Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் மீது ஏவப்படும் எழுத்து வன்முறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மீது ஏவப்படும் எழுத்து வன்முறை

-சி.இதயச்சந்திரன்-

பற்றைக்குள் பாம்பு இருக்கிற நேரம் இல்லையோ, தொடர்ந்து தடியால் பற்றையை அடித்தவண்ணம் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். வெற்றுப் பற்றைக்கு தடியால் அடிக்கும் திருப்பணியை ஊடகவியலாளர் கூட்டமொன்று இந்தியாவிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஏற்றுக்கொண்டுள்ளது.

பேரினவாதத்தால் அழிக்க இயலாத விடுதலைப் புலிகள் தமக்குள் முட்டி மோதியாவது அழிந்து போக வேண்டுமென சாபமிடுவதே சிலரின் எழுத்தாகி விட்டது. தமக்குப் பொருத்தமான வாரிசு அரசியலை புலிகள் மீது பொருந்திப் பார்ப்பது அவர்களின் எண்ணப்பாட்டிற்கு இசைவானதுதான்.

இலங்கையில் நடக்கும் குடும்ப அரசியல் இதற்கு ஒரு நல்ல சான்று பகர்கிறது. சேறு பூசும் ஊடகச் சமரின் பிதாமகர்கள், தமது புத்திபூர்வமான ஆரோக்கியத் தளத்திலிருந்து இறங்கி தடுமாறும் சமர்களை, இயலாத நிலையில் முன்னெடுக்கிறார்கள். மக்களின் போராட்ட உணர்வினை மழுங்கடிக்க தனிநபர்களைத் தெரிவு செய்து, தாமும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி ஆதாரமற்ற தளங்களைத் தெரிவு செய்வதே பரிதாபத்திற்குரியது.

சூசையிலிருந்து கே.பி. வரை குட்டிக்கதைகளை நம்பும்படி உலாவ விட்டு தற்காலிக திருப்தியையே அவர்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது. உளவியல் பார்வையில் இது ஒரு வகையான யதார்த்தத்தை மறுதலிக்கும் வன்முறை தழுவிய ஊடகச் சமர்.

வலிந்து புகுத்த முனைவதும் வன்முறைக் கருத்துருவத்தின் பிறிதொரு பரிமாணந்தான்.

பாதுகாப்பற்ற சூழலில் வாழும் மக்கள் மீது விடுதலை உணர்வினை சிதைக்கப் பிரயோகிக்கப்படும் எழுத்து வன்முறையே இது.

உண்மையான தகவல்களையும் நியாயமான கருத்துக்களையும் முன்வைத்ததால் அகால மரணமடையும் ஊடகவியலாளர் குறித்து, இவர்களின் சிந்தனையில் எதுவித ஞான ஒளியும் தோன்றாது.

படியளக்கும் கடவுள், எழுதுவதற்கு தளம் அமைத்துக் கொடுத்தாலே போதும். இந்தச்சிந்தனைச் சிற்பிகள், உலக தத்துவஞானிகளின் கோட்பாடுகளால் பொருத்தமாகச் செருகி புதிய பார்வையொன்றினை மக்களிற்கு அளிப்பதால் சுயபெருமிதம் கொள்கிறார்கள்.

இடைத்தங்கல் முகாம்களில் அல்லல்படும் துரத்தியடிக்கப்பட்ட மக்களின் தினசரி வாழ்நிலை குறித்து எழுதுவதைக்கூட தரமற்ற விடயமாகக் கருதுகிறார்கள். இனி குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விடயமும் உண்டு.

கூட்டு ஆதிக்கம் என்கிற பரம்பரையான சமூகத்தளமொன்றும் பல்வேறு நிலைகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆதிக்கக் கூட்டுக்குள் இல்லாமல், வெளிவட்டத்தில் நின்றபடி கூட்டின் நியாயத்தன்மைகளை வெளிப்படுத்தும் ஊடகத்தாரை அந்நியமாக நோக்கும் துன்பமும் நிகழ்கிறது.

சூழ்நிலைவாதத்தின் அடிப்படையில் எழும் இம்முரண்நிலை, போராட்ட நியாயப்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்லும் கருத்தியல் வளர்ச்சியை பின்னடையச் செய்யுமென்பதே உண்மை நிலையாகும்.

பரந்துபட்ட மக்களை இணைத்து நடத்தப்படும் விடுதலைப் போராட்டத்தில் எதிரியின் கபடத்தனமான ஊடகச் சமரை எதிர்கொள்ள, தேசிய உணர்வு கொண்ட நபர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு அவசியமென்பதை, முத்திரை குத்தப்பட்ட சிலர் ஏற்க மறுக்கிறார்கள்.

'போராட்டப் பாதையை பிழையான வழியில் திசை திருப்புகிறார். தந்திரோபாயங்களைக் காட்டிக் கொடுக்கிறார்" என வீட்டினுள்ளே சேறு வீசும் நாற்காலியை இறுகப் பற்றி பிடித்திருக்கும் மனிதர்கள் எதிர்ப்புரட்சிவாதிகளே.

எழுதுவதுதான் இவர் வேலையென ஏளனப் பெருமூச்சுடன், மக்களிடம் செல்லும் ஊடகத்தளத்தின் கருத்துப் போர் வலிமையை உணரக்கூட முடியாமல், கடுப்பாகியுள்ள நபர்களும் உண்டு.

கூட்டினுள்ளே இருந்துதான் மக்களின் அபிலாஷைகள் வெளியிட வேண்டுமாயின், சர்வதேச மக்களையும் அணிதிரட்ட முடியாது, அவர்கள் எமக்காகப் பேச வேண்டுமென எதிர்பார்க்கவும் முடியாது.

பேசி முடிந்தவுடன் மேடையை விட்டு இறங்கும் போது, உட்கார்ந்திருந்த நாற்காலியையும் தம்முடனே காவிச்செல்லும் மனிதர்கள் பலரை இன்று காண்கிறோம்.

நாற்காலி எங்கு இருக்க வேண்டுமென்பதையும் மக்களே தீர்மானிப்பாரென வரலாறு பல தடவை வெளிப்படுத்தியுள்ளது. நுனிப்புல் மேய்தலாகிப் போன போராட்ட அறிவு, தன்னலச் சுயமாகி, விரிந்த பார்வையைப் பெறத் தடையாகிறது.

இலுப்பைப் பூக்கள் சக்கரையாவதில்லை. மக்களின் உணர்வுத் தளத்தினை உரசிச் சென்று அதனோடு கரையும் எழுத்துக்களே மக்கள் சக்தி என்கிற பெருந்தீயினை உருவாக்கும்.

சாதி மறுப்பு, பெண் விடுதலை, நாட்டு விடுதலை பற்றிப் பாடிய பாரதியார், மக்கள் கவிஞனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். நிலவையும், காதலையும் மென் உணர்வுகளையும் கலந்து கவிபடித்த பலர் காவியங்களைத்தான் உருவாக்க முடிந்தது.

மக்களின் உரிமைப் போரில் கலந்த எழுத்துக்களும் அதைத் தந்த எழுத்துச் சமராடிகளும் மக்கள் அங்கீகாரம் பெற்றதும் வரலாறுதான்.

வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்கள் களத்தில் நின்றவாறு, வெறும் புகழ்ச்சிக்காகவும், சுய எழுச்சிக்காகவும் எழுதும் எழுத்துக்கள் காலப் போக்கில் மக்களால் நிராகரிக்கப்படும். ஆண்டாண்டு காலமாக பேரினவாதச் சிறைக்குள் வதைபடும் மக்களிற்கு கிளிப்பிள்ளை போல் பழைய வரலாற்றினை திரும்பத் திரும்பக் கூறுவது எழுத்தின் வலிமையைக் குறைத்து சலிப்பை ஏற்படுத்தி விடும்.

வரலாற்றை தொட்டுச் செல்லாமல், கூறுவதை மிகைப்படக் கூறி வெறுப்பேற்றுதலே ஆய்வென்று கருதும் ஆபத்து ஏற்பட வழி வகுக்கிறது. போராட்ட சார்பு ஊடகத்தாரின் இவ்வகையான தேக்க நிலையை எதிர்த்தரப்பினர் சரியாக எடைபோட்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

காத்திரமான தமிழர் தரப்பு நியாயப்பாடுகளை தெளிவாக முன்வைக்கும்போது சில்லறைத் தனமான சில்மிசங்கள் எதிரணியிலிருந்து வரும் சாத்தியங்கள் குறைவடையும். எழுதுபவனே எழுத்தைப் பற்றி விமர்சிப்பது ஆரோக்கியமானது எனக் கருதுவதால் இக்கருத்தினை முன்வைக்கிறேன்.

மக்கள் அன்னப்பறவை போன்றவர்கள். தமக்குத் தேவையானவற்றை மட்டுமே அவர்கள் உறிஞ்சிக் கொள்வார்கள். சரியானவற்றை கூறுகிறேனென நினைப்பவர்களுக்குத் தன்னடக்கம் மிக அவசியம்.

வாழ்விற்கும் சாவிற்குமிடையே தினமும் அல்லாடும் மக்களின் வாழ்வு குறித்து எழுதும் போது, அவதானமும், சமூக அக்கறையும் சுய கௌரவத்தின் எல்லை தாண்டி இயல்பாகவும் அமைய வேண்டும்.

வட்டத்திற்குள் இருந்தே கருத்துக்கள் வரவேண்டுமென நிர்ப்பந்தித்தால், வட்டம் இறுதியில் புள்ளியாகத் தேயும். அதை ஒரு வரலாற்றுக் குற்றமாக மக்கள் பதிவு செய்வர்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (23.09.07)

http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/24.htm

  • கருத்துக்கள உறவுகள்
:huh::lol:

எழுதுபவனே எழுத்தைப் பற்றி விமர்சிப்பது ஆரோக்கியமானது என்று கூறுவது மிகவும் தவறாகப்படுகின்றது. படைப்பாளியே படைப்புக்குரிய விமர்சகனாகிவிட்டால், பின்பு அவனது படைப்புக்கள் சாக்கடையில் தூக்கி எறியப்படுதவதற்கே லாயக்கு உடையதாக இருக்கும்.

மக்கள் மீது ஏவப்படும் எழுத்து வன்முறை

-சி.இதயச்சந்திரன்-

...

கூட்டினுள்ளே இருந்துதான் மக்களின் அபிலாஷைகள் வெளியிட வேண்டுமாயின், சர்வதேச மக்களையும் அணிதிரட்ட முடியாது, அவர்கள் எமக்காகப் பேச வேண்டுமென எதிர்பார்க்கவும் முடியாது. 

பேசி முடிந்தவுடன் மேடையை விட்டு இறங்கும் போது, உட்கார்ந்திருந்த நாற்காலியையும் தம்முடனே காவிச்செல்லும் மனிதர்கள் பலரை இன்று காண்கிறோம்.

நாற்காலி எங்கு இருக்க வேண்டுமென்பதையும் மக்களே தீர்மானிப்பாரென வரலாறு பல தடவை வெளிப்படுத்தியுள்ளது. நுனிப்புல் மேய்தலாகிப் போன போராட்ட அறிவு, தன்னலச் சுயமாகி, விரிந்த பார்வையைப் பெறத் தடையாகிறது.

[b]வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்கள் களத்தில் நின்றவாறு, வெறும் புகழ்ச்சிக்காகவும், சுய எழுச்சிக்காகவும் எழுதும் எழுத்துக்கள் காலப் போக்கில் மக்களால் நிராகரிக்கப்படும். ஆண்டாண்டு காலமாக பேரினவாதச் சிறைக்குள் வதைபடும் மக்களிற்கு கிளிப்பிள்ளை போல் பழைய வரலாற்றினை திரும்பத் திரும்பக் கூறுவது எழுத்தின் வலிமையைக் குறைத்து சலிப்பை ஏற்படுத்தி விடும்.

வரலாற்றை தொட்டுச் செல்லாமல், கூறுவதை மிகைப்படக் கூறி வெறுப்பேற்றுதலே ஆய்வென்று கருதும் ஆபத்து ஏற்பட வழி வகுக்கிறது. போராட்ட சார்பு ஊடகத்தாரின் இவ்வகையான தேக்க நிலையை எதிர்த்தரப்பினர் சரியாக எடைபோட்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

காத்திரமான தமிழர் தரப்பு நியாயப்பாடுகளை தெளிவாக முன்வைக்கும்போது சில்லறைத் தனமான சில்மிசங்கள் எதிரணியிலிருந்து வரும் சாத்தியங்கள் குறைவடையும். எழுதுபவனே எழுத்தைப் பற்றி விமர்சிப்பது ஆரோக்கியமானது எனக் கருதுவதால் இக்கருத்தினை முன்வைக்கிறேன். [/b]

மக்கள் அன்னப்பறவை போன்றவர்கள். தமக்குத் தேவையானவற்றை மட்டுமே அவர்கள் உறிஞ்சிக் கொள்வார்கள். சரியானவற்றை கூறுகிறேனென நினைப்பவர்களுக்குத் தன்னடக்கம் மிக அவசியம்.

வாழ்விற்கும் சாவிற்குமிடையே தினமும் அல்லாடும் மக்களின் வாழ்வு குறித்து எழுதும் போது, அவதானமும், சமூக அக்கறையும் சுய கௌரவத்தின் எல்லை தாண்டி இயல்பாகவும் அமைய வேண்டும்.

[b]வட்டத்திற்குள் இருந்தே கருத்துக்கள் வரவேண்டுமென நிர்ப்பந்தித்தால், வட்டம் இறுதியில் புள்ளியாகத் தேயும். அதை ஒரு வரலாற்றுக் குற்றமாக மக்கள் பதிவு செய்வர்.[/b]

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (23.09.07)

http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/24.htm

இதயச்சந்திரனினதும் அவுஸ்ரேலியா சபேசனினதும் அண்மைய ஆக்கங்கள் தமிழ்ஊடகங்களில் சிலராவது தவறுகளை உணர்ந்து சரியான திசையில் பயணிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.