Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ஸ்மார்ட்போன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், இசபெல் கெரெட்சன்
  • பதவி, பிபிசி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகளாவிய அளவில் மின்னணு கழிவுகளைக் குறைக்கும் முயற்சியில், வாடிக்கையாளர்களே தங்களது மொபைல் போனில் ஏற்படும் பிரச்னையை பழுது பார்க்கக் கூடிய ஸ்மார்ட்போனை ஃபேர்போன்(Fairphone) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மொபைல் போனின் ஒரு சிறிய சதுரமான பாகத்தை கையில் வைத்துக்கொண்டு, “இது எனது போனின் கேமரா,” எனக் கூறுகிறார் பாஸ் வான் ஏபெல். ஒரு சிறிய ஸ்க்ரூ டிரைவரைப் பயன்படுத்தி, அவரே தனது மொபைல் போனில் இருந்து அந்த கேமராவை அகற்றியுள்ளார்.

“மொத்தம் எட்டு பாகங்கள் உள்ளன. அவற்றை அகற்றி, நாமே மாற்றிக் கொள்ளலாம்,” என்கிறார் அவர். தனது மொபைல் போனின் கேமராவை, ஏற்கனவே பிரித்து வைத்துள்ள தனது மொபைல்போனின் பேட்டரி, யூஎஸ்பி போர்ட் (USB Port), ஸ்கிரீன் மற்றும் ஒலி பெருக்கியுடன் வைத்தார்.

உலகில் இத்தகைய முதல் ஸ்மார்ட்போனை உருவாக்கியதாகக் கூறும் நெதர்லாந்து நாட்டின் டச்சு சமூக நிறுவனமான ஃபேர்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் தான் பாஸ் வான் ஏபெல். உலகம் முழுவதிலிருந்து பெற்ற அரிய உலோகங்களாலும், மற்ற பொருட்களாலும் தயாரிக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் எப்படி இவ்வாறு இருக்க முடியும்?

 

ஒரே ஆண்டில் குப்பையான 530 கோடி மொபைல் போன்கள்

மின்னணு கழிவுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2013 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் நிறுவப்பட்ட ஃபேர்போன்(Fairfone) நிறுவனம், மக்களே எளிதில் சரிசெய்து கொள்ளக் கூடிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகிறது.

மக்களே தங்களது போனை சரிசெய்து கொள்ள ஊக்குவிப்பதன் மூலம் மின்னணு கழிவுகளைக் குறைக்க முடியும் என ஃபேர்போன் நிறுவனம் நம்புகிறது.

ஸ்மார்ட் போன்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் மின் கழிவுகள் மலை போல் அதிகரித்து வருகின்றன. 2022 ஆம் ஆண்டில், 530 கோடி மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டு குப்பைக்கு போயிருப்பதாக பெல்ஜிய தன்னார்வ தொண்டு நிறுவனமான தி வீ(The WEEE) கணக்கிட்டுள்ளது.

அமெரிக்காவில், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாடல் போன்கள் வெளியாவதால், சராசரியாக ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் மக்கள் தங்கள் தொலைபேசிகளை மாற்றுகிறார்கள்.

பெரும்பாலான சாதனங்கள் இப்போது சீல் செய்யப்பட்டு, பழுது பார்ப்பதற்கு மிகவும் கடினமான வகையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை அனைத்துமே விலை உயர்ந்தவை.

 

மொத்த எடையில் எவ்வளவு நிலைத்தன்மை கொண்டது?

வான் ஏபெல்

பட மூலாதாரம்,GRIESHAM TAAN

நீண்ட காலம் பயன்படும் மொபைல் போன்களை விற்பதன் மூலம் இந்த போக்கை முறியடிக்க முடியும் என ஃபேர்போன் நிறுவனம் நம்புகிறது.

"நாங்கள் தொலைபேசிகளை பழுது பார்க்கக் கூடியதாக ஆக்குகிறோம், எனவே நீங்கள் அவற்றை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும்" என்று வான் ஏபெல் கூறுகிறார்.

"இது மிகவும் எளிமையான கணக்கீடு. நீங்கள் தொலைபேசியை இரண்டு மடங்கு காலம் பயன்படுத்தினால், அதனால், ஏற்படும் மின்னணுக் கழிவு பாதியாக குறையும், அவ்வளவுதான்,” என்றார் அவர்.

"நாங்கள் தயாரிக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 100% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம். தேவையான தங்கம் மற்றும் வெள்ளியைப் பயன்படுத்துகிறோம்," என்கிறார் வான் ஏபெல்.

ஃபேர்போன்-5 ஆனது 40 வெவ்வேறு பொருட்களைக் கொண்டுள்ளது. அதில், 14 பொருட்கள் மட்டுமே (தொலைபேசியின் மொத்த எடையில் 42%) நிலைத்தன்மை கொண்டவை.

அந்த 14 மூலப்பொருட்களில் 70% நியாயமான வர்த்தகம் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட மூலங்களிலிருந்து வருகிறது.

நிறுவனத்தின் ஒரு சுயாதீன மதிப்பாய்வு, மேம்படுத்தக்கூடிய மற்றும் பழுதுபார்க்கக்கூடிய தொலைபேசிகளை உருவாக்குவதன் மூலமும் ஃபேர்போன் நிறுவனம் சாதிக்க முடியும் என்று கூறுகிறது.

 

உலக அளவில் மின்னணு கழிவுகளை குறைப்பது சாத்தியமா?

பேர்போன்

பட மூலாதாரம்,GRIESHAM TAAN

"நாங்கள் தற்போது, அந்த 14 பொருட்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம், அதில் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய தேவை உள்ளது. அது மக்களுக்கு பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார் அவர்.

இந்த மொபைல்போன் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் போன்களைத்தான் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 இல் ஆண்டில், உலகளவில் 23.2 கோடிக்கும் அதிகமான ஐபோன்கள் விற்கப்பட்டுள்ளன.

சந்தையின் நிலை இப்படி இருக்க, நீண்ட ஆயுள் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதன் மூலம், நிறுவனங்கள் லாபம் ஈட்ட முடியும் என்பதை ஃபேர்போன் நிறுவனம் நிரூபிக்க முயற்சிப்பதாக வான் ஏபெல் கூறுகிறார்.

இந்த மொபைல் போன்களின் விலையும் அதிகமாகத்தான் உள்ளன. சமீபத்திய ஃபேர்போன் மாடலின் விலை இந்திய ரூபாய் பதிப்பில் ரூ 68,301.

ஃபேர்போன், ஒருவர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பது வான் ஏபலின் நோக்கம். "நீண்ட காலம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கும் ஒரு நிறுவனம் உலகில் இல்லை என்பதால், அனைத்து மென்பொருளையும் நாங்களே உருவாக்குகிறோம். அதனால், நாங்கள் விரும்புவதைச் செய்ய அந்த மென்பொருளில் அதிக முதலீடு தேவைப்படுகிறது," என்றார்.

 
பேர்போன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபேர்போன்களை பழுது பார்க்கும் திட்டம் அதன் முக்கிய போட்டியாளர்களை விட மலிவானது. ஃபேர்போன் 5-க்கான புதிய பேட்டரியின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி, ரூ 4,204, அதே ஐபோன் 15-யின் பேட்டரியை மாற்ற ஆப்பிள் நிறுவனம் வசூலிக்கும் தொகை ரூ 8,418.

"நீங்கள் அனைத்து பாகங்களையும் மீண்டும் பயன்படுத்த விரும்புகிறீர்கள். ஆனால், அது சாத்தியம் இல்லை. அதனால், நீங்கள் செய்ய விரும்பும் கடைசி விஷயம், அவற்றை மறுசுழற்சி செய்வதாகும். அதனால்தான் நாங்கள் நீண்ட ஆயுளில் அதிக கவனம் செலுத்துகிறோம்." என்கிறார் வான் ஏபெல்.

பல நவீன மின்னணு சாதனங்களைப் போலவே, ஸ்மார்ட்போன்களும் 70 சதவீதம் வெவ்வேறு வகையான உலோகங்களால் ஆன பொருட்களைக் கொண்டிருப்பதால் முழுமையாக மறுசுழற்சி செய்வது கடினம்.

"தொழில்நுட்ப சாதனங்களும், மின்னணு சாதனங்களும் உடைக்கப்படுவதற்கு இல்லை. அவை விலை மதிப்பற்றவை என்பதை நாங்கள் உள்ளுணர்வுடன் புரிந்து கொண்டுள்ளோம்," என்று இங்கிலாந்தில் உள்ள டிசைன் கவுன்சிலின் தலைமை வடிவமைப்பு அதிகாரி கேட் ட்ரூ கூறுகிறார்.

பேர்போன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அனைத்து போன்களையும் சுயமாக பழுது பார்ப்பது சாத்தியமா?

ஒரு தொழில்துறை மதிப்பீட்டின்படி, உலகெங்கிலும் 500 கோடி மொபைல் போன்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கக் கூடும்.

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மக்கள் அவற்றைப் பழுதுபார்ப்பதையும் முடிந்தவரை அவற்றைப் பயன்படுத்துவதையும் தடுக்கிறது என்கிறார் ட்ரூ. போன்கள், எளிதில் பிரிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்படவில்லை, மக்கள் மிகவும் மெல்லிய, நேர்த்தியான தொலைபேசிகளை விரும்புகிறார்கள், அவற்றைப் பிரிப்பது கடினம் என்கிறார் அவர்.

மின்னணு சாதனங்களை பழுது பார்க்கும் செலவும் "தடையாக" இருக்கலாம். "முதலில் ஒரு புதிய லேப்டாப்பைப் பெறுவதை விட லேப்டாப் திரையை சரிசெய்வது விலை உயர்ந்ததாக இருக்கும்" என்கிறார் அவர்.

பழுது பார்க்கக் கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவது ஒரு "தொழில்நுட்ப சவால்" அல்ல என்கிறார், எலன் மேக்ஆர்தர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜோ ஐல்ஸ்.

“இது ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாகும். இங்கு பொருட்கள் முடிந்தவரை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன, மறுசுழற்சி செய்யப்படுகின்றன. பழுது பார்க்கக் கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதற்கான கண்டுபிடிப்பு ஏற்கனவே உள்ளது. தற்போது, முக்கியமான பிரபல மொபைல்போன் நிறுவனங்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளன,” என்கிறார் அவர்.

இன்று வரை, ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களுக்கான விற்பனை மாதிரி என்பது, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தங்கள் சாதனங்களைப் புதுப்பிக்கும்படி நுகர்வோரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட பழுதுபார்க்கும் புதிய உரிமைச் சட்டங்கள் இதை மாற்றுகின்றன.

பிப்ரவரியில், நோக்கியா நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இது ஆன்லைன் பழுதுபார்க்கும் வழிகாட்டிகளைப் பயன்படுத்தி உடைந்த பாகங்களை மாற்றுவதன் மூலம் நுகர்வோர் தங்கள் போனை தாங்களே சரிசெய்துகொள்ள முடியும்.

ஆப்பிள் பழுது பார்க்கும் கையேடுகளை ஆன்லைனில் வெளியிடத் தொடங்கியுள்ளது. மேலும், ஒரு சுய-சேவை பழுதுபார்க்கும் கடையைத் திறந்துள்ளது. அங்கு நுகர்வோர் ஆப்பிள் பாகங்களை வாங்கலாம் மற்றும் உடைந்த சாதனங்களை சரிசெய்ய உதவும் கருவிகளை வாங்கலாம் அல்லது வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் ஆப்பிளின் பழுது பார்க்கும் திட்டம் விரிவான கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதாக விமர்சிக்கப்பட்டது. ஒரு சாதனத்தின் தனிப்பட்ட பகுதியுடன் இணைக்கப்பட்ட தனிப்பட்ட வரிசை எண்ணை நுகர்வோர் வழங்க வேண்டும்.

 

நீண்ட ஆயுள் கொண்ட மொபைலை தயாரிப்பதில் இருக்கும் சவால் என்ன?

பேர்போன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மின்னணுத் துறையின் வணிக மாதிரியை மாற்றுவதே உண்மையான சவால் என்கிறார் ஜோ ஐல்ஸ்.

"நாம் பொருட்களை தயாரிக்கும் விதம், சந்தைப்படுத்துதல் மற்றும் அனுப்புதல்- இந்த விநியோகச் சங்கிலிகள் பல தசாப்தங்களாக மேம்படுத்தப்பட்டவை. அதை [வணிக மாதிரியை] மாற்றுவது அல்லது அதற்கு முரணான ஒன்றைச் செய்வது என்பதை கற்பனை கூட செய்து பார்க் முடியாது. நிறுவனங்கள் உண்மையில் முதலீடு செய்வது கடினம்." என்கிறார் ஜோ ஐல்ஸ்.

இதற்கிடையில், " இந்த அனைத்து வணிக மாதிரியும், வளர்ச்சி மற்றும் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதை அடிப்படையாகக் கொண்டது" என்கிறார் வான் ஏபெல்.

"ஒரு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் நிறைய பேர் இன்னும் உற்சாகமாக இருக்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு வருடமும் புதிய ஒன்றைப் பெறுவது மிகவும் வீணானது, ஏனெனில் கேமராவில் இன்னும் சில மெகாபிக்சல்கள் இருப்பதால், திரை சற்று வித்தியாசமாக உள்ளது, அவ்வளவுதான்," என்கிறார் வான் ஏபெல்.

 

அமெரிக்கா கொண்டு வந்த புதிய சட்டம்

மின்னணு குப்பைகளின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பல ஐரோப்பிய நாடுகள், சாதனங்களை பழுதானதும் தூக்கி வீசும் கலாச்சாரத்தை எதிர்த்து ஏற்கனவே போராடி வருகின்றன. இதனால் நுகர்வோர் பழுது பார்க்கக் கூடிய பொருட்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் உடைந்த பொருட்களை சரிசெய்வதை எளிதாக்குகிறது.

2021 ஆம் ஆண்டில், பிரான்ஸ் தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள், வாஷிங் மெஷின்கள், மடிக்கணினிகள் மற்றும் புல்வெளி அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட சில மின்னணு சாதனங்களை லேபிளிடத் தொடங்கியது.

ஸ்வீடனில், சலவை இயந்திரங்கள், பாத்திரங்களைக் கழுவுபவர்கள் மற்றும் சைக்கிள்கள் உள்ளிட்ட ஆடைகள் மற்றும் உபகரணங்களில் பழுது பார்ப்பதற்காக மக்கள் வரிச் சலுகைகளைப் பெறுகின்றனர்.

அமெரிக்காவில், நுகர்வோர் தங்கள் சாதனங்களைச் சரிசெய்ய ஊக்குவிக்கும் முயற்சியும் நடக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அது அமெரிக்க நுகர்வோர் தங்கள் சொந்த மின்னணு சாதனங்களை பழுது பார்க்கும் உரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

கலிபோர்னியா, நியூயார்க், மின்னசோட்டா மற்றும் கொலராடோ ஆகிய அனைத்தும் 2023 ஆம் ஆண்டில் பழுது பார்க்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தின.

"உற்பத்தியாளர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்ளும் பல சட்டங்கள் இப்போது வெளிவருகின்றன. எங்கள் முதன்மை குறிக்கோள் முழு ஸ்மார்ட்போன் துறையையும் மிகவும் நிலையானதாக மாற்றுவதாகும். விநியோக சங்கிலியில் உள்ள பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான தீர்வுகளை கொண்டு வருவோம்," என்கிறார் வான் ஏபெல்.

https://www.bbc.com/tamil/articles/c72kj19vdjlo



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.