Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
09 FEB, 2024 | 12:49 PM
image

கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரச பொது நிதிக் குழு மற்றும் வெரிட்டே ரிசேர்ச் (Verité Research) நிறுவனம் பகுப்பாய்வின் பிரகாரம், தெற்காசியாவிலேயே நமது நாடுதான் அதிக மின்சாரக் கட்டணத்தை அறவிடுகிறது.

தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டில் 3 மடங்கு அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கையில் 100 மின்சார அலகுகளுக்கு மாதத்துக்கு 5280 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 2078 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.

200 அலகுகளுக்கு எமது நாட்டில் 12960 ரூபாய் வசூலிக்கப்படுவதோடு தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 4609 ரூபாவே வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனென்றால், ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் மட்டுமின்றி, தொழில்முனைவோருக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சலுகை வழங்குங்கள். வாக்குகளை இலக்காகக் கொண்டு மின் கட்டணத்தை 4 சதவீதமாக குறைத்த விடயத்தில் திருப்திபட முடியாது.

மக்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக கட்டணக் குறைப்பை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/175965

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை என்னவென்றால்.. இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கிய கடனுக்கு வட்டியும் வாடிக்கையாளர்களிடம் இருந்தே அறவிடப்படுவது தான்.

ஆக.. வாடிக்கையாளர்களின் நிதியில்.. இயக்க வைக்கப்படும் ஒரு அரச ஸ்தாபனமாகவே இலங்கை மின்சார சபை இருக்குது. அதற்கென்று ஒரு தெளிவான செயற்திட்ட நடைமுறை இருக்கா என்பது கேள்விக்குறியே. இதுவே வாடிக்கையாளர்கள் மீது நிதிச் சுமையை அதிகரிக்கப்படக் காரணம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வீட்டு மின்சார செலவினங்கள் அதிகம் - வெறிட்டே ரிசர்ச் ஆய்வு

9-3.jpg

தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வீட்டு மின்சார செலவினங்கள் அதிகமாக உள்ளமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

வெறிட்டே ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட பகுப்பாய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, தெற்காசியாவில் உள்ள நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான மின்சார கட்டணத்தில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மின்சார விநியோக செலவும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள குடும்பங்கள், ஏனைய தெற்காசிய நாடுகளில் உள்ள மின்கட்டணத்தை விடவும் 2.5 முதல் 3 மடங்கு அதிகமாக மின்கட்டணத்தை செலுத்துகின்றன.

மாதாந்தம் 100 முதல் 300 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் குடும்பங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக வெறிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 100 அலகு மின்சாரத்தை பெறுவதற்கு 2,078 ரூபாய் செலவிடப்படுகின்ற நிலையில் இலங்கையில் 5,280 ரூபாய் செலவிடப்படுவதாக அந்த நிறுனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இந்த மாதத்தில் திட்டமிடப்பட்ட மின் கட்டண குறைப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த கட்டண குறைப்பு 4 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இது ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மின்கட்டண சிக்கலை குறைந்த அளவிலேயே தீர்க்கும் என வெறிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனியார் நிறுவனமான ரிவிதனவியிடம் இருந்து 100 மொகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்துக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்காக குறித்த நிறுவனம் 132 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்துள்ளது.

https://thinakkural.lk/article/291115

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

வேடிக்கை என்னவென்றால்.. இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கிய கடனுக்கு வட்டியும் வாடிக்கையாளர்களிடம் இருந்தே அறவிடப்படுவது தான்.

வட்டி மட்டுமில்லை. அவர்களது சம்பளத்தில் பிடிக்க வேண்டிய PAYE tax உம கூட அவர்களது சம்பளத்தில் கழிப்பதில்லையாம். அதையும் மக்கள்தான் செலுத்துகிறார்கள் . எப்படி இருக்குது?

செல்வம் கொழிக்கும் நாட்டில் இந்த மின்சார கடடனம் எல்லாம் ஒன்றுமே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Cruso said:

மாசம் 6000 வருகிறது பிரிட்ஜ் இல்ல ஐயண் பண்ணுவதில்ல ,கீற்றர் இல்ல ஆனால் நூறுக்கு மேல் ஓடுகிறது மீற்றர் 90 யூனிட்டுக்கு மேல் ஒரு கட்டணம் என்று சொல்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

மாசம் 6000 வருகிறது பிரிட்ஜ் இல்ல ஐயண் பண்ணுவதில்ல ,கீற்றர் இல்ல ஆனால் நூறுக்கு மேல் ஓடுகிறது மீற்றர் 90 யூனிட்டுக்கு மேல் ஒரு கட்டணம் என்று சொல்கிறார்கள்

90 இட்கு மேல் கீழ் என்றெல்லாம் இல்லை. எப்போது என்ன கடடனம் எண்டு சொல்ல முடியாது. நினைத்த மாதிரி போட்டு அனுப்புவார்கள், நாமதான் பார்த்து காசை கட்டிவிட்டு போக வேண்டும். கடந்த மாதம் ஒருவருக்கு 17 சதம் நிலுவை எண்டு மின்சாரத்தை வெட்டி விடடார்கள். காஞ்சனா வீரசேகேர மிகவும் கண்டிப்பான ஆள். கேள்வி எல்லாம் கேட்க வேண்டாம். 😜

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Cruso said:

90 இட்கு மேல் கீழ் என்றெல்லாம் இல்லை. எப்போது என்ன கடடனம் எண்டு சொல்ல முடியாது. நினைத்த மாதிரி போட்டு அனுப்புவார்கள், நாமதான் பார்த்து காசை கட்டிவிட்டு போக வேண்டும். கடந்த மாதம் ஒருவருக்கு 17 சதம் நிலுவை எண்டு மின்சாரத்தை வெட்டி விடடார்கள். காஞ்சனா வீரசேகேர மிகவும் கண்டிப்பான ஆள். கேள்வி எல்லாம் கேட்க வேண்டாம். 😜

தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் ஆக கட்டணம் மாதம் 10000 ரூபாய் எடுத்து வைக்க வேண்டும் இல்லையென்றால் தடைதான்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் ஆக கட்டணம் மாதம் 10000 ரூபாய் எடுத்து வைக்க வேண்டும் இல்லையென்றால் தடைதான்

அம்பாறையில்தான் தண்ணீருக்கு பஞ்சமில்லயே , எதுக்கு கடடனம் செலுத்துகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Cruso said:

அம்பாறையில்தான் தண்ணீருக்கு பஞ்சமில்லயே , எதுக்கு கடடனம் செலுத்துகிறீர்கள்?

சுனாமியின் பின்னர் சகலரும் குழாய் நீர்தான் சிலர் கிணற்றை இதர தேவைகளுக்கு பாவித்தாலும் குடிப்பது குழாய் நீர்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை - காஞ்சன

ஒன்பது வருடங்களாக ஒரே மாதிரியான மின்சாரக் கட்டணத்தை வசூலித்த ஒரே நாடு இலங்கை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில் தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் நாடு இலங்கை என கூறுவது நியாயமில்லை என்றார்.

மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு பாராளுமன்றத்தில் கூச்சலிட்ட போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் எந்தவொரு யோசனையையும் முன்வைக்கவில்லை.

வழங்கப்படக்கூடிய குறைந்த கட்டண விளிம்புகள் தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கட்டண திருத்தம் தொடர்பான இறுதிப் பொறுப்பு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினுடையது என்றும், அவர்கள் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று பரிந்துரைகளை வழங்கியதன் பின்னர், மின்சார சபை மீண்டும் கட்டண முறை தொடர்பான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/291412

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவை இவர்தான் அங்கிருந்துகளைத்து விட்டு தனது எடுபிடிகளை நியமித்திருக்கிறார். எனவே அவர்களும் இவர் சொல்படிதான் நடக்கிறார்கள். இப்போது அவர்கள்மீது பழியை போடுகிறார் . எப்படி இருந்தாலும் மின்சார கடடனம் அதிகம்தான். இலங்கையில் இப்போது கூடுதலாக நீர் , காற்றாலை மூலமாகத்தான் மின்சாரம் பெறப்படுகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.