Jump to content

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடுஉதயன்
  • திகதி: 14/3/1991
  • பக்கம்: 1, 4

 

கும்புறுப்பிட்டியில் 5 தமிழர் வெட்டிக் கொலை

யாழ்ப்பாணம். மார்ச் 14

திருகோணமலை மாவட் டம் கும்புறுப்பிட்டியில் கடந்த 3 ஆம் திகதி இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து தமிழ் மக்களின் வீடுகளில் புகுந்து ஐவரை வெட்டிக் கொலை செய்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கொலையுண்டவர்களில் மூவர் ஆண்கள். இருவர் பெண்கள்.

ரி. கார்த்திகேசுப்பிள்ளை (5 வயது), வி. கதிரவேலுப் பிள்ளை [58 வயது), எஸ். முனியாண்டி [56 வயது). கே.உதயராணி [15வயது], யோகராணி ஆகியோரே கொலையுண்ட ஐவரும் ஆவர்.

கொலையுண்ட இரு பெண்களும் படையினரால் மானபங்கப்படுத்தப்பட்டனர் என்றும் -

சம்பவம் நடந்த பகுதியிலுள்ள வீடுகளில் படையினர் கொள்ளைகளில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

(ஓ)

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 164
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 27/03/1991
  • பக்கம்: 1

 

அக்கரைப்பற்றில் முஸ்லிம் ஊர்காவலரால் தமிழர் கடத்தப்படுகின்றனர்

கொழும்பு, மார்ச் 27

அக்கரைப்பற்றுப் பகுதியில் இருபதுக்கும் அதிகமான தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை முஸ்லிம் ஊர்காவற் படையினரே கடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.  

கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அக்கரைப்பற்றில் கடந்த ஞாயிறு நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாகவே இந்தக் கடத்தல்கள் இடம்பெறுவதாகக் கருதப்படுகிறது.

குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டில் இருந்து பதினெட்டாக உயர்ந்துள்ளது.

(உ-5)

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 29/03/1991
  • பக்கம்: 1

 

30 தமிழ் விவசாயிகளும் 4 மாணவரும் வெட்டிகொலை
கிழக்கில் ஊர்காவலர் அட்டூழியம்

யாழ்ப்பாணம், மார்ச் 29

கிழக்கில் முஸ்லிம் ஊர்காவற் படையினர் தொடர்ந்தும் தமிழர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை [25ஆம் திகதி] காரைதீவில் இருந்து அட்டைப் பாலத்துக்கு அறுவடைக்காகச் சென்றுகொண்டிருந்த முப்பது தமிழ் விவசாயிகளை முஸ்லிம் ஊர்காவற்படையினர் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

அதே தினத்தில் தம்பிலுவிவில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தமிழ் மாணவிகள் அறுவரை ஊர்காவற் படையினர் கடத்திச் சென்றனர். மேலும் நான்கு தமிழ் மாணவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

(அ)

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 10/04/1991
  • பக்கம்: 1

 

3 தமிழரின் சடலங்கள்

லண்டன், ஏப். 10

மட்டக்களப்பு மாவட்டம் மண்டூரில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்களது சடலங்கள் வீதியோரங்களில் துண்டு துண்டாக வெட்டப்பட்டுப் போடப்பட்டிருந்ததாக பி. பி. ஸி.நேற்றிரவு தெரிவித்தது.

இராணுவத்தினர், அல்லது முஸ்லிம் ஊர்காவல் படையினர் இவர்களைப் படுகொலை செய்திருக்கலாம் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

[ஒ-5]

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 11/09/1991

 

  • பக்கம்: 1

 

தமிழின அழிப்பில் முஸ்லிம்களே மும்முரம்! 
திருமலை ரூபன் பேட்டி

யாழ்ப்பாணம், செப். 11 

கடந்த காலங்களில் முஸ்லிம்களையும் சேர்த்தே நாம் போராடி வந்தோம். ஆனால் அவர்கள் எமக்குத் துரோகம் இழைத்துவிட்டனர். கிழக்கில் சிங்கள இராணுவத்தை விட முஸ்லிம்களே இப்போது தீவிரமாக தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளr திரு. ரூபன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்தார். 

போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு அதிக பங்களிப்பை நாம் கடந்த காலங்களில் வழங்கினோம். ஆனால் அவர்கள் அதனை உதறிவிட்டு சிறீலங்கா இராணுவத்துடன் சேர்த்து செயற்பட்டுவருகின்றார்கள்.

சிங்கள அரசானது தமிழீழப் போராட்டத்தை நசுக்குவதற்கு முஸ்லிம்களைப் பயன்படுத்துகிறது. அதனை முஸ்லிம்களோ அதன் தலைவர்களோ உணர்ந்ததாக தெரியவில்லை.

நாளை எமது போராட்டம் வெற்றியடையும், அதன்பின் சிங்கள இராணுவத்தின் பார்வை முஸ்லிம்கள் பக்கம் திரும்பும். அப்போது அவர்கள் திரிசங்கு நிலையில் நிற்கப்போகிறார்கள்.

தொடர்த்தும் முஸ்லிம்களை எம்மோடு வைத்திருப்பது புத்திசாலித்தனமல்ல என்று அவர் மேலும் கூறினார். 

(உ-3-5)

 


 

  • பக்கம்: 3

 

திருமலையில் பலவந்தமாக தமிழர் முஸ்லிம்களாக மதம் மாற்றப்படுகின்றனர்

யாழ்ப்பாணம், செப்.11 

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்களுக்கு இடையே இருக்கும் கிராமங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்களின் நெருக்குதல்களினால் முஸ்லிம்களாக மதம் மாற்றப்படுகிறார்கள்.

திருகோணமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளர் திரு. ரூபன் இத்தகவலைத் தெரிவித்தார்.

கிண்ணியாவுக்கு அருகே கிளப்பன் பேர்க் அகதி முகாமில் தங்கியிருப்பவர்களில் இருநூறுக்கும் அதிகமானோர் முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டிருக்கின்றனர்.

இதேபோல தோப்பூரிலும் பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் மதம் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

- இப்படி அவர் சொன்னார்.

[உ-3-5]

 


 

  • பக்கம்: 3

 

நெருக்கமாக முகாம்கள்

யாழ்ப்பாணம், செப். 11 

இந்தியப்படை இங்கு அமைத்தது போல் நெருக்கமாக பல முகாம்களை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஸ்ரீலங்காப் படையினர் அமைத்திருப்பதாக திரு. கரிகாலன் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 பொலீஸ் நிலையங் கள், 48 இராணுவ முகாம்கள், இரண்டு கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விமானப்படை முகாம் ஒன்றும் ஊர்காவல் படை முகாம்கள் ஐந்தும் அங்கு இயங்குகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் 7 இராணுவ முகாம்களும், 29 விசேட அதிரடிப்படை முகாம்களும், 9 பொலீஸ் நிலையங்களும். ஒரு கடற்படை முகாமும், 26 முஸ்லிம் ஊர்காவல்படை முகாம்களும், 6 சிங்கள ஊர்காவல்படை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கேள்வி: இவ்வளவு முகாம்கள் அமைக்ப்பட்டிருப்பதால் சிங்கள அரசு கிழக்கு மாகாணம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளலாமா?

கரிகாலன்: முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால் பெரும்பாலும் நகரப் பகுதிகளையும், பிரதான வீதிகளையும்தான் அவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் எமது நடமாட்டமே இன்னமும் இருக்கிறது.

நகரப்பகுதிகளிலும் முழுமையான அளஅவில் நிர்வாகச் செயற்பாட்டை அரசினால் செய்யமுடியாதுள்ளது. எமது போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கிற மக்களை வைத்துக்கொண்டு சிவில் நிர்வாகத்தை அரசினால் செயற்படுத்த முடியவில்லை.

கேள்வி- கிரானில் நடத்த மோதலில் இரசாயன ஆயுதங்களைப் புலிகள் பாவித்தனர் என்று அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. அதில் உண்மை உண்டா?

கரிகாலன்:- அவ்வாறன எந்த ஆயுதங்களையும் நாம் பயன்படுத்தியதில்லை. ஆனால் வாகனங்களைக் கொண்டு எதிரிகளைத் தாக்குவது பேன்ற சில நவீன யுத்திகளைக் கையாண்டிருக்கிறோம்.

தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத நிலையிலேவே அரசு இவ்வாறான குற்றச்சாட்டுகளை எம்மீது சுமத்துகின்றனர்.

 


 

  • பக்கம்: 3

 

முஸ்லிம்களை எமக்கு எதிராக திருப்பியது அரசின் சதியே!

தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் செயற்படும் நிலையை உருவாக்கியது ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட ஒரு வேலையாகும். ஸ்ரீலங்கா அரசும்-புலிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே இதற்கான 'சதி' நடக்கத் தொடங்கிவிட்டது.

திரு. கரிகாலன் நேற்று பத்திரிகையாளர் மாநாட்டில் இப்படித் தெரிவித்தார்.

பொத்துவிலில் எப்போதுமே தமிழ் - முஸ்லிம் கலவரம் நடந்ததில்லை; இந்தப் போரின்போதுதான் முஸ்லிம்கள் எமக்கு எதிராகச் செயற்பட்டிருக்கின்றனர்.

முஸ்லிம் மக்களை சகோதரர்களாகவே நாம் கருதி வந்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீலங்க இராணுவம் கிழக்கில் நுழைந்தபோது முஸ்லிம்கள் அவர்களை வரவேற்றனர். அத்துடன் அவர்களுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களாலேயே தமிழ் மக்கள் பெருமளவில் கொலை செய்யப்பட்டுள்ளனர் - என்றார்.

 


 

  • பக்கம்: 3

 

கடந்த 15 மாத காலத்தில் அம்பாறை, மட்டக்களப்பில் 8,ooo தமிழர் படுகொலை!

1990 ஜூனில் விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்காப் படையினருக்கும் இடையிலான மோதல் ஆரம்பித்த பின்னர் - கடந்த 15 மாத காலத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மட்டும் படையினராலும், முஸ்லிம் காடையர்களினாலும் சுமார் 8 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் திரு. கரிகாலன் இத்தகவலை வெளியிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் 5 ஆயிரம் பொதுமக்கள் கொலையுண்டுள்ளனர். உத்தியோகஸ்தர்கள், படித்தவர்கள், ஆண்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் கொலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் மட்டும் ஐநூறுக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாதபடி டயர் போட்டு எரிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் 300, 400 ஆண்கள் என்ற ரீதியில் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பல குடும்பங்கள் குடும்பத் தலைவர்களை இழந்துள்ளன. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்- என்று அவர் கூறினார்.

(உ-3-5) 

 

*****

  • தொகுப்பாளர் குறிப்பு: 1990 மற்றும் 1991 ம் ஆண்டுகளில் திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் காணாமல்போனோர், கொல்லப்பட்டோர், மற்றும் வன்புணர்வானோர் (ஆதாரம்www.tchr.net/50_year_arrest_kill.htm )

adwqeq.png

afdwqwq.png

afwqe.png

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 13/12/1991
  • பக்கம்: 1

 

தமிழர்களின் உடைமைகள் பிற இனத்தவர்கள் வசம்!

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள தமிழாகளின் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை ஏனைய இனத்தவர்கள் தமது உடைமைகளாக்கி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழர்களின் வயல்களில் சிங்களப் பொலீஸாரும், முஸ்லிம் மக்களும் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகிகின்றனர் என்றும், கைவிடப்பட்ட தமிழர்களின் வீடுகளிலுள்ள விதை நெல்லையே அவர்கள் விதைப்பதற்கு பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழர்களின் டிராக்டர்கள் சூறையாடப்பட்டு, அவற்றையும் அவர்கள் பாவித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

[ஒ]

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 19/03/1992
  • பக்கம்: 1

 

முஸ்லிம் ஊர்காவலர் அட்டகாசம்; தமிழ்ப் பயணிகள் மீது கிரனேட் வீச்சு! 4 பேர் பலி!!
காத்தான்குடியில் சம்பவம்

மட்டக்களப்பு காத்தான் குடிப்பகுதியில் நேற்று தமிழர்கள் பயணம் செய்த பஸ் ஒன்றை முஸ்லிம் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் இளைஞர் ஒருவர் வழி மறித்து அதன் மீது கிரனேட் வீசினர்.

பஸ்ஸுக்குள் கிரனேட் வெடித்ததில் பஸ்ஸில் பயணம் செய்த நால்வர் உயிரிழந்தனர். 18 பேர் காயமுற்றனர்.

பஸ்ஸில் பயணம் செய்த இரு பெண்கள் கடத்திச்செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

[உ-த-10]

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 7/04/1992
  • பக்கம்: 1,4

 

அம்பாறையில் தமிழர் மீது தொடரும் ராணுவ வன்முறை; புலிகள் பிரமுகர் தமிழன்பன் தகவல்

யாழ்ப்பாணம். ஏப். 7 

* 1990 ஜூன் மாதத்தில் போர் தொடங்கிய பின்னர் பொத்துவில் பகுதியிலிருந்து மட்டும், இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்.

* இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் பல பழந்தமிழ்க் கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளன.

*அம்பாறை - மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ்க் கிராமங்களைப் படையினர் சுற்றிவளைத்துத் தொடர்ந்து அழித்து வருகிறார்கள். அங்கு இராணுவ வன்முறைகளும் தொடர்கின்றன.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு -அம்பாறைப் பிராத்திய மக்களுறவுக் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் தமிழன்பன்.

"விழிப்பு'' பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் நிலை குறித்து விவரிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்த இரு மாவட்டங்களிலும் பெண்கள், சிறார்கள், மாணவர்கள், முதியோர்கள் ஆகிய அனைத்து மக்களும் படையினரின் வன்முறைகளுக்கும், படுகொலைகளுக்கும் ஆளாகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் கரடியன்குளம், கணையான்குழி, மதுரையடிவெட்டை, பொன்னன்வெளி. சாளம்பையடி, சாயன்கேணி போன்ற தமிழ்க் கிராமங்கள் சிங்களக் குடியேற்றங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் பிரதேச தமிழ்க் கிராமங்களை முஸ்லிம் ஊர்காவல் படையும், அரசாங்கப் படைகளும் சேர்ந்து அழித்தன.

இந்த மக்கள் அனைவரும் இன்று கோமாரிக் கிராமத்தில் குடிசை அமைத்து வாழ்கிறார்கள். அவர்களும் அதிரடிப் படையினரின் இராணுவ நடவடிக்கைகளினால் இன்னற் படுகின்றனர். இவர்கள் 'நாய்'கள் வளர்ப்பது கூடப் படையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது.

கோமாரியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உதவிகளோ நிவாரணமோ ஒழுங்காகக் கிடைப்பதில்லை.

அம்பாறை மாவட்டத்தில் விசேட அதிரடிப்படை முகாம்கள், இராணுவ முகாம்கள் விமானப்படை முகாம், பொலிஸ் நிலையம், முஸ்லிம் ஊர்காவல் படைநிலையங்கள் என்று மொத்தம் 76 முகாம்கள் உள்ளன. - என்றார்.

(அ)

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 29/04/1992
  • பக்கம்: 1,3

 

ஊர்காவலர் முகாம் அருகே 2 தமிழரின் சடலங்கள் மீட்பு
மீராவோடையில் சம்பவம்

மட்டக்களப்பு, ஏப். 29 

வாழைச்சேனை தமிழ்க கிராம சேவகர் பிரிவில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட இரு தமிழ் இளைஞர்கள், பின்னர் மீராவோடை ஊர்காவல்படை முகாம் அருகில் இருந்து சடலங்களாக தோண்டி எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீராவோடை தமிழ் அரச அதிபர் பிரிவைச் சேர்ந்த திகம்பரராஜா சிவகுமார் [ 23 வயது ), இராசலிங்கம் மகேஸ்வரன் [25 வயது] ஆகிய இரு இளைஞர்களும் கடந்த 19 ஆம் திகதி சாரமணிந்த இனந்தெரியாத நபர்களினால் கூட்டிச் செல்லப்பட்டனர் என்றும் -

அந்த இருவரும் திரும்பி வராததை அடுத்து அவர்களது பெற்றோர் கடந்த 22 ஆம் திகதி இது குறித்து பொலீஸில் முறையீடு செய்தனர் என்றும் 

அதை அடுத்து பொலீஸார் நடத்திய தேடுதலில் சம்பந்தப்பட்ட இருவரது சடலங்களும் மீராவோடை ஊர் காவல்படை முகாமுக்கு அருகில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது என்றும் - தெரிவிக்கப்பட்டது. 

வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்களை பரிசோதனை செய்த வைத்திய அதிகாரி, ஒருவர் அடித்து கொல்லப்பட்டிருப்பதாகவும் மற்றவர் உயிருடன் புதைக்கப்பட்டு இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 30/04/1992
  • பக்கம்: 1,6

 

பொலன்னறுவ பகுதியில் தமிழர்கள் மீது தாக்குதல்; 30 பேர் பலி! பலர் படுகாயம்!!

கொழும்பு.ஏப்.30

பொலன்னறுவ மாவட்டம், வெலிக்கந்தவுக்கு அருகேயுள்ள கரபோல என்னும் இடத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஏஜென்ஸிச் செய்திகள் தெரிவித்தன.

இத் தாக்குதலில் தமிழர்கள் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர் என்றும், மேலும் பல தமிழர்கள் படுகாயமடைந்தனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டது.

கொழும்பில் பாதுகாப்பு வட்டாரங்கள் இதனை ஊர்ஜிதம் செய்ததாக இந்திய வானொலி நேற்றிரவு அறிவித்தது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 1/05/1992

 

 

  • பக்கம்: 1

 

முஸ்லிம் பொலீஸாரே தமிழரைக் கொலைசெய்தனர்; படை அதிகாரிகள் ஆராய்கின்றனர்

கொழும்பு,மே 1 

பொலன்னறுவ மாவட்டத்தில் இரு கிராமங்களில் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் உள்ளூர் முஸ்லிம் பொலிஸாரும், ஊர்காவல் படையினரும் என்று தற்பொழுது தெரியவந்துள்ளதாக பி.பி.ஸி நேற்று அறிவித்தது.

இவ்விடயம் குறித்து உயர் படை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் என்றும் -

இந்த மாவட்டத்தில் இடம் பெற்ற உயிர்க்கொலைகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அமைச்சர்கள் சிலரும் இராணுவ உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

(ஒ- 10)

 


 

  • பக்கம்: 3

 

உயிரிழந்த தமிழர்கள் எண்ணிக்கை 56ஆக உயர்வு

பொலன்னறுவ மாவட்டத்தில் முஸ்லிம்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழ்ந்த தமி ழர்களின் எண்ணிக்கை குறைத்தது 56 ஆக அதிகரித்துள்ளது என்றும் -

இந்த எண்ணிக்கை 70 அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் லெரித்தாஸ் வானொலி அறிவித்துள்ளது. 

இன்னொரு தமிழ் கிராமத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 13 தமிழர்களின் கதி தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

(இ-எ)

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 2/05/1992
  • பக்கம்: 1

 

முஸ்லிம் கிராமத்திலிருந்து 57 இராணுவத்தினரை காணவில்லையாம்!

கொழும்பு,மே 3 

பொலனறுவ மாவட்டத்தில் தாக்குதல்கள் இடம்பெற்ற கிராமங்களில் மேலும் பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

தாக்குதல் இடம்பெற்ற முஸ்லிம் கிராமமான அலும்புப் பொத்தான என்னும் இடத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த 57 'பரா' இராணுவத்தினரைக் காணவில்லை என்றும் - 

தாக்குதல் நடந்த சமயம் அவர்கள் பயந்து காடுகளுக்குள் ஓடி ஒளிந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை - முஸ்லிம்களினால் கொல்லப்பட்ட தமிழரின் எண்ணிக்கை குறைந்தது 61 ஆக இருக்கும் என்று உறுதி செய்யப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்கள் மீண்டும் தம் மீது இன்னொரு தாக்குதலை நடத்தலாம் என்று அஞ்சி காடுகளுக்குத் தப்பிச்சென்ற தமிழ் மக்கள் இன்னும் காடுகளுக்குள்ளேயே ஒளிந்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

[ஒ-எ]

 

*****

  • தொகுப்பாளர் குறிப்பு: 30/04/1992 அன்று வெளியான உதயன் நாளேட்டின் படி, இனந்தெரியாத நபர்கள் சிலரால் அழிஞ்சிப்பொத்தானை என்ற முஸ்லிம் ஊர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நேரம் இக்கிராமத்தின் சுற்றுவட்டாரத்திலிருந்த சிறுமுகாமொன்றின் மீதான புலிகளின் அதிரடித்தாக்குதலில் முகாம் அழிக்கப்பட்டதோடு 10இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். மேற்கொண்டு ஏராளமான படைக்கலன்களைக் கைப்பற்றியுமிருந்தனர். இத்தாக்குதல் வெறும் ஏழு நிமிடங்கள் மட்டுமே நீடித்திருந்தது. இச்சிறுமுகாமினுள் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் நிலைகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அழிஞ்சிப்பொத்தானை மீது தாக்குதல் நடத்தியவர்கள் தவிபுவினர் என்றும் அத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தாக்குதல் குறித்து பாரிஸிலிருந்து பி.பி.ஸிக்கு லோரன்ஸ் திலகர் அவர்கள் வழங்கிய செவ்வியின் போது "அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற படுகொலைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அரசினால் திட்டமிடுமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே அது.'' என்று தெரிவித்து மறுப்புச்செவ்வி வழங்கியிருந்தார். இச்செவ்வி 5/5/1992 அன்று உதயன் நாளேட்டில் வெளியாகியுள்ளது.

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 4/05/1992
  • பக்கம்: 1

 

கடத்தப்பட்ட 12 தமிழரை மீட்க பேச்சு நடக்கிறதாம்

கொழும்பு. மே 4 

பொலன்னறுவ மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்செயல்களைத் தொடர்ந்து கடத்திச் செல்லப்பட்ட பன்னிரண்டு தமிழ்ப் பொதுமக்களையும் விடுவிப்பது குறித்து பேச்சுகள் நடைபெற்றுவருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. 

தியன்வட்டவானில் உள்ள மியன்கரச்சி கிராமத்தில் இருக்கும் காட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட இவர்களில் 8 பேர் ஆண்கள் என்றும் நான்கு பேர் பெண்கள் என்றும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'சண்டே ரைம்ஸ்' செய்தி வெளியிட்டிருக்கிறது. 

தமிழர்களை விடுவிக் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் நாம் பேசினோம். ஆனால் அம்முஸ்லிம் பிரதிநிதிகளனால் கடத்தப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ள முடியாதிருந்தது. தமிழரைக் கடத்தியவர்கள் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் என்று நம்பப்படுகின்றது" இப்படி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். 

[ஒ-எ]

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 5/05/1992
  • பக்கம்: 1

 

*வாழைச்சேனையில் 6 மாணவிகள் உட்பட 13 தமிழர் கடத்தப்பட்டனர்

கொழும்பு,மே 5 

வாழைச்சேனை காகித நகரில் கடந்த புதனன்று 13 தமிழர்கள் முஸ்லிம் குண்டர்களினாலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் கடத்தப்பட்டனர்.

காகித ஆலை பதிமருந்துத் தோட்டத்தினுள் விறகு பொறுக்கச் சென்ற 6 இளம் பெண்கள், ஒரு வயோதிப மாது, நான்கு சிறுவர்கள், இரு சிறுமியர் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டனர். கடத்தப்பட்ட சிறுவர்களில் ஒருவன் வெட்டுக் காயங்களுடன் தப்பி ஓடி வந்ததை அடுத்து கடத்தல் சம்பவம் பற்றிய முழு விவரமும் வெளியானது.

கடத்தப்பட்டவர்கள் காவத்தைமுனைக் கிரமத்துகுக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அச்சிறுவன் தகவல் வெளியிட்டான்.

இதனையடுத்து காவத்தைமுனையிலும், அதைச் சுற்றி உள்ள காடுகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தேடுதல் முயற்சி பலனளிக்கவில்லை. 

கடத்தப்பட்ட ஆறு இளம் பெண்களும் வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் என்றும், அவர்களின் பெற்றோர்கள் காகித ஆலை ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 6/05/1992

 

  • பக்கம்: 1

 

மட்டு. அம்பாறை தமிழருக்கு கொலைப் பயமுறுத்தல் அங்கு பெரும் பதற்ற நிலை

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களுக்கு பயமுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதால், அங்கு பெரும் பதற்றநிலை நிலவுவதாகத் தெரியவருகிறது. முஸ்லிம்களும், ஊர்காவல் படையினருமே தமிழ் மக்களுக்கு கொலைப் பயமுறுத்தலை விடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதேசமயம் திருகோணமலை அகதி முகாம்களில் உள்ள தமிழ் மக்களும் கொலை செய்யபடுவர் என்று மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையில் கடந்த 28 ஆம் திகதி முதல் 30 திகதி வரை மட்டக்களப்பு -பொலன்னறுவ எல்லைப்புற கிராமங்களில் 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதையடுத்து அங்குள்ள மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது 

(ஒ- 3)

 


 

  • பக்கம்: 5

 

உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 78

பொலன்னறுவ மாவட்டத்தில் முத்துக்கல் மற்றும் சரப்பொலை ஆகிய தமிழ்க் கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்த தமிழரின் எண்ணிக்க 78 என அறிவிக்கப்படுகிறது.

முன்னர் அலஞ்சிப்பொத்தானை என்னும் இடத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 58 முஸ்லிம்கள் உயிரிழந்தனர் என்பது தெரிந்ததே. 

(ஒ-எ)

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 8/05/1992
  • பக்கம்: 1

 

முஸ்லிம் ஊர்காவல் படையினருக்கு ஆயுதம் வழங்குவதை அரசு நிறுத்துமா?

கொழும்பு, மே.8

முஸ்லிம் ஊர்காவல் படையினருக்கு ஆயுதம் வழங்குவதை அரசு நிறுத்துமா? என்பது குறித்து விசாரணைக் குழுவின் அறிக்கையின் பின்னரேயே ஆராயப்படும்.

பொலனறுவை மாவட்டம் அழிஞ்சிப்பொத்தனை படுகொலைகள் தொடர்பாக பி. பி.ஸி செய்தியாளர் லரிஜோன் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் ஜனாதிபதியின் ஆலோசகர் பிரட்மன் வீரகோன் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்ன செய்கிறது? என்ற மற்றொரு கேள்விக்கு திரு. பிரட்மன் வீரக்கோன் பதில் அளிக்கையில் அரசியல் தீர்வு ஏற்பட முயற்சி நடக்கிறது.

தற்போது நம்பிக்கை அளிக்கும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன" என்றார்.

(இ- 10)

 


 

  • பக்கம்: 5

 

மட்டக்களப்பு, அம்பாறை கிராமங்கள் தோறும் புரிந்துணர்வுக் குழுக்கள் சமாதான மாநாட்டில் தீர்மானம்

மட்டக்களப்பு, மே 8

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள முஸ்லிம், தமிழ் இனமோதலைத் தடுக்க கிராமங்கள் தோறும் புரிந்துணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

மட்டக்களப்பில் நடந்த சமாதான மாநாட்டில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது

தமிழ் - முஸ்லிம் மக்களிடையே மீண்டும் இனமோதல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வழிவகைகளைக் காண ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சமாதான மாநாடு கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு செயலகத்தில் நடைபெற்றது.

அரச அதிபர் திரு. எஸ். மோனகுருசாமி மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். அமைச்சர் ஏ.ஆர். மன்சூர், ராஜாங்க அமைச்சர் பி பி. தேவராஜ் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எம். பிக்கள் மாநாட்டில் கலந்துகொண்டன. 

தமி்ழ் - முஸ்லிம்களுக்கு இடையேயான பிரச்சினை தொடருமானால் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தை மூடிவிட - வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் மன்சூர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

இதே சமயம் -

தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொண்டுள்ளேன் என்று மட் டக்களப்பில் நடந்த விபுலாநந்தர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் மன்சூர் பேசுகையில் தெரிவித்தார். 

(ஒ- 3)

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 14/05/1992

 

  • பக்கம்: 1, 6

 

*வாழைச்சேனையில் கடத்தப்பட்ட 12 தமிழரும் கொலை செய்யப்பட்டனர்?

மட்டக்களப்பு, மே 14 வாழைச்சேனை காகித ஆலை சுற்றாடலில் கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்ட 12 தமிழரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது நம்பப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

விறகு பொறுக்கச் சென்ற 13 தமிழர் கடத்தப்பட்டதும் - அவர்களில் ஒரு சிறுவன் தப்பி வந்து கடத்தல் சம்பவம் பற்றி உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததும் தெரிந்தவையே.

முஸ்லிம் ஊர்காவல் படையினரே இவர்களை கடத்திச் சென்று கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 12 பேரில் அறுவர் மாணவிகள் என்பதும் இவர்கள் வாழைச் சேனை இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வந்தவர்கள் என்பதும், இவர்களின் பெற்றோர் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

[ஒ- 3]

 


 

  • பக்கம்: 6

 

புலிகளுடன் பேசுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயார்

கொழும்பு.மே.14 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவருடனும் பேசத் தயாராக உள்ளது. விடுதலைப் புலிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாப் எம்.ஏச். எம் அஷ்ரப் பி.பி.ஸி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதுவரை புலிகள் அமைப்பிலிருந்து எவரும் தன்னைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க அணுகவில்லை என்றும் அவர் கூறினார். 

(இ-10)

 


 

  • பக்கம்: 6

 

கட்டாயமாக குடியமர்த்த முயற்சி

யாழ்ப்பாணம் மே 14 

அண்மைபில் படுகொலைகள் இடம்பெற்ற மட்டக்களப்பு முத்துக்கல கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் குடும்பங்களை வாழைச்சேனைப் பகுதியில் குடியமர்த்த அரச அதிகாரிகள் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனைப் பகுதி, தமிழர்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக இருப்பதால் அங்கு சென்று வாழ அவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

[இ- 5]

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 2/05/1992
  • பக்கம்: 1

 

முஸ்லிம் கிராமத்தில் 6 தமிழர் வெட்டிக் கொலை

மட்டக்களப்பு, கள்ளமடு 

முஸ்லிம் கிராமத்தில் ஆறு தமிழர்களை இனந்தெரியாதவர்கள் வெட்டிக்கொன்றனர். 

இராணுவப் பேச்சாளர் கேணல் சரத் முனசிங்க நேற்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இத்தகவலைத் தெரிவித்தார். 

இதேசமயம், காட்டுக்குள் விறகு வெட்டச்சென்ற கஹவத்தமுனை கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரின் சடலத்தை இராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர் என்றும் கேணல் முனசிங்க கூறினார்.

(ஒ-த)

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 07/06/1992
  • பக்கம்: 1, 2

 

சிங்களவரும், முஸ்லிம்களும் செட்டிகுளத்தில் குடியேற்றம்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்பது தமிழ்க் கிராமகளில் சிங்கள, முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தெரியவருகிறது.

பெரிய புளியங்குளம், நெடுங்கரைச்சேனை, பெரிய நொச்சிமுனை, கிட்டன்குளம், தீரியான்குளம், முதலியான்குளம், கரம்பைமடு, முகத்தான்குளம், பாவற்குளம் ஆகிய தமிழ்க் கிராமங்களே குடியேற்றத்துக்கு உட்படுத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாவற்குளம் கிராமத்தில் ஏற்கனவே முஸ்லிம்களும் சிங்களவர்களும் குடியமர்த்தப்பட்டு விட்டனர். 

செட்டிகுளம் பகுதியில் மேற்படி கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் மடு போன்ற அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.

செட்டிகுளம் பகுதியில் குடியமர்த்தப்படும் சிங்கள, மற்றும் முஸ்லிம் மக்களுக்குத் தேவைக்கு அதிகமான உதவிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகிறது.

குடியமர்த்தப்பட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பை முன்னிட்டு அங்கு ஓர் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் முஸ்லிம் உதவி அரச அதிபர் பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(ஒ-5)

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 16/06/1992
  • பக்கம்: 1

 

பஸ் பயணிகளை வழிமறித்து கிரான்குளத்தில் 15 தமிழரை ஆயுதபாணிகள் கடத்தினர்! முஸ்லிம் குண்டர்கள் அட்டகாசம்

கொழும்பு, ஜூன் 16 

மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் நேற்று முன்தினம் இ. போ. ச. பஸ் ஒன்றில் பயணம் செய்த பதினைந்து அப்பாவித் தமிழர்கள் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் குண்டர் குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டனர். கடத்தப்பட்டோர் என்னவானார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.

திருக்கோயிலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸை கிரான்குளத்தில் வழி மறிக்கப்பட்டது.

ரி௫6 ரகத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் மூவர்குழு ஒன்று 15 பயணிகளை பஸ்ஸை விட்டு இறக்கிக் கடத்திச் சென்றதாகவும் - 

எஞ்சிய பயணிகளோடு பஸ்ஸைத் தொடர்ந்து செல்ல அவர்கள் அனுமதித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 08/07/1992
  • பக்கம்: 1

 

அம்பாறையில் 18 தமிழர் சுட்டுக் கொலை!

யாழ்ப்பாணம், ஜூலை 8 

அம்பாறை மாவட்டம் - காட்டுப் பகுதி எல்லையில் நேற்று முன்தினம் 18 தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காட்டுப்பகுதி எல்லையில் உள்ள குடியிருப்புக்களில் வாழ்ந்த அப்பாவித் தமிழர்களே கோரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தினதும், முஸ்லிம்களினதும் அச்சுறுத்தல்களால் கிராமங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் வசித்து வந்த காட்டுப் பகுதி ஒன்றைத் திடீரென சுற்றிவளைத்த படையினர், கண்டபடி சுட்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. 

[உ- 5]

 


 

  • பக்கம்: 1,6

 

முஸ்லிம்களுக்கு ஆயுதம் வழங்கிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம்
அதுவே கிழக்கு வன்செயல்களுக்கு காரணம் என்கிறது மன்னிப்புச்சபை

லண்டன். ஜூலை 8

கிழக்கு மாகாணத்தில் வன்முறைகள் அதிகரித்தமைக்கு அங்குள்ள முஸ்லிம் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கையே காரணமாகும். 

இவ்வாறு ஸ்ரீலங்கா அரசைக் கண்டித்திருக்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை.

ஸ்ரீலங்கா நிலைமை குறித்து மன்னிப்புச் சபை விடுத்த ஆகப் பிந்திய அறிக்கையிலேயே இப்படிக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

பத்துப் பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் பொலன்னறுவை மாவட்டத்தில் முத்துக்கல், கரப்பொல மற்றும் அழிஞ்சிப்பொத்தானைக் கிராமங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு முஸ்லிம் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கும் அரசின் நடவடிக்கை குறித்து சர்வதேச மன்னிப்பு சபை கடந்த ஆண்டே கவலை தெரிவித்திருந்தது.

மன்னிப்புச்சபையின் அந்த அறிவிப்பை ஊர்ஜிதப்படுத்துவது போல பொலன்னறுவைப் படுகொலைகள் இடம்பெற்றிருப்பதாக இப்போது சுட்டிகாட்டப்படுகிறது.

இந்தப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த விசாரணைக்குழு ஒன்றை அரசு நியமித்திருப்பதை வரவேற்றுள்ள மன்னிப்புச்சபை., அந்த விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது.

அறிக்கை இப்போது பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த வருடத்தின் மிக மோசமான இனப்படுகொலை என்று கருதப்படும் இந்த வன் செயல்களுக்குவர்கள் காரணமான தண்டிக்கப்பட வேண்டும் என்றும் -

நாட்டின் கிழக்குப் பகுதியில் தமிழ், முஸ்லிம் கிராம மக்கள் வேண்டுமெறே கொல்லப்படுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை கேட்டிருக்கிறது.

இன அடிப்படையில் கொலைகளில் ஈடுபடுவதை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டிருக்கிறது.

 


 

 

".............

மதுரங்கலையில் உயிரிழந்த 6 பேரில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
1. பி.பக்கியராஜா
2. சுந்தரலிங்கம்
3. பீரிஸ் விஜயசிங்க

29 ஏப்ரல் 1992, முத்துகல் ஊரில் நடந்ததாகக் கூறப்படும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் பாதிக்கப்பட்ட 51 பேரின் பெயர்களும் அறிக்கப்படுத்தப்பட்ட வயதுகளும்.

  1. எஸ் பேபி, 1
  2. எஸ் மங்கையற்கரசி, 2
  3. எஸ் சுதர்சன், 3
  4. டி ரீகன், 3
  5. எஸ் தங்கேஸ்வரன், 3
  6. எஸ் செல்வசசி, 3
  7. எஸ் ரதீஸ், 4
  8. டி விஜயேந்திரன், 4
  9. கே கனகநாதன், 4
  10. டி சுகந்தி, 4
  11. எஸ் ரூபி, 5
  12. என் விஸ்வலிங்கம், 7
  13. டி இன்பவதி, 8
  14. என் மனோகந்தன், 10
  15. டி பஞ்சிலகாமி, 12
  16. பி லோகேஸ்வரன், 12
  17. டி ரவிச்சந்திரன், 12
  18. எஸ் லட்சுமி, 12
  19. டி வசந்தகுமாரி, 13
  20. பி திருலோகநாதன், 14
  21. டி பாபு, 14
  22. டி கீதா, 14
  23. டி விஜயகுமாரி, 15
  24. பி சுலோச்சாதேவி, 18
  25. கே தங்கராணி, 21
  26. டி உதயகுமாரி, 22
  27. எஸ் பாலையா, 27
  28. சுந்தரலிங்கம், 28
  29. பி மகேஸ்வரி, 29
  30. டி நவமணி, 30
  31. பி சுலோச்சன்தேவி, 30
  32. வி நித்தியகல்யாணி, 30
  33. எஸ் (அல்லது ஏ) சிவபதி, 32
  34. கே குபேந்திரராஜா, 33
  35. கே சதாசிவம், 34
  36. வி தெய்வநாயகம், 35
  37. பி குலேந்திரராணி, 35
  38. கே கோபிகிருஷ்ணன், 35
  39. பாக்கியராஜா, 37
  40. டி (அல்லது கே) கண்ணகை, 40
  41. எஸ் சிவநேசராஜா, 40
  42. கே.கோபாலப்பிள்ளை, 40
  43. எஸ் யோகசங்கரி, 40
  44. பி வில்லியம் சிங்கோ, 44
  45. வி தர்மலிங்கம், 49
  46. எஸ் யோகம்மே, 65
  47. எஸ் தெய்வானைப்பிள்ளை, 70
  48. கந்தையா, 78
  49. எஸ் மடந்தை, 80
  50. வி நீதாப்பிள்ளை, 80

29 ஏப்ரல் 1992, கரபொலவில் நடந்ததாகக் கூறப்படும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளில் பாதிக்கப்பட்ட 38 பேரில் 31 பேரின் பெயர்களும் அறிக்கைப்படுத்தப்பட்ட வயதுகளும்.

  1. சுபாகர், 7
  2. சுதர்சன், 7
  3. ஜானகி, 8
  4. சாரதாதேவி, 18
  5. சிவமணி, 18
  6. அன்னலட்சுமி, 18
  7. சிவரூபி, 28
  8. குஞ்சன், 30
  9. கந்தசாமி, 35
  10. சிவஞானம், 40
  11. தங்கராஜா, 45
  12. ராசையா, 60
  13. சின்னமுத்து, 68
  14. அன்னம்மா, வயது தெரியவில்லை
  15. ஐயாத்துரை
  16. கண்ணம்மா
  17. கந்தசாமி
  18. லீலாவதி
  19. மாரிமுத்து
  20. முத்துப்பிள்ளை
  21. முத்தன்
  22. நிரஞ்சன்
  23. பாலன்
  24. பூமணி
  25. ரத்தினம்
  26. சரஸ்வதி மற்றும் குழந்தை
  27. சின்னத்தங்கம்
  28. சசிகரன்
  29. தங்கம்மா
  30. தங்கராஜா
  31. எம் தோமஸ் "

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 10/07/1992
  • பக்கம்: 1

 

3 தமிழர் சுட்டுக் கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊர்காவல் ப்ஃடையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

வந்தாறுமூலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரு தமிழர்களும்- 

கரடியனாறுப் பகுதியில் கடந்த புதன்கிழமை ஒரு தமிழரும் - ஊர்காவல்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

கரடியனாறுப்பகுதியில் ஊர்காவல்படையினரின், சூட்டுக்கு சிறுமி ஒருத்தியும் காயம் அடைந்தார்.

[இ- 3]

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்திகள்

 

  • நாளேடு: உதயன்
  • திகதி: 13/07/1992
  • பக்கம்: 1

 

சந்திவெளிப் பகுதியில் இரு தமிழரின் சடலங்கள்!

யாழ்ப்பாணம். ஜூலை 13 

முஸ்லிம்களினால் கோரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரு தமிழர்களின் சடலங்கள் கடந்த வியாழனன்று வாழைச்சேனை, சந்திவெளிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

அதே பகுதியில் அண்மையிலும் கூட தமிழர்கள் மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் வாழைச்சேனை பேய்த்தாளை அகதி முகாமிலிருந்து எட்டுத் தமிழர்கள் முஸ்லிம்களால் கடத்திச்செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் மட்டக்களப்பு பழுகாமம் பகுதியில் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

*****

 

Edited by நன்னிச் சோழன்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இதுவரை கூறப்பட்ட காரணங்கள் 1. குரங்கு 2. வெப்பநிலை  ஆனால் உண்மை இன்னமும் வெளிவரவில்லையே??? $$$ உள்ளூர்ச் சந்தையை புறக்கணித்து ஏற்றுமதியை ஊக்குவித்ததன் பலன்.  பாரிய தென்னந்தோட்டங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க தமது உற்பத்திகளை ஏற்றுமதி நோக்கி திருப்பியதால் டாலர் இருக்கு தின்ன தேங்காய் இல்லையே…..! யாழ் உறவுகளுக்கு ஞாபகம் இருக்கும் “தேங்காய் தண்ணீர் ஏற்றுமதி”
    • இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து புதிய கட்சி யாப்பை உருவாக்க வேண்டும்.அதன் பிரகாரம் கொள்கைகள் நிமித்தம் அனைத்து உறுப்பினர்களும் சிறந்த சட்டத்தரணி முன் சத்தியபிரமாணம் எடுத்து கையொப்பமிட வேண்டும். சட்டத்தரணி என்றவுடன் உழவன் சுமந்திரன் நினைவில் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 🤣
    • சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு  கிடைத்ததற்கு  - அசாத்தும், தகப்பனும் காரணம். அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின்  மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை  நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும். சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால். அசாத் வென்று  இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும்  உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட) மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை  தூக்கி பிடிக்கிறது.   (அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக  கைது செய்து  போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை -  மறுக்க  முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து  இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?) ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.
    • ChessMood  ·  Suivre 17 h  ·  The updated list of the World Chess Champions The reigning World Champion: Gukesh Dommaraju பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......!   💐
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.