Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பந்துவீச்சில் ஹசரங்க சாதனை, துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் அதிரடி; தொடர் இலங்கை வசம்

12 JAN, 2024 | 06:44 AM
image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது.

வனிந்து ஹசரங்கவின் தனிப்பட்ட சாதனை மிகு பந்தவீச்சுப் பெறுதியும் அணித் தலைவர் குசல் மெண்டிஸின் அதிரடி அரைச் சதமும் இலங்கைக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

ஆறு மாதங்களின் பின்னரே  சுழல்பந்துவீச்சாளர்   வனிந்து ஹசரங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.

ஸிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்களை பெரும் சோதனைக்குள்ளாக்கிய வனிந்து ஹசரங்க தனது மீள் வருகையில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 5.5 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது வனிந்து ஹசரங்கவின் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். சமிந்த வாஸுக்கு அடுத்ததாக இலங்கையர் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும்.

ஸிம்பாப்வேக்கு எதிராக எஸ்எஸ்சி மைதானத்தில் 2001 டிசம்பரில் நடைபெற்ற போட்டியில் சமிந்த வாஸ் 19 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தியமையே அனைத்து நாடுகளுக்குமான அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக கடந்த 21 வருடங்களாக இருந்துவருகிறது.

பல தடவைகள் மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடரப்பட்ட இப் போட்டி அணிக்கு 27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

குறிப்பிட்ட நேரப்படி ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 22.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பிற்பகல் 3.04 மணிக்கு மழையினால் ஆட்டம் தடைப்பட்டபோது ஸிம்பாப்வே 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பிற்பகல் 5.15 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது அணிக்கு 43 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

எனினும் ஆட்டம் நெடு நேரம் தொடரவில்லை. பிற்பகல் 5.34 மணிக்கு மீண்டும் மழை பெய்ததால் போட்டி இரண்டாவது தடவையாக தடைப்பட்டது. (ஸிம்பாப்வே 12 ஓவர்களில் 48 - 3 விக்.)

ஆட்டம் மீண்டும் இரவு 8.00 மணிக்கு தொடர்ந்தபோது அணிக்கு 27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்றபோது இலங்கையர்களின் குறிப்பாக வனிந்து  ஹசரங்கவின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட ஸிம்பாப்வே 96 ஓட்டங்களுக்கு சுருண்டது.

துடுப்பாட்டத்தில் ஜோய்போர்ட் கம்பி (29), டக்குட்ஸ்வனாஷே கய்ட்டானோ (17), சிக்கந்தர் ராஸா (10), லூக் ஜொங்வே (14), வெலிங்டன் மஸக்கட்ஸா (11) ஆகிய ஐவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 97 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 16.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முதலிரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய அவிஷ்க பெர்னாண்டோவுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டபோதிலும் அவர் இத் தொடரில் இரண்டாவது தடவையாக ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

எனினும் ஆரம்ப வீரராக அறிமுகமான ஷெவன் டெனியல் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி குசல் மெண்டிஸுடன் 2ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அவர் 12 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 51 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் உட்பட 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். சதீர சமரவிக்ரம 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இந்தப் போட்டியில் வனிந்து ஹசரங்க விளையாடியதால் தசுன் ஷானக்க நீக்கப்பட்டார். ஜெவ்றி வெண்டசெயுக்குப் பதிலாக ஷெவன் டெனியல் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆட்டநாயகன்: வனிந்து ஹசரங்க

Copy_of_Kusal_Mendis_Batting__5_.jpg

Copy_of_Wanindu_Hasaranga_Celebrate_Wick

Copy_of_01.jpg

Copy_of_09.jpg

Copy_of_Champions.jpg

https://www.virakesari.lk/article/173741

தொடர் நாயகன்: ஜனித் லியனகே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் தலைவர்கள் மெத்யூஸ், ஷானக்க அபாரம் : ஸிம்பாப்வேயை 3 விக்கெட்களால் வென்றது இலங்கை

15 JAN, 2024 | 02:43 AM
image
 
(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை - ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.

ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து உரிய வெற்றி இலக்கை அடைந்தது.

முன்னாள் அணித் தலைவர்கள் ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகிய இருவரும் மத்திய வரிசையில் திறமையாக துடுப்பெடுத்தாடியதன் பலனாக இலங்கை வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.

சுமார் 3 வருடங்களின் பின்னர் ரி20 அணியில் இடம்பிடித்த ஏஞ்சலோ மெத்யூஸ் அனுபவசாலிக்கே உரித்தான பாணியில் துடுப்பெடுத்தாடி இலங்கையை வெற்றி அடையச் செய்து ஆட்ட நாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார்.

14 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்று தோல்வியின் விளிம்பில் இலங்கை இருந்தபோது ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸும் தசுன் ஷானக்கவும் 7ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.

கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 6 ஓட்டங்களே தேவைப்பட்டபோது ஏஞ்சலோ மெத்யூஸ், சிக்ஸ் மூலம் வெற்றி ஓட்டங்களைப் பெற முயற்சித்து ஆட்டம் இழந்ததால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், அடுத்து களம் நுழைந்த துஷ்மன்த சமீர் கடைசி 2 பந்துகளில் 4, 2 என 6 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர்.

ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய மெத்யூஸ் பின்னர் அதிரடியில் இறங்கி 38 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 46 ஓட்டங்கைளப் பெற்றார்.

தசுன் ஷானக்க 18 பந்துகளில் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

எவ்வாறாயினும் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

பெத்தும் நிஸ்ஸன்க (2) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.

குசல் மெண்டிஸ் (17), குசல் ஜனித் பெரேரா (17)  ஆகிய இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் களம் விட்டகன்றனர்.

தொடர்ந்து சதீர சமரவிக்ரம 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

சரித் அசலன்கவும் ஏஞ்சலோ மெத்யூஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்திரந்தபோது சரித் அசலன்க (16) கவனக் குறைவான அடி காரணமாக நடையைக் கட்டினார்.

ரி20 அணிக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வனிந்து ஹசரங்கவும் இந்தப் போட்டி சிறப்பாக அமையவில்லை. அவர் இரண்டாவது பந்தில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஆனால், அதன் பின்னர் மெத்யூஸும் தசுன் ஷானக்கவும் ஆட்டத்தின் பிடியை இலங்கை பக்கம் திருப்பி வெற்றிக்கு அடிகோலினர்.

பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர்களான டினாஷே கமுன்ஹுகம்வே (26 ஓட்டங்கள்), க்ரெய்க் ஏர்வின் (10) ஆகிய இருவரும் 31 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், இருவரும் ஒரு ஓட்ட வித்தியசத்தில் 6ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தனர்.

அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா மிக வேகமாகத் துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 62 ஓட்டங்களைக் குவித்தார்.

முன்னாள் அணித் தலைவர் சோன் வில்லியம்ஸுடன் 3ஆவது விக்கெட்டில் சிக்கந்தர் ராஸா பகிர்ந்த 48 ஓட்டங்களே ஸிம்பாப்வே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக பதிவானது.

உபாதையிலிருந்து மீண்டுவந்த சோன் வில்லியம்ஸ் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

ரெயான் பேர்ல் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

ப்றயன் பெனெட் 10 ஓட்டங்களுடனும் லூக் ஜொங்வே 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் களத்தடுப்பும் வேகப்பந்தவீச்சும் சிறப்பாக அமையவில்லை.

காய்ச்சலில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய பெத்தும் நிஸ்ஸங்க இரண்டு பிடிகளைத் தவறவிட்டதுடன் வேகப்பந்துவீச்சாளர்களான நுவன் துஷார (43 ஓட்டங்கள்), துஷ்மன்த சமீர (38) ஆகிய இருவரும் மொத்தமாக 81 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தனர்.

மஹீஷ் தீக்ஷன 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/173968

  • கருத்துக்கள உறவுகள்

கைக்குள் வ‌ந்த‌ வெற்றிய‌ ஜ‌ஞ்ச‌லோ ம‌த்தியூஸ்சின் சுத‌ப்ப‌ல் ப‌ந்து விச்சால் வெற்றி சிம்பாவேக்கு போய் விட்ட‌து............ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான ரி -20 வரலாற்றில் முதல் வெற்றியை சுவைத்தது ஸிம்பாப்வே

16 JAN, 2024 | 11:06 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (16) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து மீதம் இருக்க ஸிம்பாப்வே 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற 5 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் ஸிம்பாப்வே வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும்.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 1 - 1 என ஸிம்பாப்வே சமப்படுத்திக்கொண்டுள்ளது. முதலாவது போட்டியில் இலங்கை 3 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

க்ரெய்க் ஏர்வின் குவித்த அரைச் சதம், கடைசி 2 ஓவர்களில் லூக் ஜொங்வே, க்ளைவ் மதண்டே ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் என்பன ஸிம்பாப்வேயின் வெற்றியை உறுதிசெய்தன. 

மொத்த எண்ணிக்கை 22 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் டினாஷே கமுன்ஹூகம்வே (12) ஆட்டம் இழந்தார்.

எனினும் க்ரெய்க் ஏர்வின், ப்றயன் பெனெட் (25) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து  ஸிம்பாப்வே  அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் சிக்கந்தர் ராஸா (8), சோன் வில்லியம்ஸ் (1), சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய க்ரெய்க் ஏர்வின், ரெயான் பேர்ல் (13) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.

க்ரெய்க் ஏர்வின் 54 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார்.

ஸிம்பாப்வேயின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. டில்ஷான் மதுஷன்க வீசிய 19ஆவது ஓவரில் 10 ஓட்டங்களும் மெத்யூஸ் வீசிய கடைசி ஓவரில் 24 ஓட்டங்களும் குவிக்கப்பட ஸிம்பாப்வே அபார வெற்றியை ஈட்டியது.

கடைசி ஓவரில் மெத்யூஸ் வீசிய முதல் பந்து சிக்ஸ் ஆனதுடன் நோபோலாகவும் அமைந்தது. ப்றீ ஹிட்டான அடுத்த பந்தில் பவுண்டறியும் 2ஆவது பந்தில் சிக்ஸும் விளாசப்பட்டன. 3ஆவது பந்தில் ஓட்டம் பெறப்படவில்i9ல. 4ஆவது பந்தில் லூக் ஜொங்வே கொடுத்த இலகுவான பிடியை மஹீஷ் தீக்ஷன தவறவிட்டார். அடுத்த பந்தில் க்ளைவ் மதண்டே அபாரமாக சிக்ஸ் விளாசி ஸிம்பாப்வேயின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைக் குவித்தது.

உதவி அணித் தலைவர் சரித் அசலன்க, முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்து அணியை சிறந்த நிலையில் இட்டதுடன் இரசிகர்களுக்கும் விருந்து படைத்தனர்.

முதலாவது போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் இலங்கையின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க (4), குசல் பெரேரா (0), குசல் மெண்டிஸ் (4), சதீர சமரவிக்ரம (19) ஆகிய நான்கு முன்வரிசை வீரர்களும் துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசிக்கத் தவறினர். 4ஆவது விக்கெட் வீழ்ந்தபோது இலங்கை 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சரித் அசலன்கவும் ஏஞ்சலோ மெத்யூஸும் 5ஆவது விக்கெட்டில் 79 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

சரித் அசலன்க 39 பந்துகளில் 5 பவுண்டறிகள். 3 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைக் குவித்தார்.

ஏஞ்சலோ மெத்யூஸ் 51 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

தசுன் ஷானக்க வேகமாக ஓட்டம் பெற விளைந்து 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஒரு பந்தை எதிர்கொண்ட அணித் தலைவர் வனிந்து ஹசரங்க ஓட்டம் பெறவில்லை.

பந்துவீச்சில் லூக் ஜொங்வே 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: லூக் ஜொங்வே.

https://www.virakesari.lk/article/174114

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

சிம்பாவே அணிக்கு வாழ்த்துக்க‌ள்

இல‌ங்கை வீர‌ர்க‌ளின் விளையாட்டு அருவ‌ருக்க‌ த‌க்க‌து..........அஞ்ச‌லோ ம‌த்தியூஸ்சுக்கு யோக்க‌ர் ப‌ந்தோ அல்ல‌து த‌ந்திர‌மாய் ப‌ந்து போட‌ தெரியாது.............ஹ‌ச‌ர‌ங்கா அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ சிற‌ந்த‌ க‌ப்ட‌ன் கிடையாது அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ திற‌மை இருக்க‌னும் அது ஹ‌ச‌ர‌ங்காவிட‌ம் அற‌வே இல்லை..........மார்கேட்டில் கீரை விக்க‌ தான் இல‌ங்கை வீர‌ர்க‌ள் லாய்க்கு...........
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ 20 ஓவ‌ர் விளையாட்டில் நான‌ய‌ம் தான் வெற்றி தோல்விய‌ தீர்மானிக்கிறது.........ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌ இல‌ங்கை அணி சிம்பாவே அணிய‌ 82ர‌ன்னுக்கை ம‌ட‌க்கி விட்டின‌ம்

இந்த‌ விளையாட்டில் இல‌ங்கை பெரிய‌ வெற்றி😁.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸிம்பாப்வேயுடனான கடைசிப் போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்ற இலங்கை தொடரையும் கைப்பற்றியது

18 JAN, 2024 | 10:14 PM
image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 3ஆவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 9.1 ஓவர்கள் மீதமிருக்க 9 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை தொடரை 2 - 1 ஆட்டக் கணக்கில்  கைப்பற்றியது.

இந்தியாவுக்கு எதிராக 2021 ஜூலை மாதம் ஈட்டிய தொடர் வெற்றிக்குப் பின்னர் 30 மாதங்கள் கழித்து இருதரப்பு சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ஒன்றை முதல் தடடைவயாக இலங்கை கைப்பற்றியுள்ளது.

வனிந்து ஹசரங்கவின் 4 விக்கெட் குவியல், ஏஞ்சலோ மெத்யூஸ், மஹீஷ் தீக்ஷன ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள் என்பன இலங்கைக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இப்போட்டியில் ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 83 ஓட்டங்கள் என்ற மிகவும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் சுமாரான வேகத்தில் துடுப்பெடுத்தாடி 53 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

குசல் மெண்டிஸ் 27 பந்துகளில் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 33 ஓட்டங்களைப் பெற்று சோன் வில்லியம்ஸின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

முதல் இரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய பெத்தும் நிஸ்ஸன்க இந்தப் போட்டியில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 23 பந்துகளில் 5 பவுண்டறிகள் ஒரு சிக்ஸ் உட்பட 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் வெற்றி இலக்கை சிக்ஸுடன் நிறைவு செய்தார்.

தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. குசல் ஜனித் பெரேரா நீக்கப்பட்டதுடன் சரித் அசலன்க உபாதை காரணமாக விளையாடவில்லை. அவர்கள் இருவருக்குப் பதிலாக தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

தனஞ்சய டி சில்வா 9 மாதங்களின் பின்னரும் கமிந்து மெண்டிஸ் 12 மாதங்களின் பின்னரும் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடினர்.

ஸிம்பாப்வே அணியில் ரெயான் பேர்லுக்குப் பதிலாக டோனி மொன்யொங்கா விளையாடினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 14.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும்  இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது.

ஏஞ்சலோ மெத்யூஸ் முதலாவது ஓவரிலேயே க்ரெய்க் ஏர்வின்ஸை (0) ஆட்டம் இழக்கச் செய்தார். (9-1)

ஆனால், டில்ஷான் மதுஷன்க வீசிய அடுத்த ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட்டது.

எனினும் மெத்யூஸ் தனது 2ஆவது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் ப்றயன் பெனெட்டின் விக்கெட்டைக் கைப்பற்றி இலங்கைக்கு ஆறுதலைக் கொடுத்தார்.(35 - 2 விக்)  

பெனெட் 12 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு நான்குடன் 29  ஓட்டங்களைக் குவித்தார்.

பெனெட் ஆட்டம் இழந்த பின்னர் ஸிம்பாப்வேயின் ஓட்ட வேகம் சுமாராக இருந்தது.

மொத்த எண்ணிக்கை 51 ஓட்டங்களாக இருந்தபோது மற்றைய ஆரம்ப வீரர் டினாஷே கமுன்ஹுகம்வே 12 ஓட்டங்களுடன் மஹீஷ் தீக்ஷ்னவின் பந்துவீச்சில் களம் விட்டு வெளியேறினார்.

9ஆவது ஓவரில் ஸிம்பாப்வே 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு நல்ல நிலையில் இருந்தது.

அப்போது சிரேஷ்ட வீரர்களான அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா, சோன் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்ததால் ஸிம்பாப்வே கனிசமான ஓட்டங்களைப் பெறும் என கருதப்பட்டது.

ஆனால் கடைசி 7 விக்கெட்கள் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

ராஸாவின் விக்கெட்டை மதுஷன்கவும் சோன் வில்லியம்ஸின் விக்கெட்டை தனஞ்சய டி சில்வாவும் முன்யொங்கா, 2ஆவது போட்டி நாயகன் லூக் ஜொங்வே, வெலிங்டன் மஸகட்ஸா, ரிச்சர்ட் ங்கராவா ஆகியோரின் விக்கெட்களை அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவும், கடைசியாக க்ளைவ் மதண்டேயின் விக்கெட்டை மஹீஷ் தீக்ஷனவும் கைப்பற்றினர்.

அவர்களில் சோன் வில்லியம்ஸ் (15), சிக்ந்தர் ராஸா (10) ஆகிய இருவரைத் தவிர மற்றையவர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

வனிந்து ஹசரங்க ஆட்டநாயகனாகவும் 3 வருடங்களின் பின்னர் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் மீள் பிரவேசம் செய்த ஏஞ்சலோ மெத்யூஸ் தொடர்நாயகனாகவும் தெரிவாகினர்.

https://www.virakesari.lk/article/174280

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன‌ ம‌லிங்காவை அணியில் இருந்து ஓர‌ம் க‌ட்ட‌ தொட‌ங்கிட்டின‌ம் போல் இருக்கு...........50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் 2 விளையாட்டில் விளையாட‌ விட‌ 
கிடைத்த‌ வாய்ப்பை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்தாம‌ ப‌ந்தை அங்கும் இங்கும் போட்டு அதிக‌ ர‌ன்ன‌ விட்டு கொடுத்தார்.........
ந‌ட‌ந்து முடிந்த‌ சிம்பாவே ஒரு நாள் தொட‌ர் ம‌ற்றும் ரீ20 விளையாட்டிலும் விளையாட‌ விட‌ வில்லை

ஒரு நாள் போட்டியில் இவ‌ரின் பெய‌ர் தேர்வுக்குழுவால் தெரிவு செய்ய‌ப் ப‌ட‌ வில்லை
20ஓவ‌ர் விளையாட்டில் தெரிவாகியும் ஒரு விளையாட்டிலும் விளையாட‌ வில்லை............

ம‌று ப‌டியும் டோனீவ‌ரை ஜ‌பிஎல்ல‌  மெதுவாய் வ‌ள‌த்து விட்டால் தான் இலங்கை அணியில் இட‌ம் கிடைக்கும்........இவ‌ருக்கு ஒரு நாள் தொட‌ர் ச‌ரி வ‌ராது 20ஓவ‌ர் என்றால் 24 ப‌ந்தை துல்லிய‌மாய் போடுவார்🙏.............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.