Jump to content

எடித்தாரா மீதான முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

எழுத்துருவாக்கம்..சு.குணா

 

1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத்தொடங்கியிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

அதேசமயம் மேலதிக பகுதிகளைக் கைப்பற்றமுனைந்த இராணுவத்தினரின் முயற்சிகளுக்கெதிராக முறியடிப்புச்சமர்களையும் நடாத்திக்கொண்டிருந்தனர்.அத்துடன் கடற்புறா அணியினர் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் பலவற்றைத் தாய்த் தமிழகத்திலிருந்து கடல்வழிமூலம் தமிழீழத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருந்தனர்.அதுமட்டுமல்லாது பெருங்காயமடைந்தவர்களை இங்கிருந்து தமிழகத்திற்கு அனுப்பிச் சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%

இது இவ்வாறிருக்க ,இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தவுடன் கடல்வலயத்தடைச் சட்டம் போடப்பட்டதாலும் கடற்படையின் பாரியகட்டளைக் கப்பலான எடித்தாராவை வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் கடற்படையினர் கொண்டுவந்து நிறுத்தியதாலும் இக்கடல்வழி விநியோகத்திற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.இவ்விடயங்கள் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது .இதனைக் கருத்திலெடுத்த தலைவர் அவர்கள் அக்கப்பலை வேகமாக அப்புறப்படுத்தி விநியோக நடவடிக்கையைத் தொடரவேண்டித் தானே நேரடியாகச் செயலில் இறங்கினார்.

தலைவர் அவர்களின் தெலைநோக்குச் சிந்தனைக்கமைவாகத் அவரது பாதுகாப்புப் பிரிவிலிருந்து கடற்புறா அணிக்குக் காந்தரூபன் அவர்களை அனுப்பினார்.ஏற்கனவே, பெரிதாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று சகபோரளிகளுக்குச் சொல்லிக்கொண்டும் அதற்கான நடவடிக்கைகளில்ஈடுபட்டுக் கொண்டுமிருந்தவன்தான் காந்தரூபன்.தலைவர் அவர்களுடன் மணலாற்றுக் காட்டில் நின்ற சமயம் தனது ஆரம்பகால நினைவுகளைக் கூறித் தலைவர் அவர்களிடம் அனுமதிபெற்றுத் தன்னை கரும்புலிகளணியில் இணைத்திருந்தான் காந்தருபன்.

%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%

கொலின்ஸும் மணலாற்றுக் காட்டில் தலைவர் அவர்களின் பாதுகாப்பணியில் இருந்து செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் தலைவர் அவர்களிடம் நேரடியாக கேட்டுத் தன்னை கரும்புலிகளணியில் இணைத்துக்கொண்டிருந்தான்.இவர்களுடன் வடமராட்சி அணியிலிருந்து ஏற்கனவே கரும்புலிகளிணியில் தன்னை இணைத்திருந்த வினோத்தும் எடித்தாராவைத் தாக்கியழிப்பதற்கான கடும்பயிற்சிகளை மேற்கொண்டனர். தாக்குதலுக்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது .

அத்திட்டத்தின் அடிப்படையில் 10.07.1990 அன்று தளபதி லெப்.கேணல் டேவிற் ( வீரச்சாவு 09.06.1991) தளபதி லெப் கேணல் அருச்சுனா (வீரச்சாவு 16.12.1997), கப்டன் தினேஸ் ( வீரச்சாவு 12.08.1991) ஆகியோர் தலைமையிலான படகுகள் எடித்தாரக் கட்டளைக்கப்பலுக்குப் பாதுகாப்பாக நின்ற கடற்படைக் கலங்கள்மீது தாக்குதலைத் தொடுத்து திசைதிருப்பக் கடற்கரும்புலிகளான மேஜர்.காந்தரூபன், கப்டன் கொலின்ஸ்,கப்டன் வினோத் மூவரும் இணைந்து வெடிமருந்தேற்றியபடகால் எடித்தாராக் கட்டளைக்கப்பல்மீது மோதி வெடித்துத் தம்மை ஆகுதியாக்கிக்கொண்டனர். கப்பல் பாரிய சேதத்திற்குள்ளானது.

முதலாவதாக நிகழ்த்தப்பெற்ற இவ்வெற்றிகரக்கடற்கரும்புலித்தாக்குதலைத் தளபதி டேவிற் அவர்கள் கடலில் வழிநடாத்த தலைவர் அவர்கள் வல்வெட்டித்துறைக் கடற்புறாத் தளத்திலிருந்து நெறிப்படுத்திக் கட்டளைகளை வழங்கத், தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் தளபதி லெப் கேணல்.சாள்ஸ் வீரச்சாவு (11.06.1993) அவர்களும் தலைவர் அவர்கள் அருகிலிருந்து அக்கட்டளைகளுக்குச் செயல்வடிவம் தந்தனர்.

இந்நடவடிக்கைக்கான மேலதிக வேலைத்திட்டங்களை கப்டன் மோகன் மேத்திரி (வீரச்சாவு 02.09.1990) அவர்கள் தலைமையிலான அணி செவ்வனவே செய்துகொடுத்திருந்தது.

லெப். கேணல் டேவிட், அருச்சுனா உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் | EelamView
%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0
%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0

அவ்வேளை தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்கு ஒரு தகவலைத் தெளிவாகக்கூறினார். அதாவது “கடற்கரும்புலிகளின் தாக்குதலிற் சேதமான கடற்கலங்கள் மீண்டும் கடலில் செல்லக்கூடாது” என்பதே அது. அதற்கேற்ப 16.07.1995 அன்று கடற்கரும்புலிகளான மேஜர் தங்கன்,மேஜர் நியூட்டன், கப்டன் தமிழினி ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகத்திற்குள் ஊடுருவி எடித்தாராக்கப்பலை மூழ்கடித்துத் தலைவர் அவர்களின் சொல்லுக்குச் செயல்வடிவம் தந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to எடித்தாரா மீதான முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.