Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தெற்காசியா தொடர்பிலான பெரியண்ணனின் கொள்கை மாறியிருக்கிறதா?

என்.கே.அஷோக்பரன்

கனடாவும், இந்தியாவும் மிகப்பெரிய இராஜதந்திர முறுகல் நிலையை சந்தித்து நிற்கும் காலப்பகுதியிது. பதினைந்து வருடங்கள் முன்பு கூட இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால், உலகளவில் இந்தியா தனது பலத்தை இதற்கு முன்னர், இத்தனை தூரம் வௌிக்காட்டியதில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்தையே, சீனாவுக்கு வழங்காததை தாம் பெறுவது கூடாது என்று ஏற்காது விட்ட நேருவிய இந்தியா இப்போது இல்லை. வறிய நாடு, பிச்சைக்கார நாடு என்று மேற்குலகமானது தனது ஆதிக்கப்பார்வையின் காரணமாக, ஆபிரிக்காவுக்கு அடுத்து மோசமாகப் பார்த்த இந்தியா இன்று இல்லை.

இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம்! ஒரு வல்லாதிக்க கட்சியின் சர்வாதிகார ஆட்சியில் சீனா பெரும் பொருளாதார வளர்ச்சியை சந்தித்தது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக, பகுதியளவு சமஷ்டி ஆட்சியைக் கொண்ட நாடாக இருந்துகொண்டு, தனக்குள் பலநூறு பிரிவினைகளைத் தாங்கியபடி இந்தியா அடைந்த வளர்ச்சி அபாரமானது.

1991-ன் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதாரக் கொள்கை மாற்றம் தான் இதற்கெல்லாம் அடித்தளம். அந்த அடித்தளத்தைப் போட்டவர்கள் அன்றைய பிரதமர் நரசிம்ஹ ராவும், அன்றைய நிதியமைச்சர் கலாநிதி மன்மோஹன் சிங்கும். அந்த அடித்தளத்திலிருந்து வேர்விட்டு வளர்ந்த இந்தியா கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சி அபாரமானது.

இன்று மேற்குலகினால் தொல்லைக்குட்படுத்தப்பட முடியாத ஒரு சக்தியாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இன்றைய கனடா-இந்திய இராஜதந்திர முறுகல் நிலையில் இந்தியாவின் பலம் வௌிப்பட்டு நிற்கிறது. கனடாவின் உற்ற தோழர்களான அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் அவுஸ்திரேலியா கூட இன்றுவரை கனடாவுக்கு முழு ஆதரவாக நிற்கவில்லை. அவை கனடா-இந்திய இராஜதந்திர முறுகல் நிலை தொடர்பில் மழுப்பல் நிலையைத்தான் இன்றுவரை கடைப்பிடிக்கின்றன. இதற்குக் காரணம் இன்று இந்தியா அடைந்திருக்கும் பலம் வாய்ந்த நிலை.

இந்தியாவின் இன்றைய பலம் வாய்ந்த நிலை தெற்காசியாவில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவதானிப்பது எமக்கு அவசியமானதொன்றாக இருக்கிறது. தெற்காசியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவிற்கு நிகரான பொருளாதாரப் பலம் நிறைந்த இன்னொரு நாடு தெற்காசியாவில் இல்லை. இந்தியாவிற்கு அடுத்து, தெற்காசியாவின் பெரிய பொருளாதாரம் பங்களாதேஷ். ஆனால் அது இந்தியப் பொருளாதாரத்தின் அளவில் ஏறத்தாழ 13% மட்டுமே! அடுத்த இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. பங்களாதேஷ் பொருளாதாரத்தின் ஏறத்தாழ 20%ம் கொண்ட பொருளாதாரமாக இலங்கை அடுத்த இடத்தில் இருக்கிறது. இலங்கைப் பொருளாதாரத்தின் ஏறத்தாழ 40%ம் கொண்ட பொருாளதாரமாக நேபாளம் அடுத்த இடத்திலும், ஆஃப்கானிஸ்தான், மாலைத்தீவு, மற்றும் பூட்டான் ஆகியன அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவைத் தவிர்ந்த மற்ற 7 தெற்காசியநாடுகளின் பொருளாதாரத்தின் கூட்டளவு என்பது இந்திய பொருளாதாரத்தின் 28% மட்டும்தான்! இந்திய பொருளாதாரம் என்பது மற்ற தெற்காசிய நாடுகள் அனைத்தினதும் பொருளாதாரத்தைவிட மூன்று மடங்கிற்கு மேல் பெரியது! ஆகவே இந்தியா தெற்காசியாவின் பெரியண்ணன் என்பதில் எதுவித மாற்றுக்கருத்துக்களும் இருக்க முடியாது.

பெரியண்ணனின் தெற்காசியா தொடர்பான வௌிநாட்டுக்கொள்கை என்று நாம் பார்க்கும்போது, பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டுப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் எதிரிநாடு. தனது எல்லையை ஒட்டியிருக்கும் இன்னொரு நாடான சீனா போட்டிநாடு. இந்தியாவும், சீனாவும் இன்றைய உலகின் பலமான போட்டியாளர்கள். பாகிஸ்தான் மற்றும் சீனாவைத் தவிர்த்த ஏனைய தெற்காசிய மற்றும் தனது எல்லையை ஒட்டிய சீனா தவிர்ந்த நாடுகள் தொடர்பில் இந்தியாவின் வௌிநாட்டுக் கொள்கையை ஆய்வு செய்யும் போது, இந்திரா கோட்பாடு, அல்லது ராஜிவ் கோட்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இது பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் கொள்கையாக இருந்தது. இது மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாடுகளில் தலையிட, இந்தியாவுக்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது.

அதேவேளை, எந்த நாடும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை, இந்தியா கடுமையாக எதிர்க்கும். இரண்டாவது, இந்திய நலன்களுக்கு, வெளிப்படையாக அல்லது உள்ளார்ந்த வகையில் எதிராக அமையும் வகையில், வெளிநாடொன்று, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாட்டில் தலையிடுவதை, இந்தியா சகித்துக் கொள்ளாது. ஆகவே, எந்தத் தெற்காசிய நாடும் இந்தியாவுக்கு எதிராக அமையத் தக்கவகையில், வெளிநாடொன்றிடமிருந்து இராணுவ உதவியைப் பெறக் கூடாது. மூன்றாவது, ஒரு தெற்காசிய நாட்டுக்குப் பாரதூரமான உள்ளக முரண்பாட்டை எதிர்கொள்ள அல்லது சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்துக்குச் சகிக்கமுடியாத அச்சுறுத்தல் காரணமாக, வெளியக உதவி உண்மையாகவே தேவைப்படுமானால், அது இந்தியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளிடம் உதவி கோரலாம். அத்தகைய சூழலில், இந்தியாவைத் தவிர்த்தலானது, குறித்த அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும்.

இந்திரா, ராஜிவ் காலத்து இந்தியா அல்ல இப்போது இருக்கும் இந்தியா. அப்படியானால், இந்தியாவின் தற்போதைய பிராந்தியக் கொள்கை மாறியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 2008 காலப்பகுதியிலேயே “அயலக முன்னுரிமைக்” கொள்கைக்கான அடிப்படைகள் வௌிப்பட்டிருந்தாலும், பாரதப் பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியில் “அயலக முன்னுரிமை” (“Neighbourhood First”) என்பது முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. “நண்பர்கள் மாறலாம், ஆனால் அயலவர்கள் மாறுவதில்லை, அயலவர்கள் ஒன்றாக வாழ்ந்தாக வேண்டும்” என்று முன்னர் ஒரு முறை அடல் பிஹாரி வாஸ்பாய் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிராந்திய ஒத்துழைப்பு என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது, அதுதான் இந்தக் கொள்கையின் அடிப்படையும் கூட. ஆனால் வெறுமனே தனது பாதுகாப்புத் தேவையை அயலவர்கள் மீது திணிப்பதாக அமையாமல், அயலக நாடுகளோடு பரஸ்பர நல்லுறவைக் கட்டியெழுப்பும் அணுகுமுறையை இந்தியா தற்போது முன்னெடுக்கிறது. அது அரசாங்கங்களிடையேயான உறவுகளைத் தாண்டி மக்களிடையேயான இராஜதந்திர உறவு மேம்பாட்டிலும் கணிசமாக அக்கறை செலுத்துகிறது.

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நின்ற போது, இலங்கைக்கு அவசர உதவி தேவைப்பட்ட நிலையில், ஏறத்தாழ 4 பில்லியன் டொலர்கள் அளவிலான உதவியை அள்ளி வழங்கியது இந்தியா. அதற்கு முன்னர் “கொவிட்-19” பெருந்தொற்றின் போதும், இலங்கை உட்பட்ட பல நாடுகளுக்கும் முதன் முதலில் தடுப்பூசியை வழங்கியது இந்தியாதான். இந்தியாவின் இந்த அணுகுமுறையானது பலத்தை மட்டும் பயன்படுத்திய இராஜதந்திரத்தைவிட, பரஸ்பர நம்பிக்கையையும், தோழமையையும் கட்டியெழுப்பும் இராஜதந்திரப் பாதையை இந்தியா தேர்ந்தெடுத்திருப்பதை உணர்த்தி நிற்கிறது.

இந்தியாவின் நீடித்து நிலைத்த பாதுகாப்பிற்கு, நெருக்கமான அயலக உறவு அவசியம் என்பது இந்தியா ஆரம்பத்திலிருந்து உணர்ந்த ஒன்று. ஆனால் அதனை ஏற்படுத்த அரசாங்கங்களிடையேயான பரஸ்பர நம்பிக்கை மட்டும் போதாது, மக்களிடையேயான நம்பிக்கையும், விசுவாசமும், நல்லுறவும் அவசியம். ஆகவேதான் இந்தியா நேரடியாக மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விடயங்களல் முதலிடுகிறது. நிறைய மக்கள் நலத்திட்டங்களுக்கு உதவுகிறது. மக்களுக்கான நேரடி நிகழ்வுகளை நடத்துகிறது. இந்தியா பற்றிய நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

இந்திரா அல்லது ராஜிவ் கோட்பாட்டின் அடிப்படைகள் மாறவில்லை. அவை மாறவும் முடியாது. அதனால்தான் சீன புலனாய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது. சீனாவோ, ஏனைய பெரும் பலம்வாய்ந்த நாடுகளோ இந்தியாவிற்கு அருகிலுள்ள இலங்கையின் வடக்கில் பெருமளவு முதலீடுகளைச் செய்து, அங்கு காலூன்றுவதைக்கூட இந்தியா விரும்பவில்லை. ஆனால் இந்த பாதுகாப்புக் காரணங்களோடு நின்றுவிடும் வௌியுறவுக் கொள்கையைத்தாண்டிய மக்களிடையே நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் விதைக்கும் அணுகுமுறையை இந்தியா தனது “அயலக முன்னுரிமை-க்” கொள்கையினூடாக முன்னெடுக்கிறது.

சுருங்கக் கூறின், இந்திய வௌியுறவுக் கொள்கையின் அடிப்படைகள் மாறவில்லை, ஆனால் அணுகுமுறை மாறியிருக்கிறது. பெரியண்ணன் கொஞ்சம் அன்புகாட்டத் தொடங்கியிருக்கிறார். தனது நலனைக் காக்க கண்டிப்பு மட்டும் போதாது, நிறைய அன்பும் வேண்டும் என்பதை பெரியண்ணன் புரிந்துகொண்டிருக்கிறார்.

2023.09.25

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தெற்காசியா-தொடர்பிலான-பெரியண்ணனின்-கொள்கை-மாறியிருக்கிறதா/91-325092

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
    • போர்க்ளத்துக்கும் ஊர் சண்டியர்களின் கொள்ளுபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஊடகம்கள் எங்கள் இனத்தின் சாபகேடு . கிட்ட தட்ட தமிழ் அரசியல் குரங்கு கூட்டம் பங்கு பிரிக்க வெளிக்கிட்ட கதை தான் . குறைந்தது நாலு கொலையாவது நடந்து இருந்தால் தமிழ்சனம் சந்தோசபட்டு இருக்கும் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.