Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

கோடீஸ்வர பல்வைத்தியர், மனைவியை கொலை செய்தாரா?

அமெரிக்காவில், டென்வர் பகுதியில் ஒரு பல் வைத்திய நிலையம் வைத்திருந்தவர் லார்ரி ருடால்ப். இவரது மனைவி பியன்கா ருடால்ப். மனைவிக்கு வாழ்வில் ஒருமுறையாவது சிறுத்தை ஒன்றை வேட்டை யாடவேண்டும் என்பதில் பெரும் வாழ்நாள் கனவாக வைத்திருந்தார்.

அதேவேளை 67 வயது பல் வைத்தியருக்கு, ஒரு கள்ள பொம்பிளை, லோரி மில்லிரோன்.

வைத்தியரும், மனைவியும் சாம்பியா நாட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள். அங்கே, பெருமளவில் சிறுத்தைகள் பெருகும் காலத்தில், வேட்டைக்கு தடை இல்லை. அதிகாரிகளிடம் கை துப்பாக்கியும் வாங்கிக் கொண்டனர்.

தான் குளியல் அறையில் இருந்த பொது, வெடிச்சத்தம் கேட்டதாகவும், ஓடிவந்து பார்த்த போது, மனைவி, நெஞ்சில் குண்டடி பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்ததாகவும், பின்னர் இறந்து விட்டதாகவும் அவர் சொல்ல, வழக்கினை விசாரித்த சாம்பிய அதிகாரிகள், அது, விபத்து என்று அறிக்கை கொடுக்க, அவரும் டென்வர் திரும்பி விட்டார்.

மனைவி பெயரில் $5m காப்புறுதி செய்திருந்தார். அந்த பணத்தினை பெற்றுக் கொண்டபோதே, அமெரிக்க அதிகாரிகள் அவர் மேல் சந்தேகம் கொண்டனர். அப்போது அவருக்கு கள்ள தொடர்பு முன்னமே இருந்ததை தெரிந்து கொள்ள, ஆக, இது, காதலியுடன், ஓய்வு வாழ்வினை நன்றாக அனுபவிக்க நடந்த கொலை என்று சந்தேகம் கொண்டனர்.

அந்த பெண்ணுடன், பார் ஒன்றில் இருந்த போது, உனக்காக, எனது... F*****G மனைவியை கொன்றேன் என்று சொன்னதை பார் டெண்டர் கேட்க, அதனையே முக்கிய சாட்சியாக வைத்து, கொலைக் குற்றம் சுமத்தி, அவருக்கு ஆயுள் தண்டனையும், காதலிக்கு 17 வருட தண்டனையும் கொடுக்கப்படுள்ளது. மேலும் வைத்தியருக்கு, $15m அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இருவருமே மேல் முறையீடு செய்கின்றனர். 

வைத்தியர் பக்க, வக்கீல்கள் சொல்வது என்னவென்றால், பல்வைத்தியர் காதலிக்கு சொன்ன முழுவார்த்தையில், பாதியினை வைத்தே இந்த வழக்கினை, நடாத்தி, தண்டணையும் வழக்கப்பட்டுள்ளது. சாம்பிய நாட்டு அதிகாரிகள் எவ்வித சந்தேகமும் தெரிவிக்க வில்லை. அதேவேளை அவர் பாரில் சொன்ன வார்த்தை: உனக்காக, எனது... F*****G மனைவியை கொன்றேன் 'என்று அவர்கள் சொல்கிறார்கள்'.

இந்த 'என்று அவர்கள் சொல்கிறார்கள்', என்பதே பார் டெண்டர் கேட்காத அல்லது, கேட்டும் சொல்லாத வார்த்தைகள் என்கிறார்கள் அவர்கள்.

பொதுபுத்தியுடன் நோக்கும் போது, அந்தாள், கொலை செய்ய ஏன் அங்கே போகவேண்டும், துப்பாக்கியினை தூக்க வேண்டும். காட்டிலே, கீழே இறக்கி விட்டு, சிறுத்தை அடித்து இறந்ததாகவே முடித்திருக்கலாமே? 

ம்...ம்ம் அமெரிக்கன் ஜஸ்டிஸ் பிழையா அல்லது இவர் உண்மையில் கொலையாளியா? 

மூலம்: independent.co.uk 

Edited by Nathamuni


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் இரு தூண்டில் மீன்கள் மிக இலகுவாக வஞ்சகப் புகழ்ச்சியில் வீழ்கிறார்கள்.  கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் தூண்டிலில் மாட்டாது இயல்பாக இருக்கிறார்கள். 
    • நீங்கள் சொல்வதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. நானும் சுமார் 2 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளேன்.  ஆனால் நான் சொன்னது இலங்கை, இந்திய சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பற்றி. வாழ்க்கை சுட்டெண், கூடியது இலங்கை, ஆனால் பொருளாதார வாய்புகள் கூடியது இந்தியா. இது கிட்டதட்ட சுவிஸ்சில் வாழ்தல், அமேரிக்காவில் வாழ்தல் இடையான வித்தியாசம் போன்றது. தனி மனித அபிலாசைகள் வேறுபடும். பல இந்தியர்களும் இலங்கையில் சட்டவிரோதமாக வந்து இருக்கிறார்கள். ஆனால் எது வாழ சிறந்த இடம் என்றால் - இலங்கைதான் என்பார்கள் பெரும்பான்மையான இலங்கையர்.
    • இதைதான் நானும் மேலே சொன்னேன் - நீங்கள் சரத்பொன்சேக்கா உதாரணம் காட்டிய போது. ஆனால் அப்போது அப்படி செய்ய புலிகளுக்கு சில தந்திரோபாய தேவைகள் இருந்தன. காங்கிரஸ்காரர் அதுவும் சீமானின் பிறப்பையே கேவலமாக பேசியவர், ஒரு குழந்தையின் கொலையை கொண்டாடியவர் - இவர் செத்த வீட்டுக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தி அப்படி என்ன உலக மகா தந்திரோபாயத்தை சீமான் அடையப்போறார் என சொன்னால் நாமும் அறியலாம். உங்களில் பலரது நிலமை இவ்வளவு கவலைகிடம் என்பது தெரிந்ததுதான். நாளைக்கு காங்கிரஸ் அமைச்சரவையில் சீமான் இணைந்தாலும் கவலைபட மாட்டேன் என்பீர்கள். தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் ஏறினால் என்ன முழம் ஏறினால் என்ன.
    • இளங்கோவன் யார்? காங்கிரஸ்காரர். புலிகளின் பரம எதிரி. சோனியா பக்தர். தெலுங்கு வம்சாவழியினர். இவரும் சீமானும் எந்த இனத்தின் அல்லது எந்த கொள்கையின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட முடியும்? வேண்டு? அதுவும் உயிரோடு இருக்கும் போது போய் சந்தித்தால் கூட பரவாயில்லை. செத்த பின் இளக்கோவன் பிணத்தோடு என்ன அரசியலை செய்யப்போகிறார் சீமான்?       இப்படி எழுதும் போது உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா? தமிழ் நாட்டில் இளங்கோவனை மிஞ்சிய ஒரு காந்தி-நேரு குடும்ப அடிமையை காட்ட முடியாது. பாலச்சந்திரன் பற்றி இளங்கோவன் கூறிய மோசமான கருத்துக்கு காரணமே புலிகள் ரஜீவை கொண்டதுதான். அந்தளவு புலிகள் எதிர்பாளர் அவர். அவரின் செத்த வீட்டுக்கு போபவரைத்தான் நீங்கள் காங்கிரசை எதிர்க்கும் போர்வாள் என்கிறீர்கள்.
    • சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த செல்வம் அடைக்கலநாதன்  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.