Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
18 SEP, 2023 | 10:21 AM
image
 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என ஜே.ஆர் ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினரும் ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனுமான பிரதீப் ஜெயவர்தன  தெரிவித்தார்.

இம்மாதம் (17) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் 117 ஆவது ஜன்ம தினம்  நினைவு கூரப்பட்டது. 

இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜே.ஆர் ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினரும் ஜே.ஆர். ஜயவர்தனவின் மூத்த பேரனுமான பிரதீப் ஜெயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே வடக்கில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது. 

இன்று நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு தற்போதைய அரசாங்கத்தினால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் துணிச்சலான தீர்மானங்களை நாம் பாராட்டுகின்றோம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு நாம் பூரண ஆதரவளிக்கிறோம்.  எனவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதிக்கு அனைவரும்  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை மற்றும் ஆய்வுக் குழுவின் தலைவர் கருணாசேன கொடித்துவக்கு, ஜே.ஆர்.ஜயவர்தனவின்  பேரன்களான ஏ.ருக்சான் ஜயவர்தன,  அம்ரிக் ஜயவர்தன, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்.ஏ.பி. தயாரத்ன, ஜே.ஆர். ஜயவர்தன நிலைய நிர்வாக சபை உறுப்பினர் சிரேஷ்ட பேராசிரியர் யு. ஜி.  புஸ்வேவல மற்றும் ஜே. ஆர். ஜயவர்தன நிலைய உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/164814

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாடு நெருக்கடியில் இருக்கும்போது கூட படித்தவர், பாமரர், அனைத்தும் துறந்த பிக்குகள் வரை எதை யோசிக்கிறார்கள் என்று. அடித்து பறித்தே நாட்டை கட்டியெழுப்ப நினைக்கிறார்கள், முடியுமா? அவர்களை அழித்ததாலேயே உரிமைகளை பகிர  மறுத்ததாலேயே நாடு வீழ்ச்சியடைந்தது என ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் அவர்களது இன, மத, பாரம்பரிய ஊறிப்போன நம்பிக்கையது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதாவது தமிழர்களை யுத்த முனையில் அடக்குவதட்கு சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதி முறைமை கொண்டு வந்தது என்று சொல்லாமல் சொல்லுகிறார். அது உண்மையாக இருக்கலாம். நாடடை முன்னோக்கி கொண்டு செல்வதட்காக உருவாக்கி இருந்தால் நிச்சயமாக நாடு முன்னேறி இருக்கும். நாடு அதல பாதாளத்தில் விழுந்து கிடப்பதை பார்க்கும்போது பேரனார் சொலவ்து உண்மைதான். நாடு எக்கேடு கேடடாலும் பராவாயில்லை தமிழனுக்கு சம உரிமை கொடுக்க கூடாது என்பதில் மட்டும் இந்த மோடயர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்த முட்டாளுக்குத் தெரியவில்லை.. ஜே ஆரால் தான் யுத்தமே உருவானது என்று. இன்று சொறீலங்கா வங்குரோத்து அடையவும்.. அதே ஜே ஆரின் நிறைவேற்று அதிகார சிங்கள சனாதிபதி முறை தான் காரணம் என்பது.

யுத்தம் முடிவடையக் காரணம்.. மேற்குலகின் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்குள்.. தமிழரின் இன விடுதலைப் போராட்டத்தை தமிழர்களையும்.. ஹிந்தியாவையும்..  கொண்டே தள்ளிக் கொண்டு வந்தது தான். 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்களது இன, பயங்கரவாதத்தை மறைத்து பாதிக்கப்பட்ட இனத்திலிருந்தவர்களால் பாதிக்கப்பட்டவர்களை பயங்கரவாதிகளாக்கி அழித்தது புத்திசாலித்தனம். இதற்காக வெட்கப்படவேண்டியது நம் இனத்திலிருந்து படித்த, பதவியாசை பிடித்த, இனப்பற்றற்ற வர்களே. நாட்டிலே இயற்றப்படும் சட்டங்களும் உருவாக்கும் பதவிகளும் நியமிக்கப்படும் அதிகாரிகளும் தமிழரை அழிப்பதற்கேயன்றி நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கல்ல என்பதையே இவர் சொல்கிறார். மத தலங்களில் போதிப்பது, கல்விக்கூடங்களில் கற்பிப்பது, பத்திரிகைகளில் வெளியிடுவது, மேடைகளில் முழங்குவது எல்லாமே அதுதான். அவர்களது சிந்தனை செயல் அறிவு எல்லாம் தமிழரை அழிப்பது. அதன் முடிவு அதனாலேயே அவர்களும் அழிவார்கள். அவர்களுக்கு நீதி நிஞாயம் இல்லை, எது சரி என தெரிவதில்லை, தாங்கள் செய்வது சரி அதையே மற்றவர்களும் வரவேற்று பாராட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றியது சர்வதேசம். இப்போ அதை பிழை என்று சுட்டுவதை அதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே அது எல்லோரிடமும் முரண்படுகிறது. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.