Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

வடமாகாணத்தின்  யாழ் மக்களின் வாழ்வை முன்னிலை படுத்தும் ஒரு விடயம் கல்வி . என்ன கஸ்ட படடாலும்  குழந்தை களுக்கு கல்வி மிகவும் முக்கியம் என  என்னும் சமுதாயமாக வாழ்ந்தார்கள் .பள்ளிச்  சீருடை முதல் கொப்பி  பென் பென்சில்  என தேவையான அத்தனையும் கடன்  பெற்றாவது   வாங்கி கொடுத்து விடுவார்கள். ஒரு குடும்பத்தில் ஐந்துக்கு மேற்படட பிள்ளைகள்  இருப்பார்கள். குடும்ப வறுமையிலும் கல்வியை கைவிடுவதில்லை. பாலர் வகுப்பு முதல் உயர் வகுப்பு வரை  கிராமத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட் பாடசாலைகளிருக்கும். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதுபோல சமூகத்தில்,ஆசிரியர்களை கல்விமான்களை   மதித்தர்கள்.  

நகருக்கு  சற்று தொலைவில்  பெண் பிள்ளைகள் மட்டுமே படிக்கும்  பெண் ஆசிர்யர்களை  கொண்ட அந்த பெண்கள் பாடசாலை அமைந்திருந்தது  .அதில் கிடட  தடட முந்நூறுக்குமேற்படட மாணவிகள் கல்வி கற்று  கொண்டிருந்தார்கள்.  அந்தக் கல்லூரியின்  ஆசிரியர் குழுவில் மிகவும்  கண்டிப்பான  தமிழ் ஆசிரியை வரதா  டீச்சர். 

 எடடாம் வகுப்பின்   தமிழ் கற்பிக்கும் அவர் அடுத்த வகுப்பில்  சில பாடல்களும் கருத்துரைகளையம்  மனனம் செய்யும்படி கேட்டிருந்தார். மறுநாள்  தனித்தனியாக் கேள்வி    கேட்பதாக  சொல்லியிருந்ததார் . அந்த வகுப்பில் வானதியும்  வசந்தாவும்   இணை பிரியாத தோழிகள் . எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே இருப்பார்கள். அவர்களது நேசம் கண்டு பொறாமைப்படடவர்களும் உண்டு.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை,தமிழ் பாடநேரம் வகுப்பு ஆரம்பித்தது .   எல்லோரும் வணக்கம் சொன்ன பின் பாடம்  ஆரம்பித்து . அவர் சொல்லியபடியே  ஒவ்வொருவராக எழுந்து அவர் கேட்கும் பாடலையும் கருத்தையும்  ஒப்புவிக்க வேண்டும். யாராவது விடை தெரியாது மறந்து நின்றாலோ... அல்லது  ..அருகிலிருப்பவர் சொல்லிக் கொடுத்தாலோ .. அவரது அளவு கோல் (அடிமடடம்) கைவிரல் என்புகளை (மொழி)ப்பதம் பார்க்கும். மிகவும்  "விண் "  என  வலிக்கும். அடிவாங்கியபின் கையை உதறிக்  கொண்டு இருக்குமிடத்துக்கு வருவார்கள். வானதியின் முறை வந்தது .  பாடலை ஒப்புவிக்கும்  போது  இடையில் மறந்து விடடார். ஆசிரியை அதை மீண்டும் ஆரம்பித்து சொல்லக் சொன்னார்.  அப்போதும் அவள் ..நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. அருகில்  வசந்திக்கு தெரியும் தோழியின்  நிலைகண்டு பொறுக்க முடியவில்லை. மெதுவாக அவள் மூக்கை மூடுவதுபோல்   கையை  வைத்து சொல்லிக் கொடுத்துவிட்டார். ஆசிரியை கண்டு விடடார். பிறகென்ன ...உங்களுக்கு புரிந்திருக்கும் . வசந்தி இங்க வா ...."நான் சொல்லவில்லை மிஸ்" "அவளுக்கு அடிச்சா  உனக்கு வலிக்கும், நீயே வாங்கிக் கொள்". இன்று நீ அவளுக்கு சொல்லிக் கொடுத்தால் அவள் அக்கறை எடுத்துபடிக்க மாடடாள்.  இன்று ஒப்புவிக்க தெரியாமல் அடி  வாங்கினால் அடி  நினைவிருக்கும் மீண்டும் முயற்சி எடுத்து இன்னும் அதிக தடவை  மனனம் செய்து ஒப்புவிப்பாள். மெளனம் காக்க தெரியவேண்டும். நாவடக்கம் வேண்டும். இன்று கற்றுக் கொள் என்றார். 

அன்று எதிர்க்காலக்கல்வி தேவையை உணராத காலத்தில், துள்ளித்திரிந்த காலத்தில் கடமைக்காக  படிக்காவிடடாலும் அந்த அளவு கோலின் அடிக்கு (வலியை தவிர்க்க ) பயந்து  படித்தவர்கள் ஏராளம். 

ஆசிரியையின் கண்டிப்பு எத்தனையோபேரை கல்வியில் சிறப்புற  வைத்து இருக்கிறது. பத்தாம்  வகுப்பு பரீட்ச்சை  முடிந்து பெறுபேறு வரும்போது  தமிழுக்கு  "D   " எடுத்த பெருமை அந்த ஆசிரியையே சாரும். 

 நாவடக்கம் இன்றியமையாத ஒன்று. நமது நாவினால் ஒழுங்காக பேச தெரியவேண்டும்.பேசாமலும் இருக்க தெரிய( நாவடக்கம்) வேண்டும்.  நேரம் அறிந்துபேசவேண்டும். என்ன பேசுகிறோம் என் அறிந்து பேசவேண்டு ம்  யாரிடம் எப்படிப் பேச வேண்டும் எனஅறிந்துபேசவேண்டும். பேச தெரிந்த உன்னத படைப்பு  மனிதன்.  .  

 

 

Edited by நிலாமதி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடசாலை காலங்களை மீட்டி வருடுகின்றது உங்களின் கதை......."அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" எனக்கு கொஞ்சம் அதிகமாய் அடித்து விட்டார்கள் போலிருக்கு, எந்தப்பாடத்திலும் "s " ஐத் தாண்ட முடியல்ல.......!  😢

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும்  S   ..C  தரத்திலிருந்து  ஒரு மாற்றத்தின்பின் ...D தரத்துக்கு வந்தேன். 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.