட்டார். மீதி 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். என்ன செய்வது என்று புரியவில்லை. ஊரே சுடுகாடாக மாறிவிட்டது. இதுவரை 11 பேர் இறந்து விட்டதாக கூறுகின்றார்கள். கடலை நம்பித்தான் நாங்கள் இருக்கின்றோம். கள்ளச்சாராயம் எங்கள் ஊரில் ஒழிக்கப்பட வேண்டும். மருத்துவமனையில் உள்ளவர்கள் எல்லாம் 40 முதல் 50 வயது நபர்கள். நன்கு உழைக்கக் கூடியவர்கள். என்ன செய்வது? சாராயம் விஷச்சாராயமாக மாறிவிட்டது என்று கூறுகின்றார்கள். எங்கள் ஊரில் சாவு தொடர்கதை ஆகிவிட்டது. எந்த சாவுக்கு செல்வதென்று எனக்கு புரியவில்லை. இதற்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும்,” என்றார்.

"எந்த துக்கத்திற்குச் செல்வது என்றே எனக்கு தெரியவில்லை"

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
 
படக்குறிப்பு,

தேன்மொழி

அங்கிருந்து கிளம்பி பத்து வீடு தள்ளிச் சென்றோம். அங்கும் ஒரு பந்தல். இப்போதுதான் இறந்த மூத்தாரை அடக்கம் செய்து வந்ததாக கூறினார் தேன்மொழி.

 

“எனது மூத்தார் இறந்துவிட்டார் என்று பேச தொடங்கினார். எனக்கு 25 வயதிருக்கும் பொழுது நான் என் கணவரின் குடி பழக்கத்தால் விதவையாக்கப்பட்டேன். இப்பொழுது எனது மூத்தாரும் குடியால் இறந்துவிட்டார். மிகுந்த சிரமமாக உள்ளது. கள்ளைச்சாராயம் குடித்ததால் இந்த நிலை. இது ஒழிக்கப்பட வேண்டும். நல்ல விசேஷங்கள் என்று எங்கள் வீட்டிற்கு நிறைய அழைப்புகள் வரும். நாங்கள் ஆளுக்கு ஒரு நிகழ்ச்சியாக சென்று பார்த்து விட்டு வருவோம். அது சந்தோஷம். ஆனால் இன்று ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள். எங்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. எந்த துக்கத்திற்குச் செல்வது என்றே எனக்கு தெரியவில்லை,” என்று கூறியவர் அழத் தொடங்கி விட்டார்.

“எங்கள் ஊர் விதவைகளின் கிராமமாகிவிட்டது”

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
 
படக்குறிப்பு,

சரிதா

அவரைத் தொடர்ந்து அருகில் இருந்த சரிதா பேசத் தொடங்கினார்.

“எங்கள் ஊரில் ஏற்கனவே ஏராளமான விதவைகள் உள்ளனர். இதற்கு காரணம் இந்த சாராய குடி தான்,” என்று பேசத் தொடங்கினார்.

 

“எங்கள் ஊரில் சுனாமி வந்த பொழுது யாரும் இறக்கவில்லை. தொடர்ந்து கொரோனா காலத்தில் கூட நாங்கள் பாதுகாப்பாகதான் இருந்தோம். ஆனால் கேடுகெட்ட இந்த சாராயம் பத்துக்கும் மேற்பட்ட உயிரை பலி வாங்கி விட்டது. எங்கள் ஊருக்கு இந்த சாராயம் வேண்டாம். வரும் தலைமுறையாவது நல்லபடியாக வளரட்டும்,” என்றார்.

 

அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவரும் இக்கிராமத்தில் ஏராளமான விதவைகள் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து இறந்த சங்கரின் மனைவி தேவகி பேசத் தொடங்கினார். “அன்று 13ஆம் தேதி எனது கணவர் சாராயம் குடித்துவிட்டு வந்து படுத்திருந்தார். இரவு எனக்கு நெஞ்சு வலிக்கிறது, கை, கால்கள் உதறுகிறது என்று கூறினார். செய்வதறியாது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்து கோரிமேடு கொண்டு சென்றோம் .அங்கு வைத்தியம் பார்த்தார்கள். டாக்டர் என்னிடம் என்ன சாப்பிட்டார் என்று கேட்டார். அதற்கு நான் சாராயம் குடித்து விட்டு வந்தார் அவ்வளவுதான் என்று கூறினேன். தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டார். இது எனக்கு பெரிய அதிர்ச்சி,” என்று கண்ணீர் விட்டு அழுதார்.

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
 
படக்குறிப்பு,

தேவகி

“மீண்டும் எப்படி தலை தூக்கப் போகிறோம்?"

எக்கியார்குப்பம் கடலோரப் பகுதிக்கு சென்றபோது தன் சக நண்பர்களுடன் சோகமாக அமர்ந்திருந்த ரகு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

“மீன்பிடித் தொழிலை நம்பி நாங்கள் வாழ்கின்றோம்.இங்கு சாராயம் குடிப்பது புதிதல்ல. தொடர்ந்து குடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பொழுது எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அதிகாலை 3 மணிக்கு கடலுக்குச் சென்று 11 மணிக்குள் எங்கள் வேலைகள் அனைத்தையும் முடித்து விடுவோம். பிறகு ஐந்து மணிக்கு மேல் எங்களுக்கு வேலை ஏதுமில்லை பொழுதுபோக்கிற்காகவும் சிலர் இயற்கையாகவே தொடர்ந்து குடிக்கிறார்கள் அப்படித்தான் அன்று அனைவரும் குடித்துள்ளனர். ஆனால் இப்படி ஆகும் என்று எங்களுக்கு தெரியாது. ஊரே சுடுகாடாக மாறிவிட்டது. வயதானவர்கள் மட்டுமல்ல, இப்பொழுது இளைஞர்களுக்கும் இந்த பழக்கம் தொற்றிக் கொண்டது. இதிலிருந்து எப்படி மீள போகிறோம் என்று தெரியவில்லை,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்
 
படக்குறிப்பு,

ரகு

கள்ளச்சாரய விற்பனை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாய சங்க தலைவர் கஜேந்திரன் தெரிவித்தார்.

 

“தமிழ்நாடு முதலமைச்சர் கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுகளை தந்து நேரிலும் வந்து பார்வையிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது என்ற போதிலும் கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். போலீஸ்சார் நடவடிக்கை எடுத்தாலும் முழுமையாக அதிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியவில்லை,” என்று கூறினார். சாராய விற்பனை தொழிலில் இருந்து மீண்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்திட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கண்ணீர்க் கடலில் எக்கியார்குப்பம்

காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

கள்ளச்சாராய உயிரிழப்புகள் எதிரொலியாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு எஸ்.பி பிரதீப் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜுக்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இதே போன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

விஷச்சாராய விற்பனையைத் தடுக்க தவறிய விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் ஆய்வாளர்கள் இருவர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் இருவர் என 4 பேரும், செங்கல்பட்டில் காவல் ஆய்வாளர் ஒருவர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் இருவர் என 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு, சாராயத்தில் போதை கூட்ட மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட உள்ளேன். கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c0xd68ngd19o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளச்சாராய மரணங்கள்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய என்எச்ஆர்சி

கள்ளச்சாராய சாவு
14 மே 2023
புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பதிவாகி வரும் கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இந்த விவகாரத்தில், மாநில அரசு சட்டவிரோதமான வகையிலோ கள்ளத்தனமாகவோ சாராயம் விற்பனை மற்றும் அதன் நுகர்வுக்கு தடை விதிக்கத் தவறிவிட்டது என்று ஆணையம் நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

மே 12 முதல் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படும் பலர் உயிரிழந்ததாகவும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அதில், கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளச்சாராயத்தை முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் முதலில் சுரேஷ் என்பவர் வாந்தி மயக்கத்தோடு சுருண்டு விழ, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரியை அடுத்த காலப்பட்டில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து சங்கர் மற்றும் தரணிவேலுவும் சுருண்டு விழ அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊர் முழுவதும் சாராயம் அருந்தியவர்கள் ஆங்காங்கே மயங்கி விழ அவர்களும் ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்

நேற்று கள்ளச்சாராயம் குடித்ததில் 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி. வசந்தா, வள்ளியப்பன், சந்திரா ஆகியோர் மரக்காணம் பகுதியில் இருந்து வாங்கிச் சென்ற விஷ சாராயம் குடித்து உடல் நலம் பாதிப்பதால் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மரக்காணத்தில் போலீசார் குவிப்பு

இந்த நிலையில் எக்கியார்குப்பம் கிராம மக்கள் கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறையைக் கண்டித்து கிழக்குக் கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"சாராய வியாபாரி கைது"

கள்ளச்சாராய பலி சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளச்சாராய வியாபாரி எனக் கூறப்படும் அமரன் என்பவர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் பிடித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்படாத மொத்த சாராய வியாபாரி எனக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் - ஐஜி விளக்கம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் (14.5.2023) .

அப்போது, “விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தைக் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் தலைமறைவாக உள்ளனர், அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள், செங்கல்பட்டில் ஒரு ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையின் மது விலக்கு பிரிவின் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது,” என்றார் .

மேலும், தொடர்ந்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்

மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி, உடல்நலன் பாதிக்கப்பட்டு, மரக்காணம் அரசு மருத்துவமனையில் 10 நபர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், 5 நபர்கள் மரக்காணம் அரசு மருத்துவமனையிலும், 2 நபர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், 1 நபர் புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவமனையிலும், 1 நபர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் சி.பழனி நேற்று பார்வையிட்டார். அப்போது அவர், “பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேக சிறப்பு சிகிச்சை அறை ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 நபர்களை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிக்கை

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கள்ளச்சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எஞ்சிய குற்றவாளிகளைத் தேடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், சிகிச்சை பெற்று வருவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்

இதனிடையே ஜிப்மர் மற்றும் பிம்ஸ் மருத்துவமனையில் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேரின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி (14.5.2023), “தமிழகத்தில் கள்ளச்சாராயம், குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக முதல்வர் காவல்துறை மாநாட்டை நடத்தி, போதைப்பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவை உருவாக்கினார்.

அதனடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழகத்தில் போதைப்பொருள் தடுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் இதெல்லாம் புதிதாக நடைபெறுவது போலத் தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்கபட்டது. அதற்குத் துணைபோன அமைச்சர் மீது சிபிஐ விசாரணை நடத்தியது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். போதைப் பொருள் விற்பனையை கடந்த ஆட்சிக் காலத்தில் வளர்த்துவிட்டுச் சென்றனர்.

ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளார். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் வருத்தமளிக்கிறது,” என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/czkxgl7108eo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Marakkanam Spurious liquor Death: கள்ளசாராயத்தால் சுடுகாடான கிராமம்; உறவுகளை இழந்தவர்கள் பிபிசியிடம் பேசியது என்ன? விரிவான தகவல்கள்.

Tamil Nadu Spurious liquor Deaths: கள்ளசாராயத்தால் சுடுகாடான கிராமம்; உறவுகளை இழந்தவர்களின் நிலை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசின் டாஸ்மார்க்கை நோக்கி இழுக்க கள்ளச் சாரயத்தை கண்டும் காணாதும் விட்டிருப்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'PTEXCLUSIVE புதிய வைமுறை டழுக்குடன் murai.com விஷச் சாராயம் விற்றவருக்கே அறிவித்த அரசு! செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட விஷச் சாராயம் விற்றவருக்கே ரூ.50,000 நிவாரணம் அறிவித்த தமிழக அரசு! விஷச் சாராய மரண விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமாவாசை என்பவர், தானும் விஷச் சாராயம் அருந்தியதாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கும் நிவாரணம் அறிவித்துள்ளது அரசு ลกสnกา าอ- 1 எது கள்ளச்சாராயம் வித்தவனுக்கும் அத குடிச்சவனுக்கும் ஒரே நிவாரண நிதியா?'

கள்ளச் சாராயம் விற்றவருக்கும்... 50,000 ரூபா நிவாரண நிதி. கிடைத்துள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் அசமந்த போக்கு பல உயிர்களை பலியாக்கி உள்ளது.

மலிவு என்பதால் எதையும் குடிக்கலாம் என்போரை என்ன செய்வது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளச்சாராயம் Vs விஷ சாராயம்: மரக்காணத்தில் மனித உயிர்களை மெத்தனால் காவு வாங்கியது எப்படி?

கள்ளச்சாராயம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 17 மே 2023

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அடுத்தடுத்து பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளன. மெத்தனால் கலந்த சாராயம் எந்த அளவுக்கு அபாயகரமானது? மனித உடலுக்குள் மெத்தனால் கலந்ததும் என்ன நடக்கிறது? உயிர் போகும் அளவுக்கு அதில் அப்படி என்ன ஆபத்து? உயிருக்கு ஆபத்தான, தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய மெத்தனால் கள்ளச்சாராய வியாபாரிகளின் கைகளில் எப்படி சேர்கிறது?

தமிழ்நாட்டில் விஷ சாராய உயிரிழப்புகள் ஒன்றும் புதிதல்ல. குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் வீட்டிலேயே முடங்கியிருக்க நேரிட்ட போது, சிலர் போதைக்காக தின்னர் போன்ற பலவற்றையும் போதை வஸ்துகளாக பயன்படுத்திய செய்திகள் வந்திருக்கின்றன. போதைக்காக விபரீத வழிகளை முயற்சித்த சிலர் ஆங்காங்கே உயிரிழந்த செய்தியும் நம்மை எட்டியுள்ளது.

2019-ம் ஆண்டு கடலூரில் தொழிற்சாலையில் இருந்த மெத்தனாலை போதைக்காக குடித்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததே, ஒரே நிகழ்வில் அதிகம் பேர் உயிரிழந்த அண்மைக்கால பதிவாக இருக்கிறது. அதுபோன்ற தருணங்களில் எல்லாம், மெத்தனால் உயிரைப் பறிக்கக் கூடியது என்று அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் அதன் ஆபத்தை அனைவரும் உணரச் செய்ய பலவிதங்களிலும் முயற்சித்தே வந்துள்ளன.

ஆனாலும், அதையெல்லாம் மீறி குஜராத், பிகார் ஆகிய மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் விஷ சாராயம் 20-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துள்ளது. கள்ளச்சாராயம் ஆபத்தானது என்று தெரிந்திருந்தும் கூட சிலர் அதனை நாடுவது ஏன்? மெத்தனால் எந்த வகையில் உயிரைப் பறிக்கிறது? அது நுழைந்ததும் மனித உடலுக்குள் என்ன நடக்கும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் முன்வைத்தோம்.

 
மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள்
 
படக்குறிப்பு,

தேவகி, விஷ சாராயத்திற்கு கணவரை பறி கொடுத்தவர்

மெத்தனால் உயிரைப் பறிப்பது எப்படி?

"கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம்.

அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.

அது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்." என்று அவர் கூறினார்.

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள்
 
படக்குறிப்பு,

மருத்துவர் ஜெயராமன்

மேலும் தொடர்ந்த மருத்துவர் ஜெயராமன், மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும். அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால்தான் இதனை சிலர் சாப்பிடுகின்றனர். அதிக நேரம் போதையில் மிதக்கச் செய்வதன் மூலம் இது தங்களை நேராக சொர்க்கத்திற்கே கூட்டிச் செல்லும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், நடப்பதோ வேறு," என்று விவரித்தார்.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மெத்தனாலை தனி மனிதர்களின் கைகளில் கிடைக்கவிடாமல் செய்ய ஏற்கனவே பல கடுமையான விதிகள் அமலில் உள்ளன. தொழிற்சாலை பயன்பாட்டிற்காக மட்டுமே மெத்தனால் பயனாகும் என்பதால், அதனை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க ஏற்கனவே பல அமைப்புகள் உள்ளன. தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய பல கட்டுப்பாடுகளும் விதிகளும் இருக்கவே செய்கின்றன. இவை அத்தனையையும் மீறி கள்ளச்சாராய வியாபாரிகளின் கைகளுக்கு மெத்தனால் கிடைப்பது எப்படி? என்ற கேள்விக்கு ஓய்வு பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி பதில் தந்தார்.

"பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் ஒவ்வொரு பகுதியிலும் எந்தெந்த தொழிற்சாலைகளில் மெத்தனால் கிடைக்கும் என்பதை கள்ளச்சாராய வியாபாரிகள் தெரிந்து வைத்துக் கொள்வார்கள். அதேபோல், கள்ளச்சாராய வியாபாரிகள் விவரத்தை தொழிற்சாலை உரிமையாளர்களும் அறிந்திருப்பார்கள். அவர்களிடம் மெத்தனாலை விற்பதன் மூலம் கூடுதல் பணம் கிடைக்கும் என்பதே காரணம். இந்த சட்டவிரோத கூட்டுதான், உயிரைப் பறிக்கும் மெத்தனால் கள்ளச்சாராயம் வழியாக மனித உடலுக்குள் நுழைய வழியமைக்கிறது.

மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்புகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெத்தனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால் அதனை விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. மெத்தனாலை வாங்க வேண்டுமென்றால் அதற்கான உரிமம் வைத்திருப்பது அவசியம். அது போக, வாங்கும் மெத்தனாலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு இருப்பு இருக்கிறது? என்பது போன்ற விவரங்களை தொழிற்சாலைகள் பதிவு செய்து பராமரிப்பது கட்டாயம். இத்தனை கட்டுப்பாடுகள், விதிமுறைகளை மீறியே பணம் சம்பாதிக்கும் ஆசையில் மெத்தனாலை கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் விற்பனை செய்கிறார்கள்" என்று அவர் விளக்கம் அளித்தார்.

மெத்தனால் விற்பனை - ஆலை உரிமையாளர் கைது

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கிலும் காவல்துறை நடவடிக்கை அதனை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது. விழுப்புரத்தைச் சேர்ந்த இளையநம்பி என்பவருக்குச் சொந்தமான சென்னை மதுரவாயலை அடுத்துள்ள வானகரத்தில் உள்ள ரசாயன ஆலையில் இருந்து 1,000 லிட்டர் மெத்தனால் சட்டவிரோதமாக கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மரக்காணம் ‌மற்றும் செங்கல்பட்டில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான விஷ சாராயத்தை தயாரிக்க இந்த மெத்தனாலே பயன்படுத்தப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆலை உரிமையாளர் இளையநம்பி மற்றும் அங்கு பணிபுரிந்த சதீஸ் (27), மணிமாறன் (27), கதிர் (27), உத்தமன் (31), ஆகிய 5 பேரை செங்கல்பட்டு காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அந்த நிறுவனத்தில் இருந்த சிறிதளவு மெத்தனால் வேதிபொருளை பறிமுதல் செய்து சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cmj75gdvvlzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய சாவுகள்: நடந்தது என்ன? யார் காரணம்? - பிபிசி கள ஆய்வு

தமிழ்நாடு கள்ளச்சாராயம் உயிர் பலி
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 19 மே 2023, 03:20 GMT
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

மே 13ஆம் தேதியன்று காலை 11 மணிவாக்கில், வெளியே போய்விட்டு வருவதாகச் சென்ற சுரேஷ், சில மணிநேரத்திற்குப் பிறகு குடித்துவிட்டு வீடு திரும்பினார். சுரேஷ், மரக்காணம் எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த ஒரு மீனவர்.

அவர் குடித்துவிட்டு வீடு திரும்பிய உடனே படுத்து உறங்கவும் தொடங்கினார். இது அவருடைய வழக்கம்தான் என்பதால் வீட்டினர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் தாங்க முடியாத வயிற்று வலியால் படுத்திருந்த அறை முழுக்க உருள ஆரம்பித்தார் சுரேஷ். வாந்தியும் எடுக்கத் தொடங்கினார்.

இரவில் சாப்பிடாமல் படுத்ததால், இப்படி ஆகியிருக்கலாம் என்று நினைத்த குடும்பத்தினர் அவருக்கு சாப்பாடு கொடுத்தனர். அவரால் அதைச் சாப்பிட முடியவில்லை.

சிறிது நேரத்தில் உடல் முழுக்க எரிவதாகக் கூறினார். இதையடுத்து வீட்டினர் அவரை குளிர்ந்த நீரில் குளிக்க வைத்தனர். அப்போதும் எரிச்சல் தீரவில்லை. பிறகு கண்கள் சிவக்க ஆரம்பித்து மூச்சுத் திணறலும் தொடங்கியது.

அப்போதுதான் குடும்பத்தினருக்கு பயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கே இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறப்பட்டதால் புதுச்சேரியில் இருந்த புதுச்சேரி இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சிற்கு கொண்டு செல்லும்படி கூறப்பட்டது.

ஆம்புலன்ஸ் உடனடியாகக் கிடைக்காததால் காரில் அவரை ஏற்றிச் சென்றனர். அங்கு சென்ற சில மணிநேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் எக்கியார்குப்பத்தில் உள்ள பல வீடுகளில் இதுபோல மரணம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. 51 வயதாகும் முனியம்மா கண் புரை நோய்க்காக அறுவை சிகிச்சை செய்துவிட்டு, சனிக்கிழமை காலையில்தான் வீடு திரும்பியிருந்தார்.

மருத்துவமனையில் இருந்து அவரும் அவருடைய மகளும் வீட்டிற்குள் நுழைந்தபோது முனியம்மாவின் கணவர் தரணிவேலு வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்தார்.

மாலையில் எழுந்த தரணிவேலு, யாரிடமோ பணம் வாங்கி வருவதாகக் கூறிப் புறப்பட்டவர், அப்படியே அமர்ந்துவிட்டார். உடல் முழுவதும் வலிப்பதாகத் துடிக்க ஆரம்பித்தார்.

பிறகு கண் சிவந்து, விழிகள் வெளியில் வருவதைப்போல ஆனது. "நான் சாகப்போறேன்... சாகப்போறேன்னு சொன்னாரு. அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தை. உடனே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். ஆனால், பலனில்லை" என்கிறார் முனியம்மா.

சங்கர் என்பவரும் இதேபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டு உயிரிழந்தார். சுரேஷ், தரணிவேலு, சங்கர் ஆகியோரின் குடும்பத்திற்குத் தங்கள் வீட்டு ஆண்கள் ஏன் திடீரென உயிரிழந்தனர் என்பது முதலில் புரியவில்லை.

ஆனால், ஊருக்குள் அடுத்தடுத்து இதேபோன்ற அறிகுறிகளோடு பலர் மருத்துவமனைக்கு செல்ல ஆரம்பித்ததும்தான் எல்லோருக்கும் விபரீதம் புரிய ஆரம்பித்தது. ஞாயிற்றுக்கிழமை விடிந்தபோது, பலர் உயிரிழந்திருந்தார்கள்.

தமிழ்நாடு கள்ளச்சாராயம் உயிர் பலி
 
படக்குறிப்பு,

மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மட்டும் 13 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளனர்.

விழித்துக்கொண்ட மாவட்ட நிர்வாகம், உடனடியாக வீடு வீடாகச் சோதனை நடத்தி யாரெல்லாம் முதல் நாள் சாராயம் குடித்திருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மருத்துவனையில் சேர்த்தது.

"மரணங்களை தடுத்திருக்க முடியும்"

தமிழ்நாட்டின் இருவேறு இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மரக்காணத்தில் மட்டும் 79 பேர் இந்தச் சாராயத்தைக் குடித்துள்ளனர். வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் இதுபோன்ற மரணங்கள் நேர்ந்தது எப்படி?

மொத்தம் 79 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருந்தபோதும் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமைக்குள் அந்தச் சிறு கிராமத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

அதேபோல், சனிக்கிழமையன்று செங்கல்பட்டில் உள்ள சித்தாமூருக்கு அருகில் இருக்கும் பெருக்கரணை, பேரம்பாக்கம் ஆகிய இரு கிராமங்களிலும் இதேபோன்ற சாராயத்தை அருந்தியவர்களில் 8 பேர் உயிரிழந்தனர்.

எக்கியார் குப்பத்தில் சாராயம் குடித்து இறந்துபோன ராஜவேலுவின் மைத்துனரான சக்திவேல், கொஞ்சம் சுதாரித்திருந்தால் இந்த மரணங்களைத் தடுத்திருக்க முடியும் என்கிறார்.

தமிழ்நாடு கள்ளச்சாராயம் உயிர் பலி
 
படக்குறிப்பு,

இந்த வீட்டில் வசித்த சுப்பராயன் வெள்ளிக்கிழமை சாராயம் குடித்து உயிரிழந்தபோதே, சுதாரித்திருந்தால் இத்தனை மரணங்கள் நடந்திருக்காது என்கிறார்கள் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்தவர்கள்

"வழக்கமாக சாராயம் விற்பவர்களிடம்தான் இவர்கள் வாங்கிக் குடித்துள்ளனர். இந்தச் சம்பவம் சனிக்கிழமையன்று நடந்தது. அதற்கு முன்பாக வெள்ளிக்கிழமையன்று இந்த ஊரைச் சேர்ந்த சுப்பராயன் என்ற ஊனமுற்றவர், இந்தச் சாராயத்தை வாங்கிக் குடித்திருக்கிறார்.

வெள்ளிக்கிழமையன்றே அவர் இறந்துவிட்டார். ஆனால், அவர் வயதானவர் என்பதால் இறந்திருக்கலாம் எனக் கருதிவிட்டோம். இல்லாவிட்டால் சனிக்கிழமை யாரும் போய் அந்தச் சாராயத்தை வாங்கிக் குடித்திருக்க மாட்டார்கள்" என்கிறார் சக்திவேல்.

ராஜவேல் குடும்பத்தில் மட்டும் மூன்று பேர் இந்தச் சாராயத்தைக் குடித்து உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்தக் கள்ளச்சாராய சாவுகள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மாநில அரசு உடனடியாக இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் செய்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சைபெற்று வருபவர்களைப் பார்வையிட்டார்.

சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட அனைவருமே மீனவர்கள் அல்லது விவசாய வேலை செய்பவர்கள். அனைவருமே வறுமையில் உழல்பவர்கள்.

இறந்துபோன பலரை நம்பித்தான், அவர்களது குடும்பமே நடந்து வந்திருக்கிறது. பலரது குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரது வீடு பாதி கட்டப்பட்ட நிலையில் நிற்கிறது. இப்படியாக பல கனவுகளையும் வாழ்க்கையையும் சிதைத்திருக்கிறது இந்தக் கள்ளச்சாராயம்.

 
Play video, "தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய சாவுகள்: நடந்தது என்ன?", கால அளவு 9,02
09:02p0fp4kk8.jpg
காணொளிக் குறிப்பு,

தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய சாவுகள்: நடந்தது என்ன?

கள்ளச்சாராய நெட்வொர்க்: காவல்துறை கண்டுகொள்ளவில்லையா!

இத்தனை பேரின் உயிரைப் பலிவாங்கிய சாராயத்தை விற்றது அமரன், முத்து ஆகிய இருவர்தான் என்கிறார்கள் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்தவர்கள். எக்கியார்குப்பத்திற்கு வழக்கமாக சாராயம் விற்கும் இவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுவிட்டனர்.

இந்த இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, எக்கியார்குப்பத்தை ஒட்டியுள்ள தோப்புப் பகுதியில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வந்தனர். அந்தப் பகுதி முழுக்க கள்ளச்சாராய பாக்கெட்கள் இறைந்துகிடக்கின்றன.

அரசு மதுபானக் கடையான டாஸ்மாக்கில் மதுவின் விலை அதிகம் என்பதால், இந்தப் பகுதியை ஒட்டிய பெரும்பாலான கிராமங்களில் வசிப்பவர்கள் கள்ளச்சாராயத்தையே நாடுகின்றனர். ஒரு பாக்கெட் சாராயம் 25 ரூபாய் முதல் 30 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டாண்டு காலமாகவே இந்த விற்பனை எந்தத் தடையுமின்றி நடந்து வருகிறது.

"என் வீட்டுக்காரரால் ஒரு நாளும் சாராயம் இல்லாமல் இருக்கமுடியாது. ஒரு உறை முப்பது ரூபாய் என்றால் 2 உறைக்கு 60 ரூபாய் தினமும் அவருக்குக் கொடுத்துவிட வேண்டும். கொடுக்கவில்லையென்றால் தூங்க மாட்டார். வேலை பார்க்க மாட்டார். இது வழக்கமான ஒன்றுதான்" என்கிறார் உயிரிழந்த தரணிவேலுவின் மனைவி முனியம்மாள்.

தமிழ்நாடு கள்ளச்சாராயம் உயிர் பலி
 
படக்குறிப்பு,

மெத்தனாலை சாராய வியாபாரிகளுக்கு விற்ற ஜெயசக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிட்டெடின் உரிமையாளர் இளையநம்பி

சாராயத்தில் கலக்க மெத்தனால் கிடைத்தது எப்படி?

ஒரே நாளில் ஒரே மாதிரி, இரு வேறு இடங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு இடையிலான தொடர்பு முதலில் யாருக்கும் புரியவில்லை. கள்ளச்சாராயம் விற்றவர்களைத் தேடும் நடவடிக்கையைத் துவங்கிய காவல்துறை, முதலில் எக்கியார் குப்பத்தில் சாராயம் விற்ற ஓதியூரைச் சேர்ந்த சாராய வியாபாரி அமரன் என்பவரைக் கைது செய்தது.

அமரனை விசாரித்ததில் அவர் முத்து என்பவரிடம் சாராயம் வாங்கியதாகவும் முத்து, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஏழுமலையிடம் சாராயம் வாங்கியதாகவும் தெரிவித்தார். இதற்குப் பிறகு, சித்தாமூரில் சாராய விற்பனையில் ஈடுபட்ட அம்மாவாசை என்பவரைக் கைது செய்து விசாரித்ததில் அவர் ஓதியூரைச் சேர்ந்த வேலு, சந்திரன் ஆகியோரிடம் சாராயம் வாங்கியதாகத் தெரிவித்தார்.

வேலுவை பிடித்து விசாரித்ததில் அவர் பனையூர் ராஜேஷ் என்பவரிடம் சாராயம் வாங்கியதாகத் தெரிவித்தார். பனையூர் ராஜேஷை பிடித்து விசாரித்தபோது, அவர் விளம்பூர் விஜி என்பவரிடம் வாங்கியதாகத் தெரிவித்தார். விளம்பூர் விஜியை விசாரித்தபோது, அவர் பாண்டிச்சேரி ஏழுமலையிடம் வாங்கியதாகத் தெரிவித்தார்.

ஆகவே, செங்கல்பட்டு, மரக்காணம் ஆகிய இரு இடங்களிலும் விஷச் சாராயத்தை சப்ளை செய்தது பாண்டிச்சேரி ஏழுமலை என்பவர்தான் எனத் தெரிய வந்தது. இப்போது இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்குப் பிறகு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 1,192 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. அந்தச் சாராயத்தைச் சோதனைக்கு அனுப்பியபோது, அதில் ரசாயன வண்ணங்களில் பயன்படுத்தப்படும் தின்னர் தயாரிக்க உதவும் மெத்தனால் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விளம்பூர் விஜியும் ஏழுமலையும் விசாரிக்கப்பட்டதில், இவர்கள் இந்தச் சாராயத்தில் கலப்பதற்கான மெத்தனாலை சென்னை வானகரத்திலிருந்து செயல்பட்ட ஜெயசக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கியது தெரியவந்தது.

தமிழ்நாடு கள்ளச்சாராயம் உயிர் பலி
 
படக்குறிப்பு,

எக்கியார்குப்பத்தை ஒட்டியுள்ள தோப்புப் பகுதியில் இப்போதும் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் சிதறிக்கிடக்கின்றன

இந்த ஜெயசக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிட்டட் என்ற ஆலையை 2018ஆம் ஆண்டு இளைய நம்பி என்பவர் வாங்கியுள்ளார். இரண்டு ஆண்டுகளிலேயே கொரோனாவால் பொது முடக்கம் ஏற்பட்டதால் பெரும் இழப்பைச் சந்தித்த அவர் தொழிற்சாலையையே மூடிவிட்டார்.

அப்போது அவர் வசம் இருந்த 1,200 லிட்டர் மெத்தனாலை பாண்டிச்சேரி ஏழுமலைக்கும் ராஜா என்ற பரக்கத்துல்லாவுக்கும் 66,000 ரூபாய்க்கு விற்றார்.

இந்த மெத்தனால் கலந்த சாராயம் தயாரிக்கப்பட்ட பிறகு, அதை சித்தாமூருக்கும் மரக்காணத்திற்கும் கொண்டு செல்வதில் விளம்பூர் விஜி ஈடுபட்டதாகக் காவல்துறை கண்டறிந்திருக்கிறது.

இதையடுத்து ஜெயசக்தி நிறுவனத்தின் உரிமையாளர் இளைய நம்பி, விளம்பூர் விஜி, ஏழுமலை உள்ளிட்ட 13 பேர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வழக்கை மத்திய குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது.

பிபிசியிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி. பழனி, "பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுவிட்டனர். புதிதாக கேஸ் வருவது இல்லை. முதல் இரண்டு நாட்கள் கிராமங்களுக்கு நாங்களே போய் வீடு வீடாகச் சோதித்து சாராயம் குடித்தவர்கள் அனைவரையும் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டோம்.

சாராயம் குடித்திருந்த 79 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுவிட்டனர். இவர்களில் 13 பேர் விழுப்புரத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இவர்களில் ஒன்றிரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மற்றவர்கள் சாதாரணமாகவே உள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒன்றிரண்டு நாட்களில் வீடு திரும்பிவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு கள்ளச்சாராயம் உயிர் பலி
 
படக்குறிப்பு,

எக்கியார் குப்பத்தில் உயிரிழந்த அனைவருமே, மிகுந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

இந்தச் சம்பவத்தை அடுத்து மரக்காணம் காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவு, மேல் மருவத்தூர், மதுராந்தகம் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்குப் பிறகு தமிழக காவல்துறை மேற்கொண்ட சோதனைகளில் 1842 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 1,500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 19,000 லிட்டர் விஷச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் மட்டுமே இந்த கள்ளச்சாராய பிரச்னைக்குத் தீர்வாக இருக்காது என்பது அந்தப் பகுதிகளுக்குச் செல்லும் யாருக்கும் புரியும்.

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வீட்டில் இருக்கும்போதே, அதற்கு சில வீடுகள் தள்ளி சிலர் அமர்ந்து மது அருந்தும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது.

கள்ளச்சாராயம் அருந்தி, தற்போது சிகிச்சை பெற்றுவரும் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த மணிமாறனிடம் பேசியபோது, "குடிக்காமல் இருக்க முடியாது. டாஸ்மாக்கில் வாங்கும் அளவுக்கு வசதியும் கிடையாது. அதனால் இங்கு வாங்கிக் குடிக்கிறோம்" என்றார்.

ஒருபுறம், இந்த விவகாரத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகளை மூடச் சொல்வதற்கான கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன.

மற்றொரு புறம், அரசின் மதுபானக் கடைகளுக்கு வெளியில் மிகப் பெரிய அளவில் சாராய விற்பனையும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சிக்கலான பிரச்னையை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தமாக 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவற்றில் உள்ள மெத்தனாலை சரிபார்க்கும் பணியை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

பெரும்பாலான கள்ளச்சாராய சாவுகளுக்கு, அவற்றில் மெத்தனால் கலக்கப்படுவதே காரணமாக இருப்பதால் கடந்த 2002ஆம் ஆண்டு மெத்தனாலின் பயன்பாடு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் (1937)ன் கீழ் கொண்டு வரப்பட்டது. மெத்தனால் விநியோகத்தைக் கட்டுப்படுத்த, 1959ஆம் ஆண்டின் தமிழ்நாடு டீ நேச்சர்ட் ஸ்பிரிட், மெத்தில் ஆல்கஹால் மற்றும் வார்னிஷ் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இருந்தபோதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு இந்த அபாயகரமான வேதிப்பொருள் ஏதோ வழியில் தொடர்ந்து கிடைத்து வருவதும் அது பல குடும்பங்களைச் சிதைப்பதும் சமீபத்திய சம்பவத்தின் மூலம் வெட்ட வெளிச்சாமாகியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/crgxp43lkp4o

  • கருத்துக்கள உறவுகள்

 

348816227_202850695976651_39087372082528

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.