Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   03 JAN, 2024 | 03:46 PM

image
 

2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நேர அட்டவணையில் சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

கொரிய மொழி புதிய பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதால் உயர்தரப் பரீட்சை நேர அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் பரீட்சை அனுமதி அட்டையில் திருத்தப்பட்ட நேர  அட்டவணை குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து பரீட்சார்த்திகளும்  முன்னதாக வழங்கிய பரீட்சை நேர அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம். அதே நேரத்தில் சில இணையத்தளங்களும் தவறான அட்டவணையைக் காட்டக்கூடும்.

"உங்கள் பரீட்சை அனுமதி அட்டையில் தனிப் பிரிவு உள்ளது. அந்தப் பிரிவில், ஒவ்வொரு பாடத்திற்குமான திகதி மற்றும் நேரப் பகுதிகள், பாட எண் மற்றும் மொழி [கல்விக்கான ஊடகம்] ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. அது போதுமானதாகும். நேர அட்டவணையைப் பற்றி நீங்கள் வேறு எதையும் ஆராயத் தேவையில்லை" தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நாளை முதல் முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/173019

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை: புதிய அறிவிப்பு

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் வெளியானதாக சந்தேகம் எழுந்ததால், வினாத்தாள் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் குறித்த பாடத்திற்கான புதிய
வினாத்தாள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

குறித்த பரீட்சை நடைபெறும் திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பின்னர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/287996

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெங்குவால் பாதிக்கப்பட்டு நோயாளர் காவு வண்டியில் சென்று A/L பரீட்சையில் தோற்றிய மாணவி!

EXAM.jpg

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் உயர் தர பரீட்சையில் தோற்றியுள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தரப்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த மாணவிக்கு அதிகாலை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவடையாதிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அந்த மாணவியை மருத்துவ தாதி ஒருவருடன் அவசர நோயாளர் காவு வண்டியில் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச்சென்று பரீட்சையில் தோற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/288102

  • இணையவன் changed the title to க.பொ.த உயர்தர பரீட்சை சம்பந்தமான செய்திகள்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2024 at 06:04, ஏராளன் said:

க.பொ.த உயர்தரப் பரீட்சை: புதிய அறிவிப்பு

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் வெளியானதாக சந்தேகம் எழுந்ததால், வினாத்தாள் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் குறித்த பாடத்திற்கான புதிய
வினாத்தாள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

குறித்த பரீட்சை நடைபெறும் திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பின்னர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/287996

 

ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் எத்தனை பேருக்கு சிரமம். சோதனை எடுக்கும் பிள்ளைகள் தான் பாவம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சைக்கு முன்னரே வினாத்தாள் வெளியான விவகாரம்: அம்பாறை ஆசிரியர் கைது!

14 JAN, 2024 | 07:35 PM
image
 

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியான சம்பவம் தொடர்பில் அம்பாறையைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறையைச் சேர்ந்த ஆண் ஆசிரியர் ஒருவரே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/173967

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினாத்தாள் வெளியான சம்பவம்: மற்றொருவர் மொரட்டுவையில் கைது!

16 JAN, 2024 | 08:41 AM
image

இந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான விவசாய வினாத்தாளை குறித்த பாடப் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னரே  சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அலுவலக உதவியாளர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (15)  கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவையில் உள்ள பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விவசாய வினாத்தாள்களை மாணவர் ஒருவருக்கு பணத்துக்காக விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/174019

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

க.பொ. த. உயர்தர விவசாய விஞ்ஞான பாடத்திற்கான புதிய பரீட்சை திகதி அறிவிப்பு

Published By: DIGITAL DESK 3  17 JAN, 2024 | 09:32 AM

image
 

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளின் சில வினாக்களும் பரீட்சைக்கு முன்னர் சமூக ஊடக ஊடகங்களில் வெளியானதைக் கண்டறிந்ததை அடுத்து குறித்த பரீட்சை பரீட்சைகள் திணைக்களத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டாம் பகுதி வினாத்தாளின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் வெளியானதால் 12 ஆம் திகதி இடம்பெறவிருந்த குறித்த பரீட்சையும் இரத்து செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

அதன்படி, பாட எண் 8 இன் கீழ் உள்ள விவசாய விஞ்ஞானப் பாடத்தின்  இரண்டாம் பகுதி வினாத்தாள் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரையில் நடைபெறும்.

அத்துடன், முதலாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை நடைபெறும்.

பரீட்சை தொடர்பான விபரங்கள் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அந்தந்த அதிபர்களுக்கும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/174117

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரத்து செய்யப்பட்ட உயர்தர விவசாயப்பாட பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு

al-exam-300x200.jpg

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பரீட்சையை நடத்துவதற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த பரீட்சையின் இரண்டாவது பரீட்சை தாள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 முதல் 03 மணி வரை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு முன்னதாகவே குறித்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து மூன்று மொழிகளிலும் குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் கடந்த 10 ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/289588

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உ/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து ஆசிரியர்கள் விலகல்!

joseph-stalin-300x200.jpg

கடந்த முறை வழங்கப்பட்ட 2,000 ரூபா கொடுப்பனவு இம்முறை 1,450 ரூபாவாக குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உ/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து ஆசிரியர்கள் இன்று விலகியுள்ளனர்.

உடனடியாக இதற்கு தீர்வு காணாவிட்டால் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/290160

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர செயன்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பம்

al-exam-300x200.jpg

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் இன்று(20) முதல் ஆரம்பமாகுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டியம், சங்கீதம், நாடகமும் அரங்கியலும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இவ்வாறு ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பாடங்களுக்கான பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதிப்பத்திரங்கள், விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தவிர பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதனிடையே, நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நாளை மறுதினம்(22) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் கடந்த 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

அண்மையில் நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சையில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

https://thinakkural.lk/article/292493

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.