Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

“பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” ஆவணக் காட்சியகம் திறப்பு!

September 23, 2023
spacer.png

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி ஆரம்பமாகியதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகத்தை மூன்று பிள்ளைகளின் மாவீரர்களின் தாய் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார்.

தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

 

https://globaltamilnews.net/2023/195450/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்தாயகத்தில் தமிழ் மக்களின் தொன்மை.. இருப்பு.. இன அழிப்பு.. அதற்கு எதிரான உரிமைப் போராட்டம்.. அதன் தியாகிகள்.. மாவீரர்கள்.. படிமங்கள் பத்திரப்படுத்தப்பட்டு.. அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுவது மிக மிக அவசியம்.

நல்ல முன்மாதிரியான நிகழ்வு. தியாகி திலீபனுக்கு செய்யும் நிஜ அஞ்சலிகள்.. இந்த வகையில் அமைவது சிறப்பு. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.