Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுமாறன் ஐயாவின் உண்ணாநிலைப் போராட்டம்.

Featured Replies

உண்ணாநிலை போராட்டம் கைவிடப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி. எந்த வித சுயலாபமும் பாராமல் உலகத் தமிழருக்குக் குரல் கொடுத்துவரும் ஐயா அவர்களுக்கு துன்பப்படும் ஈழத்தமிழர் சாhபாக எம் நன்றிகள். தொடர்ந்து எம் விடுதலைக்காக எம் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்து வரும் ஐயா நீண்ட காலம் வாழ வேண்டும்.

ஜானா

  • Replies 53
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஈழத் தமிழர்களுக்கான மனிதாபிமான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செய்திட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழரை எழுச்சிபெறவைத்த பட்டினிப் போராட்டம்!

உலகத்தமிழர்களிடமிருந்து வந்து குவிந்த கடிதங்களில் சில...

"தமிழீழத்தின் சே"

ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து போராடிவரும் உங்கள் மீது நாங்கள் பெரும் மதிப்பு வைத்திருக்கின்றோம். ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்காக எப்போதும் குரல் கொடுத்துவரும் நீங்கள், அந்த மக்களுக்காக நீண்ட சிறைத் தண்டனைகளைக் கூட அனுபவித் திருக்கின்றீர்கள். வேதனைகளையும் சோதனைகளையும் சுமந்திருக்கின்றிர்கள். உங்கள் துணிவையும், போராட்ட உறுதியையும் கண்டு நாங்கள் மெய்சிலிர்த்திருக்கின்றோம

  • கருத்துக்கள உறவுகள்

தென் செய்தியில் 'உலகத் தமிழரிமிருந்து வந்த கவிதைகள்' என்ற தலைப்பில் வெளிவந்த கவிதைகளில் யாழில் வந்த யாழ்கள உறுப்பினரான வன்னி மைந்தனின் கவிதையும் இடம் பெற்றுள்ளது. யாழில் வந்த கவிதையினைப் பார்க்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=28313

உலகத் தமிழரிமிருந்து வந்த கவிதைகள்

நெடும் பயணம் வென்றான்

யாழ்நகர் சாலை அடைத்து

பாழ்நிலை தமிருக்கு அமைத்து

கீழ்மனம் கொண்ட சிங்களர்

தாழ் குணம் கொண்டு சிரிக்கும்

ஆழ்பகை இந்தியன் எதிர்த்து

ஆழ்கடல் அலையாய் எழடா

படைக்கருவி பலதைக் கொடுத்து

பகைவன் கையினை தொடுத்து

பரம்பரை தமிழனை விடுத்து

பாதகம் செய்திடும் பார்ப்பன

பாவியை வெட்டடா வெறுத்து

புவியை மாற்றாடா வெறுத்து

நெடுந்துயர் துடைக்க எழுந்து

கொடும்படை துடைக்க சினந்து

நெடும்பயணம் கொண்டான் நிமிர்ந்து

தொடும்வான் அளவிற்கு உயர்ந்து

பீடுநடை போட்டான் மலர்ந்து

பாடும்படி நின்றான் சிறந்து

செந்தமிழ் மக்களைத் தேடி

சேர்த்தப் பொருட்கள் கோடி

சேர்க்க இயலாது வாடி

சேதாரம் ஆகுதே போடி

சோதனை யாவும் கூடி

சொந்தம் போகுதே கண்மூடி

உண்ணா நிலையை எடுத்து

உண்மைப் பொருளை உரைத்து

உரிமைப் போரினை தொடுத்து

உலகிற்கு செய்தியை விடுத்து

உயர்ந்து நின்றான் படுத்து

உத்தமர் நிலையாய் உயர்ந்தே

காக்கும் பொருட்கள் யாவும்

கடல்நீர் தாண்டி செல்லணும்

கருகும் தமிழனைக் காத்திட

கயவர்ச் செயலை வெல்லணும்

துயரம் யாவும் களைந்திட

துஞ்சா(து) என்றும் விழிக்கணும்.

-பரணிப் பாவலன்

கெளரிவாக்கம்

இது பொறுப்பதில்லை

போர்க்களத்தில் பகைவரோடு மோதி மோதிப்

போர் மறவர் பிணம் விழட்டும்; தின்போம் என்றே

காத்திருக்கும் நரி, கழுகு, நாய்கள் என்னும்

காடசியுண்டே இலக்கியத்தில், அதையும் விஞ்சும்

யாழ்த்தமிழர் பட்டினியால் விழட்டும் என்றே

இங்குள்ள பார்ப்புநரி, தில்லி ஓநாய்

கீழ்த்தனத்தால் இனம் விற்றுத் தான்பிழைக்கும்

கேடுகெட்ட தமிழ்த் தலைவன் இவர்கள் செய்கை!

உடன்பிறப்பாம் எம்தமிழர் திரட்டித் தந்த

உண்பொருள்கள் ஈழத்துக்கு எடுத்துச் செல்லத்

தடைசெய்தார் பிணந்தின்னும் கழுகு, நாய்கள்

தரை முழுதும தேடிடினும் இவர்போல், சீச்சீ

கொடுங்கயவர் வேறெங்கும் காண்பதுண்டோ?

கோடாரிக் காம்பென்றாலும் பொறுப்போம். ஆனால்

குடல்துடிக்கும் குழந்தைகள் பால் உண்பதற்கும்

குறுக்குநின்று தடுப்பவரைப் பொறுப்பதுண்டோ?

- பேரா. இலெனின் தங்கப்பா, புதுச்சேரி

வெற்றிக்கு வாழ்த்து!

ஆயிரம் ஆயிரம் பகைதிரண்டு

ஆயுதம் கோடி குவித்தாலும்

உலகத் தமிழினம் தலைநிமிரும், நிச்சயம்

உலக சபையிலே தமிழ் ஒலிக்கும்.

ஈழத் தமிழர் பசித்துயர் போக்க

தாயகத் தமிழர் துணை நிற்பார்...!

இன உணர்வுத் தமிழர் படையணியே

இருப்பார் ஐயா நம்பக்கத் துணையாய்...!

உங்கள் உறுதி உண்ணா நோன்பு

உறுத்தும் ஆழ்வோர் உள்ள மதை...!

வேங்கைத் தலைவன் கொள்கை சுமக்கும்

வீரத்தலைவர் எங்கள் நெடுமாறன் ஐயா...!

உடல் நலத்தோடு உறுதியாய் இருக்க

திருச்செந்தூர் முருகன் துணை இருப்பான்

வெற்றி நிச்சயம், வெற்றி நிச்சயம், வெல்வோம் ஈழதேசம்

உண்ணா நோன்பு வெற்றிபெறுவது

உறுதி...! உறுதி...!

-வேலணையூர் பொன்னண்ணா,

டென்மார்க்.

எங்கள் குலத்து இன்னமுதை வணங்குவேன்

இனநலம்புரக்கும் இனிய பணியில்

மனநலங் காட்டி நோற்ற உடலே

உடலெனக் கூறுவன் ஊறுபாடில்லை

உடலால் என்பயன்? வாடுக அவர்கள்!

நலிந்த உடலால் நற்புக ழடைந்தனை!

மெலிவினாக் குறிக்கோள் ஈழச் கைகூர்

எய்திய எண்ணம் விரைவில் நிறைவுற

உய்தி காட்டி நும்செயல் நன்று!

அரசை உசுப்பி விட்ட பாடல்

பரசும் பள்ளி எழுச்சியே போன்றது!

பரவிய உண்ணா நோண்பின் செயல்!

மாடக கூடல் மருவிய மாறா!

ஆடக மதுரை அரசின் துணையைத்

தமது வழியே சேமித் துள்ளனை!

சேமித் துள்ள குழுவின் திருவளர்

ஆக்கம் அதர்வினாய் நம்மிடம் முன்செல்

ஊக்கம் மிக்க நம்வழி வெல்லும்!

ஏக்கம் எனக்கும் நம்மோடு

நீக்க மிலா மறைந்து வழியிலை வணங்குவேன்

- தா. குருசாமி தேசிகர், மதுரை. நீ வேண்டும்...

கடலேறி பொருள்கொண்டு

கரையேற சென்றாய்... புரியாத

கரியாரால் கைதாகி நின்றாய்

உடலினுள் நோய்வந்து

வாட்டையில் கூட

துவளாது அவையேறி

நோன்பது இருந்தாய்...

பகை வந்து தமிழ் உயிரை

பலியது கொள்ள

பார்த்தே தான் நின்றது

பாரத தேசம்...

சதியோடு விளையாடி

சதியாணை புரிந்தார்

அரியணை காத்திட

அவரைதான் தடுத்தார்...

எதிரென்ன வரிகினும்

எழுந்தேதான் நடந்தார்

ஆவிதான் துறக்கினும்

அவைகாக்க துணிந்தார்...

இவரது ஆற்றலை

இதயமா மறக்கும்...?

தமிழீழ தேசமே

தலையிலே தூக்கும்

அண்ணனே உனக்காக

அணியாக திரள்வோம்

தூங்காது உன்னரு

தூணாகி நிற்போம்...

கலங்காதே அண்ணனே

கண்ணீர் துடை

உண்ணாமல் நீ வேண்டாம்

உடல்தேறி நீ வேண்டும்...

- வன்னி மைந்தன்

இலங்கையில் வாடும் தமிழர்களின் இன்னர் தீர்க்க - மருந்தும் உணவும் கொண்டு செல்லும் - சான்றோர்களுக்கு வரவேற்பு

இலங்கைத் தமிழர்கள் இன்னல்

களைந்திட இங்குள தமிழன்

இணைந்தான் ஒன்றாய், அந்தோ!

இழைத்திடும் கொடுமைகள் எத்தனை?

நனைந்தன கண்கள் நாளும்

நமக்கே, எரியுது ஈழம்

மனைவியை மக்களைப் இழந்தனர்

மறப்போர் களத்தினில் மாய்ந்தனர்

அய்யா அன்று காடுசென்றார்

கன்னட நடிகன் உயிர்ப்பிழைத்தான்

அய்யா இன்று கடல் சென்றால்

ஆருயிர்த் தமிழர் பிழைத்திடுவர்.

பொய்யால் சிலபேர் தமிழ்நலத்தைப்

பேசிப் பேசி இருந்திடுவார்

மெய்யாய் இவரே புறப்பட்டார்

மேலாய்ப் பணியை செய்திட்டார்...

பெம என்னும் பகுத்தறி வாளர்

பிளிறு கின்றார் கண்ணோட்டத்தில்

ஆமா சாமி போடாமல்

அதிர வைத்தார் கட்டுரையால்

கோமா கொண்ட தமிழனுக்கு

கொடுத்தார் நாளும் வைத்தியத்தை

தாமே எழுந்து புறப்பட்டு

தமிழனை விழிக்கச் செய்கின்றார்

ஈழம் விடுதலை காணட்டும்

இயக்கம் வெற்றியை முழங்கட்டும்!

பாழும் சிங்கள நரிக்கூட்டம்

பஞ்சாய் பஞ்சாய்ப் பறக்கட்டும்

சூழும் பகைதான் ஒழியட்டும்

சுடரொளி எங்கும் வீசட்டும்!

ஈழப் பயணம் வெல்லட்டும்

இலங்கைத் தமிழர்கள் வாழட்டும்.

-கவிஞர். பூவைசாரதி,

உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.