Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
நீரிழிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 14 நவம்பர் 2023, 03:35 GMT
    புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்

முன்பு எல்லாம் சர்க்கரை நோய் இருக்கிறதா என்று கேட்டால் ஆம், இல்லை என்று இரண்டு பதில்கள் தான், ஆனால் இப்போது “இருக்கு, ஆனா இல்லை” என்று கூறும்படியாக ப்ரீ டயபடிக் என்ற நிலை உள்ளது.

ப்ரீ டயபடிக் எனப்படுவது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும். அதாவது சர்க்கரை நோய் இல்லாத நிலைக்கும், சர்க்கரை நோய் ஏற்பட்ட நிலைக்கும் இடையில் உள்ள நிலையாகும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பொதுவாக இரண்டு விதமாக பரிசோதித்து தெரிந்துக் கொள்ளலாம். வெறும் வயிற்றில் காலை எழுந்த உடன் ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது என பரிசோதிக்கலாம். மற்றொன்று, ரத்தத்தில் சர்க்கரை எவ்வாறு கரைகிறது என்பதை கண்டறியும் OGTT (Oral Glucose Tolerant Test)எனப்படும் பரிசோதனை ஆகும்.

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

சர்க்கரைக்கு முந்தைய நிலை எது

வெறும் வயிற்றில் பரிசோதனை செய்யும் போது, 100க்கும் குறைவாக இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக உள்ளது என்று அர்த்தம், 126க்கும் மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது என்று அர்த்தம். இதுவே 101 முதல் 125 என்ற அளவில் இருந்தால், அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும்.

அதே போன்று OGTT பரிசோதனை செய்யும் போது, 140க்கு கீழ் இருந்தால் சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே 200க்கு மேல் இருந்தால், சர்க்கரை நோய் என்று அர்த்தம். ஆனால், 141 முதல் 199 வரை சர்க்கரை அளவுகள் இருந்தால் அது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ஆகும்.

“வெறும் வயிற்றில் எடுத்த பரிசோதனையில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், கல்லீரல் சீராக செயல்படவில்லை என்று அர்த்தம். இரண்டாவது பரிசோதனையில் சர்க்கரை அதிகமாக இருந்தால், தசைகளில் சர்க்கரை சேர்கிறது என அர்த்தம். இந்த இரண்டு பரிசோதனைகளிலுமே சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை கண்டறிப்பட்டால், அது விரைவிலேயே சர்க்கரை நோயாக மாறும்” என்கிறார் மோகன் நீரிழிவு மையத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன்.

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை- எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

சர்க்கரைக்கு முந்தைய நிலையினால் ஏற்படும் சிக்கல்கள்

சர்க்கரை நோயினாலே ஆபத்து, சர்க்கரைக்கு முந்தைய நிலையினால் எந்த பாதிப்பும் இல்லை என கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தால் உடலில் அது பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் சர்க்கரைக்கு முந்தைய நிலையிலும் தீவிர பாதிப்புகள் ஏற்படும் என அவர்கள் விளக்குகின்றனர்.

“உங்கள் சர்க்கரை அளவுகள் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருந்தாலே, இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மாரடைப்புகள் ஏற்படலாம்” என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நீரிழிவு நோய் தலைவர் தர்மராஜன் கூறுகிறார்.

“சர்க்கரை நோய் இருந்தால், ரெடினோபதி (கண்கள் பாதிப்பு), நெஃப்ரோபதி (சிறுநீரக பாதிப்பு), நியுரோபதி (நரம்புகள் பாதிப்பு) ஆகியவை ஏற்படும். சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இந்த பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. கால்களில் ரத்தப் போக்கு நின்று செல்கள் இறந்து கால்களை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இவை எல்லாம், சர்க்கரை நோய் என்ற நிலைக்கு செல்வதற்கு முன்னாலேயே ஏற்படலாம்.” என்கிறார் மருத்துவர் மோகன்.

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை- எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

சர்க்கரை நோயாளியாக மாறுவதை தவிர்க்க முடியுமா?

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் விரைவிலேயே சர்க்கரை நோயாளிகாக மாறக் கூடும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 10.1 கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாக இருப்பது கண்டறியப்பட்டது. அதே ஆய்வு, 13.6 கோடி பேர் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டியது.

இதில் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் சர்க்கரை நோயாளிகளாகவும், சுமார் 80 லட்சம் பேர் சர்க்கரைக்கு முந்தைய நிலையிலும் உள்ளனர் என்று ஆய்வு தெரிவித்தது.

இந்த ஆய்வில் பங்கேற்ற மோகன் டயபடீஸ் மையத்தின் தலைவர் வி.மோகன் கூறுகையில், “சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலிருந்து சர்க்கரை நோயாளியாக இந்தியர்கள் மிக விரைவில் மாறிவிடுவார்கள். மேற்கு நாடுகளில் ஒருவர் எட்டு முதல் 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டால், இந்தியருக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் போதும். இந்தியர்கள் மாவுச் சத்து அதிகம் கொண்ட வெள்ளை அரிசி சாப்பிடுவது இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், சில மரபியல் காரணங்களும் இருக்கலாம்” என்கிறார்.

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை- எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ப்ரீ டயபடிக்- அறிகுறிகள் இருக்காது

சர்க்கரைக்கு முந்தைய நிலையில் இருப்பவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது என்பதால், இதை கண்டறிவதே சவால். “முழு உடல் பரிசோதனை போன்ற சோதனைகளின் போது, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை இருப்பது தெரியவரலாம். அறிகுறிகள் இல்லை என்றால், எந்த சிகிச்சையும் தேவை இல்லை என்று சிலர் அபத்தமாக பேசி வருகின்றனர். எவ்வளவு விரைவில் சர்க்கரைக்கு முந்தைய நிலை கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு விரைவில் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்” என்கிறார் மருத்துவர் மோகன்.

இளைஞர்களிடம் ப்ரீ டயபடிக் நிலை

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை- எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

சர்க்கரை நோயே இப்போதெல்லாம் இளவயதினரில் ஏற்படும் நிலையில், சர்க்கரைக்கு முந்தைய நிலையில் பெரும்பாலும் இளைஞர்களே உள்ளனர் என்றால் ஆச்சர்யம் ஏதும் இல்லை. “20 ஆண்டுகளுக்கு முன்பு, சர்க்கரை நோய் வயதானவர்களிலேயே அதிகம் காணப்பட்டது. ஆனால் இன்று 20 வயது இளைஞர்கள் சில சமயம், அதற்கும் இளையவர்களிடமும் சர்க்கரை நோய் காணப்படுகிறது. இதற்கும் முந்தைய நிலை ப்ரீ டயபடிக், எனவே இது பொதுவாக இளைஞர்களிடமே காணப்படுகிறது” என்கிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நீரிழிவு பிரிவு தலைவர் தர்மராஜன்.

சமீப கால வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிக எளிய முறையில் மூன்றே கேள்விகளில், நாம் ஆபத்தான நிலையில் இருக்கிறோமா இல்லையா என கண்டறிய முடியும். “உங்கள் பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? நீங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்வதுண்டா? உங்களுக்கு என்ன வயது?- இதில் முதல் கேள்விக்கு ஆம் என்றும் இரண்டாவது கேள்விக்கு இல்லை என்றும் கூறினீர்கள் என்றால், உடனே ஒரு இன்ச் டேப் எடுத்து வயிற்றை சுற்றி அளந்து பாருங்கள், ஆண்களுக்கு 90செ.மீக்கு மேல், பெண்களுக்கு 80 செ.மீக்கு மேல் இருந்தால் நீங்கள் சர்க்கரை நோயின் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். வயது அதிகரிக்க, இந்த ஆபத்துகளும் அதிகரிக்கும்” என்கிறார் மருத்துவர் மோகன்.

உணவுக் கட்டுப்பாடு

சர்க்கரைக்கு முந்தைய நிலை என்பது சர்க்கரை நோய் ஏற்படாமல் தற்காத்து கொள்வதற்கு கிடைத்திருக்கும் அவகாசமாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தர்மராஜன் கூறுகிறார்.

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள், முறையான உணவு, உடற்பயிற்சி மேற்கொண்டால் சர்க்கரை நோய் என்ற நிலைக்கு செல்லாமல் தவிர்ப்பது மட்டுமல்ல, சர்க்கரை அளவுகள் சாதாரண நிலைக்கு திரும்பவும் கூடும்.

“மாவுச்சத்தை குறைத்து புரதச்சத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். புரதம் அதிகமாக எடுத்துக் கொண்டால், அது வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும், அதே நேரம், உடல் எடையை கூடாது. பச்சை இலை காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் மோகன்.

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை- எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

நாட்டு சர்க்கரை மாற்று அல்ல

வெள்ளை சர்க்கரை, உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என தெரிந்தவர்கள், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டு சாப்பிட்டால் ஆபத்து இல்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறான கருத்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“ வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரையில் சர்க்கரை அளவு சற்று குறைவாக இருக்கலாம். ஆனால், அதனால் சர்க்கரை அதிகரிக்காது என்பது தவறான கருத்து “என்கிறார் மருத்துவர் தர்மராஜன்.

உடல் பருமன்

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை- எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

உடல் பருமன் குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதுவும் வயிற்று பகுதியில் பருமன் அதிகமாக இருந்தால், அது முழுவதும் கொழுப்பு சத்து என்றும் அது மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின் படி, இந்தியாவில் 35.1 கோடி பேருக்கு வயிற்று பருமன் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 2.6 கோடி பேருக்கு வயிற்று பருமன் உள்ளது.

“பெண்கள் வீட்டு வேலை செய்வதால், உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வீட்டில் செய்யும் வேலைகள் கலோரியை குறைக்க உதவுவதில்லை. எனவே உடல் பருமனை தவிர்க்கும் நோக்கில் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்” என்று மருத்துவர் தர்மராஜன் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/crgpdrxwgq4o

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/11/2023 at 06:36, ஏராளன் said:

சர்க்கரை நோயே இப்போதெல்லாம் இளவயதினரில் ஏற்படும் நிலையில், சர்க்கரைக்கு முந்தைய நிலையில் பெரும்பாலும் இளைஞர்களே உள்ளனர் என்றால் ஆச்சர்யம் ஏதும் இல்லை. “20 ஆண்டுகளுக்கு முன்பு, சர்க்கரை நோய் வயதானவர்களிலேயே அதிகம் காணப்பட்டது.

இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் நலமோடு இருப்பவர்கள் கூட கண்ணை மூடிக்கொண்டு இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்தால்  உடல் பயிற்ச்சியும் இலலாமல் ப்ரீ டயபடிக் என்ற சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலைக்கு வந்துவிடும் அபாயம் உள்ளதாம்.

  • Like 1
  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவங்களுக்கு மட்டும் தான் சர்க்கரை நோய் வராது! - Dr Sivaraman

https://web.facebook.com/Vikatantv/videos/984767169730995/?mibextid=VI5BsZ&rdid=UGHevbLN68cPdOfT

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"வாழ்வின் விளிம்பில் ஞானம் பிறக்குது!"
[நீரழிவு நோயும் நானும்]


"நாற்பது வயது தொப்பை விழுகுது 
கருத்த முடி நரை விழுகுது 
ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது 
குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது
சோர்வான உடல் எதோ கேட்குது 
ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!"

"ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது   
அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது   
வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது   
மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது  
தலைமுதல் கால் விரல்கள் வரை
படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!"

"கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது  
பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்]
பகலும் இரவும் சாப்பிட வைக்குது  
விரலை குத்தி சீனி பார்க்குது  
நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது 
கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!"

"சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது
கோலம் மாறும் காலம் அதுவென 
அறுபத்தி ஐந்து ஓய்வை சொல்லுது 
பேரப் பிள்ளை தோளில் ஏறுது
எழுபது  தாண்டி எண்பது வரவோ  
ஞானம் பிறந்து சவக்குழி தேடுது!"
  
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 01


“டயாபடீஸ்” என்பதற்கு தமிழில், சித்த மருத்துவத்தில், ஆயுர்வேதத்தில் பல பெயர்கள் காணப்படுகின்றன, தமிழில் இதை நீரிழிவு [நீீர்+அழிவு (diabetes)] என அழைத்தாலும் சித்த மருத்துவத்தில் சலக்கழிச்சல் [பரராஜசேகரத்திலும்] என்றும், ஆயுர்வேதத்தில் மதுமேகம் [வாதஜபிரமேகத்திலும்] என்றும் அழைக்கப் படுவதுடன், சித்த மருத்துவத்தின் ஆரம்பகாலத்திலேயே இதைப் பற்றி பாடல்களாக கூறப்பட்டுள்ளன. இந்த பாடல்களில் இது மேலும் மேகநீர், இனிப்பு நீர், நீரினைப் பெருக்கல் நோய்கள், சலரோகம், மிகுநீர், வெகுமூத்திரம், பிரமேகம், தித்திப்புநீர், நீர்ப்பாடு என கூறப்படுள்ளதும் குறிப்பிடத் தக்கது. 

தேரையர் சித்தரின் ஒரு பாடலில் 

"நீரிழிவின் குணத்தை நீயறிய விரித்து சொல்வோம், நீரினை பெருக்கல் ஒன்று, நீரினை மறுக்கள் ஒன்று, நீரிழிவுடனே கொல்லும் நீர்ச் சொட்டு வினைகள் ஒன்று" 

என கூறி இருப்பதை கவனிக்க. உதாரணமாக, சித்த மருத்துவத்தில் நோயின் பத்து அவதிகளாக அல்லது வேதனைகளாக, மெலிய வைப்பதில் இருந்து முதுகில் ஏற்படும் ‘நச்சுப்பரு’ (carbuncle / கார்பங்கிள்) கட்டிகள்வரை அடையாளமும் காட்டியுள்ளனர். கடைசியாக குணப்படுத்தப்படாத மேகநோயின் முடிவில், மெல்ல உடலை இளைத்துக் கொல்லும் என்றும் அது கூறுகிறது. ஏன் இந்த நோய் வருகிறது என்பதற்கு பல பாடல்களை அங்கு காண முடிகிறது. உதாரணமாக,  


"கோதையர் கலவி போதை: 
கொழுத்த மீனிறைச்சி போதை, 
பாதுவாய் நெய்யும் பாலும் 
பரிவுடன் உண் பீராகில் ... "


அதாவது, பெண்போகம், பெரிய மீன், இறைச்சி, மற்றும் நெய், பால் அதிகம் உண்ணுதல் போன்றவை எனக் காரணங்களைப் பட்டியலிட்டிருக்கிறது.


"மாதர் மயக்க மிகுதியினான்
மதியி லச்ச மிகுதலினால்    
போதை தருங்கள் ளருந்துதலாற்    
புலான் மீனிறைச்சி நெய்ப்பாலால் 
சீத வுணவாற் பதனழிந்த  தீனை 
விரும்பித் தின்பதால் ... "


என்று இன்னும் ஒரு பாடல் கலவி, பயம், கள் அருந்துதல், புலால், மீன், நெய். இறைச்சி, பால், சீத உணவு [எல்லா பொருட்களும் உஷ்ணம் (சூடு) அல்லது சீதம் (குளிர்ச்சி) என்ற இரண்டில் ஏதாவது ஒரு வீரியம் உடையதாக இருக்கும்], பதனழிந்த [அழுகிய] உணவு உண்ணல், உறக்கமின்மை, போகம் [புலன்களால் அடையும் இன்பம்: Enjoyment of eight kinds. See அஷ்டபோகம்], தேக வருத்தம், வெயிலில் மிகு நடை, போன்றவற்றால் மேகநோய் வருமென கூறுகிறது. 


"மேகமெனு நீரிழிவு வரும் விதத்தை 
விளம்புகிறேன் முன்செய்த கன்மந்தன்னாற்
றாகமுடன் மதுரபதார்த்தங்கள் நன்றாய்த் 
தான் புசிக்கையாலு சித்தனத்தின் மங்கை 
போக மதிகையாலு முட்டணந்தான் 
போதமிஞ்சுகையினாலுந்தயிர் , மோர் , நெய் , பால் , 
வேகமாய்ப் புசிக்கையாலுங் கொழுத்திறைச்சி 
யென்று முண்கையாலுவர் நீருண்கையாலே"


என்று இந்த பாடலும் நீரிழிவு உண்டாகும் காரணத்தை விளக்குகிறது. அதாவது, முன் செய்த கன்மம் அதாவது, முன்வினைப்பயன் இதனைப் பரம்பரையென்றும் நாம் கருதலாம், அதிக தாகத்துடன் இனிப்பான பானங்கள் அருந்துதல். இனிப்பான பதார்த்தங்கள் புசித்தல். போகம் மிதமிஞ்சுதல், தயிர், மோர், நெய், பால் என்பவற்றை வேகமாய்ப் புசித்தல். இறைச்சி உண்பதாலும், உவர்நீர் உண்ணல், வழுதிலங்காய் (கத்தரிக்காய் / 'அரிசி சமைச்சிருக்கு ஆட்டிறைச்சி ஆக்கிருக்கு வடிவாய்ப் பொரிச்சிருக்கு வழுதிலங்காய் சுண்டிருக்கு' - மட்டக்களப்பு நாட்டுப்பாடல்) அதிகமாய்ப் புசித்தல். காலந்தவறி உணவு உண்ணல். நடை அலைச்சல், போதைப் பொருள் உண்ணல், அதிகமாய்க் கண்விழித்தல், இருகையால் நீருண்ணல், அதிகமான சூடு உடலில் ஏற்பட்டாலும்  நீரிழிவு வந்து தொல்லை தரும் என்கிறது.


மேலே கூறிய சித்த மருத்துவ காரணங்கள் எல்லாம் சரியென இன்று நாம் ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும், பல காரணங்கள் ஒத்துப்போகக் கூடியவையாகவும் இருக்கின்றன. உண்மையில் நீரிழிவு என்பது  கணையம் (பாங்க் ரியாஸ் / Pancreas : சதையி அல்லது சதையம் என்பது மாந்தரின் உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்குச் சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு ஆகும். தென்னிலங்கையில் இது பல்குத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இது காரட், முள்ளங்கி போல் உருவத்துடன், சுமார் 20-25 செ. மீ நீளம் உடைய ஓர் உறுப்பு ஆகும்) என்ற உறுப்பு அதன் சுரப்பு நீரான இன்சுலினைச் சுரக்காதலால்,  இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதால்,  அளவுக்கதிகமான குளுக்கோஸ் சிறுநீரில் கலந்து வெளியாகிறது. இதுவே “ டயாபடீஸ்” என்னும் நீரிழிவு நோயாகும் என இன்று கூறப்படுகிறது.  இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரித்தால் உடலின் உள்ளுறுப் புக்களான இருதயம் இரத்தக்குழாய்கள், நரம்பு,  சிறுநீரகங்கள், கல்லீரல் போன்ற உறுப்புக்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும். கடைசியில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியது ஆகும். 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

 

பகுதி: 02 தொடரும்

Edited by kandiah Thillaivinayagalingam
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

"அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 02


தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு பெரிதாகப் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் சமஸ்கிருத மொழி பேசும், கி.மு 800 ஆம் ஆண்டில் வாரணாசி நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படும் சுசுருதர் (Sushruta), வரலாற்று சாட்சியங்கள் கூடிய, இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவர்களில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர் என அறியப்படுகிறது. இவர் நீரிழிவு (நீீர்+அழிவு) நோயைப் பற்றியும் அறிந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே நீரிழிவு ஒன்றும் புதிததல்ல. நேற்றுப் பிறந்த நோயும் அல்ல. மூவாயிரம் ஆண்டுகளாகவே இது இருந்துதான் வந்து இருக்கிறது என்பது கிரேக்கத்திலும் இந்தியாவிலும் கிடைத்த வரலாற்று குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.


உதாரணமாக, எகிப்திலேயுள்ள பழைய சுவடுகளில் இந்நோயைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அச்சுவடியில் நீரிழிவு நோய் பற்றியும் அதற்கான மருந்துகளும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. அந்த சுவடு ஒன்றில், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய எகிப்தியர்கள் [ancient Egyptians] ஒரு நோயை பற்றி குறிப்பிடும் பொழுது அது அடிக்கடி அல்லது மேலதிகமாக சிறுநீர் கழித்தல், தாகம் [நீர்வேட்கை] மற்றும் எடை இழப்பு / உடல் இளைத்தல் [excessive urination, thirst, and weight loss] கொண்ட, ஈற்றில் கொல்லும் விநோதமான நோய் என பதியப் பட்டுள்ளது [உதாரணமாக, கி.மு. 1552-லேயே ஹெஸி-ரா [Hesy-Ra, an Egyptian physician] எனும் எகிப்திய மருத்துவர், நீரிழிவைப் பற்றிப் பேசியிருக்கிறார்]. எனவே இது அதிகமாக முதலாம் வகை நீரிழிவு [type 1 diabetes] ஆக இருக்கலாம் என நாம் இன்று ஊகிக்கலாம். இதற்கு முழு தானியங்களின் உணவு [diet of whole grains] நல்ல தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. இது இலங்கையில் சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது.


பண்டைய இந்தியாவில் கிடைத்த குறிப்புகளின் படி, ஒருவருக்கு நீரிழிவு இருக்கா இல்லையா என்பதை அறிய, ஒரு விசித்திரமான முறை ஒன்றை கையாண்டார்கள். சிறுநீர் கழித்த இடத்தில், சிறுநீரை ருசி பார்க்க எறும்பு மொய்த்தால், கட்டாயம் அந்த சிறுநீரில் இனிப்பு கலந்து இருக்கவேண்டும் என முடிவு எடுத்தனர். இந்த இனிப்பு அதிகமாக காணப்படும் நிலையை [high sugar levels] அவர்கள் மதுமேக [madhumeha / honey urine] அல்லது தேன் சிறுநீர் என அழைத்தனர்.  என்றாலும் கிரேக்கத்தில் கி.பி. 150 ஆண்டளவில், இப்போக்கிரட்டீசு அல்லது ஹிப்போகிரட்டீஸ் [Hippocrates] என்பவரின் மாணவரான "அரிடாயஸ்” அல்லது அரேஷியஸ் [Aretaeus] என்பவரே இந்நோய்க்கு “டயாபடீஸ்” எனப்பெயரிட்டார்.  இவர் இதை  ‘தசையும் ஊனும் சிறுநீர் வழிக் கரைந்து வெளியேறும் நோய்’ ["the melting down of flesh and limbs into urine."] என்று அன்று விளக்கமும் கொடுத்தார். பின்னாளில் அந்த அர்த்தத்தில்தான் Diabetes (Flowing through) என்ற பெயர் இந்த நோய்க்கு ஏற்பட்டது. என்றாலும் கிமு 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அபோலோனிஸ் மெம்பிஸ் [Apollonius of Memphis] தான் முதன் முதலில்  “டயாபடீஸ்” [diabetes] என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார் என அறியமுடிகிறது. 


எறும்பு மொய்க்கும் சிறுநீரை அடையாளமாக இந்த நோய்க்குக் கண்டறிந்த அந்தக் கால மருத்துவர்கள், நோயின் நிலைமையை அறிய சிறுநீரை சுவைத்துப் பார்த்துச் சொல்வதற் கென்றே, சிலரைப் பணியில் அமர்த்தி இருந்தனராம். அவர்களுக்கு நீர் சுவைப்பவர்கள் [‘வாட்டர் டேஸ்டர்ஸ்’ / "water tasters"] என்று பெயருண்டு. அதாவது சர்க்கரை நோயாளியின் சிறுநீரைக் கையால் தொட்டு, பிசுபிசுக்கிறதா எனப் பார்த்து, அப்புறம் நாவில் சுவைத்துப் பார்த்து, நோயைக் கணித்துச் அன்று சொல்லியிருக்கின்றனர். காலப்போக்கில், கிரேக்க மருத்துவர்கள் [Greek physicians] டயாபடீஸ் மெல்லிடஸ் [நீரிழிவு நோய்] மற்றும் டயாபடீஸ்  இன்சிபிடஸ் [diabetes mellitus and diabetes insipidus] ஆகியவற்றின் வித்தியாசத்தை கண்டறிந்தனர். இங்கு மெல்லிடஸ்  என்றால் மது (தேன்) என்று பெயர். இங்கு டயாபடீஸ்  இன்சிபிடஸ் என்பது கூடுதல் சிறுநீர்க் கழிப்பு நோய் அல்லது வெல்லமில்லாத நீரிழிவு அல்லது நீர்நீரிழிவு; கழிநீரிழிவு என்று கூறலாம். டயாபடீஸ் இன்சிபிடஸ் நோய் வாசோபிரசின் அல்லது வாசோபிரெசின் என்ற ஒரு ஹார்மோன் குறைபாட்டால் வருகிறது. இதை பிட்யூட்டரி சுரப்பி சுரக்கிறது [Diabetes insipidus results from a problem with a hormone called vasopressin that the pituitary gland produces]. இந்த வாசோபிரெசின் (Vasopressin) இயக்குநீர், ஆண்டிடையூரிடிக் இயக்குநீர் என்றும் அழைக்கப்படுகிறது [also called antidiuretic hormone (ADH), arginine vasopressin (AVP) or argipressin]. இந்நோய் கண்டவர்கள், அதிக அளவில் சிறுநீர் வெளியேற்றுவார்கள் (பாலியூரியா / polyuria). இதனைத் தொடர்ந்து அதிக அளவில் தாகம் கொண்டு பெருமளவு தண்ணீர் அருந்துவார்கள் (பாலிடிப்ஸியா / polydipsia). இது நீரிழிவு நோயுடன் தொடர்பு இல்லாவிட்டாலும், நீரிழிவு நோயின் சில அறிகுறிகளை [signs and symptoms] அப்படியே கொண்டுள்ளன. 


கலென் (Galen) என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட ஏலியசு கலெனசு அல்லது குளோடியசு கலெனசு என்பவர் ரோமன் குடியுரிமை கொண்ட ஒரு பண்டைய கிரேக்க மருத்துவர் ஆவார். இவரும் டயாபடீஸ் பற்றி குறிப்பிட்டு இருந்தாலும், தான் ஆக இரண்டு பேரையே அந்த நோயுடன் பார்த்ததாக ஆச்சிரியப் படுகிறார்! இவர் கி மு 129 இல் இருந்து கி மு 216 வரை வாழ்ந்தவராவார். இது எமக்கு எடுத்துக்காட்டுவது இந்த நோய் அந்த நாட்களில் ஒப்பீட்டளவில் அரிதானது என்பதே ஆகும். கி பி ஐந்தாம் நூற்றாண்டளவில், இந்திய மற்றும் சீனா மருத்துவர்கள் முதலாம் வகை நீரிழிவு (Diabetes mellitus type 1) மற்றும்  இன்சுலின் சாராத நீரிழிவு (அல்லது) முதுமை தொடக்க நீரிழிவு என்று முன்பு அழைக்கப்பட்ட இரண்டாவது வகை நீரிழிவுக்கு (Diabetes mellitus type 2) இடையில் உள்ள வேறுபாட்டை கண்டறிந்தார்கள். அது மட்டும் அல்ல, இரண்டாவது வகை நீரிழிவு பருமனான, பணக்கார மக்களிடம் பொதுவாக காணப்படுவதாகவும் [more common in heavy, wealthy people], இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சாதாரண மக்களை விட கூடுதலாக சாப்பிடுவதுடன் குறைந்த அளவு வேலை செய்வதுமே என்றும் பதிந்து உள்ளார்கள். இன்றும் உடல் பருமன் [மிகவும் குண்டாக இருத்தல்], உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி இல்லாமை [obesity, diet, and a lack of exercise]  ஒரு குறைபாடாகவே இரண்டாவது வகை நீரிழிவு நோய்க்கு கருதப் படுகிறது. இன்று உணவுமுறையைச் சீரமைப்பதன் மூலமும், உடற்பயிற்சியினை அதிகரிப்பதன் மூலமும் இரண்டாம் வகை நீரிழிவினை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இவ்வித முயற்சிகளால் இரத்த குளுக்கோசு அளவுகளைப் போதுமான அளவுக் குறைக்க முடியாத பட்சத்தில் மெட்ஃபார்மின் [Metformin] , இன்சுலின் [Insulin] போன்ற மருந்துகள் தேவைப்படலாம். இங்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவே மெட்ஃபார்மின் மாத்திரை கொடுக்கப்படுகிறது. அனைத்து சர்க்கரை நோயாளிகளும் இந்த மாத்திரை எடுத்துக்கொண்டால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும். ஒரு நோயாளிக்கு, ஒருநாளைக்கு 250 மில்லிகிராம் முதல் 2 கிராம்வரை பரிந்துரைக்கப்படும். நோயாளியின் எடையை வைத்து மருந்தின் அளவு தீர்மானிக்கப்படும். நோயாளி உடல் தாங்கிக்கொள்ளும் வகையில் மாத்திரையின் அளவை மருத்துவர்கள் பிரித்துக் கொடுப்பார்கள்.


இன்சுலின் என்பது ஒரு புரதமாகும். இதில் 51 அமினோ அமிலங்கள் உள்ளன. இரத்தத்தில் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருக்க இன்சுலின் உதவுகிறது. சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க இயலாமை தான். சர்க்கரை நோயின் பொதுவான ஒரு அறிகுறி என்னவென்றால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது. இதற்கு முக்கிய காரணம் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோனான இன்சுலின் சரியான அளவு உடலில் சுரக்காதது தான். நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களின் ஆற்றலுக்கு சர்க்கரை தேவை. ஆனால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையால் உடலின் செல்களுக்கு தானாக செல்ல முடியாது. பொதுவாக நாம் உணவைச் சாப்பிட்ட பிறகு, நம் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும். உடனே கணையத்தில் உள்ள செல்கள் (பீட்டா செல்கள்) இன்சுலினை உருவாக்கி சுரக்கும். இந்த இன்சுலின் இரத்த ஓட்டத்தில் இருந்து சர்க்கரையை உறிஞ்ச சொல்லி செல்களுக்கு அறிவுறுத்தும். இப்படி தான் செல்கள் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டில் இருந்து சர்க்கரையை உறிஞ்சி ஆற்றலை பெறுகிறது. எனவே டயாபடீஸ் மேலும் ஒரு எல்லையை தாண்டும் பொழுது, இன்சுலினை நேரடியாக செலுத்தி வைத்தியம் செய்யலாம் என்பதை முதன் முதல் ஜனவரி 11,1922- இல்  மனிதர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டு பிடித்த  இன்சுலினை செலுத்தி மருத்துவம் செய்ய தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.  [Insulin is a hormone created by your pancreas that controls the amount of glucose in your bloodstream at any given moment.] 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

பகுதி: 03 தொடரும்

 
 
 
"அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 03
 

இலங்கையில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது. அதுமட்டும் அல்ல, இது ஒரு மாற்ற முடியாத நோயாகவே கருதும் நிலையும் ஏற்படுகிறது. இந்த நோயினால் ஏற்படும் வேதனைகளும் அல்லது துன்பங்களும் ஏராளம். யாழ்ப்பாணத்து மருத்துவ நூல்களான பரராசசேகரம் ஐந்தாம் பாகம், செகராசசேகர வைத்தியம், செகராசசேகர வைத்தியத்  திறவுகோல், அமிர்த சாகர பதார்த்த சூடாமணி என்பனவற்றில் ஆவாரை சேர்ந்த மருந்துகளை நீரிழிவு நோயிற்கு பரிந்துரைக்கிறது.  
 

ஆவாரை [Senna auriculata] அல்லது ஆவிரை என்பது ஒரு சங்க கால மலராகும். "பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பன்னூல் மாலைப் .. " என குறுந்தொகை 173 ஆவாரை பற்றி பாடுகிறது. அதாவது 'பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருக்கமாகக் கட்டிய, பல நூல்களாலான மாலைகளை அணிந்த .. ' என்கிறது.  மேலும் ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது ஒரு சித்த மருத்துவப் பழமொழியும் ஆகும். இவை  ஆவாரையின் சிறப்பை சொல்லாமல் சொல்லுகிறது. இது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. மேலும் இன்சுலின் குறைபாட்டால் ஏற்படும் நீரிழிவு நோயில் இன்சுலினைக் கூட்டும் தன்மை ஆவாரை இலைக்கு இருப்பதாகவும் [insulinogenic : of, relating to, or stimulating the production of insulin] இன்சுலினைச் சுரக்கும் சதையில் உள்ள அழிந்த அந்த குறிப்பிட்ட  உயிரணுவை அல்லது செல்லை [beta cells in the pancreas] புதுப்பிக்க வைக்கும் ஆற்றல் அல்லது தன்மை [regenerative action] ஆவரசம் பூவிற்கு இருப்பதாகவும் ஆய்வுகள் காட்டுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். 
 

முருகேச முதலியார் -  குணபாடம் என்ற நூலில் அல்லது அகத்திய முனியின் பதார்த்த குண சிந்தாமணி என்கிற நூலில் ஆவரைப் பிசின் குணம் பற்றி கூறுகையில் 
 

"பெருநீர் மறிக்கும் பிரமேகம் போக்கும் 
வருநீர்ச் சுருக்குதனை மாற்றுந் – தருநீர்வை
புனுமேணிக் கமலப் பொன்னே பீடகரெலாம்
பேணு மேகாரிப்பி சின்"
 

என்கிறது. அதாவது அழகு பொருந்திய கமலமின்ன னைய காரிகையே! ஆவரைச்செடியின் பிசினானது வெகு மூத்திரத்தையும் [அதி மூத்திரம் அல்லது நீரிழிவு அல்லது சிறுநீர்த் தொல்லை] பிரமேகரோகத்தையும் வாதகரிச்சுரத்தையும் போக்கும் என்கிறது.  இங்கு மேககாரி என்பது ஆவாரையின் இன்னும் ஒரு பெயராகும். 
 

பரராஜசேகரம்  என்பது யாழ்ப்பாண பரராசசேகரன் மன்னனால் 12 மருத்துவர்களின் உதவியுடன்  இயற்றப்பட்ட மருத்துவ நூலாகும். ஆனால் உண்மையில் பரராசசேகரன் என்பது, யாழ்ப்பாண இராசதானியை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் குடியைச் சேர்ந்த மன்னர்கள், தங்களுக்கு மாறிமாறி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்களுள் இரண்டில் ஒன்றாகும். இன்னொரு பெயர் செகராசசேகரன் என்பதாகும். இவர்கள் 1246 முதல் 1615 வரை குலசேகரன் மன்னன் தொடக்கம் எதிர்மன்னசிங்கம் மன்னன் வரை பத்து மன்னர்கள் ஆவார்கள். எனவே எப் பரராசசேகரன் காலத்தில் என்பதை நிச்சயமாக கூற இன்றுவரை ஆதாரமெதுவுமில்லை. எனவே, இது ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்து நூல் என்று மட்டுமே நாம் கருதலாம். இடையில் ஒரு தடவை  சப்புமால் குமாரயா அல்லது செண்பகப் பெருமாள், "ஆறாம் புவனேகபாகு" என்ற பெயரில் கோட்டை அரசை ஆண்ட ஒருவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்கிறது வரலாறு. இந்நூல் பெரும்பான்மை விருத்தப்பாவாலும், சிறுபான்மை ஆசிரியப்பா, கலிவெண்பா ஆகியவற்றாலும் செய்யப்ட்டுள்ளது. என்றாலும் சில பகுதிகள் இன்றுவரை கிடைக்கவில்லை. என்றாலும்  8000 செய்யுள் கொண்ட ஒரு வைத்திய நூலாக இன்று ஏழு பாகமாக அச்சிடப்பட்டுள்ளது. உண்மையில் அங்கு 12000 செய்யுள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தன்வந்திரி என்பார் வடமொழியிற் செய்த ஆயுள்வேத நூலைத் தழுவியே இது எழுதப் பட்டது என்பதனை இதன் கடவுள் வணக்கச் செய்யுள் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது. "தரணியோர் மிகப்புகழ்ந்ததன் வந்த்ரி செய்த தகவுடைய சீர்த்திபெறு மாயுள் வேதப் பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப் பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம்" என்ற செய்யுள் அதை உறுதிப் படுத்துகிறது. மேலும் இங்கு ஒரு செய்யுளில் தான் சலக்கழிச்சல் என நீரிழிவு நோயை கூறுகிறது. 
 

சித்த மருத்துவத்தில் [SIDDHA MEDICINE] இன்னும் ஒரு பாடலில் எருமை மோரும் சகலக்கழிச்சலுக்கு பரிந்துரைக்கிறது.
 

“தாகம் கிரகணி சலக்கழிச்சல் காமாலை
கம் குடையு மற்றுப்போ மோகமில்லா
தேவாமிரதமு மாஞ்சீர் மானிடர் தமக்கு
மோவா மருந்து எருமை மோர்.”
 

அதாவது எருமை மோரை மருந்தாக உண்டால் - தாகம், கிராணி [கிராணி என்பது ஓயாத மலக்கழிச்சல் அல்லது ஒருவகைக் கழிச்சல்நோய் ], சகலக்கழிச்சல் [எல்லாவிதமான அல்லது சகல வயிற்றுப்போக்கு], காமாலை [Jaundice], வ்யிற்றுக்குடைச்சல் [Abdominal diarrhea] தீரும் என்கிறது. என்றாலும் இவை எல்லாம் ஆய்விற்குரிய விடயங்கள் ஆகும். எது என்னவென்றாலும்  இந்நோய் பற்றி ஆங்கில வைத்தியம் ஒருவகையான அடிப்படைக் கருத்தினையும், எமது முன்னோர்களின் வைத்தியமான சித்தம் [சித்த மருத்துவம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள், இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள்], ஆயுள்வேதம் [Ayurveda, சமக்கிருதம்: आयुर्वेद என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்], யூனானி [கிரேக்க-அராபிய வைத்திய முறை] போன்ற வைத்திய முறைகள் வேறு ஒரு வகையான அடிப்படைக் கருத்தினையும், கொண்டுள்ளதை நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.
 

உதாரணமாக, இந்நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் அதனை அறவே இல்லாமல் செய்துவிட முடியாது. கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது அலபோதி வைத்தியம் [ஆங்கில வைத்தியம்]. ஆனால், சித்த ஆயுள் வேதமோ கவனமாக இருந்தால் அறவே இல்லாமல் செய்துவிடலாம் என்று கூறுகின்றது? மேலும் அறுசுவையுண்டியென்பது தற்செயலாக ஏற்பட்ட ஒன்றல்ல. இது திட்டமிடப்பட்ட ஒரு உணவு முறையே எனவும், ஒவ்வொரு சுவையும் எமது உடலிலேயுள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் தேவையான காரணியாகும் எனவும் இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின் ஒரு மோட்டார் வண்டி (கார்) சரியாக இயங்குவதற்கு பெட்றோல், இன்ஜின் ஒயில், பிரேக் ஒயில், கியர் ஒயில் போன்ற பல ஒயில்கள் தேவைப்படுவது போல எமது உடலின் உறுப்புக்கள் சரியாக இயங்குவதற்கு அறுசுவைகளும் தேவைப்படுகின்றன எனவும்,  “கணயம் என்ற எமது உள்ளுறுப்பு” “இன்சுலின்” என்ற நீரினைச் சுரந்து எமது உணவினைச் சக்தியாக மாற்றமடையச் செய்ய உதவுகின்றது. இந்தக் கணையம் (Pancreas)  இயங்க அறுசுவைகளுள் ஒன்றான கசப்புத் தேவை எனவும், இந்தக் கசப்பு பாகற்காய், திராய் [கசப்பான கீரை வகை] போன்றவற்றை உணவோடு சேர்த்துக் கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சித்த மருத்துவ குறிப்பு ஒன்று கூறுகிறது. 'கோபக்கார மாப்பிள்ளைக்கு பாகற்காய் பத்தியமாம்’ என்ற பழமொழியை கவனிக்க!
 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 

பகுதி: 04 தொடரும்
Edited by kandiah Thillaivinayagalingam
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 04
 
 
‘இந்த நோயை எப்படித் தீர்க்கலாம்? அல்லது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கலாம்’ என்ற சிந்தனை ஓட்டம், நெடுநாளாக உலகின் எல்லா மூலைகளிலும் இருந்திருக்கிறது. உதாரணமாக பண்டைய கிரேக்க மருத்துவர்கள் [The early Greek physicians recommended treating diabetes with exercise, if possible, on horseback. They believed that this activity would reduce the need for excessive urination] அதிகமாய்ப் போகும் சிறுநீரை அடக்குவது, நோயைக் கட்டுப்படுத்துமோ எனக் கருதி, நோயுற்றோரைக் குதிரையில் ஏற்றி ஓட வைத்துள்ளனர். அதாவது வேகமாக ஓடும் குதிரைச் சவாரியில் கலோரிகள் எரிக்கப்பட்டு, குளுக்கோஸ் வற்றிப்போனதில் தற்காலிக விடுதலை வரும் என்பது அவர்களின் ஒரு ஊகமாக இருந்திருக்கலாம். ரொம்ப நாளைக்கு இந்த ‘சவாரி சிகிச்சை’ அங்கு மருத்துவமாக இருந்திருக்கிறது.
 
 
அப்போலனைர் (Apollinaire Bouchardat / July 23, 1809 – April 7, 1886) எனும் பிரெஞ்சு மருத்துவர், பிரெஞ்சு போர்க் காலத்தில் குறைவான பஞ்ச உணவைச் சாப்பிட்டபோது பல நீரிழிவு நோயாளிகளுக்கு அதில் கட்டுப்பாடு ஏற்பட்டதைத் தற்செயலாகக் கண்டறிந்திருந்தார். உடனே தன் நோயாளிகளுக்கு, உணவைக் கட்டுப்படுத்தி மிகக் குறைந்த அளவு உணவை விநியோகித்து, நீரிழிவுக்கு வைத்தியம் செய்ய தொடங்கினார். [Bouchardat is often credited as the founder of diabetology, and was a major figure involving dietetic therapy for treatment of diabetes prior to the advent of insulin therapy] அவர் பட்டினி கிடப்பது. சிறுநீரில் குளுக்கோஸ் (சர்க்கரை) இருப்பதை குறிக்கும் கிளைகோசூரியாவை [glycosuria] குறைக்கலாம் என்றும். நீரிழிவுக்கு முக்கிய காரணம் கணையத்தில் [pancreas] அமைந்திருக்கிறது என்றும் கூறினார். அவர் தனது சிகிச்சையின் பொழுது உடற்பயிற்சி [exercise] முக்கியம் என்றும் தனது சிறுநீரை தானே அதில் உள்ள சர்க்கரையின் [glucose] அளவை பரிசோதிக்கும் முறையையும் உருவாக்கினார் [self-testing urine]. அது மட்டும் அல்ல குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையை [a low-carbohydrate diet] தனது நோயாளிகளுக்கு உருவாக்கினார்.
 
 
1916-ல் அமெரிக்க பாஸ்டன் [Boston] நகரத்திலிருந்த, உலகின் தலைசிறந்த நீரிழிவு மருத்துவர் எலியட் ஜோஸ்லின், [Elliott Proctor Joslin (June 6, 1869 – January 28, 1962) was the first doctor in the United States to specialize in diabetes] ‘தி ட்ரீட்மெண்ட் ஆஃப் டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்’ எனும் மருத்துவ நூலை [The Treatment of Diabetes Mellitus, the first textbook on diabetes in the English language] வெளியிட்டார். நல்ல கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும்தான் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்ற முதல் கருத்து தெளிவாக அப்போதுதான் வெளியிடப்பட்டது. இன்றைக்குவரை, அந்தக் கருத்தை ஒட்டியே அத்தனை மருத்துவ முறைகளும் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
 
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதனை சிரமப்படுத்திய நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த 20-ம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாக வந்ததுதான் ‘இன்சுலின்’ ஆகும். இது நீரிழிவைக் குணப்படுத்தும் மருந்தல்ல. ஆனால், மிக நுட்பமாகக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே ஆகும். இன்று ' நீரிழிவு நோய் ' பலரை வருத்திக் கொண்டு வருகிறது. இலங்கை, இந்திய போன்ற தமிழர்கள் அதிகமாக வாழும் நாட்டில் பணக்காரர்களுக்கு மட்டுமே முன்பு வந்த இந்த 'பணக்கார நோய்' ஏழை மக்களையும் பாதித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் வீட்டுக்கு ஒருவருக்கு இந்த நோய் தாக்கினாலும் தாக்கலாம். உழைப்பின்மை, உணவு முறையில் மாற்றம் (அதிகமாய் மாவுச்சத்து உண்பது), அதிக மனக்கவலை, பதற்றம் [டென்ஷன்], உடற்பயிற்சி இல்லாதது, பாரம்பரியம் என்று பலவிதங்களில் இது மக்களை தாக்குகிறது. இந்த நோயை கட்டுப்படுத்தாவிட்டால் இதய நோய், உடல் பருமன் நோய், கண் பார்வையிழப்பு, பக்கவாதம், கால்களை இழுத்தல் போன்ற கொடூரங்களும் ஏற்படலாம். 'இன்சுலின்' தூண்டினால் நீரிழிவு கட்டுக்குள் வந்துவிடும் என்ற அற்புதமான அந்த மருந்தை கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞான மேதை ஃபிரடரிக் கிராண்ட் பாண்டிங் என்பவர் ஆவார். [Sir Frederick Grant Banting / November 14, 1891 - February 1941]. கணையத்திலிருந்து 'இன்சுலின்' சுரக்காததால் 'நீரிழிவு நோய்' வருகிறது. இன்சுலினை கொடுத்தால் கணையம் வேலை செய்து இரத்தம் மற்றும் சிறுநீரில் அதிகப்படும் சர்க்கரையை குறைக்கிறது என்பதே அவரின் கண்டுபிடிப்பாகும்.
 
 
இனி நாம் சித்த மருத்துவம் பக்கம் எம் பார்வையை திரும்புவோம். ஒரு பிரச்சனை அல்லது வருத்தம் ஒன்றுக்கு தீர்வு அல்லது மருந்து வேண்டுமாயின், அந்த பிரச்சனை அல்லது வருத்தத்திற்கான காரணம் புரியவேண்டும். உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானுறு 18 சுருக்கமாக “உண்டிமுதற்றே உணவின்பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" என்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன என் சொல்லாமல் சொல்கிறது! " மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்." என திருக்குறள் தெளிவாக கூறுகிறது. அதாவது முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம் என்கிறது. அதைத்தான் எம் பெரியோர் 'பசித்துப் புசி' என்பர். இந்த அடிப்படையை தான் பிரெஞ்சு மருத்துவர் அப்போலனைர் வைத்தியத்தில் நாம் காண்கிறோம். ஆமாம் 'நீரை உண், உணவைக் குடி' என்பர் எம் பெரியோரும்! மனிதனுக்கு நோய் வருவதற்கான பெரும்பான்மைக் காரணங்களாக உணவு, செயல்களில் ஏற்படும் மாறுபாடு அமைகின்றன. இவையன்றி திடீரனத் தோன்றும் கொள்ளை நோய்களும் மனிதனைப் பாதிக்கும். நோய் வருவதற்கான காரணங்கள் எவையாக இருந்தாலும் அந்த நோய்களை எதிர்த்துக் குணப்படுத்துவதற்கான ஆற்றலைப் பெறும் வண்ணம் உடலைத் தயார் செய்வதுதான் பொதுவாக சித்த மருந்துகளின் தலையாய பணியாக இருக்கிறது.
 
 
இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் நீரிழிவு நோயும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் [Aids, cancer] போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே இந்த நோய் உள்ளது. பொதுவாக நீரிழிவு வியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. உதாரணமாக முதலாம் வகை என கூறப்படும் நீரிழிவு - சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது என்றும் இரண்டாம் வகை என்பது - அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா சிந்தனை. உணவு மாறுபாடு, மதுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றாலும், பரம்பரையாகவும் உண்டாகிறது எனலாம். மற்றும் நவீன உணவு மாறுபாடு, இரவு உணவில் அதிக காரம் கொண்ட உணவினை சாப்பிடுவது. நேரம் தவறிய உணவு, நீண்ட பட்டினி, வயிறு புடைக்க சாப்பிடுதல் இவற்றாலும் நீரிழிவு நோய் உண்டாகலாம்.
 
 
இன்றைய நவீன காலத்தில், தவிடு நீக்கிய வெண்மை நிற அரிசி உணவால் ஏற்படும் சர்க்கரை நோய் தான் தென்னிந்திய, இலங்கை மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது. அரிசியின் மேல் இருக்கும் தவிடு இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரும்புச் சத்தை அதிகப்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதை எனோ மறந்து விட்டார்கள்? அது மட்டும் அல்ல, இயற்கையான கீரைகள், காய்கறிகள் தற்போது இல்லை. இவை அனைத்தும் வேதிப் பொருட்கள் தெளித்து வளர்க்கப்பட்டவை. இதனால் அவற்றின் சக்தியிழந்து உடலுக்கு மாற்றத்தையும் உண்டு பண்ணலாம். எனவே இவைகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி: 05 தொடரும்
"அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 05
 
 
தமிழ் மருத்துவத்தின் வரலாறு பொதுவாக இலக்கியங்களில் காணப்படும் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை தொகுத்து, மருந்து, மருந்துக்கான மூலப் பொருட்கள், மருத்துவன், மருத்துவம், நோய் , நோயாளி, நோயில்லா நெறி, உணவே மருந்து, உணவு பொருள்கள், அறுசுவை, மருத்துவக் கோட்பாடு .... போன்ற பல தலைப்புகளில் இன்று ஆராயப் படுகிறது.
 
 
ஒருவருக்கு நோய் தீரவேண்டுமாயின் அவரின் சித்தம் அல்லது மனம் இங்கு முக்கியமாகிறது. உதாரணமாக " நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே நீயாகிறாய்" என்பதை கவனிக்க! அதாவது உன்னை பலவீனன் அல்லது நோயாளி என்று நினைத்தால், நீ அப்படியே ஆகிவிடுவாய் என்கிறது. எனவே இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
 
 
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் பாதிப்படையும். அதோடு கை, கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகம் வடிகட்ட வேண்டிய வேதிப் பொருட்கள் வடிகட்டப்படாமல் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்து அதன் செயல்பாடு வலுவிழக்க ஆரம்பிக்கிறது. தேவையற்ற படபடப்பு உறக்கமின்மை, போன்றவை உண்டாக ஆரம்பிக்கிறது. எது எவ்வாறாகினும் நாம் மனிதனின் உடற்கூறுகளை என்றும் மாற்ற முடியாது. ஆனால் நீரிழிவு நோயின் பிடியில் தவிப்பவர்கள் உடற்கூறுக்குத் தகுந்த வாறு மருந்து, மாத்திரை, சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்லது. சர்க்கரையினை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் உடலுக்கு உடற்பயிற்சி அவசியத் தேவையாகும். அதோடு உடல் நன்கு வியர்க்க நடக்க வேண்டும். உணவு சாப்பிட்டபின் குறுநடை கொள்வது நல்லது என இன்று எம் அனுபவம் எடுத்துரைக்கிறது.
 
 
தேரையரின் மனதுக்கினிய சீடரான யூகிமுனி வைத்திய முறைகளை எளிமையாய் சொல்லக்கூடியவர். இவரின் வைத்திய காவியம் ஒன்று நீரிழிவு நோய்க்கு காரணம் கூறுகிறது.
 
 
"கட்டளைமிகுந்திட்டாலுங் காலங்கள்தப்பினாலும்
இட்டமாம் பாலும் நெய்யும் ரத்தமும்புளிப்பும் மிஞ்சில்
வட்டமாம் முலையார் தங்கள் மயக்கத்தின் கலவியாலும்
நெட்டிலைகோரை போலே நீரிழிவாகுந்தானே."
[யூகிமுனி வைத்திய காவியம்]
 
 
அதாவது ஓய்வு அற்ற, கூடிய வேலை [அதிக வேலை பழு, மன அழுத்தம்] , ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், கொழுப்பு கூடிய நெய், பால், மிருக இறைச்சி / கொழுப்பு போன்ற உணவு முறை. வட்ட வடிவான நகில்களை [முலைகளை] உடைய மகளிருடன் பாலியல் செயல்களில் அதிக ஈடுபாடு வைப்பது, நீண்டு (140 செ.மீ / 55 அங்குலம்) வளரக்கூடிய கோரை புல்லு [Nut grass] அல்லது தரமற்ற பொருட்கள் / உணவுகள் போல இது தானாக நீரிழிவு கோளாறுக்கு வழிவகுக்கிறது என்கிறது. கோரை புல் ஒரு களை (Weed) ஆகும். களை என்பது பொதுவாக, மனிதனால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள், புல்தரைகள், வயல்கள் போன்ற கட்டுப்பாடான சூழல்களில் வளரும் தேவையற்ற தாவரம் அல்லது தவறான இடத்தில் வளரும் தாவரம் என பொருள் படும்.
 
 
உடல் உறவு அல்லது பாலியல் நடவடிக்கை என்பது உண்மையில் மெதுவோட்டம் [நடையோட்டம்] அல்லது உயிர்வளிக்கோரும் பயிற்சி போன்ற ஒரு பயிற்சியே. எனவே இது இரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்கும் [Sex is an exercise, like jogging or aerobics, and it can bring on low blood sugar, says the American Diabetes Association (ADA)], எனவே கூடிய பாலியல் நடவடிக்கைகள் நீரிழிவு நோயை ஏற்படுத்தாது. இது ஒரு தவறான புரிந்துணர்வு என்று நம்புகிறேன். "பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பவள வாயில் புன்னகை சிந்தி, கோல மயில் போல் நீ வருவாயே" என்ற பாடல் ஞாபகம் வருகிறது. ஆமாம் அமெரிக்கா நீரிழிவு கூட்டமைப்பு சர்க்கரை குறைவதை தடுப்பதற்கு சற்று முன்போ அல்லது சற்று பின்போ உண்ண சொல்லுகிறது [To avoid low blood sugar, plan to eat food either immediately before or shortly after sex to cover the glucose you use.] அதனால் தான் 'பாலும் பழமும்' பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன்? இந்த நோயின் அறிகுறிகள் என்ன என்ன என்று யூகிமுனி மேலும் இன்னும் ஒரு பாடலில் கூறுகிறார்.
 
 
"முகமுங்காந்துநெஞ்சலர்ந்து முறிந்தவுடலுநடுநடுங்கி
நகமேலறிந்து நாவறண்டு நஞ்சுண்டவர்போல் மிகசோர்ந்து
பகலுமிரவி முறங்கிஉடல் பரிந்தே தட்டி மெலிந்து உழன்று
மிக வேதனை உண்டாகி வேண்டாதன்னம் வேண்டாதே".
 
 
அதாவது, முகத்தில் எரிச்சல் ஏற்பட்டு, தாகம் கூடி நெஞ்செரிவு உண்டாகி, உடல் நடுநடுங்கி, நாவறண்டு, நஞ்சு உணடவர் போல் மிக சோர்ந்து, உடல் மெலிந்து, வேதனை உண்டாக்கும் என்கிறது.
 
 
நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பாண், பாஸ்தா (Pasta), கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்து விட வேண்டும். மேலும் சப்பாத்தியோ அரிசிச் சோறோ எதை எடுத்துக்கொண்டாலும் அத்துடன் அதிக அளவில் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்திக்குப் பதிலாகச் சிவப்பு அரிசி, பார்லி, கடலை மாவு ஆகியவற்றால் செய்த உணவையும் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோய்க்கு கார்போ ஹைட்ரேட் உணவு எதிரி என்பதால், அரிசி உணவை கட்டுப்பாடுடன் கொஞ்சமாக எடுக்கலாம். முழுவதுமாகத் தவிர்க்க வேண்டிய கட்டாயமில்லை. அதேநேரம் அதிக அளவில் உண்ணாமல் அளவைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். பொதுவாக, வெள்ளை அரிசிக்கு மாற்றாக சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தினமும் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகள், ராகி, பார்லி [Ragi Barley] போன்றவை தினசரி உணவில் கட்டாயம் இருப்பது நல்லது. மீன், ஆலிவ் எண்ணெய் [Olive oil], பாதாம் பருப்பு, வாதுமை கொட்டை (walnut / வால் நட்) ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பழச்சாற்றுக்குப் பதிலாகப் பழமாக உண்ண வேண்டும். குறிப்பாக ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், நாவல் பழம், ஆகிய பழங்களை நீரிழிவு நோயாளிகள் அதிகம் உண்ணலாம். இந்தப் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்தப் பழங்கள் அதிக நேரம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும். நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவைத் தாராளமாகச் சாப்பிடலாம். கோழி, கடல் உணவான மீன், இறால், நண்டு ஆகிய அசைவ உணவில் உள்ள சத்துகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. சுருக்கமாக, “நீரிழிவு நோயாளிகள் அனைத்துச் சத்துகளும் நிறைந்த உணவு, அதற்கேற்ற உடற்பயிற்சி, மருந்துகளை எடுத்துக்கொண்டால் நோயின் தன்மையையும் வீரியத்தையும் கட்டாயம் குறைக்க முடியும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
தற்காலிகமாக முடிவுற்றது
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிறைய நிறைய பலப்பல தகவல்கள் .........!  🙏

நன்றி தில்லை.......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல தெரிந்திருக்காத தகவல்களை தமிழில்தந்து கொண்டிருக்கிறீர்கள் நன்றி.

6 hours ago, kandiah Thillaivinayagalingam said:

அப்போலனைர் (Apollinaire Bouchardat / July 23, 1809 – April 7, 1886) எனும் பிரெஞ்சு மருத்துவர், பிரெஞ்சு போர்க் காலத்தில் குறைவான பஞ்ச உணவைச் சாப்பிட்டபோது பல நீரிழிவு நோயாளிகளுக்கு அதில் கட்டுப்பாடு ஏற்பட்டதைத் தற்செயலாகக் கண்டறிந்திருந்தார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் அனைவருக்கும் நன்றி எனக்குத் தரும் ஊக்கத்துக்கு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
    • சரியாகச் சொன்னீர்கள் தேர்தல் வெற்றிக்காக மற்றய கட்சிகளும் செய்த ஏமாற்று வேலையை தான் இவர்களும் செய்கின்றனர் ஆனால்  இந்த ஏமாற்று வேலையால் சிங்கள மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள் ஆனால் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம்  பொறுமை பொறுமை காக்க வேண்டும் உடனே எல்லாம் செய்ய முடியாது அரசிடம் இப்படி செய்வதற்கு பணம் இல்லை முன்னைய ஆட்சிகளில் அதிக மின்கட்டணம் மக்கள் செலுத்தியவர்கள் தானே என்று பிரசாரம் செய்கின்றனர் இலங்கையில் இப்போது வந்த தேங்காய் தட்டுபாட்டுக்கு நாங்கள் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கின்றோம் இலங்கை மக்களும் தேங்காய் இல்லாமல் சமைக்க பழகட்டும் என்றார்களாம்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.