Jump to content

62 வயது ஹீரோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“25  யூன் 2021இல்  சோமாலியாவைச் சேர்ந்த அப்டிரஹ்மான் (26)  யேர்மனியில் வான் என்ற இடத்தில்  ஹோங்ஸ் ஆசிய சிற்றுண்டிக்கு அருகே மூன்று பெண்களை கத்தியால் குத்தியதும் பின்னர் பொதுமக்கள் அவனை மடக்கிப் பிடித்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது நடந்தது போல் ஒரு அசம்பாவிதம் இப்பொழுது  நடந்துவிடக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்ததுஇப்படிச் சொல்கிறார் 62 வயது நிரம்பிய வியட்னாம் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட வான் லோங் கொங்

30ந் திகதி யூன், ஒரு சிரிய நாட்டைச் சேர்ந்த  இளைஞன் கையில் கத்தியுடன் நகரத்தில் நடமாடியதை அடுத்து பொது மக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில்  அந்த இளைஞனை கைது செய்வதற்கும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் பொலிஸார் வந்திருந்தார்கள். மதியம் 1.40க்கு  ஆசிய சிற்றுண்டிச் சாலைக்கு முன்னால்,  ஆபிரிக்க நாட்டவர் அணியும் வெள்ளை நிற உடை அணிந்திருந்த அந்த  இளைஞனுக்குச்  சற்றுத்  தள்ளி பொலிஸார்  நின்று கொண்டிருந்தனர்.  பொலிஸார் தன்னை நெருங்க விடாமல், அந்த இளைஞன் தன் கையில் உள்ள பையை சுழற்றி வீசிக் கொண்டிருந்தான். திடீரென அந்த இளைஞனுக்குப் பின்னால் சிற்றுண்டிக் கடையின் கதவைத் திறந்து கொண்டு வந்த வான் லோங் கொங் அந்த இளைஞனை மல்யுத்த வீரர்கள் மடக்கிப் பிடிப்பது போல் பிடித்துத் தரையில் சாய்க்க முயல,  வான் லோங் கொங்குக்கு உதவ மூன்று பொலிஸார் ஓடி வந்து அந்த இளைஞனை அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள்.  

“நான் சிறுவயதில் இருந்தே டேக்வாண்டோ பயிற்சி செய்து வருகிறேன்நான் பயப்படவில்லை, ஆனால் மோசமான  நிகழ்வொன்று நடக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று விரும்பினேன்." என்று கூறும் வான் லாங் ஹோங் 40 ஆண்டுகளாக ஜெர்மனியில் வசித்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாகத்தான் அவர் அந்த ஆசிய சிற்றுண்டி நிலையத்தில் சமையல் வேலை பார்த்து  வருகிறார்.

 கைது செய்யப்பட்ட சிரிய நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயதான அந்த இளைஞன்   மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்பதால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.  நடந்த சம்பவம்  தொடர்பான விசாரணைகளை வூர்ஸ்பர்க் நகர குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அந்தச்  சிற்றுண்டி நிறுவனத்ததுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டிருக்கிறதுபலர் அங்கு வந்து உணவருந்த விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். பத்திரிகைகள் இவர்தான்உண்மையான ஹீரோஎன்று வான் லாங் ஹோங்கைப் பாராட்டி எழுதிக் கொண்டிருக்கின்றன.

https://www.google.de/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=&ved=2ahUKEwiK1NDKrfX_AhUpQ_EDHTZ_CmMQvOMEKAB6BAgOEAE&url=https://www.focus.de/panorama/bedrohliche-szenen-im-video-imbiss-mitarbeiter-ueberwaeltigt-messer-angreifer-in-wuerzburg_id_198122934.html&usg=AOvVaw3_4Eq4cV9Uo6mfljZdc29G&opi=89978449

 

 

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

கைது செய்யப்பட்ட சிரிய நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயதான அந்த இளைஞன்   மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்பதால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.  நடந்த சம்பவம்  தொடர்பான விசாரணைகளை வூர்ஸ்பர்க் நகர குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்போரில் அனேகமானோர் பக்கா கிரிமினல்கள்.

பெரியபெரிய குற்ற செயல்களுக்கு முன்போ பின்னரோ இப்படியான சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்.

29 minutes ago, பெருமாள் said:

உண்மையிலே மனநலம் பாதிக்க பட்டவரா என்று பார்க்கணும் .

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.