Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
30 JAN, 2024 | 01:25 PM
image
 

அரச இரகசியங்களை பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டில் பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சிபெர்வழக்கு என அழைக்கப்படும் விவகாரம் தொடர்பிலேயே பாக்கிஸ்தான் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

பாக்கிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூட் குரேசியும் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கும் நீதிமன்றம் பத்துவருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

அரசஇரகசியங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டு - இம்ரானிற்கு பத்து வருட சிறை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை!

January 31, 2024  11:40 am

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது சிறையில் உள்ள இம்ரானுக்கு அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நேற்று (30) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இம்ரான் 2022 இல் பிரதமர் பதவியில் இருந்து அவரது எதிரிகளால் வெளியேற்றப்பட்டார்.

மேலும் ஊழல் குற்றச்சாட்டில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

ஆனால் இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என்று இம்ரான் கூறுகிறார்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=183439

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை - என்ன காரணம்?

இம்ரான் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

செவ்வாயன்று அவர் நாட்டின் ரகசியங்களைக் கசியவிட்டதற்காக 10 ஆண்டுகள் தண்டனை பெற்றார். புதன்கிழமையன்றும் ஓர் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் வழங்கப்பட்டது.

தனக்கு எதிரான பல வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

 

ரகசியங்களை கசியவிட்ட வழக்கு என்ன?

இம்ரான் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மார்ச் 2022இல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடங்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி வைத்தார்.

மார்ச் 2022இல் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் கட்சி பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். மேடையில் பேசிய இம்ரான் கான் தனது ஆட்சியைக் கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் திட்டம் போடுவதாகக் கூறி தனது சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத் துண்டை வெளியே எடுத்துக் காட்டினார்.

இம்ரான் கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அனைவரும் மன்னிக்கப்படுவீர்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இம்ரான் கான் கூறினார். இதற்குப் பின்னணியில் எந்த நாடு இருக்கிறது என்பதை இம்ரான் கான் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

அதேநேரம், அவர் அமெரிக்காவை விமர்சிக்கவும் தவறவில்லை. இந்தச் சம்பவம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற சதி வேலை நடப்பதாக இம்ரான் கான் முன்வைத்த குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்தது.

பாகிஸ்தான் தூதர் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பிய ரகசிய தூதரக கடிதங்களை பொதுவெளியில் பிரதமரே பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் பின்னணியிலும் அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் சந்தேகம் தெரிவித்தார்.

 
Play video, "பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை - ஏன்?", கால அளவு 3,39
03:39p0h80jf2.jpg
காணொளிக் குறிப்பு,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை - ஏன்?

பத்து ஆண்டு சிறை

இந்த நிலையில் இம்ரான் கானின் பதவி பறிபோன பிறகு, ஜூலை 2023இல் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923இன் படி, முன்னாள் பிரதமர் மீது அரசு ரகசியங்களை பொது வெளியில் கசியவிட்டதாகக் குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு நீதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கை விசாரித்த பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம், இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குரைஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிமன்றத் தீர்ப்பு கேலிக்கூத்தானது என்றும் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது.

இம்ரான் கானின் எக்ஸ் பக்கத்திலும் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு பற்றி இம்ரான் கான் கருத்து

இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"சைஃபர் வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தால் இரண்டு முறை செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரு வழக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இரண்டு முறையும் இந்த வழக்கு அரசமைப்பு மற்றும் சட்டத்தை மீறி நடத்தப்பட்டது. இந்த வழக்கு பொய், மிரட்டல், சதி, வஞ்சகத்தால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அதனால்தான் உச்சநீதிமன்றமும் எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியது.

இப்போது முக்கிய சாட்சிகளின் வாக்குமூலத்தில் எனக்கும், ஷா மெஹ்மூத்துக்கும் எதிராக எதுவும் வெளிவராததால், இதன் பின்னணியில் உள்ளவர்கள் பீதியடைந்துவிட்டனர்.

மேலும் சட்ட விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் இதை விரைவாக முடித்துவிட நினைக்கிறார்கள்," என இம்ரான் கானின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட முடியுமா?

முன்னதாக, 2023 ஆகஸ்ட் மாதத்தில் அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தண்டனையை உச்ச நீதிமன்றம் அண்மையில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது சைஃபர் வழக்கில் 10 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கானால் அதில் போட்டியிட முடியாது. தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் பிடிஐ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/cv2w1yjjydko

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான்கானுக்கும் மனைவிக்கும் மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

03 FEB, 2024 | 09:07 PM
image
 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக மேலும் ஒரு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சிறைத்தண்டனை திருமண சட்டத்தை மீறியதற்காகவே விதிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றத்துக்காக அவர்களுக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

https://www.virakesari.lk/article/175488

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் கானின் 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

Published By: VISHNU   01 APR, 2024 | 08:22 PM

image
 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலிக்க முடிவு செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இருப்பினும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஏனைய குற்றச்சாட்டுகள் காரணமாக இன்னும் சிறையில் உள்ளார்.

https://www.virakesari.lk/article/180189

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.