Jump to content

கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 4 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU  28 JAN, 2024 | 01:50 PM

image

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான  நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்து, தமக்கான நீதி வேண்டி இரு குடும்பங்கள் சனிக்கிழமை (27) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் அயல்வீட்டுக்காரருக்கும் கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் இடையே தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்தது. 

இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்நிலையிலேயே கேப்பாப்பிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக சனிக்கிழமை (27) மாலை 3 மணியில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டவேளை, வீட்டில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் தனிமையில் இருந்தபோது, பிரச்சினைக்குரிய அயல்வீட்டு குடும்பஸ்தர், குறித்த வீட்டினுள் சென்று போதைப்பொருளை வைத்துவிட்டு, பொலிஸாரை அழைத்து வந்ததை தொடர்ந்து, இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல்வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை. இது தொடர்பில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தே இந்த இரண்டு குடும்பங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

IMG_20240128_11344292.jpg

IMG-20240127-WA0093.jpg

https://www.virakesari.lk/article/174973

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

30 JAN, 2024 | 05:10 PM
image
 

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அயல் வீட்டு குடும்பஸ்தரினால் குறித்த கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்த நிலையில் அது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே கேப்பாபிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நான்கு நாட்களாக தொடர்ச்சியான முறையில் இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றையநாள் நான்காவது நாளாக தொடரும் இவர்களின் போராட்டத்தினை குறித்த பகுதி கிராம அலுவலரோ, பொலிஸாரோ கண்டுகொள்ளவில்லை. இதுவரை குறித்த போராட்டத்திற்கான நீதி கிடைக்காததனால் இரு குடும்பங்களும் வீட்டிற்கு செல்ல முடியாமலும், வீட்டில் இருக்க பாதுகாப்பற்ற நிலையிலும் வீதியிலேயே இருக்கின்றனர். 

குறித்த போராட்டத்தில் ஈடுபடும் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கும் போது குறித்த பகுதி கிராம அலுவலரும் தம்மை கண்டு கொள்ளவில்லை எனவும், பொலிஸார் நேரடியாக நீதிமன்றத்துக்கே தம்மை அனுப்புவதாகவும், தமக்கு குழந்தைகளும் இருப்பதனால் வீதியில் தொடர்ச்சியாக கொசுகடிக்குள் இருக்க முடியாது,வேலைக்கும் செல்ல முடியாது, வருமானமும் இல்லாமல் போக நாம் வீதியிலையே இருக்கின்றோம். எம் பிள்ளைகள் வீதியிலே போகும்போது எதிராளிகள் துப்புகின்றனர். எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கின்றது எனவும், எம் உயிர் போக முன்னமே சமாதானமாக வாழ நீதியை பெற்றுதருமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை வீட்டில் தனிமையில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தபோது பிரச்சினைக்குரிய அயல் வீட்டு குடும்பஸ்தர் அங்கு சென்று போதைப்பொருளை வைத்து விட்டு பொலிஸாரை அழைத்துவந்து குறித்த இரு சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல் வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்தும் நியாயம் கிடைக்கவில்லை எனவும் அதற்கான நீதி தமக்கு வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி இரு குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கேப்பாபிலவில் தீர்வுகளின்றி 4 ஆவது நாளாக தொடரும் இரு குடும்பங்களின் போராட்டம்! | Virakesari.lk

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.