Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகல தரப்பினரதும் நல்லிணக்க முயற்சியாக அரசியல் தீர்வுத்திட்டம் அவசியம்! - அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 DEC, 2023 | 05:32 PM
image
 

(நேர்கண்டவர் : ரொபட் அன்டனி)

லங்­கையில் அர­சியல் தீர்வு எது­வாக இருந்­தாலும், அது உண்­மையில் எல்லாத் தரப்­பி­ன­ரதும் நல்­லி­ணக்க முயற்­சி­யாக அமைய வேண்டும். இது சாத்­தி­ய­மா­னது என்றே நான் நினைக்­கின்றேன். ஆனால், இதில் கடின உழைப்பு அவ­சி­ய­மா­கி­றது என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

'வீர­கே­சரி' வார வெளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் பல்­வேறு விட­­யங்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டிய அமெ­­ரிக்கத் தூதுவர், உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு பாதிக்­கப்­பட்ட மக்­களை மைய­மாகக்கொண்­ட­தாக அமைய வேண்டும் என்று குறிப்­பிட்டார்.

மேலும் புலம்­பெயர் மக்கள் தொடர்­பாக கருத்து வெளி­யிட்ட அமெ­ரிக்கத் தூதுவர், புலம்­பெயர் மக்கள் இலங்­கையில் முத­லீடு செய்­வ­தற்கு நம்­பிக்கை வழங்­கப்­பட வேண்­­டும் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

2022இல் நெருக்­கடி காலத்­தின்­போது இடைக்­கால ஜனா­தி­ப­தி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வு­ செய்­யப்­பட்ட போது, அதில் அமெ­ரிக்கத் தூதுவர் தலை­யிட்­ட­தாக விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில் அது தொடர்­பாக கருத்து வெளி­யிட்ட தூதுவர் ஜூலி சங், அமெ­ரிக்கா எப்போதும் எந்­த­வொரு தனிப்­பட்ட அர­சி­யல்­வா­தி­யையும் ஆத­ரிப்பதில்லை எனவும்  சுட்­டிக்­காட்­டினார்.

மேலும் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம், சர்­வ­தேச தர நிலை மற்றும் நிதி முறை­க­ளுக்கு உட்­பட வேண்­டு­மென்றும் அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்கும் வலு­வான எதிர்­கா­லத்தை உரு­வாக்க கடந்த காலத்தை நிவர்த்தி செய்­வது அவ­சியம் என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

அதே­போன்று அடுத்த வருடம் அமெ­ரிக்­கா­விலும் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற­வுள்ளதாக தெரி­வித்த அமெ­ரிக்கத் தூதுவர், இலங்­கை­யிலும் உரிய நேரத்தில் தேர்­தல்கள் நடத்­தப்­ப­டு­வது அவ­சி­ய­மென்றும் குறிப்­பிட்டார்.

“அர­சி­ய­ல­மைப்­பின்­படி சரி­யான நேரத்தில் ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வது முக்­கி­ய­மா­ன­தாக இருக்கும். ஆனால் உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்­தல்­களும் தாம­த­மா­கி­யுள்­ளன. ஆகவே மக்­க­ளுக்கு வாக்குப் பெட்டி ஊடாக குரல் கொடுக்க அனு­ம­திக்கும் வகையில் சரி­யான நேரத்தில் தேர்­தல்கள் நடை­பெ­று­வதை உறுதி செய்ய வேண்டும்” என்று அமெ­ரிக்கத் தூதுவர் சுட்­டிக்­காட்­டினார்.

இதே­வேளை பொரு­ளா­தார நெருக்­கடி காலத்­தின்­போது ஏன் இலங்­கைக்கு நேரடிக் கடன்­களை வழங்­க­வில்லை என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளித்த அமெ­ரிக்கத் தூதுவர், அமெ­ரிக்கா அர­சாங்கம் – அர­சாங்கம் என்ற அடிப்­ப­டை­யி­லான கடன்­களை வழங்­கா மல் இருப்­பது நாட்டின் இறைமை கடன் சுமை அதி­க­ரிப்­பதை தவிர்ப்­ப­தற்­காகும் என்­றார்.

“இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு கடன்­களே உண்­மையில் பங்­க­ளித்­தன. அர­சாங்­கங்­க­ளுக்­கி­டை­யி­லான கடன்­களை நாம் தவிர்க்க விரும்­பினோம். நாங்கள் தொடர்ந்து இலங்­கைக்கு ஒரு நல்ல பங்­கா­ளி­யாக இருப்போம்” என்று அமெ­ரிக்கத் தூதுவர் குறிப்­பிட்டார்.

அமெ­ரிக்கத் தூதுவர் ஜூலி சங் உட­னான நேர்­கா­ணலின் முழு­மை­யான விப­ரங்கள் வரு­மாறு:  

கேள்வி : சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் இரண்­டாம் கட்ட நிதி­யு­தவி கிடைத்­துள்­ளது. அது குறித்த உடன்­பாட்டை நீங்கள் வர­வேற்­றி­ருந்­தீர்கள். இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­கடி, மீள்­வ­ருகை, நாணய நிதி­யத்தின் பங்­க­ளிப்பை அமெ­ரிக்கா எப்­படிப் பார்க்­கி­றது?  

பதில் : கடந்த ஆண்டு பொரு­ளா­தார நெருக்­க­டியின் உச்­சத்தில் இலங்கை எங்கே இருந்­தது என்­பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இலங்கை மிக நீண்ட தூரம் வந்­து­விட்­டது என்று நினைக்­கிறேன். சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் திட்­டத்­துடன் தொடர இலங்கை அர­சாங்கம் மேற்­கொண்ட முடிவை நாங்கள் வர­வேற்­கிறோம். 

இது கடந்த ஆண்டு நிலைமை மோச­மாக இருந்­த­போது, நாட்டை ஒரு நிலை­யான பாதையில் கொண்டு வரு­வ­தற்கு இது தேவை­யாக இருந்­தது. மேலும் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் ஆளுமை கண்­ட­றியும் பரிந்­து­ரை­களும் (IMF governance diagnostic) முக்­கி­ய­மா­னது. 

அர­சாங்கம் பல நட­வ­டிக்­கை­க­ளையும் சீர்­தி­ருத்­தங்­க­ளையும் சரி­யான திசையில் செய்­துள்­ளது. இங்கு உட­­னடி நெருக்­கடி நிர்­வா­கத்­துக்கு அப்­பாற்­­பட்ட விட­யங்­களும் முக்­கி­ய­மா­னவை. மற்­றும் நீண்ட காலத்­துக்கு பொரு­ளா­தா­ரத்தை எவ்­வாறு நிலை­யா­ன­தாக மாற்­று­வது, நிலை­­யான சீர்­தி­ருத்­தங்­களைச் செய்தல், நீடித்த சீர்­தி­ருத்­தங்­களை உரு­வாக்­குதல், நீண்­ட­கால மீட்பு மற்றும் செழிப்­புக்கு முக்­கி­ய­மா­ன­தாக இருக்கும் வெளிப்­ப­டைத்­தன்மை மற்றும் நல்­லாட்­சியைக் கொண்­டு­வ­ருதல் என்­பன இலங்­கைக்கு மிக முக்­கி­ய­மா­ன­தாகும். நாங்கள் எப்­போதும் இலங்­கையை கடி­ன­மான காலங்­களில் ஆத­ரிக்­கிறோம். நாங்கள் தொடர்ந்து ஒரு நல்ல கூட்­டா­ள­ராக இருப்போம்

கேள்வி : கடந்த வருட நெருக்­கடி நேரத்தில் இந்­தியா இலங்­கைக்கு 3.8 பில்­லியன் டொலரை கட­னாக வழங்­கி­யது. ஆனால், அமெ­ரிக்கா அவ்வா­றான நேரடிக் கடனை வழங்­க­வில்­­லையே, ஏன்?

பதில் : அந்த நேரத்தில் ஏரா­ள­மான மனி­தா­பி­மான, அவ­சர உத­வி­களை வழங்­கினோம். மக்­க­ளுக்கு நேர­டி­யாகச் செல்லும் வகையில் 270 மில்­லியன் டொலர் வழங்­கினோம். அதில் உரமும் அடங்கும். முழு நாட்டின் ஒவ்­வொரு பகு­தி­யிலும் ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான நெல் விவ­சா­யிகள் இதில் பய­ன­டைந்­தனர். பாடசாலை மதிய உணவுத் திட்­டத்தை  இரட்­டிப்­பாக்­கினோம். அதனை 32 மில்­லி­ய­னாக இரட்­­டிப்­பாக்­கினோம். ஊட்­டச்­சத்து குறை­பாட்டை  நீக்க இது உத­வி­யது.

அபி­வி­ருத்தி நிதிக் கூட்­டுத்­தா­ப­ன­மான டி.எப்.சி திட்­டத்தின் கீழ் நெருக்­கடி கார­ண­மாக நிதி அணுகல் இல்­லாத சிறிய நடுத்­தர வர்த்­த­கர்­க­ளுக்­கான நிதி­யு­த­விக்கு 170 மில்­லியன் டொலர் கடன் வழங்­கப்­பட்­டது.  

ஆனால், இறை­யாண்மை கடன் இலங்­கைக்கு அதி­க­ரிப்­பதை நாங்கள் தவிர்க்க விரும்­பினோம். அர­சாங்­கங்­க­ளுக்­கி­டை­யி­லான கடன்­களை நாம் தவிர்க்க விரும்­பு­கிறோம். ஏனென்றால், இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு கடன்­களே உண்­மையில் பங்­க­ளித்­தன. அமெ­ரிக்கா செய்ய விரும்­பு­வது தனியார்துறை வளர்ச்­சிக்கு பங்­க­ளிப்­ப­தாகும்.  

சிறிய, நடுத்­தர வர்த்­த­கங்­களே பொரு­ளா­தா­ரத்தின் முது­கெ­லும்பு. நான் பல சிறிய, நடுத்­தர உரி­மை­யா­ளர்­களை, குறிப்­பாக பெண் வணி­கர்­களைச் சந்­தித்தேன். எங்கள் டி.எப்.சி கடன்கள் அதி­க­ளவில் பெண்­க­ளுக்குச் சொந்­த­மான வணி­கங்­க­ளுக்கும், பசுமை எரி­சக்தி திட்­டங்­களை ஆத­ரிப்­ப­தற்கும் செல்­கின்­றன.

கேள்வி : முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டாபய இரா­ஜி­னாமா செய்­த­போது இடைக்­கால ஜனா­தி­­­ப­தியை தெரிவு செய்யும் விட­யத்தில் அமெ­ரிக்கா என்ன செய்­தது? ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யாக வரு­வதை அமெ­ரிக்கா விரும்­பி­யதா? விரும்­ப­வில்­லையா? என்ன நடந்­தது?  

பதில் : உண்மை என்­ன­வென்றால், எந்­த­வொரு தனிப்­பட்ட அர­சி­யல்­வா­தி­யையோ அல்­லது அர­சியல் கட்­சி­யையோ அமெ­ரிக்கா ஆத­ரிக்­க­வில்லை. ஒரு தலை­வரை மக்கள் தெரிவு செய்­வதும் அல்­லது பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக தெரிவு செய்­வதும் அர­சியல் முடி­வுகள். நாங்கள் அர­சாங்­கத்தின் தலை­வர்­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றுவோம், அது ஜனா­தி­பதி ரணி­லா­கவும் அவ­ரது அமைச்­ச­ர­வை­யா­கவும் இருக்­கலாம். 

அர­சாங்கம் மாறினால் நாங்கள் அந்த அர­சாங்­கத்­து­டனும் பணி­யாற்­றுவோம். அர­சாங்­கத்தில் இருப்­பவர், எதிர்க்­கட்­சி­களில் இருப்­பவர், வணி­கர்கள், சிவில் சமூ­கத்­தினர் என அனை­வ­ரு­டனும் ஒன்­றாக இணைந்து பணி­யாற்ற எங்­களால் முடிந்த அனைத்­தையும் செய்ய விரும்­பு­கிறோம். இத­­னால் இலங்கை மக்­களை எங்களால் ஆத­­ரிக்க முடியும்.

கேள்வி : நீங்கள் அண்­மையில் ஜே.வி.பி. தலை­வரை சந்­தித்­தீர்கள். வழ­மை­யாக அவ்­­வாறு நடக்­காது. சந்­திப்பின் நோக்கம் என்ன?  

பதில் : ஆம், நான் அனைத்து தரப்பு தலை­வர்­க­ளை­யும் அர­சி­யல்­வா­தி­க­ளையும் சந்­திக்கிறேன். நான் உள்ளூர் சமூகத் தலை­வர்­க­ளை­யும் சந்­திக்­கிறேன். நான் சந்­திக்கும் அர­சி­யல் தலைவர்களில் அனுர குமா­ரவும் ஒருவர். 

இரண்­டாவது முறை­யாக அவரைச் சந்­தித்­தேன். எதிர்­­கா­லத்­திற்­கான கரி­ச­னைகள் அல்­­­லது தீர்­வு­க­ளாக அவ­ரது கட்சி என்ன முன்­­­மொ­ழி­கி­றது என்­பது குறித்த அவ­ரது கருத்­து­களைக் கேட்க விரும்­பினேன். நான் இதை அனைத்து அர­சியல் தலை­வர்­க­ளு­டனும் முன்­னெ­டுக்­கிறேன்.

கேள்வி : அடுத்த வருடம் இலங்­கையில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அது தொடர்பில்?

பதில் : எந்­த­வொரு ஜன­நா­ய­கத்தின் முது­கெ­லும்­பா­கவும் தேர்­தல்கள் உள்­ளன என்று நம்­பு­கிறோம். தேர்­தல்கள் இல்­லாமல் ஜன­நா­யகம் இருக்க முடி­யாது. அமெ­ரிக்­கா­விலும் ஜனா­தி­பதித் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. 

எனவே உங்கள் அர­சி­ய­ல­மைப்­பின்­படி, சரி­யான நேரத்தில் ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வது முக்­கி­ய­மா­ன­தாக இருக்கும். ஆனால், உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்­தல்­களும் தாம­த­மா­கி­யுள்­ளன. 

ஆகவே மக்­க­ளுக்கு வாக்­குப்பெட்டி ஊடாக  குரல் கொடுக்க அனு­­ம­­திக்கும் வகையில் சரி­யான நேரத்தில் தேர்­தல்கள் நடை­பெ­று­வதை உறுதி செய்ய வேண்டும். இது இலங்­கையில் ஜன­நா­யகம் தொடர்ந்து செழிப்­பதை உறுதி செய்யும்.

கேள்வி : பொறுப்­புக்­கூறல் நல்­லி­ணக்கம் குறித்துப் பேசு­கின்­றீர்கள். இலங்கை உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­க­வுள்­ளது. இது தொடர்பில்?  

பதில் : நல்­லி­ணக்­கமும் பொறுப்­புக்­கூ­றலும் இவ்­வ­ளவு நீண்ட கால­மாக இடம்­பெ­று­கின்­றன. நாடு முழு­வதுமுள்ள பல­ரு­ட­னான எனது பய­ணங்­க­ளி­லி­ருந்து, மக்கள் பதில்­க­ளுக்­காகக் காத்­தி­ருப்­பதை நான் பார்த்­தி­ருக்­கிறேன். குறிப்­பாக காணாமல் போன­வர்­களின் தாய்­மார்கள் அல்­லது சகோ­த­ரர்கள் அல்­லது சகோ­த­ரி­களைக் குறிப்­பி­டலாம்.

பல ஆண்­டு­க­ளுக்குப் பிறகு பதில்­க­ளுக்­காக இன்னும் பலர் காத்­தி­ருப்­பதைப் பற்றி கேட்­பது சிர­ம­மாக இருக்­கி­றது. காணாமல் போன­வர்­களின் அலு­வ­லக செயற்­பாட்டில் சில வரை­ய­றுக்­கப்­பட்ட முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. அந்த அலு­வ­ல­கத்­தினால் மேலும் பல­வற்றைச் செய்ய முடியும் என்று நினைக்­கிறேன். அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்கும் வலு­வான எதிர்­கா­லத்தை உரு­வாக்க கடந்த காலத்தை நிவர்த்தி செய்­வது முக்­கி­ய­மாகும். இந்தத் தேவைகள் மற்றும் குடி­மக்கள் அனை­வரின் இந்தக் கவ­லைகள் குறித்து அர­சாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்­து­வது முக்­கியம்.

ஓர் உண்மை மற்றும் நல்­லி­ணக்க வழி­முறை, முன்­மொ­ழிவு பற்றி கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம். இது குறித்து சிவில் சமூ­கத்­தி­லி­ருந்து சில கரி­ச­னை­க­ளையும் கருத்­து­க­ளையும் நாங்கள் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம். வெறு­மனே மற்­று­மொரு ஆணைக்­கு­ழுவை மக்கள் விரும்­ப­வில்­லை­யென்று நான் நினைக்­கிறேன். உண்­மை­யான, உறு­தி­யான முடி­வுகள் மற்றும் முயற்­சிகள் இருக்கும் என்­பதைக் காண்­பிப்­பதே மக்­க­ளுக்கு அவ­­சி­ய­மாகும். உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வுக்­கான இந்த முயற்­சி­களைத் தொட­ரும்­போது, மனித உரி­மைகள் குறித்து நில உரி­மைகள் தொடர்­பான சில நம்­பிக்­கையை வளர்க்கும் நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மாகும். 

எனவே இந்த விட­யத்தில் அனைத்து பங்­கு­தா­ரர்­களும் ஆலோ­சிக்­கப்­ப­டு­வார்கள் என்று நம்­பு­கிறோம். குறிப்­பாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் அனைத்து சிறு­பான்மை சமூ­கங்­க­ளு­டனும் ஆலோ­சிக்­கப்­பட வேண்டும். இந்த உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு பாதிக்­கப்­பட்ட மக்­களை  மைய­மாகக்கொண்­ட­தாக இருக்க வேண்டும் என்­ப­தனை எப்­போதும் வலி­யு­றுத்­தி­யுள்ளோம்.

கேள்வி : உல­க­ளா­விய தமிழர் மன்றம் இலங்­­கைக்கு தற்­போது வந்து சந்­திப்­பு­களில் ஈடு­பட்­டுள்­ளது. மேலும், வெளி­நா­டு­களில் வாழும் இலங்­கை­யர்கள் இலங்­கையில் முத­லீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்­கையும் விடுக்­கப்­பட்டு வரு­கி­றது. அமெ­ரிக்­காவில் உள்ள இலங்கை புலம்­பெயர் மக்­க­ளுக்கு உங்கள் செய்தி என்ன?  

பதில் : பல இலங்கை அமெ­ரிக்க வணிக மக்கள் இலங்­கைக்கு திரும்பி வந்து முத­லீடு செய்ய விரும்­பு­கி­றார்கள். இருப்­பினும், அவர்­களின் பணம், அவர்­களின் முத­லீடு, பணம் பாது­காக்­கப்­ப­டு­வதை உறுதி செய்­வது அவ­சி­ய­மாகும்.  ஊழல்கள்  இடம்­பெறக்கூடாது.  

அவர்கள் தேடு­வது அவர்­களின் முதலீட்­­­டுக்கும் நல்­லாட்­சிக்­கு­­மான உத்­த­ர­வாதங்­களாகும். அத­னால்­தான், புலம்­பெயர் மக்­க­ளுக்கு நம்­பிக்­கையை வழங்க அர­சாங்­கத்தை ஊக்­கு­விக்­கிறோம்.   இதன்­மூலம்  அமெ­ரிக்­கா­வி­லுள்ள அதிக இலங்­கை­யர்­­­களை திரும்பி வர ஊக்­கு­­விக்க முடியும்.  

அநேக புலம்­பெயர் சமூ­கங்கள் திரும்பி வந்து  இணைப்­பு­க­ளையும் பாலங்­க­ளையும் உரு­­­வாக்க விரும்­பு­கின்­­றன என்று நான் நினைக்­கி­றேன். எனவே வெளி­நாட்டு வாழ் இலங்­கை­யர்­க­ளுக்­கான புதிய அலுவலகம் அமைக்­கப்­பட்­டுள்­ளதைக்  கண்டு நாங்கள் மகிழ்ச்­சி­ய­டைந்தோம். அமெ­­ரிக்­காவில் மட்­டு­மல்ல கனடா, அவுஸ்­தி­ரே­­லியா, ஐரோப்பா மற்றும் வேறு இடங்­களி­லுள்ள இலங்­கை­யர்கள் இலங்­கை­யுடன் மீண்­டும் இணை­வ­தற்கு  உத­வு­வ­தாக அமை­யும்.

கேள்வி : இலங்­கையில் தமிழ் பேசும் மக்கள் நீண்­ட­கா­ல­மாக அர­சியல் தீர்வை கோரி வரு­கின்­றனர். நீங்கள் அடிக்­கடி தமிழ் தலை­வர்­களை சந்­தித்துப் பேச்சு நடத்­து­கி­றீர்கள். தீர்­வுத்­திட்டம் குறித்து அவர்கள் என்ன கூறு­கின்­றனர்? அர­சியல் தீர்வு குறித்த உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில் : இந்த விட­யத்தில் அனைத்து இலங்­கை­யர்­களின் குரல்­க­ளையும் நிபு­ணத்­து­வத்­தையும் அனு­ப­வத்­தையும் நாம் கேட்­பது மிகவும் முக்­கியம்.  

அத­னால்தான் வெவ்­வேறு மாகா­ணங்­க­ளுக்குச் சென்று மக்­க­ளி­ட­மி­ருந்து கற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கிறேன். ஆகவே அவர்­களின் கருத்­து­க்களைக் கேட்­கும்­போது இவை அனைத்தும் ஒரே மாதி­ரி­யா­னவை அல்ல, மக்­க­ளுக்கு மிகவும் மாறு­பட்ட பார்­வைகள் உள்­ள­னவா?, இல்­லையா? என்­பதை புரிந்­து­கொள்ள முடியும்.

எவ்­வாறு முன்­னே­று­வது என்­பது குறித்து மக்கள் வெவ்­வேறு தீர்­வுகள் மற்றும் வெவ்­­ வேறு யோச­னை­களைக் கொண்­டுள்­ளனர். ஆனால் அவர்­களின் குரலைக் கேட்க வேண்­ டும் என்று அவர்கள் விரும்­பு­கி­றார்கள். அவர்­கள் குடி­மக்­களின் ஒரு பகு­தி­யாக இருக்க விரும்­பு­கி­றார்கள். மற்றும் இந்த நாட்டின் எதிர்­கா­லத்தை முடி­வெ­டுக்கும் செயல்­மு­றையில் பங்­கெ­டுக்க விரும்­பு­கி­றார்கள்.

அவர்கள் எண்­ணிக்­கையில் சிறி­ய­தாக இருக்­கலாம். ஆனால், அவர்­களின் உரிமை­கள் கேட்­கப்­ப­டு­வ­தையும் உரி­மைகள் செயற்­ப­டுத்­தப்­படு­வ­தையும் உறு­திப்­ப­டுத்த விரும்­பு­கி­றார்கள்.  இந்த விவா­தங்கள் மற்றும் கரி­ச­னைகள் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து வரு­கின்ற அர­சியல் தீர்வு எது­வாக இருந்­தாலும், அது உண்­மையில் எல்லாத் தரப்­பி­ன­ரதும் ஓர் உண்­மை­யான நல்­லி­ணக்க முயற்­சி­யாக இருக்க வேண்டும். அத­னால்தான் நான் பயணம் செய்யும் போது பல்­வேறு தமிழ் தலை­வர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்­களைச் சந்­திக்­கும்­போது இது பற்றிப் பேசு­கிறேன். எதுவும் சாத்­தியம் என்று நினைக்­கிறேன். நான் ஒரு­போதும் அவ­நம்­பிக்­கை­யா­னவர் அல்ல. இதில் கடின உழைப்பு தேவை­யென்று நான் நம்­பு­கிறேன்.

கேள்வி : அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா ஆகிய  சக்­தி­க­ளுக்கு இடையில் இலங்கை சிக்­கி­யி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றதே?

பதில் : இலங்­கையின் கைகளில் அதன் சொந்த விதி உள்­ளது. இது எந்த நாட்­டுக்கும் இடையில் சிக்­க­வில்லை. இலங்கை மிகவும் பெரு­மை­கொண்ட ஓர் இறை­யாண்மை கொண்ட நாடு.  திற­மை­களைக் கொண்­டது.  

இலங்கை பல நாடு­க­ளையும், சென்­ற­டை­கி­றது, மேலும் அது அதன் சொந்த தலை­வி­தி­யையும் அதன் சொந்த விதி­யையும் வளர்க்க முடியும். இங்­குதான் நாம் அதை மதிக்­கிறோம். இலங்­கையின் ஒரு நண்­ப­ரா­கவும் கூட்­டா­ளி­யா­கவும் இருக்க  அமெ­ரிக்கா விரும்­பு­கி­றது.  

கேள்வி : இலங்­கை சீனாவின் கடன் பொறியில் சிக்­கி­யுள்­ள­தாக அடிக்­கடி அமெ­ரிக்க அறிக்­கை­கள் கூறு­கின்­ற­னவே?

பதில் : இலங்­கையின் தற்­போ­தைய பொரு­ளா­தார நிலை மற்றும் கடந்த வருடம் என்ன நடந்­தது என்­பதை பார்க்கும்போது இலங்கை பல வரு­டங்­க­ளாக கடன் நெருக்­க­டியில் உள்­ளது தெரி­கின்­றது. சீனா மிகப்­பெ­ரிய இரு­த­ரப்பு கடன் வழங்­கு­ந­ராக இருக்­கின்­றது. தனியார் பிணை­முறி பத்­தி­ர­தா­ரர்­களும் இதில் அடங்­கு­கின்­றனர்.

எனவே பாரிய பொரு­ளா­தாரக் கொள்­கை­கள் பல ஆண்­டு­க­ளாக இல்­லாமல் போய்­விட்­­டன. அது உண்­மையில் பொரு­ளா­தார நெருக்­­க­டியை அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இப்­போது முக்­கி­ய­மான விடயம் என்ன­வென்றால் இலங்கை தனது பொரு­ளா­தா­ரத்தை நன்கு நிர்­வ­கிக்க, அனைத்து திட்­டங்­க­ளையும், உள்­கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளையும், முத­லீட்டு திட்­டங்­க­ளையும்  நல்­லாட்­சி­யுடன்  முன்­னெ­டுப்­பது முக்­கி­ய­மாகும்.

வெளிப்­ப­டைத்­தன்மை, சிறந்த கொள்­முதல் செயல்­மு­றைகள் முக்­கி­ய­மாகும். அது எந்த நாட்­டி­லி­ருந்து முத­லீ­டு­களை எடுத்­தாலும் அல்­லது கடன் பெற்­றாலும் பின்­பற்­றப்­பட வேண்டும். பெறப்­பட்ட கடன்கள் அல்­லது  வர­வி­ருக்கும் திட்­டங்கள் அனைத்தும் முழு வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் செய்­யப்­ப­டு­கின்­ற­னவா என்­பதை உறு­திப்­ப­டுத்த நல்ல வெளிப்­ப­டைத்­தன்மை மற்றும் நிர்­வாக செயல்­மு­றைகள் இருப்­பதை உறுதி செய்­வது அவ­சி­ய­மாகும்.  

கேள்வி : பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் குறித்து அண்­மையில் பேசி­யி­ருந்­தீர்­களே?

பதில் : அமெ­ரிக்கா, சர்­வ­தேச சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பங்­கு­தா­ரர்கள் பல ஆண்­டு­க­ளாக காலா­வ­தி­யா­கி­விட்ட பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை திருத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

உலகம் வேறு, இலங்கைச் சூழல் வேறு என்று இருந்த காலத்தில் இந்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. எந்த ஒரு நாட்­டுக்கும் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக சட்டம் இயற்ற உரிமை உண்டு. ஆனால் அதேநேரத்தில் அது சர்­வ­தேச தர­நி­லைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு உள்­ளா­கு­வதை உறுதி செய்தல் அவ­சியம்.

பல அம்­சங்­களில் அது கருத்துச் சுதந்­திரம் மற்றும் உரி­மை­களின் சுதந்­தி­ரத்தைப் பாதிக்­கி­றது. மேலும், பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்துப் போராடும் மக்­களின் தேவை­களை நிவர்த்தி செய்யும் வகையில் தற்­போது உரு­வாக்­கப்­பட்­டுள்ள புதிய பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்ட திருத்­தத்தை ஊக்­கு­விக்­கு­மாறும், எமது கரி­ச­னை­களை வெளிப்­ப­டுத்­து­மாறும், இலங்கை அர­சாங்கம் மற்றும் சர்­வ­தேச சமூ­கத்தில் உள்ள பல­ருக்கும் அழைப்பு விடுத்­துள்ளோம். அந்த திருத்­தங்கள் ஊடாக பயங்­க­ர­வா­தத்தை தடுக்க முடி­யு­மா­க­வேண்டும் என்ற அதே­வேளை மக்­களின் சுதந்­திரம் மற்றும் உரி­மைகள் மீறப்­ப­டாமல் இருப்­பதை உறுதி செய்ய வேண்டும்.

கேள்வி : இலங்­கையில் உங்­க­ளுக்குப் பிடித்த உணவு எது?

பதில் : எனக்கு இலங்கை உண­வுகள் பிடிக்கும்.   குறிப்­பாக கார­மான உணவை விரும்­பு­கிறேன்.  ஏனென்றால் நான் கொரி­யாவில் பிறந்தேன், கார­மான உண­வுடன் வளர்ந்தேன். குறிப்­பாக   யாழ்ப்­பாணம் செல்­லும்­போது, யாழ்ப்­பாண நண்டுக் கறி மற்றும் யாழ்ப்­பாண மிளகாய் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் யாழ்ப்­பாணக் கூழ் எனக்குப் பிடிக்கும். ஒரு­முறை யாழில் நான் கூழ் குடித்துக்கொண்­டி­ருந்­த­போது, உண­வ­கத்தில் இருந்த பெண்­மணி, இது கார­மாக இருக்­குமே என்று கூறினார். ஆனால் நான் அதை மிகவும் விரும்பி  அருந்­தி­ னேன்.  

எனக்கு  மோத­கமும் பிடிக்கும். அது வடக்கில் நான் சாப்­பிட்ட மற்­றொரு பிடித்த உணவு. அது ஒரு கொரிய உணவைப் போலவே இருக்கும். அத்­துடன் இடி­யப்­பமும் எனக்குப் பிடிக்கும்.  இலங்கை தேநீரை விரும்பி அருந்­துவேன்.  சில தேயிலைத் தோட்­டங்­க­ளையும் பார்­வை­யிட்டேன். சுவை­யான தேநீரை நான் மிகவும் ரசிக்­கிறேன். அது இலங்­கையின் பெருமை.

கேள்வி : இலங்கையில் பிடித்த இடங்கள்?

பதில் : மிகக் கடினமான கேள்வி. ஏனென்றால் நான் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். நான் இயற்கையில் இருப்பதை விரும்புகி றேன். அதனால் நான் மலையில் ஏறு­வது, நடைப்பயணம் செய்வது என்று ஒவ்வொரு முறையும் செல்வேன். ஆனால் மலையேறு­வது எனக்குப் பிடிக்கும். உதாரணமாக பிது­ரங்கலாவைப் பிடிக்கும். அங்கிருந்து நீங்கள் சீகிரியாவின் அழகிய காட்சியைக் காணலாம். அதனால் உயரமான இடங்களுக்கு ஏறுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ரஜகலவிற்கும் சென்றேன், அதுவும் சற்று கடினமான உய­ரம்­தான். இலங்கையின் வெளிப்புற அழ­கின் தூய்மையின் தன்மையை நான் விரும்புகி­றேன்.

கேள்வி : இலங்கை மக்களின் மீண்டுவரும் தன்மை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் : மீண்டு வருதல் மட்டுமல்ல, அனைத்து சிரமங்களையும், சவாலான காலங்­களை­யும் கடந்து இலங்கை மக்களின் நகைச்­சுவை  உணர்வை நான் ரசிக்கிறேன். இலங்கையர் ­களின் மீண்டு வருதல் மற்றும் நகைச்­சுவை­­யால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்­டேன். விட­யங்கள் எவ்வளவு கடினமானதாக இருந்­­­­தா­லும், மக்கள் மீண்டு வருகின்றனர். அனைத்தும் தொடர்கின்றன. இலங்கையின் நண்­பனாக அமெரிக்கா தொடர்ந்தும் இருக்­கும்.  

கேள்வி : இலங்கையில் மறக்க முடியாத நிகழ்வு ஏதாவது?  

பதில் : எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய உள்ளன. ஆனால் அமெரிக்க செனட்­டர் கிறிஸ் வான் ஹோலன் இலங்கை, அமெ­ரிக்க இராஜதந்திர உறவின் 75ஆவது ஆண்டு நிறைவின் போது இலங்கைக்கு விஜயம் செய்தார். என்னைப் பொறுத்தவரை அது மிக­­­வும் மறக்க முடியாத நிகழ்வு. காரணம் அவ­­ரது தந்தை 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அமெ­ரிக்கத் தூதுவராக இருந்தார். 

தூதுவரின் மகன் தான் சிறு வயதில் வாழ்ந்த தூதுவரின் வசிப்பிடத்துக்குத் திரும்பி வந்தமை, மீண்­டும் தனது பழைய வீட்டைப் பார்த்தமை, 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே ஒரு குழந்­தை­யாக இருந்ததைப் பற்றிப் பேசி­யமை மறக்க முடியாதது. நாங்கள்  கண்டிக்­கும் சென்றோம். நான் இதுவரை மறக்க முடி­யாத தருணங்களில் அதுவும் ஒன்றாகும்.

https://www.virakesari.lk/article/171958

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.