Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகமது சிராஜ்: எதிரணியைக் கலங்க வைக்கும் வேகத்தின் ரகசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“தலைவிதியில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும். இன்று என் தலைவிதியில் எழுதியிருக்கிறது என்னுடைய நாளாக மாறிவிட்டது. பெரிதாக ஒன்றுமில்லை”

 

எந்தவிதமான அலட்டலும், கர்வமும் இல்லாமல், தற்பெருமையின் வாசனை கூட இல்லாமல் வந்த இந்த வார்த்தை, இந்திய அணி 8-வதுமுறையாக ஆசியக் கோப்பையை வெற்றி பெற காரணமாக இருந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பேசியதாகும்.

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தை ஒரு தரப்பாக மாற்றி, இலங்கை அணியை தனது பந்துவீச்சால் சிதறடித்தவர் , முகமது சிராஜ் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

 

7ஓவர்கள் வீசிய முகமது சிராஜ் ஒரு மெய்டன் உள்ளிட்ட 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளைச் செய்தார்.

ஒவ்வொரு வீரருக்கும் ஏதாவது ஒரு போட்டியி்ல் விளையாடும் ஆட்டம் ‘மாஸ்டர் பீஸாக’ அமையும். அந்த வகையில் முகமது சிராஜ் கிரிக்கெட் வாழ்க்கையில் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி ‘மாஸ்டர் பீஸாக’ என்றென்றும் இருக்கும். இந்த ஒரு போட்டியி்ல் சிராஜ் செய்த சாதனைகளும் ஏராளம்.

இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டநாயகன் விருது பரிசு நன்கொடை

இந்த ஆட்டத்தில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார். அந்த வருதுக்கு கிடைத்த 5 ஆயிரம் டாலர்களை (ரூ.4.15 லட்சம்) மைதானத்தை மழையென்றும் பாராமல் இரவு பகலாக வடிவமைத்து, செம்மைப்படுத்தி, பாதுகாத்த ஊழியர்களுக்கு வழங்குவதாக முகமது சிராஜ் திடீரென அறிவித்து இலங்கை ரசிகர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார்.

 

பரிசளிப்பு விழாவில் முகமது சிராஜ் பேசுகையில் “ ஆட்டநாயகன் விருதுக்காக எனக்குக் கிடைத்த 5 ஆயிரம் டாலர்களும் மைதானத்தை பராமரிக்க உதவிய அலுவலர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். அவர்கள்தான் ஆட்டநாயகன் விருது பெறத் தகுதியானவர்கள். அவர்கள் இல்லாவிட்டால் இந்த ஆசியக் கோப்பைத் தொடரே நடக்க முடியாமல் இருந்திருக்கும்.

 

இன்று என்னுடைய பந்துவீச்சு ‘ஒரு கனவுபோல்’ இருந்தது. நான் பெரிதாக பந்துவீச்சில் எதும் திட்டமிடமில்லை. லைன், லென்த்தில் வீச வேண்டும் என்றும் நினைத்து பந்துவீசினேன்.

 

திருவனந்தபுரத்தில் கடந்த முறை இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினேன், ஆனால், 5வது விக்கெட்டை வீழ்த்த கடுமையாகப் போராடியும் என்னால் முடியவில்லை. அப்போதுதான் உணர்ந்தேன், ‘தலையெழுத்தில் என்ன இருக்கிறதோ அதுதான் நடக்கும். இன்று என்னுடைய நாள் அதான் நடந்துவிட்டது’. பெரிதாக ஒன்றுமில்லை, கடினமாக உழைக்கவும் இல்லை.

 

என்னுடைய அவுட் ஸ்விங்கில் அதிகமான விக்கெட்டை எடுத்ததில்லை, ஆனால், இன்று என்னுடைய அவுட் ஸ்விங்கில் அதிகமான விக்கெட் கிடைத்ததை, பெருமையாக உணர்கிறேன்.

 

இலங்கை பேட்டர்கள் பந்தை நோக்கி ஃபிரன்ட்ஃபுட் வைத்து ஆட முயலும்போது விக்கெட்டை பறிகொடுப்பார்கள் எனத் திட்டுமிட்டு பந்துவீசினேன். இதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது.” எனத் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிராஜ் செய்த சாதனைகள்

ஆசியக் கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை சிராஜ் பெற்றார். அனில் கும்ப்ளே 1996ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சிராஜ் 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும். இதற்கு முன் ஷார்ஜாவில் 1990களில் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வாக்கர் யூனுஸ் சாதனை வைத்திருந்தார், அதை முகமது சிராஜ் முறியடித்துவிட்டார்.

 

21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜின் பந்துவீச்சு ஆசியக் கோப்பையில் 2-வது சிறந்த பந்துவீச்சாகும். இதற்கு முன் 2008ல் இந்திய அணிக்கு எதிராக அஜெந்தா மென்டிஸ் 16 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக உள்ளது.

 

ஏறக்குறைய 23 ஆண்டுகளாக குறைந்த பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இலங்கை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சாமிந்தா வாஸ் வைத்திருந்தார். 2003ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 16 பந்துகளில் சாமிந்தா வாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

அதேபோல், நேற்றைய ஆட்டத்திலும் சிராஜ் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாமிந்தா வாஸ் சாதனையோடு இணைந்தார்.

அதுமட்டுமல்லாமல் முகமது சிராஜ் தனது 2வது ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆசியக் கோப்பையில் முதல்முறையாக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை சிராஜ் பெற்றார். சர்வதேச போட்டிகளில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் 4வது வீரராக சிராஜ் இடம் பெற்று 21 ஆண்டுகளுக்குப்பின் சாதித்தார்.

 

இதற்கு முன், 2003ல், வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் சாமிந்தா வாஸ், 2003ல் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீர்ர முகமது ஷமி, 2019ல், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக அதில் ரஷித் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

யார் இந்த முகமது சிராஜ்?

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் கடந்த 1994, மார்ச் 13ம் தேதி பிறந்தவர் முகமது சிராஜ். இவரின் தந்தை முகமது காஸ், தாய் ஷபானா பேகம். மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் முகமது சிராஜ். இவரின் தந்தை முகமது காஸ், ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டுநராக இருந்தார்.

 

சிராஜ் கிரிக்கெட் உலகில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அவரின் பெற்றோர், குடும்பத்தினர் ஏராளமான தியாகங்களைச் செய்துளளனர். குறிப்பாக சிராஜின் தந்தை முகமது கயாஸ், ஆட்டோ ஓட்டுரநாக இருந்தாலும், இந்தியக் கிரிக்கெட்டில் சிராஜ் சாதிப்பதற்காக தன்னுடைய வசதிக்கும் அதிகமான விஷயங்களை செய்துகொடுத்தார் என்று சிராஜ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பயிற்சி பெற வசதியில்லை"

முகமது சிராஜ் சிறுவயதில் இருக்கும்போதே சரியாகப் படிக்கவில்லை என்பதற்காக அவரின் தாய் ஷாபானா பேகம்கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அதேசமயம், சிராஜின் சகோதரர் நன்றாகப் படிப்பவராக இருந்தார்.

 

சிராஜ் தனது 7வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருந்தார். ஆனால், எளிமையான குடும்பப் பின்புலம் என்பதால், முறையான கிரிக்கெட் அகாடெமியில் சேர்ந்து சிராஜ் கிரிக்கெட் பயிற்சி பெற வசதியில்லாமல் இருந்தது. இதனால் சாதாரண டென்னிஸ் பந்துகொண்டு விளையாடி தன்னுடைய கிரிக்கெட் திறமையை சிராஜ் மெருகேற்றினார்.

சுயம்புவாக உருவாகினார்

ஒரு சுயம்புவாக சிராஜ் கிரிக்கெட் உருமாறினார். இவருக்கு முறையான பயிற்சியாளர் இல்லை, பயிற்சி பெற வசதியில்லை என்பதால், டென்னிஸ் பந்தை வைத்து தனக்குத் தெரிந்த வகைகளில் பந்துவீசி சிராஜ் பயிற்சி பெற்றார். குறிப்பாக சுவற்றில் கருப்பாக வட்டமிட்டு அதையே ஸ்டெம்பாக பாவித்து அதை நோக்கி பந்துவீசி சிராஜ் பயிற்சி பெற்றார்.

முதல் ஊதியம்

முகமது சிராஜின் பந்துவீச்சுத் திறமையைப் பார்த்த அவரின் நண்பர்கள் அவரை முறையாக கிரிக்கெட் பயிற்சியில் சேரத் தூண்டினர். இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் கிரிக்கெட் கிளப்பில் சிராஜ் முதலில் பேட்டராகச் சேர்ந்து, பின்னர் தனக்கு பந்துவீச்சுதான் வரும் என்பதை உணர்ந்து பந்துவீச்சாளராக மாறினார்.

 

கிளப் போட்டிக்காக முகமது சிராஜ் முதன் முதலில் களமிறங்கி, 9விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரின் திறமையைப் பார்த்து பாராட்டி ரூ.500 பரிசாக வழங்கப்பட்டது. இதுதான் சிராஜ் கிரிக்கெட் வீரராக உருமாறி பெற்ற முதல் ஊதியமாகும்.

இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிக்கெட் வாழ்க்கை

2015-16 ரஞ்சிக் கோப்பைத் தொடரில் நவம்பர் 15ம் தேதி முகமது சிராஜ் தனது முதல்தரப் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக பயிற்சியாளர் கார்த்திக் உடுப்பாவின் கீழ் களமிறங்கினார். 2016ம் ஆண்டு,ஜனவரி 2ம் தேதி நடந்த சயத் முஸ்தாக் அலி கோப்பைத்தொடரில் சிராஜ் டி20 போட்டியில் அறிமுகமாகினார்.

 

டி20 போட்டிக்கு சிராஜ் வந்தபின் ஆஷிஸ் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார், விவிஎஸ் லட்சுமண், ஆகியோரின் ஆலோசனையில் சிராஜின் பந்துவீச்சு திறமை மெருகேறத் தொடங்கியது. 2016-17ம் ஆண்டில் நடந்த ரஞ்சிக்க கோப்பைத் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய சிராஜ் 41 விக்கெட்டுகளை வீழ்த்தி பிசிசிஐ தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்தார்.

ஐபிஎல் அறிமுகம்

முதல் தரப் போட்டிகளில் சிராஜின் பந்துவீச்சைப் பார்த்த இந்திய அணியின் தேர்வாளர்கள், ஐபிஎல் அணிகள் அவரை உற்றுநோக்கின. 2017ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.2.60 கோடிக்கு சிராஜை விலைக்கு வாங்கியது.

 

சர்வதேச வீரர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசையுடன் இருந்த முகமது சிராஜுக்கு ஐபிஎல் வழிகாட்டியது. சர்வதேச அறிமுகமில்லாத பந்துவீச்சாளர்களில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக சிராஜ் மாறினார்.

இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,PTI

விராட் கோலியின் ஆதரவுக்கரம்

ஆனால், சன்ரைசர்ஸ் அணிக்காக சிராஜ் களமிறங்கி பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை. இருப்பினும் 2018ம் ஆண்டு நடந்த விஜய் ஹசாரே கோப்பியில் சிராஜின் பந்துவீச்சு புதிய வெளிச்சத்துக்கு கொண்டு சென்றது. சிராஜின் பந்துவீச்சைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போன விராட் கோலி, ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணிக்காக விலைக்கு வாங்க அறிவுறுத்தினார்.

இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய அத்தியாயத்தை அளித்த ஆர்சிபி

ஆர்சிபி அணிக்குள் முகமது சிராஜ் வந்தது, புதிய வாழ்க்கைக்கான அத்தியாயத்தை உருவாக்கியது. கிரிக்கெட் வாழ்க்கையில் முகமது சிராஜை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றது ஆர்சிபி அணியில் சேர்ந்தபின்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதிலும் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தபோது, முகமது சிராஜின் திறமையை வளர்க்கவும், அவரின் திறமையை மெருகேற்றவும் பல்வேறு வாய்ப்புகளை கோலி உருவாக்கினார்.

 

ஆர்சிபி அணிக்குள் வந்தபின் சிராஜ் 11 போட்டிகளில் 11 விக்கெட் என்று சுமாராக பந்துவீசியிருந்தார். 2019ம் ஆண்டு சீசன் சிராஜுக்கு மோசமாக இருந்தாலும், கிங் கோலி அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை, ஆதரவை பின்வாங்கவில்லை.

 

2020ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிராஜ் சிறந்த கம்-பேக் கொடுத்தார். இந்த சீசனில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினார். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிராஜின் பந்துவீச்சு மறக்கமுடியாததாக அமைந்தது.

 

ஐபிஎல் வரலாற்றில், தொடர்ந்து இரு மெய்டன் ஓவர்களை வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை சிராஜ் பெற்று, 4 ஓவர்கள் வீசி 2 மெய்டன்கள், 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து, ஆர்சிபி அணியில் பிரிக்க முடியாத அங்கமாக சிராஜ் மாறினார்.

குடும்பத்துக்காக சொந்த வீடு

எளிமையான குடும்பத்தில் பிறந்து, ஏழ்மையான வீட்டில் வசித்த சிராஜ், ஐபிஎல் போட்டியின் மூலம் கிடைத்த முதல் ஊதியத்தின் மூலம், புதிதாக ஒரு வீடு வாங்கி, தனது குடும்பத்தை அதில் குடியேற்றி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தார். கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்தடுத்து உயரங்களை சிராஜ் அடைந்தாலும், தன்னுடைய தந்தை, தாய் செய்த தியாகங்களை அடிக்கடி நினைவுகூற தவறியதில்லை.

சர்வதேச அறிமுகம்

2017, அக்டோபர் மாதம் சிராஜ் இந்திய அணிக்குள் தேர்வாகும் வாய்ப்புக் கிடைத்தது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிராஜ் அறிமுகமாகினார். 2017, நவம்பர் 4ம் தேதி நடந்த டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தியதே சிராஜின் முதல் சர்வதேச விக்கெட்டாகும்.

 

அதன்பின் சிராஜின் சிறப்பான பந்துவீச்சால், 2019, ஜனவரி 15ம் தேதி ஓவல் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கும் வாய்ப்பு சிராஜுக்கு கிடைத்தது.

இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெஸ்ட் போட்டி திருப்புமுனை

2020ம் ஆண்டு, அக்டோபர் 26ம் தேதி முகமது சிராஜ் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகினார். முகமது ஷமிக்கு காயம் ஏற்படவே அவருக்குப் பதிலாக சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார். டெஸ்ட் தொடரில் நவ்தீப் சைனி, சிராஜ் இருவரைத் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்தநிலையில், கோலியின் ஆதரவால் சிராஜுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தந்தையின் மறைவுக்குக்கூட செல்லாத சிராஜ்

முகமது சிராஜ் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, திடீரென அவரின் தந்தை முகமது கயாஸ் உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் மரணமடைந்த செய்தி கிடைத்தது. சிட்னியில் பயிற்சியில் சிராஜ் இருந்தபோதுதான் தந்தையின் இறப்புச் செய்தி அணி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.

 

அந்த நேரம் கொரோனா காலம் என்பதால், 14 நாட்கள் தனிமையில் இருந்தபின்புதான் இந்திய அணி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற விதி இருந்தது.

அந்த 14நாட்கள் தனிமைக் காலத்தில் இந்திய அணிக்குள் சிராஜ் இருந்ததால் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தார்.

 

இந்தியாவுக்கு சென்று தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்று பின்னர், ஆஸ்திரேலியா வந்தால் மீண்டும் 14 நாட்கள் தனிமையில் இருக்க நேரிடும், இந்திய அணிக்குள் விளையாடும் வாய்ப்புக் கிடைக்குமா என்பதும் தெரியாது என்ற நிலை சிராஜுக்கு இருந்தது. தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில், இறுதிச் சங்கிற்குக் கூட செல்லாமல், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, இந்திய அணிக்காக விளையாடினார்.

 

சிராஜின் இந்த செயலுக்கு கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணி நிர்வாகம் சிராஜுக்கு ஆதரவு அளித்தனர். தன் மீது வைத்த நம்பிக்கையையும், தந்தையின் கனவையும் நிறைவேற்ற சிராஜ் தவறவில்லை.

ஹைதராபாத்தில் சிராஜின் தந்தை மரணடைந்த செய்தி, ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமையில் இந்திய அணியில் இருந்த சிராஜிடம் தெரிவிக்கப்பட்டது. தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்கலாம், மீண்டும் ஆஸ்திரேலியா வந்து, 14 நாட்கள் தனிமையில் இருந்து அணியில் சேர்ந்து கொள்ள பிசிசிஐ தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், சிராஜ் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,MOHAMMAD SIRAJ FAMILY

தந்தையை நினைத்து…

தனது தந்தையைப் பற்றி சிராஜ் கூறுகையில் “ என் தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவது, என் மகன் ஒருநாள் இந்த தேசத்தை பெருமைப்படுத்துவான். உறுதியாக நம்புகிறேன். கடைசியாக ஆஸ்திரேலியா புறப்படும்முன், என் தந்தை உடல்நிலை மோசமாக இருந்ததை அறிந்தேன்.

 

ஆட்டோ ஓட்டி எந்த அளவு சிரமங்களைச் சந்தித்து என்னை இந்த நிலைக்கு என் தந்தை உயர்த்தினார் என்பது தெரியும். அவரின் ஆசை நான் இந்திய அணியில் இடம் பெற்று சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்பதுதான் அதை நிறைவேற்றியுள்ளேன். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆதரவை நான் இழந்துவிட்டேன்.” எனத் தெரிவித்தார்.

கோலியால் உருவாக்கப்பட்டவர்

இந்திய கிரிக்கெட் அணி சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறிப்பாக கேப்டன் விராட் கோலியிடம் இருந்து முகமது சிராஜுக்கு அதிகமான ஆதரவு கிடைத்தது. ஆர்சிபி அணியின் கேப்டனாகவும், இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்த கோலி, சிராஜின் திறமையை வெளிக்கொண்டுவர தேவையான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கினார்.

 

சர்வதேச கிரிக்கெட்லி சிராஜின் திறமை ஒளிர்வதற்கு அவரின் பந்துவீச்சு மட்டும் காரணமல்ல, அதற்கு பின்னால் இருந்த விராட் கோலியின் ஆதரவு முக்கியமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

 

“மனஉறுதியுடன் இருந்து தந்தையின் கனவைநிறைவேற்று” என சிராஜிடம் அடிக்கடி கோலி கூறி அவரை வலுப்படுத்தியுள்ளார் என்று சிராஜ் ஒருபேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை சிராஜ் வெளிப்படுத்தி, இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கியக் காரணமாகவும் இருந்தார். டெஸ்ட் தொடரில் சிராஜ் அறிமுகமான முதல் போட்டியில் 77 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சாதனைகள்

ஆஸ்திரேலியா தொடரில் முகமது சிராஜின் பந்துவீச்சு அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய இடத்தை பும்ரா, ஷமிக்கு அடுத்தார்போல் பெற்றுக்கொடுத்தது. இதுவரை சிராஜ் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளையும், 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 53 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

 

தன்னுடைய 29 ஒருநாள் போட்டி அதாவது ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தியபோதுதான் 50-வது ஒருநாள் விக்கெட்டை சாதனையை எட்டினார். 8 டி20 போட்டிகளில் ஆடிய சிராஜ் 11 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/crg04e81v5po

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.