Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

19 வயதின் கீழ் உலகக் கிண்ண சுப்பர் 6 சுற்றில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா

30 JAN, 2024 | 10:12 PM
image

(நெவில் அன்தனி)

புளூம்பொன்டெய்ன் மங்குவாங் ஓவல் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்றின் முதலாம் குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை 214 ஓட்டங்களால் இந்தியா மிக இலகுவாக வெற்றிகொண்டது.

முஷீர் கான் குவித்த அபார சதம் உட்பட அவரது சகலதுறை ஆட்டம், ராஜ் லிம்பினி, சௌமி பாண்டே ஆகியோரது துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கின.

Musheer_Khan_of_India_celebrates_a_centu

இந்த வெற்றியுடன் அரை இறுதியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை இந்தியா அதிகரித்துக்கொண்டுள்ளது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 295 ஓட்டங்களைக் குவித்தது.

மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது இந்தியாவின் முதலாவது விக்கெட் சரிந்தது.

ஆனால், அதன் பின்னர் முஷீர் கான் 2ஆவது விக்கெட்டில் ஆதர்ஷ் சிங்குடன் 77 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் உதய் சஹாரனுடன் 87 ஓட்டங்களையும் பகிர்ந்து இந்தியாவை பலமான நிலையில் இட்டார்.

ஆரம்ப வீரர் ஆதர்ஷ் சிங் 52 ஓட்டங்களையும் உதய் சஹாரன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய முஷீர் கான் 126 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 131 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் மேசன் க்ளார்க் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 28.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.

அணித் தலைவர் ஒஸ்கர் ஜெக்சன் (19), ஸக் கமிங் (16), அலெக்ஸ் தொம்சன் (12), ஜேம்ஸ் நெல்சன் (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சௌமி பாண்டே 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராஜ் லிம்பானி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஷீர் கான் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தியா தனது அடுத்த சுப்பர் 6 போட்டியில் நேபாளத்தை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி எதிர்த்தாடும்.  

ஆட்ட நாயகன்: முஷீர் கான்

https://www.virakesari.lk/article/175191

  • Replies 69
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அயர்லாந்துடனான சுப்பர் 6 போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்களால் வெற்றி

30 JAN, 2024 | 10:15 PM
image

(நெவில் அன்தனி)

அயர்லாந்துக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் சென்வெஸ் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் 6 முதலாம் குழுவுக்கான இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 43.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் சற்று தடுமாறியபோதிலும் அஹ்மத் ஹசன்  நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி   ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்து தனது அணி வெற்றி பெறுவதை உறுதிசெய்தார். பந்துவீச்சிலும் அவர் 2 விக்கெட்களை வீழ்த்தி தனது சகலதுறை ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார்.

ஆரம்ப வீரர்களான ஷாபாஸ் கான் (11), ஷமில் ஹுசெய்ன் (7) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

அஸான் அவாய்ஸ் (21), அஹ்மத் ஹசன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சற்று தெம்பைக் கொடுத்தனர்.

எனினும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் பாகிஸ்தான் மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

அஹ்மத் ஹசன், ஹரூன் அர்ஷாத் (25) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு தெம்பூட்டினர்.

அர்ஷாத் 6ஆவதாக ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அரபாத் மின்ஹாஸ் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். (162 - 7 விக்.)

அஹ்மத் ஹசன், அலி அஸ்பந்த் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அஹ்மத் ஹசன் 57 ஓட்டங்களுடனும் அலி அஷ்பந்த் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஹரி டயர் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.

அயர்லாந்து துடுப்பாட்டத்தில் ஆறு வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் இருவர் மாத்திரமே 30 ஓட்டங்களைக் கடந்தனர்.

ஜோன் மெக்னலி 53 ஓட்டங்களையும் ஹெரி டயர் 31 ஓட்டங்களையும் பெற்று 7ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் அயர்லாந்து கௌரவமான நிலையை அடைந்தது.

பந்துவீச்சில் உபைத் ஷா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலி ராஸா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமிர் ஹசன் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஹ்மத ஹசன் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: அஹ்மத் ஹசன்.

https://www.virakesari.lk/article/175192

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கைக்கு ஏமாற்றம்; 3 பந்துகள் மீதம் இருக்க மே.தீவுகளிடம் தோல்வி

30 JAN, 2024 | 10:18 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கைக்குக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் கடுமையாக மோதிக்கொள்ளப்பட்ட 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் 6 இரண்டாம் குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் 3 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்து ஏமாற்றத்திற்குள்ளானது.

232 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவர் ஸ்டெஃபான் பஸ்கால் (33), ஸ்டீவன் வெடபேர்ன் ஆகிய இருவரும் 49 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பஸ்காலைத் தொடர்ந்து ஜொஷுவா டோன் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய வெடபேரன், ஜொர்டன் ஜோன்சன் (39) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

வெடபேர்ன் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார்.

எனினும், 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் (184 - 4 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் தடுமாற்றத்தை எதிர்கொண்டதுடன் ஓட்ட வேகமும் வெகுவாக குறைந்தது.

ஆனால், நேதன் சோலி (27 ஆ.இ.), தாரிக் எட்வர்ட் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 26 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் விஷ்வா லஹிரு 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தினுர கலுபஹன, சினேத் ஜயவர்தன ஆகிய இருவரும் தலா 39 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் இலங்கை 8 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்றாகும்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது.

தினுர கலுபஹன, சுப்புன் வடுகே, மல்ஷா தருப்பதி ஆகிய மூவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதாலேயே இலங்கை நல்ல நிலையை அடைந்தது.

இலங்கையின் ஆரம்பம் நான்காவது தடவையாக சிறப்பாக அமையவில்லை.

விஷேன் ஹலம்பகே (0), அணித் தலைவர் ஸ்னேத் ஜயவர்தன (11) ஆகிய இருவரும் பிரகாசிக்கத் தவறினர்.

லீக் சுற்றில் 3 போட்டிகளில் 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற புலிந்து பெரேரா இந்தப் போட்டியில் ஓரளவு சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 24 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து சுப்புன் வடுகே 31 ஓட்டங்களையும் தினுர கலுபஹன 53 ஓட்டங்களையும் மல்ஷ தருப்பதி 42 ஓட்டங்களையும் பெற்று அணியை ஓரளவு பலப்படுத்தினர்.

அவர்களை விட ஷாருஜன் சண்முகநாதன் 14 ஓட்டங்களையும் விஹாஸ் தெவ்மிக்க 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கையின் மொத்த எண்ணிக்கைக்கு 23 உதிரிகள் கிடைத்தது.

பந்துவீச்சில் ரனெய்க்கோ ஸ்மித் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நேதன் எட்வர்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Dinura_Kalupahana_of_Sri_Lanka_bats_duri

Steve_Wedderburn_of_West_Indies_bats_dur

https://www.virakesari.lk/article/175193

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.சி.சி. 19இன் கீழ் சுப்பர் 6 சுற்றில் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் வெற்றி

01 FEB, 2024 | 09:40 AM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்றின் இரண்டாம் நாளான இன்று புதன்கிழமை (31) அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

டக்வேர்த் லூயிஸ் முறைமையில் அவுஸ்திரேலியா இலகு வெற்றி

கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 110 ஓட்டங்களால் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிகொண்டது.

download__1_.jpg

இந்த வெற்றியுடன் அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை அவுஸ்திரேலியா அதிகரித்துக்கொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைக் குவித்தது.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் ஹியூ வெய்ப்ஜென் 126 பந்துகளில் 15 பவுண்டறிகளுடன் 120 ஓட்டங்களை விளாசினார்.

ஹெரி டிக்சன் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 53 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலியா ஒரு ஓட்டம் பெற்றிருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தது.

எனினும் வெய்ப்ஜென், டிக்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.

அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ 38ஆவது ஓவரில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், வெய்ப்ஜென், ஒலிவர் பீக் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஒலிவர் பீக் 25 ஓட்டங்களுடனும் ரெவ் மெக்மிலன் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் தியோ வில்லி 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

267 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 9.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் மின்னல் காரணமாக பிற்பகல் 2.45 மணியளவில் மத்தியஸ்தர்கள் ஆட்டத்தை இடைநிறுத்தினர். 

மின்னல் தொடர்ந்ததாலும் பிற்பகல் 3.50 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்ததாலும் ஆட்டம் தொடர்ந்து தடைப்பட்டது.

பிற்பகல் 5.10 மணி அளவில் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 24 ஓவர்களில் 215 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது.

ஆனால், இங்கிலாந்து 16.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 110 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் சார்லி அலிசன் (26), அணித் தலைவர் பென் மெக்கின்னி (22) ஆகிய இருவரே 20  ஓட்டங்களுக்கு   மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் கெலம் விட்லர் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராவ் மெக்மிலன் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தென் ஆபிரிக்கா 9 விக்கெட்களால் வெற்றி

பொச்சேஸ்ட்ரூம், சென்வென் பார்க் அரங்கில் நடைபெற்ற இதே குழுவுக்கான மற்றொரு போட்டியில் ஸிம்பாப்வேயை 9 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது.

download.jpg

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 29.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது.

ரோனக் பட்டேல் 32 ஓட்டங்களையும் ரெயான் கம்வெம்பா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் க்வெனா மெப்ஹக்கா 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ட்ரைஸ்டன் லுஸ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 13.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

லிஹுவான் ட்ரே ப்ரிட்டோரியஸ் 53 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்டோக் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் 5 விக்கெட்களால் வெற்றி

புளூம்பொன்டெய்ன், மங்குவாங் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாம் குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் 6 போட்டியில் நேபாளத்தை 5 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிகொண்டது.

download__2_.jpg

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பிஷால் பிக்ரம் கே.சி. 48 ஓட்டங்களையும் அணித் தலைவர் தேவ் கணல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரொஹானத் தௌல்லா போசன் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷெய்க் பாவெஸ் ஜிபொன் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 25.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் ஆரிபுல் இஸ்லாம் ஆட்டம் இழக்காமல் 59 ஓட்டங்களையும் ஜிஷான் அலாம் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சுபாஷ் பண்டாரி 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/175280

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்வுகளுக்கு நன்றி ஏராளன் ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென் ஆபிரிக்காவிடம் தோல்வி அடைந்த இலங்கை 19இன் கீழ் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது

03 FEB, 2024 | 10:03 AM
image

(நெவில் அன்தனி)

பொச்சேஸ்ட்ரூம், சென்வெஸ் பார்க் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான சுப்பர் 6 போட்டியில் வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவிடம் 119 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்தப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் அரை இறுதியில் விளையாட தென் ஆபிரிக்கா தகுதிபெற்றுக்கொண்டது.

அப் போட்டியில் தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 233 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 23.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.

ஷாருஜன் சண்முகநாதன் ஓரளவு தாக்குப் பிடித்து 4 பவுண்டறிகளுடன் அதிகப்பட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைவிட  மல்ஷா  தருப்பதி (21), டினுர கலுபஹன (19), ஹிரான் கப்புருபண்டார (16) ஆகிய மூவரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் குவேனா மஃபாக்கா 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.

மஃபாக்காவுக்கு பக்கபலமாக பந்துவீசிய ரைலி நோட்டன் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெடகளைக் கைபற்றினார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 232 ஓட்டங்களைக் குவித்தது.

தென் ஆபிரிக்கா 27 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால் அடுத்த 23 ஓவர்களில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 2 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 232 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது.

ஸ்டீவ் ஸ்டோக்குடன் 52 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த லுவான் ட்ரே ப்ரிட்டோரியஸ், 2ஆவது  விக்கெட்டில் மேலும் 40 ஓட்டங்களை டேவிட் டீஜருடன் பகிர்ந்தார்.

லுவான் ட்ரே ப்ரிட்டோரியஸ் 71 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்டோக் 22 ஓட்டங்களையும் டேவிட் டீஜர் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

22ஆவது ஓவரில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றிருந்த தென் ஆபிரிக்கா அதன் பின்னர் மேலும் 3 விக்கெட்களை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

ஆனால், இந்திய வம்சாவளி ரொமாஷன் பிள்ளையுடன் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரைலி நோட்டன் 49 ஓட்டங்ளைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டார்.

பிள்ளை 27 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து  ட்ரைஸ்டன் லூஸ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (198 - 8 விக்.)

அதன் பின்னர் ரைலி நோட்டன், நிக்கோபானி மொக்கோயினா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பகிரந்து தமது அணியைப் பலப்படுத்தினர்.

நோட்டன் 41 ஓட்டங்களுடனும் மொக்கோயினா 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் சுப்புன் வடுகே, மல்ஷா தருப்பதி, விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

Lhuan-Dre_Pretorius_of_South_Africa_play

Sharujan_Shanmuganathan_of_Sri_Lanka_pla

https://www.virakesari.lk/article/175428

  • கருத்துக்கள உறவுகள்
Posted

19 வயதின் கீழ் உலகக் கிண்ண அரை இறுதிகளில் தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா

03 FEB, 2024 | 12:44 PM
image
 

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் அரை இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. 

download.jpg

பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இன்றைய போட்டி முடிவு அரை இறுதிக்கு தகுதி பெறும் நான்காவது அணியைத் தீர்மானிக்கும்.

பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆம் குழுவுக்கான சுப்பர் 6 போட்டியில் இலங்கையை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் மூலம் தென் ஆபிரிக்கா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகதி பெற்றது.

மழையினால் ஆட்டம் கைவிடப்பட அரை இறுதிக்கு ஆஸி. முன்னேறியது

கிம்பர்லியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இதே குழுவுக்கான சுப்பர் 6 போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா 7 புள்ளிகளைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது.

download__1_.jpg

சாம் கொன்ஸ்டாஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 108 ஓட்டங்களைப் பெற்றதுடன் அடுத்தபடியான அதிகபட்ச 29 ஓட்டங்களை ரெவ் மெக்மிலன் பெற்றார்.

பந்துவீச்சில் நேதன் எட்வேர்ட் 32 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இசய் தோன் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

228 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 4.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 24  ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

download__2_.jpg

இந்த சுற்றுப் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி வந்த மேற்கிந்தியத் தீவுகளின் பயணம் பெரும் ஏமாற்றத்துடன் முடிவுக்கு வந்தது.

எனினும் தங்களுக்கு உற்சாகமூட்டிய இரசிகர்களுக்கு மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் மைதானத்தைச் சுற்றிச் சென்று கைகளை அசைத்து நன்றிகளை வெளியிட்டனர்.

நேபாளத்துடனான சுப்பர் 6 போட்டியில் இந்தியாவுக்கு இலகுவான வெற்றி

புளூம்பொன்டெய்னில் நடைபெற்ற முதலாம் குழுவுக்கான சுப்பர் 6 போட்டியில் நேபாளத்தை 132 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிகொண்ட இந்தியா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

அணித் தலைவர் உதய் சஹாரன், சச்சின் தாஸ் ஆகியோர் அபார சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு 215 ஓட்டங்களும் சௌமி பாண்டேயின் துல்லியமான பந்துவிச்சும் இந்தியாவை இலகுவாக வெற்றிபெறச்செய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்களைக் குவித்தது.

14 ஓவர்கள் நிறைவில் இந்தியா 3 விக்கெட்களை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

download__4_.jpg

எனினும், உதய் சஹாரன், சச்சின் தாஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 215 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் சகல விக்கெட்களுக்குமான அதிசிறந்த இணைப்பாட்டமாக இது அமைந்தது.

download__3_.jpg

சச்சின் தாஸ் 101 பந்துகளில் 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 116 ஓட்டங்களையும் உதய் சஹாரன் 107 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 100 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் குல்சான் ஜா 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 50 ஓவர்களையும்  தாக்குப் பிடித்து 9 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில்  அணித் தலைவர் தேவ் கணல் (33), 10ஆம் இலக்க வீரர் துர்கேஷ் குப்தா (29 ஆ.இ.), அர்ஜுன் குமல் (26), தீப்பக் பொஹாரா (22) ஆகிய நால்வரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் சௌமி பாண்டே 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அர்ஷின் குல்கர்னி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/175446

  • கருத்துக்கள உறவுகள்
Posted

19 வயதுக்குக் கீழ் உலகக் கிண்ண அரை இறுதியில் பாகிஸ்தான்

04 FEB, 2024 | 10:29 AM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு கடைசி அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுக்கொண்டது.

பெனோனி, விலோமூர் பார்க் விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை (03) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 1ஆம் குழுவுக்கான சுப்பர் 6 லீக் போட்டியில் பங்களாதேஷை 5 ஓட்டங்களால் வெற்றிகொண்டதன் மூலம் பாகிஸ்தான் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று கூறமுடியாத அளவுக்கு இரண்டு அணிகளும் மாறி மாறி ஆட்டத்தின் பிடியை தத்தமது பக்கம் திருப்பிக்கொண்டிருந்தன.

download.png

ரொஹானத் தௌல்லா போசன், ஷெய்க் பாவெஸ் ஜிபொன் ஆகிய இருவரும் தலா 24 ஓட்டங்களுக்கு தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றி பாகிஸ்தானை 40.4 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.

எனினும் உபைத் ஷா 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்து பங்களாதேஷை 150 ஓட்டங்களுக்கு கட்டுப்பத்தி பாகிஸ்தான் வெற்றிபெறுவதை உறுதிசெய்தார்.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் அரபாத் மின்ஹாஸ் 34 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் ஷாஸெய்ப் கான் 26 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 35.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

மொஹமத் ஷிஹாப் ஜமெஸ் 26 ஓட்டங்களையும் 10ஆம் இலக்க வீரர் ரொஹானத் தௌல்லா போசன் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் சௌதர் மொஹமத் ரிஸ்வான் 20 ஒட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் உபைத் ஷா 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அலி ராஸா 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

நியூஸிலாந்தை அசத்தியது அயர்லாந்து

நியூஸிலாந்துக்கு எதிராக புளூம்பொன்டெய்னில் இன்று நடைபெற்ற முதலாம் குழுவுக்கான சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்திய அயர்லாந்து, 41 ஓட்டங்களால் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் வெற்றிபெற்றது.

அயர்லாந்து முதலாவதாகத் துடுப்பெடுத்தாடி 50 ஒவர்களில் 9 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைக் குவித்தது.

download__1_.jpg

கெவின் ரூஸ்டன் 82 ஓட்டங்களையும் கியான் ஹில்டன் 72 ஓட்டங்களையும் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து அயர்லாந்து அணியை பலப்படுத்தினர்.

அயர்லாந்துக்கு 38 ஓட்டங்கள் உதிரிகளாக கிடைத்தமை அதன் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது.

பந்துவீச்சில் இவெய்த் ஷ்ரூடர் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 35.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டத்தை தொடரமுடியாமல் போனது.

download.jpg

வெற்றி அணியைத் தீர்மானிக்க டக்வேர்த் லூயிஸ் றைமை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நியூஸிலாந்தின் வெற்றி இலக்கு 173 ஓட்டங்களாக இருந்தது. இதன் காரணமாக நியூஸிலாந்து 31 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

ஜேம்ஸ் நெல்சன் 34 ஒட்டங்களையும் லெச்சியன் ஸ்டெக்பூல் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இங்கிலாந்துக்கு இலகுவான வெற்றி

பொச்சேஸ்ட்ரூமில் நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான சுப்பர் 6 போட்டியில் ஸிம்பாப்வேயை 146 ஓட்டங்களால் இங்கிலாந்து இலகுவாக வெற்றிகொண்டது.

இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 237 ஓட்டங்களைக் குவித்தது.

download__2_.jpg

சார்லி அலிசன் 76 ஓட்டங்களையும் தியோ வில்லி 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 24.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

தஸீம் சௌத்ரி அலி 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வருட 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இதுவே அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.

https://www.virakesari.lk/article/175500

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/1/2024 at 14:25, நியாயம் said:

இந்த கோப்பையில் முதல் நான்கு இடங்களை எந்த அணிகள் பெறலாம் @பையன்26?

நான் சொன்ன‌ 4ங்கு அணிக‌ளில் 
மூன்று அணிக‌ள் சிமி பின‌லுக்கு வ‌ந்திட்டின‌ம்.......

இந்தியா
பாக்கிஸ்தான்
தென் ஆபிரிக்கா?

நான் இங்லாந்தை சொன்னேன் ஆனால் அவுஸ்ரேலியா சிமி பின‌லுக்கு வ‌ந்துட்டு அண்ணா😁...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் வ‌ந்த‌தும் வீக்கேட்டை ப‌றி கொடுக்கின‌ம் அது தான் அவ‌ர்க‌ளால் சிமி பின‌லுக்கு வ‌ர‌ முடிய‌ வில்லை............ இர‌ண்டு பெரிய‌ வெற்றிய‌ கோட்ட‌ விட்ட‌வை அந்த‌ இர‌ண்டு அந்த‌ இர‌ண்டு ம‌ச்சையும் வென்று இருக்க‌னும் சிமி பின‌லுக்கு வ‌ர‌ வாய்ப்பு இருந்த‌து...............

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாவது அரை இறுதியில் நடப்பு சம்பியன் இந்தியா - வரவேற்பு நாடு தென் ஆபிரிக்கா

06 FEB, 2024 | 01:02 PM
image

(நெவில் அன்தனி)

பதினைந்தாவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் முதலாவது அணியைத் தீர்மானிக்கும் நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ளது.

india_vs_south_africa_u19_wc_1st_semi.jp

இந்தப் போட்டி தென் ஆபிரிக்காவின் பெனோனி, விலோமுவர் பார்க் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி 16 தினங்களில் 38 ஆட்டங்கள் விளையாடப்பட்ட நிலையில் அடுத்த உலக சம்பியன் யார் என்பதற்கான போட்டியில் இந்தியா, தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளே எஞ்சியுள்ளன.

Musheer_Khan_of_India_celebrates_a_centu

இந்த நான்கு அணிகளில் இந்தியா முழு சுற்றப் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் 3 ஆட்டங்களில் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

சுற்றுப் போட்டியின் ஆரம்பத்திலிருந்து துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் இந்தியா தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்திவந்துள்ளது.

இந்தியாவின் முஷீர் கான் (2), சச்சின் தாஸ், அர்ஷின் குல்கர்னி, அணித் தலைவர் உதய் சஹாரன் ஆகியோர் சதங்கள் குவித்து துடுப்பாட்டத்தில் அசத்தியுள்ளனர்.

saumy_pandey_india.jpg

பந்துவீச்சில் சௌமி பாண்டே 16 விக்கெட்களையும் நாமன் திவாரி 9 விக்கெட்களையும் கைப்பற்றி இந்திய பந்துவீச்சாளர்களில் முன்னிலையில் உள்ளனர்.

எவ்வாறாயினும் தென் ஆபிரிக்காவின் அதிசிறந்த வேகப்பந்து வீச்சைப் போன்று வேறு எந்த அணியிடமும் இந்தியா எதிர்கொள்ளவில்லை.

தென் ஆபிரிக்காவின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கிவேனா மஃபாக்கா இந்த சுற்றுப் போட்டியில் மூன்று தடவைகள் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்து மொத்தமாக 18 விக்கெட்களைக் கைப்பற்றி எதிரணிகளை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Kwena_Maphaka_of_South_Africa_in_bowling

எவ்வாறாயினும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மும்முனை கிரிக்கெட் தொடரில் கிவேனா மஃபாக்காவை இந்திய துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டிருந்ததை இங்கு நினைவுபடுத்தவேண்டும்.

மறுபகத்தில் தென் ஆபிரிக்காவும் இதுவரை திறமையாகவே விளையாடி வந்துள்ளது. ஸ்டீவ் ஸ்டோக், லுவான் ட்றே ப்ரிட்டோரியஸ் மற்றும் டெவன் மராயஸ், டேவிட் டீஜர் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடிவந்துள்ளனர்.

கிவேனா மஃபாக்காவைவிட ரைலி நோட்டனும் சிறப்பாக பந்துவீசி 11 விக்கெடகளைக் கைப்பற்றியுள்ளார்.

குழுநிலை போட்டிகளுக்கான சுற்றில் இங்கிலாந்திடம் மாத்திரம் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா மற்றெல்லா போட்டிகளிலும் எதிரணிகளை வெற்றிகொண்டிருந்தது.

Riley_Norton_of_South_Africa_looks_on_as

இரண்டு அணிகளிலும் திறமையான துடுப்பாட்ட வீரர்களும் பந்துவீச்சாளர்களும் இடம்பெறுவதால் விலோமுவர் பார்க்கில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டி இரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என்பது நிச்சயம்.

அணிகள்

இந்தியா: ஆதர்ஷ் சிங், அர்ஷில் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (தலைவர்), ப்ரியன்ஷு மோலியா, சச்சின் தாஸ், அராவெல்லி அவனிஷ், முருகன் அபிஷேக், நாமன் திவாரி, ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே.

தென் ஆபிரிக்கா: லுவான் ட்ரே ப்ரிட்டோரியஸ், ஸ்டீவ் ஸ்டோக், டேவிட் டீஜர், ரிச்சர்ட் செலெட்ஸ்வேன், டெவன் மராயஸ், ரொமாஷன் பிள்ளை, யுவான் ஜேம்ஸ் (தலைவர்), ரைலி நோட்டன், ட்ரைஸ்டன் லூஸ், நிக்கோபானி மோக்கெனா,  கிவேனா   மஃபாக்கா.

https://www.virakesari.lk/article/175680

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென் ஆபிரிக்காவை வென்று

இந்தியா பின‌லில்...............

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவை வீழ்த்தி 9ஆவது தடவையாக இறுதிக்குள் நுழைந்தது இந்தியா

Published By: VISHNU  07 FEB, 2024 | 01:37 AM

image

(நெவில் அன்தனி)

பெனோனி, விலோமுவர் பார்க் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற மிகவும் பரபரப்பான அரை இறுதிப் போட்டியில் வரவேற்பு நாடான தென் ஆபிரிக்காவை 2 விக்கெட்களால் வெற்றிகொண்ட நடப்பு சம்பியன் இந்தியா, 9ஆவது தடவையாக 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 248 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 7 பந்துகள் மீதம் இருக்க 8 விக்கெட்களை இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.

15ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் தனது முன்னைய 5 போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடி இலகுவான வெற்றிகளை ஈட்டிய இந்தியா, அரை இறுதியில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைவதற்கு முன்னர் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

12ஆவது ஓவரில் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 32 ஓட்டங்களாக இருந்தபோது  இந்தியாவின் 4ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டது.

ஆரம்ப வீரர் ஆதர்ஷ் சிங் ஓட்டம் பெறாமலும் இதற்கு முன்னர் 2 சதங்களைக் குவித்த முஷீர் கான் 4 ஓட்டங்களுடனும் அர்ஷின் குல்கர்னி 12 ஓட்டங்களுடனும் ப்ரியன்ஷு மோலியா 5 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

முதல் விக்கெட்டை கிவேனா மஃபாக்கா வீழ்த்த அடுத்த 3 விக்கெட்களையும் ட்ரைஸ்டன் லூஸ் கைப்பற்றினார்.

முதல் நான்கு விக்கெட்கள் குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு வீழ்ந்ததால் இந்தியாவின் வெற்றி நடைக்கு தென் ஆபிரிக்கா முற்றுப் புள்ளி வைத்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.

Sachin_Dhas_of_India_plays_a_shot.jpg

ஆனால், அணித் தலைவர் சாஹரனும் சச்சின் தாஸும் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 171 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர்.

அவர்களது இணைப்பாட்டம் இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 5ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிராக 2019இல் குல்னாவில் நடைபெற்ற இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷின் தௌஹித் ரிதோய், ஷமிம் ஹொசெய்ன ஆகிய இருவரும் பகிர்ந்த 161 ஓட்டங்களே 5ஆவது விக்கெட்டுக்கான சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சச்சின் தாஸ் 95 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 96 ஓட்டங்களைப் பெற்று மஃபாக்காவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்ததும் இந்தியா மீண்டும் ஆட்டம் காணத் தொடங்கியது.

சச்சின் தாஸ் உட்பட மேலும் இருவர் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (227 - 7 விக்.)

uday_saharan_...jpg

எனினும் உதய் சாஹரன் 81 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு தேவைப்பட்ட ஒரு ஓட்டத்தை அவசரமாக எடுக்க முயற்சித்தபோது ரன் அவுட் ஆனார். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய அவர் 124 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகளை மாத்திரம் அடித்திருந்தார்.

எனினும் அடுத்த பந்தில் ராஜ் லிம்பானி பவுண்டறி ஒன்றை விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார். அவர் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்திய 18 வயதை அண்மிக்கும்  கிவேனா   மஃபாக்கா தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 6 போட்டிகளில் 21ஆக உயர்த்திக்கொண்டார்.

அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய ட்ரைஸ்டன் லூஸ் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 50 ஓவரகளில் 7 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது.

மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் ஸ்டீவ் ஸ்டோக் 17 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார். அடுத்த களம் புகுந்த டேவிட் டீஜர் 2ஆவது விக்கெட்டில் 23 ஓட்டங்கள் பகிரப்படுவதற்கு  உதவிய போதிலும் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

lhuan_dre_pretorius.png

இதனைத் தொடர்ந்து லுவான் ட்ரே ப்ரிட்டோரியஸ், ரிச்சர்ட் செலெட்ஸ்வேன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் மொத்த எண்ணிக்கையை 118 ஓட்டங்களாக உயர்த்தினர்.

அதுவரை சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ட்ரே ப்ரிட்டோரியஸ் 76 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து செலெட்ஸ்வேனும் ஒலிவர் வைட்ஹெட்டும் 4ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது வைட்ஹெட் 22  ஓட்டங்களுடன்  ஆட்டம் இழந்தார்.

டெவன் மராயஸ் 3 ஓட்டங்களுடன் 5ஆவதாக ஆட்டம் இழக்க தென் ஆபிரிக்காவின் மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு மீண்டும் நம்பிக்கை ஊட்டும் வகையில் அணித் தலைவர் யுவான் ஜேம்ஸுடன் மேலும் ஒரு இணைப்பாட்டத்தை செலெட்ஸ்வேன் ஏற்படுத்தினார்.

RICHAR_1.JPG

ஆனால் அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது மிகவும் அவசியமான செலெட்ஸ்வேனின் விக்கெட்டை திவாரி வீழ்த்தினார். செலெட்ஸ்வேன் 100 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 64 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து யுவான் ஜேம்ஸ் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (224 - 7 விக்.)

ட்ரைஸ்டன் லூஸ் 12 பந்துகளில் 2 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறி உட்பட 23 ஓட்டங்களுடனும் ரைலி நோட்டன் 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ராஜ் லிம்பானி 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் முஷீர் கான் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: உதய் சாஹரன்.

https://www.virakesari.lk/article/175757

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 2ஆவது அரை இறுதிப் போட்டி இன்று

08 FEB, 2024 | 12:55 PM
image

(நெவில் அன்தனி)

பதினைந்தாவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆவது அரை இறுதிப் போட்டி பெனோனி, விலோமுவர் பார்க் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (08) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

aus_vs_pak_semi.jpg

இதுவரை தோல்வி அடையாமல் இருக்கும் இந்த இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொள்ளும் எனவும் இறுதிவரை எந்த அணி வெற்றிபெறும் என அனுமாணிப்பது கடினம் எனவும் கூறப்படுகிறது.

லீக் மற்றும் சுப்பர் சிக்ஸ் சுற்றுகளில் இந்த இரண்டு அணிகளும் இங்கிலாந்து, நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகளை வெற்றிகொண்டிருந்தன.

சுப்பர் 6 சுற்றில் அவுஸ்திரேலியா எவ்வித சவலையும் எதிர்கொள்ளாதபோதிலும் அயர்லாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகளிடம் பாகிஸ்தான் பெரும் சவாலை எதிர்கொண்டே வெற்றிபெற்றிருந்தது.

download.jpg

அவுஸ்திரேலியா சார்பாக அணித் தலைவர் ஹியூ வெய்ப்ஜென்  5 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 252 ஓட்டங்களையும் ஹெரி டிக்சன் 217 ஓட்டங்களையும் சாம் கொன்ஸ்டாஸ் ஒரு சதத்துடன் 177 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளனர்.

பந்துவீச்சில் கெலம் விட்லர் 11 விக்கெட்களையும் மஹ்லி பியட்மன், டொம் ஸ்ட்ரேக்கர் ஆகிய இருவரும் தலா 6 விக்கெட்களையும்  கைப்பற்றியுள்ளனர்.

download__1_.jpg

ஷாஸெய்ப் கான் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 260 ஓட்டங்களையும் ஷரில் ஹுசெய்ன் 134 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தான் சார்பாக துடுப்பாட்டத்தில் முன்னிலையில் இருக்கின்றனர்.

பந்துவீச்சில் உபெய்த் ஷா 17 விக்கெட்களையும் அரபாத் மின்ஹாஸ், மொஹமத் ஸீஷான் ஆகியோர் தலா 6 விக்கெட்களையும் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/175882

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Pakistan Under-19s FlagPakistan Under-19s      179
Australia Under-19s FlagAustralia Under-19s   (45/50 ov, T:180) 164/7

Aust U19 need 16 runs in 30 balls.

Current RR: 3.64

 • Required RR: 3.20

 • Last 5 ov (RR): 13/1 (2.60)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரபரப்புக்கு மத்தியில் பாகிஸ்தானை வெற்றிகொண்டு இறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

Published By: VISHNU   09 FEB, 2024 | 12:54 PM

image

(நெவில் அன்தனி)

பெனோனி, விலோமுவர் பார்க் விளையாட்டரங்கில் குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்டதும் கடுமையாக மோதிக்கொள்ளப்பட்டு பரபரப்பான முடிவைத் தந்ததுமான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதிப் போட்டியில் 5 பந்துகள் மீதமிருக்க ஒரு விக்கெட்டினால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட அவுஸ்திரேலியா தகுதிபெற்றது.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் 3 தடவைகள் சம்பியனான அவுஸ்திரேலியா 6ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

டொம் ஸ்ட்ரேக்கரின் துல்லியமான பந்துவீச்சு பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது மத்திய வரிசையில் ஏற்படுத்தப்பட்ட இரண்டு இணைப்பாட்டங்கள், பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் பகிரப்பட்ட 17 ஓட்டங்கள் என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தன.

இந்த இணைப்பாட்டங்களில் ஆரம்ப வீரர் ஹெரி டிக்சன், ஒலிவர் பீக், டொம் கெம்பெல், ரஃபாயல் மெக்மிலன், கடைசி இலக்க வீரர் கெலம் விட்லர் ஆகியோர் பங்காற்றியிருந்தனர்.

அது மட்டுமல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பாகிஸ்தான் குறிப்பிட்ட ஓவர்களை வீசத் தவறியதால் கடைசி ஓவரில் 30 யார் வட்டத்துக்கு வெளியே 4 வீரர்களை மட்டும் களத்தடுப்பில் ஈடுபடுத்த நேரிட்டது அதன் தோல்விக்கு காரணமாக அமைந்து.

0802_tom_straker_aus_vs_pak_2nd_semi.jpg

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 180 ஓட்டங்கள் என்ற சுமாரான  வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49.1 ஓவர்களில் ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஹெரி டிக்சன், சாம் கொன்ஸ்டாஸ் ஆகிய இருவரும் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், சாம் கொன்ஸ்டாஸ் 14 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் மேலும் 3 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. (16.3 ஓவர்கள், 59 - 4 விக்.)

ஒரு பக்கத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஆரம்ப வீரர் ஹெரி டிக்சனுடன் ஜோடி சேர்ந்த ஒலிவர் பீக் 5 ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

ஹெரி டிக்சன் 75 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்று 5ஆவதாக ஆட்டம் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து ஒலிவர் பீக், டொம் கெம்பெல் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு மேலும் நம்பிக்கையை ஊட்டினர்.

அதன் பின்னர் மீண்டும் விக்கெட்கள் சரியத் தொடங்கின.

டொம் கெம்பல் (25), ஒலிவர் பீக் (49), டொம் ஸ்ட்ரேக்கர் (3), மஹ்லி ப்றட்மன் (0) ஆகிய நால்வரும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (164 - 6 விக்.)

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நான்கு ஓவர்கள் (24 பந்துகள்) மீதமிருக்க, போட்டியில் வெற்றிபெறுவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு 16 ஓட்டங்களும் பாகிஸ்தானுக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது.

CALLUM_1.JPG

கடைசி விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரஃபாயல் மெக்மிலனும் கெலம் விட்லரும் வெற்றியை மாத்திரம் குறிவைத்து பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவின் வெற்றியையும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதையும் உறுதிசெய்தனர்.

மெக்மிலன் 19 ஓட்டங்களுடனும் விட்லர் 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

0802_aus_win_by_1_wkt.jpg

பந்துவீச்சில் அலி ராஸா 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அரபாத் மின்ஹாஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் 28 ஓவர்கள்  நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

AZANAW_1.JPG

எனினும் அரைச் சதங்களைப் பெற்ற அஸான் அவய்ஸ், அரபாத் மின்ஹாஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர்.

அதனைத் தொடர்ந்து நவீத் அஹ்மத் கானுடன் 7ஆவது விக்கெட்டில் மேலும் 31 ஓட்டங்களைப் பகிர்ந்த அரபாத் மின்ஹாஸ் 8ஆவதாக ஆட்டம் இழந்தார்.

அஸான் அவய்ஸ் 91 பந்துகளில் 51 ஓட்டங்களையும் அரபாத் மின்ஹாஸ் 61 பந்துகளில் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

TOMSTR_1.JPG

அவர்களைவிட ஆரம்ப வீரர் ஷமில் ஹுசெய்ன்  (17) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கையில் 20 உதிரிகளே 3ஆவது அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

பந்துவீச்சில் டொம் ஸ்ட்ரேக்கர் 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். 

ஆட்டநாயகன்: டொம் ஸ்ட்ரேக்கர்

https://www.virakesari.lk/article/175933

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட அணியைத் தொடர்ந்து இந்தியாவை வீழ்த்திய இளையோர் அணியும் உலக சம்பியனானது

Published By: VISHNU    11 FEB, 2024 | 10:57 PM

image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவந்த ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடையாத அணியாக அவுஸ்திரேலியா சம்பியனானது.

aus_champions_individual_photos.jpg

இந்தியாவுக்கு எதிராக பெனோனி, விலோமுவர் பார்க் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை 79 ஓட்டங்களால் வெற்றிகொண்டு 4ஆவது தடவையாக அவுஸ்திரேலியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

aus_u_19_world_champions_...jpg

இதன் மூலம் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் சிரேஷ்ட அணியைத் தொடர்ந்து இப்போது இளையோர் அணியும் சம்பியனாகியுள்ளது.

இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளிலும் இந்தியாவை அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அஹமதாபாத்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண (சிரேஷ்ட பிரிவினர்) இறுதிப் போட்டியில் இந்தியாவை அவுஸ்திரேலியா 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு உலக சம்பியனாகியிருந்தது.

kvena_maphaka_man_of_the_tournament.jpg

இந்திய வம்சாவளி ஹர்ஜாஸ் சிங் குவித்த அரைச் சதம், ஹெரி டிக்சன், அணித் தலைவர் ஹியூ வெய்ஜென், ஒலிவர் பீக் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்கள், மஹ்லி பியர்ட்மன், ரபாயல் மெக்மிலன் ஆகியோரது திறமையான பந்துவீச்சுகள் என்பன அவுஸ்திரேலியா உலக சம்பியனாவதற்கு உதவின.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 254 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 43.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடந்தது.

இந்திய துடுப்பாட்ட வீரர்கள் தவறான அடி தெரிவுகளால் விக்கெட்களைத் தாரைவார்த்தது அதன் தோல்விக்கு காரமணாக அடைந்தது.

இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 200 ஓட்டங்களுக்குள் இந்தியாவின் சகல விக்கெட்களும் வீழ்த்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும். அந்தப் பெருமையை அவுஸ்திரேலியா தனதாக்கிக்கொண்டது.

இந்திய துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

மொத்த எண்ணிக்கை 3 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப விக்கெட்டை இந்தியா இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

எனினும், ஆதர்ஷ் சிங் (47), முஷீர் கான் (22) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த இந்தியா 31ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் முருகன் அபிஷேக், நாமன் திவாரி ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை சற்று கௌரவமான நிலையில் இட்டனர்.

இறுதிப் போட்டியில் இந்த இணைப்பாட்டமே இந்திய இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

முருகன் அபிஷேக் 42 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தார். நாமன் திவாரி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மஹ்லி பியர்ட்மன் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரபாயல் மெக்மிலன் 43 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்களையும்  கெலம் விட்லர் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீரமானித்த அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது.

லீக் சுற்று மற்றும் சுப்பர் சுற்று ஆகியவற்றில் எதிரணிகளை 200 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய இந்தியா அரை இறுதியிலும் இறுதிப் போட்டியிலுமே எதிரணிகளுக்கு 200 ஓட்டங்களுக்கு மேல் கொடுத்தது.

ஆரம்ப வீரர் சாம் கொன்ஸ்டாஸ் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தபோதிலும் மற்றைய ஆரம்ப வீரர் ஹெரி டிக்சன், 3ஆம் இலக்க வீரர் அணித் தலைவர் ஹியூ வெய்ஜென் ஆகிய இருவரும் 2வது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர்.

ஹெரி டிக்சன் 42 ஓட்டங்களையும் ஹியூ வெய்ஜென் 48 ஓட்டங்களையும் பெற்று 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

எனினும், ஹர்ஜாஸ் சிங், ரெயான் ஹிக்ஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

இந்திய வம்சாவளியா ஹர்ஜாஸ் சிங் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 55 ஓட்டங்களைப் பெற்றார். ரெயான் ஹிக்ஸ் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைத் தொடர்ந்து மத்திய வரிசையில் ஒலிவர் பீக் ஆட்டம் இழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ராஜ் லிம்பானி 38 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்களையும்   நாமன் திவாரி 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

aus_man_of_the_match.jpg

ஆட்ட நாயகன்: மஹ்லி பியர்ட்மன்

தொடர்நாயகன்: க்வேனா பஃபாக்கா (21 விக்கெட்கள்)

https://www.virakesari.lk/article/176138

  • கருத்துக்கள உறவுகள்
Posted

19 வயதின் கீழ் உலகக் கிண்ண போட்டியில்; இனங்காணப்பட்ட எதிர்கால நட்சத்திரங்கள் (பகுதி 1 - பந்துவீச்சாளர்கள்)

Published By: VISHNU   12 FEB, 2024 | 09:55 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எதிர்கால நட்சத்திரங்களுக்கான ஒரு பரீட்சைக் களமாக அமைந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சில வீரர்களின் ஆற்றல்கள் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது.

பந்துவீசசில் 6 வீரர்களும் துடுப்பாட்டத்தில் 5 வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுதல்களைப் பெற்றனர்.

அவர்களில் தென் ஆபிரிக்காவின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் க்வேனா மஃபாக்கா மற்றெல்லா வீரர்களையும் விட உயர்ந்து நின்றார்.

1_kwena_maphaka_south_africa.png

க்வேனா மஃபாக்கா 21 விக்கெட்கள்

இந்த வருடத்தில் 6 போட்டிகளில் விளையாடிய க்வேனா மஃபாக்கா, மூன்று 5 விக்கெட் குவியல்கள் அடங்கலாக 21 விக்கெட்களைக் கைப்பற்றி 15ஆவது 19 வயதுக்குட்பட்ட  உலகக் கிண்ண  அத்தியாயத்தில் சுற்றுப் போட்டி நாயகன் விருதை வென்றெடுத்தார்.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில்  2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய 22 விக்கெட்களை வீழ்த்தியவர் பங்களாதேஷின் எனாமுல் ஹக் ஜூனியர் ஆவார்.  

எவ்வாறாயினும் மூன்று 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்த  முதலாவது வீரர் என்ற சாதனைக்கு 17 வயதான மஃபாக்கா சொந்தக்காரரானார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கரிபியன் தீவுகளில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் 15 வயது வீரராக அறிமுகமான மஃபாக்கா, 3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

இதற்கு அமைய 2 உலகக் கிண்ண அத்தியாங்களில் மொத்தமாக 28 விக்கெட்களை வீழ்த்தி ஸிம்பாப்வேயின் வெஸ்லி மதேவியருடன் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் சமநிலையில் இருக்கிறார்.

2_ubaid_shah_pakistan.png

உபைத் ஷா, சௌமி பாண்டே (தலா 18 விக்கெட்கள்)

க்வேனா மஃபாவுக்கு அடுத்த படியாக 2024 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பாகிஸ்தானின் உபைத் ஷாவும் இந்தியாவின் சௌமி பாண்டேயும் ஆவர்.  உபைத் ஷா   பாகிஸ்தான் வீரர் நயீம் ஷாவின் இளைய சகோதரர் ஆவார்.

3_saumy_panday_india.png

அவர்கள் இருவரும் தலா 18 விக்கெட்களை வீழ்த்தினர். உபைத் ஷா வேகப்பந்துவீச்சாளர் ஆவார். ஆனால் சௌமி பாண்டே சுழல்பந்துவீச்சாளர் ஆவார்.

உபைத் ஷா ஒரு 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததுடன் பாண்டே மூன்று 4 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்தார்.

4_thassem_chaudry_ali_england.png

தசீம் சௌத்ரி அலி, கெலம் விட்லர் (தலா 14 விக்கெட்கள்)

இங்கிலாந்தின் சுழல்பந்துவீச்சாளர் தசீம் சௌத்ரி அலி 4 போட்டிகளில் 14 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார். அவர் ஸிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதுவே இம்முறை பந்துவீச்சாளர் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி ஆகும்.

அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் கெலம் விட்லர் 6 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்களை வீழ்த்தி திறமையை வெளிப்படுத்தியிருந்தார். தான் விளையாடிய 6 போட்டிகளிலும் எதிரணிகளுக்கு விட்லர் சிம்ம சொப்பணமாக திகழ்ந்தார்.

5_calum_vidler__left__and_tom_straker__r

டொம் ஸ்ட்ரேக்கர் 13 விக்கெட்கள்

அவுஸ்திரேலியாவின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் டொம் ஸ்ட்ரேக்கர் 13 விக்கெட்களை வீழ்த்தியதுட்ன கெலம் விட்லருக்கு பக்கபலமாக இருந்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியிருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான சுப்பர் 6 போட்டியில் 24 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை டொம் ஸ்ட்ரேக்கர் வீழ்த்தினார். அதுவே அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். அத்துடன் உலகக் கிண்ணப் போட்டியில் மூன்றாவது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக அது பதிவானது.

(அடுத்து பகுதி 2 துடுப்பாட்டம்)

https://www.virakesari.lk/article/176229

19 வயதின் கீழ் உலகக் கிண்ணப் போட்டியில்; இனங்காணப்பட்ட எதிர்கால நட்சத்திரங்கள் (பகுதி 2 - துடுப்பாட்ட வீரர்கள்)

Published By: VISHNU   12 FEB, 2024 | 10:02 PM

image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவந்த ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பல வீரர்கள் சதங்கள் குவித்து அசத்தியிருந்தனர்.

அவர்களில் ஐந்து வீரர்களே 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

இறுதிப் போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளைச் சேர்ந்த ஐவரே இந்த மைல்கல்லை எட்டினர். அவரக்ளில் மூவர் இந்தியர்கள், மற்றைய இருவரும் அவுஸ்திரேலியார்கள்.

1_uday_saharan.png

உதய் சஹாரன் 397 ஓட்டங்கள்

இந்திய அணித் தலைவர் உதய் சஹாரன் இம்முறை 7 போட்டிகளில் மொத்தமாக 397 ஓட்டங்களைப் பெற்று முன்னணியில் உள்ளார். அவர் ஒரு சதம் உட்பட 3 அரைச் சதங்களைக் குவித்து அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். அணியையும் சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.

2_musheer_khan.png

முஷீர் கான் 360 ஓட்டங்கள்

இந்தியாவின் மற்றொரு சிறந்த துடுப்பாட்டக்காரரான முஷீர் கான் 360 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். அவர் ஒருவரே இந்த உலகக் கிண்ணப் போட்டியில் 2 சதங்களைக் குவித்தவர் ஆவார். அத்துடன் ஒரு அரைச் சதத்தையும் அவர் பெற்றார். பந்துவீச்சிலும் 7 விக்கெட்களை வீழ்த்தி சகல துறை ஆட்டத்திறனை வெளிப்படுத்தியிருந்தார்.

3_harry_dixson.png

ஹெரி டிக்சன் 309 ஓட்டங்கள்

அவுஸ்திரேலி வீரர்களில் அதிக ஓட்டங்களைக் குவித்தனர். 7 போட்டிகளிலும் விளையாடிய அவர் 3 அரைச் சதங்களுடன் 309 ஓட்டங்களைப் பெற்றார். இதற்கு அமைய அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் 3ஆம் இடத்தில் உள்ளார்.

4_hugh_weigen.png

ஹியூ வெய்ஜென் 304 ஓட்டங்கள்

அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஹியூ வெய்ஜென் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடியதுடன் அணியையும் சிறப்பாக வழிநடத்தி தோல்வி அடையாத அணியாக உலக சம்பியனாக்கிய பெருமைக்கு உரித்தானார். அவர் 7 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 304 ஓட்டங்களைப் பெற்றார்.

5_sachin_das.png

சச்சின் தாஸ் 303 ஓட்டங்கள்

இந்தியா சார்பாக சதம் குவித்த மற்றொரு வீரர் சச்சின் தாஸ் ஆவார். சச்சின் தாஸ் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட 303 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார்.

https://www.virakesari.lk/article/176230

  • கருத்துக்கள உறவுகள்
Posted

19 வயதின் கீழ் உலகக் கிண்ண தெரிவு அணியில் நான்கு இந்தியர்கள்; அணித் தலைவர் ஹியூ வெய்ஜென்

Published By: VISHNU   13 FEB, 2024 | 12:09 AM

image

(என்.வீ.ஏ.)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவந்த ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களிலிருந்து தெரிவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 12 அணிகள் பங்குபற்றிய போதிலும் ஐசிசி தெரிவு அணியில் ஐந்து நாடுகளைக் கொண்ட வீரர்களே பெயரிடப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் 12ஆவது வீரராக ஸ்கொட்லாந்து வீரர் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

ஆறு துடுப்பாட்ட வீரர்கள், ஒரு சகலதுறை வீரர், 4 பந்துவீச்சாளர்கள் தெரிவு அணியில் இடம்பெறுகின்றனர்.

நான்கு இந்திய வீரர்கள் இடம்பெறும் தெரிவு அணிக்கு சம்பியனான அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஹியூ வெய்ஜென் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

ஐசிசியின் தெரிவு அணி துடுப்பாட்ட வரிசையில்:

லுவான் ட்றே ப்ரிட்டோரியஸ் (தென் ஆபிரிக்கா, விக்கெட் காப்பாளர் 287 ஓட்டங்கள்)

ஹெரி டிக்சன் (அவுஸ்திரேலியா, 309 ஓட்டங்கள்)

முஷீர் கான் (இந்தியா, 360 ஓட்டங்கள்)

ஹியூ வெய்ஜென் (அவுஸ்திரேலியா, தலைவர், 304 ஓட்டங்கள்)

உதய் சஹாரன் (இந்தியா, 397 ஓட்டங்கள்),

நேதன் எட்வேர்ட் (மே. தீவுகள், 101 ஓட்டங்கள், 11 விக்கெட்கள்)

கெலம் விட்லர் (அவுஸ்திரேலியா, 14 விக்கெட்கள்),

உபைத் ஷா (பாகிஸ்தான், 18 விக்கெட்கள்)

க்வேனா மஃபாக்கா (தென் ஆபிரிக்கா, 21 விக்கெட்கள்)

சௌமி பாண்டே (இந்தியா, 18 விக்கெட்கள்)

12ஆவது வீரர்: ஜெமி டன்க் (ஸ்கொட்லாந்து 263 ஓட்டங்கள்)

https://www.virakesari.lk/article/176234




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.