Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஊர்தி அரசியல்..! திலீபன் வாக்கு வங்கியில் முதலீடு!

ஊர்தி அரசியல்..!     திலீபன் வாக்கு வங்கியில் முதலீடு!

**************************************

(மௌன உடைவுகள் -45)

 — அழகு குணசீலன் —

  கிழக்கின் பொத்துவில்லில் செப்டம்பர் 17 இல்  ஆரம்பித்த திலீபனின் நினைவேந்தல் ஊர்தி ஊர்வலம் வந்தவழியில் வன்முறையில் சிக்கியிருக்கிறது. இதுகுறித்து பல்வேறு கோணங்களில், பல்வேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன. இவை அனைத்தும் வழமையான தமிழ்த்தேசியம் பாணி.

 விடுதலைப்போராட்டம், புரட்சி இவை எல்லாம் அரச இயந்திரத்திற்கு எதிரான சட்டமறுப்பு, சட்டம் ஒழுங்கை மீறுவதில், எதிர்ப்பதில் ஆரம்பமாகிறது என்பது வெளிப்படை. போர்க்காலத்தில் இவை உச்சத்தை தொட்ட ஆயுத வன்முறைகளாக இருந்தன. சமகாலம் போர் ஓய்வுக்கு பின்னரான நல்லிணக்கத்திற்கான காலம். சட்டம் ஒழுங்ககு மீண்டும் கட்டி எழுபப்படவேண்டியகாலம். 

ஆயுதப்போராட்டம் நடாத்திய அனைத்து அமைப்புக்களும் அரசியல் கட்சிகளாக கலர் பூசிக்கொண்டு ஜனநாயக (?) அரசியல் செய்கின்றன. போர்க்காலத்தில் ஒழித்திருந்து, ஆமாமா சாமி போட்ட “அகிம்சை” அரசியலும் களத்தில் நிற்கிறது. இந்த வகையில் திலீபனுக்கும் இரு முகங்கள் உண்டு. ஒன்று விடுதலைப்புலிகளின் உறுப்பினராக அவரின் ஆயுத வன்முறை முகம். மற்றையது உண்ணாவிரதம் இருந்து மரணித்த காரணத்தாலான அகிம்சை முகம். இதனால்தான் திலீபன் ஒரு வன்முறையாளனா? காந்திய அகிம்சைவாதியா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 

போராட்டத்தில் மரணித்த போராளிளுக்கு அஞ்சலி செலுத்தும் வரலாறு ஒட்டு மொத்தமாக மாவீரர் நாளாகவும், தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு விசேடமாகவும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த விசேடத்திற்குள் திலீபன் வருகிறார்.  அப்படியான ஒரு விசேடம் தான் இந்த ஊர்தி. இங்கு நாம் கவனிக்க வேண்டிய சில நடைமுறை அம்சங்கள் உண்டு.  ஊர்தி ஊர்வலத்தின்  போது இடம்பெற்ற வன்முறையின்  மறு பக்கத்தை விளங்கிக் கொள்வதற்கு இவை அவசியம்.

நினைவேந்தல் ஊர்தி ஊர்வலம் இடம்பெற்ற – ஊர்ந்த இடங்கள், நடாத்தப்பட்ட காலம், நடாத்தப்பட்ட சூழல் , நடாத்தியவர்கள், அவர்களின் நோக்கம், செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டரீதியான அங்கீகாரம் போன்ற பலவிடயங்கள் இந்த பிரச்சினையின் பின்னால் கேள்விக்கு உட்படுத்தப்படவேண்டியவை. 

உண்மையில் இவை அனைத்தும் நினைவேந்தலுக்கு முன்  திட்டமிடப்பட்ட நிகழ்வுக்கான முகாமைத்துவமாக  ஒழுங்கு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த ஒருங்கிணைப்பும், திட்டமிடலும் நடந்ததாக தெரியவில்லை.

நினைவேந்தல் ஊர்தியை கிழக்கு மாகாணத்தில் இழுப்பதாக இருந்தால் பல இனங்கள் செறிந்து வாழ்கின்ற, அருகருகே மூவின கிராமங்களை கொண்ட சூழல் கவனத்தில் கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். யாழ்.குடாநாட்டில், வன்னியில் நிலவும் களநிலை கிழக்கில் இல்லை என்பதை புரிந்துகொள்ள மறுக்கின்ற அரசியல்வாதிகள் இவர்கள். கிழக்கு மக்களின் மனநிலையை புரியாத  தமிழ்தேசிய அரசியல் மீண்டும் ஒரு கறையை தனக்கு தானே பூசி இருக்கிறது.

இலங்கையில் இந்தக் காலப்பகுதி அரசியல் முக்கியத்துவம் கொண்டது. எந்த ஒரு சிறிய தீக்குச்சியும் காட்டுத் தீயாகப் பரப்பும் வாய்ப்புக்கள் அதிகம். ஈஸ்டர் தாக்குதல் மீண்டும் ஒருமுறை தோண்டி எடுக்கப்படுகின்ற காலம் இது. இழப்புக்களைச் சந்தித்த கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மற்றும் முஸ்லீம், தமிழ், சிங்கள மக்களின் உள்ளார்ந்த மனிநிலை குறித்து ஏற்பாட்டாளர்கள் கருத்தில் கொண்டார்களா? என்று கேட்கவேண்டியதேவை உள்ளது.

இராஜபக்சாக்களின்   ஆட்சிக்கு எதிரான அறகல, பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து நாடு வங்குரோத்து பாதாளகிடங்கில் இருந்து வெளியேற முயற்சிசெய்யும் காலமாக இது உள்ளது. மக்களின் நாளாந்த வாழ்வு வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. மக்கள் அதை மெல்ல மெல்ல அனுபவிக்க ஆரம்பிக்கின்றனர்.

 இதற்கு சமாந்தரமாக இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சிகள் சாண் ஏற முழம் சறுக்குவதாக இன்னொரு பக்கம் ஆமைவேகத்தில் நகர்கிறது.

இனப்பிரச்சினை தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஒரு கட்சியான தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி ஊர்திப் பயணத்தை  மேற்கொள்கிறது. இவர்கள் 13ஐ எதிர்ப்பதிலும், இந்திய எதிர்ப்பிலும் சிங்கள தீவிரவாத அரசியல்வாதிகளின் அரசியல் குணாம்சம் கொண்டவர்கள்.

சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் தொல்பொருள் ஆராய்ச்சி, விகாரை அமைத்தல் போன்றவையும் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றகாலம். இந்த விடயத்தில்  சிங்கள கடும்போக்காளர்களோடு முரண்படுபவர்களாக காட்டிக்கொள்ளும் ஒரு கட்சி இது. இத்துடன் கிழக்கில் காணிப்பிரச்சினை விடயத்தில் மூன்று சமூகங்களுக்கும் இடையிலான உறவில் பெரும் வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது.

பாராளுமன்றத்தில் சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து தங்களை “புலிகளாக” பிரகடனம் செய்யும் சில தமிழ்த்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுள் செல்வராசா கஜேந்திரனும் ஒருவர்.  சிங்கள மக்கள் இவரை அடையாளம் காண்பதில்  எந்த கஷ்டமும் இல்லை. சவப்பெட்டிகளின் எண்ணிக்கையை சிங்கள மக்களுக்கு சொன்ன கஜேந்திரன்  ஊர்தியில் ஏறும்போது இதை எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். பாராளுமன்ற சிறப்புரிமை வீதியில் அவருடன் கூட ஊர்தியில் ஏறாது. எங்களுக்கு ஆயிரக்கணக்கில் சவப்பெட்டிகளை அனுப்புவதாக சவால் விட்ட நீங்கள் உங்கள் சவப்பெட்டியை எங்கள் ஊருக்குள் இழுக்கவிடுவோமா? என்று  அவர்கள் கேட்பதில் உள்ள தவறு என்ன?

  கிழக்கின் இந்த விசேட இட அமைவு, கால, சூழ்நிலைக்கு நடுவில் தான் திலீபனின் ஊர்தியை இழுத்து கட்சி அரசியல் வாக்கு வங்கிக்கு அவனை முதலிட்டு கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி மீண்டும் ஒருமுறை சாகடித்திருக்கிறது தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி. இவர்கள் மக்களின் அழிவில் அரசியல் செய்பவர்கள். இன ஐக்கியம், தமிழர் ஐக்கியம், ஒன்றிணைந்த அஞ்சலிநிகழ்வு, ஒன்றிணைந்த போராட்டம் போன்ற மக்களின்  ஒற்றுமை விருப்பத்திற்கு மாறானவர்கள். ஒரு செத்தவீட்டைக்கூட ஒற்றுமையாக மக்கள் நினைவேந்தலாக செய்ய வக்கற்ற அரசியல் வாதிகள்.

ஒரு கட்சி பொத்துவில்லில் இருந்து பொலிகண்டிக்குப்போனது என்பதற்காக, இவர்களும் பொத்துவில்லில் இருந்து நல்லூருக்குப் போகிறார்களாம். எங்கும் எதிலும் தனித்து ஓட்டம். ஏன் தனித்து ஓடுகிறார்கள்? எல்லாம் கதிரைக்காகத்தான். திலீபனை விற்று கதிரைவாங்கும் அரசியல் வியாபாரம். இந்த குறுகிய அரசியல் கதிரை இலக்கே இந்த பிரச்சினையின் அடிப்படை.

இந்த சம்பவம் குறித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கருத்து வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக விமர்சனங்கள் எழுகின்றன. கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் இனஐக்கியம், சட்டம் ஒழுங்கு என்பனவற்றிற்கு அவர் பொறுப்பாகிறார். 

சட்டவாதிகளின் கூடாரமாக இருக்கின்ற தமிழ் மக்கள் தேசியமுன்னணியினர் சட்டம், ஒழுங்கை மீறி ,அனுமதி இன்றி, பல்லின மக்கள் வாழும் பகுதிகளில் பதற்றம் ஏற்படும்  வகையில் சட்டவிரோத ஊர்தி பவனி ஒன்றை நடாத்தியுள்ளனர். இது ஒரு வகையில் திட்டமிட்டு மாற்று இனங்களை ஆத்திரமூட்டும் செயல். அக்கரைப்பற்று, மொறக்கட்டான்சேனை , நாவலடிச்சந்தி, திருகோணமலை- கொழும்பு வீதியில் சர்தாபுர எதிரொலிகள் இதையே காட்டுகின்றன. காத்தான்குடியிலும் ஊர்திக்கு எதிர்ப்புகாட்ட இருந்ததாக கஜேந்திரன் கம்பனி கூறுகிறது.

திலீபன் யார் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர். புலிகள் காத்தான்குடி பள்ளிவாசல் உள்ளிட்ட ஏறாவூர், ஓட்டமாவடி  உள்ளிட்ட இடங்களிலும் முஸ்லீம்களை படுகொலை செய்தனர். திருகோணமலை, அநுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களிலும் முஸ்லீம், சிங்கள அப்பாவி மக்கள் புலிகளால்  கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பாதிப்புக்கள் அந்த மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இதன் மறுபக்கத்தில் கட்சி அரசியல், புலனாய்வுத்தரப்பு அனுசரணை பற்றியும் பேசப்படுகிறது. அதையும் மறுப்பதற்கில்லை.

புலிகளால் பாதிக்கப்பட்ட  மக்கள்  நினைவேந்தலை வெறுப்பது, அதனால் ஆத்திரமடைவது சர்வ சாதாரணமானது. அதற்கான வாய்ப்பை வழங்காது தவிர்த்திருக்க வேண்டியவர்கள் ஏற்பாட்டாளர்களே. பொலிசாரோடு முரண்பட்டு வாய்த்தர்க்கம் செய்து சவால்விட்டு, படம்பிடித்து, பொலிசார் மீது நம்பிக்கையில்லை, இவர்களை வெளியேற்றுங்கள் என்று கர்ச்சிக்கும் இவர்கள் இப்போது அதே பொலிசாரால்தான் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். சட்டவிரோத ஊர்திவலத்தில் பொலிசாரைப்  பொறுத்தமட்டில் இருதரப்பிலும் குற்றம் காணமுடியும்.

இந்த வன்முறைக்கு பின்னணியில் ஒரு இனக்கலவரத்திட்டம் இருந்ததாக கூறப்படுவது எந்தளவுக்கு உண்மையானது? ஊர்திப் பயணத்தில் ஒரு கையளவு ஆட்களே கலந்து கொண்டனர். இவர்கள் தமிழ்மக்கள் தேசிய முன்னணி கட்சிக்கார்கள். அதேபோல் எதிர்ப்புக்காட்டியவர்கள் -தாக்குதல் நடாத்தியவர்களின் தொகையும் கையளவுதான். இவர்கள்  ஒரு சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தியிருந்தால்  ஊர்தி வந்தவழியே போய்த் தொலைந்திருக்கும். 

இந்த நினைவேந்தல் ஒரு மக்கள் நிகழ்வாக அமையவில்லை. தமிழ் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியதாகவும் தெரியவில்லை. சிங்கள தரப்பிலும் சிங்கள மக்கள் திரண்டு இந்த வன்முறையைச் செய்யவும் இல்லை.  இனிமேலாவது இவர்கள் பூட்டிய பாராளுமன்ற கதவுகளுக்குள்  உமுறுவதில் கவனமாக இருக்க வேண்டும். 

தமிழ்த்தேசிய போலிகளால் ஒன்றிணைந்து ஒரு செத்தவீட்டைக்கூட நினைவுகூர முடியாத அளவுக்கு போட்டியும், பொறாமையும், பிரிவினையும் முன்னணியில் நிற்கிறது. திலீபன் என்ன? ஒருகட்சிக்காரனா? உங்கள் பாராளுமன்ற அரசியலை ஏற்றுக்கொண்டவனா? பொன்னம்பலம் குடும்ப வாரிசு அரசியலை அங்கீகரித்தவனா?  உண்ணாவிரதம் இருந்தான் என்பதற்ககாக ஒரு பாராளுமன்ற அகிம்சை அரசியல்வாதியா? அதுவும் இல்லை. 

அப்படி இருக்கையில் அவன் செயற்பட்ட இயக்கமும் , அவர்களின் அமைப்புக்களும், கட்சிகளும் இருக்கையில் அவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எப்படி வந்தது?  தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் முந்திரிக்கொட்டை  அரசியல் பின்னணி என்ன?

அதுதான் திலீபனை வாக்கு வங்கியில் முதலீடு செய்து அரசியல் இலாபம் பெறுவது.

ஆகவே தான் இந்த நினைவேந்தல் முற்றுமுழுதாக வெறும் அரசியல் கட்சி பிரச்சார செயற்பாடு. திலீபனின் நினைவேந்தல் கையில் எடுக்கப்பட்டு அரசியலுக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இது  சிங்களவர்களில் சிலர் ஊர்தியை தாக்கியதை விடவும் பொன்னம்பலம் கூட்டம் திலீபனை  அஞ்சலிப்பதற்கு மாறாக அவமதித்த செயல்.

இந்த அவமதிப்பில் முன்னாள்  புலிப்போராளிளுக்கும் ஒருபங்கு உண்டு. திலீபனின் மரணத்தை நினைவுகூருவதானால் அதை ஒழுங்கு படுத்தி செய்யவேண்டியவர்கள் புலிகளே. அல்லது மக்களின் சார்பில் அந்த உரிமையை கையில் எடுத்து செயற்படவேண்டிய பொறுப்பு அவர்களைச்சார்ந்தது. அது  இல்லாததினால் தான் திலீபன் அனாதையாக அவனது கொள்கைக்கே மாறான அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறான். இதில் பெரும் பொறுப்பு  ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு உண்டு. அல்லது தங்களின் பாராளுமன்ற கட்சி அரசியல் “திலீபன் அண்ணாவின்” கனவுகளுக்கு மாறானது என்ற குற்ற உணர்வு அவர்களை உறுத்துகிறதா….?  திலீபனின் ஆன்மா துரத்துகிறாதா….?

 உங்கள் அரசியல் வீதியில் திலீபனை கூறிவிற்பதை நிறுத்துங்கள். 

நீங்கள் அஞ்சலி செலுத்த தேவையில்லை. 

அவனை விற்காது இருப்பதே அஞ்சலி…!

 

https://arangamnews.com/?p=9971

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, கிருபன் said:

திலீபன் யார் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர். புலிகள் காத்தான்குடி பள்ளிவாசல் உள்ளிட்ட ஏறாவூர், ஓட்டமாவடி  உள்ளிட்ட இடங்களிலும் முஸ்லீம்களை படுகொலை செய்தனர். திருகோணமலை, அநுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களிலும் முஸ்லீம், சிங்கள அப்பாவி மக்கள் புலிகளால்  கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பாதிப்புக்கள் அந்த மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இதன் மறுபக்கத்தில் கட்சி அரசியல், புலனாய்வுத்தரப்பு அனுசரணை பற்றியும் பேசப்படுகிறது. அதையும் மறுப்பதற்கில்லை.

ஆமாம் ஆமாம்.. கிழக்கு மாகாணத்தில்.. அடாத்தாக வந்து குடியமர்த்தப்பட்டு.. ஆயுதங்கள் வழங்கப்பட்டு.. சிங்கள ஊர்காவல் படையாக.. இயக்கப்பட்ட சிங்களவர்களும்.. முஸ்லிம் ஜிகாத் மற்றும் ஊர்காவல்படையும்.. செய்தவை எல்லாம் அகிம்சை தான் பாருங்கோ. இந்த அரச பயங்கரவாதங்களுக்கும் மதப் பயங்கரவாதங்களுக்கும் எதிராக நின்று மக்களையும் மண்ணையும் காத்து நின்ற புலிகளும்.. திலீபனும்.. இந்த சிங்கள.. முஸ்லிம் பயங்கரவாதிகளால் வெறுக்கப்படுகினமாமில்ல.

இப்படியான மிகக் கேவலமாக உண்மைக்குப் புறம்பான விடயங்களை புகுத்தி புனையப்படும் ஆக்கங்களை யாழில் கொண்டு வந்து ஒட்டுவது ஏனோ..??!

Edited by nedukkalapoovan


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.