Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொக்கன் கடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

354226336_250024097637843_23537897217013

 

யாழ் பட்டினம் திட்டமிடப்படாத நகரம். அதுவாய் அமைந்த Organic city. திட்டமிட்ட நகரங்களிலில்லாத ஒரு ஐந்து சந்தி யாழில் உண்டு. அதுதான் யாழ்ப்பாண முஸ்லீம்களின் ஏரியா.
1✍யாழ்ப்பாணத்தில், அஞ்சு லாம்படிச் சந்திக்குக் கிட்ட ' ஹமீதியா கபே' எண்டு ஒண்டு இருந்தது!
ஹமீதியா கபே எண்டு கேட்டால் ஒருத்தருக்கும் தெரியாது! மொக்கன் கடை எண்டால், தெரியாத இளம் தலைமுறையே இருக்காது!
அங்க சில பேர் ' ஆட்டு மூளை' ஓடர் பண்ணுவினம்!
அபப, முதலாளி 'மொக்கன்' ஒரு கத்துக் கத்துவார்!
தம்பி... ஐயாவுக்கு ஒரு ' மூளை' கொடு!
அதே போல தம்பி.. இரண்டு ' பிஸ்டேக்' கொண்டோடி வா எண்டும் சொல்லுவார்!
பிஸ்டேக்' எண்டால் என்ன எண்டு எல்லாரிட்டையும் கேட்டுத் திரிஞ்சால்... பெரிய ஆக்களின்ர மறு மொழியும் .... அது 'பிஸ்டேக்' தான்!
அது ' Beef Stake' எண்டு தெரிய வர ... இன்னும் இரண்டு வருசங்கள் எனக்குத் தேவைப்பட்டது! 😃
- புங்கையூரான்.
2✍1970ல் மொக்கன் கடை புட்டு, மாட்டு ரோஸ் உண்ண மருதடிப்பிள்ளையார் ஊரான மானிப்பாயில் இருந்து நாம் செல்லும் வேளையில், கந்தன் ஆளும் நல்லூர் இந்துப் பெருமக்கள் ஆளுக்கு ஒரு குழல் புட்டை, மாட்டு ரோஸில் ஊற வைத்ருப்பர். கடைக்குள் நுழையும் போதே நெற்றியில் பூசிய நீறும் சந்தண பொட்டும் விடை பெற்றுவிடும்.
- மாதவன் சஞ்சயன்
3✍மொக்கன் கடை புட்டும் ஆட்டிறைச்சிக் கறியும் குடிக்கவும் விட்டுச் சாப்பிடவும் எலும்பு ரசமும் என்றிருந்த காலம் மாறி கொத்து ரொட்டியும் கொக்கோ கோலாவும் என இளைஞர்கள் மாற்றமடையப்பட வைக்கப்பட்டுள்ளனர்.
- nanvanthan blogspot
4✍யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்பு றெஸ்ரோறன்ரில் ஸ்ரவுட் பியர் பருகி நன்கு ஏறியதும் மொக்கன் கடைபோய் ரொட்டியும் றோஸ்ற்ம் புசித்து
- கவிஞர் ஆனந்த பிரசாத்
5✍1970´ களில்... "மொக்கன் கடை" யில், கோதம்ப மாவில்...
தேங்காய்ப் பூ, கலந்து அவிக்கும் புட்டும், அவர்கள் வைக்கும்....
கறி, குழம்பு, சொதி.... எல்லாமே... பிரபல்யமாக இருந்தது.
அதனை... இப்ப, நினைத்தாலும்... நாக்கில், ஜலம் ஊறும். மொக்கன் கடையில்.. புட்டு, சாப்பிட வென்றே...
சனம், பின்னேரம் 7 மணியிலிருந்து, "கியூ" வரிசையில்... காத்து இருப்பார்கள்.
- தமிழ் சிறி
6(A)✍மீன்கடைகளை பார்ப்பதற்கு யாழ்ப்பாணம் நகரைக் கடந்து போகவேண்டும். அவை எமக்குத் தூரமானது . எமக்கு அருகிலே இஸ்லாமியர்கள் நடத்திக்கொண்டிருந்த கடைகளே நடந்து போய் சாப்பிட்டு வர உதவியது . அதிலும் ஒரு கடை அக்காலத்தில் ஐந்து லாம்படி பகுதியில் இருந்தது.ஆரம்பத்தில் ஹமீதியா கபேயாக இருந்தது .அதனை மொக்கங் கடை என்போம். ஏதோ ஒரு நாள் அங்கு பணத்தை குறைத்து வாங்கியதால் அந்தப்பெயர்ச் சொல்லில் அழைத்து, அந்தப் பெயரே பிற்காலத்தில் அதன் விளம்பரப் பலகையிலும் வந்தது . அங்கு தரப்பட்ட மாட்டுக் குருமா மூளை மற்றும் பிஸ்ரேக் என்பன எமது வாழ்கையில் கண்டதும் தின்றதும் அக்காலத்திலேதான்.
- Dr. Noel Nadesan
6(B)✍நான் பதினொராவது வகுப்பில் இந்துக்கல்லூரியில் படித்தகாலத்தில்
எனது காதல் தொடங்கியது.
எனது காதலியை பார்த்து விட்டு(சொல்லிட்டாளே அவ காதல❤) எனது நண்பனுடன் மொக்கன் கடை எனப்படும் பிரசித்தி பெற்ற கடையில் அன்று இரவு சாப்பிட்டேன். நான் மட்டும் பிஸ்கேக் எனப்படும் பெரிய மாட்டிறச்சி துண்டை சாப்பிட்டேன். சாப்பிடும்போதே அந்த இறைச்சி வெண்டைக்காயின் பசைபோல் இழுபட்டதும் எனக்கு அது பழைய இறைச்சி என்பதை உணர்த்தினாலும் அந்த இறைச்சியின் சுவையால் அதனைத் தவிர்க்காமல் சாப்பிட்டேன்.
ஒரு கிழமையில் எனக்கு காய்ச்சல் வாந்தி என்று தொடங்கி கடுமையானதால் அக்காலத்தில் மூளாய் வைத்தியராக இருந்து ஓட்டுமடத்தில புதிதாக நேர்சிங்ஹோம் நடத்திய டொக்டர் கெங்காதரனது வைத்தியசாலையில் சேர்கப்பட்டேன். தைபோயிட்- சல்மனல்லா கிருமியால் உருவாகியதாக கண்டுபிடிக்கப்பட்டது. மொக்கன்கடை சாப்பாடே அந்த கிருமியின் உறைவிடம். நான் இரண்டு கிழமைகள் வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டேன்.
- Dr.Noel Nadesan
7✍“மொக்கன்” கடையா? “மொக்கங்” கடையா? ஹமீதியா கபேயா? என்பதே கேள்வியாக இருந்தது. சிறீ லங்கா ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன வானொலியின் பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் கூறும் பாணியில் “மொக்கொங் (Mokong)” கடை என்பதே சரியான பதில்.
கிரிதரனின் தனது கூகுள் தேடலில் பெற்ற விடயங்களை ஆகஸ்ட் 11, 2017 பகிர்வின் மூலம் தெரிவித்த சில விடயங்கள் இந்தக் கடையின் பெயரை நிலைநிறுத்தும் விடயங்களைக் கொணர்ந்தது. தேனீ இணையத்தளத்தில், தாயகம் (கனடா) ஆசிரியர் குருஷ்ஷேவ் “மொக்கங்” எனப் பாவித்தார் எனக் கூறப்பட்டது. அதேவேளை புங்கையூரன் “ஹமீதியா கபே” என ஒரு கடை இருந்தது என்றாலும், அப்பெயரைச் சொன்னால் எவருக்கும் தெரியாது, “மொக்கன்” கடையென்றால் தெரியாத இளம் தலைமுறையே கிடையாது என்று அடித்துச் சொல்லியிருந்தார். அவர் மேலும் சில கருத்துக்களைத் தொடர்ந்து கூறியிருந்தார். அதையிட்டு அந்தக் கடையிலே ஆட்டு மூளை ஓடர் பண்ணி உண்பவர்கள் செல்வதால் மொக்கன் கடை எனப் பெயர் வந்திருக்கலாம், அங்கு மொக்கன்கள் சென்று மூளை வாங்கி உண்டு தம்மை புத்திசாலி ஆக்கியிருக்கலாம் என்றெல்லாம் விளையாட்டான கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்பட்டன. சுவி என்பவர் யாழ் இணையத்தளக் கருத்துக்களத்தில், அஞ்சுமுச்சந்தியில் ரொட்டி ரோஸ் என்றால் பிளவ்ஸ், பிட்டும் ஆனமும் என்றால் மொக்கங் கடை என்று கூறியிருந்தாராம். அந்த உணவகத்தின் பெயர் மொக்கன் கடை அல்ல என உடன்பட்ட வேளையில், பெயர் “மொக்கிங்” இல்லை “மொக்கங்” என்றெல்லாம் கருத்துப் பரிமாறப்பட்டது. “மொக்கங்” என்பதை அந்தக் கடையின் கொத்து ரொட்டிக்காகச் சென்ற கிரிதரன், பெயர்ப் பலகையில் பார்த்ததாக நினைவில் இருக்கறதென தனது பகிர்வில் கூறியிருந்தார். இருந்த போதும் கலை மாக்ஸ் (Kalai Marx) எனும் "புத்திசாலி" பல "நம்பத் தகுந்த" விபரங்களைப் பரிமாறியிருந்தார். அவரது "புத்திசாலித்தனம்" அவர் பெயரிலிருந்துதான் வந்திருக்குமெனப் புரிந்து கொண்டேன். அவரது கருத்துப் பரிமாற்றத்தை வாசித்ததும், சந்தியின் பெயர் அஞ்சுமுச்சந்தி என நிலைநிறுத்திக் கொண்ட எனக்கு, “மொக்கங்” என்ற பெயருடன் அப்படியே நிலைநிறுத்திக் கொள்ள உடன்பாடில்லை. நான் வேறோர் நண்பர் மூலம் சிறீ லங்காவின் மலேய் இனத்தவர் பற்றி பெற்றுக் கொண்ட மின்னஞ்சலில் அறிந்த தகவல்களுக்கு ஒப்பீடான சில தகவல்களை கலை மாக்ஸ் பகிர்ந்திருந்தார். இத்தகவல்கள் சில சிறீ லங்காவின் மலேய் இனத்தவர் பற்றிய விபரங்களுடன் குறிப்பிடப்பட்டதுடன் சிறீ லங்காவின் முஸ்லிம்களுக்கும் மலேய் இனத்தவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்குமெனத் தோற்றியது. ஆனால் கலை மாக்ஸ் அந்தக் குறிப்பிட்ட கடையின் பெயர் இந்தோனேஷியாவில் ஒரு இடத்தைச் சார்ந்தது எனக் கூறியது, என்னை கூகுள் தேடலுக்கு உந்தியது. அதன் விளைவு இந்தோனேஷியாவில் ஜகற்றா (Jakarta) எனும் அதன் தலைநகரிலிருந்து 1197 கிலோமீட்டர் கிழக்கே “மொக்கொங் (Mokong)” என்றோர் இடமுள்ளது என அறிய உதவியது. “மொக்கொங்” எனும் பெயர் தமிழ் மொழிபெயர்ப்பில் “மொக்கங்” என்று மருவியிருக்கிறது🤣 எனத் "திடமாகக்" கூறலாம்.
- ஜானகி கதிரேசன்
8✍ ஐந்து சந்தியில் இருந்து நடை தூரத்தில் இருந்தது அந்த இஸ்லாமியருடைய சாப்பாட்டு கடை அவருடையபெயரிலேயே கடை அழைக்க பட்டது. மொக் கான் ( Mohamed Khan) அவருடைய பெயரிற்கும் தமிழில் மொக்கனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன் அருகில் இருந்த இர்பானா பேக்கரி என்னுடைய நண்பன் யாசீன் உடையது அவன் இப்போதும் அங்கேதான் வசிக்கிறான். அதேபோல் pillow rice என்ற pillow's பிளவ்ஸ் என்று அழைக்கப்பட்டது.
- Edirveerasingam Kanagasingam
9✍யாழ் நகரில் மானிப்பாய் வீதி வழியாகச் செல்லும் போது ஐந்து சந்தி வருகிறது.
அவ் இடத்தில் ஐந்து வீதிகள் ஒன்றாகச் சந்திக்கிறது.
அந்தச் சந்தியை ஐந்துமுச் சந்தி எனத் தவறான சொல் பிரயோகத்தில் அழைக்கும் மூத்த தலைமுறையினர் சிலரும் உள்ளனர்.
அதாவது ஐந்து மூன்று சந்திகள் எனும் சொல் தவறானது. ஐந்து முகச்சந்தி என்றால் சரியான கருத்தைத் தரும்.
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி, புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.