Jump to content

டி20 உலகக் கோப்பைச் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பை: சொந்த நாட்டிற்கே தோல்வி பயத்தை காட்டிய வீரர்

USA vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 20 ஜூன் 2024, 04:39 GMT
    புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் கத்துக்குட்டி அமெரிக்க அணிக்கு எதிராக போராடித்தான் தென் ஆப்ரிக்க அணியால் வெல்ல முடிந்துள்ளது. ரபாடா, நோர்க்கியா மட்டும் கடைசி இரு ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசாமல் இருந்திருந்தால், தென் ஆப்ரிக்காவின் தோற்றுப் போயிருக்கும்.

சொந்த நாட்டிற்கே தோல்வி பயத்தை காட்டிய ஆன்ட்ரிஸ் கோஸின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. தென் ஆப்ரிக்கா - அமெரிக்கா ஆட்டத்தில் என்ன நடந்தது?

ஃபார்முக்கு வந்த டீ காக்

நார்த் சவுண்ட் நகரில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றின் குருப்-பி பிரிவில் தென் ஆப்ரிக்கா - அமெரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அமெரிக்காவில் இருந்து பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சொதப்பலாக பேட் செய்த தென் ஆப்ரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளம் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளத்தில் ஃபார்முக்கு திரும்பினார்.

USA vs SA

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொடக்கத்தில் திணறிய டீ காக், பவர்ப்ளேயில் 4 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. ஜஸ்தீப் சிங் ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரி அடித்த அவர் அதனைத் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசி ஃபார்முக்கு திரும்பினார். ஜஸ்தீப் சிங் தனது முதல் ஓவரிலேயே 28 ரன்களை வாரி வழங்கினார்.

பவர்ப்ளே முடிவில் டீகாக்கின் அதிரடியால் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்தது. அதன்பின் அதிரடியாக ஆடத் தொடங்கிய டீ காக், கோரி ஆன்டர்சன் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். அணியின் ஸ்கோர் உயர்வுக்கு துணை செய்த டீ காக் 74 ரன்கள் (5சிக்ஸர்,7பவுண்டரி) சேர்த்து, டி20 உலகக் கோப்பையில் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.

 
USA vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிளாசன், ஸ்டெப்ஸ் கூட்டணி

தென் ஆப்ரிக்காவின் ரன் குவிப்பில் கேப்டன் மார்க்ரம்(46), கிளாசன்(36நாட்அவுட்), டிரிஸ்டன் ஸ்டெப்ஸ்(20நாட்அவுட்) ஆகியோரும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர்.

அதிலும் கிளாசன், ஸ்டெப்ஸ் கடைசி நேரத்தில் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது பெரிய ஸ்கோர் கிடைக்க உதவியாக இருந்தது.

USA vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

நெட்ராவல்கர், ஹர்மீத் சிங் அபாரப் பந்துவீச்சு

அமெரிக்கா அணியும் பந்துவீச்சு, பேட்டிங்கில் தென் ஆப்ரிக்காவுக்கு சவலாக விளங்கினர். ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிக்கா 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் என வலுவாக இருந்தது. ஆனால், அடுத்த 7 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே அமெரிக்க அணியினர் சேர்க்கவிட்டனர். குறிப்பாக நெட்ராவல்கர், ஹர்மீத் சிங் இருவரும் சேர்ந்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

நெட்ராவல்கர் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்மீத் சிங் 4 ஓவர்கள் வீசி 24ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்து தென் ஆப்ரிக்க பேட்டர்களுக்கு பெரிய தொந்தரவாக அமைந்தனர். மற்ற 5 பந்துவீச்சாளர்களும் 12 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 10 சிக்ஸர்கள், 9பவுண்டரி உள்பட 148 ரன்களை வாரி வழங்கினர்.

 
USA vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

சொந்த நாட்டை மிரட்டிய கோஸ்

தென் ஆப்பிரிக்காவில் டீன் எல்கர் பிறந்த அதே நகரில்தான் ஆன்ட்ரிஸ் கோஸ் பிறந்தார். கொரோனா காலத்தில் தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட பல சிறிய லீக் ஆட்டங்களில் கோஸ், பலவீரர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடுவதற்கு 3 மாதங்களுக்கு முன்புதான் கோஸ், சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.

கோஸின் பேட்டிங் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. கோஸ் தான் சந்தித்த 6வது பந்திலேயே பவுண்டரிவிளாசினார். யான்சென் ஓவரில் சிக்ஸரும், நோர்க்கியா ஓவரில் 18 ரன்களும் கோஸ் நொறுக்கினார். அதிரடியாக ஆடிய கோஸ் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்கா வெற்றி்கு 18 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஷம்சி வீசிய 18-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஹர்மீத் ஒரு சிக்ஸர் என 22 ரன்களை சேர்த்து தென் ஆப்ரிக்க அணிக்கு கிலி ஏற்படுத்தினார்.

கோஸ் 47 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து(5சிக்ஸர், 5பவுண்டரி) இறுதிவரை போராடியும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. ஹர்மீத் சிங்குடன் சேர்ந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோஸ் ஆட்டத்தைப் பார்த்த போது, ஆட்டம் தென் ஆப்ரிக்காவின் கையைவிட்டு சென்றுவிட்டது என்று ரசிகர்கள் எண்ணினர்.

அமெரிக்க அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஒருவர் கூட சிறப்பான பங்களிப்பை அளிக்காதது தோல்விக்கு முக்கியக் காரணம். கேப்டன் ஜோன்ஸ்(0), அனுபவ வீரர் கோரி ஆன்டர்சன்(12), நிதிஷ் குமார்(8), ஜகாங்கிர்(3) ஆகிய 4 பேட்டர்களும் சொதப்பிவிட்டனர்.

USA vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்புமுனை ரபாடா

தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சில் ரபாடா, கேசவ் மகராஜ் பந்துவீச்சுதான் நேற்றைய ஆட்டத்தின்” டாப் கிளாஸ்”. இருவரும் வீசிய 8 ஓவர்கள்தான் அமெரிக்காவின் பேட்டிங்கை புரட்டிப்போட்டு, ரன்ரேட்டை இறுகப்பிடித்தது.

ரபாடா 4 ஓவர்கள் வீசி18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மகராஜ் 4ஓவர்கள் வீசி24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இருவரும் சேர்ந்து 21 டாட் பந்துகளை வீசினர். ஏறக்குறைய 3.3 ஓவர்களை டாட் பந்துகளாக வீசிய நிலையில் 5 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதிலும் குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் அமெரிக்கா வெல்ல 50ர ன்கள் தேவைப்பட்டது. ஷம்சி வீசிய 18-வது ஓவரை வெளுத்து வாங்கிய கோஸ, ஹர்மீத் சிங் சிக்ஸர்களா விளாசினர். ஹர்மீத் ஒரு சிக்ஸர், கோஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினர்.

கடைசி 2 ஓவர்களில் அமெரிக்கா வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா 19-வது ஓவரை மிகத் துல்லியமாக, கட்டுக்கோப்பாக வீசி அமெரிக்காவிடம் இருந்து வெற்றியைப் பறித்தார். அது மட்டுமல்லாமல் ரபாடா 19-வது ஓவரில் ஹர்மீத் சிங்(38) விக்கெட்டையும் வீழ்த்தி 2 ரன்கள் மட்டுமே கொடுத்து நெருக்கடி ஏற்படுத்தினார்.

கடைசி ஓவரில் அமெரிக்கா வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டன. நோர்க்கியாவும் கடைசி ஓவரை கட்டுக்கோப்பாக வீசி தென் ஆப்ரிக்காவுக்கு வெற்றியை உறுதி செய்தார்.

 
USA vs SA

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பந்துவீச்சில் கோட்டை விட்டோம்"

அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் கூறுகையில் “ வெற்றிக்கு அருகே வந்தபின் தோற்றது வேதனையாக இருக்கிறது. பந்துவீச்சில் நாங்கள் கோட்டைவிட்டுவிட்டோம், இன்னும் கட்டுக்கோப்புடன் பந்துவீசி இருக்க வேண்டும். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கிவிட்டால், உலகில் எந்த அணியையும் வீழ்த்த முடியும். அதற்கு எங்களிடம் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அதிகமான ஒழுக்கம் அவசியம்” எனத் தெரிவித்தார்

சூப்பர்-8 சுற்றில் முதல் வெற்றி

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்ரிக்க அணி 2 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டை 0.90 ஆக உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.90 ஆகக் குறைந்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cnkk5yze7zqo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20: சூப்பர் 8 ஆட்டங்கள், அணிகள் நிலை, அதிக ரன், அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் - முழு விவரம்

டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவிலும், மேற்கிந்தியத் தீவுகளிலும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளன. கத்துக்குட்டி அணிகளுடன், வலிமையான பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேறிவிட்டன.

லீக் சுற்றில் வலிமையை நிரூபித்த 8 அணிகள் விளையாடும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள், அதிலுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

குரூப் ஒன்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ஒன்றில் அணிகள் மோதும் ஆட்டங்கள் குறித்த அட்டவணையும், புள்ளிப் பட்டியலும் கீழே தரப்பட்டுள்ளன.

டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குரூப்-2 அணிகள் நிலவரம்

குரூப்2 பிரிவில் தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. அந்த அணிகள் மோதும் ஆட்டங்களின் கால அட்டவணை, புள்ளிப் பட்டியல் ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன.

டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை

அதிக ரன் எடுத்த வீரர்கள்

  • நிகோலஸ் பூரன் மே.இ.தீவுகள்) - 200 ரன்
  • ஆன்ட்ரிஸ் கோஸ் (அமெரிக்கா) - 182 ரன்
  • ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆஸ்திரேலியா) - 167 ரன்
  • மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா) - 156 ரன்
  • இப்ராஹிம் ஜாத்ரன் (ஆப்கானிஸ்தான்) - 152 ரன்

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்

  • ஃபஸல்ஹாக் ஃபரூக்கி (ஆப்கானிஸ்தான்) - 12 விக்கெட்
  • ஆன்ட்ரிச் நோர்ட்ஜே (தென் ஆப்ரிக்கா) - 10 விக்கெட்டுகள்
  • அகீல் ஹோசைன், அல்ஜாரி ஜோசப் (இருவரும் மே.இ.தீவுகள்), ஆடம் ஜம்பா (ஆஸி.), டிரென்ட் போல்ட்(நியூசி.) தசீம் ஹாசன் (வங்கதேசம்) - 9 விக்கெட்டுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: மிரட்டிய ஆப்கானிஸ்தானை வியூகம் வகுத்துச் சுருட்டிய இந்தியா

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 21 ஜூன் 2024, 03:09 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மேற்கிந்தியத்தீவுகளுக்கு சூப்பர்-8 சுற்று ஆட்டங்கள் மாறிவிட்டதால் இனிமேல் டி20 போட்டிகளுக்கே உரிய ரன் குவிப்பை பார்க்கலாம் என்று கூறப்பட்டது. ஆடுகளங்கள் ரன்குவிப்புக்கு சாதகமாக இருப்பதுபோல் தெரிந்தாலும், பேட்டர்கள் பந்தைக் கவனித்து ஷாட்களை அடிக்க வேண்டியுள்ளது.

இதுதான் நேற்றை இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் தாத்பரியமாக இருந்தது. அனுபவ பேட்டர்கள், தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் பொறுமையாக, நிதானமாக பேட் செய்யாமல் விக்கெட்டை இழந்தனர். ஆனால், சூர்யகுமார் யாதவ் நிதானமாக, அதேநேரம் எந்தப் பந்தை பெரிய ஷாட்டாக மாற்றலாம் எனத் தெரிந்து அடித்து ஹீரோவாக ஜொலித்தார்.

பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் குருப்- ஏபிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றி மூலம், இந்திய அணி குரூப்-1 பிரிவில் 2 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் 2.350 என்று வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 13 சர்வதேச போட்டிகளை இந்திய அணி வென்று சாதனையை தக்கவைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ரன்ரேட் மைனஸ் 2.350 என்று குறைவாக இருக்கிறது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் நடந்தது என்ன?

இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும்தான். அதிலும் புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்திய அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இந்திய அணியை தாங்கிப்பிடித்து பெரிய ஸ்கோருக்கு கொண்டுவந்தவர் சூர்யகுமார் யாதவ். 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் கணக்கில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். அணியைச் சரிவிலிருந்து மீட்ட சூர்யகுமார் ஆட்டநாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சூர்யகுமார்-ஹர்திக் பாண்டியா கூட்டணி நேற்றைய ஆட்டத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் 5-ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், பெரியஸ்கோருக்கும் வழிவகுத்தது. ஹர்திக் பாண்டியாவும் 2 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் பும்ராவின் திறமை ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறிக் கொண்டே செல்கிறது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து பும்ரா பந்துவீச்சில் எக்கானமி 3 ரன்களைக் கடக்கவில்லை. இந்த ஆட்டத்திலும் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறனை வெளிப்படுத்தினார். அதிலும் புதிய பந்தில் பும்ராவாவின் பந்துவீச்சை சமாளிக்க ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் கடும் சிரமப்பட்டு விக்கெட்டையும் இழந்தனர்.

அதேபோல அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட், சிராஜுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட குல்தீப் யாதவ் 4 ஓவர்களிலி் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் என அற்புதமாகப் பந்துவீசினர். அக்ஸர் படேலும், ஜடேஜாவும் தங்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு துணை செய்தனர்.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோகித் சர்மான கூறியது என்ன?

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் “கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் இங்கு டி20 போட்டிகளை விளையாடியிருக்கிறோம் என்பதால், சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் திட்டமிட முடிந்தது. அதனால்தான் 180 ரன்களை எட்ட முடிந்தது.” என்றார்.

“பேட்டர்களின் பங்கு அசாத்தியமானது. எங்களிடம் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது, பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். ஸ்கை, ஹர்திக் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. ஆட்டத்தை ஆழமாகக் கொண்டு செல்ல இருவரின் ஆட்டம் அவசியமானதாக இருந்தது. பும்ராவின் பந்துவீச்சு குறித்து நமக்குத் தெரியும். அவர் பந்துவீச்சில் என்ன செய்வார் என்பதும் தெரியும். சூழலையும், ஆடுகளத்தையும் சாதகமாக பயன்படுத்தி பந்துவீசக்கூடியவர். பொறுப்பெடுத்து தனது பங்களிப்பை பல ஆண்டுகளா அளித்து வருகிறார் பும்ரா. இந்த ஆடுகளத்தின் தன்மையைப்புரிந்து கொண்டுதான் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் அடுத்த ஆட்டத்தில் இருந்தால், அதிகமான வேகப்பந்துவீச்சாளர்களுடன் வருவோம்” எனத் தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோகித், கோலி 2 ஆண்டுகளாக விளையாடவில்லை

ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணித்து ரோகித் சர்மா, கோலி பேட் செய்து கையைச் சுட்டுக்கொண்டனர். 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் கடந்த ஜனவரி மாதம் வரை சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாடவில்லை.

ரோஹித் சர்மா 13 பந்துகளில் 8 ரன்களுடன் பரூக்கி பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு சென்று விக்கெட்டை இழந்தார். இன்றைய டி20 போட்டிகளில் பந்துவீச்சில் ஒவ்வொரு வீரரும் எவ்வாறு வேரியேஷன்களை கொண்டு வருகிறார்கள்.

145 கி.மீ வேகத்தில் பந்துவீசும் ஒரு பந்துவீச்சாளர் அடுத்த பந்தை அப்படியே வேகத்தைக் குறைத்து 110 கி.மீ வேகத்தில் வீசுகிறார். இதை கவனிக்காமல் விட்டதுதான் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா செய்த தவறாகும்.

ஐபிஎல் தொடரில் பலமுறை லெக் ஸ்பின்னுக்கு கோலி ஆட்டமிழந்துள்ளார். இதை உணர்ந்த ரஷித் கான் தனது பந்துவீச்சில் கோலியை பெரிய ஷாட்டுக்கு மாற்றும் வகையில், ஆசையைத் தூண்டும் வகையில் பந்துவீசினார். இதை கவனிக்காத கோலி, சிக்ஸருக்கு முயன்று கேட்சாகினார்.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங்

சூர்யகுமாரின் பேட்டிங் நேற்றைய ஆட்டத்தில் மாஸ்டர் கிளாஸாக இருந்தது. சூர்யகுமார் 3வது வீரராக வழக்கமாகக் களமிறங்கிய நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு 4வது இடம் தரப்பட்டது. ஆனாலும், தனக்குரிய பணியை இந்தத் தொடரில் சிறப்பாகவே செய்து வருகிறார்.

சூர்யகுமார் ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான, ஸ்பெஷல் ஷாட்களை ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆப்சைட் சென்ற பந்துகளை ஸ்வீபுக்கு மாற்றியது, ஃபுல்டாஸ் பந்தை ஸ்வீப்புக்கு மாற்றியது என எதிரணி பீல்டர்கள் கணிக்க முடியாத வகையில் ஷாட்களை விளையாடினார். அதாவது இடதுபுறம் பவுண்டரி எல்லை குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து பெரும்பாலான ஷாட்களை சூர்யாக இடதுபுறம் அடித்து ஸ்மார்ட் கிரிக்கெட்டை ஆடினார்.

சூர்யகுமார் அடித்த 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸரில் பந்து அரங்கத்தின் மேற்கூரையில் விழுந்தது. ஸ்லோவர் பந்துகளை எவ்வாறு கணித்து ஆட வேண்டும் என்பதற்கு பிரத்யேகப் பயிற்சி எடுத்த சூர்யா, நேற்று ஸ்லோவர் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பந்துவீச்சு வேரியஷன்கள் சூர்யாவிடம் தோல்வி அடைந்தன.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆடுகளம் மந்தமாக இருந்தால், பந்து வரும் திசையை பேட்டர்கள் கணிப்பது சிரமம். இதற்கு நீண்டநேரம் களத்தில் இருந்து பந்தை கணித்தால்தான் ஆட முடியும். ஆனால், இதை சூர்யகுமார் வந்தவுடன் புரிந்து கொண்டு ஆடுகளத்துக்கு ஏற்றபடி ஆட்டத்தை மாற்றிக்கொண்டார்.

வழக்கமாக ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் போன்றவற்றை அதிகமாக ஆடக்கூடிய சூர்யா நேற்று பெரிதாக ஆடவில்லை.இந்த ஆட்டத்தில் 14 ரன்கள் மட்டுமே கீப்பருக்கு பின்னால் அடித்து சூர்யா சேர்த்தார். இதுபோன்று ஆடுவது சூர்யாவின் பேட்டிங்கில் குறைந்த சதவீதம் என்றாலும், ஆடுகளத்தின் மெதுவான தன்மை, பந்தின் வேகக் குறைவால் அதிகமான சக்தியை செலுத்திதான் இந்த ஷாட்களை ஆட முடியும் என்பதால் பெரியாக மெனக்கெடவில்லை.

ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட சூர்யா, அதை ஹர்திக் பாண்டியாவிடம் கூறி, அவர் அடித்த அதே ஷாட்களுக்கு அடிக்க மாற்றினார். இருவருமே பீல்டர்கள் கணிக்க முடியாத பகுதியில் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர்.

ரன் சேர்ப்பதற்கு கோலி, ரோஹித், ரிஷப் பந்த், துபே ஆகியோர் சிரமப்பட்ட நிலையில், சூர்யகுமார் 27 பந்துகளில் அரைசதம் அடித்தது சகவீரர்களுக்கே வியப்பாக இருந்திருக்கலாம். ஆனால், கடைசி நேரத்தில் பரூக்கி வீசிய ஸ்லோவர் பந்துக்கு சூர்யா இரையாகினார்.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பும்ரா சிறப்பான பந்துவீச்சு

புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு வேகம் அற்புதமானது. புதிய பந்தில் பும்ரா பந்துவீசினாலே 75 சதவீதத்துக்கும் மேல் விக்கெட் வீழ்த்தும் சாதனையை டி20 போட்டியில் வைத்துள்ளார். அதை நேற்றைய ஆட்டத்திலும் பும்ரா நிரூபித்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ்(11), ஜசாய்(2) விக்கெட்டுகளை காலி செய்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் அதிகமான ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் குர்பாஸ் விக்கெட்டை அனாசயமாக எடுத்தார் பும்ரா. குர்பாஸ் இறங்கி வந்ததும் பந்தை ஆஃப் சைடில் விலக்கி பும்ரா வீசவே, அதை அடிக்க முற்பட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்தார் குர்பாஸ். ஆடுகளத்தன் தன்மையை உடனடியாகக் கணித்து அதற்கு ஏற்றார்போல் பும்ரா பந்துவீசுவதால்தான் அனைத்து ஃபார்மெட்டுகளின் ராஜா என்று புகழப்படுகிறார். இந்த ஆட்டத்தில் பும்ரா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

அனுபவமில்லாத ஆப்கானிஸ்தான்

ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் உடனடியாக மாற்றாததன் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் நேற்று விலை கொடுத்தது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் முதல் நடுவரிசை வரை பெரிய ஷாட்களுக்குதான் பெரும்பாலும் முயன்றார்களே தவிர, களத்தில் நிலைத்திருக்க முயலவில்லை. இதனால்தான் ஆப்கானிஸ்தான் அணியில் ஓமர்சாய் தவிர, மற்ற எந்த பேட்டரும் 20 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை.

பந்துவீச்சிலும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் ரஷித் கான், பரூக்கி இருவர் மட்டுமே பந்துவீசினர். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பந்துவீசவில்லை. அதிலும் குறிப்பாக நவீன் உல் ஹக் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. ரஷித் கான் தவிர அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமின்ஸ் ஹெட்- ட்ரிக், வோர்னர் அரைச் சதம்; டக்வேர்த் லூயிஸ் முறைமையில் பங்களாதேஷை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

21 JUN, 2024 | 11:21 AM
image
 

(நெவில் அன்தனி)

அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் மழை காரணமாக 32ஆவது ஓவருடன் கைவிடப்பட்ட குழு 1க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் அவுஸ்திரேலியா 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

ஒரே நேரத்தில் ஐசிசியின் 3 சம்பியன் கிண்ணங்களையும் முதலாவது அணியாக தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடும் அவுஸ்திரேலியா, சுப்பர் 8 சுற்றை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கிண்ணம் ஆகிவற்றில் அவுஸ்திரேலியா கடந்த வருடம் சம்பியனாகியிருந்தது.

பெட் கமின்ஸின் ஹெட்- ட்ரிக், டேவிட் வோர்னர், ட்ரவிஸ் ஹெட்,  க்லென் மெக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்தன.

மழை காரணமாக சிறு தாமதத்தின் பின்னர் ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாடு மற்றும் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்ட பங்களாதேஷ் சார்பாக நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் அவர்களில் இருவர் 40 ஓட்டங்களை எட்டினர்.

தன்ஸித் ஹசன் (0) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்த பின்னர் லிட்டன் தாஸ் (16), அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்ததுடன் சிறந்த இணைப்பாட்டம் ஏற்படுத்தப்படவில்லை.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 41 ஓட்டங்களையும் தௌஹித் ரிதோய் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்வரிசையில் தஸ்கின் அஹ்மத் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இதனிடையே பெட் கமின்ஸ் ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை சரித்தார்.

18ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் மஹ்முதுல்லா, மெஹெதி ஹசன் ஆகியோரையும் 20ஆவது ஓவரின் முதலாவது பந்தில் தௌஹித் ரிதோயையும்  பெட் கமின்ஸ்  ஆட்டம் இழக்கச் செய்து ஹெட் - ட்ரிக்கைப் பூர்த்தி செய்தார்.

இதன் மூலம்  பெட் கமின்ஸ்,  ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் ஹெட்-ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்திய 7ஆவது வீரரானார். 

அத்துடன் ரி20 உலகக் கிண்ணத்தில் முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவு செய்த ப்ரெட் லீயைத் தொடர்ந்து ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது அவுஸ்திரேலியரானார். 

ப்ரெட் லீயும்  பங்களாதேஷுக்கு (2007) எதிராகவே ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

141 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா இரண்டாவது தடவையாக மழையினால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு கைவிடப்பட்ட போது 11.2 ஓவர்களில் 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 11.2 ஓவர்களில் வெற்றி இலக்கு 78 ஓட்டங்களாக இருந்தது. இந் நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் டக்வேர்த் லூயிஸ் முறைமை அமுலுக்கு வரும் என்பதை அறிந்த அவுஸ்திரேலியா அதிரடியாகத் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

அவுஸ்திரேலியா 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் மழை பெய்ததால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் அவுஸ்திரேலியா 29 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது.

25 நிமிடங்களின் பின்னர் மழை ஓய்ந்ததும் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது சீரான இடைவெளியில் ட்ரவிஸ் ஹெட் (21 பந்துகளில் 31), அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் (1) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர்.

அதன் பின்னர் டேவிட் வோர்னரும் க்லென் மெக்ஸ்வெலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட வேகத்தை அதிகரித்தனர்.

11.2 ஓவர்களில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் கடும் மழை தொடர்ந்ததாலும் கட் ஓவ் நேரம் தாண்டியதாலும் போட்டி கைவிடப்பட்டது.

டேவிட் வோர்னர் 35 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 53 ஓட்டங்களுடனும் க்லென் மெக்ஸ்வெல் 14

ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

ஆட்டநாயகன்: பெட் கமின்ஸ்

2106_pat_cummins_aus_v_bang.jpg

2106_david_warner_aus_vs_bang__1_.jpg

2108_aus_vs_bang_DLS.jpg

https://www.virakesari.lk/article/186624

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக எளிய இலக்கை கோட்டை விட்டாலும் இங்கிலாந்துக்கு வாய்ப்பு பிரகாசம்

SA vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில் குருப்-2 பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா அணி. இதன் மூலம் அரையிறுதிக்கு முதல் அணியாக தென் ஆப்ரிக்கா தகுதி பெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளது. மே.இ.தீவுகளுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் வென்றுவிட்டால் அந்த அணி அரையிறுதிக்கு எளிதாக முன்னேறும்.

அதிரடி நாயகன் டீ காக்

மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த டி20 லீக் தொடர்களில் டீகாக் விளையாடிய அனுபவம் இருந்ததால், ஆடுகளத்தின் தன்மையை எளிதாகப் புரிந்து கொண்டு செட்டிலாகினார். டீகாக்கை 6 முறை டாப்ளியும், மொயின் அலியும் ஆட்டமிழக்கச் செய்திருப்பதால், அவர்களை பந்துவீச கேப்டன் பட்லர் பயன்படுத்தினார். ஆனால் இருவரின் ஓவரையும் டீகாக் வெளுத்துவாங்கினார்.

குயின்டன் டீ காக் 22 பந்துகளில் அரைசதம் அடித்து உலகக் கோப்பையில் குறைந்தபந்துகளில் அரைசதம் அடித்த ஆரோன் ஜோன்ஸ் சாதனையுடன் டீ காக் இணைந்தார். பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்திய டீகாக், தென் ஆப்ரிக்க அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்தார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி தென் ஆப்ரிக்க அணி 63 ரன்கள் சேர்த்தது.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டீ காக் 58ரன்களில் இருந்தபோது, அதில் ரஷீத் வீசிய பந்தில், பேக்வார்ட் ஸ்குயர் திசையில் அடித்த ஷாட்டை மார்க் உட் கேட்ச் பிடித்தார். களநடுவர் அவுட் வழங்கியநிலையில், டீகாக் 3வது நடுவருக்கு அப்பீல் செய்தார். அதை ஆய்வு செய்த 3வது நடுவர் பந்தை கேட்ச் பிடித்தபோது, பாதி பந்து தரையில் பட்டவாறு இருந்ததால் அவுட் வழங்க மறுத்துவிட்டனர். இந்த முடிவு சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தி நடுவர்களிடம் இங்கிலாந்து வீரர்கள் விளக்கம் கேட்டனர்.

டீ காக் 38 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தார். டீ காக்கிற்கு அடுத்தபடியாக மில்லர் 43 ரன்கள் பங்களிப்பு செய்தார். ஆனால் மற்ற வீரர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் தென் ஆப்ரிக்க அணியால் மிகப்பெரிய ஸ்கோரை எட்டமுடியவில்லை. 20 ஓவர் முடிவில் 163 ரன்களை மட்டுமே அந்த அணி சேர்த்தது.

தென் ஆப்ரிக்க அணி பவர்ப்ளே முடிவில் 63 ரன்கள் சேர்த்தநிலையில் அடுத்த 14 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

 
SA vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து மந்தமான பேட்டிங்

இங்கிலாந்து அணி 13-வது ஓவர் வரை மந்தமாக ஆடிவிட்டு, அதன்பின்புதான் ஆட்டத்தை வேகப்படுத்தியது, முதல்நிலை வீரர்கள் யாரும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை.

14-வது ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 6 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றிக்கு 77 ரன்கள் தேவைப்பட்டன.

ரபாடா வீசிய 15-வது ஓவரில் லிவிங்ஸ்டன் ஒரு சிக்ஸரும், ப்ரூக் 2பவுண்டரிகளும் விளாசி 18 ரன்கள் சேர்த்தனர். நோர்க்கியா வீசிய 16-வது ஓவரில் ப்ரூக் 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் சேர்த்தார். பார்ட்மேன் வீசிய 17-வது ஓவரில் லிவிங்ஸ்டன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர், ப்ரூக் ஒரு பவுண்டரி என 21 ரன்கள் சேர்த்து இங்கிலாந்தை வெற்றிக்கு அருகே கொண்டு வந்தனர்.

SA vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், 17-வது ஓவரிலிருந்து சுதாரித்த தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்துவந்தனர். ரபாடா வீசிய 18-வது ஓவரில் லிவிங்ஸ்டன், நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் ஹேரி ப்ரூக் இருவரும் ஆட்டமிழந்தனர்.

கடைசி நேரத்தில் 18 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில், யான்சென், ரபாடா, நோர்க்கியா ஆகிய 3 அதிவேகப் பந்துவீச்சாளர்களும் துல்லியத் தாக்குதல் தொடுத்து தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் இங்கிலாந்து பேட்டர்களின் மந்தமான ஆட்டமும், பொறுப்பற்ற பேட்டிங்கும்தான். தொடக்கத்திலேயே பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி இருந்தால் கடைசி நேரத்தில் நெருக்கடி வந்திருக்காது. 13வது ஓவர்களுக்குப் பின்புதான் இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடி ஆட்டத்தையே கையில் எடுத்தனர். பட்லர்(17), பேர்ஸ்டோ(16), மொயின் அலி(9) என யாரும் எதிர்பார்த்த பங்களிப்பை அளிக்கவில்லை.

கடைசி நேரத்தில் ஹேரி ப்ரூக் 37 பந்துகளில் 53, லிவிங்ஸ்டோன் 33 ரன்கள் ஆகியோரின் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தில் பரபரப்பைச் சேர்த்தது.

SA vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் அபாரம்

அதேசமயம், கிடைத்த வாய்ப்பை தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் கச்சிதமாகப் பயன்படுத்தினர். அவர்கள் கடைசி 3 ஓவர்களில் 25 ரன்களை டிபெண்ட் செய்து அசத்தினர்.

18-வது ஓவரை வீசிய ரபாடா, லிவிங்ஸ்டோனை டீப் பேக்வார்ட் ஸ்குயர் திசையில் ஷாட் அடிக்க வைத்து கேட்சாக்கினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே வழங்கினார். 12 பந்துகளில் இங்கிலாந்து வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய யான்சென் 4 ரன்களை மட்டுமே வழங்கினார். கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டன. 20வது ஓவரை வீசிய நோர்க்கியா செட்டில் பேட்டர் ஹேரி ப்ரூக்(53) விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் களத்தில் இருந்த சாம் கரனால் 5 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தனர். சுழற்பந்துவீச்சாளர்கள் அதில் ரஷித், மொயின் அலி இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரீஸ் டாப்ளியும் 4 ஓவர்களில் 23 ரன்கள் என கட்டுக்கோப்புடன் வீசினார்.

 
SA vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்விக்கு காரணம் என்ன?

இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் “ பவர்ப்ளேயில் டீ காக்கை அடிக்கவிட்டதுதான் நாங்கள் தோல்விக்கான காரணமாகப் பார்க்கிறோம். பவர்ப்ளேயில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கத்தோடு டீகாக் இருந்தார். எங்களால் அவரின் ஆட்டத்துக்கு தடைபோட முடியவில்லை. 160 ரன்களை எளிதாக சேஸ் செய்துவிடலாம் என மகிழ்ச்சியுடன்தான் களமிறங்கினோம், ஆனால், தென் ஆப்ரிக்க பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ப்ரூக், லிவிங்ஸ்டன் இருவரின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை மாற்றி வெற்றிக்கு அருகே கொண்டு சென்று நாங்கள் வெல்லக்கூடிய நிலையில் இருந்தோம். ஆனால், டி20 கிரிக்கெட்டில் எதுவுமே நம் கைகளில் இல்லை. நாங்கள் இன்னும் தொடரில் உயிர்ப்புடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

SA vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரையிறுதி செல்லுமா தென் ஆப்ரிக்கா?

இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பைத் தொடரில் லீக் சுற்றிலிருந்து சூப்பர்-8 வரை தோல்வி அடையாத அணி என்ற பெயரை தென் ஆப்ரிக்கா தக்கவைத்துள்ளது. சூப்பர்-8 சுற்றில் குரூப் 2 பிரிவில் 2 போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன், 0.625 நிக ரன்ரேட்டில் முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வென்றுவிட்டால் தென் ஆப்ரிக்க அணி 3வது முறையாக டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

ஒருவேளை தென் ஆப்ரிக்கா அணி மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் தோல்வி அடைந்தால், அமெரிக்க அணியை மேற்கிந்தியத்தீவுகளும், இங்கிலாந்து அணியும் வென்றால் 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்குப் போட்டியிடும். அப்போது நிகர ரன்ரேட் கவனிக்கப்படும்.

ஆனால், தென் ஆப்ரிக்க அணியைப் பொருத்தவரை அதன் நிகர ரன்ரேட் பெரிதாக உயரவில்லை, 0.625 என்ற நிலையில்தான் இருக்கிறது. இந்த ரன்ரேட்டை இங்கிலாந்து அணியாலும் கடைசி லீக்கில் பெறும் வெற்றியால் கடக்க முடியும், மேற்கிந்தியத் தீவுகளும் அடுத்தடுத்து வெற்றி பெற்றால், தென் ஆப்ரிக்காவுக்கு கடும் போட்டியளிக்க முடியும். ஆதலால், தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டதேத் தவிர இன்னும் உறுதி செய்யவில்லை. மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தினால், தென் ஆப்ரிக்கா அரையிறுதி செல்வது உறுதியாகும்.

 
SA vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்துக்கு வாய்ப்பு பிரகாசம்

இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் தோல்வி என 2 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டாக 0.412 என வைத்துள்ளது. அடுத்துவரும் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டால், 4 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் செல்ல முடியும். அமெரிக்காவை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வெல்வது ஏறக்குறைய உறுதிதான் என்றாலும் நிகர ரன்ரேட்டை உயர்த்தும் அளவு வெற்றி அமைவது அவசியம்.

தமது கடைசி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வெஸ்ட் இண்டீசையும், இங்கிலாந்து அணி அமெரிக்காவையும் சந்திக்கவிருப்பதால் இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இன்னும் பிரகாசமாகவே உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c2xx3dn326no

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேஸ் பந்துவீச்சிலும் ஹோப் துடுப்பாட்டத்திலும் அசத்தல்; சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் அமெரிக்காவை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்    

22 JUN, 2024 | 11:11 AM
image

 (நெவில் அன்தனி) 

ஐக்கிய அமெரிக்காவுக்கு (USA) எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்ரங்கில் இன்று காலை நடைபெற்ற குழு 2க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப்  போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் (WI) 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.    

இங்கிலாந்துக்கு எதிரான தனது முதலாவது போட்டியில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள், நிகர ஓட்ட வேகத்தை அதிகரிப்பதைக் குறியாகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடி  அதனை நிறைவேற்றுக்கொண்டது.

ரொஸ்டன் சேஸ், அண்ட்றே ரசல் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சுகளும் ஷாய் ஹோப்பின் அதிரடி துடுப்பாட்டமும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இந்தப் போட்டியில் சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் நிலையில் 2ஆம் இடத்துக்கு முன்னேறி அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டது.

ஐக்கிய அமொரிக்காவை 128 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள், 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைக் குவித்து மிக இலகுவாக வெற்றியீட்டியது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷாய் ஹோப் 39 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக 82 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ஆரம்ப விக்கெட்டில் ஜோன்சன் சார்ள்ஸுடன் 42 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்த ஷாய் ஹோப், பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 23 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஜோன்ஸ்டன் சார்ள்ஸ் 15 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரன் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆறு பேர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் கணிசமான ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது.

அண்ட்றீஸ் கௌஸ் (29), நிட்டிஷ் குமார் (20) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 51 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆனால், அதன் பின்னர் 9 விக்கெட்கள் 78 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

கௌஸ், குமார் ஆகியோரை விட மிலிந்த் குமார் (19), ஷெட்லி வன் ஷோக்வைக் (18), அலி கான் (14 ஆ.இ.), அணித் தலைவர் ஆரோன் ஜோன்ஸ் (11) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அண்ட்றே ரசல் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்:  ரொஸ்டன் சேஸ்.   

2206_roston_chase_wi_vs_usa.jpg

2206_windies_bt_usa.jpg

https://www.virakesari.lk/article/186685

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வென்றாலும் இந்தியாவை ஆட்டிப் படைக்கும் பலவீனம்

IND vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

5-வது முறையாக இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. ஆன்டிகுவாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றின் குரூப்-1 பிரிவில் நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. 197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வாய்ப்பை பயன்படுத்தும் ரிஷப் பந்த்

முதலில் பேட் செய்த இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா 11 பந்துகளில் ஒரு சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 23 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நட்சத்திர வீரர் விராட் கோலியும் அதிரடி காட்டினார். 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 24 பந்துகளில் கோலி 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் சிறப்பாக பேட் செய்து வரும் ரிஷப் பந்த் இந்த முறையும் அசத்தினார்.

IND vs BAN

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரிஷப் பந்த் இந்தத் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட 3வது இடத்தை சிறப்பாகச் செய்து வருகிறார். இந்திய அணி சரிவில் சிக்கியபோதெல்லாம் விக்கெட்டுகளை காப்பாற்றி ஸ்கோரை உயர்த்துவதில் ரிஷப் பந்த் பேட்டிங் பாராட்டுக்குரியது. இந்த ஆட்டத்திலும் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் என்றிருந்த இந்திய அணி, அடுத்த 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எனத் தடுமாறியது.

அந்த நேரத்தில் துபே, ரிஷப் பந்த் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவிலிருந்து அணியைத் தடுத்து ஸ்கோர் செய்தனர். ஆன்டிகுவா ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளம் இல்லை, பந்து பேட்டரை நோக்கி மெதுவாகத்தான் வரும். ஆனால், நிதானமாக ஆடித்தான் ரன்களை சேர்க்க வேண்டிய நிலையில் அதை ரிஷப் பந்த் சிறப்பாகச் செய்தார். வங்கதேச பந்துவீச்சாளர்கள் வீசும் மோசமான பந்துகளை அவ்வப்போது சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் அனுப்பி ரிஷப் பந்த் ரன்ரேட் குறையவிடாமல் கொண்டு சென்று, 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IND vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹர்திக்கின் அசத்தல் அரைசதம்

ஹர்திக் பாண்டியா களமிறங்கிய போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களுடன் போராடியது. நிதானமாகத் தொடங்கிய பாண்டியா 7 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். அதன்பின் அதிரடிக்கு மாறிய பாண்டியா, பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். நீண்ட நாட்களுக்குப்பின் ஹர்திக் பாண்டியா பாராட்டக்கூடிய வகையில் அரைசதம் அடித்துள்ளார். வங்கதேச வீரர்கள் வீசிய யார்க்கர் பந்துகளைக் கூட பாண்டியா தனது வலிமையால் பவுண்டரிகளாக மாற்றினார். மெஹதி ஹசன் வீசிய 15-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என பாண்டியா 15 ரன்கள் சேர்த்தார். ஷிவம் துபேயும் தனது பங்கிற்கு அவ்வப்போது சிக்ஸர், பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

ரிசாத் ஹூசைன் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடித்த துபே 34 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதே ஓவரில் ஹர்திக்கும் ஒரு சிக்ஸர் விளாசினார். சகில் அல்ஹசன் வீசிய 19வது ஓவரில் சிக்ஸர், முஸ்தபிசுர் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரிகள் என ஹர்திக் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 62 ரன்கள் சேர்த்தது.

 
IND vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹர்திக் பாண்டியா இதுவரை இந்திய அணிக்காக 3 முறை மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். அதிலும் சமீபத்தில் 2022 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 33 பந்துகளில் 63 ரன்களை ஹர்திக் சேர்த்தும் இந்திய அணி தோல்வி அடைந்தது. அடுத்ததாக மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 30 பந்துகளில் 71 ரன்களை பாண்டியா விளாசி இருந்தார். 2022ல் சவுத்தாம்டனில் இங்கிலாந்துக்கு எதிராக பாண்டியாவின் 33 பந்துகளில் 51 ரன்கள் அரைசதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த 3 அரைசதத்துக்குப்பின் நேற்று ஹர்திக் 4வது அரைசதத்தை அடித்தார்.

இந்த டி20 உலகக் கோப்பையில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள ஹர்திக் ஒரு அரைசதம் உள்பட 89 ரன்கள் சேர்த்துள்ளார், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார். ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஃபார்முக்கு வந்துவிட்டால் இந்திய அணிக்கு வலுவான, தடுக்கமுடியாத ஆயுதமாக மாறிவிடுவார்.

வங்கதேச கேப்டன் ஷாண்டோ டாஸ் வென்ற இந்த விக்கெட்டைப் பார்த்துவிட்டு 160 ரன்கள் சேர்த்தாலே நல்ல ஸ்கோர் என்று கூறியிருந்தார். ஆனால், அதே விக்கெட்டில் இந்திய அணி 196 ரன்கள் சேர்த்தமைக்கு ஹர்திக்கின் பங்களிப்பு மிக முக்கியக் காரணமாகும்.

IND vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேச அணியின் பேட்டிங் மோசம்

வங்கதேச தொடக்க பேட்டர்கள் இதுவரை இந்த டி20 போட்டிகளில் 13 ரன்களுக்கு மேல் நிலைத்திருக்கவில்லை. இந்த முறைதான் 35 ரன்கள்வரை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தமிம் ஹசன் மட்டும் 5 இன்னிங்ஸில் இருமுறை டக்அவுட் ஆகியிருந்தார். இந்த முறை 29 ரன்கள் வரை தாக்குப்பிடித்து குல்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடிவுக்குள் லிட்டன் தாஸ் 13 ரன்னில் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.பாண்டியா வீசிய ஸ்லோ பாலில் மிட்விக்கெட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து தாஸ் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்த வங்கதேசம் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

பவர்ப்ளே ஓவர்கள் முடிந்தபின் குல்தீப், அக்ஸர் படேல், ஜடேஜா என மும்முனைத் தாக்குதலில் வங்கதேச பேட்டர்களால் ரன் சேர்க்கமுடியவில்லை. குறிப்பாக குல்தீப் யாதவின் ரிஸ்ட் ஸ்பின்னை பேட் செய்வது வங்கதேச பேட்டர்களுக்கு கடினமாக இருந்தது. குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சில் சிக்கிய பேட்டர்கள் மீளவில்லை. ஹிர்தாய் 4 ரன்னில் குல்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். அனுபவ வீரர் சஹிப் அல் ஹசன் வந்தவேகத்தில் சிக்ஸர், பவுண்டரி அடித்து குல்தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

IND vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவுக்கு கைகொடுத்த ஹர்திக், குல்தீப்

ஆன்டிகுவா ஸ்லோ விக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஹர்திக் பாண்டியாவின் குறிப்பிடத்தகுந்த அரைசதமும், குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. அதிலும் தேவைப்படும் நேரத்தில் அரைசதம் அடித்து 27 பந்துகளில் 50 ரன்களுடன்(3சிக்ஸர்,4பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை நிரூபித்துள்ளார். பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு தொடர்வதால் 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பந்துவீச்சில் குல்தீப், பும்ரா இருவருமே மிகுந்த கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். இருவரும் 8 ஓவர்கள் வீசிய நிலையில் 26 டாட் பந்துகளை ஏறக்குறைய 4.2 ஓவர்களை டாட் பந்துகளாக வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
IND vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

அரைசதம், சதம் தேவையில்லை

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ எங்களிடம் இருந்து எதை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறிந்துள்ளோம் அதை வெளிப்படுத்தினோம். தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். சூழலை ஏற்றுக்கொண்டு காற்றின் வேகம், திசைக்கு ஏற்றார்போல் எங்கள் ஆட்டத்தை மாற்றிக்கொண்டோம். அனைத்து 8 பேட்டர்களும் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்.

எங்களின் டாப் ஸ்கோர் 50 ரன்கள்தான், ஆனாலும் 196 ரன்கள் சேர்த்துள்ளோம். டி20 போட்டிகளைப் பொருத்தவரை பெரிதாக அரைசதம், சதங்கள் தேவையில்லை. பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தாலே போதும். அப்படித்தான் எங்கள் ஆட்டமும் இருந்தது. ஹர்திக் ஆட்டம் சிறப்பாக இருந்தது, ஸ்கோரை நல்ல நிலைக்கு கொண்டுவர அவரின் பேட்டிங் உதவியது. அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அதை சிறப்பாக செய்துவிட்டார். ஹர்திக் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு முக்கியமான வீரர்” எனத் தெரிவித்தார்

IND vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டர்கள் மீது குற்றச்சாட்டு

தோல்விக்குப் பின் வங்கதேச கேப்டன் ஷாண்டோ கூறுகையில் “ 160 முதல் 170 ரன்களுக்குள் சுருட்டிவிடுவோம் என நினைத்தோம் இந்த ஸ்கோரை எங்களால் சேஸிங்கும் செய்ய முடியும். ஆனால், இந்திய அணி பேட் செய்தவிதம் அருமையாக இருந்தது. காற்றின் வேகம், திசையைக் கணித்து ஷாட்களை ஆடினர் என நினைக்கிறேன்.

எங்களிடம் நல்ல பேட்டர்கள் பலர் இருந்தும் யாரும் முழு உறுதியுடன் பேட் செய்யவில்லை, தேவைப்படும் நேரத்தில் ஆடவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் பங்களிப்பு செய்ய முயல்கிறேன். தன்ஷிம் சஹிப் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பந்துவீசி வருகிறார். ரிஷத் சிறந்த லெக் ஸ்பின்னர் என்பதை நிரூபித்துள்ளார்” எனத் தெரிவித்தார்

IND vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுமா?

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் 2.425 என வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் வென்று 2 புள்ளிகளுடன் 2.471 என இந்தியாவை விட வலுவான நிகர ரன்ரேட்டில் இருக்கிறது.

ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வென்றால், 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் இந்தியாவை முந்தி முதலிடத்தைப் பிடித்துவிடும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணிகளைப் பொருத்துதான் குரூப்-1 பிரிவில் எந்த அணி முதலிடத்தைப் பிடிக்கும், அரையிறுதியில் எந்த அணியுடன் மோதும் என்பது தெரியவரும்.

இன்று நடக்கும் சூப்பர்-8 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்டால், குரூப்-1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணிகள் அரையிறுதிக்குள் செல்லும். ஒருவேளை ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா தோற்றால்தான் அனைத்துக் கணிப்புகளும் மாறக்கூடும்.

 
IND vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவை ஆட்டிப் படைக்கும் பலவீனம்

டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து இதுவரை விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா பெரிய ஸ்கோர் ஏதும் அடிக்கவில்லை. அமெரிக்காவில் நடந்த ஆட்டங்களில் ரோஹித் மட்டுமே ஒரு ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்தார், ஆனால், இதுவரை கோலியிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. இருவரும் இந்திய அணிக்காக பல ஆட்டங்களை வென்றுகொடுத்திருந்தாலும், ஆனால், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை இருவரும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓடுவதில் இருவருக்கும் இடையே குழப்பம் நீடிக்கிறது. மிட்விக்கெட்டில் தட்டிவிட்டால் ரன் எடுக்கலாமா என பலமுறை ரோஹித் யோசித்தார். பலமுறை இருவரும் குழப்பத்துடனே ரன் ஓடலாமா வேண்டாமா என்று யோசித்தே ஓடினர். தொடக்க வீரர்கள் வலிமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால்தான், நடுவரிசை பேட்டர்களுக்கு அழுத்தம் இல்லாமல் சுதந்திரமான மனநிலையில் பேட் செய்ய முடியும். ஆனால், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணியின் தொடக்க கூட்டணி பெரிதாக வலுவான அடித்தளத்தை அமைக்கவில்லை. இதனால் நடுவரிசை பேட்டர்களின் பங்களிப்போடுதான் ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்று வருகிறது.

ரோஹித், கோலி இருவரில் யார் ஃபார்மில் இல்லை என்பது தெரியாமல் ஒவ்வொரு போட்டியிலும் மாறி, மாறி விரைவாக ஆட்டமிழந்து வருவது அணிக்கு ஒரு பெரிய பலவீனமாகும். கோலியிடமிருந்தோ, ரோஹித்திடமிருந்த இதுவரை “மேட்ச்வின்னிங் இன்னிங்ஸ்” வெளிப்படவில்லை என்பது ரசிகர்களின் ஆதங்கமாகும். இன்னும் ஒரு சூப்பர்-8 ஆட்டம், அரையிறுதி இருப்பதால், இருவரிடம் இருந்து சிறந்த ஆட்டம் உறுதியாக வெளிப்படும் என்று நம்பலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெட் கமின்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஹெட்-ட்ரிக்; ஆனால் ஆஸியை அதிரவைத்தது ஆப்கான்!

23 JUN, 2024 | 10:11 AM
image
 

(நெவில் அன்தனி)

சென். வின்சென்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற குழு 1க்கான சுப்பர் 8 ஐசிசி உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலும் அவுஸ்திரேலியாவை விஞ்சிய ஆப்கானிஸ்தான் 21 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இருவகை உலகக் கிண்ண வரலாற்றில் (50 ஓவர் மற்றும் ரி20) அவுஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.

அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்டதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அரை இறுதிக்கு செல்வதற்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தப் போட்டி முடிவை அடுத்து குழு1 இல் இடம்பெறும் நான்கு அணிகளுக்கும் அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸ்தரான் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், 8ஆவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட குல்பாதின் நய்பின் 4 விக்கெட் குவியல் என்பன ஆப்கானிஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

அத்துடன் இப்போட்டியில் பிடிகள், ரன் அவுட் வாய்ப்புகள், ஸ்டம்ப் வாய்ப்பு ஆகியன தவறவிடப்பட்டமை அவுஸ்திரேலியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் பொறுமையாகவும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடி 118 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைப் பெற்றதுடன் இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் அவர் குவித்த 3ஆவது அரைச் சதம் இதுவாகும்.

இப்ராஹிம் ஸத்ரான் 51 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆனால், குர்பாஸின் விக்கெட் உட்பட முதல் 4 விக்கெட்கள் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிய ஆப்கானிஸ்தான் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டதுடன் கடைசி ஓவரிலும் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன.

ஆரம்ப வீரர்களைவிட வேறு எவரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தவில்லை.

இதனிடையே பெட் கமின்ஸ் தனது 2ஆவது தொடர்ச்சியான ஹெட் - ட்ரிக்கைப் பதிவு செய்து வரலாறு படைத்தார். முன்னைய ஹெட் - ட்ரிக்கைப் போன்றே இந்த ஹெட் - ட்ரிக்கையும் அவர் இரண்டு ஓவர்களில் பதிவுசெய்தார்.

பெட் கமின்ஸ்   28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்பா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

149 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தில் க்ளென் மெக்ஸ்வெல் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 106 ஓட்டங்களாக இருந்தபோது மெக்ஸ்வெல் 6ஆவதாக ஆட்டம் இழந்ததும் அவுஸ்திரேலியாவின் எதிர்பார்ப்பு தகர்ந்தது.

இறுதியில் அவுஸ்திரேலியா 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

பந்துவீச்சில் குல்பாதின் நய்ப் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி சர்வதேச ரி20 போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

ஆரம்ப பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கும் திறமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன்: குல்பாதின் நய்ப்.

9fab3d66-ac69-4803-a28d-f85a06b6df85.jpg

971ec8aa-81fc-48ae-9d27-2a25274b1178__1_

8d17fa4d-e073-4ce4-85ae-520000116ad8.jpg

30eb3fd0-f34e-42c3-b60c-58c773ba735a.jpg

https://www.virakesari.lk/article/186743

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் - இந்தியாவுக்கு என்ன சிக்கல்?

AFG vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

23 ஜூன் 2024, 05:45 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

டி20 போட்டிகளைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தான் அணி கத்துக்குட்டி அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. டி20 தொடரின் சூப்பர் 8 ஆட்டத்தில் பலமான ஆஸ்திரேலிய அணியை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது அரையிறுதி வாய்ப்பை ஆப்கானிஸ்தான் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் அணி வெல்வது இதுவே முதன் முறையாகும். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை விழலுக்கு இறைத்த நீராய்ப் போனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி சாத்தியமாக்கியது எப்படி? ஆப்கானிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?

ஆப்கானிஸ்தான் வலுவான தொடக்கம்

செயின்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இந்த ஆட்டத்திலும் முத்திரை பதித்தார். அவருடன் மற்றொரு தொடக்க வீரர் ஜாத்ரனும் சிறப்பாக விளையாட, ஆஸ்திரேலிய அணி விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிப் போனது.

ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக சுழன்று திரும்பியதுடன், பவுன்சும் ஆயின. இதனால், பேட்டிங் செய்வது அவ்வளவு சுலபமானதாக இல்லை. இதனை உணர்ந்து கொண்டு நிதானமாக ஆடிய ஆப்கானிஸ்தான் தொடக்க ஜோடி பவர் ப்ளே ஓவர்களில் 40 ரன்கள் திரட்டியது. பேட்டிங்கிற்கு அவ்வளவாக ஒத்துழைக்காத ஆடுகளத்தில் பவுண்டரி, சிக்சர்கள் விளாசுவது கடினமாக இருந்ததால் ஆப்கானிஸ்தான் தொடக்க ஜோடி விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ஒன்றிரண்டு ரன்களாக சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தினர். இது அந்த அணிக்கு வெகுவாக கைகொடுத்தது.

AFG vs AUS

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொடக்க ஜோடி சதம் அடித்து அசத்தல்

குர்பாஸ் - ஜாத்ரன் ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறித்தான் போனார்கள். ஆட்டத்தின் 16-வது ஓவரில்தான் இந்த ஜோடியை பிரிக்க முடிந்தது.

அந்த ஓவரின் 5-வது பந்தை ஸ்டாய்னிஷ் நல்ல லென்த்தில் வீச, ரஹ்மானுல்லா குர்பாஸ் கிரீசை விட்டு இறங்கி அடிக்க முயற்சித்தார். டைமிங் சரியாக இல்லாததால் பந்து பேட்டில் சரியாக படாமல், ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த வார்னரிடம் கேட்ச் ஆனது. குர்பாஸ் 49 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 60 ரன் சேர்த்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் - ஜாத்ரன் தொடக்க ஜோடி 118 ரன்கள் சேர்த்து அசத்தியது.

 
AFG vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகள் சரிவு

தொடக்க ஜோடி பிரிந்ததும் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஓமர்ஜாய் 2 ரன்னில் ஆடம் ஜம்பா பந்தில் கிளீன் போல்டானார். அடுத்த சில நிமிடங்களிலேயே, மறுமுனையில் நிலைத்து நின்ற தொடக்க வீரர் ஜாத்ரனும் 51 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டையும் ஆடம் ஜம்பாவே வீழ்த்தினார்.

தொடக்க ஜோடி வீழ்ந்த பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால், அந்த அணியால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை குவிக்க முடியவில்லை.

AFG vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வங்கதேசத்திற்கு எதிரான கடந்த போட்டியைப் போலவே இம்முறையும் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். 18-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஆப்கன் கேப்டன் ரஷித் கானை வீழ்த்திய அவர், 20-வது ஓவரின் முதலிரு பந்துகளில் முறையே கரீம் ஜானட், குல்புதீன் நயிப் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார்.

அவர் வீசிய அடுத்த பந்திலும் விக்கெட் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், முகமது நபி அடித்த பந்தில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை வார்னர் நழுவ விட்டார். வார்னர் கேட்ச் பிடித்திருந்தால் கம்மின்ஸ் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்.

20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 
AFG vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியா அதிர்ச்சித் தொடக்கம்

149 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் நவீன் உல் ஹக் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே கிளீன் போல்டானார். மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னரும் இம்முறை ஏமாற்றிவிட்டார். 8 பந்துகளில் 3 ரன் மட்டுமே சேர்த்த அவர் முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்த முற்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷாலும் நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. 2 பவுண்டரிகளுடன் 12 ரன் சேர்த்த அவரை நவீன் உல் ஹக் அவுட்டாக்கினார். இதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் யாராலும் நிலைத்து ஆட முடியவில்லை. அவர்கள் வருவதும் அவுட்டாகி வெளியேறுவதுமாகவே இருந்தனர். ஆனால், ஒருமுனையில் கிளென் மேக்ஸ்வெல் மட்டும் நிலைத்து ஆடி அணியை கரை சேர்க்கப் போராடினார்.

 
AFG vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

நினைவில் வந்து போன ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டம்

ஆஸ்திரேலிய அணி ஒருமுனையில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து கொண்டிருந்தாலும் மேக்ஸ்வெல் பேட்டில் இருந்து மட்டும் சிக்சர்களும், பவுண்டரிகளும் வந்த வண்ணம் இருந்தன. அதைப் பார்க்கையில், அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை ஆட்டம் ஒன்றில், நடக்கவே சிரமப்பட்ட நிலையிலும் தனி ஒருவனாக இரட்டை சதம் அடித்து ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வெற்றி கொள்ள உதவிய அவரது ஆட்டம் ரசிகர்களின் நினைவில் வந்து போனது.

ஆனாலும், மேக்ஸ்வெல்லின் சவாலை 15-வது ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முடிவுக்குக் கொண்டு வந்தனர். குல்ஹாதின் நயீப் பந்துவிச்சில் நூர் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். 41 பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 59 ரன்களை சேர்த்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது.

AFG vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முதல் வெற்றி

ஆப்கானிஸ்தான் வீரர்கள் துல்லியமான பந்துவீச்சையும், துடிப்பான பீல்டிங்கையும் மீறி ஆஸ்திரேலிய வீரர்களால் ரன்களை குவிக்க முடியவில்லை. அதன் கடைசிக் கட்ட வீரர்களும் சொற்ப ரன்களில் சரணடைந்தனர். முடிவில், 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்டானது. இதனால், 21 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று, உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்படாமல் தப்பியது.

டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் வெற்றி இதுவாகும்.

AFG vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு சிக்கல்

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வெற்றி கொண்டிருந்தால், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சிக்கலின்றி எளிதில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும். தற்போது ஆப்கானிஸ்தானின் வெற்றி அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில், குரூப் ஒன்றில் இந்தியா 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் இருக்கிறது. 2 போட்டிகளிலும் தோற்றுப் போன வங்கதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வென்றால் சிக்கலின்றி அரையிறுதிக்குள் நுழையும். ஒருவேளை இந்தியா தோற்றுப் போனால் மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்கும் அதேநேரத்தில், வங்கதேசத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நிகர ரன் ரேட் அடிப்படையில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.

AFG vs AUS

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி இடத்தில் உள்ள வங்கதேசத்திற்குக் கூட அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் இல்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் மிகப்பெரிய வெற்றியை பெறும் அதேவேளையில், இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றால் வங்கதேசம், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் தலா 2 புள்ளிகள் பெற்றிருக்கம். அவ்வாறான சூழலில் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் அரையிறுதியில் நுழையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை நையப்புடைத்து வெற்றியீட்டிய இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது

Published By: VISHNU

24 JUN, 2024 | 09:21 AM
image
 

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் கூட்டாக நடத்தும் 9ஆவது ரி -20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

 

2306_chris_jordan_hat_-_trick_eng_vs_usa

பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த குழு 2க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை நையப்புடைத்து 10 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலம் இங்கிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

2306_eng_bt_usa_by_10_wkts.jpg

கிறிஸ் ஜோர்டன் பதிவு செய்த ஹெட்-ட்ரிக் உடனான 4 விக்கெட் குவியல், அணித் தலைவர் ஜொஸ் பட்லரின் அதிரடி துடுப்பாட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியை மிகவும் இலகுவாக்கியதுடன் நிகர ஓட்ட வேகத்தையும் கணிசமான அளவு அதிகரிக்கச் செய்தது.

தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான நாளைய போட்டியில் வெற்றிபெறும் அணி குழு 2இலிருந்து 2ஆவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.

இன்றைய சுப்பர் 8 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு நல்ல நிலையில் இருந்த ஐக்கிய அமெரிக்கா அதன் பின்னர் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எஞ்சிய 7 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் நிட்டிஷ் குமார் (30), கோரி அண்டசன் (29), ஹாமீத் சிங் (21) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

போட்டியின் 19ஆவது ஓவரில் ஹெட் - ட்ரிக் முறையில் கிறிஸ் ஜோர்டான் விக்கெட்களைக் கைப்பற்றி வரலாறு படைத்தார்.

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இது 9ஆவது ஹெட்-ட்ரிக் ஆகும். அத்துடன் இந்த மைல்கல் சாதனையை நிலைநாட்டிய 8ஆவது வீரர் கிறிஸ் ஜோர்டான் ஆவார்.

ப்றெட் லீ (2007), கேர்ட்டிஸ் கெம்ஃபர் (2021), வனிந்து ஹசரங்க (2021), கெகிசோ ரபாடா (2021), கார்த்திக் மெய்யப்பன் (2022), ஜொஷ் லிட்ல் (2022), பெட் கமின்ஸ் (2024 - 2 தடவைகள்) ஆகியோரே ஹெட் - ட்ரிக் பதிவுசெய்த மற்றைய 7 வீரர்களாவர்.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் 3ஆவது ஹெட் - ட்ரிக்கை கிறிஸ் ஜோர்டான் பதிவு செய்தார்.

அவர் 2.5 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆதில் ரஷித் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாம் கரன் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

116 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜொஸ் பட்லர் 38 பந்துகளில் 6 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 83 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவருக்கு பக்கபலமாக பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய பில் சோல் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த வெற்றியுடன் குழு 2க்கான சுப்பர் 8 சுற்று அணிகள் நிலையில் இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் 1.992 என்ற நிகர ஓட்ட வேகத்துடன் முதலாம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ஆட்டநாயகன்: ஆதில் ரஷித்.

https://www.virakesari.lk/article/186793

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக்கோப்பை: 10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் தோற்றது ஏன்?

10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்ரிக்கா: சொந்த மண்ணில் வீழ்ந்த கரீபியன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மழையின் குறுக்கீடு, உள்நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு, சொந்த நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை ஆட்டம் உள்ளிட்ட இந்த அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர்-8 சுற்றில் போராடித் தோற்றது.

மாறாக 10 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தோல்வியை சந்திக்காத அணி

தென் ஆப்ரிக்கா அணி இதுவரை எட்டு டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடினாலும், 2 முறை மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது. 2009-ஆம் ஆண்டு அரையிறுதியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த தென் ஆப்ரிக்கா 2014-ஆம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் அரையிறுதியில் தோற்றது. இந்த இருமுறையைத் தவிர அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்க அணி தகுதி பெறவில்லை.

இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை என்ற பெயரை தென் ஆப்ரிக்க அணி காப்பாற்றி வருகிறது. தற்போது மேற்கிந்தியத்தீவுகளை வென்றதன் மூலம் குரூப்-2 பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

 
10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்ரிக்கா: சொந்த மண்ணில் வீழ்ந்த கரீபியன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குரூப்-1 பிரிவில் யாருடன் மோதல் ?

ஆனால், அரையிறுதியில் குரூப்-1 பிரிவில் 2வது இடத்துக்கு வரும் அணியுடன் தென் ஆப்ரிக்கா மோதும். ஆனால், இன்று நடக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி வென்றால் முதலிடம் பெற்று அரையிறுதி செல்லும். ஆனால், அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவுடன் மோதாது. ஒருவேளை ஆஸ்திரேலிய அணி வென்றால் 4 புள்ளிகள் பெறும், ஆனாலும் அரையிறுதியை எந்த அணியும் உறுதி செய்யாது.

ஏனென்றால், வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் ஒருவேளை ஆப்கானிஸ்தான் வென்றால், 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் பார்க்கப்படும் என்பதால், குரூப்-1 பிரிவில் இந்தியாவின் வெற்றியைப் பொருத்தே யார் அரையிறுதி செல்வார் என்பது முடிவாகும்.

இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசரவ் நாள் இல்லை, மாறாக 250 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம் ரத்தானால், இந்திய அணி அரையிறுதி செல்லும், ஆஸ்திரேலிய அணி, வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வெளியேறும், ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்லும். ஆதலால் மழைதான் ஆஸ்திரேலியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் கருவியாகும்.

ஆன்டிகுவாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில், குரூப்-2 பிரிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்க அணி.

முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. 136 ரன்களை இலக்காகக் கொண்டு ஆட்டம் தொடங்கிய நிலையில் மழைக் குறுக்கிடவே தென் ஆப்பிரிக்காவுக்கு டிஎல்எஸ் முறையில் இலக்கு திருத்தப்பட்டு 17 ஓவர்களில் 123 ரன்கள் என்று மாற்றப்பட்டது. இதையடுத்து, 123 ரன்களைத் துரத்திய தென் ஆப்ரிக்கா 16.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்து வென்றது.

10 ஆண்டுகளுக்குப்பின்

2014-ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்க அணியை இறுதிப்போட்டிவரை எய்டன் மார்க்ரம் கொண்டு சென்றார். அதன்பின் 10 ஆண்டுகளுக்குப்பின் சீனியர் அணியை அரையிறுதிவரை மார்க்ரம் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார்.

 
10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்ரிக்கா: சொந்த மண்ணில் வீழ்ந்த கரீபியன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம்

அது மட்டுமல்லாமல் இந்த ஆட்டத்தில் மார்க்ரம் தொடக்கத்திலேயே சுழற்பந்துவீசத் தொடங்கி, 4 ஓவர்களை முழுமையாக வீசி 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். தென் ஆப்ரிக்க அணி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு இந்த அளவு முக்கியத்துவம் அளித்து பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியதில்லை. இந்த ஆட்டத்தில் மார்க்ரம், ஷம்சி, கேசவ் மகராஜ் என 3 சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இதற்கு முன் 2021-ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகமாகப் பந்துவீசியிருந்தனர்.

தென் ஆப்ரிக்கா என்றாலே வேகப்பந்துவீச்சில்தான் பலம் என்ற நிலையை மாற்றி, சுழற்பந்துவீச்சுக்கு மார்க்ரம் மாற்றியுள்ளார். இந்த போட்டியில் 12 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்கள் வீசி 79 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ஷம்சி 3 விக்கெட், மார்க்ரம், மகராஜ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பேட்டிங்கில் படுமோசம்

மேற்கிந்தியத்தீவுகள் அணியும் பேட்டிங்கில் படுமோசமாகச் செயல்பட்டது என்பதை பதிவு செய்ய வேண்டும். மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்கள் 58 டாட் பந்துகளை விட்டுள்ளனர். இது ஏறக்குறைய 9.4 ஓவர்களுக்கு சமம். அதாவது 10 ஓவர்களில்தான் 135 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் சேர்த்தனர்.

அது மட்டுமல்லாமல் கெயில் மேயர்ஸ்-ரஸ்டன் சேஸ் ஆகியோர் சேர்ந்து 81 ரன்கள் சேர்த்து பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் அணியை ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோருக்கு கொண்டு வந்தது. இல்லாவிட்டால் மேற்கிந்தியத்தீவுகள் அணி 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். சேஸ், மேயர்ஸ் தவிர இருபேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் பொறுப்பற்று ஆட்டமிழந்தனர்.

டிபெண்ட் சாத்தியமில்லை

மிகக்குறைவான ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்ய நினைப்பது அமெரிக்கா போன்ற ஆடுகளங்களில் சாத்தியம். ஆனால், ஆன்டிகுவா, பர்படாஸ் போன்ற பேட்டர்களுக்கு சாதகமான விக்கெட்டில் சாத்தியமில்லை. இருப்பினும் மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சாளர்கள் அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்தி, தொடக்கத்திலேயே தென் ஆப்ரிக்காவின் 2 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் வீழ்த்தி நெருக்கடி அளித்தனர்.

ஆனால் மழைக் குறுக்கீடு முடிந்து ஆட்டம் தொடங்கியபின், மார்க்ரம் (18), ஸ்டெப்ஸ் (29), கிளாசன் (22) ஆகியோரின் கேமியோ ஆட்டத்தை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் நம்பிக்கையைத் தளரவிடாமல் போராடினாலும் கடைசி நேரத்தில் யான்சென் 21 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

 

சரியான உத்தி இல்லை

10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்ரிக்கா: சொந்த மண்ணில் வீழ்ந்த கரீபியன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

யான்சென் ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் இல்லை. அவரை கடைசிவரை நிலைத்து ஆடவும் மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர்கள் அனுமதித்திருக்கக்கூடாது. யான்சென் பலவீனத்தை அறிந்து சரியான பந்துவீச்சாளரைப் பயன்படுத்தி இருந்தால் நிச்சயம் மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி பெற்றிருக்கும். வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும், சரியான உத்திகளை மேற்கிந்தியத்தீவுகள் செயல்படுத்தாமல் விட்டதால் வெற்றியை இழக்க நேரிட்டது என்ற கூற முடியும்.

தென் ஆப்ரிக்கா மோசமான பீல்டிங்

தென் ஆப்ரிக்கா என்றாலே பீல்டிங்கிற்கு பெயரெடுத்தவர்கள். கிப்ஸ், ஜான்டி ரோட்ஸ், ஹன்சி குரோனியே, கல்லினன், மெக்மிலன் என பலரைக் குறிப்பிடலாம். ஆனால் இந்த ஆட்டத்தில் மட்டும் தென் ஆப்ரிக்க அணி 4 கேட்சுகளைத் தவறவிட்டனர். கேப்டன் மார்க்ரம், நோர்க்கியா, டேவிட் மில்லர், கேசவ் மகராஜ் என 4 பேரும் கேட்சுகளை கோட்டைவிட்டனர்.

ரபாடாவை பயன்படுத்தாத மார்க்ரம்

இந்த ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சு சிறப்பாக ஒத்துழைத்ததால் கடைசிவரை ரபாடாவை பந்துவீச மார்க்ரம் அழைக்கவில்லை. கடைசி நேரத்தில் 18-வது ஓவரை வீச ரபாடா அழைக்கப்பட்டார். 62 டி20 போட்டிகளில் விளையாடிய ரபாடா இதுபோன்று கடைசிவரை பந்துவீசாமல் இருந்ததில்லை.

இதற்குமுந்தைய 61 ஆட்டங்களில் தொடக்கத்திலேயே முதல் 4 ஓவர்களிலேயே ரபாடா பந்துவீசிவிடுவார். ஐபிஎல் தொடர்களில் ரபாடாவை 10 ஓவர்களுக்கு மேல் பயன்படுத்தியுள்ளனர். 2021-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 5வது ஓவருக்குப்பின் ரபாடா ஒருமுறை பந்துவீசியுள்ளார். ஆனால், இதுபோன்று 18-வது ஓவர்வரை முதல் ஓவரைக்கூட வீசாமல் ரபாடா இருந்ததில்லை. ஆனாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினாலும் 7 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினார்.

 
10 ஆண்டுகளுக்குப்பின் அரையிறுதி சென்ற தென் ஆப்ரிக்கா: சொந்த மண்ணில் வீழ்ந்த கரீபியன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மழை சென்டிமென்ட்

தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே டீ காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ் விக்கெட்டைஇழந்து மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தென் ஆப்ரிக்க அணியின் வாழ்க்கையில் விதி மீண்டும் விளையாடுகிறதோ என்று ரசிகர்கள் ஆதங்கம் அடைந்தனர், 1992, 2003, 2015 ஆகிய ஆண்டுகளில் தென் ஆப்ரிக்காவுக்கு நேர்ந்த கதி மீண்டும் ஏற்படுமா என்று நினைத்தனர். ஆனால், 75 நிமிடங்கள் தாமதத்துக்குப்பின் ஆட்டம் மீண்டும் தொடங்கிவிட்டது.

பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டோம்

தோல்வி அடைந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டன் பாவெல் கூறுகையில் “கடைசி வரை போராடிய எங்கள் வீரர்களுக்கு பாராட்டுகள். இதுபோன்ற மோசமான பேட்டிங்கை எதிர்காலத்தில் மறந்துவிட வேண்டும். நடுப்பகுதியில் நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை. இது ரன் ஸ்கோர் செய்வதற்கு எளிதான விக்கெட் இல்லை. நடுப்பகுதி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்கு ஆளாகினோம்,” என்றார்.

"பந்துவீச்சில் எங்கள் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். 135 ரன்களையும் டெபெண்ட் செய்ய முடியும் என்று போராடினர். தரவரிசையில் 9வது இடத்தி்ல் இருக்கும் அணிக்கும், 3வது இடத்தில் இருக்கும் அணிக்கும் இடையிலான மோதல் சிறப்பானதாக இருந்தது. கரீபியன் வீரர்களிடம் ஏராளமான திறமை இருக்கிறது, தொடர்ந்து குழுவாக செயல்பட்டு, மக்களை பெருமைப்படுத்த முயல்வோம். மக்களும் எங்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். இரவுவரை இருந்து எங்களுக்கு ஆதரவு அளித்த ஆன்டிகுவா மக்கள், கரீபியன் மக்களுக்கு நன்றி,” எனத் தெரிவித்தார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸியை வீழ்த்தி 5-வது முறை அரையிறுதி சென்ற இந்தியா - அதிரடி ஆட்டத்தால் ஈடுகட்டிய ரோகித் சர்மா

டி20 இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சேர்த்த 41 பந்துகளில் 92 ரன்களில் 8 சிக்ஸர்கள் அடங்கும் கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 25 ஜூன் 2024, 02:52 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டம், சுழற்பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, ஆகியவற்றால் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5-வது முறையாக அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

இந்திய அணியின் வெற்றியால் ஆஸ்திரேலிய அணியின் நிலைமைதான் நிச்சயமில்லாமல் இருக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) காலை நடக்கும் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தின் முடிவை எதிர்நோக்கி ஆஸ்திரேலிய அணியினர் காத்திருக்கிறார்கள். வங்கதேசம் வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியினர் பிரார்த்தனை செய்கிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள். ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ஷெல் மார்ஷ் கூட வங்கதேசத்தின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதேசமயம், வங்கதேசத்தை வீழ்த்தினால், ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லும், ஆஸ்திரேலிய அணி போட்டித் தொடரிலிருந்து வெளியேறும். வங்கதேசம் வென்றால், நிகர ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி செல்லும் என்பதாலேயே வங்கதேசம் வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி கரிசனம் காட்டுகிறது.

செயின்ட் லூசியாவில் நேற்று (திங்கள், ஜூன் 24) நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர்-8 சுற்றில் குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

 

முதலில் பேட் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 24 ரன்களில் தோல்வி அடைந்து.

இந்திய அணி விதித்த 206 ரன்கள் இலக்கை 15.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா சேஸிங் செய்திருந்தால், அரையிறுதிக்குச் சென்று இந்தியாவின் நிகர ரன்ரேட்டைவிட உயர்ந்திருக்கும். ஆனால், 15.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது.

இதன் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் 5-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. டி20 உலகக் கோப்பையில் அதிக அளவு வெற்றிகளைப் பெற்று இலங்கை அணிய பின்னுக்குத் தள்ளி 34 வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்தது.

வரும் 27-ஆம் தேதி நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது.

இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது என்பது 3-வது முறையாகக் குவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் செயின்ட் லூசியாவின் கிராஸ் ஐலெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2012-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 205 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் குவித்திருந்தது.

 
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
டி20 இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘மனநிறைவாக இருக்கிறது’

வெற்றிக்குப்பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தான் விளையாடியவிதம் தனக்கு மனநிறைவு அளிப்பதாகக் கூறினார்.

“எதிரணியின் மிரட்டல் குறித்து எங்களுக்குத் தெரியும், அதனால் சிறப்பான ஆட்டத்தை வழங்க முடிவு செய்தோம். 200 ரன்கள் நல்ல ஸ்கோர், இதுபோன்ற ஆடுகளத்தில் காற்றின் வேகத்துக்கு மத்தியில் சேஸ் செய்வது கடினம். இந்தச் சூழலை நாங்கள் சிறப்பாகப் பயன்படுத்தினோம்,” என்றார்.

மேலும், “ குல்தீப்பின் பலம் என்ன என்பதை உணர்ந்து, அவரைத் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தினோம். அமெரிக்க ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை, ஆனால், குல்தீப் பங்கு அடுத்ததாக பெரிதாக இருக்கும் என நினைத்தேன். அரையிறுதி என்பதால் புதிதாக எந்த முயற்சியும் எடுக்காமல், வழக்கம்போல் விளையாடினோம். ஒவ்வொரு வீரரும் சூழலை அறிந்து விளையாடினார்கள், சுதந்திரமாக இருந்தார்கள். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவது சிறப்பு. பெரிதாக அணியில் மாற்றம் இருக்காது,” எனத் தெரிவித்தார்

டி20 இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேப்டன் ரோகித் சர்மா (92) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ரோஹித் சர்மாவின் சாதனைகள்

இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா (92) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் லீக் சுற்றிலிருந்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்த ரோஹித் சர்மா நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அதனை ஈடுகட்டிவிட்டர்.

19 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 உலகக் கோப்பையில் அதிவிரைவாக அரைசதம் அடித்த வீரர் எனும் பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதில் 6 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும். இதற்கு முன் 2007 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் 20 பந்துகளிலும், 2012ல் கெய்ரன் பொலார்ட் 20 பந்துகளிலும் அரைசதம் அடித்திருந்தனர். அதை ரோஹித் சர்மா முறியடித்து டி20 உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய பேட்டர் சேர்த்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை ரோகித் சர்மா பதிவு செய்தார். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா 2010-ஆம் ஆண்டில் 101 ரன்கள் சேர்த்திருந்தார். அது மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக இருப்பவர் பதிவு செய்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் இந்தியாவுக்கு எதிராக கெயில் கேப்டனாக இருந்தபோது 98 ரன்களைப் பதிவு செய்திருந்தார்.

இதற்கு முன் 2016-இல் லாடர்ஹில்லில் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததே ரோகித் சர்மாவின் சிறந்த பேட்டிங்காக இருந்தது. அந்தச் சாதனையை அவரே முறியடித்து, 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையிலும் சாதனை படைத்தார்.

இந்திய அணி பவர்ப்ளே ஓவர்களை முடிப்பதற்குள் நேற்று ரோகித் சர்மா அரைசதம் அடித்துவிட்டார். டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளே ஓவர்கள் முடிப்பதற்குள் அரைசதம் அடித்த 4-வது பேட்டர் என்று ரோகித் சர்மா பதிவு செய்தார். இதற்கு முன் ஸ்டீபன் மைபுர்க், கேஎல் ராகுல், லிட்டன் தாஸ் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர்.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா சேர்த்த 41 பந்துகளில் 92 ரன்களில் 8 சிக்ஸர்கள் அடங்கும். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய பேட்டர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பெற்று, யுவராஜ் சிங் சாதனையை ரோகித் முறியடித்தார். யுவராஜ் சிங் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 7 சிக்ஸர்களை அடித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா 203 சிக்ஸர்களை பதிவு செய்தார். டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். 150 சிக்ஸர்களுக்கு மேல் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் (173) உள்ளார். ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 4,165 ரன்கள் சேர்த்து பாகிஸ்தானின் பாபர் ஆசமின் 4,145 சாதனையைக் கடந்தார்.

இந்த ஆட்டத்தில் மட்டும் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் சேர்ந்து 24 சிக்ஸர்களை விளாசியது டி20 உலகக் கோப்பையில் 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் 2014-இல் நெதர்லாந்து-அயர்லாந்து அணிகள் சேர்ந்து 30 சிக்ஸர்களை அடித்திருந்தன.

இந்திய அணி 205 ரன்கள் சேர்த்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம்தான். அவர் ஆட்டமிழக்கும்வரை இந்திய அணியின் ரேட் ஓவருக்கு 11 ரன்கள் வரை இருந்தது. ரோகித் ஆட்டமிழந்து சென்றபின் துபே (28) சூர்யகுமார் யாதவ் (31), ஹர்திக் பாண்டியா (27) ஆகியோர் முடிந்தவரை சிறந்த பங்களிப்பு செய்தனர்.

 

ஸ்டார்க் பந்தை வெளுத்த ரோகித்

ஆட்டம் தொடங்கியது முதலே ரோகித் சர்மா அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்தார். ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 29 ரன்களை ரோகித் விளாசினார்.

ஸ்டார்க்கின் சர்வதேசக் கிரிக்கெட்டில் மோசமான ஓவராகவும், டி20 உலகக் கோப்பையிலும் மோசமானதாக அமைந்தது. 2021-ஆம் ஆண்டு டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 22 ரன்கள் வழங்கியதுதான் ஸ்டார்க்கின் மோசமான பந்துவீச்சாக இருந்தது. அதைவிட நேற்றைய பந்துவீச்சு மோசமாக இருந்தது.

டி20 இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலி இந்த சீசனில் 2-வது முறையாக டக்-அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார்

கோலியின் மோசமான ஃபார்ம்

2023-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி கண்ணீருடன் மைதானத்தை விட்டு நடந்து சென்றதற்கு பழிதீர்க்கும் விதத்தில், ரோகித் சர்மாவின் ஆட்டம் அமைந்திருந்தது.

விராட் கோலி இந்த சீசனில் 2-வது முறையாக டக்-அவுட்டில் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார்.

ஆனாலும் ரோகித் சர்மாவின் அதிரடியை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் 5-வது ஓவரில் 19 பந்துகளில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை சேர்த்தது. 8.4 ஓவர்களில் 100 ரன்களை இந்திய அணி எட்டியது. 13.4 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது.

ரோகித்தின் அதிரடி ஆட்டம்

ரோகித் சர்மா அரைசதம் அடித்தபோது, ரிஷப் பந்த் ஒரு ரன் மட்டுமே சேர்த்திருந்தார். அதாவது இந்திய அணியின் ஸ்கோரில் 99% ரோகித் சர்மாவின் அரைசதம்தான். ரோகித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்ய பலமுறை ஸ்டார்க் ஷார்ட் பந்துகளையும், ஸ்விங் செய்யவும் முயற்சித்தார். ஆனால், அனைத்துமே தவறாக முடிந்து, ரோகித் பேட்டிங்கிற்கு இரையானது. ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 21 முறை ஃபிரன்ட்புட் ஷாட்களை ஆடினார் இதில் 71 ரன்களைச் சேர்த்தார். இதில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் ஃபிரன்ட்புட் ஷாட்டில் அடிக்கப்பட்டவை.

கம்மின்ஸ், ஸ்டாய்னிஷ், ஆடம் ஜம்பா ஓவர்களையும் ரோகித் சர்மா விட்டுவைக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் 2முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய கம்மின்ஸ் ஓவரில் ரோஹித் சர்மா காலை மடக்கி ஸ்வீப்பில் அடித்த சிக்ஸர் அரங்கின் மேற்கூரையில் விழுந்தது.

ஆடம் ஜம்பா ஓவரை பதம்பார்த்த ரோகித் சர்மா 7-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினர். ஸ்டாய்னிஷ் வீசிய 8-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்களை ரோகித் சர்மா சேர்த்தார், ஸ்டாய்னிஷ் வீசிய 10-வது ஓவரிலும் 2 பவுண்டரிகளை ரோகித் வெளுத்தார்.

குறைந்த ரன்ரேட்

ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை இந்திய அணி 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளை விளாசி இருந்தது. ஆனால் ரோகித் சர்மா 92 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறியநிலையில் இந்தி அணியின் ரன்ரேட் சற்று குறையத் தொடங்கியது. ரோகித் சர்மா 2-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்துடன் சேர்ந்து 87 ரன்களும், சூர்யகுமாருடன் சேர்ந்து 34 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார்.

15-வது ஓவர் முதல் 18-வது ஓவர் வரை 21 பந்துகளாக இந்திய அணி பவுண்டரிகூட அடிக்கவிடாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். ஆனால் ஹர்திக் பாண்டியா களமிறங்கி, 2 சிக்ஸர்கள், பவுண்டரி அடித்து ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தினார்.

 
டி20 இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அக்ஸர் படேல் எல்லைக் கோட்டில் அற்புதமான கேட்ச் பிடித்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது

தப்பித்த ஹேசல்வுட்

ஆஸ்திரேலிய அணியில் உயிர்தப்பி பந்துவீசியது ஹேசல்வுட் மட்டும்தான். 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.

வார்னர் ஏமாற்றம்

206 ரன்கள் எனும் கடின இலக்கை ஆஸ்திரேலிய அணி துரத்தியது. அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரிலையே வார்னரை (6) வெளியேற்றி அதிர்ச்சியளித்தார். அதன்பின் டிராவிஸ் ஹெட், மார்ஷ் சேர்ந்து ஸ்கோரை உயர்த்தும் விதத்தில் அதிரடியாக ஆடினர். பவர்ப்ளேயில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.

திருப்புமுனையான அக்ஸர் படேல் கேட்ச்

குல்தீப் யாதவ் ஓவரில் மார்ஷ் சிக்ஸர் அடிக்க முயற்சிக்கவே, அதை அக்ஸர் படேல் எல்லைக் கோட்டில் அற்புதமான கேட்ச் பிடித்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. ஹெட்-மார்ஷ் இடையிலான 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்து மார்ஷ் 37 ரன்களில் வெளியேறினார்.

அதன்பின் வந்த ஆஸ்திரேலிய பேட்டர்கள் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் பந்துவீச்சுக்கு திணறினர். மேக்ஸ்வெல் 20 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதன்பின் ஹெட் (76) ஸ்டாய்னிஷ் (2), மேத்யூ வேட் (1), டிம் டேவிட் (15) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா தடுமாறியது. கடைசி 3 ஓவர்களில் 51 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்க்க வேண்டியிதிருந்தது. ஆனால் கம்மின்ஸ் (11), ஸ்டார்க் (4) ரன்களில் இறுதிவரை போராடியும் முடியாததால் தோல்வி அடைந்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்காளம், ஆஸி.யை வெளியேற்றி ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது ஆப்கான்

25 JUN, 2024 | 11:27 AM
image

(நெவில் அன்தனி)

சென். வின்சென்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற குழு 2க்கான கடைசியும் தீர்மானம் மிக்கதுமான பங்களாதேஷுக்கு எதிரான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் 8 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.

இதன் மூலம் முதல் தடவையாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் வரலாறு படைத்தது.

ஆரம்ப வீரர் லிட்டன் தாஸ் தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்தி கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஆப்கானிஸ்தானின் வெற்றியை அவரால் தடுக்க முடியாமல் போனது.

இந்த வெற்றியை அடுத்து 27ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதியில் தென் ஆபிர்க்காவை ஆப்கானிஸ்தான் எதிர்த்தாடவுள்ளது.

அதே தினத்தன்று நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதியில் இந்தியாவை இங்கிலாந்து சந்திக்கவுள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியில் ரஹ்மானுல்லா குர்பாஸின் சிறப்பான துடுப்பாட்டம் அணித் தலைவர் ரஷித் கான், நவீன் உல் ஹக் ஆகியோர் பதிவு செய்த 4 விக்கெட் குவியல்கள் என்பன பிரதான பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி நடப்பு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நான்காவது தடவையாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் 59 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது இப்ராஹிம் ஸத்ரான் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (10), ரஹ்மானுல்லா குர்பாஸ் (43) ஆகிய இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

கடைசி 4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அதில் அணித் தலைவர் ராஷித் கான் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸ் நிறைவடைந்ததும் சிறு மழைத்துளி படர்ந்தது.

ஆனால், ஆட்டம் தாமதிக்கவில்லை.

13 ஓவர்களில் 119 ஓட்டங்களைப் பெற்றால் அல்லது 12.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தால் பங்களாதேஷ் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் 116 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்ளாதேஷ் 17.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பங்களாதேஷ் 3.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் ஆட்டம் தடைப்பட்டது..

சுமார் 30 நிமிடங்களின் பின்னர் போட்டி மீண்டும் ஆரம்பமானபோது வெற்றி இலக்கு 116 ஓட்டங்களாகவே இருந்தது.

எனினும் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பங்களாதேஷ் 11.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் பங்களாதேஷ் 2 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது.

ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் பங்களாதேஷின் வெற்றி இலக்கு 19 ஓவர்களில் 114 ஓட்டங்களாக திருத்தப்பட்டது.

18ஆவது ஓவரில் மழை மீண்டும் பெய்ததால் 3ஆவது தடவையாக ஆட்டம் சில நிமிடங்களுக்கு தடைப்பட்டது. அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் பங்களாதேஷ் 3 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது.

இறுதியில் 7 பந்துகள் மீதம் இருக்க  ஆப்கானிஸ்தான் 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

அவரை விட தௌஹித் ரிதோய் (14), சௌமியா சர்க்கார் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ரஷித் கான் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: நவீன் உல் ஹக்

2506_naveen_ul_haq.jpg

2606_afghan_into_semi.jpg

 

2606__Rahid_khan.png

https://www.virakesari.lk/article/186911

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் பொங்கும் கொண்டாட்டத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியதை அந்த தேசத்தின் மக்கள் கொண்டாடி வருகிறார்கள் கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

2024-ஆம் ஆண்டு, ஜூன் 24-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக மாறிவிட்டது.

எப்போது, எங்கு என்ன நடக்கும் என நிச்சயமற்ற வாழ்க்கைக்கு மத்தியில், பல்வேறு சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, கிரிக்கெட் பயிற்சி எடுத்து, டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியதை அந்த தேசத்தின் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் வெற்றியை வெறுத்து, வங்கதேசத்தின் வெற்றியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து சூப்பர்-8 சுற்றோடு வெளியேறியது. 2022-ஆம் ஆண்டுக்குப்பின் தொடர்ந்து 2-வது முறையாக அரையிறுதிக்குச் செல்லாமல் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.

வங்கதேச அணியை வென்றால் ஆப்கானிஸ்தானுக்கு வழிபிறக்கும், ஆப்கானிஸ்தானை வங்கதேசம் வென்றால், ஆஸ்திரேலியாவுக்கு கதவுகள் திறக்கும் என்ற ரீதியில்தான் ஆட்டம் நடந்தது.

 

வங்கதேசத்தின் வெற்றி அந்த அணிக்கு நலம் பயக்கிறதோ இல்லையோ, ஆஸ்திரேலியா அரையிறுதி செல்ல உதவியாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலியா ஆவலோடு காத்திருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பீல்டிங்கால் வங்கதேசத்தை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் அரையிறுதிக் கனவை தவிடுபொடியாக்கியது.

இதையடுத்து, 27-ஆம் தேதி காலையில் நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியுடன் ஆப்கானிஸ்தான் மோதுகிறது. அன்று இரவு நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வென்றது.

இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு?

முதல் அரையிறுதி ஆட்டத்தில் மழை பெய்தால் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 2-வது அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசர்வ் நாள் இல்லை, மாறாக கூடுதலாக 250 ரன்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா-இங்கிலாந்து ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே ரத்தானால், இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும். ஏனென்றால் குரூப்-1 பிரிவில் முதலிடம் பிடித்ததால் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதியாகும்.

இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் நடக்கும் கயானாவில் 27-ஆம் தேதி 88% மழைக்கும் 18% இடியுடன் மழைபெய்யவும் வாய்ப்புள்ளது. மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வசதியும் கயானா மைதான நிர்வாகத்திடம் இல்லை. ஆதலால், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டால் இந்தியா இறுதிப்போட்டி செல்வது உறுதியாகும்.

கிங்ஸ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் வென்றது.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான், 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. மழையின் குறுக்கீட்டால் டி.எல்.எஸ் விதிப்படி 19 ஓவர்களில் 119 ரன்கள் சேர்க்க வங்கதேசத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வங்கதேச அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

குரூப்-1 பிரிவில் அரையிறுதிக்கு இந்திய அணி ஏற்கெனவே தகுதி பெற்ற நிலையில் 2-வது இடத்துக்கு ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. ஒவ்வொரு அணியின் வெற்றியும், தோல்வியும் மற்றொரு அணிக்கு அரையிறுதிக் கதவை திறக்கும் வகையில் இருந்தது. ஆனால், இறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு முதன்முதலாக பயிற்சியாளராகப் பதவி ஏற்ற இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜோனத்தன் டிராட்டுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பிராவோ இருந்துள்ளார்.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று ஜாம்பவான் பிரையான் லாரா மட்டும் சரியாகக் கணித்திருந்தார்" என்றார் ரஷித் கான்

‘நம்பமுடியவில்லை, சாதனைதான்’

வெற்றிக்குப்பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் கூறுகையில், உலகக் கோப்பை அரையிறுதி செல்வது தங்களுக்குக் கனவாக இருந்தது என்றார்.

“அந்த நோக்கில்தான் போட்டித் தொடரைத் தொடங்கினோம். எங்கள் நம்பிக்கை நியூசிலாந்தை வென்றதும் உறுதியானது. இப்போதும் நம்பமுடியவில்லை. நாங்கள் அரையிறுதி செல்வோம் என்று ஜாம்பவான் பிரையான் லாரா மட்டும் சரியாகக் கணித்திருந்தார். நான் ஒரு பார்ட்டியில் அவரைச் சந்தித்தபோது, உங்கள் கணிப்பைப் பொய்யாக்கி தலைகுனிவை ஏற்படுத்தமாட்டோம் என்று கூறியிருந்தேன்,” என்றார்.

மேலும், “130 ரன்கள் சேர்த்தாலே இந்த விக்கெட்டில் நல்ல ஸ்கோர். ஆனால் எங்களால் 115 ரன்கள்தான் சேர்க்க முடிந்தது. வங்கதேசம் எங்களுக்குக் கடினமான சவால் அளிப்பார்கள் என எங்களுக்குத் தெரியும், அதனால் எங்களின் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றோம். தெளிவான திட்டத்துடன் களமிறங்கினோம். எங்கள் மக்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினோம். ஒவ்வொரு வீரரும் அற்புதமான பணியைச் செய்துள்ளனர்,” என்றார்.

“புதிய பந்தில் பரூக்கியும், நவீனும் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தத் தொடர் முழுவதுமே இருவரும் சிறப்பாகப் பந்துவீசினர். குல்புதீன் நயீப் எடுத்தவிக்கெட் எங்களுக்கு அந்த நேரத்தில் விலைமதிப்பில்லாதது. நாங்கள் தாய்தேசம் திரும்பியதும் மிகப்பெரிய கொண்டாட்டம் காத்திருக்கிறது. அரையிறுதி என்பது எங்களுக்கு மிகப்பெரிய சாதனை. 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அரையிறுதி வரை வந்திருந்தோம். இப்போது உலகக் கோப்பையில் வந்திருப்பது எங்களைப் பொருத்தவரை சாதனைதான். எங்கள் தேசத்துக்கு திரும்பும் அந்த நாளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தெளிவான மனநிலை, திட்டமிடலுடன் அரையிறுதிப் போட்டிக்குச் செல்வோம், அந்த தருணத்தை அனுபவிப்போம்,” எனத் தெரிவித்தார்.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,டி20 உலகக் கோப்பை

படக்குறிப்பு,பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்து தடுமாறியது

ஆட்டநாயனுக்கு போட்டி

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு கேப்டன் ரஷித் கான் பந்துவீச்சும், வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல்ஹக் பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ஆட்டநாயகன் விருது நவீன் உல் ஹக்கிற்கு வழங்கப்பட்டது. பேட்டிங்கில் ரஷித் கான் கடைசி நேரத்தில் அடித்த 3 சிக்ஸர்கள்தான் ஆப்கானிஸ்தானை கவுரவமான ஸ்கோரைப் பெற உதவியது. இருப்பினும் முக்கியத் தருணங்களில் விக்கெட் வீழ்த்திய நவீனுக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பவர்ப்ளே ஓவரில் மூன்றாவது ஓவரிலேயே நவீன் உல் ஹக் சிறப்பான பந்துவீச்சால் கேப்டன் ஷான்டோ, சஹிப் அல் ஹசன் இருவரின் விக்கெட்டையும், கடைசி நேரத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது விக்கெட்டையும் வீழ்த்தி வங்கதேச அணியை நெருக்கடியில் சிக்கவைத்தமைக்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நம்பிக்கையளிக்கும் ஜோடி

ஆப்கானிஸ்தான் அணியைப் பொருத்தவரை வழக்கம்போல் அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ்-இப்ராஹிம் ஜாத்ரன் நல்ல தொடக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ரன் சேர்க்க திணறிய ஆப்கானிஸ்தான், பவர்ப்ளேயில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்து 10 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்தது.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பேட்டிங் செய்வதற்குக் கடினமான விக்கெட்டாக ஆன்டிகுவா இருந்தது

ரஷித் கானின் 3 சிக்ஸர்கள்

அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்களும், ஜாத்ரன் 18 ரன்களும் சேர்த்தனர். ஓமர்சாய் 10 ரன்களும், கடைசி நேரத்தில் களமிறங்கிய ரஷித்கான் 3 சிக்ஸர்களை விளாசி 19 ரன்களைச் சேர்த்தார். ரஷித்கானின் 3 சிக்ஸர்களால்தான் ஆப்கானிஸ்தான் 100 ரன்களைக் கடந்து கவுரவமான ஸ்கோரைப் பெற்றது. இல்லாவிட்டால், 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது.

பேட்டிங் செய்வதற்குக் கடினமான விக்கெட்டாக ஆன்டிகுவா இருந்தது. பந்துகள் தாழ்வாகவும், மெதுவாகவும் பேட்டர்களை நோக்கி வந்ததால் பேட் செய்யவும், பெரிய ஷாட்களை அடிக்கவும் கடினமாக இருந்தது. அதிலும் பந்து தேய்ந்தபின் பெரிய ஷாட்டை அடித்தாலும் பந்து சிக்ஸர், பவுண்டரி செல்வது கடினமாக இருந்தது. வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹூசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

விக்கெட்டுகளை இழந்த வங்கேதசம்

116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்து தடுமாறியது. பரூக்கி வீசிய 2-வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் டக்அவுட் ஆகினார்.

நவீன் உல் ஹக் வீசிய 3-வது ஓவரில் கேப்டன் ஷான்டோ (5), அனுபவ பேட்டர் சஹிப் அல்ஹசன் (0) விக்கெட்டை இழந்தனர். 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறியது. 4வது ஓவர் வீசப்பட்டபோது மழைக் குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டது.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,11-வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது

ரஷித் கான் மாயஜாலம்

மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அதன்பின் ஆட்டத்தைக் கையில் எடுத்த ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வங்கதேச பேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தி வங்கதேசத்தை ரஷித்கான் நெருக்கடியில் தள்ளினார். ரஷித்கான் பந்துவீச்சில் 10 ரன்னில் சவுமியா சர்க்கார் போல்டாகினார், ரஷித்கான் வீசிய 9-வது ஓவரில் ஹிர்தாய் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ரஷித்கான் வீசிய 11-வது ஓவரில் மெகமதுல்லா (6), ரிஷாத் ஹூசைன் கிளீன் போல்டாகி ஒரே ஓவரில் இருவரும் வெளியேறினர். 80 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தோல்வியில் பிடியில் சிக்கியது.

11-வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. அப்போது டிஎல்எல் விதிப்படி ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு வங்கதேசத்துக்கு இலக்கு 114 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே 80 ரன்களை வங்கதேசம் சேர்த்துவிட்டதால், 35 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்பட்டது.

உலகக் கோப்பை டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது

லிட்டன் தாஸ் போராட்டம்

தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி 41 பந்துகளில் அரைசதம் அடித்தார், கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. 15-வது ஓவரில் தன்சிம் ஹசன் விக்கெட்டை குல்புதீன் நயீப் எடுக்கவே ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி 3 ஓவர்களில் வங்கதேசம் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. குல்புதீன் வீசிய 17-வது ஓவரில் லிட்டன் தாஸ் 4 ரன்கள் சேர்த்தார். 12 பந்துகளில் வங்கதேசம் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது.

18-வது ஓவரை நவீன் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் தஸ்கின் அகமது தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டு பந்து பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜில் போல்டாகியது. வங்கேதசம் 9-வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. அடுத்து களமிறங்கிய முஸ்தபிசுர் ரஹ்மான், நவீன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி அவுட் ஆகவே, ஆப்கானிஸ்தான் வீரர்கள் கட்டித்தழுவி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். குர்பாஸ் கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இரு தேசங்களின் இதயங்கள் நொறுங்கின

மிகக் குறைவான ஸ்கோரை அடித்தபோதிலும் வலுவான சுழற்பந்துவீச்சு, துல்லியமான வேகப்பந்துவீச்சு மூலம் வங்கதேசத்தைச் சுருட்டி ஆப்கானிஸ்தான் முதல்முறையாக அரையிறுதி சென்றது. ரஷித்கான் நடுப்பகுதி ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதும், நவீன் உல்ஹக் பவர்ப்ளேயில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதும் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

லிட்டன் தாஸ் வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லப் போராடியும் கடைசிவரை அவருக்கு ஒத்துழைக்க வீரர்கள் இல்லை. ஆப்கானிஸ்தான் வெற்றி வங்கதேச மக்களின் இதயத்தை மட்டுமல்ல, ஆஸ்திரேலிய ரசிகர்களின் இதயத்தையும் நொறுக்கிவிட்டது, என்றே சொல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா, பாகிஸ்தானில் இருந்து குவியும் வாழ்த்து - தாலிபன் கூறியது என்ன?

AFG vs BAN

பட மூலாதாரம்,GETTY IMAGES

25 ஜூன் 2024

ஐசிசி டி20 உலகப்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்த சாதனை ஆப்கானிஸ்தான் அணிக்கு மிக முக்கியமானது. ஐசிசி உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு நுழைவது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியை, கிரிக்கெட் ஆர்வலர்கள் எப்படி பார்க்கின்றனர்?

ஆப்கன் கிரிக்கெட் வரலாறு என்ன?

1839-ம் ஆண்டு ஆங்கிலோ- ஆப்கன் போரின் போது கிடைத்த இடைவெளியில் பிரிட்டன் துருப்புகள் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இதுதான் ஆப்கானிஸ்தானில் பதிவான முதல் கிரிக்கெட் போட்டியாகும்.

இருப்பினும், 1990 களின் நடுப்பகுதியில் தான், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் உண்மையில் வேரூன்றத் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாம்களில் வளர்ந்த ஆப்கானியர்கள் கிரிக்கெட் மீது ஆர்வத்துடன் தங்கள் பிறந்த இடத்திற்குத் திரும்பினர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்கு முன்பு 1995-ம் ஆண்டு ஆப்கன் கிரிக்கெட் வாரியம் உருவாக்கப்பட்டது.

அமெரிக்கா தலைமையிலான படையினர் 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபன்களை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகு தேசிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினராக ஆப்கானிஸ்தான் சேர்ந்தது.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த தாலிபன்களின் கொடிக்கு பதிலாக, கருப்பு, சிவப்பு, பச்சை நிறம் கொண்ட கொடியை அணிந்தே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நஸீப் கான் என்பவரை ஆப்கன் கிரிக்கெட் வாரிய தலைவராக நியமித்தது.

‘’இந்த வெற்றி, நாட்டில் உள்ள மக்களுக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கும். எங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒரே விஷயம் கிரிக்கெட்தான்’’ என ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தனில் வெளியுறத்துறை அமைச்சர் மாவ்லவி அமிர் கான் மிட்டாகி, கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ஆப்கன் கிரிக்கெட் வாரியம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மூத்த கிரிக்கெட் வீரர்களின் வாழ்த்து

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் மாஸ்டர் பிளாஸ்டருமான சச்சின் டெண்டுல்கர் ஆப்கானிஸ்தான் அணியை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ’’ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உங்களது அரையிறுதிக்கான பயணம் அபாரமானது. இன்றைய வெற்றி, உங்களது கடும் உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஓர் உதாரணம். உங்களது முன்னேற்றம் பெருமையாக உள்ளது’’ என பதிவிட்டுள்ளார்.

 
ரஷித் கான்

பட மூலாதாரம்,X/SACHIN TENDULKAR

ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் டிம் மூடி,’’ வாவ், என்னவொரு போட்டி. விறுவிறுப்பு நிறைந்ததாக இருந்தது. இந்த மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வாழ்த்துக்கள்’’ என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘’வாவ் ஆப்கானிஸ்தான். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து அரையிறுதியை எட்டியுள்ளது. என்னவொரு முயற்சி. இதைதான் முன்னேற்றம் என்பார்கள். வாழ்த்துகள்’’ என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் வாழ்த்தியுள்ளார்.

யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் என பலரும் ஆப்கானிஸ்தானை வாழ்த்தியுள்ளனர்.

’’தாலிபன்கள் அரையிறுதிக்கு நுழைந்து, உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது. நவீன் உல்ஹக்கின் சிறந்த திறனை வெளிப்படுத்தினார். கிரிக்கெட் அதன் சிறந்த நிலையில் உள்ளது’’ என யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார்.

ரஷித் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வெற்றி கொண்டாட்டத்தில் ரஷித் கான்

பாகிஸ்தானில் இருந்தும் வாழ்த்து

முன்னாள் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான கம்ரான் அக்மல், ரஷித் கான் மற்றும் நவீன் உல்ஹக்கை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். ’’அரையிறுதிக்கு நுழைந்த ஆப்கனுக்கு வாழ்த்துகள். அருமையான கிரிக்கெட். என்னவொரு சாதனை. பந்துவீச்சாளர்களின் அருமையான திறன்’’ என பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முன்னாள் தலைவர் ஃபவாட் சவுத்ரி,’’ காபுல் மற்றும் கந்தகார் பாய்ஸ், உலகில் மிகப்பெரிய விளையாட்டுப்போட்டியின் அரையிறுதிக்கு நுழைந்துள்ளனர்.’’ என வாழ்த்தியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/czkk03x4ppno

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷித் கானின் ‘தவறு’, தென்னாப்பிரிக்காவின் ‘நல்வாய்ப்பு’ - ஆப்கானிஸ்தான் தோல்விக்குக் காரணம் என்ன?

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்கா அணி கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 31 நிமிடங்களுக்கு முன்னர்

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக, தென் ஆப்ரிக்கா அணி தகுதி பெற்றது.

டி20 உலகக் கோப்பை அரையிறுதி பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் ஒருதரப்பாக அமைந்தது. ஆடுகளத்தை சரியாகக் கணிக்காமல் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது அவர்களின் இத்தனை ஆண்டு கடின உழைப்பை வீணாக்கியது.

இதுவரை ஐசிசி நடத்திய அனைத்துப் போட்டிகளிலும் அரையிறுதியைக் கூட தாண்டியதில்லை, ‘சோக்கர்ஸ்’ என்ற பெயரெடுத்த தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது.

கேப்டன் எய்டன் மார்க்ரம் தலைமையில் தென் ஆப்ரிக்கா அணி 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை கடந்த 2014ம் ஆண்டு வென்றிருந்தது. அதன்பின் இதுவரை ஐசிசி சார்பில் எந்தஒரு கோப்பையையும் தென் ஆப்ரிக்கா அணி வென்றதில்லை. ஆனால், இந்த முறை லீக் போட்டி முதல் அரையிறுதிவரை ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியுள்ளது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டரூபாவில் நேற்று(26ம்தேதி) நடந்த டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்கா அணி.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 11.5 ஓவர்களில் 56 ரன்களில் சுருண்டது. 57 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய தென் ஆப்ரிக்கா 67 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று(27ம்தேதி) இரவு நடக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து- இந்தியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி தென் ஆப்ரிக்காவுடன் கோப்பைக்காக மல்லுக்கட்டும்.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிவரை பயணித்திருக்கிறது ஆப்கானிஸ்தான்.

மறக்கமுடியாத பயணம்

தென் ஆப்ரிக்க அணிக்கும், ஆப்கானிஸ்தான் அணிக்கும் 2024 டி20 உலகக் கோப்பை பயணம் மறக்கமுடியாததாக அமைந்துவிட்டது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி நடத்தும் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதேபோல 50 ஆண்டுகளில் பல அணிகள் செய்த சாதனையை வெறும் 20 ஆண்டுகளில் செய்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அரையிறுதிவரை வந்துள்ளது.

2010ம் ஆண்டு ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியும், அந்த அணி பல்வேறு ஜாம்பவான் அணிகளுக்கு அவ்வப்போது அளித்த அதிர்ச்சித் தோல்விகளும் தாங்கள் வளர்ந்து வருகிறோம் என்பதை சொல்லிவந்தன.

இந்த உலகக் கோப்பை பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிவரை பயணித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். வரும் காலத்தில் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்வோம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு ஆப்கானிஸ்தான் விடைபெற்றது.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி பந்துவீச்சைக் கூட எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் ஆட்டமிழந்தனர்.

விக்கெட் வீழ்ச்சி

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் தீர்மானித்தது. அது எவ்வளவு பெரிய தவறு என்பது சற்று நேரத்திலேயே தெரிய வந்தது.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் அனல் தெறிக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் மைதானம் வருவதும், அடுத்த சில நிமிடங்களில் பெவிலியன் செல்வதுமாக இருந்தனர்.

ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் குர்பாஸ், சந்தித்த முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த குல்புதீன் நயீப்(9), இப்ராஹிம் ஜாத்ரன்(2), முகமது நபி(0),கரோடே(2) என பவர்ப்ளே ஓவருக்குள் ரபாடா, நோர்க்கியா, யான்சென் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை சரிந்தது. பவர்ப்ளே முடிவில் 23ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி பந்துவீச்சைக் கூட எதிர்கொள்ள முடியாமல் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்த பதற்றம், ஆட்டத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்ற குழப்பம் பேட்டர்கள் முகத்தில் தெரிந்தது. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து 11.5 ஓவர்களில் 56 ரன்களில் ஆட்டத்தை முடித்தனர்.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அரையிறுதியில் ஒரு அணி சேர்த்த, ஆப்கானிஸ்தான் சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.

உலகக் கோப்பையில் மிகக்குறைவு

ஆப்கானிஸ்தான் அணியில் ஓமர்ஜாய்(10) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தார். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னிலும் 3 பேட்டர்கள் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே அரையிறுதியில் ஒரு அணி சேர்த்த, ஆப்கானிஸ்தான் சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.

தென் ஆப்ரிக்கத் தரப்பில் யான்சென் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். ரபாடா, நோர்க்கியா தலா 2 விக்கெட்டுகளையும், ஷம்சி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

எளிதான வெற்றி

57 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் தென் ஆப்ரிக்க பேட்டர்கள் களமிறங்கினர். ஃபரூக்கி வீசிய 2வது ஓவரில் டீகாக் 5 ரன்னில் கிளீன் போல்டாகினார். ஆனால், ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம் இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மார்க்ரம் 23 ரன்களிலும், ஹென்ட்ரிக்ஸ் 29 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

எங்கே தவறு செய்தோம்? - ரஷித் கான் கூறியது என்ன?

போட்டி முடிந்த பிறகு பேசிய ரஷித் கான், "ஒரு அணியாக இது எங்களுக்கு கடினமான இரவு என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இதைவிட சிறப்பாக ஆடியிருக்க முடியும். நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை. முஜீப் காயம் அடைந்ததால் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பந்துவீச்சில் நிலைத்தன்மையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த போட்டியில் பெரிய ஆட்டத்தில் வெல்வது... ஆம் நாங்கள் எந்த அணியையும் வீழ்த்தும் திறன் கொண்டவர்கள்.” என்றார்.

நல்லவேளையாக இதைச் செய்யவில்லை - தென்னாப்பிரிக்க கேப்டன் கூறியது என்ன?

“இது ஒரு பெரிய கூட்டு முயற்சி” என்றார் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம். “நாங்கள் டாஸில் தோற்றது எங்களது அதிர்ஷ்டம். இல்லையென்றால் நாங்களும் பேட்டிங் செய்திருப்போம்.” என்று அவர் கூறினார்.

“இதற்கு முன்பு நாங்கள் அங்கு (இறுதிப் போட்டி) சென்றதில்லை, ஆனால் நிறைய நம்பிக்கை இருக்கிறது.” என்றார் அவர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவின் தொடக்க ஜோடியை குறிவைக்கும் 2 இங்கிலாந்து வீரர்கள்

டி20 உலகக் கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய அணி தொடர் வெற்றியைப் பெற்று வந்தாலும், கடந்த கால வரலாறு அந்த அணிக்குச் சாதகமாக இல்லை. கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து இந்திய அணி ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் அரையிறுதிவரை வந்துவிட்டது. அதேநேரம், இங்கிலாந்து அணி, லீக் ஆட்டத்தைக் கடப்பதற்கே போராட்டத்தைச் சந்தித்தது. நடப்பு சாம்பியன் அணி, லீக் சுற்றோடு வெளியேறிவிடும் என்று கருதப்பட்டநிலையில், சூப்பர்-8 சுற்றுக்கு வந்து முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்திய அணி தொடர் வெற்றியைப் பெற்று வந்தாலும், கடந்த கால வரலாறு அந்த அணிக்குச் சாதகமாக இல்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு வகையில் அணியின் பலவீனம் வெளிப்பட்டு வந்திருக்கிறது. அதனால் இங்கிலாந்துடனான ஆட்டம் இந்தியாவுக்கு எளிதாக அமைந்துவிடும் என யாரும் கணிக்கவில்லை.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, மழையால் ஸ்காட்லாந்துடன் ஆட்டம் ரத்து, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி என லீக் சுற்று போராட்டமாகத்தான் தொடங்கியது. ஆனால், அடுத்தடுத்து 2 மாபெரும் வெற்றிகளை பெற்று நிகர ரன்ரேட்டில் சூப்பர்-8 சுற்றுக்குள் இங்கிலாந்து வந்தது.

சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்ரிக்காவிடம் தோல்வி அடைந்தாலும், மேற்கிந்தியத்தீவுகளையும், அமெரிக்காவையும் வென்று நிகர ரன்ரேட்டில் வலுவாக அமர்ந்து குரூப்-2 பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தும்வரை இங்கிலாந்து அணிக்கு யாருடன் அரையிறுதி உறுதியாகவில்லை. இந்திய அணி வென்றபின்புதான், அரையிறுதி போட்டி நடக்கும் மைதானம் இங்கிலாந்து அணிக்கு உறுதியானது. அதன்பின்புதான் தனிவிமானத்தில் செவ்வாய்கிழமை காலை ஜார்ஜ்டவுன் சென்றது. இந்திய அணி திங்கள்கிழமை இரவு சென்றது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இங்கிலாந்தின் பலவீனம் என்ன?

அரைறுதி போட்டி நடக்கும் பிராவிடன்ஸ் அரங்கில் 2010ம் ஆண்டுக்குப்பின் இங்கிலாந்து அணி விளையாடியதில்லை என்பதே அந்த அணிக்கு பெரிய பின்னடைவு. ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்குப்பின்புதான் அந்த அணி வீரர்கள் அந்த விக்கெட்டில் விளையாடுகிறார்கள். இதில் இங்கிலாந்து அணியில் இருக்கும் ஜோர்டான் மட்டும் கரீபியன் லீக்கில் விளையாடுவதால் அந்த விக்கெட்டில் விளையாடிய அனுபவம் உடையவர். மற்ற இங்கிலாந்து வீரர்கள் யாருக்கும் பிராவிடன்ஸ் விக்கெட் குறித்த அனுபவம் இல்லை.

ஆனால், இந்திய அணியில் இருக்கும் பல வீரர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிராவிடன்ஸ் மைதானத்தில் டி20 போட்டிகளை விளையாடியதால் விக்கெட் குறித்த அனுபவம் இருக்கிறது.

 
டி20 உலகக் கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிராவிடன்ஸ் விக்கெட்(ஆடுகளம்) சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி.

ஆடுகளம் எப்படிப்பட்டது?

பிராவிடன்ஸ் விக்கெட்(ஆடுகளம்) சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி. இது ஸ்லோ விக்கெட் என்பதால், வேகப்பந்துவீச்சாளர்கள் உயிரைக்கொடுத்து வீசினாலும் ஸ்விங் ஆகாது, பவுன்ஸ் ஆவது கடினம்.

பந்துவீச்சில் வெவ்வேறு வேகத்தையும், சுழலையும் வெளிப்படுத்தும்போது அதற்கான பலன்களைப் பெற முடியும். இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 146 ரன்களை ஆப்கானிஸ்தான் சேர்த்துள்ளது. இந்த உலகக் கோப்பைக்காக மைதானம் ஓரளவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

டாஸ் வெல்லும் அணி சிறிதுகூட யோசிக்காமல் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து விக்கெட் பற்றி யோசிக்காமல் பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்தி ரன்களைச் சேர்க்க முயற்சிக்கலாம். குறைந்தபட்சம் 150 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது. முதலில் பேட் செய்த அணி 5 முறையும், சேஸிங் செய்த அணி 4 முறையும் இந்த விக்கெட்டில் வென்றுள்ளன.

இந்த உலகக் கோப்பைத் தொடரிலும் இங்கு 5 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணிகள் 3 முறையும் சேஸிங் செய்த அணிகள் 2முறையும் வென்றுள்ளன.

ஆதலால் இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். இங்கிலாந்து அணியில் அதில் ரஷீத், மொயின் அலி, லிவிங்ஸ்டன் ஆகியோரும், இந்திய அணியில் குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்ஸர் படேல் சேர்க்கப்படலாம், தேவைப்பட்டால் சஹலுக்குக் கூட வாய்ப்பு வழங்கப்படலாம்.

 
டி20 உலகக் கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலி இடம் பறிக்கப்படுமா?

விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் மோசமான ஃபார்மோடு தவிக்கிறார். இதுவரை கோலி விளையாடிய போட்டிகளில் 2 டக்அவுட், என 66 ரன்கள்தான் சேர்த்துள்ளார், அதிகபட்சமே 37 ரன்கள்தான். வழக்கமாக விராட் கோலி 3வது வீரராகத்தான் களமிறங்குவார் ஆனால், அவரை டி20உலகக் கோப்பைக்காக புதிய பந்தை எதிர்கொள்ளச் செய்யும்போது அவரால் விக்கெட்டை தாக்குப்பிடித்து ஆடமுடியவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது.

இதனால் அரையிறுதியில் விராட் கோலி வழக்கம்போல் 3-ஆவது இடத்திலும் தொடக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ஆனால், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் கோலியுடன் சேர்ந்து ஆடிய ஏபிடி கோலியின் தொடக்க பேட்டிங் குறித்து யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கோலிக்கு தொடக்க ஆட்டக்காரர் வரிசை சரியாக வராது. அவரை எப்போதும்போல 3-ஆவது வீரராகக் களமிறக்குங்கள். அவர் 3-ஆவது வீரராக வந்தாலே எதிரணிக்கு ஒருவிதமான கலக்கம் இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் விராட் கோலி அரையிறுதி ஆட்டத்தில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்குவாரா அல்லது 3-ஆவது வீரராகக் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக, ரோஹித் சர்மாவும், கோலியும் ஒரே ஒருமுறைதான் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்களை விளாசி அவரின் ஃபார்மை நிரூபித்துவிட்டார். ஆனால், கோலி இதுவரை பெரிதாக எந்த இன்னிங்ஸிலும் ஆடவில்லை. இதனால் அடுத்துவரும் அரையிறுதி, அல்லது பைனலில் கோலி தன்னுடைய பேட்டிங்கை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

 
டி20 உலகக் கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்களை எடுக்க முடியாமல் தவிக்கிறார்.

பும்ரா, குல்தீப் வருகை

கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 10 விக்கெட்டில் வென்று இந்திய அணியை வெளியேற்றினர். அப்போது இந்திய அணியின் துருப்புச்சீட்டுகளாகக் கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் இருவரும் அணியில் இல்லை.

ஆனால், இந்தமுறை பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு, குல்தீப்பின் சமாளிக்க முடியாத சுழற்பந்துவீச்சு என இரு அஸ்திரங்களோடு இந்திய அணி களமிறங்குவது பெரிய பலமாகும்.

பிராவிடன்ஸ் விக்கெட் தொடக்கத்திலிருந்தே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆதலால், பவர்ப்ளேயில் பட்லர், பில்சால்ட் இருவரும் பெரிய ஸ்கோர் செய்ய அதிரடியாக ஆடலாம்.

பும்ரா பந்துவீச்சில் 12 இன்னிங்ஸில் பட்லர் 4 முறை ஆட்டமிழந்துள்ளார். 82 பந்துகளில் 71 ரன்களை பட்லர் சேர்த்துள்ளார். ஆதலால் தொடக்கத்திலேயே பும்ரா புதிய பந்தில் விக்கெட் வீழ்த்துவது வெற்றியை நோக்கி செல்ல எளிதாக அமையும்.

ஒருவேளை பட்லர் நிலைத்து நின்றால், நடுப்பகுதியில் குல்தீப் பந்துவீச்சை எதிர்கொள்ள நேரிடும். கடந்தஆண்டில் உலகளவில் அனைத்து தரப் போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளராக குல்தீப் அறியப்பட்டுள்ளார். அதிலும் நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன்ரேட்டை இழுத்துப் பிடிப்பதில் வல்லவராக குல்தீப் இருந்து வருகிறார். இதுவரை 3 முறை குல்தீப் பந்துவீச்சில் பட்லர் ஆட்டமிழந்துள்ளார். 63 பந்துகளில் 87 ரன்களை பட்லர் சேர்த்துள்ளார்.

இங்கிலாந்து பேட்டர்கள் இடதுகை சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளனர். இருந்தாலும் அனுபவம் மிகுந்த அக்ஸர், ஜடேஜாவின் பந்துவீச்சை இங்கிலாந்து பேட்டர்கள் எளிதாக ஆட முடியாது. இங்கிலாந்து அணிக்கு நடுப்பகுதி ஓவர்களில் பெரிய தொந்தராக இருக்கப் போதுவது குல்தீப் பந்துவீச்சுதான். பெரிய அணிகளுக்கு எதிராகவே குல்தீப் 6 எக்னாமி வைத்துள்ளது இங்கிலாந்து ரன்ரேட்டை இழுத்துப் பிடிக்க வைக்கும்.

 
டி20 உலகக் கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிராவிடன்ஸ் விக்கெட் தொடக்கத்திலிருந்தே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு தலைவலியாக இருக்கப்போகும் ஆர்ச்சர், மொயின் அலி

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 முறை ஜோப்ரா ஆர்ச்சரிடம் விக்கெட்டை இழந்துள்ளது எச்சரிக்கையாகும். டி20 போட்டிகளில் ஜோப்ரா ஆர்ச்சரின் 20 பந்துகளைச் சந்தித்த ரோஹித் 17 ரன்கள் சேர்த்து 3 முறை விக்கெட்டை இழந்துள்ளார். அதேபோல மொயின் அலி பந்துவீச்சிலும் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆதலால் இருவரின் பந்துவீச்சில் ரோகித் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டியிருக்கும்.

விராட் கோலியை மொயின் அலி 10 முறை சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஒருநாள் போட்டியில் 3 முறை, டி20 போட்டியில் ஒருமுறை, டெஸ்ட் போட்டியில் 6 முறை என கோலியின் விக்கெட்டை மொயின் அலி வீழ்த்தியது எச்சரிக்கையாகும். ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் கோலியின் விக்கெட்டை 2முறை மொயின் அலி வீழ்த்தியுள்ளார். மொயின் அலியின் 26 பந்துகளைச் சந்தித்த கோலி, 18 ரன்கள்தான் சேர்த்துள்ளார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் பவர்ப்ளேயில் மொயின்அலியை பந்துவீசச் செய்து பெரிதாக அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஆதலால், பவர்ப்ளே ஓவருக்குப்பின்புதான் அவர் பந்துவீசக்கூடும் என்று எதிர்பார்த்தாலும், கோலிக்கும், ரோஹித்துக்கும் அழுத்தம் தர வேண்டும், ரன்ரேட்டைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து மொயின் அலியை பவர்ப்ளே ஓவருக்குள் பந்துவீசவும் வைக்க முடியும்.

பவர்ப்ளேயில் ஆர்ச்சர் 8 ஓவர்களை சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வலுவாக இருக்கிறார் என்பதால் அவரின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். டாப்ளியும் புதிய பந்தில் பந்துவீசும்போது, வலதுகை பேட்டர்களான ரோகித், கோலிக்கு பெரிய சவாலாக இருக்கும்.

டி20 உலகக் கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டி20 போட்டிகளில் ஜோப்ரா ஆர்ச்சரின் 20 பந்துகளைச் சந்தித்த ரோஹித் 17 ரன்கள் சேர்த்து 3 முறை விக்கெட்டை இழந்துள்ளார்.

ஒருவேளை ரோகித் சர்மா தொடக்கத்திலேயே ஆட்டமிழந்துவிட்டால், அடுத்துவரும் ரிஷப் பந்த், கோலிக்கு சுழற்பந்துவீச்சு மூலம் கடும் அழுத்தத்தை இங்கிலாந்து வழங்கலாம்.

ஏனென்றால் இருவருமே சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பெரிதாக ஸ்ட்ரைக் ரேட் இல்லை, சமாளித்து ஆடுவதிலும் சிரமப்படுவார்கள். 2021ம் ஆண்டிலிருந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 117 ஆகவும், ரிஷப் பந்த் ஸ்ட்ரைக் ரேட்125 ஆகவும் இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால், சுழற்பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்யக்கூடிய ஷிவம் துபேயை 3-ஆவது வீரராக களமிறக்கவும் இந்திய அணி முயற்சிக்கலாம். ஏனென்றால், சுழற்பந்துவீச்சாளர்கள் நெருக்கடி தரும்போது அவர்களின் வியூகத்தை உடைக்க துபே போன்ற பவர் ஹிட்டர்கள் தேவை என்பதால், தேவைக்கு ஏற்றபடி திட்டங்களை மாற்றலாம்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆர்ச்சர் ஒருமுறை மட்டுமே தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெத் ஓவர்களை வீசி, 3விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மற்ற ஆட்டங்களில் நடுப்பகுதி ஓவர்களோடு ஆர்ச்சர் முடித்துவிடுவார்.

இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடுப்பகுதியில் ஆர்ச்சர் பந்துவீசினால், சூர்யகுமார், ஹர்திக் ஆகியோருக்கு எதிராக பந்துவீசலாம். இருவரையும் ஐபிஎல் தொடரில் பலமுறை ஆர்ச்சர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். பாண்டியாவை 3 முறையும், சூர்யகுமாரை ஒருமுறையும் ஆர்ச்சர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆர்ச்சருக்கு எதிராக இருவருமே 110 ஸ்ட்ரைக் ரேட்டுக்குள்ளாகவே வைத்துள்ளது இந்தியாவுக்கு கவலைக்குரியதுதான்.

 
டி20 உலகக் கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நிலைத்து ஆடாத இந்தியாவின் முக்கிய வீரர்கள்

இதுவரை நடந்த ஆட்டங்களில் ரிஷப் பந்த், துபே, ஜடேஜா, கோலி, என யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ஐபிஎல் போட்டியில் மஞ்சள் ஆடை அணிக்கு சிறப்பாக ஆடிய துபேவை ஆல்ரவுண்டர் என்ற வரிசையில் தேர்ந்தெடுத்தும், இதுவரை பெரிய இன்னிங்ஸோ, கேமியோ என இந்திய அணிக்காக ஆடவில்லை.

விராட் கோலிக்கு இதுதான் கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கலாம் என்பதால் ரசிகர்கள் மனதில் நிற்கும் பங்களிப்பை அரையிறுதியில் அளித்தால் அணியின் வெற்றிக்கு உதவும்.

சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா இருவருமே நடுவரிசை பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கிறார்கள். இருவரும் பல போட்டிகளில் சிறப்பாக பேட் செய்து கவுரமான ஸ்கோர் வரவும், வெற்றித் தேடித்தந்துள்ளனர். இவர்களின் பங்களிப்பு இங்கிலாந்துக்கு எதிராகவும் தொடர வேண்டும்.

டி20 உலகக் கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு சிறப்பாக ஆடிய துபேவை ஆல்ரவுண்டர் என்ற வரிசையில் தேர்ந்தெடுத்தும், இதுவரை எதிலும் சிறப்பாக ஆடவில்லை

சொதப்பும் இங்கிலாந்து பேட்டர்கள்

இங்கிலாந்து பேட்டர்களில் இதுவரை பட்லர், பேர்ஸ்டோ மட்டுமே ஒரு ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடித்துள்ளனர். ஹேரி புரூக் அரைசதம் அடித்துள்ளார். மற்றவகையில் பில்சால்ட், லிவிங்ஸ்டன், மொயின் அலி, சாம் கரன், ஜேக்ஸ் என யாரும் பெரிய ஸ்கோர் செய்யவில்லை என்பது இந்திய அணிக்கு ஆறுதலாகும்.

இங்கிலாந்து அணி பட்லர், பேர்ஸ்டோ, சால்ட் ஆகிய 3 பேட்டர்களை நம்பியே பெரும்பாலான ஆட்டங்களை நகர்த்தியுள்ளது. இந்த 3 பேரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டாலே இந்திய அணிக்கு பாதி வெற்றி கிடைத்தது போலத்தான்.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் மொயின் அலி, அதில் ரஷீத்துடன் சேர்த்து வில் ஜேக்ஸ் களமிறங்கலாம். மார்க்வுட்டுக்கு பதிலாக ஜோர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

 
டி20 உலகக் கோப்பை அரையிறுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணிக்கு விளையாடாமலே பைனல் வாய்ப்பு கிடைக்குமா?

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதி ஆட்டத்துக்கு ரிசர்வ் நாள் இல்லை, மாறாக கூடுதலாக 250 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்தியா-இங்கிலாந்து ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே ரத்தானால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லும். ஏனென்றால் குரூப்-1 பிரிவில் முதலிடம் பிடித்ததால் இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதியாகும்.

இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் நடக்கும் கயானாவில் 27ம் தேதி 88 சதவீதம் மழைக்கும் 18 சதவீதம் இடியுடன் மழைபெய்யவும் வாய்ப்புள்ளது. மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வசதியும் கயானா மைதான நிர்வாகத்திடம் இல்லை. ஆதலால், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டு பின்னர் ஆட்டத்தை நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டால் இந்தியா-இறுதிப்போட்டி செல்வது உறுதியாகும்.

இந்திய அணி(உத்தேச வீரர்கள்)

ரோகித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப்யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலாந்து அணி(உத்தேச வீரர்கள்)

ஜாஸ் பட்லர்(கேப்டன்), பில் சால்ட, ஜானி பேர்ஸ்டோ, ஹேரி ப்ரூக், மொயின் அலி, லியாம் லிவிங்டன், சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித், ரீஸ் டாப்ளி அல்லது வில் ஜேக்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை பழிதீர்த்த இந்தியா - மீண்டும் ஏமாற்றிய கோலி பற்றி ரோகித் கூறியது என்ன?

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் கடந்த 11 ஆண்டுகளுக்குப்பின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

கடைசியாக 2014ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு தோனி தலைமையில் இந்திய அணி முன்னேறி இலங்கையிடம் கோப்பையை பறிகொடுத்தது. ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப்பின் தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கும் கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்தது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

பர்படாஸ் நகரில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்ரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி கோப்பைக்காக மோதுகிறது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பழிதீர்த்த இந்திய அணி

பிராவிடன்ஸில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 68 ரன்களில் வென்றது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு சுருண்டு 68 ரன்களில் தோல்வி அடைந்தனர். 2022ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அடிலெய்ட் நகரில் அடைந்த தோல்விக்கு, நேற்று இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி பழிதீர்த்துக்கொண்டது.

கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் 170 ரன்கள் சேர்த்து இந்திய அணியை துவம்சம் செய்திருந்தது. இந்த முறை 103 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியிடம் சின்னாபின்னமாகியது.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டநாயகன் அக்ஸர்

இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் ரோஹித் சர்மாவின் துணிச்சலான அதிரடி ஆட்டமும் அவரின் அரைச் சதமும், சூர்யகுமார்(47), ஹர்திக் பாண்டியாவின்(23) பங்களிப்பும் முக்கியக் காரணம். பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பும்ராவோடு சேர்ந்து அக்ஸர் படேலின் பங்களிப்பு முக்கியக் காரணமாக அமைந்தது.

அக்ஸர் படேல் தனது ஒவ்வொரு ஓவரின் முதல் பந்திலும் விக்கெட் வீழ்த்தியது திருப்புமுனை. குறிப்பாக பட்லர், பேர்ட்ஸ்டோ, மொயின் அலி விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் இங்கிலாந்து அணியை நெருக்கடியில் தள்ளி பெரிய திருப்புமுனையை இந்திய அணிக்கு ஏற்படுத்தியது. சிறப்பாக பந்துவீசிய அக்ஸர் படேல் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடினமான ஆடுகளம்

பிராவிடன்ஸ் ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருந்தது என்பது இந்திய பேட்டர்கள் ஒவ்வொரு பந்துக்கும் திணறியபோதே தெரிந்தது. வேகப்பந்து வீசினால்கூட தாழ்வாகவும், திடீரென பவுன்ஸ் ஆவதும், ஸ்விங் ஆவதும் என கணிக்க முடியாத வகையில் களிமண் விக்கெட்டாக இருந்தது. இந்த ஆடுகளத்திலும் துணிச்சலாக அதிரடி ஆட்டத்தைக் கையாண்டு, அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தது ரோஹித் சர்மாவின் பேட்டிங் மட்டும்தான்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இன்னும் சற்று ஒழுங்குடன் பந்துவீசியிருந்தால், நிச்சயமாக இந்திய பேட்டர்களுக்கு இன்னும் நெருக்கடி கொடுத்திருக்க முடியும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி 8 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளை விளாசியது.

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 133 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவர்களை வீணடிக்காத ரோகித் சர்மா, ஸ்கோரை உயர்த்த ரிஸ்க் எடுத்து சில ஷாட்களையும் நுணுக்கமாக ஆடினார். டி20 போட்டியில் ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 141 ஆக இருக்கும்நிலையில் இதில் 131 ஆக இருந்தது. மோசமான பந்துகளை மட்டும் ரோகித் சர்மா பெரிய ஷாட்களாக மாற்றவில்லை, அணிக்கு ஸ்கோர் உயர்வு தேவைப்படும்போதெல்லாம் எந்த பந்தையும் பார்க்காமல் வெளுத்தார்.

ரோகித் சர்மா 4வது ஓவரிலிருந்தே கட்டுப்பாட்டுடன் பேட் செய்யத் தொடங்கி 26 பந்துகளில் 20ரன்களை சேர்த்தார். ரோகித் சர்மா 40 ரன்கள் சேர்த்திருந்தபோது அதில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களும் அடக்கம்.

 
டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மீண்டும் தடுமாறிய கோலி; ரோகித் கூறியது என்ன?

தொடக்க வீரராகக் களம் இறங்கும் விராட் கோலி இந்தத் தொடர் முழுவதும் சரியாக ரன் எடுக்கவில்லை. ஒருவேளை விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்கி இருந்தால், அவரால் அணிக்கு இன்னும் கூடுதலான ஸ்கோர் கூட கிடைத்திருக்கும் என்ற விவாதம் தொடர்ந்து எழுந்து வருகிறது.

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “மனநிறைவான வெற்றி. அனைவருமே கடுமையாக உழைத்தோம், அதற்கான பலன் கிடைத்துள்ளது. இந்த சூழலுக்கு ஏற்றபடிபோல் மாறியது சவாலானது. எங்களுக்கு வெற்றிப் பயணமாக இருந்து வருகிறது. பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு புரிந்து கொண்டதால்தான் சிறப்பாக விளையாட முடிந்தது. 150ரன்கள் சேர்த்தாலே இந்த ஆடுகளத்தில் போதுமானது என நினைத்தோம் ஆனால், 170 கிடைத்தது.” என்றார்.

“பேட்டர்களின் திறமையை, விருப்பத்தை திசைதிருப்ப விரும்பவில்லை, அவர்களுக்கு முழுசுதந்திரம் உண்டு. 171 ரன்கள் இந்த மைதானத்தில் பெரிய ஸ்கோர். பந்துவீச்சாளர்கள் பணியும் அற்புதமாக இருந்தது. அக்ஸர், குல்தீப் இருவரும் எதிரணிக்கு சிம்மசொப்னமாக இருந்தார்கள். இவர்களின் பந்துவீச்சில் பெரிய ஷாட்கள் அடிப்பது கடினமாக இருந்தது. அழுத்தமான நேரத்தில் அமைதியாகப் பந்துவீசினர். விராட் கோலி பேட்டிங் பற்றி எங்களுக்குத் தெரியும். ஃபார்ம் ஒரு பிரச்சினை இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக கோலி விளையாடி வருகிறார். இறுதிப்போட்டிக்கு இன்னும் தீவிரமாகத் தயாராகுவோம். நாங்கள் எந்த நேரத்திலும் பதற்றப்படாமல், நிதானமாகவே விளையாடினோம். அதுதான் முக்கியம். நல்ல அணியாக உருவெடுத்துள்ளநிலையில் சாம்பியன் பட்டத்துக்காக முயற்சிப்போம்” எனத் தெரிவித்தார்

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவுக்கு தலைவலியாக மாறிய ரஷித் பந்துவீச்சு

இந்திய அணிக்கு நேற்று பெரிய சவாலாக இருந்தது அதில் ரஷித் பந்துவீச்சும், லிவிங்ஸ்டோன் பந்துவீச்சும்தான். அதிலும் குறிப்பாக ரஷீத் பந்துவீச்சை ரோகித் சர்மாவும், சூர்யகுமார் பெரிய ஷாட்டுக்கு மாற்றவே தயங்கினர். இதனால் இந்திய அணியின் ரன்ரேட்டை ரஷித் பந்துவீச்சால் இறுக்கிப் பிடித்தார்.

சரியான நீளத்தில், ஸ்டெம்பை நோக்கியே ரஷித் வீசியதால், பெரிய ஷாட்களாக மாற்றுவது ரோகித், சூர்யாவுக்கு கடினமாக இருந்தது. அதில் ரஷித் தனது முதல் ஸ்பெல்லில் 2 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்த நிலையில் மழைக்குப்பின் ஆட்டம் தொடங்கியபின், அடுத்த 2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதில் ரஷித் சிறப்பாகப் பந்துவீசி, கேப்டன் ரோகித் சர்மா(57) விக்கெட்டை வீழ்த்தி, தனக்குரிய பணியை முடித்தார்.

அதேபோல நேற்று மொயின் அலி இருந்தும் அவருக்குப் பதிலாக பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர் லிவிங்ஸ்டனை பந்துவீசச் செய்தார். ஆடுகளம் ஏற்கெனவே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், லிவிங்ஸ்டன் பந்துவீச ஏதுவாக இருந்தது. அவரும் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, இந்திய ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினார்.

ஆனால், இதே ஆடுகளத்தை இந்தியப் பந்துவீச்சாளர்கள் குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் பயன்படுத்தினர். இந்த 3 பந்துவீச்சாளர்களும் 11 ஓவர்கள் வீசி, 58 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர், ஓவருக்கு சராசரியாக 5.2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். 28 டாட் பந்துகள் ஏறக்குறைய 5.4 ஓவர்களை டாட்பந்துகளாக வீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்புமுனையை ஏற்படுத்திய அக்ஸர்

பவர்ப்ளே ஓவருக்குள் அக்ஸர் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் முதல் ஓவர் முதல் பந்திலேயே ஜாஸ் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரில் பேர்ஸ்டோ போல்டாகியது என திருப்புமுனையை அக்ஸர் ஏற்படுத்தினார். அதேபோல 7-வது ஓவரை அக்ஸர் வீசியபோது முதல் பந்தில் மொயின் அலி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அக்ஸர் படேல் வீசிய 3 ஓவர்களில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார்.

குல்தீப், பும்ரா மிரட்டல்

ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை, மிகவும் தாழ்வாக வருகிறது, பவுன்ஸரும் இல்லை என்பதால் இங்கிலாந்து அணியிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், பும்ரா தனது ஸ்லோவர் பால், கட்டர்கள், ஸ்விங் பந்துவீச்சு மூலம் தொடர்ந்து இங்கிலாந்து பேட்டர்களை மிரட்டனர். ஒரு கட்டத்தில் பில் சால்ட்டுக்கு அருமையான ஸ்விங் பந்தைவீசி கிளீன் போல்டாக்கினார் பும்ரா. கடைசி நேரத்தில் ஜோப்ரா ஆர்ச்சரை கால்காப்பில் வாங்க வைத்து 2வது விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தினார். 2.3 ஓவர்களை வீசிய பும்ரா 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்துஅணி 4 விக்கெட்டுகளை இழந்து 49ரன்கள் சேர்த்திருந்தபோது குல்தீப் பந்துவீச வந்தார். கடந்த ஓர் ஆண்டில் கவனிக்கத்தக்க பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் குல்தீப் பந்துவீச்சில் ரன்களைச் சேர்க்க இங்கிலாந்து பேட்டர்கள் திணறினர். ஓரளவுக்கு செட்டில் ஆகி விளையாடிவந்த பேட்டர் ஹேரி ப்ரூக்(25), சாம் கரன்(2) இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்துக்கு நெருக்கடி அளித்தார். ஆல்ரவுண்டர் என்ற பெயருடன் அணிக்குள் களமிறங்கிய ஜோர்டானையும் குல்தீப் தனது மந்திரப் பந்துவீச்சால் சாய்த்தார்.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியப் பந்துவீச்சில் சுருண்ட நடப்புச் சாம்பியன்

அரையிறுதி ஆட்டம் என்பதால், இங்கிலாந்து வீரர்கள் பொறுப்புடன் ஆடுவார்கள், யாராவது ஒரு பேட்டராவது பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்த்திருந்தது ஏமாற்றத்தை அளித்தது. அந்த அணியில் சேர்க்கப்பட்டஅதிகபட்ச ஸ்கோர் ஹேரி ப்ரூக் சேர்த்த 25 ரன்கள்தான். கேப்டன் பட்லர்(23), ஐபிஎல் தொடரில் கலக்கிய பில் சால்ட்(5), பேர்ஸ்டோ(0), லிவிங்ஸ்டன்(11), சாம் கரன்(2) என ஒருவர்கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, போராட்டக் குணத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியிடம் இருந்த துணிச்சல், விடாமுயற்சி, போராட்டக் குணம் அனைத்தும் இந்த முறை இல்லை.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோலி இதுவரை செய்தது என்ன?

ரோகித் சர்மாவின் துணிச்சலான ஆட்டத்துக்கு கிடைத்த பரிசுதான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும். இந்தத் தொடரில் 248 ரன்கள் சேர்த்து ரோகித் 3-ஆவது இடத்தில் 155 ஸ்ட்ரைக் ரேட்டில் இருக்கிறார், 41.33 சராசரி வைத்துள்ளார். ஆனால், தனது பாணியிலிருந்து மாறி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடும் கோலி இந்தத் தொடரில் இதுவரை 75 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 10 ரன்கள் சராசரியும் வைத்துள்ளார்.

இருவருக்கும் ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர்தான் கடைசியாக இருக்கலாம். ஆனால், கோலியின் பேட்டிங் பாணியும், ரோஹித்தின் பேட்டிங் பாணியும் வெவ்வேறு. அப்படி இருக்கையில் இருவரையும் ஒருசேர களமிறக்குவது அணியின் ஸ்கோரையே கடுமையாக இந்த தொடரில் பாதித்தது.

கோலியிடம் இருந்து முழுமையாக கிடைக்க வேண்டிய ஸ்கோர் இந்தத் தொடரில் இந்திய அணி தவறவிட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போட்டி நடைபெறும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளருக்கு சாதகமான ஆடுகளம் என கூறுகிறார்கள், புதிய பந்து வேகபந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக இருக்கும் என கூறுகிறார்கள் இவ்வாறான பந்து நகர்வுகளை கணித்தாடுவதில் (சீம்) கோலி, ரோகித் சர்மா பெரிதும் கடந்த காலங்களில் சிரமப்படுவதுண்டு ஆரம்பத்திலேயே விக்கெட்டினை பறி கொடுத்துவிடுவதுண்டு, அத்துடன் ஆடுகளம் பந்து நஙு மேலெழுந்து வரும் என்பது இந்தியணிக்கு சிரமம் கொடுக்கலாம் அத்துடன் இந்தியணியின் மத்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்ற சுழல் பந்துவீச்சிற்கு பெரிதும் சாதகம் அற்ற மைதானம என கூறப்படுகிறது, இந்தியணியுடன் ஒப்பிடும் போது பலவீனமான தென்னாபிர்க்க அணியில் ஒப்பீட்டளவில் அதிக சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ள அணியாக இருப்பதால் இரு அணியும் ஓரளவு சமனிலையில் இப்போட்டியில் உள்ளதாக கருதுகிறேன், அதிக ஓட்டங்களை (200 இற்கு அதிகமாக) வழ்ங்கும் மைதானமாக இந்த மைதானம் கருதப்படுகிறது, இந்த போட்டியில் தென்னாபிரிக்கா வென்றாலும் ஆச்சரியமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IND vs SA: சூர்யகுமார் மீது குறி, கேசவ் மகராஜ் எனும் ஆயுதம் - இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள்

IND vs SA: தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 54 நிமிடங்களுக்கு முன்னர்

2024ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை நிறைவுக்கு வரவுள்ளது. பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையாத இந்திய அணியும், தென் ஆப்ரிக்க அணியும் சாம்பியன் பட்டத்துக்காக மோதுகின்றன.

இரு அணிகளுமே இதுவரை ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதியதில்லை. 2014ஆம் ஆண்டு டி20 அரையிறுதியில் இந்திய அணியுடன் ஒருமுறை மோதிய தென் ஆப்ரிக்கா அதில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் லீக் சுற்று முதல் அரையிறுதி வரை தோல்வியே அடையாமல் இறுதிப்போட்டி வரை வந்துள்ளன. ஒருவேளை இந்தத் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றாலும், தோல்வி அடையாமல் சாம்பியன் வென்ற அணி என்ற பெருமையையும் இந்தியா அல்லது தென் ஆப்ரிக்கா பெறும்.

இந்திய அணியைப் பொருத்தவரை லீக் சுற்று, சூப்பர்-8 சுற்று என அனைத்திலுமே ஆதிக்கம் செய்து வென்றது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து என அனைத்து அணிகளையும் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஆதிக்கம் செய்து வென்றது. ஒரு போட்டியைக்கூட நெருக்கமாகச் சென்று இந்திய அணி வெல்லவில்லை. இதிலிருந்தே இந்திய அணி எத்தகைய சரிவிலிருந்தும் எளிதாக மீளும், எந்த அணி மீதும் ஆதிக்கம் செலுத்தும் என அறியலாம்.

ஆனால், தென் ஆப்ரிக்கா அணி தோல்வி அடையாமல் இறுதிப்போட்டி வரை பயணித்தாலும், சில போட்டிகளில் கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில்தான் வென்றது. நேபாளம், வங்கதேசம், அணிகளிடம்கூட போராடித்தான் வென்றது. வலிமையான அணியாக இருந்தாலும், எந்த நேரத்தில் சறுக்கும் என்பது அந்த அணிக்கே இன்னும் பிடபடவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை நேருக்கு நேர்

இரு அணிகளும் இதுவரை 26 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 14 ஆட்டங்களில் இந்திய அணியும், 11 ஆட்டங்களில் தென் ஆப்ரிக்காவும் வென்றுள்ளன. இந்திய அணிக்கு எதிராக டேவிட் மில்லர் 20 போட்டிகளில் 431 ரன்கள் சேர்த்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ரோஹித் சர்மா 17 போட்டிகளில் 420 ரன்களும், சூர்யகுமார் 6 போட்டிகளில் 343 ரன்களும் சேர்த்துள்ளனர்.

பந்துவீச்சில் கேசவ் மகராஜ் 10 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின், புவனேஷ் குமார் சிறப்பாகப் பந்து வீசியிருந்தாலும் இருவரும் தொடரில் இல்லை. குல்தீப் யாதவ் கடந்த ஆண்டு ஜோகன்ஸ்ப்ர்க்கில் 2.5 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்திருந்தார். கடைசியாக நடந்த 5 டி20 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா 3 போட்டிகளிலும், இந்திய அணி 2 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.

இந்திய அணிக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்?

இந்திய அணி கடைசியாக 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. அதன்பிறகு ஏறக்குறைய 10 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி நடத்தும் போட்டியிலும் கோப்பையை வென்றதில்லை.

இந்திய அணி 2014 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்தது. 2016, 2022 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதி, 2016, 2019 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதி என இந்திய அணி கோப்பைக்காகப் போராடி வருகிறது.

கடந்த ஆண்டு சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் தருணத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. 12 மாதங்களுக்குக்கு உள்ளாக அடுத்த வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்திருக்கிறது.

 
IND vs SA: தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 10 ஆண்டுகளாக நடந்த உலகக்கோப்பைத் தொடர்களில் அரையிறுதி, இறுதிப் போட்டிவரை சென்றும் ஒரு கோப்பையைக்கூட வெல்லாத நிலைதான் இந்திய அணிக்கு இருக்கிறது. ஆதலால், இந்தமுறை 10 ஆண்டுக்கால பஞ்சத்தைத் தீர்த்து, கோப்பையுடன் தாயகம் திரும்ப வேண்டும் என்ற தாகத்துடன் இந்திய அணியினர் உள்ளனர். ஆதாலால் இந்திய அணிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும்.

இந்திய அணியாவது இறுதிப் போட்டிவரை சென்று தோற்றுள்ளது. ஆனால், தென் ஆப்ரிக்காவின் நிலைமை பரிதாபமானது. 1991ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் வந்தது முதல் ஏறக்குறைய 33 ஆண்டுகளாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர், டி20 தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்கா அரையிறுதியைக் கடந்தது இல்லை. ஐசிசி நடத்தும் போட்டிகளில் 1998 சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதற்குப் பின் இதுவரை வேறு எந்தக் கோப்பையையும் வென்றது இல்லை.

முதல்முறையாக தென் ஆப்ரிக்க அணி டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. தென் ஆப்ரிக்க அணியில் பல ஜாம்பவான்கள் இருந்த காலத்தில்கூட இறுதிப் போட்டிக்குக்குச் செல்லாத நிலையில் இந்த முறை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளதால், கோப்பையை வெல்லும் வாய்ப்பைத் தவறவிடாமல் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கிறது.

ஆதலால் இன்று நடக்கும் 40 ஓவர்களும் போட்டியைப் பார்க்கும் ரசிகர்களுக்கும், இரு அணி வீரர்களுக்கும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும்.

வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்திலுமே இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில்தான் இருக்கின்றன. அதனால் இந்த ஆட்டம் அரையிறுதி போன்று ஒருதரப்பாக அமையாமல், பெரிய ஸ்கோராக, விறுவிறுப்பாக இருத்தல் வேண்டும்.

 

ஆடுகளம் எப்படி?

IND vs SA: தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரிட்ஜ்டவுன் ஆடுகளத்தில் டி20 உலகக்கோப்பையில் இதுவரை 8 ஆட்டங்கள் நடந்துள்ளன, இது 9வது ஆட்டம். இந்த மைதானத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் மோதியுள்ளதால் ஆடுகளத்தின் தன்மை குறித்துத் தெரியும். ஆனால், தென் ஆப்ரிக்கா விளையாடியதில்லை.

இந்த விக்கெட்டில் நடந்த 7 போட்டிகளில் 3இல் முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரு போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் அமெரிக்காவை குறைந்த ரன்னில் சுருட்டி எளிதாக சேஸ் செய்துள்ளன. ஒரு போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றுள்ளது.

கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் டி20 போட்டிகளில் அதிகமாக வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்கள் 59 விக்கெட்டுகளை வீழ்த்தி, 20.22 சராசரியும், 7.88 எக்கானமியும் வைத்துள்ளனர். ஒரு போட்டியில் மட்டும் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஆட்டங்கள் அனைத்தும் 109 முதல் 181 ரன்களுக்குள்தான் சேர்க்கப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டி, 4ஆம் எண் கொண்ட விக்கெட்டில் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இது நமீபியா-ஓமன், ஸ்காட்லாந்து-இங்கிலாந்து இடையே ஆட்டம் நடந்த விக்கெட்டாகும். இந்த மைதானத்தில் பவுண்டரி எல்லை சற்று தொலைவாக இருக்கும். மழைக்கான வாய்ப்பு இருந்தாலும் ரிசர்வ் நாள் இருக்கிறது.

இந்த ஆடுகளத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்க வேண்டும். டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன, பந்துவீ்ச்சைத் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து அணி இரு ஆட்டங்களிலும் ஒன்றில் வென்று மற்றொன்றில் தோற்றுள்ளது.

இந்திய அணி இந்தத் தொடரில் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்துள்ளது, இதில் 4 முறை எதிரணியே இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது.

தென் ஆப்ரிக்க அணி 3 முறை டாஸ் வென்று அதில் இருமுறை பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இரு அணிகளுமே பந்துவீச்சில் வலிமையாக இருப்பதால் முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து பந்துவீச்சில் சுருட்டவே விருப்பம் காட்டக்கூடும். இந்த ஆட்டம் பகலில் நடப்பதால் பனிப்பொழிவுக்கு வாய்ப்பில்லை.

 

சூர்யகுமார் மீது குறி

IND vs SA: தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை நடுவரிசையில் வெளிப்படுத்தி வருகிறார். நடுப்பகுதியில் ஸ்கோரை திடீரென உயர்த்தி, ரன்ரேட்டை அதிகப்படுத்துவதில் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

பேக்வார்ட் பாயின்ட் முதல் பேக்வார்ட் ஸ்குயர்லெக் வரை சூர்யகுமார் அனாசயமாக ரன்களை சேர்க்கிறார். வேகப்பந்து, பவுன்ஸரை விரும்பி அடிக்கும் சூர்யகுமார், இதுபோன்ற பந்துவீச்சில் எளிதாக ஸ்கோர் செய்வார். அதிலும் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இதற்கு முன் வெளுத்துள்ளார்.

ரபாடாவுக்கு எதிராக 24 பந்துகளில் 66 ரன்கள், நோர்க்கியாவின் 12 பந்துகளில் 32 ரன்கள், யான்செனின் 5 பந்துகளில் 25 ரன்கள் என சூர்யகுமார் வேகப்பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்துள்ளார். தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 298 ஸ்ட்ரைக் ரேட்டை அவர் வைத்துள்ளார்.

ஆதலால் இன்றைய இறுதி ஆட்டத்தில் சூர்யகுமாரை களத்தில் நிலைத்து பேட் செய்யவிடாமல் தடுக்கத் தேவையான உத்திகளை தென் ஆப்ரிக்கா வகுக்கும். ஸ்லோவர் பந்துகளையும் வெளுக்கும் ஸ்கை, 180 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். சரியான லென்த்தில், அதிவேகப்பந்துகளுக்கு எதிராக சூர்யகுமார் திணறுகிறார் என்பதால் அதன் மீது தென் ஆப்ரிக்கா கவனம் செலுத்தும்.

கேசவ் மகராஜ் எனும் ஆயுதம்

இந்திய அணி எந்த அளவு சுழற்பந்துவீச்சில் வலுவாக இருக்கிறதோ அதேபோன்று தென் ஆப்ரிக்காவும் கேசவ் மகராஜ், சம்ஷி என இரு வலுவான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துள்ளது.

வேகப்பந்துவீச்சை எளிதாகs சமாளித்து ரோஹித், கோலி விளையாடி விடுவார்கள். ஆனால் பவர்ப்ளேவில் கேசவ் மகராஜ் பந்துவீச்சை ஆடுவதில் சிரமப்படுவார்கள் என்பதால், பவர்ப்ளேவில் மகராஜை பந்துவீச வைக்கலாம்.

பவர்ப்ளேவில் 114 பந்துகளை வீசிய மகராஜ் 143 ரன்கள்தான் விட்டுக்கொடுத்துள்ளார், 7.52 எக்கானமி வைத்துள்ளார் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கோலி, ரோஹித் இருவருமே ஸ்லோவர் இடதுகை பந்துவீச்சுக்குத் திணறுவார்கள் என்பதால், இருவருக்கு எதிராக கேசவ் கொண்டுவரப்படலாம்.

 

கிளாசன், மில்லர் - குல்தீப், ஜடேஜா

IND vs SA: தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென் ஆப்ரிக்க அணியில் சுழற்பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து ஆடுவதில் கிளாசன், மில்லர் சிறந்த பேட்டர்கள். இந்திய அணியின் சுழல் மும்மூர்த்திகளான அக்ஸர் படேல், குல்தீப், ஜடேஜா மூவரும் இன்றைய ஆட்டத்தில் முக்கியத் துருப்புச் சீட்டுகள்.

கிளாசன், மில்லர் இருவருமே சுழற்பந்துவீச்சை எளிதாக விளையாடுவார்கள் என்றாலும், 3 பேரின் பந்துவீச்சும் வேறுபட்டவை என்பதால் சில சிரமங்கள் இருக்கக்கூடும்.

குறிப்பாக ஜடேஜா பந்துவீச்சில் கிளாசன் பெரிதாக ரன்களை சேர்த்தது இல்லை. ஜடேஜாவின் 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே கிளாசன் சேர்த்துள்ளார். குல்தீப் பந்துவீச்சில் மில்லர் 24 பந்துகளில் 24 ரன் சேர்த்து இஇருமுறை விக்கெட்டையும் இழந்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் கிளாசன், மில்லர் விக்கெட்டை வீழ்த்துவதில் குல்தீப், ஜடேஜா முக்கியப் பங்கு வகிப்பார்கள்.

துபேவுக்கு பதிலாக சாம்ஸன்

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் ஷிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பிரமாதமாக ஆடுவார் எனக் கூறி அணியில் சேர்க்கப்பட்டு 37 பந்துகளில் 48 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், 2 முறை ஆட்டமிழந்துள்ளார்.

வேகப்பந்துவீச்சில் 62 பந்துகளில் 59 ரன்களை சேர்த்து பெரிய தாக்கத்தை துபே ஏற்படுத்தவில்லை. ஆதலால், இன்றை ஆட்டத்தில் நடுவரிசைக்கு ஸ்திரமான பேட்டர் தேவை என்பதற்காக துபேவுக்கு பதிலாக சாம்ஸனை களமிறக்கலாம் எனத் தெரிகிறது. வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலிருந்து பெஞ்சில் இருக்கும் சாம்ஸனுக்கு இன்று வாய்ப்புக் கிடைக்கலாம்.

அதேபோல தென் ஆப்ரிக்காவில் வேகப்பந்துவீச்சாளர் பார்ட்மேனுக்கு பதிலாக சம்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இந்திய அணிக்கு எதிராக சம்ஷி சிறப்பாக பந்துவீசக் கூடியவர் கடந்த காலங்களில் நிரூபித்துள்ளார் என்பதால் சம்ஷி களமிறங்கலாம்.

வேகப்பந்துவீச்சுக்குச் சாதமாக ஆடுகளத்தில் சம்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். பார்ட்மேன் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர் குறிப்பாக யார்க்கர் வீசுவதிலும், நல்ல லென்த்தில் பந்துவீசுவதிலும் சிறந்தவர் என்பதால், அவரை நிராகரிப்பது கடினம்.

 

கோலியின் ஃபார்ம்

IND vs SA: தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

விராட் கோலியின் ஃபார்ம் இந்தத் தொடரில் மிக மோசமாக அமைந்துள்ளது. இதுவரை அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்து, மொத்தமாக 75 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் கோலியின் பேட்டிங் ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், கோலியின் ஆட்டத்தின் மீது கேப்டன் ரோஹித் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார், இறுதிப்போட்டி வரை காத்திருப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆதலால் கோலியின் ஆட்டம் இன்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டி20 உலகக்கோப்பைதான் கோலிக்கும், ரோஹித்துக்கும் ஏறக்குறைய கடைசியாக இருக்கக்கூடும். இதில் ஏதாவது தாக்கத்தை இருவருமே ஏற்படுத்த முயல்வார்கள் என்பதால் இருவரின் பேட்டிங் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி(உத்தேச வீரர்கள்)

ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே அல்லது சாம்ஸன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா

தென் ஆப்ரிக்கா(உத்தேச வீரர்கள்)

எய்டன் மார்க்ரம்(கேப்டன்), குயின்டன் டீ காக், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ஹென்ரிச் கிளாசன், மார்கோ யான்சென், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்க்கியா, தப்ரியாஸ் சம்ஸி அல்லது பார்ட்மேன்

https://www.bbc.com/tamil/articles/cw4y9nyzzj3o

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கோப்பை: இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து ஆட்டத்தை திருப்பியது எப்படி?

டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 29 ஜூன் 2024, 19:04 GMT

2024 ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது.

ஏறக்குறைய 11 ஆண்டுகளாக பலமுறை ஐ.சி.சி போட்டிகளின் பைனல், அரையிறுதிவரை சென்றிருந்த இந்திய அணி, 11 ஆண்டுகள் பஞ்சத்துக்குப்பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

விராட் கோலியும், ரோகித் சர்மாவும் பல அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு இந்த உலகக் கோப்பையில் விளையாடிய நிலையில் அனைத்தும் இந்த வெற்றி மூலம் விலகியுள்ளன.

இந்தியாவின் இந்த வெற்றிக்கு, அணியில் இருந்த ப்ளேயிங் லெவன் அனைவருமே காரணம். இருப்பினும் கிளாசன் விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா, அவர் வீசிய கடைசி ஓவர், பும்ராவின் கடைசி இரு ஓவர்கள், அர்ஷ்தீப் வீசிய ஓவர், சூர்யகுமார் பிடித்த கேட்ச் என அனைத்துமே திருப்புமுனையாக அமைந்தன.

கிளாசன் களத்தில் இருந்தவரை இந்திய அணியின் வெற்றி உறுதியில்லாததாக இருந்தது. தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 24 பந்துகளில் 26 ரன்கள்தான் தேவைப்பட்டது.

ஆனால் ஹர்திக் பாண்டியா 17-வது ஓவரை வீச வந்தபின்புதான் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் கைமாறியது. கிளாசன் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தியதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அதன்பின் பும்ரா வீசிய 18-வது ஓவரில் யான்சென் விக்கெட்டை வீழ்த்தி 2 ரன்கள் கொடுத்து தேவைப்படும் ரன் 12 பந்துகளில் 20 ரன்களாக உயர்ந்தது நெருக்கடி அதிகரித்தது. அர்ஷ்தீப் சிங் 19-வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்து தென் ஆப்ரிக்காவை நெருக்கடியில் தள்ளினார்.

நெருக்கடி, அழுத்தம் வந்தாலே தென் ஆப்ரிக்கா தங்களின் இயல்பான குணத்தை வெளிப்படுத்துவார்கள் என்பது இந்த ஆட்டத்திலும் வெளியானது. கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் மில்லர் சிக்ஸர் விளாச அதை சூர்யகுமார் அருமையான கேட்ச் பிடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதே ஓவரில் ரபாடாவும் ஆட்டமிழக்க தென் ஆப்ரிக்கா தோல்விக்குழியில் விழுந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
 

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரோகித் சர்மா தரையில் படுத்து கைகளை வைத்து தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

தரையைத் தட்டி மகிழ்ந்த ரோகித், கண்ணீர் விட்ட பாண்டியா

இந்திய அணி எதிர்பார்த்திருந்த அந்த வரலாற்று தருணம் வந்தது. 17 ஆண்டுகளுக்குப்பின் டி20 கோப்பையை வென்றது சாதித்தது.

இந்திய அணி வென்றவுடன் கேப்டன் ரோகித் சர்மா தரையில் படுத்து கைகளை வைத்து தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 2023 உலகக் கோப்பையில் பைனல் வரை சென்று கோப்பையை தவறவிட்ட ரோகித் இந்த முறை அந்தத் தவறை செய்யவில்லை.

கடைசி ஓவரை வீசி வெற்றிக்கு துணை செய்த துணைக் கேப்டன் பாண்டியா, கண்ணீர் விட்டு அழுது மகிழ்ச்சியையும், அழுத்தத்தையும் ரீலீஸ் செய்தார். இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்திய அணி மோதும் இறுதிப்போட்டி என்றவுடன் ஆட்டத்தைப் பார்க்கவும், ஆதரவு தெரிவிக்கவும் ஏராளமான இந்திய ரசிகர்கள் வந்திருந்தனர். இந்திய அணி கோப்பையை வென்றவுடன் தேசியக் கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார். டி20 தொடரின் தொடர் நாயகன் விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருது வென்றார் கோலி

விராட் கோலி ஓய்வு அறிவிப்பு

ஆட்டநாயகன் விருது வென்ற கோலி கூறுகையில், "இதுதான் என்னுடைய கடைசி சர்வதேச டி20 போட்டி. இதைத்தான் சாதிக்க விரும்பி்னோம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஓட முடியாது என்பது ஒருநாள் நமக்குத் தெரியும். அது நடந்துவிட்டது. அடுத்த தலைமுறை அணியை வழிநடத்தும் நேரம் வந்துவிட்டது. சில வியத்தகு வீரர்கள் வந்து அணியை வழிநடத்தி தேசியக் கொடியை உயரே பறக்கவிடுவார்கள்,” எனத் தெரிவித்தார்

பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்ச்சி

177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. ஹென்ட்ரிக்ஸ், டீ காக் ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா 2வது ஓவரை வீசினார், 3பந்திலேயே ஹென்ட்ரிக்ஸ் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

3வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து மார்க்ரம் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் 12 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்ரி்க்கா. பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்தது.

ஸ்டெப்ஸ், டீகாக் இருவரும் மெல்ல ஆட்டத்தை நகர்த்தி, ஸ்கோரை உயர்த்தினர். 7.1 ஓவர்களில் தென் ஆப்ரிக்கா 50 ரன்களை எட்டியது. அக்ஸர் படேல் வீசிய 9வது ஓவரில், ஸ்டெப்ஸ் ஃபுல்டாஸ் பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு 31 ரன்னில் க்ளீன் போல்டாகினார். 3வது விக்கெட்டுக்கு டீ காக், ஸ்டெப்ஸ் 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து கிளாசன் களமிறங்கி, டீ காக்குடன் சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 10வது ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸர் விளாசி 10 ரன்களைச் சேர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்தது.

ஜடேஜா வீசிய 11வது ஓவரிலும், குல்தீப் வீசிய 12வது ஓவரிலும் கிளாசன் தலா ஒரு சிக்ஸர் விளாசினார். 12வது ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா 100 ரன்களைக் கடந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய 13வது ஓவரில் டீகாக் பவுண்டரி விளாசினர். அதே ஓவரின் 3வது பந்தில் ஃபைன் லெக் திசையில் அடித்த ஷாட்டை குல்தீப் கேட்ச் பிடிக்கவே டீ காக் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் மில்லர் களமிறங்கி, கிளாசனுடன் சேர்ந்தார்.

குல்தீப் வீசிய 14-வது ஓவரில் மில்லர் ஒருபவுண்டரி , சிக்ஸர் விளாசி ரன்ரேட் பதற்றத்தைத் தணித்தார். தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 36 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது.

அக்ஸர் விளாசிய 15வது ஓவரை கிளாசன் குறிவைத்தார். முதல் பந்தில் கிளாசன் பவுண்டரி அடித்தார், அடுத்த இரு பந்துகளை அக்ஸர் வைடாக வீசினார். 2வது பந்தில் கிளாசன் மேற்கூரையில் சிக்ஸர் விளாசினார். 4வது பந்தில் மீண்டும் கிளாசன் சிக்ஸர் விளாசினார். 5வது பந்தில் கிளாசன் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் மட்டும் கிளாசன் 24 ரன்களை விளாசி தேவைப்படும் ரன்களையும், பந்துகளையும் சமன் செய்து ஆட்டத்தை தென் ஆப்ரிக்கா பக்கம் திருப்பினார்.

 
டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வீரர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

ஆட்டம் இந்திய அணியிடம் கைமாறிய தருணம்

கடைசி 4 ஓவர்களில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா 17-வது ஓவரை வீசினார். ஆப்சைடு விலக்கி வீசப்பட்ட பந்தை கிளாசன் அடிக்க முற்பட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து 27 பந்துகளில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில்5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

கடைசி 18 பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா 18-வது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் மில்லர் ரன் சேர்க்காமல் 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார், 4வது பந்தில் யான்சென் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் தென் ஆப்ரிக்கா 2 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒரு விக்கெட்டையும் இழந்தது. கேசவ் மகராஜ் அடுத்து களமிறங்கினார்.

கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தென் ஆப்ரிக்காவால் சேர்க்க முடிந்தது.

கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. மில்லர் ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஹர்திக் பாண்டியாவீசிய முதல் பந்தில் மில்லர் சிக்ஸர் விளாச, எல்லையில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் பந்தை பிடித்து பவுண்டரி எல்லைக்கு அருகே சென்று தூக்கிபோட்டு, மீண்டும் மைதானத்துக்குள் வந்து அருமையான கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அடுத்து ரபாடா களமிறங்கி பவுண்டரி அடித்தார். அடுத்தபந்தில் ஒரு ரன் எடுத்தனர். 3பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 4வது பந்தில் கேசவ் ஒரு ரன் எடுத்தார். 5-வது பந்தை பாண்டியா வைடாக வீசினார். 2பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ரபாடா தூக்கி அடித்த ஷாட்டை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தார். ரபாடா 4 ரன்னில் வெளியேறினார். கடைசி ஒரு பந்தில் நோர்க்கியா ஒரு ரன் எடுக்கவே தோல்வி தென் ஆப்ரிக்கா 7 ரன்களில் தோல்வி அடைந்தது.

 
டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோலி, அக்ஸர் படேல் அடுத்து விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் நிதானமாக பேட் செய்தனர்

இந்திய அணியின் தடுமாற்றம்

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார், கோலி, ரோஹித் ஆட்டத்தைத் தொடங்கினர். பவர்பளே ஓவரிலேயே கேசவ் மகராஜ் ஓவரில் ரோஹித் (9),ரிஷப்பந்த் (0) ஆட்டமிழந்தனர். ரபாடா வீசிய 5-வது ஓவரில் சூர்யகுமார் (3) ஆட்டமிழக்கவே இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து அக்ஸர் படேல் களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தது.

கோலி, அக்ஸர் படேல் அடுத்து விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற நோக்கில் நிதானமாக பேட் செய்தனர்.

விராட் கோலி நிதானமாக பேட் செய்த 4வது ஓவரில் கடைசியாக பவுண்டரி அடித்தார். அதன்பின் 6 ஓவர்களாக ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் சேர்த்தது.

இருவரும் மெதுவாக பேட் செய்ததால் ரன்ரேட் வேகம் குறையத் தொடங்கியது. சம்ஷி வீசிய 12வது ஓவரில் அக்ஸர் படேல் சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.

ரபாடா வீசிய 13-வது ஓவரில் ஸ்ட்ரைட்டில் ஒரு சிக்ஸரை அக்ஸர் படேல் விளாசியதையடுத்து, இந்திய அணி 100ரன்களை எட்டியது. அதே ஓவரில் அக்ஸர் படேல் 47 ரன்னில் ரன் அவுட் ஆகினார். 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அருமையாக ஆடிய அஸ்கர் 3 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். 4வது விக்கெட்டுக்கு கோலி, அக்ஸர் கூட்டணி 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

5வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். விராட் கோலி 48 பந்துகளில் இந்த உலகக் கோப்பையில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த உலகக் கோப்பை முழுவதும் ஃபார்மின்றி தவித்து வந்த கோலி முதல் அரைசதத்தை 48 பந்துகளில் பதிவு செய்தார், இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். கோலி அரைசதம் அடித்தது சிறப்பானது, தேவையான நேரத்தில் அடிக்கப்பட்டது.

18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது. 13.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியநிலையில் அடுத்த 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது இந்திய அணி.

யான்சென் 19-வது ஓவரை வீசினார். 5வது பந்தில் கோலி ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 59 பந்துகளில் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என 128 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். 5வது விக்கெட்டுக்கு துபே-கோலி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

தென் ஆப்ரிக்கத் தரப்பில் நோர்க்கியா 2 விக்கெட்டுகளையும், கேசவ் மகராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அனுதாபங்கள்.
    • 91 வயது வரை அரசியலில் இருந்தும்…. தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத தோல்வியுற்ற அரசியல்வாதியாக காலமாகிவிட்டார்.
    • கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தர் காலமானார் 
    • கேரளத்திலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் தம்பதிகளுக்கு சில திடுக்கிடும் பிரச்னைகள் ஏற்பட, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே `பேரடைஸ்' படத்தின் கதை.       பேரடைஸ் தங்கள் ஐந்தாவது திருமண நாளினைக் கொண்டாடும் விதமாக கேரள தம்பதிகளான கேசவ் (ரோஷன் மேத்யூ), அம்ரிதா (தர்ஷனா ராஜேந்திரன்) ஆகியோர் ராமாயண சுற்றுலாவாக இலங்கைக்கு வருகிறார்கள். தங்கள் தேசத்திற்கு வந்தவர்களை ஆண்ட்ரூ (ஷியாம் பெர்னான்டோ) என்கிற நபர் ஓட்டுநராகவும், கைடாகவுமிருந்து வழிநடத்திச் செல்கிறார்.  அது பொருளாதார நெருக்கடியில் இலங்கை மாட்டிக்கொண்டிருந்த காலகட்டம் என்பதால், வழிநெடுகிலும் அதைக் கண்டித்து சிங்கள - தமிழ் மக்கள் போராட்டங்களும், மறியல்களும் நடத்துகிறார்கள். இருப்பினும் சுற்றுலா வந்திருக்கும் நபர்களுக்கு எந்த நெருக்கடியும் அவர்கள் கொடுக்கவில்லை. இப்படியான சூழலில் பசுமை கொஞ்சுகிற இல்லற விடுதிக்கு வருகிறார்கள் தம்பதிகள். அன்றிரவு தம்பதிகளுக்கு இரவு உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடுக்கிடும் பிரச்னை ஒன்று வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதைப் பொறுமையாகப் பேசுவதே இந்த மலையாள மொழிப் படத்தின் கதை.  காதலுக்கான அன்னியோன்னியம், சரி தவறு ஆகிய இரண்டுக்கும் நடுவே தத்தளிக்கும் மனித இயல்பு, இறுதிக்காட்சியில் நரகத்தை உடைத்து வெளிவருகிற அழுகை என தர்ஷனா ராஜேந்திரன் படத்தின் மைய கருவுக்கு வலுசேர்த்து அற்புதமான நடிப்பினை வழங்கியிருக்கிறார். அவருக்குப் போட்டியாக மனித இயல்பின் தடுமாற்றம், தன்னலத்திலிருந்து சுயநலத்துக்கு மாறுகிற நிலை, குற்றவுணர்ச்சியை போக்கடிக்க காரணம் கற்பிக்கும் மனநிலை என யதார்த்த நடிப்பினை வழங்கி தன் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருக்கிறார் ரோஷன் மேத்யூ. காவல்துறை அதிகாரியாக பெரேரா, ஓட்டுநராக ஷியாம் பெர்னான்டோ, விடுதி வேலைக்காரர்களாக சம்சுதீன் மற்றும் இளங்கோ தங்களுக்கான வேலையைத் திரையில் திறம்படச் செய்திருக்கிறார்கள்.  தீவு தேசத்தின் பசுமையை ரம்மியமாகப் படம் பிடித்திருக்கிறது ராஜிவ் ரவியின் கேமரா கண்கள். வலிந்து திணிக்கப்படாத காட்சிகளுக்குச் சரியான வேகத்தினை கொடுத்து யதார்த்தினை உறுதி செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத். தனிமையில் இயற்கையுடன் அமர்ந்து பேசுகிற விதமாக ஒளி வடிவமைப்பு கச்சிதமாகச் செய்யப்பட, அதில் தேவைக்கேற்ப ‘கே’யின் பின்னணி இசை மேஜிக் செய்திருக்கிறது. காவல்நிலையம், ஹோம் விடுதிக்குள் பணியாட்கள் தங்குமிடம் எனக் கலை இயக்கத்தில் தம்மிக்கா ஹேவாடுவத்தாவின் மெனக்கெடல் தெளிவாகத் தெரிகிறது.  படம் ஆரம்பித்ததிலிருந்தே உலக சினிமாவுக்கான இலக்கணத்தின் படி மிதமான வேகத்தில் எதார்த்த திரைமொழியைக் கொண்டு நகர்கிறது திரைக்கதை. ஒருபுறம் இலங்கையில் நடக்கும் சமகால பிரச்னையை மையமாக வைத்து ஏற்றத்தாழ்வுகளைப் பேசுகிற படம், மறுபுறம் மனித மனங்களில் மண்டி கிடக்கும் கசடுகளைத் தூர் செய்கிறது. பல அடுக்குகளை உருவகமாக வைத்து நகரும் காட்சிகளில் ராமாயணம், மான் ஆகியவற்றைப் பயன்படுத்திய விதத்தில் இயக்குநர் பிரசன்ன விதானகே பார்வையாளர்களுக்குப் பலப்பரீட்சை நடத்துகிறார். அதனால் படம் முடிந்த பின்னரும் ஒவ்வொரு காட்சியாக நாம் மீண்டும் அசை போடத் துவங்குகிறோம். இந்த உரையாடலே படைப்புக்கான வெற்றி எனக் கருதலாம்.  “நான் சோகமாக இருக்கவேண்டுமென்று நீ நினைக்கிறாயா”, “மனித உயிரோட மதிப்பு என்ன? ஒரு ஓட்டுதான்” போன்ற வசனங்கள் போகிற போக்கில் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. அதிலும் “சீதையே ராவணனைக் கொல்லும் ராமாயணம் உட்பட 300க்கும் மேற்பட்ட ராமாயண வெர்ஷன்கள் இங்கே இருக்கின்றன”, “சந்தேகப்படும் ராமனை அக்கினி பரீட்சையில் வெல்கிறாள் சீதை” என்று பேசப்படும் வசனங்கள் இறுதிக் காட்சிக்கான குறியீடாக நம் மனதில் பதிகிறது. அதே போலக் கதையில் பேசப்பட்ட விஷயங்களைப் பெண் மையபார்வையில் அணுகியதற்கும், அந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மை மக்களை அதிகாரம் என்ன செய்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியதற்கும் படக்குழுவுக்குப் பாராட்டுக்கள்.  பதற்றமான சூழலில் மனிதன் தன்னை எந்த நிலையில் வெளிப்படுத்துகிறான் என்பதை, ஒரு நாட்டின் பதற்ற சூழலை வைத்துப் பின்னியிருக்கும் இறுதிக் காட்சி நம்மைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி உறைய வைக்கிறது. சில இடங்களில் பொறுமையாக நகரும் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன என்றாலும், அந்த நிதானத்தைத்தான் படைப்பாளர் நம்மிடம் விரும்புகிறார் என்கிற இடத்தில் இந்தப் படம் நிஜமாக ஓர் உரையாடலை நிகழ்த்துகிறது.  மொத்தத்தில் 90 நிமிடங்களுக்குள் நம் அக உணர்வுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் இந்த `பேரடைஸ்', ஒரு பெண்ணின் பார்வையில் `எது சொர்க்கம்’ என்ற கேள்வியை முன்வைத்து, படத்தில் வரும் வசனம் போலவே மற்றொரு ராமாயண பதிப்பாக நம் மனதில் ஆழமாகப் பதிகிறது.   https://cinema.vikatan.com/mollywood/darshana-rajendran-and-roshan-mathews-paradise-movie-review?pfrom=home-main-row
    • ராகுல் டிராவிட்: கேப்டனாகத் தோற்ற அதே மண்ணில் பயிற்சியாளர் ஆகி சாதித்த கதை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஜூன் 2024, 13:47 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் “மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள ஸ்லோ விக்கெட் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான எங்களின் தோல்வி நம்பிக்கையை உடைத்தது. முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் அதைத்தான் மிகப்பெரிய வேதனையாக உணர்ந்தேன். ஒருவேளை சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தால், எங்களின் நம்பிக்கை வளர்ந்திருக்கும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர் எங்களுக்கு அடுத்தவாய்ப்பை வழங்கவில்லை, அடுத்த ஒரு மாதம் தாயகத்துக்கு திரும்பி மற்ற அணிகள் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நேர்மையாகக் கூறினால் என்னால் என்னையே பார்க்க முடியவில்லை.” 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியபின், ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கியது. அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் குறித்து டிராவிட் இ.எஸ்.பி.என் தளத்தில் எழுதிய கட்டுரையில் இதைத் தெரிவித்திருந்தார். தலைகுனிவோடு வெளியேறிய இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் அதே மண்ணில், டி20 சாம்பியனாக்கித் தலைநிமிர வைத்துள்ளார் பயிற்சியாளர் 'தி கிரேட் வால்' ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட் களத்தில் இருந்தாலே, அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம் என்று எதிரணி பந்துவீச்சாளர்கள் புலம்பிய காலம் இருந்தது. இந்திய அணியில் ஒரு வீரராக தனது முழு பங்களிப்பைச் செய்த ராகுல் டிராவிட், இந்திய அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது அவரால் வெற்றி பெறமுடியவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட்டின் கேப்டன்சி தோல்வி ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த 2003 முதல் 2007-ஆம் ஆண்டுவரை எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. 25 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் 49 வெற்றிகளையும் மட்டுமே பெற முடிந்தது. அதிலும் 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வெளியேறியது. இதன்பின் டிராவிட்டின் கேப்டன்ஷி, அவரின் பேட்டிங் திறமை மீது பி.சி.சி.ஐ நிர்வாகத்துக்கு சந்தேகம் எழுந்தது. அவரைச் சிறிது சிறிதாக ஒரம் கட்டிய பி.சி.சி.ஐ, ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி 2009-ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து டிராவிட்டை நீக்கியது. 'ரோஷக்காரர்' டிராவிட் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் அதன்பின் 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மீண்டும் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் இந்தத் தொடரில் விளையாடும்போதே டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதிகாரபூர்வ ஓய்வுக்காக ஒரு தொடரை நடத்துகிறோம் என பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்தும் அதை மறுத்துவிட்ட டிராவிட், அந்தத் தொடர் முடிந்த உடனே ஓய்வுபெற்றார். இங்கிலாந்தின் கார்டிப் நகரில் 2011-ஆம் ஆண்டு, செப்டம்பர் 16-ஆம் தேதி நடந்த கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 79 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து டிராவிட் ஆட்டமிழந்தார். அதோடு ஒருநாள் போட்டியிலிருந்து டிராவிட் ஓய்வு பெற்றார். எந்த பி.சி.சி.ஐ நிர்வாகம் டிராவிட்டின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி அணியிலிருந்து அவரை நீக்கியதோ அதே நிர்வாகம் அவரை மீண்டும் ஒருநாள் தொடருக்கு தேர்ந்தெடுத்தபோது டிராவிட் தொடர்ந்து விளையாட விரும்பாமல் ஓய்வு பெற்றார். 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருடன் டெஸ்ட் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிராவிட் அறிவித்தார்.   இந்திய வீரராக வெற்றி டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,899 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 52 சராசரியும், ஒருநாள் போட்டியில் 39 சராசரியும் வைத்துள்ள டிராவிட், டெஸ்டில் 36 சதங்கள், 63 அரைசதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12 சதங்களும் 83 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒரு வீரராக பரிணமிக்க, சாதிக்க முடிந்த டிராவிட்டால் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES வரலாற்றுச் சாதனை டிராவிட் கேப்டன்சியில் முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 1971-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத்தீவுகளில் வெல்ல முடியாமல் இருந்தநிலையில் 2006-ஆம் ஆண்டு 1-0 என்ற டெஸ்ட் தொடரை வென்று டிராவிட் தலைமையில் இந்திய அணி வரலாறு படைத்தது. டிராவிட் தலைமையில் ஒருமுறைகூட ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் கோப்பையை வென்றதில்லை. இந்தத் தொடரிலிருந்து டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கியது. இந்திய அணியிலிருந்து படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு அடுத்த 4 ஆண்டுகளில் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக டிராவிட் ஓய்வு பெற்றார். பயிற்சியாளர் அவதாரம் 2015-ஆம் ஆண்டு, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். பயிற்சியாளராக முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்ற டிராவிட் 2016-ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை இறுதிப்போட்டிவரை கொண்டு சென்றார். அதன்பின் பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.   டிராவிட்டின் பட்டறை பட மூலாதாரம்,GETTY IMAGES டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு வழங்கும் சிற்பியாக செயல்பட்டார். அதன்பின், 2019-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமயின் (என்.சி.ஏ) தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்த தேசிய கிரிக்கெட் அகாடெமிதான் இந்திய அணிக்குத் தேவையான வீரர்களை உருவாக்கிக் கொடுக்கும் பட்டறையாகும். வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர், பேட்டர், ஆல்ரவுண்டர் என வகைவகையான வீரர்களை உருவாக்கி, இந்திய அணிக்கு அனுப்பியவர் டிராவிட்தான். இந்திய அணிக்கு வலிமை சேர்த்தவர் இந்திய அணியின் பெஞ்ச் பலம் தொடர்ந்து அதிகரித்து, பலதிறமையான பேட்டர்கள், பந்துவீச்சாளர்ள் உருவாகியகாலம் ராகுல் டிராவிட், என்.சி.ஏ தலைவராக இருந்தபோதுதான். இந்திய அணயின் பெஞ்ச் பலத்தைப் பார்த்து ஒருமுறை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக், “இந்திய அணிக்கு ஏராளமான வீரர்கள் உருவாக்கி ஒருவர் வழங்கி வருகிறார். அதனால்தான் இந்திய அணியின் பெஞ்ச் பலம் அதிகரித்துள்ளது. அவர் வேறுயாருமல்ல ராகுல்திராவிட்தான்,” எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார். என்.சி.ஏ தலைவராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றபின் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது, மேற்பார்வையிடுவது, உடற்தகுதியைக் கண்காணிப்பது, ஊக்கப்படுத்துவது, வழிநடத்துவது, பயிற்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பது, வழிகாட்டுவது எனப் பல பணிகளைச் சிறப்பாகச் செய்தார். இந்திய சீனியர் அணியின் உடற்தகுதி சர்வதேச அளவில் சிறப்பாக இருக்க என்.சி.ஏ முக்கியக் காரணமாகவும், டிராவிட்டின் நிர்வாகமும் காரணமாக இருந்தது. சீனியர் அணிக்குப் பயிற்சியாளர் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பயிற்சிக் காலம் முடிந்தபின், 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். முதலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து தொடருக்கு முதன்முதலில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார். டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி 56 ஒருநாள் போட்டிகளில் 41 ஆட்டங்களில் வென்றது, 69 டி20 போட்டிகளில் 48 போட்டிகளில் வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் தொடர்களை வென்று, ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது, 2 தொடர்களை இந்திய அணி சமன் செய்தது. குறிப்பாக 2023 ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES இறுதிப்போட்டிகளில் தோல்வி 2023 ஐசிசி உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிவரை இந்திய அணி முன்னேறியது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது. இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பி.சி.சி.ஐ டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கேட்டுக்கொண்டது.   டிராவிட் காலம் பொற்காலம் பட மூலாதாரம்,GETTY IMAGES இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இந்திய அணிக்குச் செயல்பட்டடிராவிட், இறுதியாக மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் 2வது முறையாக டி20 சாம்பியனாக்கினார், 11 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் நடக்கும் போட்டித் தொடரில் கோப்பையை வெல்ல வைத்தார். 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி, 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் தோல்வி ஆகியவற்றை மட்டும் விலக்கிவைத்து டிராவிட்டின் பயிற்சியைப் பார்த்தால் இந்திய அணிக்கு பொற்காலம்தான். ராகுல் டிராவிட் பயிற்சியில்தான் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. விராட் கோலியிடமிருந்து கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு மாறியது. ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில் கேப்டன்பதவிக்கு தயார் செய்யப்பட்டனர். பல இளம் வீரர்கள் பரிசோதனை முயற்சியாக உள்நாட்டு தொடர்களில் விளையாட வைக்கப்பட்டு திறமை கண்டறியப்பட்டது. இந்திய அணிக்கு தலைமை ஏற்று, முதல்சுற்றோடு தலைகுணிந்து எந்த மண்ணில் ராகுல் டிராவிட் வெளியேறினாரோ அதை கரீபியன் மண்ணில், இன்று இந்திய அணிக்கு டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்து தலைநிமிரச் செய்துவிட்டார். https://www.bbc.com/tamil/articles/cn09d9rjrldo
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.