பொன் அணிகளின் போர் வெற்றிதோல்வியின்றி முடிவு
15 Mar, 2026 | 01:32 AM
(மானிப்பாய் நிருபர்)
யாழ். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் யாழ். சென் பட்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பெருஞ்சமர் 3 நாள் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி நேற்று முடிவடைந்தது.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கல்லூரி முதல் நாள் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென் பட்றிக்ஸ் கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சென் பட்றிக்ஸ் கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
மூன்றாம் நாளான நேற்றைய தினம் (14) தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த யாழ்ப்பாணம் கல்லூரி 9 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
198 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென் பெட்றிக்ஸ் கல்லூரி 4 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது.
எண்ணிக்கை சுருக்கம்
யாழ்ப்பாணம் கல்லூரி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 176 (எஸ்.கே. ஹமிஷ் ஹாமிஷன் 61, உதயகுமார் ஜோன்சன் 41, உதயராஜா கென்றிக்சன் 31, மதியழகன் ஸ்டீவ் ஆதித்யா 25 - 4 விக்., ஜெபிசன் கெமிஷன் 29 - 3 விக்.)
சென். பட்றிக்ஸ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 225 (ஜெயராஜரூபன் டினுல்சன் (50), சிவனாதன் ஷெஹான் 45, நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் 42, வாசுதேவன் விஷ்ணுகோபன் 82 - 5 விக்.), ஹாமிஷ் ஹாமிஷன் 51 - 3 விக்.)
யாழ்ப்பாணம் கல்லூரி 2ஆவது இன்: 246 - 9 விக். டிக்ளயார்ட் (ஹாமிஷ் ஹாமிஷன் 82, சசிகரன் அஷ்மின் 49. கேதீஸ்வரன் ஹரிஷன் 34, பிரேமநாயகம் மதுசன் 46 - 3 விக்., ஜெபின்சன் கெமிஷன் 66 - 3 விக்.),Travel Guides & Travelogues
சென். பட்றிக்ஸ் 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 198 ஓட்டங்கள் - ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 106 - 4 விக். (நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் 40, சிவநாதன் ஷெஹான் 23, ஹாமிஷ் ஹாமிஷன் 32 - 3 விக்.)
சிறப்பு விருதுகள்
சிறந்த சகலதுறை வீரர்: ஹமிஷ் ஹாமிஷன் (யா.க.)
சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்: ஹமிஷ் ஹாமிஷன் (யா.க.), ஹரீன் ஏட்றியன் (செ.ப.)
சிறந்த பந்து வீச்சாளர்கள்: ஏ. விஷ்ணுகோபன் (செ.ப.), ஜெபிசன் கெமிஷன் (யா.க.)
சிறந்த களத்தடுப்பாளர்கள்: அன்ரனி ரித்மன் அபினாஷ் (யா.க.), பிரேமநாயகம் மதுசன் (செ.ப.0)
சிறந்த இணைப்பாட்ட ஜோடி: ஹரீன் ஏட்றியன் - சிவநாதன் ஷெஹான் )செ.ப.)
ஆட்டநாயகன்: ளு.மு ஹமிஷ் ஹர்மிஷன். (யா.க.)
சிறந்த விக்கெட் காப்பாளர்: மு.ஹரிஷன் (யா.க.)
ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய வீரர்: டினு லக்ஷன்
விசேட விருதுகள்: எஸ். சங்கீத் (யா.க.), ஸ்ரீவ் ஆதித்தியா (செ.ப.)
https://www.virakesari.lk/article/240975
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.