Jump to content

எழுத்தாளர் மோ-யென்னின் நோபல் ஏற்புரையின் தமிழாக்கம் - கை.அறிவழகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"அம்மா பீச் மரங்களின் நிழலில் நிரந்தரமாகச் சாம்பல் நிறக் கல்லறை ஒன்றில் உறங்கிப் போனது பெரும் துயரமென்றால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கல்லறையை உடைத்து அம்மாவின் நினைவுகள் தளும்பிக் கண்ணீராகப் பெருக்கெடுக்க அங்கே நின்றிருப்பது இன்னும் எத்தனை துயரமென்று யோசித்துப் பாருங்கள்.....
 
எங்கள் கிராமத்தைக் கடந்து போகிற புதிய ரயில்பாதை அம்மாவின் கல்லறை வழியாகப் போகிறதென்று அரச சேவகர்கள் எங்களுக்குத் தகவல் சொன்னார்கள்.
 
ஆனாலும், வேறு வழியில்லை. அம்மாவின் உறக்கத்தை மீண்டும் ஒருமுறை கலைக்க வேண்டும். குழந்தைகளுக்காக உறக்கமின்றிக் கிடப்பதொன்றும் உலகில் அம்மாக்களுக்குப் புதிதில்லை.
 
இப்போதும் துளி நினைவு கிடைத்து விட்டால் கூடத் தன் பிள்ளைகளுக்காகக் கல்லறையிலிருந்து எழுந்து போய் வேறிடத்தில் படுத்துக் கொள்ளக் கூடியவள்தான்.....
 
அம்மாவின் கருவறைக்குள் கொஞ்சமாக வளர்ந்து கால்களை அவள் வயிற்றுச் சுவர்களில் மோதுகிற நள்ளிரவுகளில் எல்லாம் அம்மா உறக்கத்தை மறந்து, முழுதாய் வளராத என் பிஞ்சுக் கால்கள் அந்த இருட்டறைக்குள் விசாலமாக அசைந்து கொள்வதற்காய் எத்தனை இரவுகள் விழித்துக் கிடந்திருக்கிறாள்?
 
கால் பதிகிற தடத்தில் கைகளால் வருடியபடி அவள் கொடுத்த அன்பினால் தானே உலகம் தழைத்திருக்கிறது. உடலே பெருஞ்சுமையான மனிதனுக்கு, உடலே வாதையான வாழ்க்கைக்கு, இன்னொரு உடலை உள்வைத்து ஊனும் உயிரும் கொடுத்து வளர்ப்பதன் வலி எல்லோரும் உணர்ந்து கொள்ளக் கூடியதில்லை தான்.
 
நினைத்தவற்றைத் தின்று உடல் கிடத்தி உருண்டு புரள முடியாத இரவுகளை அம்மாதானே கடந்து வருகிறாள்; அறிவும், அதிகாரமும் கிடைத்துத் தனியுடலாக நானே சகலமும் அறிந்த மானுடத் துண்டமென்று துடிக்கிற பொழுதுகளில் அம்மாவின் கருவேறிய இரவுகளில் கிடந்த மன அழுத்தமும், உயிர் வலியும் நமக்கு அத்தனை எளிதாகப் புரிய வாய்ப்பில்லை தான்.
 
நாங்கள், கலவையான நினைவுகளோடும், இனம் புரியாத மனப் பதற்றத்தோடும் அம்மாவின் கல்லறையை உடைப்பதைப் பார்த்தபடி நின்றிருந்தோம்; வெயிலில் அப்பாவின் நிழல் அதிர்வதை என்னால் உணர முடிந்தது; அம்மா என்கிற புவிப் பந்தின் அழியாத நினைவுகள் உடைசல்களில் இருந்து ஒரு புதைக்கப்பட்ட நதி பீறிட்டு மேலெழுவதைப் போலிருந்தது அங்கே நின்றிருந்த கணங்களில்.
 
அம்மா மண்ணோடு கலந்திருந்தாள்; உடல் மட்கிப் போய் நிலத்தோடு கலந்து விட்டிருந்தது; ஒரு சடங்காக அங்கிருந்த மண்ணைக் கலயங்களில் சுமந்து நாங்கள் பீச் மரத் தோட்டத்துக்கு அப்பால் வெகு தொலைவில் பிறிதொரு நிலத்தில் அவளை விதைத்தோம். இதயச் சுவர்களில் மீன்களின் செதிலைச் சுரண்டுகிற ஆணிகள் பொருந்திய கட்டையால் சுரண்டுவதைப் போலிருந்தது அந்தக் கோடை நாள்.
 
கசங்கிய உடல்களோடு வீட்டுக்கு வந்து குளித்துப் பசியாறியபோது அம்மாவின் நினைவுகள் வீடு முழுவதும் மிதந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது. நான் அம்மாவின் கடை மகன், இளஞ்சூடான அவளது உடலோடு நினைவு தெரிந்தவரை ஒட்டியே வளர்ந்தவன்.....
உலகம் பெருவெடிப்பில் தெறித்துச் சிதறி நெருப்புக் கோளமாய்த் திரண்டு குளிர்ந்து உயிர் பரப்பித் தழைத்ததென்ற உண்மை அறியாத வரையில் அம்மாவின் அணைப்பும், சொற்களுமே உலகமாய் வளர்ந்தவன் நான்.
 
நாங்கள் ஏழ்மையின் எல்லைக் கோடுகளைத் தொட்டுணர்ந்து வாழ்ந்தவர்கள். கோதுமை வயல்களில் அறுவடை முடிந்த நாளொன்றில் அம்மாவும் நானும் சிதறிக் கிடக்கிற தானியங்களைச் சேகரிப்பதற்காகப் போனோம். அம்மா தன் சேலைத் தலைப்பை விரித்து சேகரித்த தானியங்களைக் கட்டி வைத்திருந்தாள்....
 
என் சின்னஞ்சிறு விரல்களால் நானும் இயன்றதைச் சேகரித்து சேலை முடிச்சில் போட்டபடி இருந்தேன்; மஞ்சள் நிறத்தில் நிலம் கண்ணுக்கெட்டியவரை பரவிக் கிடந்தது; நிழலேதும் இல்லாத சதுர வயல்கள் எங்களை அரவணைத்திருந்தன; கத்தி மீசையும், கம்பும் எப்போதும் இருக்கிற காவல்காரனின் காலடிகள் நிழலோடு எங்களை நோக்கி ஓடி வருவதை அம்மா உணர்ந்த கணத்தில் நாங்கள் ஓடத் துவங்கினோம்....
தானியங்களையும், என்னையும் பிணைத்துக் கொண்டு அம்மா அப்படி வயல்களில் ஓடுவதை நான் முன்பு எப்போதும் பார்த்ததில்லை; பசியைத் துரத்துகிற இருத்தலுக்கான மானுடத்தின் ஓட்டமாக அது இருந்தது; அம்மாவால் நீண்ட நேரம் ஓட முடியவில்லை; வாழ்நாளெல்லாம் ஓடிக் களைத்த அவளது கால்கள் தளர்ந்து தடுமாறி நிலத்தில் சரிந்து விட்டன.....
 
அம்மா, அப்போதும் எனது கைகளை விட்டு விடவில்லை; நெருங்கி வந்த கத்தி மீசைக் காவல்காரன் அம்மாவைத் தன் கையில் இருந்த தடியால் அடித்தான்; அம்மா தவறுதலாக ஒரு அடியும் என் மீது படாமலிருக்க முயற்சி செய்து கொண்டே இருந்தாள்.....
கனவான்களின் வயல்களில் எலிகளும், பறவைகளும் சிதறிக் கிடந்த கோதுமையைக் கவலையின்றித் தின்று பசியாறுகையில், அம்மா இப்படி நிலத்தில் நிலை குலைந்து கிடந்தாள்....
 
அம்மாவின் இடது பக்க உதட்டில் குருதி பெருகிக் கொண்டிருந்தது; வாழ்க்கையின் மிகத் துயரமான நாளின் சாட்சியாகவும், சிறிதும் கருணையற்ற வாழ்க்கையின் எச்சமாகவும் கூனிக் குறுகி அம்மாவின் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன்.
ஆனால், அந்த நாள்தான் வாழ்நாள் முழுவதும் அம்மாவின் கருணையை நினைவு கூர்கிற வாய்ப்பை எனக்கு வழங்கியது; அந்த நாள்தான், துயரத்தின் கோரப்பிடி தன்னைச் சூழ்ந்திருக்கிற பொழுதிலும் அம்மா என் மீது காட்டுகிற நேசத்தைக் குறைத்துக் கொண்டு விடமாட்டாள் என்கிற நம்பிக்கையின் ஒளியை என் மீது பாய்ச்சியது....
 
அந்த நாள் தான் மன்னிப்பின் வலிமையான சான்றாக, மன்னிப்பின் ஆற்றில் இருந்து இதயத்துக்குள் பாய்கிற குளிர் நீராக அம்மா இருக்கிறாள் என்று எனக்கு உணர்த்தியது.
 
ஆம், நிலத்தில் வீழ்ந்து மீண்டெழுந்து நாங்கள் வீடு திரும்பிய நாட்களின் சாயலற்ற இன்னொரு நாளில், வலிமையான கரங்களோடும் பழி தீர்க்கும் உக்கிரத்தோடும் நான் வளர்ந்திருந்த இன்னொரு நாளில் சந்தைக்கு அருகே நான் அந்தக் கத்தி மீசைக் காவலனைப் பார்த்தேன்.....
அப்போது அம்மாவும் என் அருகிலிருந்தாள்; மூப்பும், பிணியும் கொண்ட வெளிர் நிற முடிகளோடு நடுங்கும் கால்களோடு அவன் எங்கள் எதிரில் வந்து கொண்டிருந்தான்; துயரத்தின் வடுக்கள் சினமாகப் பெருக நான் கைகளை உயர்த்தி அவனை அடிக்கப் பாய்ந்த கணத்தில் கருணையால் செய்யப்பட்டிருந்த அம்மாவின் கரங்கள் என்னைத் தடுத்திருந்தன.
 
அம்மா, அதே மெலிதான குரலில் என்னிடம் சொன்னாள், "அன்று என்னை அடித்த மனிதனும் இவனும் ஒன்றில்லை மகனே, காலம் மனிதனுக்குள் ஊடுருவி அவனைத் தினமொரு பாத்திரமாக மாற்றிக் குழைக்கிறது; அன்று கனவான்களின் காவலனாக இருந்தவன், இப்போது ஏதுமற்ற நடுங்கும் கால்கள் கொண்ட முதியவன்; அவனது கண்களில் வாழ்வின் துயரம் மண்டிக் கிடக்கிறது".
 
வாழ்வை முழுமையாக உணர்ந்த வானுயர் முனிவனின் இதய சுத்தியைப் போல அம்மாவின் அந்தச் சொற்கள் எனது உயிரில் இன்னும் ஒட்டிக் கிடக்கின்றன; மானுடத்தை நேசிக்கிற, உயிர் வாழ்வை மதிக்கிற மாபெரும் பாடங்களை எல்லாம் அம்மாக்கள் தான் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்; உலகின் மிகப் பெரிய மேதைகள் எல்லாம் கூட அவற்றில் இருந்துதான் மிகச் சொற்பமானவற்றை எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
 
வீட்டைச் சுற்றி மிதக்கிற அம்மாவின் கிளறப்பட்ட நினைவுகள், உலகை ஒரு பஞ்சுப் பொதி போல சுற்றி இருக்கிறது; குடிநீர் பிடிக்கிற போத்தலுக்குள் அம்மா வாழ்கிறாள்; வைக்கோல் போரின் உள்ளிருக்கும் கணகணப்பைப் போல அம்மாவின் நினைவுகள் நெஞ்சக்குழிகளில் நிரம்பி இருக்கிறது....
ஒற்றைப் போத்தல்தானிருந்தது அப்போது; கனவான் வீட்டுக் குழாயில் நீர் பிடிக்கப் போன வழியில் நாய்களை வேடிக்கை பார்த்தபடி போத்தலைக் கீழே விட, வீட்டின் ஏழ்மை குறித்த எந்த அக்கறையுமின்றி அது உடைந்து போனது, நான் சின்னஞ் சிறுவனல்லவா?
அச்சம் சூழ வைக்கோல் போருக்குள் ஒளிந்து நாளெல்லாம் கிடக்க, மாலையில் அம்மாவின் குரல் பக்கத்தில் வந்து விட்டது; அடியும், உதையும் பெற்றுக் கொள்வதென்று மெல்லத் தவழ்ந்து வெளியேறிய போது அம்மாவின் கரங்கள் தலையைக் கோதியபடி "எங்கே போனாய் என்று உயிர் பதறிப் போனேனே அன்பு மகனே" என்று சொன்னதால் தானே பெரும் கனமான இந்த வாழ்க்கையைக் காதலித்து நான் வளர்ந்து நிற்கிறேன்.
அம்மா என்பது வெறும் சொல்லா? உறவா? அம்மா என்பது அகலாது நின்று மானுடத்தின் தாகம் தணிக்கிற ஜீவ நதியா? தெரியாது; ஆனால், என்னைப் பொறுத்தவரை அம்மா என்பது அல்லலுறுகிற மானுட இதயத்தை ஆற்றுப்படுத்துகிற அருங்கொடை. உலகெங்கும் குற்றங்களின் சேற்றால் அடைக்கப்படுகிற நீதியின் பாதையை எந்தச் சலனமும் இல்லாமல் தூர் வாரிக்கொண்டே இருக்கிற மாபெரும் இயக்கம் தானே அம்மா.
அம்மாவும் நானும் தோட்டத்தில் விளைந்த முட்டைக்கோஸ்களைக் கூடையில் சுமந்து சந்தையில் விற்றுக் கொண்டிருந்த ஒரு நாளில், முட்டைக்கோஸின் விலை இரண்டு ரூபாயென்று முன்னரே சொல்லி இருந்தாள் அம்மா; விலை பற்றிக் கவலை கொள்ளாத ஒரு சீமாட்டியிடம் கூடுதலாய் ஒரு ரூபாய் வைத்து நான் விற்றது தெரிந்த அன்றைய மாலையில் அம்மா சொன்னாள்:
 
"உண்மையோடு இருப்பது தானே வாழ்வின் அடிப்படை,; ஒற்றை ரூபாய் கூடுதல் லாபத்தால் அம்மாவின் நம்பிக்கையைச் சிதைத்தாயே? அதற்கு விலை உண்டா?"
 
மானுடன் தன் சொந்த வாழ்க்கைக்கு உண்மையாக இருப்பது தானே உலகத்தின் அறமாகப் பெருகி வளர்கிறது; அம்மாதானே அந்த அறத்தை எனக்குள் கிளைத்த மானுடத்தின் வேர்களில் ஊற்றினாள்.
 
குள்ளமான, பார்க்க சகிக்காத, ஊளை மூக்கோடும், பசியோடும் இருந்த என்னை அரவம் போல் சுற்றிக் கிடந்த ஏழ்மையின் தடங்கள் அண்டி விடாதபடிக்கு மாபெரும் மானுட இயக்கத்தையும், மன்னிப்பின் வலிமையையும், நீதியின் வேர்களையும் நோக்கி என்னைத் திருப்பியது அம்மா என்கிற பேராற்றல் தானே?
 
ஊரெங்கும் கதை சொல்லிகளைப் புத்தி பேதலித்த உதவாக்கரைகள் என்று புழுதி வாரித் தூற்றிய நாட்களில், வீட்டு வேலைகளை விட்டு விட்டு இரவுகளில் பெருங்கதை சொல்லிகளின் கதை கேட்கப் போவேன்....
 
இரவுகளில் நான் கேட்ட கதைகளை அடுப்படியில் களைத்துக் கிடக்கிற அம்மாவுக்கு, எந்தக் கவர்ச்சியும் இல்லாத, என் கீச்சுக் குரலில் திரும்பச் சொல்கிறபோது அம்மா சிரித்தபடி கேட்டாள், "நீயும் அப்படித்தான் மாறுவாயோ, என் அன்பு மகனே?".
ஆனால், அவள் நம்பினாள். இந்தக் குள்ளமான உதவாக்கரை ஊளை மூக்கன், உலகைத் தன் கதைகளால் வெல்வானென்று. அவள் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாதவளாக, குழந்தைகளை அவர்களின் கனவுகளுக்கும் சேர்த்து உணவளிக்கிற மகத்தான இயக்கமாக வளர்த்து விட்டு பீச் மரத் தோட்ட நிழலிலோ, பிறகு அங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்டு விதைக்கிற இன்னொரு நிலத்திலோ ஓய்வு கொள்கிறாள்.
பின்பு நிலத்தில் இருந்து கிளைத்துப் பரவி வெளியாகி, வெளியிலிருந்து கதிரவனாய், குளிர் நிலவாய், பெருங்கடலாய், ஆர்ப்பரிக்கும் நதியாய், பள்ளத்தாக்கின் அமைதியாய், சிகரங்களில் தவழும் உயிர்க் காற்றாய், எல்லாமுமாய் உயிர்த்தெழுகிறாள். பிறகு மானுட நிலம் செழிக்க மனைவியாகவோ, மகளாகவோ மறுபடி மறுபடி உருமாறிக்கொண்டே நிலைக்கிறாள்.
 
அன்புக்குரியவர்களே, இந்த மாபெரும் சபையில் வந்து நிற்பதற்கான என் முதல் பயண நாளில் அம்மா தன்னுடைய கழுத்தில் நீண்ட காலம் அணிந்திருந்த ஒற்றைச் சங்கிலியை விற்று விட்டிருந்தாள். கிடைத்த பணத்தில், தான் இப்போது ஓய்வு கொண்டிருக்கிற நிலத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் நான்கு புத்தகங்களை எனக்களித்து என்னை வழி அனுப்பினாள்.....
வழியெங்கும் அம்மாவின் சொற்களையும், அன்பையும் விடாது பிடித்தபடி தான் நான் உலகின் தலைசிறந்த கதைசொல்லி என்று எனை நீங்கள் சொல்கிற இந்த மேடையை வந்தடைந்திருக்கிறேன். பீச் மரத் தோட்டங்களில் இருந்தும், பிறகு தோண்டப்பட்ட நிலத்தில் இருந்தும் அவளே எனது கதைகளாகவும் மாறி இருக்கிறாள்.
 
மூலம் - மோ-யென்
தமிழில் - கை.அறிவழகன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

அம்மா என்பது அல்லலுறுகிற மானுட இதயத்தை ஆற்றுப்படுத்துகிற அருங்கொடை. உலகெங்கும் குற்றங்களின் சேற்றால் அடைக்கப்படுகிற நீதியின் பாதையை எந்தச் சலனமும் இல்லாமல் தூர் வாரிக்கொண்டே இருக்கிற மாபெரும் இயக்கம் தானே அம்மா.

பிழம்பு, நல்லதொரு பதிவு👌

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
    • டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.   ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
    • ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த பகுதியில் குரங்கு கூட்டத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கரோலினா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் தப்பியோடிய குரங்குகளைக் கண்டால், உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1407752
    • பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.    கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,    கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும்  அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.   எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ  அவர்களுக்கு அமைச்சர் பதவிகள்  வழங்கப்பட்டன.  அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை.   உதாரணத்திற்கு உயர் கல்வி, பெருவீதிகள் அமைச்சு என்று ஒன்று இருந்தது. உயர் கல்விக்கும் பெரு வீதிக்கும் விஞ்ஞான ரீதியில் என்ன தொடர்பு எனக் கேட்டதற்கு  உயர் கல்வி மாணவர்கள் எப்போதும் பெருவீதிகளில் இருந்து ஆர்பாட்டம் செய்கிறார்கள், எவேபொருத்தமானது  எனக் கூறப்பட்டது. இவை நகைப்புக்கிடமான விடயங்கள்.  இப்படி யல்லாது எதிர்காலத்தில் கல்வியுடன் தொடர்புபட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்த அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.   அதாவது உயர் கல்வி, பாடசாலைக் கல்வி, பாலர் கல்வி, தொழில் நுற்பக் கல்வி,தொழிற் கல்வி,தொழில் நுட்பக்கல்லூரிகள், பல்லைக்கழகங்கள், பாசலைச்சவைகள்  போன்ற கல்வியுடன் தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒன்றாக இணைக்கப்பட  வேண்டும்.  மேலும் தற்போது பரீட்சையை மையமாகக் கொண் கல்வியே உள்ளது. 10 முதல் 12 வயது வரையானவர்கள் கூட புலமைப்பரிசில் என்று பரிட்சையை மையமாகக் கொண்டு போட்டிக்காகப் பயில் கின்றனர்.   இந்த வயதுப்பிரிவு போட்டிப் பரீட்சைக்குறிய வயதல்ல. எனவே நாட்டிற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் பிரஜைகள் உருவாகும் கல்வித்திட்டமே தேவை என்றார்.     https://www.virakesari.lk/article/198152
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.