Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ரூட் குவித்த சதத்தின் உதவியுடன் முதலாவது ஆஷஸ் டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து

17 JUN, 2023 | 06:23 AM
image
 

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமான 1ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறிய இங்கிலாந்து, ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன் வலுவான நிலையை அடைந்தது.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 3ஆவது அத்தியாயத்தின் அங்குரார்ப்பண போட்டியாகவும் அமைந்த இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 8 விக்கெட்களை இழந்து 393 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

நொட்டிங்ஹாமில் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கிதாரி ஒருவரால் 2 மாணவர்களும் அவர்களது பராமரிப்பாளரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடினர்.

முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. இடைவேளைக்கு முன்னர் 3 விக்கெட்களையும் இடைவேளைக்குப் பின்னர் 2 விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

பென் டக்கெட் (12), ஒலி போப் (31), ஸக் க்ரோவ்லி (61), ஹெரி புறூக் (32), அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் (1) ஆகியோரே ஆட்டமிழந்த ஐவராவர்.

இதனிடையே ஸ்க் க்ரோவ்லியும் ஒலி போப்பும் 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை ஓரளவு சீர் செய்தனர்.

தொடர்ந்து ஜோ ரூட், ஹெரி புறூக் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எனினும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் 2 விக்கெட்கள் சரிந்ததால் இங்கிலாந்து மீண்டும் தடுமாற்றத்துக்குள்ளானது.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த ஜோ ரூட், ஜொனி பெயாஸ்டோவ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 121 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை பலமான நிலையில் இட்டனர்.

ஜொனி பெயார்ஸ்டோவ் 78 பந்துகளில் 12 பவுண்டறிகளுடன் 78 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 152 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 118 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஓய்விலிருந்து திரும்பிவந்த மொயீன் அலி 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஒலி ரொபின்சன் 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி 3 பிடிகளை எடுத்ததுடன் 2 ஸ்டம்ப்களையும் செய்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

பந்துவீச்சில் நெதன் லயன் 149 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

டேவிட் வோர்னர் 8 ஓட்டங்களுடனும் உஸ்மான் கவாஜா 4 ஓடடங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

1606_joe_root_celebrates_century.jpg

1606_joe_root_eng_vs_aus_1st_ashes_test.

1606_nathen_lyon_aus_vs_eng_1st_ashes_te

https://www.virakesari.lk/article/157884

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கவாஜா அபார சதம் : ஸ்திரமான நிலையில் அவுஸ்திரேலியா

18 JUN, 2023 | 06:42 AM
image
 

(நெவில் அன்தனி)

பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து குவித்த 393 ஓட்டங்களுக்கு பதிலலித்து துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா, உஸ்மான் கவாஜா குவித்த 15ஆவது டெஸ்ட் சதத்தின் உதவியுடன் ஸ்திரமான நிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (17) ஆட்ட நேர முடிவின்போது அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 311 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மீதம் இருக்க இங்கிலாந்தைவிட 82 ஓட்டங்கள் பின்னிலையில் அவுஸ்திரேலியா இருக்கிறது.

இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸை 8 விக்கெட்களை இழந்து 393 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களில் இருந்து தனது முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் காலை தொடர்ந்த அவுஸ்திரேலியா, மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் வோர்னர் (9), மார்னுஸ் லபுஸ்சான் (0) ஆகிய இருவரையும் கிறிஸ் ப்ரோடின் அடுத்தடுத்த பந்துகளில் அவுஸ்திரேலியா இழந்தது. (29 - 2 விக்.)

ஸ்டுவர்ட்  ப்றோடின் ஹெட்-ட்ரிக்கை ஸ்டீவன் ஸ்மித் தடுத்த போதிலும் அவர் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (67 - 3 விக்.)

ஆனால், ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜா, மத்திய வரிசை வீரர்களான ட்ரவிஸ் ஹெட், கெமரன் க்றீன், அலெக் கேரி ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவை ஸ்திரமான நிலையில் இட்டனர்.

இப் போட்டியில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய உஸ்மான் கவாஜா அபார சதம் குவித்து அணியைப் பலப்படுத்தினார்.

274 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் கவாஜா 14 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 126 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்ததுடன் மூன்று முக்கிய இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்திருந்தார்.

ட்ரெவிஸ் ஹெட்டுடன் 4ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களையும் கெமரன் க்றீனுடன் 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரியுடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா பகிர்ந்தார்.

உஸ்மான் கவாஜா 112 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஸ்டுவர்ட் ப்றோடின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். ஆனால் ப்றோட் வீசிய பந்து நோபோல் என கள மத்தியஸ்தர் அறிவித்ததால் உஸ்மான் கவஜா தொடர்ந்து துடுப்பெடுத்தாடி ஆட்ட நேர முடிவில் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ட்ரவிஸ் ஹெட் 50 ஓட்டங்களையும் கெமரன் க்றீன் 38 ஓட்டங்களையும் பெற்றார். அலெக்ஸ் கேரி 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டுவர்ட்  ப்றோட்    49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொயீன் அலி 124 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (18) தொடரும்.

 

1706_alex_carey_aus_vs_eng_1st_ashes_tes

1706_usman_khawaja_aus_vs_eng_1st_ashes_

1706_travis_head_aus_vs_eng_ashes_1st_te

https://www.virakesari.lk/article/157942

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஷஸ் டெஸ்ட் தொடர் : 2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தடுமாற்றம்

19 JUN, 2023 | 07:21 AM
image
 

(நெவில் அன்தனி)

பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் அவுஸ்திரேலியாவைவிட 7 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து, 2ஆவது இன்னிங்ஸில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

அவுஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 386 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்த இங்கிலாந்து, 3ஆம் நாள் ஆட்டம் மழையினால் வேளையோடு முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்களை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க இங்கிலாந்து 35 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

ஸக் க்ரோவ்லி (7), பென் டக்கெட் (19) ஆகிய இருவரே ஆட்டம் இழந்த வீரர்களாவர்.

மதிய போசன இடைவேளைக்குப் பின்னர் 10.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கடும் மழை பெய்ததால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து மழை பெய்ததால் 3ஆம் நாள் ஆட்டம் வேளையோடு முடிவுக்கு வந்தது.

போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் என்ற நல்ல நிலையிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா, சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

அலெக்ஸ் கேரியும அணித் தலைவர் பெட் கமின்ஸும் 6ஆவது விக்கெட்டில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கேரி 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அந்த விக்கெட்டுடன் கடைசி 5 விக்கெட்கள் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

பெட் கமின்ஸ் 38 ஓட்டங்களைப் பெற்றார்.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: 393 - 8 விக். டிக்ளயார்ட் (ஜோ ரூட் 118 ஆ.இ., ஜொனி பெயாஸ்டோவ் 78, ஸக் க்ரோவ்லி 61, நெதன் லயன் 149 - 4 விக், ஜொஷ் ஹேஸ்ல்வூட் 61 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 386 (உஸ்மான் கவாஜா 141, அலெக்ஸ் கேரி 66, ட்ரவிஸ் ஹெட் 50, கெமரன் க்றீன் 38, பெட் கமின்ஸ் 38, ஒல்லி ரொபின்சன் 55 - 3 விக்., ஸ்டுவர்ட் ப்றோட் 68 - 3 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 28 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/158009

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெற்றி இலக்கு 281 ஓட்டங்கள் ; 2 ஆவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 103 - 3 விக்.

20 JUN, 2023 | 05:59 AM
image
 

(நெவில் அன்தனி)

பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஏஷஸ் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர்களின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 281 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதமிருக்கு அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு மேலும் 174 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை (20) இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.

ஆரம்ப வீரர்களான டேவிட் வோர்னரும் உஸ்மான் கவாஜாவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், டேவிட் வோர்னர், மார்னுஸ் லபுஸ்சான், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய மூவரும் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலியா தடுமாற்றத்திற்குள்ளானது.

எவ்வாறாயினும், உஸ்மான் கவாஜாவும் இராக்காப்பாளன் ஸ்கொட் போலண்ட்டும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மேலும் விக்கெட்கள் சரிவதைத் தடுத்து 4ஆம் நாள் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

போட்டியின் 4ஆம் நாளான திங்கட்கிழமை (19) காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து, மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் 273 ஓட்டங்களைப் பெற்றது.

ஜோ ரூட், ஹெரி ப்றூக், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ரொபின்சன் ஆகிய நால்வர் 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: 393 - 8 விக். டிக்ளயார்ட் (ஜோ ரூட் 118 ஆ.இ., ஜொனி பெயாஸ்டோவ் 78, ஸக் க்ரோவ்லி 61, நெதன் லயன் 149 - 4 விக், ஜொஷ் ஹேஸ்ல்வூட் 61 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 386 (உஸ்மான் கவாஜா 141, அலெக்ஸ் கேரி 66, ட்ரவிஸ் ஹெட் 50, கெமரன் க்றீன் 38, பெட் கமின்ஸ் 38, ஒல்லி ரொபின்சன் 55 - 3 விக்., ஸ்டுவர்ட் ப்றோட் 68 - 3 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: 273 (ஜோ ரூட் 46, ஹெரி ப்றூக 46, பென் ஸ்டோக்ஸ் 43, ஒல்லி ரொபின்சன் 27, பெட் கமின்ஸ் 63 - 4 விக்., நெதன் லயன் 80 - 4 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 281 ஓட்டங்கள்) 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 103 - 3 விக். (டேவிட் வோர்னர் 36, உஸ்மான் கவாஜா 34 ஆ.இ., ஸ்டுவர்ட் ப்றோட் 28 - 2 விக்.)

1906_joe_root_eng_vs_aus.jpg

https://www.virakesari.lk/article/158107

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்துடனான ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு பரபரப்பான வெற்றி

21 JUN, 2023 | 06:16 AM
image
 

 

(நெவில் அன்தனி)

பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஏஷஸ் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தை 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை அடைந்ததுடன் 2023 - 2025 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முதலாவது வெற்றிப் புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.

போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை (20) காலை பெய்த மழை காரணமாக முதலாவது ஆட்ட நேர பகுதி கைவிடப்பட்டது.

பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் அவுஸ்திரேலியா தனது 2ஆவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்தது.

மொத்த எண்ணிக்கை 121 ஓட்டங்களாக இருந்தபோது இராக்காப்பாளன் ஸ்கொட் போலண்டும் மொத்த எண்ணிக்கை 143 ஓட்டங்களாக இருந்தபோது ட்ரவிஸ் ஹெட்டும ஆட்டம் இழந்தனர்.

தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவுஸ்திரேலியா சற்று பலம்வாய்ந்த நிலையில் இருந்தது. கவாஜா 56 ஓட்டங்களுடனும் கெமரன் க்றீன் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதன் காரணமாக அவுஸ்திரேலியா  இலகுவான வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கெமரன் க்றீன் ஆட்டம் இழந்தார். (192 - 6 விக்.)

மறுபக்கத்தில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த உஸ்மான் கவாஜா, பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் இன்சைட் எஜ் மூலம் போல்ட் ஆனார். (209 - 7 விக்.)

எட்டாவதாக அலெக்ஸ் கேரி ஆட்டம் இழந்தபோது அவுஸ்திரேலியா 227 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

இந் நிலையில் பெட் கமின்ஸ், நெதன் லயன் ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு பரபரப்பான 2 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

 

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: 393 - 8 விக். டிக்ளயார்ட் (ஜோ ரூட் 118 ஆ.இ., ஜொனி பெயாஸ்டோவ் 78, ஸக் க்ரோவ்லி 61, நெதன் லயன் 149 - 4 விக், ஜொஷ் ஹேஸ்ல்வூட் 61 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 386 (உஸ்மான் கவாஜா 141, அலெக்ஸ் கேரி 66, ட்ரவிஸ் ஹெட் 50, கெமரன் க்றீன் 38, பெட் கமின்ஸ் 38, ஒல்லி ரொபின்சன் 55 - 3 விக்., ஸ்டுவர்ட் ப்றோட் 68 - 3 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: 273 (ஜோ ரூட் 46, ஹெரி ப்றூக 46, பென் ஸ்டோக்ஸ் 43, ஒல்லி ரொபின்சன் 27, பெட் கமின்ஸ் 63 - 4 விக்., நெதன் லயன் 80 - 4 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 281 ஓட்டங்கள்) 282 - 8 விக். (உஸ்மான் கவாஜா 65, பெட் கமின்ஸ் 44 ஆ.இ., டேவிட் வோர்னர் 36, கெமரன் க்றீன் 28, ஸ்கொட் போலண்ட் 28, அலெக்ஸ் கேரி 20, நெதன் லயன் 16 ஆ.இ., ஸ்டுவர்ட் ப்றோட் 64 - 3 விக்., ஒல்லி ரொபின்சன் 43 - 2 விக்.)

ஆட்டநாயன்: உஸ்மான் கவாஜா.

2006_khawaja_bowled_by_ben_stokes_aus_vs

2006_pat_cummins_aus_vs_eng.jpg

https://www.virakesari.lk/article/158196

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லோட்ஸில் இரண்டாவது டெஸ்ட்- மைதானத்திற்குள் நுழைந்த காலநிலை ஆர்ப்பாட்டக்காரர்களால் பரபரப்பு

Published By: RAJEEBAN

28 JUN, 2023 | 07:41 PM
image
 

ஆசஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லோர்ட்ஸில் இன்று ஆரம்பமாகியுள்ள அதேவேளை  போட்டி ஆரம்பமாகி இரண்டாவது ஓவரில் ஜஸ்ட் ஸ்டொப் ஒயில் என்ற காலநிலைமாற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர் மைதானத்திற்குள் ஓடிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மைதானத்திற்குள் ஒரேஞ்பவுடர் பெயிண்டுடன் மைதானத்திற்குள் ஒடிய இருவர் ஆடுகளத்தை நோக்கி செல்வதற்குள் வீரர்களும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அவர்களை தடுத்துநிறுத்தினர்.

இரண்டாவது ஓவர் ஆரம்பமாகவிருந்தவேளை ஜஸ்ட் ஸ்டொப் ஒயில் என்ற டீசேர்ட்டை அணிந்த இருவர் கிரான்டஸ்டான்டையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் கடந்து ஆடுகளத்தை நோக்கி ஒடினர்.

எனினும் டேவிட்வோர்னரும் பென்ஸ்டோக்சும் ஒருவரை தடுத்து நிறுத்தினர்.

https://www.virakesari.lk/article/158804

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வோர்னர், ஸ்மித், ஹெட் அரைச் சதங்கள் குவிப்பு; அவுஸ்திரேலியா 339 - 5 விக்.

Published By: NANTHINI

29 JUN, 2023 | 10:19 AM
image
 

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (28) ஆரம்பமான 2ஆவது ஆஷஸ் மற்றும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட் ஆகியோர் குவித்த அரைச் சதங்களுடன் அவுஸ்திரேலியா சிறப்பான நிலையில் இருக்கிறது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்டநேர முடிவின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

எவ்வாறாயினும், டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் முதல் நிலை வீரரான ஜோ ரூட், முதலாம் நாள் கடைசி ஆட்ட நேர பகுதியில் 4 பந்துகளில் 2 விக்கெட்களை கைப்பற்றி இங்கிலாந்துக்கு ஆறுதலை ஏற்படுத்தினார்.

எஜ்பெஸ்டனில் கடந்த வாரம் கடைசி வரை பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களால் வெற்றிபெற்று தொடரில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த டெஸ்டிலும் வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவுஸ்திரேலியா சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

2806_bairstow_carries_a_just_stop_oil_pr

2806_just_stop_oil_protesters.png

போட்டியில் முதலாவது ஓவர் வீசி முடிக்கப்பட்டபோது 2 Just Stop Oil ஆர்ப்பாட்டக்காரர்கள் மைதானத்துக்குள் புகுந்ததால் ஆட்டம் சற்று நேரம் தடைப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை ஜொனி  பெயார்ஸ்டோவ் அலாக்காக தூக்கி எல்லைக்கோட்டுக்கு அப்பால் விட்டார். பெயார்ஸ்டோவின் இந்தத் துணிகர செயலால் லோர்ட்ஸ் ஆடுகளம் பாதுகாக்கப்பட்டது.

மற்றைய ஆர்ப்பாட்டக்காரரை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வெளியேற்றினர். மூன்றாவது ஆட்டக்காரர் மைதானத்துக்குள் நுழைவதற்கு முன்னர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

2806_david_warner_aus_vs_eng.jpg

ஆரம்ப வீரர் டேவிட் வொர்னர் 20 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஸ்டுவர்ட் ப்றோடின் பந்துவீச்சில் கொடுத்த  பிடியை 4ஆவது ஸ்லிப் ஒல்லி போப் தவறவிட்டார்.

இதனை சாதகமாக்கிக்கொண்ட டேவிட் வோர்னர் 66 ஓட்டங்களைப் பெற்றார்.

வோர்னரும் 17 ஓட்டங்களைப் பெற்ற உஸ்மான் கவாஜாவும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும், அவர்கள் இருவரும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து மார்னுஸ் லபுஸ்சான், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லபுஸ்சான் 47 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

2806_steve_smith_aus_vs_eng.jpg

ஸ்டீவன் ஸ்மித் 43 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது அடுத்து களம் புகுந்த ட்ரவிஸ் ஹெட் வேகமாக ஓட்டங்களை பெற்றவண்ணம் இருந்தார்.

இதன் பலனாக அவுஸ்திரேலியா 3 விக்கெட்களை இழந்து 316 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், இங்கிலாந்து அணியில் இடம்பெறும் ஒரே ஒரு சுழல்பந்துவீச்சாளரான ஜோ ரூட், அதே மொத்த எண்ணிக்கையில் 4 பந்துகள் இடைவெளியில் ட்ரவிஸ் ஹெட், சகலதுறை வீரர் கெமரன் க்றீன் (0) ஆகிய இருவரது விக்கெட்களைக் கைப்பற்றி இங்கிலாந்துக்கு ஆறுதலைக் கொடுத்தார்.

2806_travis_head_aus_vs_eng.jpg

2806_travis_head_stumped_by_jb_eng_vs_au

ட்ரவிஸ் ஹெட் 73 பந்துகளில் 14 பவுண்டறிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்று ஸ்டீவ் ஸ்மித்துடன் 4ஆவது விக்கெட்டில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மறுபக்கத்தில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் 149 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள் உட்பட 88 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவருடன் 6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் ஜோ ரூட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் டங் 88 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மொயீன் அலி, முதலாவது ஆஷஸ் டெஸ்டுக்கு மீளழைக்கப்பட்டபோதிலும் 2ஆவது டெஸ்டில் இணைக்கப்படவில்லை.

2021 செப்டெம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மொயீன் அலி, உபாதைக்குள்ளான முன்னணி சுழல்பந்துவீச்சாளர் ஜெக் லீச்சுக்கு பதிலாக அணிக்கு மீளழைக்கப்பட்டு முதல் டெஸ்டில் விளையாடியிருந்தார்.

2806_steve_smith_and_a_ex_carey_aus_vs_e

https://www.virakesari.lk/article/158813

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்டீவ் ஸ்மித் 32ஆவது சதம் : அவுஸ்திரேலியா 416 ; இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 278

30 JUN, 2023 | 06:24 AM
image
 

(நெவில் அன்தனி)

லண்டன், லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது ஆஷஸ் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் குவித்த 32ஆவது சதத்தின் உதவியுடன் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து  2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் இன்னிங்ஸில் இன்னும் 6 விக்கெட்கள் மீதிருக்க அவுஸ்திரேலயாவைவிட 138 ஓட்டங்களால் இலங்கிலாந்து பின்னிலையில் இருக்கிறது.

ஸக் க்ரோவ்லி, பென் டக்கெட் ஆகிய இருவரும் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து கொடுக்க இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது.

க்ரோவ்லி 48 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் பென் டக்கெட்டுடன் ஜோடி சேர்ந்த ஒல்லி போப் 2ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்கள் பகிரப்படுவதற்கு உதவினார். அவர் 42 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பென் டக்கெட் சதம் குவிக்க 2 ஓட்டங்களால் தவறினார். அவர் 98 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஹேஸல்வூடின் பந்தை இடதுபுறமாக அடித்து வோர்னரிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

ஜோ ரூட் 10 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது சர்ச்சைக்குரிய வகையில் 3ஆவது மத்தியஸ்தரின் தீர்ப்புக்கு இலக்கானார். அவர் இடதுபுறமாக அடித்த பந்தை ஸ்டீவன் ஸ்மித் தாவிப் பிடித்தபோதிலும் அவரது அசைவின்போது பந்து நிலத்தில் ஊராய்வது தெட்டத் தெளிவாக சலன அசைவுகளில் தெரிந்தது. ஆனால், ஸ்டீவ் ஸ்மித் பிடியை எடுத்துவிட்டதாக 3ஆவது மத்தியஸ்தர் தீர்ப்பு வழங்கினார்.

ஆட்ட நேர முடிவில் ஹெரி புறூக் 45 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இது இவ்வாறிருக்க, தனது 100ஆவது தொடர்ச்சியான டெஸ்ட் போட்டியில் விளையாடும் நெதன் லயன் தனது 496ஆவது டெஸ்ட் விக்கெட்டை எடுத்த பின்னர் போப்பின் பிடியை எடுக்க விளைந்து தசைப் பிடிப்புக்குள்ளாக வீரர்கள் தங்கும் அறைக்கு திரும்பினார்.

முன்னதாக போட்டியின் 2ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா 416 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

85 ஓட்டங்களுடன் தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த ஸ்டீவ் ஸ்மித் 110 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மத்திய வரிசையில் அலெக்ஸ் கேரி 22 ஓட்டங்களையும் அணித் தலைவர் பெட் கமின்ஸ் ஆட்டம் இழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

உதிரிகளாக 12 நோ போல்கள் உட்பட 38 ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கைக்கு கிடைத்தன.

பந்துவீச்சில் ஜொஷ் டங் 98 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஒல்லி ரொபின்சன் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜோ ரூட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2906_harry_brook_eng_vs_aus.jpg

2906_ben_duckett_eng_vs_aus.jpg

https://www.virakesari.lk/article/158876

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்தைவிட 221 ஓட்டங்கள் முன்னிலையில் அவுஸ்திரேலியா

01 JUL, 2023 | 10:18 AM
image
 

(நெவில் அன்தனி)

லண்டன், லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது ஆஷஸ் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதம் இருக்க இங்கிலாந்தைவிட 221 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் இங்கிலாந்தை விட 91 ஓட்டங்கள் அதிகமாக எடுத்திருந்த அவுஸ்திரேலியா, 3ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக வேளையோடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது அதன் 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

டேவிட் வோர்னர் (25), மார்னுஸ் லபுஸ்சான் (30) ஆகியோரே ஆட்டம் இழந்தவர்களாவர்.

உஸ்மான் கவாஜா 58 ஓட்டங்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

போட்டியின் 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை (30)  காலை தனது முதலாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 278 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து அதன் கடைசி 6 விக்கெட்களை வெறும் 46 ஓட்டங்களுக்கு இழந்தது.

ஹெரி புறூக் 50 ஓட்டங்களைப் பெற்றார். 2ஆம் நாள் ஆட்டத்தில் பென் டக்கெட் 98 ஓட்டங்களையும் ஸக் க்ரோவ்லி 48 ஓட்டங்களையும் ஒல்லி போப் 42 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்திருந்தனர்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 86 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ரவிஸ் ஹெட் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.

https://www.virakesari.lk/article/158955

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இக்கட்டான நிலையில் இங்கிலாந்து; மீண்டும் அசத்துமா அவுஸ்திரேலியா?

Published By: NANTHINI

02 JUL, 2023 | 11:35 AM
image
 

(நெவில் அன்தனி)

லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது ஆஷஸ் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து இக்கட்டான நிலையில் இருக்கிறது. அதேவேளை, முதலாவது டெஸ்ட் போட்டியில் போன்று இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்று அசத்த அவுஸ்திரேலியா முயற்சிக்கவுள்ளது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 371 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பென் டக்கட் 50 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 29 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளதுடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

ஸக் க்ரோவ்லி (3), ஒல்லி போப் (3), ஜோ ரூட் (18), ஹெரி புரூக் (4) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த நால்வராவர்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்து 2ஆவது ஓவரின் முதல் பந்தில் ஸக் க்ரோவ்லியை ஆட்டம் இழக்கச் செய்த ஸ்டார்க், 3ஆவது பந்தில் பென் டக்கட்டுக்கு எதிராக எல்.பி.டபிள்யூ. கேள்வியை எழுப்பினார். மத்தியஸ்தர் ஆட்டமிழப்புக்கான சமிக்ஞையை கொடுத்தார். ஆனால், உடனடியாக மீளாய்வு கோரிய டக்கட், தொலைக்காட்சி மத்தியஸ்தரினால் ஆட்டம் இழக்கவில்லை என அறிவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் திறமையாக துடுப்பெடுத்தாடி வரும் டக்கட், இப்போட்டியில் 2ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். முதல் இன்னிங்ஸில் அவர் 98 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இது இவ்வாறிருக்க, தனது 2ஆவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து அவுஸ்திரேலியா எஞ்சிய 8 விக்கெட்களை 149 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது. இதன் பிரகாரம், அவுஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 279 ஓட்டங்களைப் பெற்றது.

நான்காம் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா சார்பாக யாரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்றோட் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 416 (ஸ்டீவ் ஸ்மித் 110, ட்ரவிஸ் ஹெட் 77, டேவிட் போர்னர் 66, மார்னுஸ் லபுஸ்சான் 47, உதிரிகள் 38, பெட் கமின்ஸ் 22 ஆ.இ., ஜொஷ் டங் 98 - 3 விக்., ஒல்லி ரொபின்சன் 100 - 3 விக்., ஜோ ரூட் 19 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 325 (பென் டக்கட் 98, ஹெரி புறூக் 50, ஸக் க்ரோவ்லி 48, ஒல்லி போப் 42)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 279 (உஸ்மான் கவாஜா 77, உதரிகள் 36, ஸ்டீவன் ஸ்மித் 34, மார்னுஸ் லபுஸ்சான் 30, ஸ்டுவர்ட் ப்றோட் 65 - 4 விக்., ஒல்லி போப் 48 - 2 விக்., ஜொஷ் டங் 53 - 3 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 371 ஓட்டங்கள்) 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 114 - 2 விக்., பெட் கமின்ஸ் 20 - 2 விக்., மிச்செல் ஸ்டார்க் 40 - 2 விக்.

https://www.virakesari.lk/article/159035

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியா 2 ஆவது டெஸ்டில் 43 ஓட்டங்களால் வெற்றி : ஆஷஸ் தொடரில் 2 - 0 என முன்னிலை

03 JUL, 2023 | 08:54 AM
image
 

(நெவில் அன்தனி)

லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (02) நிறைவுக்கு வந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 43 ஓட்டங்களால் அவுஸ்திரெலியா வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் ஆஷஸ் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் குவித்த அபார சதம் வீண்போனதுடன் ஜொனி பெயார்ஸ்டோவ் வித்தியாசமான முறையில் ஆட்டம் இழந்தார்.

0207_mitchell_starc_aus_vs_eng.jpg

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 371 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 327 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து, மொத்த எண்ணிக்கை 177 ஓட்டங்களாக இருந்தபோது பென் டக்கட்டின் விக்கெட்டை இழந்தது.

அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸுடன் 5ஆவது விக்கெட்டில் 132 ஓட்டங்களைப் பகிர்ந்த பென் டக்கட் 83 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

0207_ben_stokes_eng_vs_aus.jpg

அவரைத் தொடர்ந்த களம் புகுந்த ஜொனி பெயார்ஸ்டோவ், 10 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது, கெமரன் க்றீனின் அரை உயர பவுன்சர் பந்தை குணிந்தவாறு வெறுமனே விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரியை நோக்கி செல்ல விட்டார். அதேவேளை, தனது எல்லையை விட்டு ஆசுவாசமாக முன்னோக்கி நடந்தார். 

ஆனால், பிடித்த பந்தை விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி  தாழ்வாக எறிய அது விக்கெட்டில் பட்டது. பெயார்ஸ்டோவ் வெளியில் இருந்ததால் அவுஸ்திரேலியர்கள் ஆட்டமிழப்புக்கான கேள்வியை எழுப்பினர்.

இதனை மீளாய்வு செய்த தொலைக்காட்சி மத்தியஸ்தர் மராயஸ் இரேஸ்மஸ், பந்து செயலிழக்கவில்லை (டெட் போல்) என்பதை உறுதிசெய்தகொண்டு பெயார்ஸ்டோவ் ஆட்டம் இழந்ததாக தீர்ப்பு வழங்கினார்.

எவ்வாறாயினும் பென் ஸ்டோக்ஸும் ஸ்டுவர்ட் ப்றோடும் 7ஆவது விக்கெட்டில் 108 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சற்று தெம்பூட்டினர். ஆனால், பென்  ஸ்டோக்ஸ் ஆட்டம் இழந்ததும் இங்கிலாந்தின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு தகர்க்கப்பட்டது. இந்த இணைப்பாட்டத்தில் ப்றோடின் பங்களிப்பு வெறும் 11 ஓட்டங்களாகும்.

0207_pat_cummins_aus_vs_eng.jpg

பென் ஸ்டோக்ஸுடன் கடைசி 4 விக்கெட்கள் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

பென் ஸ்டோக்ஸ் 214 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 9 சிக்ஸ்கள் அடங்கலாக 155 ஓட்டங்களைக் குவித்தார்.

பின்வரிசையில் ஜொஷ் டங் 19 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 416 (ஸ்டீவ் ஸ்மித் 110, ட்ரவிஸ் ஹெட் 77, டேவிட் வோர்னர் 66, மார்னுஸ் லபுஸ்சான் 47, ஜொஷ் டங் 98 - 3 விக்., ஒல்லி ரொபின்சன் 100 - 3 விக், ஜோ ரூட் 19 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 325 (பென் டக்கட் 98, ஹெரி புறூக் 50, ஸக் க்ரோவ்லி 48, ஒல்லி போப் 42, மிச்செல் ஸ்டார்க் 88 - 3 விக்., ட்ரவிஸ் ஹெட் 17 - 2 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 71 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 279 (உஸ்மான் கவாஜா 77, ஸ்டீவ் ஸ்மித் 34, மார்னுஸ் லபுஸ்சான் 30, ஸ்டுவர்ட் ப்றோட் 65 - 4 விக்., ஒல்லி ரொபின்சன் 48 - 2 விக்., ஜொஷ் டங் 53 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: 327 (பென் ஸ்டோக்ஸ் 155, பென் டக்கட் 83, பெட் கமின்ஸ் 69 - 3 விக்., மிச்செல் ஸ்டார்க் 79 - 3 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 80 - 3 விக்.)

ஆட்டநாயகன்: ஸ்டீவன் ஸ்மித்

https://www.virakesari.lk/article/159086

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஸஸ் தொடரின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு - ரிசுசுனாக்கின் கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர் பதிலடி

Published By: RAJEEBAN

04 JUL, 2023 | 04:46 PM
image
 

ஆசஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் ஜொனி பேர்ஸ்டொவ்வின்; சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு குறித்த கருத்து மோதல்கள் நீடிக்கின்ற அதேவேளை இந்த விடயம் அவுஸ்திரேலிய இங்கிலாந்து தலைவர்கள் மத்தியிலான தர்க்கமாக மாறியுள்ளது.

அவுஸ்திரேலிய வீரர்கள் ஆடுகளத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிசிசுனாக்  தெரிவித்துள்ள கருத்துக்களிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் பதிலடி கொடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியர்கள் கிரிக்கெட்டின் உணர்வுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வதாக  ரிசிசுனாக் தெரிவித்துள்ளார்.

rishi-sunak-anthony-albanese-jonny-bairs

இதற்கு தனது டுவிட்டர் கணக்கின் மூலம் பதிலடிகொடுத்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் தனது ஆண் பெண் கிரிக்கெட் அணியினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

எங்கள் ஆண் பெண் அணிகள் குறித்து நான் பெருமிதம் கொள்கின்றேன் இரண்டு அணியினரும் ஆஸஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட்களையும் வெற்றிபெற்றுள்ளனர் என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

தனது நாடு அவுஸ்திரேலிய அணியின் பின்னால் உள்ளது என அவர் தெரிவித்துள்ளதுடன் அதே அவுஸ்திரேலியர்கள் எப்போதும் வெற்றிபெறுகின்றனர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது அதே அவுஸ்திரேலியர்கள் -எப்போதும் ஏமாற்றுபவர்கள்  என்ற இங்கிலாந்து அணி ரசிகர்களின் பதிவுகளிற்கு பதிலடி போல அமைந்துள்ளது.

ஜொனி பேர்ஸ்டொவ்  ஆட்டமிழந்த விதம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஓவர் முடிந்துவிட்டது என தெரிவிப்பதற்கு முன்பாக தனது கிறீசிலிருந்து வெளியே சென்றார் இதனை அவதானித்த அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் விக்கெட்டை வீழ்த்தி அவரை ஆட்டமிழக்க செய்தார்.

அவுஸ்திரேலிய அணித்தலைவர் தனது அணியினர் விதிமுறைகளிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

பேர்ஸ்டொவ் ஆட்டமிழந்ததை ஆட்டமிழப்புதான் என  ஏற்றுக்கொணடுள்ள இங்கிலாந்து அணியின் தலைவர் பென்ஸ்டோக்ஸ், எனினும் தனது அணியினர் இந்த வழிமுறையை பின்பற்றி வெற்றிபெற விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பேர்ஸ்டொவ் ஆட்டமிழந்தாரா இல்லையா என்ற சர்ச்சை ஏற்கனவே கடும்போட்டி மிகுந்ததாக காணப்படும் ஆசஸ் தொடரை மேலும் போட்டி மிகுந்ததாக மாற்றியுள்ளது.

https://www.virakesari.lk/article/159212

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் விக்கெட்டுக்களை வீழ்த்தாமல் இருப்பதற்கு என் வயது காரணமல்ல -  ஜேம்ஸ் அண்டர்சன் 

Published By: NANTHINI

05 JUL, 2023 | 04:20 PM
image
 

முதலிரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் என்னுடைய மோசமான பந்துவீச்சுக்கு வயதை குறைகூறக் கூடாது என இங்கிலாந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார்.

41ஆவது வயதை எட்டவுள்ள ஜேம்ஸ் அண்டர்சன், முதலிரண்டு ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 77 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 75.33 ஆகும்.

இந்நிலையில், பிரித்தானியாவின் டெலிகிராப் பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ள ஜேம்ஸ் அண்டர்சன், 

"பெரிய தொடர்களில் நன்கு செயற்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 2 போட்டிகளில் நான் மோசமாக செயற்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் எனது பங்களிப்பு இருந்திருக்கிறது. அதேசமயம், நான் மோசமாக பந்து வீசியதாக நினைக்கவில்லை. இது சிறிய சரிவுதான். ஆனால், இது ஆஷஸில் நடக்கக்கூடாது. 

சரிவு என்று நான் கூறினாலும் கூட, 181 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில்தான் இந்தச் சரிவு.

மீண்டும் ஒருமுறை நான் ஆடுகளத்தை குறைகூற மாட்டேன். இந்த ஆடுகளம் எனக்கு உகந்ததாக இல்லை. கடந்த காலங்களில் தட்டையான (Flat) ஆடுகளங்களில் கூட விக்கெட் வீழ்த்துவதற்கான வழிகளை கண்டறிந்திருக்கின்றேன். அதைத்தான் தற்போது செய்வதற்கு முயற்சித்து வருகிறேன்.

இருந்தாலும் கூட, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் பந்தை தொடர்ச்சியாக ஆடுகளத்தின் நடுவில் பிட்ச் செய்வதை பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.

கடந்த 20 வருடங்களாக பந்துவீச்சில் பந்தை மேலெழும்பச் செய்தும் ஸ்விங் செய்தும் முயன்றுள்ளேன். இவையனைத்தையும் செய்த பிறகும் கூட விக்கெட் கிடைக்கவில்லை என்றால் அது விரக்தியை உண்டாக்கும். 

என்னுடைய ஆட்டத்தில் நான் இன்னும் கவனம் செலுத்தி, பயிற்சியாளர்களுடன் உரையாடி, என்னால் இன்னும் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும்.

வயதை காரணம் காட்டி என்னுடைய எதிர்காலம் குறித்துப் பேசுகிறார்கள். எனக்குப் புரிகிறது. ஆஷஸ் மிக முக்கியமான தொடர். ஆனால், நான் விக்கெட்டுகள் வீழ்த்தாமல் இருப்பதற்கு என்னுடைய வயது காரணம் அல்ல. 

எதிர்காலம் குறித்து நான் சிந்திக்கவில்லை. எதிர்வரும் வியாழக்கிழமையும், அடுத்த டெஸ்டின் தொடக்கமும்தான் நான் தற்போது சிந்தித்துக்கொண்டிருக்கும் எதிர்காலம். இந்தத் தொலைவு வரைதான் என்னால் பார்க்க முடிகிறது.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அணிக்குத் தேவையான ஆட்டத்தை நான் வெளிப்படுத்துவேன். இல்லையெனில், இந்தத் தொடரில் ஏதாவது ஒரு கட்டத்தில் எனது ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக தொடர்ந்து கடுமையாக உழைத்துக்கொண்டே இருப்பேன்" என அந்த கட்டுரையில் ஜேம்ஸ் அண்டர்சன் எழுதியுள்ளார்.

https://www.virakesari.lk/article/159281

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3 ஆவது ஆஷஸ் டெஸ்ட் : அண்டர்சன் நீக்கம் : இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள்

06 JUL, 2023 | 09:38 AM
image
 

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லீட்ஸ், ஹெடிங்லே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (6) ஆரம்பமாகவுள்ள 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில், இங்கிலாந்து சார்பாக அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனை அணி முகாமைத்துவம் நீக்கியுள்ளது.

ஆஷஸ் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 77 ஓவர்கள் வீசிய ஜேம்ஸ் அண்டர்சன் 226 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை மாத்திரமே வீழ்த்தியிருந்தார்.

181 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் அண்டர்சன் மொத்தமாக 688 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆகக் கூடுதலான விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் ஆவார். இந்த மாதம் 30ஆம் திகதி அவர் 41 வயதை எட்டவுள்ளார்.

மேலும் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்து, ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியாவிடம் பறிகொடுப்பதை தவிர்க்கும் வகையில் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட், வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் கிறிஸ் வோக்ஸ், சுழல்பந்துவீச்சாளர் மொயீன் அலி ஆகியோரை மீள அழைத்துள்ளது.

ஜேம்ஸ் அண்டர்சனுடன் வேகப்பந்தவீச்சாளர் ஜொஷ் டங் உபாதைக்குள்ளாகியுள்ள பதில் விக்கெட் காப்பாளர் ஒல்லி போப் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஒல்லி போப்புக்கு பதிலாக ஹெரி பூறூக் துடுப்பாட்ட வரிசையில் தரமுயர்த்தப்படவுள்ளார்.

இதேவேளை, மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும்  முனைப்புடன் அவுஸ்திரேலியா களம் இறங்கவுள்ளது.

நெதன் லயன் உபாதைக்கு உள்ளாகியிருப்பதால் அவர் தொடரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 டெஸ்ட்களில் தொடர்ச்சியாக விளையாடி சாதனை நிலைநாட்டிய நெதன் லயன் 100ஆவது போட்டியில் உபாதைக்குள்ளானதால் 13 ஓவர்கள் மாத்திரம் பந்துவிசியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் நொண்டியவாறு களம் புகுந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய லயன் 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.

அவருக்குப் பதிலாக சுழல்பந்துவீச்சாளர் டொட் மேர்பி அணியில் இணையுவுள்ளார்.

வேகப்பந்துவிச்சாளர்களுக்கு சாதகமான இந்த விளையாட்டரங்கில் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் 25 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அவுஸ்திரேலியா 9 - 8 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருக்கிறது. 8 போட்டிகள் வெற்றிதொல்வியின்றி முடிவடைந்துள்ளன.

அணிகள்

இங்கிலாந்து: ஸக் க்ரோவ்லி, பென் டக்கெட், ஹெரி புறூக், ஜோ ரூட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), ஜொனி பெயார்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், ஸ்டுவர்ட் ப்றோட், ஒல்லி ரொபின்சன், மார்க் வூட்

அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, மானுஸ் லபுஸ்சான், ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட், கெமரன் க்றீன், அலெக்ஸ் கேரி, பெட் கமின்ஸ் (தலைவர்), மிச்செல் ஸ்டார்க், டொம் மேர்பி, ஜொஷ் ஹேஸ்ல்வூட்

james_anderson___1_.jpg

james_anderson___2_.jpg

https://www.virakesari.lk/article/159316

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3 ஆவது ஆஷஸ் டெஸ்ட் : மிச்செல் மார்ஷ் அபார சதம், மார்க் வூட் 5 விக்கெட் குவியல் : சம அளவில் ஆட்டம்

07 JUL, 2023 | 09:33 AM
image
 

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் லீட்ஸ், ஹெடிங்லே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (06) ஆரம்பமான 3ஆவது டெஸ்ட் போட்டியில் மிச்செல் மார்ஷ் துடுப்பாட்டத்திலும் மார்க் வூட் பந்துவீச்சிலும் அசத்த, முதல் நாள் ஆட்டம் சம அளவில் மோதிக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 263 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

0607_mitchell_marsh_aus_vs_eng__1_.jpg

இந்த ஆஷஸ் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா பெற்ற மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

மத்திய வரிசையில் மிச்செல் மார்ஷ் சதம் குவித்திராவிட்டால் அவுஸ்திரேலியாவின் நிலை இதைவிட மோசமாக இருந்திருக்கும்.

ஸ்டுவர்ட் ப்றோடும், இங்கிலாந்து அணிக்கு மீளழைக்கப்பட்ட மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வரிசையை துவம்சம் செய்தனர்.

டேவிட் வோர்னர் (04) முதல் டெஸ்ட் ஹீரோ உஸ்மான் கவாஜா (13), மார்னுஸ் லபுஸ்சான் (21), 2ஆவது டெஸ்ட் ஹீரோவும் 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுபவருமான ஸ்டீவன் ஸ்மித் (22) ஆகிய நால்வரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். (85 - 4 விக்.)

0607_mark_wood_eng_vs_auz.jpg

ஆனால், ட்ரவிஸ் ஹெட், மிச்செல் மார்ஷ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 240 ஓட்டங்களாக உயர்த்தி அவுஸ்திரேலியாவை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

ஆனால், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் கடைசி 6 விக்கெட்களை வெறும் 23 ஓட்டங்களுக்கு வீழ்த்தி அவுஸ்திரேலியாவை 263 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.

மிச்செல் மார்ஷ் 118 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 118 ஓட்டங்களையும் டரவிஸ் ஹெட் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மார்க் வூட் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 11.4 ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸ்டுவர்ட் ப்றோட் 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

0607_chris_woakes_eng_vs_aus.jpg

ஸக் க்ரோவ்லி அதிகபட்சமாக 33 ஓட்டங்களைப் பெற்றார். பென் டக்கெட் (2), ஹெரி புறூக் (3) ஆகிய இருவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.

ஜோ ரூட் 19 ஓட்டங்களுடனும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பெட் கமின்ஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் மார்ஷ் 9 ஓட்டஙகளுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/159405

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3 ஆவது ஆஷஸ் டெஸ்ட் : இங்கிலாந்தின் வெற்றிக்கு மேலும் 224 ஓட்டங்கள் தேவை

09 JUL, 2023 | 09:40 AM
image
 

(நெவில் அன்தனி)

லீட்ஸ், ஹெடிங்லே விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 251 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பென் டக்கெட் 18 ஓட்டங்களுடனும் ஸக் க்ரோவ்லி 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இப் போட்டியில் 2 நாட்கள் மீதமிருக்கு இங்கிலாந்தின் வெற்றிக்கு மேலும் 224 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

சனிக்கிழமை (08) காலை பெய்த மழை காரணமாக தேநீர் இடைவேளைவரை மூன்றாம் நாள் ஆட்டம் தடைப்பட்டது.

0807_Stuart_broad_eng_vs_aus.jpg

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்த சற்று நேரத்தில் மீண்டும் ஆட்டம் தடைப்பட்டது. சற்று நேரத்தில் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தி அவுஸ்திரேலியாவை நெருக்கடிக்குள் ஆழ்த்தினர். 

4 விக்கெட் இழப்புக்கு 116 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு சகல விக்கெட்களையும் இழந்த 224 ஓட்டங்களைப் பெற்றது.

5ஆவது விக்கெட்டில் மிச்செல் மார்ஷுடனும் 9ஆவது  விக்கெட்டில்  டொட் மேர்பியுடனும் ட்ரவிஸ் ஹெட் பகிர்ந்த தலா 41 ஓட்டங்களே மூன்றாம்  நாள்  ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவின் சிறப்பான இணைப்பாட்டங்களாக இருந்தன.

263197-01-02.jpg

5ஆம் இலக்க வீரர்  ட்ரவிஸ் ஹெட்   மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 77 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.

மிச்செல் மார்ஷ் 28 ஓட்டங்களையும் டொட் மேர்பி 11  மிச்செல் ஸ்டார்க் 16  ஓட்டங்ளையும்,  டொட் மேர்பி 11   ஓட்டங்ளையும் பெற்றனர்.  

பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்றோட் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொயீன் அலி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க் வூட் 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 263 ஓட்டங்களையும் இங்கிலாந்து 237 ஓட்டங்களையும் பெற்றன.

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 2 - 0 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருக்கிறது.

https://www.virakesari.lk/article/159549

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயிரோட்டம் பெற்றுள்ள ஆஷஸ் தொடர் : ஹெடிங்லே டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட்களால் பரபரப்பான வெற்றி

10 JUL, 2023 | 08:58 AM
image
 

(நெவில் அன்தனி)

லீட்ஸ், ஹெடிங்லேயில் ஞாயிற்றுக்கிழமை (09) நிறைவுக்கு வந்த 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிச்செல் ஸ்டார்க்கின் 5 விக்கெட் குவியலை ஹெரி புறூக்கின் அரைச் சதம் விஞ்சியதால் அவுஸ்திரேலியாவை 3 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து உயிரோட்டம் பெறச் செய்துள்ளது.

எவ்வாறாயினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா தொடரில் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் நீடித்த போதிலும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நான்கு நாட்களுக்குள் நிறைவடைந்தது.

போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை (09) காலை வெற்றிக்கு மேலும் 224 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனது 2அவது இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து 7 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எனினும் இந்த வெற்றி இங்கிலாந்துக்கு இலகுவாக வந்துவிடவில்லை.

ஸக் க்ரோவ்லியும் பென் டக்கெட்டும் ஆரம்ப விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து மிண்டும் தோல்வி அடையலாம் என கருதப்பட்டது. இந்த 6 விக்கெட்களில் ஐந்தை மிச்செல் ஸ்டார்க் கைப்பற்றியிருந்தார்.

ஆனால், ஹெரி புறூக், கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து 251 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட எஞ்சிய ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

ஹெரி புறூக் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 75 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைவிட ஸக் க்ரோவ்லி, பென் டக்கெட், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் ஆகியோர்  துடுப்பாட்டத்தில்   அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

மைக்கல் ஸ்டார்க் பதிவு செய்த 14ஆவது 5 விக்கெட் குவியல் பலனற்றுப் போனது.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 263 (மிச்செல் மார்ஷ் 118, ட்ரவிஸ் ஹெட் 39, ஸ்டீவன் ஸ்மித் 22, மார்க் வூட் 34 - 5 விக்., கிறஸ் வோக்ஸ் 73 - 3 விக்., ஸ்டுவர்ட் ப்றோட் 58 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 237 (பென் ஸ்டோக்ஸ் 80, ஸக் க்ரோவ்லி 33, மார்க் வூட் 24, பெட் கமின்ஸ் 91 - 6 விக்., மிச்செல் ஸ்டார்க் 59 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 224 (ட்ரவிஸ் ஹெட் 77, உ;மான் கவாஜா 43, மார்னுஸ் லபுஸ்சான் 33, மிச்செல் மார்ஷ் 28, ஸ்டுவர்ட் ப்றோட் 45 - 3 விக்., கிறிஸ் வோக்ஸ் 68 - 3 விக்., மொயீன் அலி 34 - 2 விக்., மார்க் வூட் 66 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 251 ஓட்டங்கள்) 254 - 7 விக். (ஹெரி புறூக் 75, ஸ்க் க்ரோவ்லி 44, கிறிஸ் வோக்ஸ் 32 ஆ.இ., பென் டக்கெட் 23, ஜோ ரூட் 21, மார்க் வூட் 16 ஆ.இ., மிச்செல் ஸ்டார்க் 78 - 5 விக்.)

ஆட்டநாயகன்: மார்க் வூட்

https://www.virakesari.lk/article/159616

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் அபாரம் : 600 விக்கெட்கள் பூர்த்தி செய்தார் ப்றோட்

Published By: NANTHINI

20 JUL, 2023 | 01:16 PM
image
 

(நெவில் அன்தனி)

மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (19) ஆரம்பமான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்களைக் கைப்பற்ற, அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முதலாம் நாள் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் ஆதிக்கம் செலுத்தாததுடன் இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு முடிவு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது சொந்த மைதானத்தில் பெரும்பாலும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜேம்ஸ் அண்டர்சன் பந்துவீச்சில் பிரகாசிக்கவில்லை.

ஆனால், தனது 166ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டுவட் ப்றோட் 600 விக்கெட்களைப் பூர்த்தி செய்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜேம்ஸ் அண்டர்சனுக்கு (688) அடுத்ததாக 600 விக்கெட்களைப் பூர்த்தி செய்த இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவட் ப்றோட் ஆவார்.

image_-_2023-07-19T160342.929.jpg

நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

மொத்த எண்ணிக்கை 15 ஓட்டங்களாக இருந்தபோது 5ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜா 3 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும், முதலாம் நாளன்று துடுப்பெடுத்தாடிய ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் பெரும்பாலானவர்கள் அதிகபட்ச பங்களிப்பை வழங்கி அவுஸ்திரேலியா கௌரவமான மொத்த எண்ணிக்கையை பெற உதவினர்.

மார்னஸ் லபுஸ்சான் அரைச் சதம் குவித்ததுடன் இரண்டு இணைப்பாட்டங்களில் பங்காற்றியிருந்தார்.

3ஆவது விக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித்துடன் 59 ஓட்டங்களை பகிர்ந்த லபுஸ்சான், 4ஆவது விக்கெட்டில் ட்ரவிஸ் ஹெட்டுடன் மேலும் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் மார்னுஸ் லபுஸ்சான், மிச்செல் மார்ஷ் ஆகிய இருவரும் தலா 51 ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் 48 ஓட்டங்களையம், ஸ்டீவன் ஸ்மித் 41 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 32 ஓட்டங்களையும், மிச்செல் ஸ்டார்க் ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஸ்டுவட் ப்றோட் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/160460

  • கருத்துக்கள உறவுகள்
Posted

க்ரோவ்லி அபார சதம் : 4ஆவது ஆஷஸ் டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து

21 JUL, 2023 | 10:11 AM
image
 

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மென்செஸ்டர் ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றும் 4ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஸக் க்ரோவ்லி குவித்த அபார சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து முன்னிலை அடைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 317 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து போட்டியின் இரண்டாம் நாளான நேற்று வியாழக்கிழமை  (20) ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 384 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஸக் க்ரோவ்லியைவிட மொயீன் அலி, ஜோ ரூட் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் இங்கிலாந்தை பலப்படுத்தின.

போட்டியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை  (20) தனது 1ஆவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா, மேலும் 18 ஓட்டங்களை மாத்திரம் பெற்று கடைசி 2 விக்கெட்களை இழந்தது.

23 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்து மிச்செல் ஸ்டார்க் 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முதல் நாள் ஆட்டத்தில் மானுஸ் லபுஸ்சான், மிச்செல் மார்ஷ் ஆகியோர் தலா 51 ஓட்டங்களையும் ட்ரவிஸ் ஹெட் 48 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 41 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 32 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஸ்டுவட் ப்றோட் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

மொத்த எண்ணிக்கை 9 ஓட்டங்களாக இருந்தபோது பென் டக்கெட் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் ஸக் க்ரோவ்லி, மொயீன் அலி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

மொயீன் அலி 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஸக் க்ரோவ்லியும் ஜோ ரூட்டும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிக்க 206 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

ஸக் க்ரோவ்லி 182 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 189 ஓட்டங்களைக் குவித்தார். இது அவர் குவித்த 4ஆவது டெஸ்ட் சதமாகும். அத்துடன் 80ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது 2000 டெஸ்ட் ஓட்டங்களை க்ரோவ்லி பூர்த்திசெய்தார்.

ஜோ ரூட் 84 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஹெரி புறூக் 14 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/160543

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்தைவிட 162 ஓட்டங்கள் பின்னிலையில் அவுஸ்திரேலியா

22 JUL, 2023 | 09:30 AM
image
 

(நெவில் அன்தனி)

மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 6 விக்கெட்கள் மீதமிருக்க இங்கிலாந்தைவிட 162 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா பின்னிலையில் இருக்கிறது. 

போட்டியில் இன்னும் 2 நாட்கள் மீதமிருப்பதால் இங்கிலாந்துக்கு சாதகமான பெறுபெறு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகத் தென்படுகிறது.

முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 317 ஓட்டங்களையும் இங்கிலாந்து 592 ஓட்டங்களையும் பெற்றன.

போட்டியின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை (21) தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 384 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 592 ஓட்டங்களைக் குவித்தது.

போட்டியின் மூன்றாம் நாளன்று ஹெரி ப்றூக்ஸ், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், ஜொனி பெயாஸ்டோவ் ஆகிய மூவரும் அரைச் சதங்கள் குவித்து இங்கிலாந்து 500 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

ஹெரி ப்றூக்ஸும் பென் ஸ்டோக்ஸும் 5ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன் கடைசி விக்கெட்டில் ஜொனி பெயாஸ்டோவும் ஜேம்ஸ் அண்டர்சனும் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஜேம்ஸ் அண்டர்சன் 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

துரதிர்ஷ்டவசமாக ஜொனி பெயாஸ்டோவ் 99 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஹெரி ப்றூக் 61 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில்  ஜொஷ் ஹேஸ்ல்வூட 126 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கெமரன் க்றீன் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 137 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மார்னுஸ் லபுஸ்சான் 44 ஓட்டங்களுடனும் மிச்செல் மார்ஷ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

உஸ்மான் கவாஜா (18), டேவிட் வோர்னர் (28), ஸ்டீவன் ஸ்மித் (17), ட்ரவிஸ் ஹெட் (1) ஆகியோரே ஆட்டம் இழந்தவர்களாவர்.

பந்துவீச்சில் மார்க் வூட் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/160623

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லபுஸ்சான் குவித்த சதமும், மழையும் இங்கிலாந்தின் வெற்றியைத் தாமதித்துள்ளன

23 JUL, 2023 | 12:58 PM
image
 

(நெவில் அன்தனி)

மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 4ஆவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளான சனிக்கிழமை (22), அவுஸ்திரேலிய வீரர் மார்னுஸ் லபுஸ்சான் குவித்த சதமும் குறுக்கிட்ட மழையும் இங்கிலாந்தின் வெற்றியைத் தாமதப்படுத்தியுள்ளன.

அதிகாலையில் பெய்த மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் மதிய போசன இடைவேளைக்குப் பின்னர் ஆரம்பமானதுடன் 30 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் தேநீர் இடைவேளையுடன் மழை பெய்ததால் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

தனது இரண்டாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 5 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்கள் மீதம் இருக்க இங்கிலாந்தைவிட 61 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா பின்னிலையில் இருக்கிறது.

44 ஓட்டங்களிலிருந்து தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த மார்னுஸ் லபுஸ்சான் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 11ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தார். அவர் 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

லபுஸ்சானும் மிச்செல் மார்ஷும் 5ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மிச்செல் மார்ஷ் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (23) போட்டியின் கடைசி நாளாகும்.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 317 (மார்னுஸ் லபுஸ்சான் 51, மிச்செல் மார்ஷ் 51, ட்ரவிஸ் ஹெட் 48, ஸ்டீவன் ஸ்மித் 41, மிச்செல் ஸ்டார்க் 36, க்றிஸ் வோக்ஸ் 62 - 5 விக்., ஸ்டுவட் ப்றோட் 68 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 592 (ஸ்க் க்ரோவ்லி 189, ஜொனி பெயார்ஸ்டோவ் 99 ஆ.இ., ஜோ ரூட் 84, ஹெரி ப்றூக் 61, மொயின் அலி 54, பென் ஸ்டோக்ஸ் 51, உதிரிகள் 35, ஜொஷ் ஹேஸ்ல்வூட் 126 - 5 விக்., கெமரன் க்றீன் 64 - 2 விக்., மிச்செல் ஸ்டார்க் 137 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 214 - 5 விக். (மார்னுஸ் லபுஸ்சான் 111, மிச்செல் மார்ஷ் 31 ஆ.இ., டேவிட் வோர்னர் 28, மார்க் வூட் 27 - 3 விக்.)

https://www.virakesari.lk/article/160700

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தக்கவைத்துக்கொண்டது

Published By: VISHNU

24 JUL, 2023 | 11:59 AM
image
 

(நெவில் அன்தனி)

மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைப்பட்டு வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தக்கவைத்துக்கொண்டது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியாவும் 3ஆவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றிருந்தன.

இதற்கு அமைய தொடரில் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு 2001க்குப் பின்னர் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஒன்றில் முதல் தடவையாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் வியாழக்கிழமை 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்தாலும்கூட இதற்கு முந்தைய தொடரில் ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்ததன் அடிப்படையில் ஆஷஸ் கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளும்.

நான்காவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளன்று (சனிக்கிழமை 22) மழை காரணமாக 30 ஓவர்கள் மாத்திரம் விளையாடப்பட்ட நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மீதமிருக்க அவுஸ்திரேலியாவைவிட 61 ஓட்டங்களால் இங்கிலாந்து பின்னிலையில் இருந்தது.

எனினும் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக மழை பெய்ததால் அன்றைய ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் பிற்பகல் 5.24 மணியளவில் நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது என உறுதிப்படுத்தப்பட்டது.

பென் ஸ்டோக்ஸ் அணித் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் 17 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து எதிர்கொண்ட முதலாவது வெற்றிதோல்வியற்ற முடிவு இதுவாகும். மற்றைய 16 போட்டிகளில் 12 வெற்றிகளை ஈட்டிய இங்கிலாந்து 4இல் தோல்வி அடைந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 317 (மார்னுஸ் லபுஸ்சான் 51, மிச்செல் மார்ஷ் 51, ட்ரவிஸ் ஹெட் 48, ஸ்டீவன் ஸ்மித் 41, மிச்செல் ஸ்டார்க் 36, க்றிஸ் வோக்ஸ் 62 - 5 விக்., ஸ்டுவட் ப்றோட் 68 - 2 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: 592 (ஸ்க் க்ரோவ்லி 189, ஜொனி பெயார்ஸ்டோவ் 99 ஆ.இ., ஜோ ரூட் 84, ஹெரி ப்றூக் 61, மொயின் அலி 54, பென் ஸ்டோக்ஸ் 51, உதிரிகள் 35, ஜொஷ் ஹேஸ்ல்வூட் 126 - 5 விக்., கெமரன் க்றீன் 64 - 2 விக்., மிச்செல் ஸ்டார்க் 137 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்:  214 - 5 விக். (மார்னுஸ் லபுஸ்சான் 111, மிச்செல் மார்ஷ் 31 ஆ.இ., டேவிட் வோர்னர் 28, மார்க் வூட் 27 - 3 விக்.)

ஆட்டநாயகன்: ஸக் க்ரோவ்லி

https://www.virakesari.lk/article/160769

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக இங்கிலாந்து வீரர் ஸ்டுவட் ப்றொட் திடீர் அறிவிப்பு

30 JUL, 2023 | 07:04 PM
image
 

(நெவில் அன்தனி)

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவதும் கடைசியுமான ஆஷஸ் டெஸ்ட் போட்டியுடன் தொழில்முறை கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவட் ப்றோட் திடீர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 17 வருடங்கள் விளையாடிவந்த ஸ்டுவட் ப்றோட், கடைசி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த பின்னர் உத்தியோகபூர்வமாக தனது ஓய்வு குறித்து அறிவித்தார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு வெள்ளிக்கிழமை இரவு தீர்மானித்த ஸ்டுவட் ப்றோட், கண்ணீர் சிந்தியவாறு சனிக்கிழமை இரவு தனது ஓய்வை அறிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர்களில் சக வீரர் ஜேம்ஸ் அண்டர்சனுக்கு (690 விக்கெட்கள்) அடுத்ததாக 602 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்தில் ஸ்டுவட் ப்றொட் இருக்கிறார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் வரிசையில் 5ஆம் இடத்தில் ப்றோட் இடம்பெறுகிறார்.

இலங்கைக்கு எதிராக 2007இல் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகமான ஸ்டுவட் ப்றோட், கடந்த 16 வருடங்களில் 166 டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்களைப் பூர்த்திசெய்துள்ளதுடன் 3647 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் அரங்கில் 2006இல் அறிமுகமான அவர், 17 வருடங்களில் 121 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 178 விக்கெட்களையும் 56 சர்வதேச இருபது 20 கிரிக்கெட போட்டிகளில் 65 விக்கெட்களையும்  கைப்பற்றியுள்ளார்.

ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் 147 விக்கெட்களை கைபற்றியுள்ள  ஸ்டுவட் ப்றோட், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் (195 விக்கெட்கள்), க்ளென் மெக்ரா (157) ஆகியோருக்கு அடுத்ததாக 3ஆவது இடத்தில் இடம்பெறுகிறார்.

https://www.virakesari.lk/article/161278

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதி 2 விக்கெட்களை ஸ்டுவட் ப்றோட் கைப்பற்ற ஆஸியை 49 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து - தொடர் 2 - 2 என சமன் ; வெற்றியுடன் விடைபெற்றார் ப்றோட்

01 AUG, 2023 | 11:07 AM
image
 

(நெவில் அன்தனி)

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் கடைசி 2 விக்கெட்களை ஸ்டுவட்  ப்றோட்   கைப்பற்ற, 49 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரை 2 - 2 என சமப்படுத்தியது.

ஆனால், ஆஷஸ் ஜாடியை அவுஸ்திரேலியா தக்கவைத்துக்கொண்டது.

இப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் ஸ்டுவட் ப்றோட் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

ஆஷஸ் தொடர் வரலாற்றில் இங்கிலாந்து சார்பாக அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஸ்டுவட் ப்றோட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 604 விக்கெட்களுடன் விடைபெற்றார்.

டொட் மேர்பி, அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் ஸ்டுவட் ப்றோடின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளர் ஜொனி பெயாஸ்டோவிடம் பிடிகொடுத்து கடைசியாக ஆட்டம் இழந்தனர்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றதை அடுத்த ஸ்டுவட் ப்றோடும் மொயீன் அலியும் கைகோர்த்தவாறு ஆடுகளம் விட்டு வெளியேறினர். 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய மொயீன் அலிக்கும் இது கடைசி டெஸ்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இப் போட்டியில் 384 ஓட்டங்கள் என்ற எட்டிப்பிடிக்கக் கூடிய வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 334 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

போட்டியின் ஐந்தாம் நாளான திங்கட்கிழமை (31) காலை விக்கெட் இழப்பின்றி 135 ஓட்டங்களிலிருந்து 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மொத்த எண்ணிக்கை 140 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் வோர்னர் 60 ஓட்டங்களுடனும்  இரண்டு ஓவர்கள் கழித்து உஸ்மான் கவாஜா 72 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (141 - 2 விக்.)

மானுஸ் லபுஷான் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 169 ஓட்டங்களாக இருந்தது.

ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர்.

ட்ரவிஸ் ஹெட் 43 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 54 ஓட்டங்களுடனும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலியா நெருக்கடியை எதிர்கொண்டது.

ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் அலெக்ஸ் கேரி 28 ஓட்டங்களையும் டொட் மேர்பி 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்களையும் மொயீன் அலி 3 விக்கெட்களையும் ஸ்டுவட் ப்றோட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஜூலை 27ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டி கடைசி வரை சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருந்தது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ஓட்டங்ளைப் பெற்றதுடன் அவுஸ்திரேலியா 295 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 395 ஓட்டங்களைப் பெற 384 ஓட்டங்களைப் வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 334 ஓட்டங்களைப் பெற்றது.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: 283 (ஹெரி புறூக் 85, பென் டக்கெட் 41, கிறிஸ் வோக்ஸ் 36, மொயீன் அலி 34, மிச்செல் ஸ்டார்க் 82 - 4 விக்., டொட் மேர்பி 22 - 2 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 54 - 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 295 (ஸ்டீவன் ஸ்மித் 71, உஸ்மான் கவாஜா 47, பெட் கமின்ஸ் 36, டொட் மேர்பி 34, கிறிஸ் வோக்ஸ், 61 - 3 விக்., ஜோ ரூட் 20 - 2 விக்., ஸ்டுவட் ப்றோட் 49 - 2 விக்., மார்க் வூட் 62 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: 395 (ஜோ ரூட் 91, ஜொனி பெயாஸ்டோவ் 78, ஸக் க்ரோவ்லி 73, பென் டக்கெட் 42, பென் ஸ்டோக்ஸ் 42, மிச்செல் ஸ்டார்க் 100 - 4 விக்., டொட் மேர்பி 110 - 4 விக்.)

(வெற்றி இலக்கு 384) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 334 (உஸ்மான் கவாஜா 72, டேவிட் வோர்னர் 60, ஸ்டீவன் ஸ்மித் 54, ட்ரவிஸ் ஹெட் 43, கிறிஸ் வோக்ஸ் 50 - 4 விக்., மொயீன் அலி 76 - 3 விக்., ஸ்டுவட் ப்றோட் 62 - 2 விக்.)

ஆட்டநாயகன்: கிறிஸ் ப்றோட், தொடர்நாயகர்கள்: கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து), மிச்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)

இந்தத் தொடர் முடிவில் இரண்டு அணிகளும் தலா 24 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்றுள்ளன. அத்துடன் 2 அணிகளும் மந்த கதியில் ஓவர்கள் வீசியதற்காக தலா 2 எதிர்மறை புள்ளிகள் 2 அணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/161387



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.