Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விராட் கோலியின் பாய்ச்சலில் வீழ்ந்த பாகிஸ்தான்: மாயாஜாலம் சாத்தியமானது எப்படி?

பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் பாய்ச்சல் சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

13 நிமிடங்களுக்கு முன்னர்

‘வாட் எ ஃபினிஷ்’ என்று வர்ணனையாளர் ஓங்கி எழுப்பிய குரலைக் கொண்டே ஆடுகளத்தில் நின்ற விராட் கோலி எத்தகைய ஆட்டத்தை ஆடியிருப்பார் என்பதைக் புரிந்துகொள்ள முடியும்.

கடைசி ஓவரை கச்சிதமாக வீசத் தொடங்கிய ஃபஹீம் அஷ்ரஃபின் கடைசி மூன்று பந்துகளும் விராட் கோலியின் மாயாஜால மட்டையில் சிக்கி எல்லைக் கோட்டுக்கு வெளியே பறந்தன.

அதிலும் கடைசி பந்தில் அவர் அடித்த சிக்சரை கண்டவர்கள், ஒரு முழு கிரிக்கெட் வீரருக்கு உரிய அனைத்து வகையான உடல் தகுதியுடன் அவர் இன்னும் இருப்பதாக சமூக ஊடகங்களில் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில், இந்திய அணி 32 ஓவர்களில் 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 122 ரன்களை எடுத்திருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் பாய்ச்சல் சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலிக்கு இப்போது 35 வயது நிறைவடையப் போகிறது. இந்த வயதைக் கொண்டு கிரிக்கெட் வீரர்களின் சராசரி ஓய்வுக் காலத்தை அவர் நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறலாம்.

ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான அவரது நேர்த்தியான ஆட்டம், அவர் இப்போதைக்கு கிரிக்கெட் களத்தில் இருந்து வெளியேறும் எண்ணத்திலேயே இல்லை என்பதைக் காட்டுகின்றன.

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில ஆண்டுகள் மிகவும் கொடூரமான விமர்சனங்களுடன் கடந்து சென்றன. பல சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார்.

ஆனால் உலகக் கோப்பை டி20 தொடரில் இதே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் அவர் மீண்டு வந்தார். இப்போது மீண்டும் தனது கிரிக்கெட் ஃபிட்னெஸை அவர் நிரூபித்திருக்கிறார் என்று விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.

அவர் 94 பந்துகளுக்கு 122 ரன்களை அடித்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்தியிருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்த சச்சினின் சாதனையைத் தொடுவதற்கு கோலிக்கு இன்னும் இரண்டு சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் பாய்ச்சல் சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் சச்சினை முந்துவதற்கு விராட் கோலிக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவே அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஒருநாள் போட்டிகளிலேயே அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்களில் 13 ஆயிரம் ரன்களை முடித்தார், விராட் இந்த சாதனையை 267 இன்னிங்ஸ்களில் எட்டினார்.

விராட் இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தனது 1,000 ரன்களையும் பூர்த்தி செய்தார்.

விராட், 77 சர்வதேச சதங்களை மிகக் குறைந்த போட்டிகளில் எடுத்தவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 47 சதங்களை விரவாக எடுத்தவர் என்ற பெருமையும் விராட் கோலிக்கே சொந்தமாகி இருக்கிறது.

இந்தச் சாதனைகளைக் கொண்டு பார்க்கும்போது, விராட் கோலி உலகக் கோப்பைக்கு மிக வலிமையாகவே தயாராகி இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் பாய்ச்சல் சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் சாதனைகள்

ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் தனது 50வது அரைசதத்தை அடித்தார். ஒருநாள் போட்டிகளில் அரைசதம் அடித்த 30வது பேட்ஸ்மேன் ஆனார்.

இந்தியாவின் டாப் ஆர்டரின் நான்கு பேட்ஸ்மேன்கள் அரை சதம் அல்லது அதற்கு மேல் அடித்தது இது நான்காவது முறை.

இதற்கு முன், கடைசியாக 2017இல் பர்மிங்காமில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்திருந்தனர்.

முதலில் ரோஹித் மற்றும் கில் இடையே ஒரு சதம் பார்ட்னர்ஷிப் இருந்தது, பின்னர் ராகுல் மற்றும் கோலி இடையே இருந்தது. இதன் மூலம் இந்திய அணி 47வது முறையாக ஒரே ஒருநாள் போட்டியில் 2 சத பார்ட்னர்ஷிப்களை குவித்து சாதனை படைத்தது.

கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டியில் தனது ஆறாவது சதத்தையும் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் சதத்தையும் அடித்தார்.

ரோஹித் சர்மா என்ன சொன்னார்?

பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் பாய்ச்சல் சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டத்திற்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா, டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே கே.எல்.ராகுல் ஆடும் 11இல் சேர்க்கப்பட்டதாகச் சொன்னார். காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ராகுல் விளையாடினார்.

கே.எல்.ராகுலை பாராட்டிய ரோஹித் சர்மா, "ராகுலுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடைசி நிமிடத்தில் அணியில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. காயத்தில் இருந்து மீள்வது எளிதல்ல.

டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு அவரை விளையாடச் சொன்னோம். அந்த நிலைமையில் செயல்படுவது எளிதானது அல்ல," என்றார்.

பும்ராவின் பந்துவீச்சு குறித்துப் பேசிய, ரோஹித், "காயத்தில் இருந்து திரும்பிய பிறகு அவர் பந்துவீசிய விதத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தன்னை நிரூபித்துள்ளார். அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்தார். கடந்த மாதங்களில் அவர் அதற்காக கடினமாக உழைத்தார்,” என்றார்.

கோலி ராகுலிடம் என்ன சொன்னார்?

பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் பாய்ச்சல் சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கோலியுடன் இணைந்து கே.எல்.ராகுலும் சதம் அடித்தார்.

பின்னர் போட்டியின்போது கே.எல்.ராகுலிடம் என்ன சொன்னார் என்று கோலி கூறினார்.

"நாங்கள் இருவரும் பாரம்பரியமான கிரிக்கெட் விளையாடுகிறோம். நாங்கள் மிகவும் ஆடம்பரமான ஷாட்களை அடிப்பதில்லை. இருவரும் பார்ட்னர்ஷிப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

தொடர்ந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் கூறினேன். இது மறக்க முடியாத பார்ட்னர்ஷிப். ராகுல் திரும்பி வந்திருப்பது எங்களுக்கு நல்லது,” என்றார்.

போட்டியில் நடந்தது என்ன?

பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் பாய்ச்சல் சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்களை குவித்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பெர் 10) தொடங்கிய போட்டி மழையால் தடைப்பட்ட நிலையில் நேற்று, திங்கள் (செப்டம்பர் 11) மாலை 4.30 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

இந்தப் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு 356 ரன்களை சேர்த்தனர்.

விராட் கோலி 122 ரன்களும், கே. எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து இருவரும் சேர்ந்து 233 ரன்களை எடுத்துள்ளனர். ஆசியக் கோப்பையில் ஒரு ஜோடி சேர்த்த அதிபட்ச ரன்கள் இதுவாகும்.

இது விராட் கோலியின் 47ஆவது சதம். கே எல் ராகுல் ஒரு சிறப்பான கம்பேக் கொடுத்து தனது ஏழாவது சதத்தை எட்டினார்.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மேன் கில் ஆகிய இருவரும் முறையே 49 பந்துகளுக்கு 56 ரன்களும், 52 பந்துகளுக்கு 58 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் அணியில் ஷதாப் மற்றும் ஷஹீன் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் பாய்ச்சல் சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை விட்டதும் சிறிது நேரத்திற்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் விடாமல் மழை பெய்ததால், ஆட்டம் திங்கள்கிழமைக்கு (ரிசர்வ் டே) ஒத்தி வைக்கப்பட்டது. இன்று பிற்பகலும் கொழும்பில் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருப்பினும் ஒரு வழியாக திங்கள் மாலை 4:30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற்றது.

இதன்மூலம் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. ஆனால் 8 விக்கெட்டுகள் வரை அந்த அணியால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி இரு வீரர்கள் களத்துக்குள் இறங்காததால், இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

https://www.bbc.com/tamil/articles/cv210wrg920o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாக்கிஸ்தான் ப‌டு தோல்வி

நிறைய‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விட்டார்க‌ள்....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வ‌டிவாய் இந்தியாவை வென்று இருக்க‌னும்
இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் ஆட்ட‌த்தால் இந்தியா வெற்றி😏..................

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையின் வெற்றி அலைக்கு முடிவு கட்டி ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

12 SEP, 2023 | 11:35 PM
image
 

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 41 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா, முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டிக்கு முன்பதாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான 13 வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கையின் வெற்றி அலைக்கு இதன் மூலம் இந்தியா முடிவு கட்டியது.

இந் நிலையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வியாழக்கிழமை 14ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட தகுதிபெறும். 

அப் போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டால் நிகர ஓட்ட வேக அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு இலங்கை முன்னேறும்.

இன்றைய போட்டியில் 20 வயதான துனித் வெல்லாலகே, சரித் அசலன்க ஆகியோரின் சுழற்சியில் தடுமாற்றம் அடைந்த இந்தியா 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.

ஆனால், இலங்கை வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் வெல்லாலகே, அசலன்க ஆகியோரின் ஆற்றல்களை மழுங்கடிக்கச் செய்தது.

ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, கே.எல். ராகுல் ஹார்திக் பாண்டியா ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றிய வெல்லாலகே தனது 13ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

மறுபக்கத்தில் மற்றைய சுழல்பந்துவீச்சாளர் சரித் அசலன்கவும் திறமையாக பந்துவீசி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

39ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் சரித் அசலன்க இதற்கு முன்னர் 6 போட்டிகளில் மாத்திரம் பந்து வீசியிருந்ததுடன் மொத்தமாக 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றியிருந்தார்.

கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2022இல் பந்துவீசியிருந்த சரித் அசலன்க 22 போட்டிகளின் பின்னரே இன்றைய தினம் பந்துவீசி தனது தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.

அவர், இஷான் கிஷான், ரவிந்த்ர ஜடேஜா, ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 213 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை பெற்றது.

ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 67 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், ஷுப்மான் கில் (19), விராத் கோஹ்லி (3), ரோஹித் ஷர்மா ஆகியோர் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இந்தியா நெருக்கடியை எதிர்கொண்டது.

ரோஹித் ஷர்மா 48 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

தனது 248ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய ரோஹித் ஷர்மா 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 10,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த 15ஆவது வீரரானார். இந்தியர்களில் 6ஆவது வீரரானார்.

அத்துடன் விராத் கோஹ்லிக்கு அடுத்ததாக ரோஹித் ஷர்மா குறைந்த இன்னிங்ஸ்களில் 10000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்துள்ளார்.

கோஹ்லி 205 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை அடைந்ததுடன் ரோஹித் ஷர்மாவுக்கு 241 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. முதன் முதலில் 10000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த சச்சின் டெண்டுகல்கர் 259 இன்னிங்ஸ்களில் அந்த மைல்கல் சாதனையை எட்டினார்.

தொடர்ந்து இஷான் கிஷான், கே. எல். ராகுல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் ராகுல் (39), இஷான் கிஷான் (33) ஆகிய இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அத்துடன் இந்தியா 6 விக்கெட்களை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

இந்தியா 47 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது சிறு மழை பெய்ததால் மாலை 6.22 மணிக்கு ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடர்ந்தபோது மேலும் 16 ஓட்டங்களை மொத்த எண்ணிக்கைக்கு சேர்த்தது.

அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களைப் பெற்றதுடன் மொஹமத் சிராஜ் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 10 ஓவர்களில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சரித் அசலன்க ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 9 ஓவர்களில் 18  ஓட்டங்களுக்கு   4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

214 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 41.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான அடி தெரிவும் கவனக்குறைவான ஆட்டமும் இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

சரித் அசலன்க (22), தனஞ்சய டி சில்வா (41), துனித் வெல்லாலகே  ஆகியோர் மாத்திரம் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்க (6), திமுத் கருணாரட்ன (2) ஆகிய இருவரும் கவனக் குறைவான துடுப்பாட்டங்களால் நடையைக் கட்டினர். 

இந்தப் போட்டிவரை 4 இன்னிங்ஸ்களில் பிரகாசிக்கத் தவறிய திமுத் கருணாரட்ன பெரும்பாலும் அடுத்துவரும் போட்டிகளில் குசல் பெரேராவுக்கு வழிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த சதீர சமரவிக்ரம பொறுமையை கடைப்பிடிக்காமல் அவசரப்பட்டு 17 ஓட்டங்களுடன் விக்கெட்டை தாரை வார்த்தார்.

சரித் அசலன்க 22 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார்.

அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் மோசமான அடி தெரிவினால் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந் நிலையில் தனஞ்சய டி சில்வாவும் துனித் வெல்லாலகேயும் ஜோடி சேர்ந்த 7ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பெரும் சோதனையைக் கொடுத்தனர்.

ஆனால், தனஞ்சய டி சில்வா பொறுமை இழந்து பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய இளம் வீரர் துனித் வெல்லாலகே 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பின்வரிசையில் எவரும் இந்தியாவின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்கவில்லை.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சகலதுறைகளிலும் பிரகாசித்த துனித் வெல்லாலகே எவ்வித கேள்விக்கும் இடமின்றி ஆட்ட நாயகனானார்.

https://www.virakesari.lk/article/164447

  • கருத்துக்கள உறவுகள்
Posted

‘ஆட்டநாயகன்’ யாரிந்த துனித் வெல்லாலகே?

ஆசியக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 213 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதில் இலங்கை அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான துனித் வெல்லாலகே, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருடைய சுழற்பந்து வீச்சில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் வீழ்ந்தனர். அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த துனித் வெல்லாலகே யார்?

May be an image of 4 people and text

20 வயதே நிரம்பிய இளம் சுழற்பந்து வீச்சாளரான இவர், 1 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். 2022இல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான இவர், அதற்கு முன்பு 2022 ஐசிசி 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். அந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய துனித் வெல்லாலகே, இரு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார்.

மேலும் அந்தத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 113 ரன்கள் எடுத்து, இலங்கை அணி வெற்றி பெற உதவினார்.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை தொடரில், சதம் அடித்த இலங்கை அணியின் முதல் அணித்தலைவர் இவரே ஆவார். அந்தத் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய துனித் வெல்லாலகே, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இவருடைய பந்து வீச்சின் சராசரி 13.58. மேலும் இவர் அத்தொடரில் 264 ரன்களைக் குவித்து இலங்கை அணியின் சார்பாக அதிக ரன்களை எடுத்த வீரராகவும் திகழ்ந்தார்.

முத்தையா முரளிதரன், அஜந்த மென்டிஸ் மற்றும் அகில தனஞ்ஜெயவிற்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4ஆவது இலங்கை பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே.

அஜந்தா மென்டிஸின் நிழல் என்று கருதப்படும் துனித் வெல்லாலகே இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக கணிக்கப்படுகிறார்.

Dunith Wellalage | துனித் வெல்லாலகே

தற்போது ஆசியக்கோப்பை தொடரில் விளையாடி வரும் இவர், இதுவரை 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சு மட்டுமில்லாமல் துடுப்பாட்டத்திலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார் துனித் வெல்லாலகே. 214 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

Dunith Wellalage Bowling

இந்நிலையில், இக்கட்டான சூழலில் களமிறங்கிய துனித் வெல்லாலகே துடுப்பாட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். அணியின் வெற்றிக்காக கடைசிவரை போராடிய துனித் வெல்லாலகே 46 பந்துகளில் 42 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தாலும், அணிக்காக பந்துவீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட துனித் துடுப்பாட்டத்திலும் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

Dunith Wellalage | துனித் வெல்லாலகே

https://thinakkural.lk/article/272861

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துனித் வெல்லாலகே: இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்களை அச்சுறுத்தும் இலங்கையின் புதிய நட்சத்திரம்

துனித் வெல்லாலகே

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டார் வெல்லாலகே

54 நிமிடங்களுக்கு முன்னர்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் யாராவது ஒருவரைக் கண்டு இந்திய அணி அச்சம் கொண்டது என்றால் அது இவராகத்தான் இருக்கும்.

விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில் என மூத்த வீரர்கள் அனைவரையும் அடுத்தடுத்து வெளியேற்றியபோது இவரைக் கண்டு இந்தியா முழுவதும் போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அவர் துனித் வெல்லாலகே. இலங்கை அணியின் 20 வயது நட்சத்திரம்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்திருந்த போதிலும், இலங்கை மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியிலுள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் இலங்கை அணி பேசுப் பொருளாக மாறியுள்ளது. அதற்கும் அவரே காரணம்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அங்கீகாரத்தை பெற்ற வெல்லாலகேயின் இப்போது எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியுடனான போட்டியில் துனித் வெல்லாலகே, பந்து வீச்சு, களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டத்தில் வெளிப்படுத்திய திறமையே, இலங்கை அணி தொடர்பில் பேச பிரதான காரணமாக அமைந்தது.

 
துனித் வெல்லாலகே

பட மூலாதாரம்,GETTY IMAGES

யார் இந்த வெல்லாலகே?

2003ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி துனித் நெத்மிக்க வெல்லாலகே, மொறட்டுவ பகுதியில் பிறந்துள்ளார்.

மொறட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்துள்ளார் அவர்.

அவர் தனது 9வது வயதில் பாடசாலையின் கிரிக்கெட் கழகத்தில் இணைந்து, கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துள்ளார்.

புனித செபஸ்டியன் கல்லூரியின் 13 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை அவர் 2013ம் ஆண்டு பெற்றுக்கொண்டுள்ளார்.

பாடசாலை சார்பில் கிரிக்கெட் விளையாட்டில் சகல துறைகளிலும் பிரகாசித்த துனித் வெல்லாலகே, 2016ம் ஆண்டு மருதானை புனித ஜோசப் கல்லூரியில் இணைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அந்த பாடசாலையின் கிரிக்கெட் குழாமின் வதிவிட பிரதிநிதியான துனித் வெல்லாலகே, 2022ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 19 வயதிற்குபட்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்காக தெரிவானார்.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணித் தலைவராக துனித் வெல்லாலகே நியமிக்கப்பட்டார்.

 
துனித் வெல்லாலகே

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாகசம்

2019ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்களை பெற்ற வீரராக துனித் வெல்லாலகே வரலாற்றில் பதிவானார்.

அவர் அந்த போட்டிகளில் 17 விக்கெட்களை தனதாக்கிக் கொண்டார்.

ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடி, தலா 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார் துனித் வெல்லாலகே.

பேட்டிங்கிலும் திறமைகளை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே, சதம் மற்றும் அரை சதம் அடங்களாக அந்த தொடரில் 264 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையையும் துனித் வெல்லாலகே பெற்றுக்கொண்டார்.

தென் ஆபிரிக்கா அணியுடனான அரையிறுதிப் போடடியில் துனித் வெல்லாலகே 113 ஓட்டங்களை பெற்று, வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்;.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒன்றில் சதம் பெற்ற முதலாவது இலங்கை அணித் தலைவர் என்ற பெருமையையும் துனித் வெல்லாலகே தனதாக்கிக் கொண்டார்.

 
துனித் வெல்லாலகே

பட மூலாதாரம்,GETTY IMAGES

''இந்த பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் - அவர் இலங்கையின் தலைவர்"

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்பின் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடனான போட்டியில் துனித் வெல்லாலகே அடித்த சதம் மற்றும் அவரது திறமைகள் குறித்து, சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியது.

''அவரது பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் போட்டியில் அதிக விக்கெட்களை பெற்றுக்கொண்டமை ஏன் என்பதை உங்களாலேயே புரிந்துக்கொள்ள முடியும்" என மேற்கிந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் காலோஸ் பிரத்வெட் அங்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன், துனித் எதிர்காலத்தில் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என சர்வதேச கிரிக்கெட் விமர்சகரான எலன் வில்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

துனித் வெல்லாலகே, தந்திரமான கிரிக்கெட் வீரர் என இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரான ரசல் ஆனல்ட் குறிப்பிட்டுள்ளார்.

''தந்திரத்தில் அவர் திறமையாளர். மைதானத்தில் களத்தடுப்பிற்கு வீரர்களை நிறுத்தும் விதம் மற்றும் விக்கெட்களை கைப்பற்றும் விதத்திலும் அவர் ஆக்ரோஷமாக விளையாடுகின்றார். இது அவரை சம்பியனாக்கும் விதத்திற்கு கொண்டு செல்கின்றது." என அவர் கூறியுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது, இலங்கை மீண்டெழும் அணிக்காக துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய ஏ அணியுடனான போட்டி குழாமிலும் துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டார்.

 
துனித் வெல்லாலகே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவை வியப்பில் ஆழ்த்திய துனித் வெல்லாலகே

அவுஸ்திரேலிய அணி எதிரான தனது முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் துனித் வெல்லாலகே பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் பிரபல வீரர் ஸ்டுவத் சுமித்தின் விக்கெட் வீழ்த்தி, தனது சர்வதேச ஒரு நாள் தொடரில் முதலாவது விக்கெட்டை தனதாக்கிக் கொண்டார்.

துனித் வெல்லாலகே, தனது முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு விக்கெட்களை கைப்பற்றியிருந்ததுடன், ஒரு ஆட்டமிழப்பையும் ஏற்படுத்தியிருந்தார்.

அவர் ஐந்து போட்டிகளில் 9 விக்கெட்களை கைப்பற்றி, அந்த தொடரில் அதிக விக்கெட்களை பெற்ற வீரர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதை அடுத்து, அவர் டெஸ்ட் அங்கீகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

துனித் வெல்லாலகே

பட மூலாதாரம்,GETTY IMAGES

''மட்டையும் பந்தும் முதலில் தந்தது அம்மா"

தான் அவசரமான பயணமொன்றை மேற்கொள்ளவில்லை எனவும், படிப்படியாகவே முன்னேறியதாகவும் துனித் வெல்லாலகே அண்மையில் இடம்பெற்ற நேர்காணலொன்றில் தெரிவித்திருந்தார்;.

தனக்கு பயிற்சிகளை வழங்கிய ஒவ்வொரு பயிற்சியாளர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்திருந்தார்.

துனித் வெல்லாலகேயின் தந்தையான நிரோஷன் வெல்லாலகேவும் கிரிக்கெட் விளையாட்டு வீரராவார். அவர் மொறட்டுவ வெல்ஸ் குமார கல்லூரியின் கிரிக்கெட் அணியில் 1993ம் ஆண்டு அணித் தலைவராக விளையாடியுள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு தந்தையிடமிருந்து கிடைத்த வழிகாட்டல் மிக முக்கியமானது என துனித் வெல்லாலகே கூறியுள்ளார்.

துடுப்பாட்ட மட்டை மற்றும் பந்து ஆகியவற்றை முதலில் வழங்கியது தனது தாய் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

துனித் வெல்லாலகே, தனது குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதுடன், அவருக்கு இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர்.

 
துனித் வெல்லாலகே

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவிற்கு எதிரான சுப்பர் 4 சுற்றில் துனித் வெல்லாலகேயின் சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியில் ஐந்து விக்கெட்களை பெற்றுக்கொண்ட முதலாவது இளைய வீரர் என்ற பெருமையை கடந்த இந்திய அணியுடனான போட்டியின் போது துனித் வெல்லாலகே தனதாக்கிக் கொண்டார்.

இதன்படி, அன்றைய போட்டியில் துனித் வெல்லாலகே ஐந்து விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

துனித் வெல்லாலகே, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 40 ஓட்டங்களை கொடுத்து, ஐந்து விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். இதன்படி, அவர் ஒரு நாள்; சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அன்றைய போட்டியில் சிறந்த பந்து வீச்சாளராக பதிவானார். அதேபோன்று 46 பந்துகளை எதிர்கொண்டு, ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை துனித் வெல்லாலகே பெற்றுக்கொண்டார்.

 
துனித் வெல்லாலகே

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெல்லாலகேவை சேர்க்க போட்டி போடும் ஐபிஎல் அணிகள்

இந்திய அணிக்கு எதிராக துனித் வெல்லாலகே விளையாடிய விதம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் மாத்திரமன்றி, பல ஐ.பி.எல் அணிகளும் அவதானத்தை செலுத்தியுள்ளன.

மும்பை இந்தியன்ஸ், டில்லி கெப்பிட்டல், ராஜஸ்தான் ரோயல்ஸ் உள்ளிட்ட பல அணிகள் துனித் வெல்லாலகே, தொடர்பில் சமூகவலைத் தளத்தில் அவதானம் செலுத்தியிருந்ததை காண முடிந்தது.

எதிர்வரும் தசாப்தத்தில் துனித் வெல்லாலகே, இலங்கையின் ஒரு நாள் போட்டிகளில் மிக முக்கியமான வீரராக திகழ்வார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cpe2xqx919yo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாகிஸ்தானை கடைசிப் பந்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை

15 SEP, 2023 | 01:57 AM
image
 

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தீர்மானம் மிக்க சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் பாகிஸ்தான் 2 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இநதியாவை எதிர்த்தாடவுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையும் இந்தியாவும் இறதிப் போட்டியில் எட்டாவது தடவையாக சந்திக்கவுள்ளன. மேலும் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை விளையாடவிருப்பது இது 11ஆவது தடவையாகும்.

பாகிஸ்தான் அணியை கடந்த 8 வருடங்களின் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்  இலங்கை அணி வெற்றி கொண்டுள்ளது. 

பாகிஸ்தான் 42 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்ற பின்னர் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 42 ஓவர்களில் 252 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 42 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இப் போட்டியில் 41ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அதன் பின்னர் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

எனினும் கடைசி 2 பந்துகளில் பவுண்டறி ஒன்றையும் இரண்டு ஓட்டங்களையும் சரித் அசலன்க அடித்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்த வெற்றியில் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களும் பங்காற்றியிருந்தன.

திமுத் கருணாரட்னவுக்குப் பதிலாக ஆரம்ப வீரராக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட குசல் பெரேரா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடினார்.

8 பந்துகளில்  4 பவுண்டறிகளுடன் 17 ஓட்டங்களைப் பெற்றிருந்த குசல் பெரேரா, சக வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவின் அவசரத் துடுக்கை காரணமாக ரன் அவுட் ஆனார். (20 - 1 விக்.)

அதன் பின்னர் பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 57 ஓட்டஙகளைப் பகிர்ந்திருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க 29 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் குசல் மெண்டிஸும் சதீர சமரவிக்ரமவும் புத்தி சாதுரியத்துடன் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் டக்வேர்த் லூயிஸ் முறையில் பாகிஸ்தானைவிட இலங்கையை முன்னிலையில் இட்டனர்.

தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 98 பந்துகளில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சதீர சமரவிக்ரம தனது விக்கெட்டைத் தாரை வார்த்தார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் எவ்வாறு முன்னால் நகர்ந்து ஆட்டம் இழந்தாரோ அதே பாணியில் இந்தப் போட்டியிலும் விக்கெட் காப்பாளரால் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.

51 பந்துகளை எதிர்கொண்ட சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களைப் பெற்றார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த குசல் மெண்டிஸ் 87 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 91 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். (210 - 5 விக்.)

அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் தசுன் ஷானக்க (2), தனஞ்சய டி சில்வா (5), துனித் வெல்லாலகே (0), ப்ரமோத் மதுஷான் (1) ஆகிய நால்வரும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

சரித் அசலன்க துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடி 47 பந்துகளில் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைப் பெற்று இலங்ககையின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் இப்திகார் அஹ்மத் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 52 பந்துகளுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக சீரற்ற காலநிலை காரணமாக இரண்டேகால் மணி நேரம் தாமதித்து ஆரம்பித்த போட்டி அணிக்கு 45 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. 5ஆவது ஓவரில் பக்கார் ஸமான் (4) முதலாவதாக ஆட்டம் இழந்தபோது பாகிஸ்தான் 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

4 மாத இடைவெளியின் பின்னர் மீண்டும் அணியில் இடம்பிடித்த ஆரம்ப வீரர் அப்துல்லா ஷபிக்குடன் ஜோடி சேர்ந்த பாபர் அஸாம் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தார். பாபர் அஸாம் 29 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களாக இருந்தபோது அப்துல்லா ஷபிக் 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மொஹமத் ஹரிஸ் (2), மொஹமத் நவாஸ் (12) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். (130 - 5 விக்.)

மொஹமத் நவாஸ் ஆட்டம் இழந்ததும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 26 நிமிடங்கள் தடைப்பட்டது. அப்போது பாகிஸ்தான் 27.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் அதன் ஓட்ட வேகம் போதுமானதாக இருக்கவில்லை.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது 3 ஓவர்கள் குறைக்கப்பட்டு அணிக்கு 42 ஓவர்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

எஞ்சிய 14.2 ஓவர்களில் பாகிஸ்தான் மேலும் 122 ஓட்டங்களைக் குவித்ததுடன் மேலதிகமாக 2 விக்கெட்களை மாத்திரம் இழந்தது.

6ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த மொஹமத் ரிஸ்வான், அப்துல்லா ஷிபிக் ஆகிய இருவரும் 108 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானைப் பலப்படுத்தினர்.

மொஹமத் ரிஸ்வான் 73 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 86 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபிக் 52 ஓட்டங்களையும் இப்திகார் அஹ்மத் 40 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் மதீஷ பத்திரண 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரமோத் மதுஷான் 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Charith-Asalanka.jpg

Dunith-Wellalage-and-Matheesha-Pathirana

Babar-Azam-congratulates-Shaheen-Shah-Af

Sri-Lankan-fans-turned-up-in-good-number

Shadab-Khan_s-sharp-return-catch-got-him

https://www.virakesari.lk/article/164607

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா வ‌ங்கிளாதேஸ்சிட‌ம் தோல்வி

அடுத்த‌ விளையாட்டில் இல‌ங்கையிட‌ம் தோல்வி அடைந்தால் இன்னும் ம‌கிழ்ச்சி...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்களாதேஷுக்கு ஆறுதல் வெற்றி ; இறுதிக்கு முன்னேறிய இந்தியாவுக்கு தோல்வி

16 SEP, 2023 | 05:15 AM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (15) கடைசி ஓவர் வரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவுக்குக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4 போட்டியில் ஒரு பந்து மீதமிருக்க பங்களாதேஷ் 6 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

முதல் சுற்றில் ஆப்கானிஸ்தானை மாத்திரம் வெற்றிகொண்ட பங்களாதேஷ் சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.

எனினும் இந்தியாவுடனான தனது கடைசிப் போட்டியில் வெற்றியீட்டிய ஆறுதலுடன் பங்களாதேஷ் நாடு திரும்பவுள்ளது.

இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்தியாவுக்கு இது அசுப தோல்வியாக அமைந்துவிட்டது.

பங்களாதேஷின் வெற்றியில் அணித் தலைவர் ஷிக்கிப் அல் ஹசன், தௌஹித் ரிதோய் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், நசும் அஹ்மதின் சிறப்பான துடுப்பாட்டம், தன்சிம் ஹசன் ஷக்கிபின் துல்லியமான பந்துவீச்சு என்பன பிரதான பங்காற்றின.

மறுபக்கத்தில் ஷுப்மான் கில் தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்தி குவித்த சதம் இந்தியா அடைந்த தோல்வியினால் வீண்போனது.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 259 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ரோஹித் ஷர்மா (0), திலக் வர்மா (5) ஆகிய இருவரும் முதல் 3 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்ததுடன் மொத்த எண்ணிக்கை 17 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் ஷுப்மான் கில், கே. எல். ராகுல் (19) ஆகிய இருவரும் 3ஆவது வீக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், ராகுல், இஷான் கிஷான் (5) ஆகிய இருவரும் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (94 - 4 விக்.)

தொடர்ந்து ஷுப்மான் கில்லும் சூரியகுமார் யாதவ்வும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்ளைப் பகிர்ந்திருந்தபோது சூரியகுமார் யாதவ் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மொத்த எண்ணிக்கை 170 ஓட்டங்களாக இருந்தபோது ரவிந்த்ர ஜடேஜா (7) நடையைக் கட்டினார்.

மறுபக்கத்தில் மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஷுப்மான் கில் 133 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 121 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இது இந்தியாவுக்கு பேரிடியாக அமைந்தது. (209 - 7 விக்.)

எனினும் அக்சார் பட்டேல், ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 249 ஓட்டங்களாக உயர்த்தினர். ஆனால், தாகூர்  11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அக்சார் பட்டேல் 34 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

அத்துடன் இந்தியாவின் வெற்றிக் கனவு கலைந்துபோனது.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

கடைசி ஓவரை வீசிய தன்ஸிம் ஹசன் சக்கிப் முதல் 3 பந்துகளில் ஓட்டம் கொடுக்கவில்லை. 4ஆவது பந்தில் மொஹமத் ஷமி பவுண்டறி விளாசினார். ஆனால் அடுத்த பந்தில் ரன் அவுட் ஆக பங்களாதேஷின் வெற்றி உறுதியானாது.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைக் குவித்தது.

முன்வரிசை வீரர்களான தன்ஸித் ஹசன் (13), லிட்டன் தாஸ் (0), அனாமுல் ஹக் (4), மெஹிதி ஹசன் மிராஸ் (13) ஆகிய நால்வரும் பிரகாசிக்கத் தவறினர்.

இதன் காரணமாக 14 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும் ஷக்கிப் அல் ஹசன், தௌஹித் ரிதோய் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 5ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஷக்கிப் அல் ஹசன் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களையும் தௌஹித் ரிதோய் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் நசும் அஹ்மத் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

மெஹிதி ஹசன் 29 ஓட்டங்களுடனும் தன்ஸிம் ஹசன் சக்கிப் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் ஷமி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டி முடிவுடன் சுப்பர் 4 சுற்று நிறைவில் பங்களாதேஷ் 3ஆம் இடத்திற்கு முன்னேறியதுடன் பாகிஸ்தான் 4ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

இது இவ்வாறிருக்க இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆசிய சம்பினைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இதே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/164681

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதரவு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது : எம்மால் புரட்சியை ஏற்படுத்த முடியும் - தசுன் சானக்க

16 SEP, 2023 | 01:45 PM
image
 

(எம்.வை.எம்.சியாம்)

சவால்கள் ஒருபோதும் முடிவுறாது. ஓவ்வொரு சவால்களையும் எதிர்கொள்ளவே எதிர்பார்க்கின்றோம். பாகிஸ்தானுடனான போட்டியில் கடைசி பந்து வரையும் குறிப்பாக போட்டியை வெல்வார்கள் என்று ஆவலுடனும், நம்பிக்கையோடும் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள் ஒரு காலத்தில் எமக்கு இல்லாமல் போயிருந்த ஆதரவு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஓரணியாக முன்னோக்கி செல்ல அது மிகவும் முக்கியமானது.  எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்ள சகல வீரர்களும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.

ஆசியா கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (17) மோதவிருக்கும் நிலையில் இந்த இறுதிப் போட்டி தயார் நிலை குறித்து  ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நான் ஓட்டங்களை பெறுவதற்கு எதிர்பார்க்கிறேன்.நான் களமிறங்கும் ஒவ்வொரு போட்டியும் ஒன்றுக்கொன்று மாறுபாடானது.

சிறு பின்னடைவொன்று இருக்கிறது. இந்தியா போன்று துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்களைக்கொண்ட நாடு. இந்தியாவில் என்னால் பிரகாசிக்க முடியும் என்று நம்புகிறேன்.

பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டிக்கு பிறகு சிறந்த நிலைக்கு வந்துள்ளோம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் உலகக்கிண்ணத்  தொடர்பில் எம்மால் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன்.

அணியின் தரம் நன்றாகவே உள்ளது. அணிக்கு வரும் வீரர்கள் பழைய வீரர்களா, புதுமுக வீரர்களா என்று பார்ப்பதில்லை. இந்த தொடரின் போது துனித் வெல்லாலகே மற்றும் மதீஷ பத்திரண ஆகியோர் எவ்வளவு சிறப்பாக விளையாடி தேவையான சந்தர்ப்பங்களில் ஓட்டங்களையும், விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அதுவே இடம்பெற வேண்டும். அணியிலுள்ள சகல கிரிக்கெட் வீரர்களும் சிறந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்று குறிப்பிடலாம்.

மேலும் சவால்கள் ஒருபோதும் முடிவுறாது. ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொள்ளவே எதிர்பார்க்கின்றோம். எமக்கு போன்றே அவர்களுக்கு நாமும் சவாலே.

ஒவ்வொரு போட்டிகளினும் போது ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த காலத்தில் எமக்கு ஆதரவளித்து இருந்தமைக்கு நன்றி. குறிப்பாக பாகிஸ்தானுடனான போட்டியில் கடைசி பந்து வரையும் குறிப்பாக போட்டியை வெல்வார்கள் என்று ஆவலுடனும், நம்பிக்கையோடும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு காலத்தில் எமக்கு இல்லாமல் போயிருந்த ஆதரவு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஓரணியாக முன்னோக்கி செல்ல அது மிகவும் முக்கியமானது. எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாதுகாத்துக்கொள்ள சகல வீரர்களும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்.

இந்த போட்டித் தொடருக்கு நாம் சாதாரண அணியாகவே வந்தோம். கடந்த முறையும் அப்படித்தான். நாம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் என்று எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். குறிப்பாக இலங்கைக்காக கிரிக்கெட் விளையாடிவர்களேனும் நினைத்திருக்கமாட்டார்கள்.

அந்தளவுக்கு பாகிஸ்தான் அணி வலுவானது. இந்தியா அணியும் வலுவானது. பங்களாதேஷ் அணியும் வலுவானது. அவர்களால் முன்னேறி வர முடியாமல் போனாலும் அவர்களுக்கும் சிறந்த அணியோன்று உள்ளது. நாம் சாதாரணமாக வெற்றியை கொண்டாடினோம். ஆடம்பரமாக செயற்படுவதற்கு ஒன்றுமில்லை. நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/164705

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசிய கோப்பை: இலங்கையை இந்தியா வெல்லுமா? வெற்றியை தீர்மானிக்கும் 5 அம்சங்கள்

ஆகிய கோப்பை இறுதிப் போட்டி: இலங்கை- இந்தியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சஞ்சய் கிஷோர்
  • பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி
  • 17 செப்டெம்பர் 2023, 05:09 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கிரிக்கெட்டில் இந்திய துணைக் கண்டத்தின் மகுடத்திற்கான ஆட்டம் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது. கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானம் ஒன்பதாவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியை நடத்துவதற்காக தயாராக இருக்கிறது.

ஒன்பதாவது ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது.

இந்தியாவில் இன்னும் மூன்று வாரங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஆசியக் கோப்பையை வெல்வது இந்திய அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றதை போன்று மீண்டும் நிகழ்த்தி காட்டும் அழுத்தம் ரோகித் சர்மா மற்றும் அவரது தலைமையிலான அணி மீது உள்ளது.

ஆசிய கோப்பையில் இதுவரை இந்திய அணியின் செயல்பாடு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே உள்ளது.

நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் இந்திய அணி மீண்டும் சரித்திரம் படைக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் மத்தியில் ரோஹித் சர்மா தலைமையிலான அணியால் ஏற்படுத்த முடியவில்லை.

 
ஆகிய கோப்பை இறுதிப் போட்டி: இலங்கை- இந்தியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆசியக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பாதை பாகிஸ்தானுக்கு எதிரான மோசமான ஆட்டத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேபாளத்திற்கு எதிரான வலிமையான வெற்றி மூலம் இந்திய அணிக்கு சூப்பர் ஃபோர் சுற்றில் இடம் கிடைத்தது.

லீக் ஆட்டத்தில் மழை காரணமாக இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் பாதிக்கப்பட்டதை போன்றே சூப்பர் ஃபோர் சுற்றிலும் இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரிசர்வ் டே அன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

முதல் போட்டியில் மழை குறுக்கீட்டிற்குப் பிறகு, இரண்டு நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானை மோசமாக வீழ்த்திய இந்தியா, பின்னர் இலங்கைக்கு எதிராக திரில் வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

அதேநேரம் சூப்பர் ஃபோரின் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, இந்திய அணி மூலம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மறுபுறம், இலங்கை அணி தனது சொந்த மைதானத்தில் இறுதிப் போட்டியை விளையாடுகிறது. பல்லாயிரக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் சூழ்ந்திருக்க இலங்கையை அதன் மண்ணில் வீழ்த்துவது என்பது அத்தனை எளிதல்ல.

இந்த ஆட்டத்தில் வென்று கோப்பையை வசப்படுத்த ரோகித் சர்மா தலைமையிலான அணி கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் என்ன?

 
ஆகிய கோப்பை இறுதிப் போட்டி: இலங்கை- இந்தியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1. சொந்த மண்ணில் புலியாக சீறும் இலங்கை அணி

உள்ளூர் மைதானத்தில் தங்களை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் என்பதை இந்திய அணிக்கு இலங்கை அணி கடந்த வாரம் உணர்த்தியது.

இந்திய அணியை 213 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கியது இலங்கை. இந்தியாவின் 10 விக்கெட்களையும் இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர். துனித் வெல்லாலகே 5 விக்கெட்களையும் அசலங்கா 4 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பிரேமதாசா மைதானம் மெதுவானதாகவும் பந்து நன்றாக திரும்புவதற்கு ஏதுவானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆட்டத்தின் நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அதேநேரம் இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக, சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனா ஆட்டத்தில் இடம்பெறவில்லை.

அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஷகான் அரசீகே சேர்க்கப்பட்டுள்ளார். துனித் வெல்லாலகே, தனஞ்ஜெய் டி செல்வா ஆகியோர் அணியில் உள்ளது இலங்கைக்கு பலம். கடந்த ஆட்டத்தில், விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா என முக்கிய விக்கெட்களை துனித் வெல்லாலகே கைப்பற்றியிருந்தார். எனவே, நிச்சயம் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி அளிப்பார்கள்.

 
ஆகிய கோப்பை இறுதிப் போட்டி: இலங்கை- இந்தியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2. குசால் - சதீர ஆகியோரை விரைவாக வீழ்த்த வேண்டியது அவசியம்

குஷால் மெண்டீஸை இலங்கை அணி பெரிதும் நம்பி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 91 ரன்களை எடுத்தது மூலம் தான் நல்ல ஃபார்மில் இருப்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 253 ரன்கள் எடுத்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் அவர் இருக்கிறார். முதல் இடத்தில் இந்திய வீரர் சுப்மன் கில் உள்ளார்.

கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 91 ரன்கள் அடித்ததை தவிர்த்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராக மற்றொரு ஆட்டத்தில் 50 ரன்கள், ஆஃப்காகின்ஸ்தான் அணிக்கு எதிராக 92 ரன்கள் என அவர் எடுத்திருக்கிறார். மெண்டீஸ் ஷார்ட் அல்லது பேக்-ஆஃப்-எ-லெங்த் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்படுகிறார். எனவே, இந்திய வேகப்பந்து வீச்சாளர் அவருக்கு ஷார்ட் பால் வீச முயற்சிக்க கூடும்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் அவருக்கு நெருக்கடியாக இருக்கிறார்கள். ரவீந்திர ஜடேஜா - குசல் மெண்டிஸ் இடையேயான மோதல் சுவாரஸ்யமாக இருக்கும்.

'சூப்பர் ஃபோர்' அரங்கில் அனைவரையும் கவர்ந்த மற்றொரு பேட்ஸ்மேன் 28 வயதான சதீர சமரவிக்ரம. கடந்த மூன்று போட்டிகளில் 158 ரன்களையும் மொத்த தொடரில் 216 ரன்களையும் அவர் எடுத்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக 72 பந்துகளில் 93 ரன்களை குவித்த சமரவிக்ரமவின் இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். நடப்பு தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் தனது அணிக்காக அதிக சிக்ஸர்களை அவர் அடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 253 இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு குஷால் மெண்டீஸ் - சதீர சமரவிக்ரம ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்னர்ஷிப் அமைத்துகொடுத்தனர். எனவே, அவர்களை விரைவாக வெளியேற்றுவது இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

 
ஆகிய கோப்பை இறுதிப் போட்டி: இலங்கை- இந்தியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3. பிட்ச், வானிலைக்கு ஏற்ப வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும்

இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அதில் மாற்றம் தேவைப்படாது. அதே நேரத்தில் பந்துவீச்சில் மாற்றம் தேவைப்படும். பங்களாதேஷுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் அக்சர் படேல் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

தற்போது அவருக்கு பதிலாக அணியில் இடம்பெறபோவது ஷர்துல் தாக்கூரா அல்லது வாஷிங்டன் சுந்தரா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

இந்த ஆசிய கோப்பையில் பனிப்பொழிவு இல்லாததால் சுழற்பந்து வீச்சாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஐந்து போட்டிகளில் 48.7% விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். பிரேமதாசாவில் ஆஃப் ஸ்பின்னர்கள் 18.5% விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிக்கனமாக உள்ளார்கள். ஓவருக்கு 4.3 ரன்களை மட்டுமே அவர்கள் வழங்கியுள்ளனர்.

அத்தகைய சூழ்நிலையில், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் சிறந்த தேர்வாக இருக்கிறார்.

அதேநேரம், வாஷிங்டன் சுந்தர் வெள்ளிக்கிழமைதான் பெங்களூரில் இருந்து இலங்கைக்கு சென்றுள்ளார். ஷர்துல் இலங்கையிலேயே இருப்பதோடு பந்துவீச்சிலும் முக்கிய பங்களிப்பு ஆற்றியிருக்கிறார். எனவே, இந்திய அணி தனது விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் இருப்பது அவசியம்.

 
ஆகிய கோப்பை இறுதிப் போட்டி: இலங்கை- இந்தியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4. பேட்டிங்கில் பின்வரிசை வீரர்களின் பங்களிப்பும் அவசியம்

ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்த தொடரில் பேட்டிங்கை பொருத்தவரை சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை. 53 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 25 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் திணறிவருகிறார். பந்துவீச்சிலும் அவர் 6 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். அவரது செயல்பாடு குறைந்து வருவதும் கவலையளிக்கக் கூடியது. 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் ஜடேஜா விளையாடியுள்ளார்.

இதில், அவரது சராசரி 37.3 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 59.8 ஆகவும் உள்ளது.

5. முக்கியப் பங்கு வகிக்கும் குல்தீப் யாதவ்

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பான ஃபார்மில் உள்ளார். 4 போட்டிகளில் 9 விக்கெட்களை அவர் வீழ்த்தியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களையும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 43 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக 10 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை குல்தீப் யாதவ் கைப்பற்றியுள்ளார். அவரது சராசரியும் 21.3 ஆக இருக்கிறது. எனவே, குல்தீப் யாதவை சமாளிக்க இலங்கை மேட்ஸ்மென்கள் மாற்றுவழியை தேடுவது அவசியம்.

 
ஆகிய கோப்பை இறுதிப் போட்டி: இலங்கை- இந்தியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரு அணிகளும் வெவ்வேறு திட்டங்களுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

2018ஆம் ஆண்டு இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றிருந்தது. அதன் பின்னர், பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடும் தொடர்கள் எதிலும் இந்தியா கோப்பையை வென்றது இல்லை. எனவே, இன்றைய போட்டியில் வென்று இதனை மாற்றியமைக்க வேண்டிய சவால் இந்திய அணியின் முன் உள்ளது.

மறுபுறம், இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடியே தாங்கள் இடம்பெற்றிருந்தாலும், ஆட்டங்களின் போக்கையே மாற்றியமைக்கக் கூடிய வல்லமை தங்களிடம் உள்ளது என்பதை இந்த தொடரில் வென்று மற்ற அணிகளுக்கு சொல்ல இலங்கை விரும்புகிறது.

இறுதிப் போட்டி பரபரப்பாக அமைவதற்கு வானிலையும் அவசியம். கடந்த வாரத்தில் பெரும்பாலான நாட்களும் மழையால் பாதிக்கப்பட்டன.

இன்று பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், போட்டி பாதிக்கப்பட்டால் அடுத்த நாள் வைத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகியக் கோப்பையை பொருத்தவரை இரு அணிகளுமே வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. இந்தியா ஏழு முறையும் இலங்கை ஆறு முறையும் கோப்பையை வென்றுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/c3g70372x04o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிராஜ்: அன்று ட்ரோல்களை எதிர்கொண்டவர் - இன்று இந்திய அணியின் 'பிரம்மாஸ்திரமாக' மாறியது எப்படி?

siraj

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

துல்லியமான பந்துவீச்சுத் தாக்குதல்... அடுத்தடுத்த அவுட் ஸ்விங்கர் பந்துகள்... ஒரே ஓவரில் 4 விக்கெட்கள்.. இப்படியாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சக இந்திய வீரர்களுக்கு பெரிய சிரமங்களைக் கொடுக்காமல் தனி ஆளாக ஆட்டத்தை முடித்துக் கொடுத்துவிட்டார் முகமது சிராஜ்.

அவரது நேர்த்தியான பந்துவீச்சால், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 8வது முறையாக ஆசிய கோப்பையை உச்சி முகந்திருக்கிறது இந்தியா. ஒருநாள் உலகக்கோப்பை நெருங்கும் வேளையில், இந்தியாவின் இந்த அபார வெற்றி கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே மாறியிருக்கிறது. ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் நடந்தது என்ன?

டாஸ் வென்ற இலங்கை

கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியின்போது டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் இலங்கைக்கு கைகூடியது.

பேட்டிங்கை தேர்வு செய்தபோதிலும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று தாமதமாகவே துவங்கியது.

இந்த ஆசிய கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்து பல போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆடிய முதல் போட்டியே மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது போட்டியும் மழையின் காரணமாக ரிசர்வ் டேக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே இறுதிப் போட்டியிலும் மழை வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல இன்று மழை வந்தது.

முதல் ஓவரை பும்ரா வீசினார். 3வது பந்திலேயே குசால் பெரேரே அவுட். 2வது ஓவரை சிராஜ் வீசினார். அதனை சதீரா சமர விக்ரம எதிர்கொண்டார். கச்சிதமான அவுட் ஸ்விங்கர் பந்துகள் என்பதால் ஒரு ரன்கூட எடுக்க முடியாமல் திணறினார் சதீரா. அந்த ஓவரிலேயே சிராஜ்ஜின் நேர்த்தி மீது வெளிச்சம் பாய்ந்தது.

தனது 2வது ஓவரை வீச வந்தார் சிராஜ். முதல் பந்தில் பதும் நிஷன்கா விடைபெற்றார். 3வது பந்தில் சதீரா, 4வது பந்தில் அசலன்கா, கடைசி பந்தில் தனஞ்சயா டி சில்வா என ஒரே ஓவரில் இலங்கையின் டாப் ஆர்டர்களை வெளியேற்றினார் சிராஜ்.

அப்போதே இந்திய அணியின் வேலை பாதி முடிந்திருந்தது. அசல்ன்கா, தசுன் சனகா என மேலும் இருவர் சிராஜ்ஜின் விக்கெட் வலையில் வீழ்ந்தனர். 16வது ஓவர் வரை மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்த இலங்கையால் வெறும் 50 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்தியா 7 ஓவர்களிலேயே மிக எளிதாக இலக்கை அடைந்து ஆசிய கோப்பையை தட்டிச் சென்றது.

ஒருநாள் இறுதிப்போட்டியில் வரலாற்றில் அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி வாகை சூடியிருக்கிறது இந்தியா.

அதுமட்டுமல்லாமல் தென் ஆப்ரிக்காவுடன் இதற்கு முன்பு 43 ரன்கள் எடுத்ததே இலங்கை அணியின் குறைந்த பட்ச ஸ்கோராகவுள்ளது. எனவே இது இலங்கை அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ரன்னாகும்.

இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார்.

துஷன் ஹேமந்தா அவுட் ஆகாமல் 13 ரன்களை எடுத்தார். இதுதான் இலங்கையின் அதிகபட்ச ரன்கள்.

அந்த அணியில் கிட்டதட்ட ஐந்து வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.

இன்றைய போட்டியின் சிராஜை தவிர்த்து பும்ரா ஒரு விக்கெட்டையும், பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 
indian team

பட மூலாதாரம்,GETTY IMAGES

விக்கெட்டை இழக்காமல் இலக்கை அடைந்த இந்திய அணி

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என மிக எளிதான ஒரு இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷாந்த் கிஷன் மற்றும் சுஷ்பன் கில் களமிறங்கினர்.

இருவரும் சேர்ந்து வெறும் 6 ஓவரில் 51 ரன்கள் இலக்கை அடைந்தனர்.

இந்தியாவின் சார்பாக இஷான் கிஷன் 18 பந்துகளில் 23 ரன்களையும், ஷுப்மன் கில் 19 பந்துகளில் 27 ரன்களை எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஆசிய கோப்பை தொடரில் தனது எட்டாவது வெற்றியை பதித்துள்ளது.

யார் இந்த சிராஜ்?

siraj

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐதாராபாத்தைச் சேர்ந்த முகமது சிராஜ் மிக எளிய குடும்பத்தில் வளர்ந்தவர். தந்தை ஆட்டோ ஓட்டுநர். பதின்ம வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சிராஜ், 2015-ம் ஆண்டு தனது 21-வது வயதில்தான் கிரிக்கெட் பந்தில் முறையாக பந்துவீசத் தொடங்கினார். தனக்கிருந்த சிறப்பான பந்துவீசும் திறனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில், அதாவது 2017-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.

முதல் ஐ.பி.எல். தொடரிலேயே திறம்பட செயல்பட்டு, கவனிக்கப்படும் வீரராக மாறிய முகமது சிராஜ் அந்த ஆண்டே சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்காக தடம் பதித்தார். இருபது ஓவர் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கான வாய்ப்பும் கதவு தட்டியது.

2019-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பிறகு முகமது சிராஜூக்கு கிரிக்கெட் உலகில் தொடர்ந்து ஏறுமுகம்தான். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கால் பதித்த கால கட்டத்தில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு துறையில் ஜஸ்பிரித்சிங் பும்ராவும், முகமது ஷமியும் ஆதிக்கம் செலுத்தினர்.

ஒருநாள் போட்டிகளில் ஜஸ்பிரித்சிங் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் பிரதான வீச்சாளர்களாக இருக்க, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராகவே அணியில் நுழைந்தார் முகமது சிராஜ்.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த மிகக் குறுகிய கால கட்டத்திலேயே பந்துவீச்சை தொடர்ந்து மெருகேற்றி அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர் முன்னேறியுள்ளார்.

பந்தை வீசும் போது அவர் கைக்கொள்ளும் முறை, வேகமாகவும் துல்லியமாகவும் தொடர்ச்சியாகவும் வீசும் திறன், சரியான லைன் மற்றும் லெந்தில் பந்தை வீசுவது, பேட்ஸ்மேன் எதிர்பாராத நேரத்தில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவது போன்றவையே சர்வதேச கிரிக்கெட்டில் முகமது சிராஜை அபாயகரமான வேகப்பந்துவீச்சாளராக மாற்றியுள்ளன.

குவியும் பாராட்டுகள்

முகமது சிராஜ் சிம்பிளி அவுட் ஸ்டேன்டிங் என குறிப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். இதேபோன்று

பல விளையாட்டு நட்சத்திரங்கள் சிராஜை பாராட்டி வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் முகமது சிராஜின் செயல்பாடுகள் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக அவரை மாற்றியிருப்பதாகவும், வரும் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கான பிரம்மாஸ்திரமாக அவர் திகழ்வார் எனவும் இந்திய முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை முன்பே பெற்றவர் முகமது சிராஜ்.

ட்ரோல்களையும் எதிர்கொண்டவர்

தற்போது பாராட்டுகளை வாங்கி குவித்து வரும் சிராஜ் ஒருகாலத்தில் ஐபிஎல்லில் சில மோசமான பந்துவீச்சால் கடுமையான டிரோல்களையும் எதிர்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து ஒருமுறை மனம் திறந்து பேசிய சிராஜ், "நன்றாக விளையாடினால் பாராட்டுகிறார்கள். சொதப்பிவிட்டால் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டச் செல் எனக்கூறி மோசமான வசைகளை மொழிகிறார்கள். வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் சகஜம்தான். ஆதரவு கொடுங்கள். யாரையும் அவமதிக்காதீர்கள். சக மனிதனாக நான் இதைக் கேட்கிறேன். அனைவரையும் மதித்து நடப்போம்." என்றார்.

https://www.bbc.com/tamil/articles/crg3kj7r0g3o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய அணிக்கு 6 கோடியே 35 இலட்சம் ரூபா பணப்பரிசு : பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு : 5 ஆயிரம் அமெரிக்க டெலரை நன்கொடையாக வழங்கினார் சிராஜ்

18 SEP, 2023 | 10:15 AM
image
 

 

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கையிலும் பாகிஸ்தானிலும் நடத்தப்பட்ட 16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியனானது.

இதன் மூலம் இந்திய பிரதமர் நரேந்த்ர மோடியின் 73ஆவது பிறந்த தின பரிசாக இந்திய அணியினர் இவ் வெற்றியை சமர்ப்பணம் செய்கின்றனர்.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையை 50 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா 10 விக்கெட்களால் வெற்றியீட்டி ஆசிய கிண்ணத்தை 8ஆவது தடவையாக சுவீகரித்தது.

அத்துடன் 6 கோடியே 35 இலட்சம் ரூபா பணப்பரிசை இந்தியா தனதாக்கிக்கொண்டது.

இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கைக்கு 3 கோடியே 17 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.

இப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் சிறு மழை பெய்ததால் ஆட்டம் 40 நிமிடங்கள் தாமதித்தே ஆரம்பமானது.

மேலும் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் 30,000க்கும் மேற்பட்ட இரசிகர்கள் குழுமியிருந்ததுடன் அந்த எண்ணிக்கையில் 80 வீதத்துக்கும் மேற்பட்ட இலங்கை இரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் குறைந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டி சம்பியனானது.

ஷஜப்மான் கில் 27 ஓட்டங்களுடனும் இஷான் கிஷான் 23 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியில் மொஹமத் சிராஜின் சாதனைமிகு பந்துவீச்சும் ஹார்த்திக் பாண்டியாவின் துல்லியமான பந்துவீச்சும் முக்கிய பங்காற்றின.

இப் போட்டியில் 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்திய சிராஜ், ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார். இந்தப் பந்துவீச்சுப் பெறுதி சர்வதேச ஒருநாள் போட்டியில் சிராஜின் தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகவும் அமைந்தது.

இந்தியாவுக்கு எதிராக கராச்சியில் 2008இல் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையின் அஜன்த மெண்டிஸ் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றியமையே ஆசிய கிண்ண பந்துவீச்சு சாதனையாக தொடர்ந்தும் இருந்துவருகிறது.

இந்தப் போட்டி 116 நிமிடங்களிலும் 21.3 ஓவர்களிலும் நிறைவடைந்தமை விசேட அம்சமாகும்.

இப் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை 15.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை என்பதுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இலங்கை பெற்ற இரண்டாவது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் பெற்ற 87 ஓட்டங்களே மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை பெற்ற இரண்டாவது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகவும் இது பதிவானது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2012இல் பார்ல் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியிலேயே இலங்கை மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அப் போட்டியில் ஒரு கட்டத்தில் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்த இலங்கை, 43 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதுவே இலங்கை அணியின் மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.  

இன்றைய போட்டியில் இலங்கை துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ், துஷான் ஹேமன்த ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

மொஹமத் சிராஜ் தனது 2ஆவது ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையை மோசமான நிலைக்கு தள்ளினார்.

மொஹமத், சிராஜ், ஹார்திக் பாண்டியா, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இலங்கையின் 10 விக்கெட்களையும் பகிர்ந்துகொண்டமை மற்றொரு சிறப்பம்சமாகும்.

இன்றைய இறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட குசல் ஜனித் பெரேரா தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே மிக மோசமான அடி தெரிவினால் ஆட்டம் இழந்தார்.

ஜஸ்ப்ரிட் பும்ராவின் அகன்று செல்லும் பந்தை நோக்கி அரை மனதுடன் துடுப்பை கொண்டு சென்ற குசல் பெரேரா, விக்கெட் காப்பாளர் கே. எல். ராகுலிடம் பிடிகொடுத்து ஓட்டமின்றி வெளியேறினார்.

அதன் பின்னர் வீக்கெட்கள் சீரான இடைவெளிகளில் விழத் தொடங்கின.

4ஆவது ஓவரில் மொஹமத் சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவை பலமான நிலையில் இட்டார்.

அந்த ஓவரின் முதல் பந்தில் பெத்தும் நிஸ்ஸன்க (2), 3ஆம், 4ஆம் பந்துகளில் முறையே சதீர சமரவிக்ரம (0), சரித் அசலன்க (0), கடைசிப் பந்தில் தனஞ்சய டி சில்வா (4) ஆகியோரை சிராஜ் ஆட்டம் இழக்கச் செய்தார்.

சிராஜ் தனது அடுத்த ஓவரில் தசுன் ஷானக்கவின் (0) விக்கெட்டை நேரடியாகப் பதம் பார்த்ததுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார். (12 - 6 விக்)

தொடர்ச்சியாக தனது 6ஆவது ஓவரை வீசிய சிராஜ், அந்த ஓவரில் குசல் மெண்டிஸின் (17) விக்கெட்டையும் நேரடியாக சரித்தார். (33 - 7 விக்.)

இந் நிலையில் வளர்ந்துவரும் வீரர் துனித் வெல்லாலகே ஏதாவது சாதிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஹார்திக் பாண்டியாவின் பவுன்சர் பந்தை அடிக்க விளைந்து ராகுலுக்கு இலகுவான பிடி ஒன்றைக் கொடுத்து 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (40 - 😎

ஹார்திக் பாண்டியா தனது 3ஆவது ஓவரில் ப்ரமோத் மதுஷான் (1), மதீஷ பத்திரண (0) ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்தார்.

துஷான் ஹேமன்த 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அதில் ஒரு பவுண்டறி விராத் கோஹ்லியின் 'ஒவர் த்ரோ' மூலம் கிடைத்தது.

பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் ஒரு ஒட்டமற்ற ஓவர் அடங்கலாக 7 ஓவர்களைத் தொடர்ச்சியாக வீசி 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். இது அவரது அதிசிறந்த ஒரு நாள் பந்துவீச்சுப் பெறுதியாகும்.

அவரை விட ஹார்திக் பாண்டியா 2.2 ஓவர்களில் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மொஹமத் சிராஜ்.

இதேவேளை, இன்றைய போட்டியில் ஆட்டநாயகனாக தெரிவான இந்திய அணியின் மொஹமட் சிராஜ் தனக்கு கிடைத்த 5 ஆயிரம் அமெரிக்க டொலரை ஆர்.பிரேமதாஸ மைதானத்தின் ஊழியர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

இன்றைய போட்டியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்திருந்த தென்னிந்திய நடிகர் பிரபுதேவாவும் ஆர். பிரேமதாஸ மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்.

https://www.virakesari.lk/article/164799

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என‌து கிரிக்கேட் அனுப‌வ‌த்தில் அதுவும் முக்கிய‌மான‌ விளையாட்டில் இல‌ங்கை அணி 50ர‌ன் சுருன்ட‌து இந்த‌ ஆசியா கோப்பை பின‌லில்..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை அணியின் தோல்வி- அரசியல் தொடர்பா என அறிய விசாரணைகள் அவசியம் -ஐக்கிய மக்கள் சக்தி

Published By: RAJEEBAN

18 SEP, 2023 | 04:04 PM
image
 

ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணியின் தோல்வி குறித்து விசாரணைகள் அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு  பதில் அளிக்கையில்  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் என்னவென்பது குறித்து விசாரணைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளுக்கு பரிசா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மிக கடுமையான மோதலை அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை,போட்டி சில மணிநேரங்களில் முடிந்தது என தெரிவித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க  அந்த தோல்வியை நான் வர்ணிக்க விரும்பவில்லை ஏனென்றால் அது வீரர்களின் மனோநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனினும் இந்த தோல்விக்கும் அரசியலிற்கும் தொடர்புள்ளதா என்பதை கண்டறிவதற்கு விசாரணை அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இந்த தோல்வியால் கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/164867

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசியக் கிண்ணத்தை இழந்த இலங்கை அணிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடொன்றை அளித்துள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான புரவெசி பலய அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.

இறுதிப் போட்டியில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை பலமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியை காட்டிக்கொடுத்துள்ளனரா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில், இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதுவே, இதுவரை இறுதிப் போட்டிகளில் இலங்கை அணி பெற்ற குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/273579



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.