Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெஸ்ட் தொடர்: கும்ப்ளே சாதனையை முறியடித்து அஸ்வின் வரலாறு - இங்கிலாந்தை வெல்லுமா இந்தியா?

இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ராஞ்சியில் நடந்துவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இங்கிலாந்துக்கு அணி.

இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இலக்கின் கால்பகுதியை இந்திய அணி கடந்துவிட்டநிலையில் நாளை வெற்றி எளிதாகலாம். அதேநேரம் கடைசி 2 நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என்ற தகவலும், ஆட்டத்தை பரபரப்பாகக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

அதேசமயம், அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். உள்நாட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். இதுவரை எந்த இந்திய பந்துவீச்சாளரும் இதை முறியடிக்கவில்லை. ஆனால், அஸ்வின் தனது 5 விக்கெட் வீழ்த்தியபோது, உள்நாட்டில் நடந்த போட்டிகளில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து 350 விக்கெட்டுகளைக் கடந்து 354 விக்கெட்டுகளை எட்டி சாதனை படைத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியை 2-வது இன்னிங்ஸில் விரைவாக சுருட்டியதில் அஸ்வின், குல்தீப் யாதவ் பங்களிப்பு முக்கியமானது. இருவரும் சேர்ந்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 152 ரன்கள் தேவை. களத்தில் கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கெனவே இந்திய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வென்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி வெல்லும்பட்சத்தில் 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்துக்கு நகரும்.

 
டெஸ்ட் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆடுகளம் எப்படி?

ராஞ்சி ஆடுகளம் களி மண்ணால் அமைக்கப்பட்டது. இயல்பாகவே மெதுவான ஆடுகளம். பேட்டர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் அதிகம் ஒத்துழைக்கும் ஆடுகளமாக இருக்கும். ஆட்டத்தின் தொடக்கத்தில் காற்றின் ஈரப்பதம், தரையின் ஈரப்பதத்தால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முதல் 10 ஓவர்கள் ஒத்துழைக்கலாம். அதன்பின் சுழற்பந்துவீச்சாளர்கள் ராஜ்ஜியமாகவே இருக்கும். அதிலும் கடைசி 2 நாட்களில் ஆடுகளங்களில் அதிக வெடிப்பும், வறண்ட நிலையிலும் இருக்கும். அப்போது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பந்து நன்றாக சுழன்று பேட்டர்களுக்கு வரும், பந்து மிகவும் தாழ்வாக பேட்டரை நோக்கி வரும் என்பதால் எதிர்த்து பேட்டிங் செய்வது சற்று சிரமமாக இருக்கும்.

ஆதலால், இந்திய அணி நாளை ஆட்டத்தை கவனமாக எதிர்கொள்ள வேண்டும் கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்கிறதே என்று கவனக்குறைவாக பேட் செய்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீப் ஆகியோரின் பந்துவீச்சைச் சமாளிக்க இந்திய பேட்டர்கள் சிரமப்பட்டனர். கடைசி இரு நாட்களில் இருவரின் பந்துவீச்சும் சவாலாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணி போராடியே வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்படலாம்.

 
டெஸ்ட் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்த ஜூரெல், குல்தீப்புக்கு அதிகமாக ஸ்ட்ரைக்கை வழங்காமல் தானே பேட் செய்து ரன்கள் சேர்த்தார்

பொறுப்பான பேட்டிங் செய்த ஜூரெல்

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 104.5 ஓவர்களில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்திருந்தது. ஜூரெல் 30, குல்தீப் யாதவ் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டத்தை ஜூரெல், குல்தீப் தொடங்கினர். இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்த ஜூரெல், குல்தீப்புக்கு அதிகமாக ஸ்ட்ரைக்கை வழங்காமல் தானே பேட் செய்து ரன்கள் சேர்த்தார். ஜூரெல் 96 பந்துகளில் டெஸ்ட் போட்டியில் முதல் அரைசதத்தை அறிமுகப் போட்டியில் எட்டினார். நிதானமாக பேட் செய்த குல்தீப் 28 ரன்களில் ஆன்டர்சன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். 8-வது விக்கெட்டுக்கு குல்தீப், ஜூரெல் இருவரும் சேர்ந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த ஆகாஷ் தீப் சிங், ஜூரெலுக்கு நன்கு ஒத்துழைத்து பேட் செய்தார். ஸ்கோரை உயர்த்தும் நோக்கில் ஜூரெல் அதிரடியாக பேட்செய்து பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். ஆகாஷ் தீப் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர் உள்பட 9 ரன்கள் சேர்த்துஆட்டமிழந்தார். சதத்தை நெருங்கிய ஜூரெல் 149 பந்துகளில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும்.

103.2 ஓவர்களில் இந்திய அணி 307 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்ததது. இதையடுத்து, இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் சோயிப் பசீர் 5 விக்கெட்டுகளையும், ஹார்ட்லி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

 
இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ராபின்சனின் விக்கெட்டை வீழ்த்தியபின் குதூகலிக்கும் குல்தீப் யாதவ்

முன்னிலை பெற்றும் இங்கிலாந்து திணறல்

46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆடுகளம் நன்கு வறண்டு காணப்பட்டதும், காற்று இல்லாமல் இருந்ததும் அஸ்வின் சுழற்பந்து வீச்சுக்கும், பந்து டர்ன் ஆவதற்கும் ஏதுவாக இருந்தது.

அஸ்வின் வீசிய 5-வது ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் டக்கெட் 15 ரன்களிலும், அடுத்துவந்த ஓலே போப் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 19 ரன்களுக்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு வந்த ஜோ ரூட், கிராலேயுடன் சேர்ந்து நிதானமாக பேட் செய்தார். ரூட் மெதுவாக பேட் செய்ய கிராலோ அதிரடியாக ரன்களைச் சேர்த்து பேஸ்பால் ஆட்டத்தைக் கையாண்டார். இதனால் 11 ஓவர்களில் இங்கிலாந்து 50 ரன்களைக் கடந்தது.

அஸ்வின் பந்துவீச்சுக்கு தொடக்கம் முதலே திணறிய ரூட் 11 ரன்கள் சேர்த்தநிலையில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்துவந்த பேர்ஸ்டோ, கிராலியுடன் சேர்ந்து வேகமாக ரன்களைச் சேர்த்தார். கிராலி 71 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து 60 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார்.

தொடர்ந்து வெளியேறிய இங்கிலாந்து பேட்டர்கள்

அதன்பின் இங்கிலாந்து பேட்டர்கள், பெவிலியனிலிருந்து களத்துக்கு வருவதும், மீண்டும் பெவிலியன் செல்வதும் என நடந்தார்களேத் தவிர நிலைத்து நின்று யாரும் நின்று ஆடவில்லை செய்யயவில்லை. 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி அடுத்த 35 ரன்களில் மீதமுள்ள 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பேர்ஸ்டோ 30 ரன்கள் சேர்த்து ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய பென் போக்ஸ் (17) பென் ஸ்டோக்ஸ் (4), ஹார்ட்லி (7), ராபின்சன் (0), ஆன்டர்ஸன் (0) என வரிசையாக குல்தீப், அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதில் கடைசி 4 விக்கெட்டுகள் மட்டும் வெறும் 12 ரன்களில் இழந்தது இங்கிலாந்து அணி. 133 ரன்கள் வரை 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, அடுத்த 12 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

நடுப்பகுதியில் ஜடேஜா, குல்தீப் பந்துவீச்சில் பந்து நன்றாக ட்ர்ன் ஆனது. ஆடுகளம் எந்த மாதிரி பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கிறது என்பதை பேட்டர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. சில நேரங்களில் குல்தீப், ஜடேஜா நினைத்ததைவிட பந்து நன்றாகவே டர்ன் ஆனது.

53.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஏற்கெனவே 46 ரன்கள் முன்னிலையும் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியத் தரப்பில் அஸ்வின் 51-ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். டெஸ்ட் போட்டியில் 35 வது முறையாக 5விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.

 
இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் தொடர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்

வரலாறு படைத்த அஸ்வின்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்து ரவிச்சந்திர அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

உள்நாட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். இதுவரை எந்த இந்திய பந்துவீச்சாளரும் இதை முறியடிக்கவில்லை.

ஆனால், அஸ்வின் தனது 5 விக்கெட் வீழ்த்தியபோது, உள்நாட்டில் நடந்த போட்டிகளில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து 350 விக்கெட்டுகளைக் கடந்து 354 விக்கெட்டுகளை எட்டினார்.

இதனால், உள்நாட்டில் 350 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். தற்போது 2-வது இடத்தில் அனில் கும்ப்ளே, 3-வது இடத்தில் ஹர்பஜன் சிங் (265), கபில் தேவ் (219), ரவீந்திர ஜடேஜா (206) விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.

4வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் விக்கெட் வீழ்த்தியபோது, இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். கடந்த முறை ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 விக்கெட்டுகள் சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 22 டெஸ்ட்போட்டிகளில் 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளே 20 போட்டிகளில் 111 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக 23 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 103 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஆசியாவில் மட்டும் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தார்போல், அஸ்வின் உள்ளார். இந்தியாவில் மட்டும் 352 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இலங்கையில் 38 விக்கெட்டுகளையும், வங்கதேசத்தில் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

 

‘ரசித்துப் பந்து வீசினேன்’

கும்ப்ளேயின் சாதனையை முறியடித்த அஸ்வின் அளித்த பேட்டியில் “புதிய பந்தில் மிகவும் ரசித்துப் பந்து வீசினேன். என் கரங்களை நன்றாக உயர்த்தி பந்து வீசி சற்று வேகமாக வீசினேன். இன்று காற்றும் பெரிதாக இல்லை என்பதால், நினைத்தமாதிரி பந்துவீச முடிந்தது. நாங்கள்தான் சேஸிங் செய்ய வேண்டும் என்பதால், கூடுதலாக ரன்கள் கொடுக்காமல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினேன். குல்தீப் பந்துவீச்சும் அற்புதமாக இருந்தது.

பந்துவீச்சில் வேகத்தை மாற்றி, லென்த்தையும் மாற்றி வீசி பேட்டர்களை திணறிடித்தார். பேட்டிங்கிலும் குல்தீப் டிபென்ஸ்ஸை வெளிப்படுத்தினார். துருவ் குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்ததால்தான் பெரிய இலக்கை எட்ட முடிந்தது. டெஸ்ட் போட்டியை வென்றால்தாந் சிறந்த கிரிக்கெட் வீரராக உணரமுடியும். நாளை நடக்கும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cevre8nkl9go

  • கருத்துக்கள உறவுகள்
Posted

36 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய இந்தியாவை கில் - ஜூரெல் ஜோடி கரை சேர்த்தது எப்படி?

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ராஞ்சியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து டெஸ்ட் தொடரை வென்றது.

டெஸ்ட் தொடர் வெற்றி

2வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்து இருந்தது. 61 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சுப்மான் கில் 52 ரன்களுடனும், ஜூரெல் 29 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 6-வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்து முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.

இந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்த அறிமுக வீரர் ஜூரெல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய பேட்டர்கள் தடுமாற்றம்

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் சேர்த்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 192 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

3-வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் ரோஹித் சர்மா 24, ஜெய்ஸ்வால் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடங்கினர். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் சேர்த்த நிலையில், ரூட் பந்துவீச்சில் ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

4வது நாளில் ஆடுகளம் மந்தமாகவும், சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து அணி ரூட், பசீர், ஹார்ட்லி மூலம் நெருக்கடி கொடுத்தது. ஆடுகளம் மிகவும் மோசமானதால், பேட்டரின் முழங்காலுக்கு மேல் பந்து எழும்பவில்லை. இதனால் இந்திய பேட்டர்கள் பந்தை எதிர்கொண்டு விளையாட சிரமப்பட்டனர்.

அடுத்துவந்த சுப்மான் கில், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். வேகமாக ரன்களைச் சேர்த்த ரோஹித் சர்மா 69 பந்துகளில் அரைசதம் அடித்து சிறிது நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஹார்ட்லி பந்துவீச்சில் ரோஹித் சர்மா 55 ரன்கள் சேர்த்து போக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரை ரன்ரேட் ஓரளவுக்கு வேகமாகச்சென்றது. அவர் ஆட்டமிழந்தபின் ரன்களும் வருவதும் கடினமாக இருந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தடுமாறியது.

36 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து இந்தியா தடுமாற்றம்

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதன்பின் இந்திய அணி அடுத்தடுத்து விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. ரஜத் பட்டிதார் வந்த வேகத்தில் பசீர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். 4 டெஸ்ட் போட்டிகளாக பட்டிதாருக்கு வாய்ப்பு தரப்பட்டும், ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்துவந்த ஜடேஜா 4 ரன்னிலும், சர்ஃபராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமலும் பசீர் சுழலிலும் சிக்கி வெளியேறினர். 99 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்த இந்திய அணி, அடுத்த 21 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏறக்குறைய 20 ஓவர்களில் வெறும் 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆட்டம் மெல்ல இங்கிலாந்து கைகளுக்கு மாறுவதுபோல் இருந்தது.

இந்திய அணியை கில்-ஜூரெல் ஜோடி கரை சேர்த்தது எப்படி?

ஆனால், 6-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில்லுடன், ஜூரெல் இணை சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து இங்கிலாந்து அணி அளித்த நெருக்கடியை இருவரும் சமாளித்து பேட் செய்தனர்.

இருவரின் பேட்டிலிருந்து ரன்கள் பெரிதாக வரவில்லை என்றாலும், விக்கெட்டை இழந்துவிட்டால் அடுத்ததாக நிலைத்து ஆட பேட்டர்கள் இல்லை என்பது தெரிந்துவிட்டதால், தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். பொறுமையாக பேட் செய்த சுப்மான் கில் 122 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இருவரையும் பிரிக்க இங்கிலாந்து சழற்பந்துவீச்சாளர்கள் கடினமாக முயன்றும் முடியவில்லை. சுப்மான் கில் 52 ரன்களுடனும், ஜூரெல் 29 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து இ்ந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.

ஆட்டத்தின் திருப்புமுனை!

ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் நேற்றைய ஆட்டநேர முடிவில் சேர்த்த 40 ரன்கள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இருவரும் சேர்த்த அந்த ரன்கள் இந்திய அணியின் பேட்டர்களின் சுமையையும், நெருக்கடியையும் குறைத்தது. ஒருவேளை குறைவான ரன்களைச் சேர்த்து, விக்கெட்டையும் இழந்திருந்தால், ஆட்டத்தின் போக்கு இன்று மாறியிருக்கக் கூடும்.

 

தவறவிட்ட இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளராக மெக்கலம் ஆகியோர் வந்தபின் இழக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். ஹைதராபாத் டெஸ்ட் வெற்றிக்குப்பின், டெஸ்ட் தொடரை வெல்லவும் இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அதை பயன்படுத்தவில்லை. தொடர்ந்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கவும் இல்லை.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் சோயிப் பசீர், டாம் ஹார்ட்லி இருவரும் தங்களின் பணியைச் சிறப்பாகச் செய்தனர். இருவரும் இளம் வீரர்களாக இருந்தாலும், பந்துவீச்சில் பெரிய அளவிலான முதிர்ச்சி தென்பட்டது. இன்றைய ஆட்டம் தொடங்கும் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களுடன் வலுவாக இருந்தது.

ஆனால், பசீர், ஹார்ட்லி இருவரின் சுழற்பந்துவீச்சால் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது. சிறப்பாகப் பந்துவீசிய பசீர் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

வெற்றி நாயகர்கள்

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதேபோல இந்திய அணியின் வெற்றிக்கு 2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப் யாதவின் பந்துவீச்சும், முதல் இன்னிங்ஸில் ஜூரெல் சேர்த்த 90 ரன்களும் முக்கியமானவை. அதிலும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்து தடுமாறியது.

அப்போது அறிமுக வீரராக ஜூரெல், குல்தீப் யாதவுடன் சேர்ந்து சரிவிலிருந்து இந்திய அணியை மீட்டது மிகப்பெரிய பணி. அதிலும் டெய்ல் எண்டரான குல்தீப் யாதவை வைத்துக்கொண்டு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஜூரெல் இந்திய அணியை மீட்டது அற்புதமான பேட்டிங்கிற்கு சான்றாகும்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தவுடன், தனது பேட்டிங்கில் கியரை மாற்றி அதிரடிக்கு மாறி இந்திய அணி 300 ரன்களைக் கடக்க உதவினார். முதல் போட்டியிலேயே சதத்தை நெருங்கிய ஜூரெல் 10 ரன்களில் சதத்தை தவறவிட்டார். முதல் இன்னிங்கில் இந்திய அணி கவுரமான ஸ்கோரைப் பெறுவதற்கு ஜூரெல் பேட்டிங் முக்கியமாகும்.

2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப் ஆகிய இருவரின் மாயஜாலப் பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு சுருண்டது. இதனால், வெற்றி இலக்கு இந்திய அணிக்கு இலகுவானது.

இதன் மூலம் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது இல்லை என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளது.

சவாலான டெஸ்ட் போட்டி

வெற்றிக்குப்பின் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் “ மிகவும் கடினமான டெஸ்ட் தொடராக இருக்கிறது. ஏராளமான சவால்களைச் சந்தித்தோம். அதற்கு அமைதியாக பதிலடியும் கொடுத்துள்ளோம். உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வந்துள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.

பெரிய சவாலுக்கு நன்றாக பதில் அளித்தனர். அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்கியிருந்தோம். அவர்களின் ஸ்டைலில் பேட்டிங் செய்யவும் அனுமதித்தோம். ஜூரெல் அமைதியாக விளையாடி அனைத்து ஷாட்களையும் ஆடினார். அவரின் 90 ரன்கள் முக்கியமானவை.

முக்கிய வீரர்களை இந்த நேரத்தில் இழப்பது வேதனைதான். இருந்தாலும் குழுவாக சிறப்பாகச் செயல்பட முடியும். அவர்களின் இடத்தை நிரப்புவது கடினம்தான். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும் வெல்ல முயல்கிறோம், சிறந்த டெஸ்ட் தொடராக இதை மாற்றுவோம்” எனத் தெரிவித்தார்.

'முடிவைப் பற்றி கவலை இல்லை'

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் “ சிறந்த டெஸ்ட் போட்டி. ஸ்கோர் பெரிதாக இல்லாவிட்டாலும், இரு அணிகளுக்கும் சவாலாக இருந்தது. எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்கள் சூழலுக்கு ஏற்றாற்போல் பந்துவீசினர்.

இருப்பினும் பெரிதாக பெருமைப்பட முடியவில்லை. 2வது இன்னிங்ஸில் அஸ்வின், குல்தீப், ஜடேஜா பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. ஆடுகளம் 4வது நாளான இன்று மாறும் என எதிர்பார்த்தோம். அப்படி எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை.

ஜோ ரூட் அற்புதமான பேட்டர். அவர் மீதான விமர்சனம் நியாயமற்றது. பசீரின் பந்துவீச்சைப் பார்த்து பெருமைப்படுகிறேன். முடிவைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், நம்முடைய முழுப் பங்களிப்பை மட்டும் வழங்குவோம் என வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c04r4g1rx0mo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலுக்கு தோனி கொடுத்த அறிவுரை என்ன தெரியுமா?

துருவ் ஜூரெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 28 பிப்ரவரி 2024, 05:25 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

“14 வயதில் ஒரு சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல், பாதுகாவலர் இல்லாமல் நொய்டாவில் உல்ள என் கிரிக்கெட் அகெடமியில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று என் முன்வந்து நின்றபோது திகைத்துவிட்டேன். கிரிக்கெட் பயிற்சிக்காக வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு ஓடிவந்த முதல் நபராக இவரைப் பார்க்கிறேன்”

துருவ் ஜூரெல் குறித்து அவரின் சிறுவயது பயிற்சியாளர் பூல் சந்த் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டி இது.

கிரிக்கெட்டின் காதலர், கிரிக்கெட்டுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்தவர், தந்தையின் கனவை வெறுத்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என விளையாடிவரும் இளம் வீரர் துருவ் ஜூரெல் என்று அவரைப் புகழ்கிறார்கள்.

துருவ் ஜூரெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

துருவ் ஜுரேலிடம் தோனியின் பண்புகள் இருப்பதாகக் கூறுகிறார் கவாஸ்கர்

வைரலாகும் பெயர்

துருவ் ஜூரெல் என்ற பெயர் இங்கிலாந்துக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குப்பின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. ஏனென்றால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை மிகப்பெரிய சரிவிலிருந்து மீட்டு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தவர் துருவ் ஜூரெல்.

துருவ் ஜூரெலின் ஆழ்ந்த பேட்டிங் நுட்பம், தேர்ந்தெடுத்த ஷாட்கள், ஸ்வீப் ஷாட், கவர் டிரைவ் ஷாட்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு உண்மையில் சவாலாக இருந்தது என்றுதான் சொல்ல முடியும்.

துருவ் ஜூரெல் களமிறங்கிய போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் டெய்லெண்டர் குல்தீப் யாதவை வைத்துக் கொண்டு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த துருவ் ஜூரெல் பேட்டிங் உண்மையில் பாராட்டுக்குரியது என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுகிறார்கள்.

ஏனென்றால், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் ஆகிய இரு பேட்டிங்கில் திறமையில்லாத வீரர்களை களத்தில் வைத்துக் கொண்டு அவர்களை ஸ்ட்ரைக்கில் நிற்கவிடாமல், ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக் கொண்டு பேட்டிங் செய்து ஜூரெல் ஸ்கோர் செய்தது எளிதான செயல் அல்ல.

தேர்ந்த, அனுபவமான பேட்டர்களுக்கு இருக்கும் புத்திகூர்மை, எந்த நேரத்தில், யார் வீசும் பந்தை அடித்து ஸ்ட்ரைக்கை தக்கவைப்பது என்று தெரிந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை லாவகமாக ஜூரெல் கையாண்டு ரன்களைச் சேர்த்தார்.

அதிலும் ஒரு கட்டத்துக்கு மேல் இந்திய அணி ரன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது, விஸ்வரூமெடுத்து அதிரடியாகவும் பேட் செய்ய முடியும் என்பதை நிரூபித்த ஜூரெல் சிக்ஸர், பவுண்டரி என விளாசினார்.

 
துருவ் ஜூரெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான டாம் மூடி ஜூரேலை பாராட்டியிருக்கிறார்.

அடுத்த தோனியா?

ஜூரெலின் பேட்டிங், விக்கெட் கீப்பிங் நுட்பம், நேரத்துக்கு ஏற்ப முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு அடுத்த தோனி கிடைத்துவிட்டார் என்று முன்னாள் ஜாம்பவான்கள் புகழ்கிறார்கள்.

முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தொலைக்காட்சி வர்ணனையின்போது ஜூரெல் குறித்து கூறுகையில் “ துருவ் ஜூரெலின் அமைதி, பொறுமை, சமயோசித பேட்டிங் நுட்பம், முடிவு ஆகியவற்றைப் பார்க்கும்போது, அடுத்த தோனி உருவாகிறார் என்பதை எனக்கு காண்பிக்கிறது” எனத் தெரிவித்தார்.

ரத்தினத்தை கண்டுபிடித்துவிட்டது இந்தியா

அதேபோல ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான டாம் மூடி எக்ஸ் தளத்தில் கூறுகையில் “ துருவ் ஜூரெல் வேறுவிதமான பேட்டர். இந்திய அணி ஒரு விலைஉயர்ந்த ரத்தினத்தை கண்டுபிடித்துவிட்டது” எனப் புகழ்ந்துள்ளார்.

இதேபோல, முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லட்சுமண், பத்ரிநாத், இர்பான் பதான், வீரேந்திர சேவாக், ராபின் உத்தப்பா, மைக்கேல் வான் என பலரும் துருவ் ஜூரெலின் பேட்டிங்கை பாராட்டியுள்ளனர்.

 
துருவ் ஜூரெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

எம்.எஸ். தோனி ஓய்வுக்குப்பின் சிறந்த விக்கெட் கீப்பர் இன்றி தடுமாறி வந்தது இந்திய அணி

முதல் தேர்விலேயே தேர்ச்சி

இந்திய அணி எம்.எஸ். தோனி ஓய்வுக்குப்பின் சிறந்த விக்கெட் கீப்பர் இன்றி தடுமாறி வந்தது. கேஎல் ராகுல், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், கேஎஸ்பரத், விருதிமான் சாஹா, இசாந்த் கிஷன், சஞ்சு சாம்ஸன் என பல வீரர்களை பரிசோதித்துப் பார்த்தது. இதில் முதல் பரிட்சையிலேயே தேறி, அனைவரின் பாராட்டையும் பெற்றவர் துருவ் ஜூரெலாகத்தான் இருக்க முடியும்.

தனது 2வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற துருவ் ஜூரெல் 17 முதல் தரப் போட்டிகளிலும், 10 லிஸ்ட்ஏ போட்டிகளிலும்தான் விளையாடியுள்ளார். குறைவான போட்டிகளில் துருவ் ஜூரெல் விளையாடி இருந்தாலும், சராசரியை 50 ரன்களுக்கு மேல் வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 

யார் இந்த துருவ் ஜூரெல்?

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த 2001ம் ஆண்டு, ஜனவரி 21ம் தேதி பிறந்தவர் துருவ் ஜூரெல். ஜூரெலின் தந்தை நீம் சிங் ஜூரெல் ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றியவர். கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்கேற்றபின் நீம் சிங் ஓய்வு பெற்றார். தன்னைப் போல் தனது மகனும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும், தேசத்துக்காக சேவை செய்ய வேண்டும் என்று நீம் சிங் ஆர்வமாகவும் இருந்தார்.

இதற்காக துருவ் ஜூரெலை தேசிய ராணுவ அகாடெமி பயிற்சித் தேர்வுக்காக நீம் சிங் தயார் செய்தார். ஆனால், துருவ் ஜூரெலுக்கு எண்ணம், ஆர்வம் அனைத்தும் கிரிக்கெட் மீதுதான் இருந்தது. ஜூரெலுக்கு கிரிக்கெட் மீது அவ்வளவு தீராத காதல், வெறி இருந்தது , கிரிக்கெட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

 
துருவ் ஜூரெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வீட்டை விட்டு புறப்பட்டார்

இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது 14வயது வயதில் ஆக்ராவில் இருந்து ரயில் ஏறி நொய்டாவில் உள்ள கிரிக்கெட் அகாடெமியில் சேர்வதற்காக ஜூரெல் புறப்பட்டார்.

நொய்டாவில் செக்டர் 71 பகுதியில் கிரிக்கெட் அகாடெமி நடத்திவரும் பூல் சந்த் என்பவரிடம் கிரிக்கெட் பயிற்சிக்காக ஜூரெல் சேர்ந்தார். யாருடைய துணையும் இல்லாமல் பாதுகாவலர் இல்லாமல் 14வயதில் ஜூரெல் கிரிக்கெட் அகாடெமியில் சேர்வதற்காக வந்திருப்பதைப் பார்த்த பூல் சந்த் சற்று வியப்படைந்தார். இருப்பினும் ஜூரெலின் கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்து அவரை கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்து, முறைப்படி அவரின் தந்தைக்கு தகவல் அளித்தார்.

 

"இப்படியொரு சிறுவனை பார்த்தது இல்லை"

ஜூரெலின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து அவரின் பயிற்சியாளர் பூல் சந்த் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “14 வயதில் ஒரு சிறுவன் யாருடைய உதவியும் இல்லாமல், பாதுகாவலர் இல்லாமல் என் கிரிக்கெட் அகெடமிக்கு வந்து “சார் நான்தான் துருவ் ஜூரெல். என்னை உங்கள் கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று என் முன்வந்து நின்றபோது திகைத்துவிட்டேன்.

கிரிக்கெட் பயிற்சிக்காக வீட்டை விட்டு, குடும்பத்தைவிட்டு ஓடிவந்த முதல் நபராக இவரைப் பார்க்கிறேன், ஸ்பெஷல் வீரராகவும் பார்க்கிறேன். ஜூரெல் நடுத்தர ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தொடக்கத்தில் பல பணச்சிக்கல்களைச் சந்தித்தார், தங்குவதற்கு இடம் கூட கிடைக்காமலும், அதற்கு வாடகை கொடுக்க முடியாமலும் சிரமப்பட்டார். ஆனாலும் மகனின் கனவு ராணுவத்தில் சேர்வதைவிட, கிரிக்கெட் மீதுதான் ஆர்வம் இருப்பதை உணர்ந்த ஜூரெலின் தந்தைக்கு அதை வரவேற்பதைத் தவிர வழியில்லை” என்று தெரிவித்தார்.

 
துருவ் ஜூரெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"‘கிட்’ வாங்க தாயின் நகையை விற்றோம்"

ஜூரெல் கிரிக்கெட் பயிற்சி எடுக்க அகாடெமியில் சேர்ந்தபோது, அவரால் பேட்டி, பேட் உள்ளிட்ட கிரிக்கெட் கிட் வாங்குவதற்குகூட கையில் பணமில்லை என்று அவரின் தந்தை நீம் சிங் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் “கிரிக்கெட் கிட் வேண்டும் என்று ஜூரெல் என்னிடம் கேட்டபோது அதன் விலை 6 ஆயிரம் ரூபாயாக இருந்தது. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. பணம் இல்லாத எனக்கு கிரிக்கெட் எதுக்கு நான் விலகிவிடுகிறேன் என்று ஜூரெல் கண்ணீர் விட்டதைப் பார்த்தபோது அவரின் தாய்க்கு மனது இடம் கொடுக்கவில்லை. உடனடியாக ஜூரெலின் தாய் தனது கழுத்தில் இருந்த தங்கநகையை கழற்றிக்கொடுத்து, அதை விற்று ஜூரெலுக்கு கிரிக்கெட் கிட் வாங்கிக் கொடுக்கக் கூறினார். அதுதான் ஜூரெலுக்கு கிடைத்த முதல் கிரிக்கெட் கிட்” என்று தெரிவித்தார்.

அரைசதத்தை கொண்டாடாத ஜூரெல்

துருவ் ஜூரெல் கிரிக்கெட் மீது ஆர்வமாக இருந்தாலும், சர்வதேச அரங்கில் தனது முதல் டெஸ்ட் அரைசதத்தை அடித்தபோது, பேட்டை உயர்த்தி தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கவில்லை. மாறாக, அரங்கில் அமர்ந்திருந்த தனது தந்தைக்கு ராணுவத்தில் அடிக்கும் சல்யூட் அடித்து தனது நன்றியைத் தெரிவித்தார்.

 

ஜூரெலின் வளர்ச்சி

துருவ் ஜூரெல் சிறப்பாக கிரிக்கெட் விளையாடியதையடுத்து, உ.பி.யின் 14வயது, 16வயது, 19வயதுக் குட்பட்டோருக்கான அணியில் விளையாட இடம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வாகிய ஜூரெல், 2020ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது துணைக் கேப்டனாக ஜூரெல் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, 2021ம் ஆண்டு உத்தரப்பிரதேச அணிக்காக, முதல்முறையாக சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் ஜூரெல் களமிறங்கினார். குறைந்த அளவு போட்டிகளே ஜூரெல் விளையாடி இருந்தாலும் இவரின் ஸ்ட்ரைக் ரேட், பேட்டிங் சராசரி அனைவரையும் ஈர்த்தது.

ஐபிஎல் அறிமுகம்

இதையடுத்து, 2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜூரெலை ஏலத்தில் எடுத்தது. இதைத் தொடர்ந்து, 2022, பிப்ரவரி 17ம் தேதி ஜூரெல் தனது முதல்தரப் போட்டியில் ரஞ்சிக் கோப்பையில் உ.பி அணிக்காக அறிமுகமாகினார். 2023ம் ஆண்டு, ஜூலை 14ம் தேதி, லிஸ்ட் ஏ தரப் போட்டிகளில் ஜூரெல் அறிமுகமாகி ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிராக விளையாடினார்.

என்பெயர் இருப்பது எனக்கே தெரியாது

இந்திய அணியில் தனது பெயர் சேர்க்கப்பட்டது கூட ஜூரெலுக்குத் தெரியாது. திடீரென்று பிசிசிஐ தொலைக்காட்சியை பார்த்தபோது தனது பெயர் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தாக ஜூரெல் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் “ நான் பயிற்சி முடித்துவிட்டு, இரவு தூங்கச் செல்லும்போது தற்செயலாக பிசிசிஐ டிவி செயலியைப் பார்த்தேன். அப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு என் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரரும் இந்திய அணிக்காக விளையாடுவது கனவாகும். என் பெயரைப் பார்த்தபோது, நான் கனவில் இருப்பதாகவே உணர்ந்தேன்."

"என்னைப் போன்ற நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வரும் வீரருக்கு, இ்ந்திய அணியில் இடம் கிடைப்பது என்பது அரிதானது, கனவு. அது நிறைவேறியது கண்டு என் தந்தை, சகோதரி, தாய் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். கடின உழைப்பு என்பது மிகப்பெரிய விஷயம். அதிலும் கனவு காண்பதும் அதைக் காட்சிப் படுத்துப் பார்ப்பதும், அதை உருவாக்கும் விஷயத்துக்கும் நான் ரசிகன்” எனத் தெரிவித்தார்.

 
துருவ் ஜூரெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனியின் அறிவுரை

ஐபிஎல் விளையாடும்போது, சிஎஸ்கே கேப்டன் தோனியைச் சந்தித்து அறிவுரை பெற்றதுதான் கிரிக்கெட் மீது இன்னும் ஈர்ப்பு ஏற்படக் காரணம் என ஜூரெல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் ஜூரெல் அளித்த பேட்டியில் “ நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். ஐபிஎல் போட்டியின்போது தோனி என் முன் வந்து நின்றபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முதன் முதலில் தோனியுடன் நான் பேசியபோது,

நான் உண்மையில் பூமியில்தான் நிற்கிறேனா அல்லது கனவா என்பதை உறுதி செய்து பேசினேன். அப்போது அவரிடம் உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவா என்று கேட்டேன். அதற்கு தோனி சிரித்துக்கொண்டே என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது தோனியிடம், நீங்கள் 6-வது அல்லது 7வது வீரராக களமிறங்கியும் சிறப்பாக பேட் செய்வது எப்படி ரகசியம் என்ன என்று கேட்டேன். அதற்கு தோனி என்னிடம் “ கைமாறு கருதாத பணி. வெற்றியைவிட தோல்வி அதிகம் இருக்கும். அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. நம்முடைய பணி ஃபினிஷ் செய்வது மட்டும்தான். மோசமானதை எதிர்பார்த்துதான் எப்போதும் நாம் தயாராக வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு போட்டியையும் ஃபினிஷ் செய்ய முடியாது. களத்தில் பந்தை மட்டும் பார்க்க வேண்டும், விளையாடுவதில் மட்டும் கவனம் இருந்தால்போதும்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cn0n7mjg640o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொட‌ரை ஒரு மாதிரி வென்று விட்டின‌ம்...............முர‌ளித‌ர‌னுக்கு அடுத்து அஸ்வின் குறைந்த‌ விளையாட்டில் 500விக்கேட் எடுத்த‌ இர‌ண்டாவ‌து வீர‌ர்

இருவ‌ரும் த‌மிழ‌ர்க‌ள் என்று நினைக்கும் போது பெருமையா இருக்கு🙏🥰..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்த இந்தியா

Capture-3-5-300x178.jpg

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டொஸ் வென்று முதலில் பெட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்றைய 2 ஆவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய ரோகித், கில் சிறப்பாக சதம் அடித்து அவுட் ஆகினர். இதனையடுத்து வந்த சர்ப்ராஸ் கான், படிக்கல் அரை சதம் அடித்து அவுட் ஆனார்கள். இதன்மூலம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜெய்ஸ்வால் 57, ரோகித் 103, சுப்மன் கில் 110, படிக்கல் 65, சர்ப்ராஸ் கான் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/295021

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IND vs ENG: ஷுப்மன் கில், ஜெய்ஸ்வாலிடம் ரோஹித் ஷர்மா பின்பற்றும் தோனி அணுகுமுறை

கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விமல் குமார்
  • பதவி, மூத்த விளையாட்டு நிருபர், தர்மசாலாவிலிருந்து
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சில மாதங்களுக்கு முன்பு, தென்னாப்பிரிக்க தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள ஒரு ஓட்டலில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில்லுடன் காபி குடித்துக்கொண்டிருந்தபோது, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் பற்றிப் பேசப்பட்டது.

அது ஐபிஎல் மினி ஏலத்திற்கு அடுத்த நாள், ரோஹித் தனது பழக்கமான பாணியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டன் கில்லுக்கு தலைமைத்துவம் குறித்து சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த செய்தியாளர் அருகில் நின்று இவற்றையெல்லாம் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ரோஹித், ஒரு மூத்த சகோதரரைப் போல, கில்லிடம் விளக்குகிறார், "தம்பி, நீங்கள் இந்தியா அணி கேப்டனாக விரும்பினால், பேட்டிங்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதைத் தவிர, ஐபிஎல் கேப்டன்சியிலும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், அதை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்," எனப் பேசிக் கொண்டிருந்தார்.

தரம்சாலா டெஸ்டின்போது இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. ஏனெனில் ஷுப்மான் கில்லின் மூன்றாவது டெஸ்ட் சதத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு வீரர் இருக்கிறார் என்றால், அது கேப்டன் ரோஹித் சர்மாதான்.

 

ரோஹித் - கில் இடையிலான ஒற்றுமை

கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உண்மையில், பல வழிகளில், தனது ஆரம்ப நாட்களில் ரோஹித் கொண்டிருந்த மிகவும் திறமையான பேட்ஸ்மேனுக்கு உரிய அம்சங்களை ஷுப்மன் கில்லிடமும் காணலாம்.

தற்செயலாக, கில் தனது 24வது டெஸ்டில் விளையாடி, இதுவரை மூன்று டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். மேலும் ரோஹித்தும் தனது முதல் 24 டெஸ்டில் 3 சதங்களை மட்டுமே அடித்துள்ளார். இதன் பொருள் என்னவென்றால், ரோஹித்தை போலவே, கில் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரம்ப கட்ட சவால்களைச் சமாளிக்க நேரம் எடுத்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் புகழ்பெற்ற கபா டெஸ்டில் 91 ரன்களில் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி கில் ஒரு பிரகாசமான எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்ததைப் போல, ரோஹித் முதல் இரண்டு டெஸ்டில் இரண்டு சதங்களை அடித்திருந்தார்.

ரோஹித் மிடில் ஆர்டரை விட்டு வெளியேறி, பின்னர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக ஆனார். அவரது ஆட்டம் நிலையானதாக மாறியதால், கில் தொடக்க ஆட்டக்காரராக இருந்து விலகி இப்போது மிடில் ஆர்டருக்கு மாறினார், அதன் காரணமாக அவரது ஆட்டமும் சீராகி வருகிறது.

 

கோலியின் இடத்தை நிரப்புவாரா கில்?

கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதை வெறும் தற்செயல் என்று கூறலாம், நடப்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் ஜெய்ஸ்வாலுக்கு பிறகு அதிக ரன்களை குவித்து 400 ரன்களை கடந்துள்ளனர்.

விராட் கோலி போன்ற வீரர் இல்லாத நிலையில், அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனாக அதிக பொறுப்புகளை ஏற்க ரோஹித்துக்கு சவால் விடப்பட்டது. அதனால், கில் ஒரு டெஸ்ட் தொடரிலாவது தனது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் இருந்தார்.

ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் கோலியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் உண்மையான வாரிசாக கில் பார்க்கப்படுகிறார்.

வெள்ளிக்கிழமை, இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் பேட்டிங் செய்ய வெளியே வந்தபோது, இருவரும் வெவ்வேறு பாணிகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக கில் மிகவும் ஆக்ரோஷமாகத் தெரிந்தார், அவர் தனது கேப்டனுக்கு முன்பாகத் தனது சதத்தை நிறைவு செய்வார் எனத் தோன்றியது. அது நடக்கவில்லை.

ஆனால் இந்த தொடரில், இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் தங்கள் இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணியை மிகவும் வலுவான நிலையில் வைத்தனர்.

இந்தக் காலகட்டத்தில் ரோஹித் பல சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளார். அவர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்களை அடித்துள்ளார், இது அவரது சமகாலத்தவர்களான முரளி விஜய் (61 போட்டிகளில்) மற்றும் அஜிங்க்யா ரஹானே (85 போட்டிகளில்) ஆகியோருக்கு சமம்.

இதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டின் ஒவ்வொரு வடிவத்தையும் சேர்த்தால், அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக 43 சதங்கள் அடித்துள்ளார். இது கிறிஸ் கெயிலை விடவும், டெண்டுல்கர் (45), டேவிட் வார்னர் (49) ஆகியோரை விடவும் அதிகம்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலை பற்றிப் பேசினால், கேப்டன் ரோஹித் சர்மா தனது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் 48 சதங்களை சமன் செய்துள்ளார். இப்போது கோலி (80), டெண்டுல்கர் (100 சதங்கள்) மட்டுமே அவரைவிட முன்னிலையில் உள்ளனர்.

 

புதிய தலைமுறையினரை நம்ப வேண்டிய நேரம் இது

கில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேப்டன் ரோஹித் ஷர்மா கில் உடன் இருப்பதைப் பார்த்தால், பஞ்சாபை சேர்ந்த இந்த வீரரை ரோஹித் மிகவும் உயர்வாக மதிப்பிடுவதை நீங்கள் உணர்வீர்கள்.

உலகக் கோப்பைக்கு சற்று முன்பு, இந்த எழுத்தாளர் ரோஹித் ஷர்மாவை நேர்காணல் செய்தபோது, திறமை என்ற ஒரு வார்த்தை உங்களுக்குத் தெரிந்தால், எந்த முகம் முதலில் உங்கள் நினைவுக்கு வரும் என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார், ரோஹித் கண் இமைக்காமல் "கில்" என்று கூறினார்.

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கோலி மற்றும் ரோஹித் போன்ற திறமையான வீரர்களின் ஆரம்பப் போராட்டங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கை வைத்து அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டுதலையும் அளித்த ஒரு காலம் இருந்தது.

ஒருவேளை ரோஹித் இதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கலாம். மேலும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக, கில், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களை வித்தியாசமாக வழிநடத்த வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருக்கலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதோடு, ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் அந்த முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதையும் கண்டு ரோஹித் மகிழ்வார்.

இதன் காரணமாக, ஒரு காலத்தில் தோனி ரோஹித்-கோலி மீது காட்டிய அதே நம்பிக்கையை டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய தலைமுறை பேட்ஸ்மேன்கள் மீதும் ரோஹித் காட்டலாம்.

https://www.bbc.com/tamil/articles/cj56qjq60rlo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் போட்டியில் மிரட்டிய இங்கிலாந்து, கடைசியில் இந்தியாவிடம் சரணடைந்தது எப்படி?

பென் ஸ்டோக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியால் மூன்று நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை

9 மார்ச் 2024

தரம்சாலாவில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியால் மூன்று நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதில் இருந்தே இந்தியாவின் ஆதிக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பேஸ்பால் உத்தியுடன் இந்தியாவுக்குச் சவால் விட்ட இங்கிலாந்தின் மிகப்பெரிய, நான்காவது தொடர் தோல்வி இதுவாகும். பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி பெற்ற முதல் தொடர் தோல்வியும் இதுதான்.

 
இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியது.

ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நூறாவது டெஸ்டில் 128 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம் இங்கிலாந்துக்காக தனது நூறாவது டெஸ்டில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 68 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

டெஸ்ட் ஆடுகளத்தில் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் ஸ்கிரிப்டை இப்படித்தான் டீம் இந்தியா எழுதியது.

முதல் இன்னிங்சில் பெரிய முன்னிலை

இந்தியா முதல் இன்னிங்சில் 259 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 84 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 39 ரன்களும் எடுத்து நீடித்திருந்தனர். ஆனால் மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர்.

முதல் 10 ஓவர்களிலேயே இங்கிலாந்தின் முதல் மூன்று வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தனர். மதிய உணவுக்கு சற்று முன், இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும் குல்தீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்பிறகு, மீண்டும் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, பென் ஃபோக்ஸை வெளியேற்றி அஸ்வின் தனது ஐந்தாவது விக்கெட்டை பெற்றார்.

பின்னர் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் நம்பிக்கையை பும்ரா முற்றிலும் முறியடித்தார். சோயப் பஷீர் சிறிது நேரம் ரூட்டுடன் நிலைத்துநின்றார். இந்த இணை 48 ரன்களைச் சேர்த்தது.

பஷீர் இறுதியில் 13 ரன்களில் ரவீந்திர ஜடேஜாவிடம் பலியானார். ஜோ ரூட் தனது சதத்திற்கு 16 ரன்கள் தேவைப்படும்போதே ஆட்டமிழக்க, இங்கிலாந்து தொடரில் நான்காவது முறையாக தோல்வியடைந்தது.

 
இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நூறாவது டெஸ்டில் 128 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கேப்டனாக இருந்த பும்ரா

மூன்றாவது நாளில், ரோஹித் சர்மா முதுகில் பிடிப்பு காரணமாக பீல்டிங்கிற்கு வரவில்லை. இதனால் ஜஸ்பிரித் பும்ரா அணித்தலைவராக இருந்தார். அவர் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வரலாற்று 100வது டெஸ்டில் 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அஸ்வின் 36வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையும் முறியடிக்கப்பட்டது.

 
இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் இன்னிங்ஸில் ஜொலித்த குல்தீப் - அஸ்வின்

குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸை 218 ரன்களுக்குள் முடித்தனர்.

இந்திய இன்னிங்ஸில் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோரின் அற்புதமான சதங்கள் அடங்கும். இவர்களைத் தவிர, தனது முதல் டெஸ்டில் விளையாடிய தேவ்தத் படிக்கல் 65 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சர்பராஸ் கான் 56 ரன்களும் எடுத்தனர்.

ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனை

41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 700வது விக்கெட்டை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் அவரது 700வது விக்கெட்.

இந்த நிலையை எட்டிய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். சுழற்பந்து வீச்சாளர்களான முத்தையா முரளிதரனும், ஷேன் வார்னும் மட்டுமே இதுவரை எழுநூறு விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சோயப் பஷீர் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய இன்னிங்ஸ் 477 ரன்களில் முடிவடைந்தது. இதன் மூலம் இந்தியா முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலை பெற்றது.

 
இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்ட நாயகன் ஜெய்ஸ்வால்

இப்போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் 9 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

குல்தீப் முதல் இன்னிங்சில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்ட நாயகனாக குல்தீப் தேர்வு செய்யப்பட்டார்.

தொடரில் 712 ரன்கள் குவித்த இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

 
இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தொடரில் 712 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம்

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியது.

வெலிங்டனில் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டு, இரண்டு முறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா முதலிடத்துக்கு முன்னேறியது.

தர்மசாலாவில் நடந்த மாபெரும் வெற்றி, இந்தியா 12 புள்ளிகளைப் பெற உதவியது. புள்ளிகள் சதவிகிம் 64.50 லிருந்து 68.51 ஆக அதிகரித்தது.

நியூசிலாந்து அணியின் புள்ளிகள் சதவிகிதம் 60 ஆக இருக்கிறது. ஆஸ்திரேலியா 59.09 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து எட்டாவது இடத்தில் உள்ளது.

 
இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவுடனான 5 போட்டி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணியின் பேஸ்பால் உத்தி பற்றி மிகவும் பரவலாகப் பேசப்பட்டது

சரணடைந்த இங்கிலாந்து

இந்தியாவுடனான 5 போட்டி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணியின் பேஸ்பால் உத்தி பற்றி மிகவும் பரவலாகப் பேசப்பட்டது. அனுபவமில்லாத வீரர்களைக் கொண்ட இந்திய அணியை எளிமையாக வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதேபோல முதல் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து 28 ரன்கள் வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோது இந்திய அணியால் வெற்றி பெற இயலவில்லை. அப்போது இந்திய அணியின் பலவீனங்கள் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கல்லம் ஆகியோர் பாராட்டுப் பெற்றனர்.

முதல் போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து சிலாகித்துப் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “தோல்வி வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை” என்று கூறினார். ஆனால் அடுத்தடுத்து 4 தோல்விகள் வரும் என்று அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் கடைசியில் போட்டியில் சரணடைவது போன்ற தோல்வி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் பாராட்டுகளைப் பெற்ற ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் ஆகியோர் இப்போது நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

“தோல்விகளில் இருந்து பாடம் கற்றிருக்கிறோம். அணியை அடுத்த போட்டிகளுக்கு முன்னெடுத்துச் செல்வோம்” என்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

https://www.bbc.com/tamil/articles/c9w9yyvmxewo



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.