Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற குற்றச்சாட்டு – அட்லாண்டா சிறையில் சரணடைந்தார் டிரம்ப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

25 AUG, 2023 | 06:56 AM
image
 

தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளார்.

நியுஜேர்சியில் உள்ள பெட்மினிஸ்டர் இல்லத்திலிருந்து விமானம் மூலம் புல்டன் சிறைச்சாலையில் ஆஜராவதற்காக டிரம்ப் நியுஜேர்சி சென்றார் .

புல்டன் சிறையில் அவர் குறித்த விபரங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டன, சிறையில் வைத்து அவரை அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர் – அமெரிக்க வரலாற்றில் சிறையில் படமெடுக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் டிரம்ப பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

https://www.virakesari.lk/article/163135

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பின் அங்க அடையாளங்கள் என்ன? போலீஸ் எடுத்த புகைப்படம், கைதி எண் வெளியீடு

ட்ரம்பின் அங்க அடையாளங்கள் என்ன?

பட மூலாதாரம்,FULTON COUNTY SHERIFF'S OFFICE

 
படக்குறிப்பு,

ட்ரம்பை போலீசார் எடுத்த புகைப்படம்

52 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த 2020 இல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அதன் முடிவுகளை மாற்ற முயன்றதாக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜார்ஜியா நீதிமன்றத்தில் இந்த வழக்கு சில தினங்களுக்கு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா சிறையில் ட்ரம்ப் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) சரணடைந்தார். அங்கு கைதிகளுக்கான நடைமுறைகள் முடிக்கப்பட்டு, சில நிமிடங்களில், இரண்டு லட்சம் டாலர்கள் பிணையின் கீழ் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார்.

போலீசார் எடுத்த மக்ஷாட் புகைப்படம்

கடந்த ஐந்து மாதங்களில் ஏற்கனவே மூன்று முறை ட்ரம்ப் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக கைது செய்யப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த முறை அட்லாண்டா சிறைச் சாலையில் கைதிகளுக்கு பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் ட்ரம்புக்கும் கடைபிடிக்கப்பட்டது.

குறிப்பாக, சிறையில் கைதிகளை போலீசார் எடுக்கும் “மக் ஷாட்” எனும் புகைப்படம் ட்ரம்புக்கும் எடுக்கப்பட்டது.

அத்துடன், வெள்ளை நிற ஆண், உயரம்: 6 அடி, 3 அங்குலம், எடை: 97 கிலோ, மஞ்சள் அல்லது ஸ்ட்ராபெரி நிற முடி, நீல நிற கண்கள் கொண்டவர் என்று ட்ரம்பின் அங்க அடையாளங்கள் தொடர்பாக போலீசாரின் பதிவேட்டில் இடம்பெற்றிருக்கும் தகவல்களும், சிறைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கைதிகளுக்கு அளிக்கப்படுவது போல, P01135809 என்ற அடையாள எண் ட்ரம்புக்கு அளிக்கப்பட்டது குறித்த தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது.

கைதிகளுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகள் முடிந்து, ட்ரம்ப் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆனது.

அப்போது சிறைக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நிபந்தனைகள் என்ன?

தேர்தல் முறைகேடு வழக்கில் ட்ரம்ப் சிறையில் இருந்து உடனே விடுவிக்கப்பட்டிருந்தாலும், நீதிமன்றம் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

குறிப்பாக, சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் எதையும் பகிரக்கூடாது. சாட்சிகளை அச்சுறுத்தும் விதத்திலான கருத்துக்களையும் அவர் கூறக்கூடாது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிற நபர்களை தொடர்பு கொள்ள விரும்பினால், வழக்கறிஞர்கள் மூலம் மட்டுமே அதை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ட்ரம்புக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.

 
ட்ரம்பின் அங்க அடையாளங்கள் என்ன?

பட மூலாதாரம்,FULTON COUNTY SHERIFF'S OFFICE

வழக்கும், ட்ரம்பின் விமர்சனமும்

இதனிடையே, தேர்தல் முறைகேடு வழக்கில் சிறையில் சரணடைந்த சில நிமிடங்களில் ஜாமீனில் வெளிவந்த ட்ரம்ப், தன் மீதான இந்த வழக்கை “நீதியின் கேலிக்கூத்து” என்று விமர்சித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பிடனை எதிர்த்து, குடியரசுக் கட்சி சார்பில் நான் களமிறங்க உள்ளேன்.

இந்த நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்த ட்ரம்ப்

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவு ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், “"Election interference. Never surrender!" என்று ஆங்கிலத்தில் குறுந்தகவலை அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுடன், அட்லாண்டா சிறையில் போலீசார் எடுத்த தமது “ மக் ஷாட்” புகைப்படத்தையும் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஜோ பிடன் மீது, ட்ரம்ப் முறைகேடு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இதையடுத்து ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு, ஜனவரி 2021 இல் முடக்கப்பட்டது.

டாக்டர் மார்டின் லூதர் கிங் ஜூனியர், ஃபிராங்க் சினாட்ரா, அல் கபோன் ஆகிய அமெரிக்க பிரபலங்களின் வரிசையில், மக் ஷாட் புகைப்படம் எடுக்கப்பட்ட பிரபலமாகவும், இப்புகைப்படம் எடுக்கப்பட்ட முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற பெயரையும் ட்ரம்ப் பெற்றுள்ளார்.

ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியது என்ன?

சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த பின் வீடு திரும்புவதற்கு முன், விமான நிலையில் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், 2020 அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு முடிவுகளை சந்தேகிக்க தமக்கு அப்போது உரிமை இருந்தது என்று கூறினார்.

அந்த தேர்தல் ஒரு மோசடியான தேர்தல்;முறைகேடு நடைபெற்ற தேர்தல் என்று கருதினேன். அவ்வாறு கருதுவதற்கு தமக்கு உரிமை உண்டு” என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஹிலாரி கிளிண்டன் (ஜார்ஜியா மாகாண கவர்னருக்கான முன்னாள் வேட்பாளர்), ஸ்டேசி ஆப்ராம்ஸ் உள்ளிட்ட பலர் இதே வழிமுறையை பின்பற்றுவதை நீங்கள் பல ஆண்டுகளாக பார்த்து கொண்டுதான் இருக்கிறீர்கள்” என்றும் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறினார்.

கடந்த 2020 இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்கு சீட்டுகளில் மோசடி நடைபெற்றதாக ட்ரம்ப் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார்.

அதிபர் தேர்தலில் ஜோ பிடனிடம் 12 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் ட்ரம்ப் தோல்வியை தழுவினார்.

அதையடுத்து தேர்தல் முடிவுகளை மாற்றும் நோக்கில் செயல்பட்டது தொடரப்பட்ட வழக்கில், ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 18 பேர் மீது கடந்த வாரம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

 
ட்ரம்பின் அங்க அடையாளங்கள் என்ன?

பட மூலாதாரம்,REUTERS

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு என்ன?

கடந்த 2020 அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில், ட்ரம்ப் பேசியதாக கூறப்பட்ட ஒரு தொலைபேசி உரையாடல் வெளியானது.

அதில், “ஜோ பிடனை வெல்வதற்கு வசதியாக, அவரைவிட 11,780 வாக்குகளை அதிகம் பெறும்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என்று ஜார்ஜியா மாகாணத்தின் உயர்நிலை தேர்தல் அதிகாரி ஒருவருக்கு வாக்கு எண்ணிக்கையின்போது ட்ரம்ப் அழுத்தம் கொடுத்ததைப் போன்ற உரையாடல் இடம்பெற்றது.

இந்த குற்றச்சாட்டின் பேரில் தான் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தேர்தல் முறைகேடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் தேர்தல் மோசடியில் ஈடுபட்டது, தேர்தல் அதிகாரியை அதிகார துஷ்பிரயோகம் செய்ய தூண்டியது, ஆள்மாறாட்ட சதி செய்தது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், ட்ரம்புடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் சுமார் 10 பேர் ஏற்கனவே ஃபுல்டன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நியூயார்க் நகர முன்னாள் மேயர் ரூடி கியுலியானி, வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் ஆகியோர் அடங்குவர்.

முன்னதாக, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் ஆகஸ்ட் 25 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதிக்குள், போலீசில் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cyrjxx2mkjyo

  • கருத்துக்கள உறவுகள்

நாளாந்தம் ரம்புக்கான ஆதரவு கூடிக்கொண்டே போகிறது.

மறுவளத்தால் பணத்தையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

தேர்தலும் அடுத்த வருடம்.

அடுத்த சித்திரைக்குள் ரம்பை ஓரங்கட்டாவிட்டால் ஜனநாயககட்சி அப்போ தான்.

அதுக்காகவே 2025 அல்லது 2026 வரை விசாரணைகளை தள்ளிப் போட முயற்சி செய்கிறார்.

இனிவரும் காலங்கள் மிகவும் சுவாரிசமாகவும் மர்மமாகவும் இருக்கப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நாளாந்தம் ரம்புக்கான ஆதரவு கூடிக்கொண்டே போகிறது.

மறுவளத்தால் பணத்தையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

தேர்தலும் அடுத்த வருடம்.

அடுத்த சித்திரைக்குள் ரம்பை ஓரங்கட்டாவிட்டால் ஜனநாயககட்சி அப்போ தான்.

அதுக்காகவே 2025 அல்லது 2026 வரை விசாரணைகளை தள்ளிப் போட முயற்சி செய்கிறார்.

இனிவரும் காலங்கள் மிகவும் சுவாரிசமாகவும் மர்மமாகவும் இருக்கப் போகிறது.

நீங்கள் குறிப்பிடும் ஆதரவு சிவப்புக் கட்சிப் பக்கம் மட்டும் தான் என நினைக்கிறேன். சிவப்புக் கட்சி "சத்தம் போடும் தகர டப்பாக்களின்" கட்சியாகி பல வருடங்கள் இப்போது😂.

ஆனால், பொது அமெரிக்க வாக்கெடுப்பில் தான் பிரச்சினை ட்ரம்புக்கு வரக்கூடும். Swing state களை வெல்வதற்கு போன முறை மாதிரி குத்தி முறிந்து கலவரமெல்லாம் ஏற்படுத்த வேண்டியிருக்கும்! ஆனால், அதையும் செய்வார் ட்ரம்ப்!

"..But in a crucial warning sign for the former president and his supporters, Trump faces glaring vulnerabilities heading into a general election, with many Americans strongly dug in against him. While most Republicans — 74% — say they would support him in November 2024, 53% of Americans say they would definitely not support him if he is the nominee. Another 11% say they would probably not support him in November 2024.

https://apnews.com/article/trump-election-2024-indictments-ddfd50492dc576c0c2ca2d1afe0e4639

  • கருத்துக்கள உறவுகள்

இதிலேயும் கூட கறுப்பு வெள்ளைப் பாகுபாடு தலைகாட்டுவதைக் கவனியுங்கள். நேற்று வரை சரணடைந்தவர்களுள் வெள்ளையர்கள் எல்லாரும் பிணை ஏற்பாடு செய்து வெளியே வந்து விட்டார்கள். கறுப்பினத்தவரான Harrison Floyd என்பவர் பிணையில்லாமல், சட்டத்தரணியுமில்லாமல் கையை வீசிக் கொண்டு போயிருக்கிறார். நேற்று மாலை வரை பிணை கிடைக்காமல் ஜெயிலில் வைத்து விட்டார்கள். இன்று, அவரது கேஸை இன்னொரு நீதிபதிக்கு பாரம் கொடுத்து விட்டார்கள், எனவே அந்த நீதிபதி முன் செல்லும் வரை பிணையில்லை என்று தீர்ப்பாகி ஜெயிலில் தான் இப்போதும் இருக்கிறார்.  

"Black Voices for Trump" என்ற அமைப்பின் தலைவர் அவர்! இனியாவது ட்ரம்ப் குழு கறுப்பினத்தவரைக் கவனிப்பதேயில்லை என்பதை உணர்வாரா தெரியாது!😎

"...During his first appearance in court Friday afternoon, Judge Emily Richardson told Floyd that she would not be setting bond because Floyd had already been indicted and assigned to Judge Scott McAfee, who would address bond moving forward."-CNN

 

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

நீங்கள் குறிப்பிடும் ஆதரவு சிவப்புக் கட்சிப் பக்கம் மட்டும் தான் என நினைக்கிறேன். சிவப்புக் கட்சி "சத்தம் போடும் தகர டப்பாக்களின்" கட்சியாகி பல வருடங்கள் இப்போது😂.

தகவல்களுக்கு நன்றி.

இப்போது நியூயோர்க் நியூஜேர்சி இலிநோஸ் கலிபோர்ணியா போன்ற மாநிலங்களில் நடக்கும் குற்றச்செயல்கள் அகதிகள் பராமரிப்பு வேடிக்கை மட்டும் பொலிஸ் என்று சாதாரண மக்களின் அன்றாட வாழ்வை கேள்விக்குள்ளாக்கியுள்ளது ஜனநாயககட்சி.

மேலே சொன்ன பல மாநிலங்களிலிருந்தும் பலர் புளோரிடா வடகரோலினா ரெக்சாஸ் போன்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்கிறார்கள்.

காலாகாலமாக ஜனநாயகக் கட்சியில் இருந்தவர்களே கட்சியை தூற்றத் தொடங்கிவிட்டார்கள்.

கடந்த நியூயோர்க் கவர்னருக்கான தேர்தலில் இந்த மாற்றத்தை காணக் கூடியதாக இருந்தது.

பலரும் வியாபார நிலையங்களை பூட்டுகிறார்கள்.

கொள்ளையார்கள் மனசாட்சியே இல்லாமல் மூட்டைமூட்டையாக கண்முன்னே தூக்கிக் கொண்டு போகிறார்கள்.பார்க்கவே மிகவும் வெறுப்பாக இருக்கிறது.

ஏன் தான் சட்டத்தையும் நீதியையும் அமுல்படுத்த மறுக்கிறார்கள்?

மறுபக்கம் குடியரசுக் கட்சியின் மாநிலங்களில் சட்டம் ஒழுங்குகள் நிலைநாட்டப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

தகவல்களுக்கு நன்றி.

இப்போது நியூயோர்க் நியூஜேர்சி இலிநோஸ் கலிபோர்ணியா போன்ற மாநிலங்களில் நடக்கும் குற்றச்செயல்கள் அகதிகள் பராமரிப்பு வேடிக்கை மட்டும் பொலிஸ் என்று சாதாரண மக்களின் அன்றாட வாழ்வை கேள்விக்குள்ளாக்கியுள்ளது ஜனநாயககட்சி.

மேலே சொன்ன பல மாநிலங்களிலிருந்தும் பலர் புளோரிடா வடகரோலினா ரெக்சாஸ் போன்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்கிறார்கள்.

காலாகாலமாக ஜனநாயகக் கட்சியில் இருந்தவர்களே கட்சியை தூற்றத் தொடங்கிவிட்டார்கள்.

கடந்த நியூயோர்க் கவர்னருக்கான தேர்தலில் இந்த மாற்றத்தை காணக் கூடியதாக இருந்தது.

பலரும் வியாபார நிலையங்களை பூட்டுகிறார்கள்.

கொள்ளையார்கள் மனசாட்சியே இல்லாமல் மூட்டைமூட்டையாக கண்முன்னே தூக்கிக் கொண்டு போகிறார்கள்.பார்க்கவே மிகவும் வெறுப்பாக இருக்கிறது.

ஏன் தான் சட்டத்தையும் நீதியையும் அமுல்படுத்த மறுக்கிறார்கள்?

மறுபக்கம் குடியரசுக் கட்சியின் மாநிலங்களில் சட்டம் ஒழுங்குகள் நிலைநாட்டப்படுகிறது.

நீங்கள் இங்கே குறிப்பிடும் காட்சிகள் (சான் பிரான்சிஸ்கோவில் மூட்டை மூட்டையாகக் களவு) உண்மை. ஆனால், அந்தக் காட்சிகளை சிவப்புக் கட்சியினர் வாக்காளர்களின் மண்டையைக் கழுவப் பாவிக்கும் போது பல தரவுகளை மறைத்து விடுகிறார்கள். அந்த தரவுகளைக் கவனமாகத் தேடிப்பார்க்க வேண்டும்.

அப்படித் தேடிப்பார்த்தால் கிடைக்கும் முடிவு: சிவப்பு , நீலக் கட்சி வேறுபாடுகள் அல்ல நகரங்களின் குற்ற அளவுகளைத் தீர்மானிப்பது. ஒரு நகர மக்கள் தொகை தான் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. பெரிய மக்கள் தொகை கொண்ட நகரங்கள் எல்லாம் நீலக் கட்சியின் கட்டுப் பாட்டில், அங்கே சிறிய நகரங்களை விட அதிக நகர்ப்புறங்கள் (metropolitan areas) இருக்கின்றன, பல வகைக் குற்றங்களும் சிறு நகரங்களை விட அதிகம் இருக்கும், எனவே நீலக் கட்சி மீது தான் பிழை என்ற மாயத்தோற்றத்தை சிவப்புக் கட்சிக் காரர்கள் உருவாக்கி விட்டார்கள். கீழே ஒரு உதாரண ஆய்வு, 2020 இல் வந்தது - எப்படி cherry-pick செய்யப் பட்ட காட்சிகளை மட்டும் வைத்து சிவப்புக் கட்சி வாக்காளர் மண்டையைக் கழுவுகிறது எனப் பாருங்கள்.   

https://www.bbc.com/news/world-us-canada-53991722 

இன்னொரு பக்கம், மத்தியில் இருக்கும் ஆட்சி - அது சிவப்போ, நீலமோ- அமெரிக்க மாநிலங்களின், அவற்றுள் இருக்கும் நகரங்களின் பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றது என்ற வாதம் ஒரு போலித் தகவல். ஏன்?

பொதுப்பாதுகாப்பு (public safety) என்பது மாநிலத்தின் பொறுப்பு. பொலிஸ் சேவை நகரத்தினதும் மாநிலத்தினதும் பொறுப்புகள். இதனால் தான் புஷ், ஒபாமா, ட்ரம்ப், பைடன் ஜனாதிபதிகளாக இருந்த காலங்கள் முழுவதும் தெற்கு சிகாகோவின் கொலைக்குற்ற வீதம் குறையவில்லை. எனவே, உள்ளூரில் சட்டம் , ஒழுங்கு பிரச்சினையாக உருவானால், அதற்கு நீலக்கட்சி காரணமெனக் கண்டால், நீலக்கட்சியை நீக்கி சிவப்புக் கட்சியில் இருந்து ஆளுனர்களை மாநில மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள். இதனால் தான் நியூஜேர்சியில் கிறிஸ் கிறிஸ்ரியும், மேரிலாந்தில் ஹோகனும் ஆளுனர்களாகப் பதவி வகித்தார்கள். 

எனவே, சிவப்புக் கட்சிக் காரர்கள் காட்டும் "காட்சிகளை" நம்பாமல், தரவுகளை ஆற அமர மக்கள் தேடிப்பார்க்க வேண்டும். மக்களின் பாதுகாப்புணர்வை, அச்சத்தைத் தூண்டி விட்டு மத்தியில் ஆட்சிக்கு வரும் முயற்சியை 2020 இல் இருந்தே ட்ரம்ப் குழு முயன்று கொண்டிருக்கிறது.

தரவுகள் எம்மை ஏமாறாமல் காக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

எனவே, சிவப்புக் கட்சிக் காரர்கள் காட்டும் "காட்சிகளை" நம்பாமல், தரவுகளை ஆற அமர மக்கள் தேடிப்பார்க்க வேண்டும். மக்களின் பாதுகாப்புணர்வை, அச்சத்தைத் தூண்டி விட்டு மத்தியில் ஆட்சிக்கு வரும் முயற்சியை 2020 இல் இருந்தே ட்ரம்ப் குழு முயன்று கொண்டிருக்கிறது.

ஜஸ்ரின் உங்கள் தரவுகளுக்கு நன்றி.

பொதுமக்கள் பாதுகாப்பு என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.

அடுத்த தேர்தலில் இது வெகுவாக பிரதிபலிக்கும் என எண்ணுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.