Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மாணவனின் வெற்றியில் தாக்கம் செலுத்தும் காரணிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு மாணவனின் வெற்றியில் தாக்கம் செலுத்தும் காரணிகள்
 
தற்போது வெளியான உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் குறிப்பிட்ட சில மாணவர்கள் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியை பெற்று அனுமதிக்கு எப்போது காலம் வரும் என்று காலத்தினையும், அதன் தொடர்புடைய பல்கலைக்கழகத்தினையும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் அதேவேளை, கல்வியில் தாம் சாதித்து விட்டோம் என்று மிகுந்த சந்தோசத்தில் மூழ்கிருக்கின்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினர்,
தாம் கஷ்டப்பட்டு கடுமையாக முயற்சி செய்து தங்களுக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைத்தும் வெட்டுப்புள்ளிக்குள் உள்ளீர்க்கப்படாமல் தங்களது எதிர்காலம் எப்படிப் போகுமோ என்று மிகுந்த கவலைக்குள் உள்ளாக்கப்பட்டிருக்கும் அதிகமான இன்னொரு பிரிவினர்,
தாங்கள் எந்த விதமான முயற்சி இல்லாமல் பல்கலைக்கழக அனுமதி கூட கிடைக்காதளவுக்கு பெறுபேறுகளை பெற்றுள்ள மற்றுமொரு பிரிவினர்,
நாங்கள் தான் படிப்பித்தோம்.. படிப்பித்தோம்... பாடம் நடாத்தினோம்... மற்றும் எங்களால் தான் இந்த மாணவர்கள் பல்கலைக் கழகம் நுழைய இருக்கிறார்கள் என்று அறிக்கைகளை விட்டிருக்கும் இன்னொரு பிரிவினர்,
இப்படி பலவிதமான பிரிவினர்களை மாணவர்களாக, பெற்றோர்களாக, பாதுகாவலர்களாக, அயலவர்களாக, அதிபர்களாக, பாட ஆசிரியர்களாக, நலன்விரும்பிகளாக மற்றும் அமைப்புக்களாக நாம் இந்த காலப்பகுதியில் கண்டு கொள்ள முடிகிறது.
உண்மையில், முதலாவது பிரிவினரை நாம் நோக்கும் போது இவர்கள் மிகவும் திறமையானவர்கள் ஏனெனில், மிகவும் கடினமான இலக்கினை அடைந்தவர்கள், ஆனால் இதில் 99% மாணவர்கள் நினைத்திருக்கிறார்கள் நாங்கள் கல்வியில் சாதித்துவிட்டோம் என்று ஆனால், அவர்களுக்கு தெரியாது கல்வியின் ஆரம்ப கட்ட வெற்றியினை மாத்திரமே பெற்றுள்ளார்கள் என்று, மேலும் பலர் தமது கல்வியினை பல்கலைக்கழக பட்டப்படிப்புடன் ஒரு திருமணம் முடித்து கல்விக்கு முற்றுப்புள்ளியிட்டு தமது பெறுமதியான மனிதவளத்தினை பிரயோசனப்படுத்தாமல் சுமார் 45 வயத்திற்கு பின்னரான காலப்பகுதியில் சிந்தித்து ஏன் நாங்கள் இன்னும் படிக்கவில்லை என்று கவலைப்படும் ஏராளமானவர்கள்!
இதற்கு என்ன தீர்வு என்பது குறித்து அவர்கள் சுமார் 45 வயதிற்கு பிறகுதான் சிந்திக்கிறார்கள்? ஏன் தமது 20 வயதில் சிந்தித்து செயலாற்ற முடியவில்லை என்று??
தமது சுமார் 20 வயதில் முடிவெடுக்க வேண்டும் எப்படி, இப்போது உயர்தரம் சித்தியடைந்துவிட்டேன் பல்கலைக்கழகப்பட்டப்படிப்பின் பின்னர் என்ன செய்வது என்று.
தற்காலத்தில் வெறும் பல்கலைக்கழக பட்டப்படிப்பினை மாத்திரம் வைத்துகொண்டு தற்போதைய தொழிற்சந்தையில் (Jop Market) நிச்சயமாக வெற்றி கொள்ள முடியாது.
ஏனெனில், தொழில்சார் கல்வித்தகமைகளை (Professional Qualification) தம்மகத்தே கொண்டிருக்க வேண்டும், தகவல் தொழிநுட்பம் (IT), தலைமைத்துவ (Leadership Skill) திறன், ஆங்கில அறிவு (English knowledge) என்பனவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆகையினால், மருத்துவத்துறையினை எடுத்துக் கொண்டால், தான் ஒரு வைத்தியராக வருவதினை இலக்காகக் கொண்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஒரு வைத்தியராக, பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.ஆனால், அவர்களில் பலரிடம் சமூகம் சார்ந்த சிந்தனை மிகக் குறைவாக காணப்படுகிறது, குறிப்பாக தான் கற்ற கல்வியின் மூலம் சமூதாயத்தில் காணப்படுகின்றன ஏழைகள், விதவைகள், அங்கவீனர்கள், இயலாதவர்கள், முதியவர்கள், திருமணம் முடிக்க பணம் இல்லாமல் இருக்கும் பெண்கள் போன்ற பல்தேவை உள்ளவர்களை தங்களால் முடியுமான ஓரளவேனும் கவனிக்கவேண்டிய பொறுப்பு சமூகம் சார்பாக தங்களுடன் உள்ளது என்பதுடன், மேலும் தங்களது துறையில் வைத்திய நிபுணர்கள் (Consultant/Surgeon) என்ற உயர் அந்தஸ்த்திற்கு தன்னை தயார்படுத்த வேண்டிய கட்டாயத் தேவைகாணப்படுகின்றது. அந்த உயர் சவாலிற்கு தங்களது பட்டப்படிப்பின் ஆரம்ப காலத்திலிருந்து தயார்படுத்துவதோடு, மிகவும் கடுமையாக முயற்சி செய்ய வேண்டிய தேவையும் காணப்படுகின்றது, ஏனெனில், அதற்கான பரீட்சைகள் மிகவும் மிகவும் உயர் போட்டிநிலமை காணப்படும், குறிப்பாக எமது நாட்டினை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு துறையிலும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் (Consultants/Surgeons) மாத்திரம் சேவையாற்றுவதும், வருடா வருடம் இரண்டு இலக்கத்திற்குள்ளான எண்ணிக்கையானவர்கள் மாத்திரம் ஒவ்வொரு துறைக்கும் உள்ளீர்க்கின்ற முறைமையும் எமது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது, ஆகையினால், தற்போது இத்துறையில் (Consultants/Surgeons) எம் சமூதாயத்தில் இருப்பவர்கள் அதிசிறந்த திறமைசாலிகள், சிறந்த புத்திஜீவிகள் மற்றும் இந்த நாட்டின் மிகப்பெறுமதியான மனிதவள சொத்துக்கள் என்பதனை எம் சமுதாயம் புரிந்து கொள்ளவேண்டும். ஆகையினால், மருத்துத்துறையில் பல்கலைக்கழகம் நுழைய இருக்கும் பிரிவினர் இந்த உயர்நிலைக்கு வருவதற்கு தன்னை தயார்படுத்த வேண்டும்.ஏனெனில், இவ்வுயரிய துறையில் எம் சமுதாயம் சார்ந்தவர்கள் இரண்டு இலக்கத்திற்குள்ளான எண்ணிக்கையினர் மாத்திரமே காணப்படுகின்றனர் என்பது கவலைக்குரிய விடயமாக காணப்படுகிறது.
அடுத்து, பொறியியல் துறை மற்றும் முகாமைத்துவ துறையினை எடுத்துக் கொண்டால், பல்கலைக் கழக பட்டப்படிப்பின் பின்னர் பல பிரிவுகளில் பொறியலாளராக வரும் அதேவேளை, பட்டயப் பொறியலாளராக (Chartered Engineer) இலங்கை பொறியலாளர் சேவை (SLES) போன்ற உயர் அந்தஸ்த்துக்குள் வருவதற்கு பல்கலைக்கழக கல்வி ஆரம்ப முதல் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இவர்களும் எம்சமுதாயத்தில் மிகக் குறைவானவர்களே காணப்படுவதனை காண முடியும்.
ஆகையினால், பொறியியல் துறையில் பல்கலைக்கழகம் நுழைய இருக்கும் இப்பிரிவினர் இவ்வுயர் நிலைமைக்கு வருவதற்கு தங்களை தயார்படுத்த வேண்டும்.
முகாமைத்துவ/ வர்த்தகத்துறையினை எடுத்துக் கொண்டால், அதிகளவான மாணவர்கள் நினைத்து வைத்திருக்கிறார்கள் நாங்கள் வியாபார முகாமைத்துவ/வர்த்தக இளமானி (BBA/B.Com) பட்டங்கள் எங்களுக்கு கிடைக்கும் அதேவேளை, இலங்கை அரசாங்கம் தொழில்வாய்ப்பு அரச துறையில் வழங்கும் என பலவருடங்களாக காத்துக் கொண்டிருப்பார்கள்.
இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஏன் இந்த பட்டப் படிப்புடன் தமது கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்? குறிப்பாக இப்பிரிவினரினை இன்னும் வெற்றி பெற இரண்டு பிரிவிகளாக நோக்க முடியும், ஒன்று அரச துறையில் உயர் பதவியினை பெற முயற்சிப்பது மற்றொன்று தனியார் துறையில் உயர் பதவினை அடைவது. இது எப்படி சாத்தியம்? இலகுவான விடயமா? இந்த சவாலை எப்படி சாதிப்பது? போன்ற பல வினாக்களுக்கு தம்மை தயார்படுத்த வேண்டும். குறிப்பாக இதில் முதலாவது பிரிவினர் தாங்களது பல்கலைக்கழக பட்டப்படிப்பு ஆரம்பம் முதல் தயாராக வேண்டும். இலங்கை அரசாங்கத்தினால் அரச சுற்றறிக்கை மூலம் வெளியிடப்பட்ட 14 வகையான நாடாளவிய நிறைவேற்று தர சேவைககளில் ( All Island Service) ஏதாவது ஒன்றில் தான் இணைய வேண்டும் என்ற அவா தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும், குறிப்பாக இலங்கை நிர்வாக சேவை (SLAS), இலங்கை கணக்காளர் சேவை (SLAcS), இலங்கை விஞ்ஞான சேவை (SLSS), இலங்கை பெறியியலாளர் சேவை( SLES), இலங்கை திட்டமிடல் சேவை (SLPS), இலங்கை வெளிநாட்டு சேவை (SLFS), இன்னும்...போன்ற இந்த முக்கியமான சேவைகளுக்குள் தங்களை இணைக்கும் இந்த உயர் சவாலினை வெற்றிகொள்ள நீங்கள் தங்களை பாரிய தயார் படுத்தல்களை செய்ய வேண்டும், குறிப்பாக தமது உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியில் சித்தியடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பின் பின்னர் நீங்கள் இந்த நாடாளவிய ரீதியில் நடாத்தப்படும் உயர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும். இதில் வெற்றியடை அதீத திறமை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, துறைரீதியான சரியான வழிகாட்டல்கள் மற்றும் இறைநாட்டம் காட்டயம் தன்கத்தே கொண்டிருக்க வேண்டும்.
மேலும் இங்கு இரண்டு விதமான வினாக்கள் இப்பிரிவினரிடத்தில் காணப்படுகின்றது. ஒன்று, இப்பலத்த போட்டிப்பரீட்சையில் தாங்கள் சித்தியடைய முடியாது என்ற மனஅச்சம்/பீதி பலரிடத்தில் காணப்படுகிறது.மற்றது, அரசாங்கம் தமிழ் மொழி மூலமானவர்களை அதிகமாக எடுப்பதில்லை என்ற போலிப்பிரச்சாரம், இங்கு ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் இது All island Service Examinations இதில் அப்படியான எந்தப்பாகுபாடும் இல்லை மற்றும் அப்படியான எந்த வேலைத்திட்டமும் நடைபெறுவதில்லை மாற்றாக, தாங்கள் உரிய முறையில் பரீட்சைக்கு தங்களை தயார்படுத்தாமலும், சரியான முறையில் பரீட்சைக்கு விடையளிக்காமாலும், தேவையான மற்றும் எதிர்பார்க்கின்ற விதத்தில் பரீட்சைக்கு விளக்கங்கள் அளிக்காமலும் குறைகூறுவதில் எந்தப்பிரயோசனமும் இல்லை. ஆகையினால், மேற்குறிப்பிட்ட இந்த முக்கியமான நாடாளவிய நிறைவேற்றுதர சேவைகள் ஒவ்வோன்றிலும் இரண்டு இலக்கத்திற்குட்பட்ட எண்ணிக்கையினர் எம் சமுதாயத்தில் காணப்படுவதனால், இதில் விஷேட கவனமெடுத்து தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இருப்பினும், அனைத்து துறையினர்கள்/பிரிவினர்களும் (Bio, Eng, commerce and Arts) இவ்வுயர் போட்டிப்பரீட்சைகளுக்கு சரியான திட்டமிடலுடன் பலமாக முயற்சி செய்து, வெற்றி கொள்ளமுடியும். அது தொடர்பான சிறந்த வழிகாட்டல்களை குறித்த துறைசார்ந்தவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
இங்கு மற்ற பிரிவினரினை நோக்கும் போது, அவர்கள் தங்களது பட்டப்படிப்புடன் சேர்த்து தொழில்சார் தகைமைகளை (Professional Qualifications) கூட்டிக் கொள்ளவேண்டும். குறிப்பாக CA, CIMA, ACCA,CMA AAT, etc. போன்ற கற்கைகளுக்கு பதிவு செய்து அதனை வெற்றிகரமாக முடித்து, ஆங்கில அறிவு, கணணி அறிவு மற்றும் தலைமைத்துவ திறனினை அதிகரித்து, தனியார் துறையில் நிதி மற்றும் நிர்வாக ரீதியிலான உயர் பதவியினைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக தங்களை முழுமையாக தயார்படுத்தல்கள் மற்றும் அர்ப்பணிப்பு செய்ய வேண்டும்.
கலைப்பிரிவினை எடுத்துக் கொண்டால், இங்கு இவர்களில் 99.90% ஆனவர்கள் பட்டப்படிப்பினை முடித்தவர்கள், அந்த பட்டப்படிப்புடன் அரச துறையில் ஒரு தொழில் ஒன்றினைப் பெற்று சேவையாற்றுவதை கண்டு கொள்ளலாம். மாற்றமாக ஒரு சட்டத்தரணியாக, அரச சட்டத்தரணியாக (State Councillor) மற்றும் நீதிபதி (Judge) என்ற உயர் அந்தஸ்தினைக்கூட அடையக்கூடிய நிலமைகள் இருக்க அவர்கள் தங்களது கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்.
ஏனெனில், மேற்சொன்ன பதவிகளில் எம் சமுதாயத்தினர் மிக சொற்பமானவர்கள் காணப்படுவது கவலைக்குரிய மற்றும் சிந்திக்கக்கூடிய விடயம். ஆகையினால், இப்பிரிவினர் இந்த விடயத்தில் கவனமெடுத்து இதற்காக தம்மை தயார்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.
பரீட்சையில் கடுமையாக முயற்சி செய்து தங்களது உயர்தர பரீட்சை இலக்கினை அடைய முடியாத தரப்பினரினை பார்ப்போமானால், இவர்களும் மிகவும் திறமையானவர்கள் ஆனால், துரதிஷ்டவசமாக ஒரிரு புள்ளிகள் அல்லது.0001 Z Score இல் பல்கலைக்கழகம் நுழைய முடியாத துரதிஷ்டமானவர்கள், இவர்கள் முயற்சி செய்தால் மேலே குறிப்பிட்ட பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில் சார் தகைமைகளையும் பெற்று அரச மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவியினை பெற்றுக் கொள்ள முடியும். அப்படியான பல சாதனையாளர்களை எம் சமுதாயத்தில் கண்டு கொள்ள முடியும். அதற்காக தம்மை முழுமையாக அர்ப்பணிப்பதோடு தன்னம்பிக்கை, விடாமுயற்சி , சுயதேடல் மற்றும் சுயகற்கை அதீத அளவில் இருக்க வேண்டும்,
ஆகையினால், இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தோல்வி மனப்பாங்கை தகர்த்தெரிந்து வெற்றி உலகிற்கு/ சவாலிற்கு வாருங்கள். நீங்களும் வெற்றியாளராகலாம்.
மற்றொரு தரப்பினர், நாங்கள் தான் படிப்பித்தோம் படிப்பித்தோம்... மற்றும் எங்களால் தான் அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைந்தார்கள் என்று இந்த நாட்களில் அறிக்கை விட்டுத்திரியும் தரப்பினர்கள், உண்மையில் ஆசிரியர் என்பர்கள் இந்த இடத்தில் முக்கியமான வழிகாட்டி என்பதனை யாரும் மறைக்க முடியாது. ஒரு மாணவனுக்கான முதலாவது சிறந்த வழிகாட்டி அந்த பாடத்திற்கான ஆசான்தான் அது உண்மை. ஆனால், ஒரு மாணவனின் வெற்றியில் பல விடயங்கள் தாக்கம் செலுத்துவதனை அவதானிக்க முடியும். குறிப்பாக அவனது சூழல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சுய தேடல், அவனது இலக்கு/இலட்சியம் , அவனது நண்பர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் குடும்பம் மற்றும் இன்னோரன்ன விடயங்கள் தாக்கம் செலுத்தும். இந்த இடத்தில் குறித்த மாணவனின் கூடுதலான செயற்பாடுகள்தான் அவனது வெற்றிக்கு வழிவகுக்கின்றது என்பது நிதர்சனம். உதாரணமாக, ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள் என எடுத்துக் கொண்டால், ஏன் 5 மாணவர்கள் மாத்திரம் பல்கலைக்கழகம் நுழைகிறார்கள் ஏன்? ஆக, அனைத்து மாணவர்களுக்கும் கற்பித்தது அந்த ஆசான் தான் ஆனால், அந்த 5 மாணவர்களும் வெற்றி பெற்றார்களே எவ்வாறு? எப்படி ? இங்கு மேற்கூறிய அனைத்து காரணிகளும் இதில் தாக்கம் செலுத்துவதனை கண்டு கொள்ளலாம்.
ஆகையினால், இங்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களும் மேற்குறிப்பிட்ட துறைகள்/பிரிவிகள் அனைத்திலும் விஷேட கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத் தேவை எம் சமுதாயம் சார்பாக காணப்படுகிறது.
Wish you all the best and God bless you all.
எஸ்.எம். ஹாறூன் (SLAcS)
2023.09.05.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.