Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெங்கிஸ் கான் வழிவந்த இளவரசி குத்லுன்: யாராலும் வீழ்த்த முடியாத வீர மங்கையின் வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெங்கிஸ் கான் வம்சாவளியைச் சேர்ந்த  புகழ்பெற்ற போராளியாக மாறிய இளவரசி குத்லுன் யார்?
படக்குறிப்பு,

இளவரசி குத்லுன் குறித்த 'குத்லுன்: தி வாரியர் பிரின்சஸ்' திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியானது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாலியா வெண்டுரா
  • பதவி, பிபிசி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

காய்டு‌ மன்னரின் மகள் ஐகியார்னே பற்றி அறிந்திருப்பீர்கள். தாதர மொழியில் அதற்கு "பிரகாசமான நிலவு" என்று பொருள். இந்த இளவரசி மிகவும் அழகாகவும், பலசாலியாகவும், தைரியமாகவும் இருந்தார். அவருடைய தந்தையின் ஆட்சியில் அவரை விஞ்சும் பலம் பொருந்திய ஆண்மகன் எவருமில்லை. வீரதீர செயல்களில் சிறந்து விளங்கினார்.

இப்படித்தான்‌ மார்கோ போலோ தனது "புத்தக ஆஃப் வொண்டர்ஸ்" என்ற நூலில் உலகின் மிக சக்தி வாய்ந்த வம்சங்கள் ஒன்றில் பிறந்த இளவரசியின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

குத்லுன் என்று அழைக்கப்பட்ட அவர், புகழ்பெற்ற வெனிஸ் பயணி மார்கோ போலோ பயன்படுத்திய ஐகியார்னே உட்பட வேறு சில பெயர்களாலும் அறியப்பட்டார். மங்கோலிய பேரரசு ஹங்கேரியின் எல்லைகளில் இருந்து கிழக்கு சீனக் கடல் வரை நீட்டித்து, கெங்கிஸ் கானின் வழித் தோன்றல்களால் ஆளப்பட்ட 13ஆம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்தார்.

அவர் கெங்கிஸ் கானின் எள்ளுப்பேத்தியும், கெங்கிஸ் கானே தனிப்பட்ட முறையில் தனது வாரிசாக நியமித்த ஒகோடையின் கொள்ளுப்பேத்தியும் ஆவார். எனவே அவரது தந்தை மிகவும் சக்தி வாய்ந்த மங்கோலிய கான்களில் (உயர் ஆட்சியாளர்) ஒருவராக இருந்தார்.

 

ஆனால் அவரது மூதாதையரைவிட, அவரது தனித்துவமான ஆளுமைதான் மார்கோ போலோவை கவர்ந்தது. அவர் போர்க்களத்தில் பிறரைப் போலவே தனித்து நின்றது மட்டுமல்லாமல், "தன்னை தோற்கடிக்கக்கூடிய ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிக்கும் வரை" திருமணம் செய்ய மறுத்தார்.

அது எளிதான காரியம் அல்ல. ஏனென்றால், அனைத்து மங்கோலியர்களையும் போலவே, ஆண்களும் பெண்களும் சிறந்த வில்லாளிகள் மற்றும் சிறந்த குதிரை வீரர்கள் மட்டுமல்ல. அவர் bökh இன் சிறந்த வீரராக இருந்தார். bökh என்பது மங்கோலிய மல்யுத்த வகை. இதில் முதலில் ஒரு வாளால் தரையில் தொடும் நபர் தோல்வியடைவார். கைகள் அல்லது கால்கள் தவிர உடலின் வேறு எந்தப் பகுதியும் தரையில் தொடக்கூடாது.

இதுவே எந்தவொரு காதலனுக்கும் விடப்பட்ட சவால்: "அவன் அவளை வென்றால், அவனை திருமணம் செய்து கொள்வாள்; அவன் தோற்றால், அவளுக்கு 100 குதிரைகளைக் கொடுக்க வேண்டும்."

இந்தச் செய்தி அனைத்து ராஜ்ஜியங்களிலும் பரவியது. பல இளைஞர்கள் இந்த சவாலை ஏற்றுக்கொண்டனர். ஆனால், தோல்வியடையாத இளவரசி குத்லுன் 10,000 குதிரைகளை வைத்திருந்தார். மார்கோ போலோ இதைப் பற்றி எழுதினார். அவர் ஓர் இளவரசரைச் சந்தித்தார், அவர் 100 குதிரைகளுக்குப் பதிலாக 1000 குதிரைகளைப் பந்தயம் கட்டினார். ஏனென்றால், அவர் வெல்ல விரும்பியது குத்லுனின் இதயத்தை.

காய்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஏனென்றால் அந்த இளவரசன் மிகவும் அழகாகவும் ஒரு பெரிய மன்னரின் மகனாகவும் இருந்தார். அவர் தனது மகளிடம் "அவரை வெல்லவிடு" என்று கெஞ்சினார்.

ஆனால், இளவரசி குத்லுன் உறுதியாக மறுத்துவிட்டார். அத்தகைய அழகான தம்பதி ஒன்று சொர வேண்டும் என்பதற்காக அவர் தோற்க வேண்டும் என விரும்பிய பார்வையாளர்களால் சூழப்பட்டிருந்த இளவரசி குத்லுன் சண்டைக்குத் தயாரானார்.

ஜெங்கிஸ் கான் வம்சாவளியைச் சேர்ந்த  புகழ்பெற்ற போராளியாக மாறிய இளவரசி குத்லுன் யார்?
படக்குறிப்பு,

குத்லுன் சண்டையிடும் காட்சிகள் மார்கோ போலோவின் 'தி புக் ஆஃப் வண்டர்ஸ்' புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

"பெண்ணும் இளைஞனும் சண்டைக்கு வந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மிகவும் அழகாகத் தொடங்கினர்; ஆனால் அதிக நேரம் ஆகவில்லை, அவர் தோல்வியடைந்தார்.”

"அப்போது உலகில் மிகப்பெரிய துக்கம் ஏற்பட்டது. ஏனென்றால், நான் அங்கு வந்ததில் இருந்து அல்லது கண்டதில் இருந்து மிகவும் அழகான ஆண்களில் ஒருவரை இழந்துவிட்டேன்.”

"அதோடு விரைவில் அந்தப் பெண்ணுக்கு அந்த 1,000 குதிரைகள் கிடைத்தன; அந்த இளைஞன் மிகவும் வெட்கத்துடன் தனது நாட்டிற்குச் சென்றான்."

சில நேரங்களில் இது ஒரு கதை போலத் தோன்றலாம், ஆனால் அது அப்படி இல்லை.

மார்கோ போலோ மிகவும் நம்பகமான ஆதாரமாகக் கருதப்படவில்லை என்றாலும், இது ஒரு கற்பனைப் படைப்பின் கதை அல்ல.

அவரது பிரபலமான புத்தகம் பலருக்கு முதலில் ஒரு கட்டுக்கதையாக இருந்தது. ஏனென்றால், வெனிஸ் வணிகரின் நினைவுக் குறிப்புகள் சில நேரங்களில் பொய்மையாக இருந்தாலும், மார்கோ போலோ ஒரு பொய்யர் அல்ல: அவரது எழுத்துகள் அவரது அனுபவத்தின் காதல் மிகுந்த பதிப்பு.

குத்லுனின் சுயவிவரம், புராணக்கதையுடன் தொடர்புடையதாக இருந்தாலும், வரலாற்று உரைகளால் ஆதரிக்கப்படுகிறது, குறிப்பாக 14ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசு குறித்து தனித்துவமான மூலத்தை எழுதிய ரஷீத்-அல்-தீன் ஹமதானியின் "ஜாமிய் அல்-தவாரிஜ்" நூலில் குத்லுனுக்கு இடம் உண்டு.

பொருந்தாத சில விவரங்களும் உள்ளன. ஏனென்றால், இவற்றுக்கான முதன்மை ஆதாரங்கள் இல்லை. மங்கோலியர்களைப் பற்றிய எல்லாவற்றிலும் இது பொதுவாக நடக்கும், காரணம் வெளிநாட்டவர்களே அவர்களைப் பற்றி எழுதினர், பெரும்பாலும் அவர்களின் எதிரிகள்.

கெங்கிஸ் கான் வம்சாவளியைச் சேர்ந்த  புகழ்பெற்ற போராளியாக மாறிய இளவரசி குத்லுன் யார்?
 

எனவே குத்லுனின் கதை பாதி புராணம் மற்றும் பாதி உண்மையாக இருக்கலாம். ஆனால், அவர் குறித்து அறியப்படும் விஷயங்கள் ஈர்க்கின்றன.

அவர் கைதுவின் ஒரே மகள் மற்றும் அவரது விருப்பமான மகள் என்பது நமக்கு தெரியும். அவருக்கு 14 மூத்த சகோதரர்கள் இருந்தாலும்கூட, அரசவையில் அரசியல் ஆலோசகராக, போர்க்களத்தில் உத்தி வகுப்பாளராக குத்லுனையே கொண்டிருந்தார்.

மன்னர் தனது உறவினரான குப்லாய் கான் (யுவான் வம்சத்தின் முதல் பேரரசர் மற்றும் சீனாவின் அனைத்துப் பகுதிகளையும் ஆண்டவர், இவரை மங்கோலிய மரபுகளை நிராகரித்து சீன மரபுகளை ஏற்ற அந்நியர் என்று கருதினார்) எதிராகப் போரிடும்போது பல போர்களுக்கு அவர் இளவரசி குத்லுனை அழைத்துச் சென்றார்.

"சில நேரங்களில், அவர் எதிரிப் படையை நோக்கிச் சென்று, ஒரு மனிதனைப் பிடித்து, தனது தந்தையிடம் கொண்டு செல்வார், ஒரு பருந்து ஒரு பறவையின் மேல் பாய்வது போலத் திறமையாக..." என மார்கோ போலோ கூறுகிறார்.

அவருடைய உடல் அமைப்பைப் பற்றிய குறிப்புகளையும் மார்கோ போலோ கொடுத்தார். அவர் நன்கு வனப்பாக இருந்தார், மிகவும் உயரமானவராக, வலு மிக்கவராக இருந்தார் என்று மார்கோ போலோ குறிப்பிடுகிறார்.

அவரது தந்தையின் எதிரிகள் அவர்களுக்கு இடையே உறவு இருப்பதாக வதந்திகளைப் பரப்பியதால், அவற்றை மறுப்பதற்காகவே, தான் தோற்கடிக்கப்படாமலே இறுதியில் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. எனினும், அவரது கணவர் யார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவே இல்லை.

ரஷீத், குத்லுன் கஜானை நேசித்தார் என்று கூறுகிறார், அவர் 1295இல் பாரசீக கான் ஆனார். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

குப்லாய் தனது தந்தையைக் கொல்ல அமர்த்திய அழகான கொலையாளிதான் அதிர்ஷ்டசாலி என்று சில குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன, அவர் கண்டுபிடிக்கப்பட்டாலும் தனது தீரத்தை நிரூபித்ததற்காக மன்னிக்கப்பட்டார். ஆனால் அது பாதுகாப்பானது அல்ல.

வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வது என்னவென்றால், காய்டு குத்லுனை தனது வாரிசாக்க விரும்பினார், ஆனால் அவரது சகோதரர்கள் மட்டுமல்ல, அந்த வகையான அதிகாரத்தில் அவருக்கும் ஆர்வம் இல்லை: அவரது ராஜ்ஜியம் போர்க்களத்தில் இருந்தது.

குத்லுன் 1306ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்படாத வீரராகவே உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் அறியப்படவில்லை, அது சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் நிகழ்ந்தது.

 

புச்சினியின் இசை நாடகமான "துராண்டோட்" நாடகத்தின் விதையாக நிபுணர்கள் குத்லுனின் கதையைச் சுட்டிக்காட்டுகின்றனர். அதில் கதாநாயகி ஒரு தொடர் புதிர்களைத் தீர்ப்பவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியளிக்கிறார்.

ஆனால், துராண்டோட் நாடகத்தில் இளவரசி அரண்மனையில் செயலற்ற முறையில் காத்திருக்கும் இளவரசியாக மாற்றப்பட்டாலும், மங்கோலியாவில் குத்லுன் ஆயுதம் ஏந்திய வீராங்கனையாக இருந்தார்.

குத்லுன் 21ஆம் நூற்றாண்டில் ஒரு மிக முக்கிய நபராக விளங்குகிறார். அவர் பல கதைகளில், காமிக்ஸ், வீடியோ கேம்கள் மற்றும் இலக்கியப் படைப்புகளில் கதாநாயகியாக வலம் வருகிறார். அவற்றில் ஒன்று 2017ஆம் ஆண்டு மங்கோலிய பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் செயற்பாட்டாளரான ஷுடெர்செட்செக் பாடசுரென் (Shuudertsetseg Baatarsuren) எழுதிய 'இளவரசி குத்லுன் (Princess Khutulun)' என்ற வரலாற்று நாவல்.

இந்த வரலாற்று நாவல் ஓராண்டு முழுக்க மங்கோலியாவின் அதிகம் விற்பனையான புத்தங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. மேலும் 2021ஆம் ஆண்டு 'குத்லுன், தி வாரியர் பிரின்சஸ்' என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cv205zjp75zo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.