Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU   09 FEB, 2024 | 06:51 PM

image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலையில் தற்போது நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க இரட்டைச் சதம் குவித்து இலங்கைக்கான புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

001.png

அப் போட்டியில் 190 ஓட்டங்களை எட்டிய போது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை சார்பாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு உரித்தான பெத்தும் நிஸ்ஸன்க 50 ஓவர்கள் நிறைவில் 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்தியாவுக்கு எதிராக ஷார்ஜாவில் 2000ஆம் ஆண்டில் சனத் ஜயசூரிய பெற்ற 189 ஓட்டங்களே சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்  இலங்கையர் ஒருவரால் பெறப்பட்ட முன்னைய அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

002.png

பெத்தும் நிஸ்ஸன்க குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 381 ஓட்டங்களை இலங்கை குவித்தது. 

அந்த மொத்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கையினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக பதவானது.

003.png

பெத்தும் நிஸ்ஸன்க 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களை விளாசி 10ஆவது வீரராக இரட்டைச் சதம் குவித்தார்.

பெத்தும் நிஸ்ஸன்க, 88 ஓட்டங்களைப் பெற்ற அவிஷ்க பெர்னாண்டோவுடன் ஆரம்ப விக்கெட்டில் 182 ஓட்டங்களையும் 44 ஓட்டங்களைப் பெற்ற சதீர சமரவிக்ரமவுடன் 3ஆவது விக்கெட்டில் 120 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

https://www.virakesari.lk/article/175999

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிஸ்ஸன்க இரட்டைச் சதம் குவித்து சாதனை; இலங்கையின் வெற்றிக்கு மத்தியில் ஆப்கனும் சாதனை

Published By: VISHNU   09 FEB, 2024 | 11:32 PM

image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த சாதனைமிகு இரட்டைச் சதத்தின் உதவியுடன் 42 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது.

30.png

ஆப்கானிஸ்தான் சார்பாகவும் 6ஆவது விக்கெட்டில் இணைப்பாட்ட சாதனை நிலைநாட்டப்பட்டபோதிலும் இலங்கையின் வெற்றியை அவர்களால் தடுக்கமுடியாமல் போனது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 381 ஓட்டங்களைக் குவித்தது.

20.png

பெத்தும் நிஸ்ஸன்க 139 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 210 ஓட்டங்களைக் குவித்தார். 

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக முதலாவது இரட்டைச் சதத்தை விளாசியவர் என்ற சாதனையைப் படைத்தார்.

10.png

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இரட்டைச் சதம் குவித்த 10ஆவது வீரர் பெத்தும் நிஸ்ஸன்க ஆவார்.

சச்சின் டெண்டுல்கார்தான் முதன் முதலில் சரவ்தேச ஒருநாள் கிரிக்கேட் போட்டியில் இரட்டைச் சதம் குவித்தவர்.

அவரைத் தொடர்ந்து விரேந்தர் சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கேல், மார்ட்டின் கப்டில், பக்கார் ஸமான், இஷான் கிஷான், ஷுப்மான் கில், க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் அவர்களுக்கு அடுத்து பெத்தும் நிஸ்ஸன்கவும் இதே வரிசையில் இரட்டைச் சதம் குவித்து அசத்தினர்.

40.png

ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் சிக்ஸ்கள் உட்பட 28 பவுண்டறிகள் குவித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக பவுண்டறிகள் குவித்த இலங்கை வீரர் என்ற சாதனையையும் பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார்.

அத்துடன் சிக்ஸ்கள் உட்பட 28 பவுண்டறிகள் குவித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக பவுண்டறிகள் குவித்த இலங்கை வீரர் என்ற சாதனையையும் பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார்.

அவிஷ்க பெர்னாண்டோவுடன் 158 பந்துகளில் 182 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த பெத்தும் நிஸ்ஸன்க, 3ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் மேலும் 120 ஓட்டங்களை சதீர சமரவிக்ரவுடன் பகிர்ந்தார்.

அவிஷ்க பெர்னாண்டோ 88 பந்துகளில் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 88 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

அணித் தலைவர் குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் மீண்டும் பிரகாசிக்கத் தவறி 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். சரித் அசலன்க 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் பரீத் அஹ்மத் 79 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 33 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதல் 5 விக்கெட்களை வெறும் 55 ஓட்டங்களுக்கு இழந்த ஆப்கானிஸ்தான் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், அஸமத்துல்லா ஓமர்ஸாய், மூத்த அனுபசாலி மொஹமத் நபி ஆகிய இருவரும அதிரடியாக துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 242 ஓட்டங்களைக் பகிர்ந்து இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.

மொஹமத் நபி தனது 2ஆவது சதத்தைக் குவித்ததுடன் அஸமத்துல்லா ஓமர்ஸாய் கன்னிச் சதத்தைப் பெற்றார்.

சகல நாடுகளுக்கும் எதிராக ஆப்கானிஸ்தானின் அவர்கள் இருவரும் அதிசிறந்த இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்டம் இதுவாகும். அத்துடன் ஆப்கானிஸ்தானின் 6ஆவது விக்கெட்டுக்கான அதி சிறந்த இணைப்பாட்டமாகவும் இது அமைந்தது.

மொஹமத் நபியின் விக்கெட்டை ப்ரமோத் மதுஷான் வீழ்த்தியதன் மூலம் இணைப்பாட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராமில் கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 256 ஓட்டங்களே ஆப்கானிஸ்தானின் அதிசிறந்த இணைப்பாட்டமாகும்.

மொஹமத் நபி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 130 பந்துகளில் 15 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 136 ஓட்டங்களைப் பெற்றார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை  இதுவாகும்.

மொஹமத் நபிக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 115 பந்துகளில் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 149 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமலிருந்தார்.

பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 75 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க.

https://www.virakesari.lk/article/176009

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கையர்!

pathum-nissanka.jpg

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராக பெத்தும் நிஸங்க சாதனை படைத்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 139 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்ஸர்களுடன் 210 ஓட்டங்களைக் குவித்தார்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இதற்கு முன்னர் சனத் ஜயசூரிய பெற்ற 188 ஓட்டங்களே இலங்கை சார்பாக வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

24 வருடங்களுக்கு முன்னர் சனத் ஜயசூரிய பெற்றிருந்த சாதனையை பெத்தும் நிஸங்க நேற்று முறியத்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார்.

https://thinakkural.lk/article/291221

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெத்தும் மீண்டும் அபார சதம், தொடரில் 346 ஓட்டங்கள்; ஆப்கானுடனான தொடரை இலங்கை முழுமையாக சுவீகரித்தது

Published By: VISHNU   14 FEB, 2024 | 10:40 PM

image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (14) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

2.png

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0  என்ற ஆட்டக் கணக்கில்  இலங்கை  முழுமையாக சுவீகரித்தது.  

ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 35.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதம், அவிஷ்க பெர்னாண்டோவின் அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின.

இந்தத் தொடரில் அபாராமாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க தனது 52ஆவது போட்டியில் 44ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை வீரர்களில் குறைந்த போட்டிகளில் 2,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த வீரர் என்ற சாதனைக்கு உரித்தானார்.

இன்றைய கடைசிப் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்கவும் அவிஷ்க பெர்னாண்டோவும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 173 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் இந்தத் தொடரில் பகிர்ந்த இரண்டாவது சத இணைப்பாட்டம் இதுவாகும். முதலாவது போட்டியில் இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 182 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவிஷ்க பெர்னாண்டோ 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கவனக்குறைவான அடி தெரிவினால் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 66 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களை விளாசினார்.

1.png

அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டம் இழந்த பின்னர் குசல் மெண்டிஸுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 78 ஓட்டங்களை பெத்தும் நிஸ்ஸன்க பகிர்ந்தார்.

குசல் மெண்டிஸ் 40 ஓட்டங்களைப் பெற்றார்..

3.png

மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தம் நிஸ்ஸன்க 101 பந்துகளில் 16 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 118 ஓட்டங்களைக் குவித்தார்.

அணியின் வெற்றிக்கு மேலும் 14 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்ட நிலையில் பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்தார்.

சதீர சமரவிக்ரம 8 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் வெற்றி இலக்கை அடைய உதவினர்..

பந்துவீச்சில் கய்ஸ் அஹ்மத் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.

ரஹ்மத்துல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, அஸமத்துல்லா ஓமர்ஸாய் ஆகியோரின் திறமையான துடுப்பாட்ட உதவியுடன் ஆப்கானிஸ்தான் 40ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், ஆப்கானிஸ்தான் அதன் பின்னர் மோசமாகத் துடுப்பெடுத்தாடி கடைசி 6 விக்கெட்களை வெறும் 43 ஓட்டங்களுக்கு இழந்தது.

மொத்த எண்ணிக்கை 39 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 13 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.

அதன் பின்னர் மற்றைய ஆரம்ப வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா 57 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குர்பாஸ் 48 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

குர்பாஸைத் தொடர்ந்து சொற்ப நேரத்தில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிடி 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (108 - 3 விக்.)

இந் நிலையில் ரஹ்மத் ஷாவும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாயும் 4 ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ரஹ்மத் ஷா திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 2ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், இக்ரம் அலிகில் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 5ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து  அணியைப் பலமான நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தனர்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 223 ஓட்டங்களாக இருந்தபோது இக்ரம் அலி 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அவர் உட்பட கடைசி 6 விக்கெட்கள் 43 ஓட்டங்களுக்கு சரிந்தன.

அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 54 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டு வெளியேறினார்.

இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் கடைசி 9 விக்கெட்களை 25 ஓட்டங்களுக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சுருட்டியமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அணிக்கு மீளழைக்கப்பட்ட துனித் வெல்லாலகே 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் 3 வருடங்களுக்குப் பின்னர் விளையாடும் அக்கில தனஞ்சய 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் பெத்தும் நிஸ்ஸன்க தனதாக்கிக்கொண்டார்.

4.png

அவர் மூன்று போட்டிகளில் ஒரு இரட்டைச் சதம், ஒரு சதம் உட்பட 173.00 என்ற சராசரியுடன் 346 ஓட்டங்களை மொத்தமாகப் பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையாகவும் இது அமைந்தது.

முதல் போட்டியில் சாதனைமிகு 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன் அடுத்த இரண்டு போட்டிகளில் 18 ஓட்டங்களையும் 118 ஓட்டங்களையும் பெற்றார்.

https://www.virakesari.lk/article/176402

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிர்கொள்வதற்கு கடினமான பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண - ஏஞ்சலோ மெத்யூஸ்

20 FEB, 2024 | 07:58 PM
image

(நெவில் அன்தனி)

வலைப் பயிற்சியின் போது எதிர்கொள்ளும் கடினமான பந்து வீச்சாளர்களில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவும் ஒருவர் என இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர். முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றியீட்டிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

'வலைப் பயிற்சியின்போது மதீஷ பத்திரனவை எதிர்கொள்வதே எமக்கு உள்ள மிகப்பெரிய சவால் என நான் கருதுகிறேன். அவரது வித்தியாசமான பந்துவீச்சுப் பாணி காரணமாக  பல துடுப்பாட்டவீரர்களுக்கு பந்து தெரிவதில்லை.

மற்றைய விடயம் தான் பந்து வரும் வேகம். மணித்தியாலத்திற்கு 152 கிலோ மீற்றர் வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வரும்போது  பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று நினைக்கிறேன்.

uls.gif

கையை நேராக்கி 150 (கிலோ மீற்றர்) வேகத்தில் பந்துவீசுவது கடினமான காரியம். எனவே அவரது பந்துவீச்சு பாணிக்கு ஏற்ப அவர் பக்கவாட்டில் பந்துவீசும்போது அவரை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை யாருக்கும் நினைத்துப்பார்க்கக் கூடியதாக இருக்கும்.

'அவர் தொழில்முறை கிரிக்கெட் விளையாடி நிறைய அனுபவம் பெற்றுள்ளார். எனவே கடைசி ஓவரில் 12 ஓட்டங்களைத் தக்கவைத்துக்கொள்ளுமாறு அவரை கோரினால், அவர் 10 போட்டிகளில் 9இல் அல்லது 8இல் வெற்றியை ஈட்டிக்கொடுப்பார்.

ஏனெனில் அவ்வளவுக்கு கடினமான பந்துவீச்சாளர் என்பதால் அவரை எதிர்கொள்வது கடினமாகும். எனவே அவரை நாம் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவரை பாதுகாக்க வேண்டும். அவர் தனது உடல் தகுதியையும் ஒழுக்கத்தையும் மிகவும் சிறப்பாக வைத்திருக்கும் வீரர்' என மேத்யூஸ் குறிப்பிட்டார்.

இரண்டாவது போட்டியில் மதீஷ பத்திரண 4 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை இலகுவாக்கி இருந்தார்.

https://www.virakesari.lk/article/176904

ஆப்கானிஸ்தானுடனான பரபரப்பான முதலாவது ரி20யில் இலங்கை 4 ஓட்டங்களால் வெற்றி

Published By: VISHNU   17 FEB, 2024 | 11:14 PM

image
 

(நெவில் அன்தனி)

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (17) நடைபெற்ற இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான வரலாற்று முக்கியம் வாய்ந்த முதலாவது இருதரப்பு ரி20 தொடரின் ஆரம்பப் போட்டியில் 4 ஓட்டங்களால் இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

002.png

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 161 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

004.png

இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவின் அதிரடி அரைச் சதம், மதீஷ பத்திரணவின் 4 விக்கெட் குவியல், பினுர பெர்னாண்டோவின் கட்டுப்பாடான கடைசி ஓவர் என்பன இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

001.png

ஆப்கானிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையின் முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் அசத்திய போதிலும் இந்தப் போட்டியில் அவர்களது ஜம்பம் பலிக்கவில்லை.

போட்டியின் 8ஆவது ஓவரில் இலங்கை 4 முன்னணி வீரர்களை இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

இலங்கையின் ஒருநாள் கிரிக்கெட் சாதனை நாயகன் பெத்தும் நிஸ்ஸன்க (6), குசல் மெண்டிஸ் (10), தனஞ்சய டி சில்வா (24), சரித் அசலன்க (3) ஆகிய நால்வரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் துடுப்பாட்ட வரிசையில் துணிச்சலுடன் தன்னை உயர்த்திக்கொண்டு களம் இறங்கிய வனிந்து ஹசரங்க ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அதிரடியில் இறங்கினார்.

அவரும் சதீர சமரவிக்ரமவும் 5ஆவது விக்கெட்டில் 41 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

சதீர சமரவிக்ரம 25 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் வனிந்து ஹசரங்க ஆட்டம் இழந்தார். 32 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட வனிந்து ஹசரங்க 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 67 ஓட்டங்களைக் குவித்தார்.

மத்திய மற்றும் பின்வரசையில் எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.

பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் வெற்றி இலக்கை 5 ஓட்டங்களால் அடையத் தவறியது.

அணித் தலைவரும் ஆரம்ப வீரருமான இப்ராஹிம் ஸத்ரான் கடைசிவரை தனி ஒருவராக போராடி 55 பந்துகளில் 8 பவுண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அது பலன் தராமல் போனது.

குல்பாதின் நய்புடன் 2ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களையும் கரிம் ஜனாத்துடன் 6ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களையும் ஸத்ரான் பகிர்ந்தார். ஆனால் ஏனைய துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து போதிய பங்களிப்பு கிடைக்காததால் ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவியது.

ஸத்ரானைவிட கரிம் ஜனாத் 20 ஓட்டங்களையும் குல்பாதின் நய்ப் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி ஓவரை கட்டுப்பாட்டுடன் ஸத்ரானுக்கு வீசிய பினுர பெர்னாண்டோ முதல் 4 பந்துகளில் ஓட்டம் கொடுக்காமல் கடைசி 2 பந்தகளில் மாத்திரம் 6 ஓட்டங்களைக் கொடுத்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் மதீஷ பத்திரண 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையம் தசுன் ஷானக்க 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மதீஷ பத்திரண.

https://www.virakesari.lk/article/176645

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கைக்கு இலகு வெற்றி: ரி20இல் ஹசரங்க 100 விக்கெட்கள், சகலதுறைகளில் மெத்யூஸ் பிரகாசிப்பு

Published By: VISHNU   19 FEB, 2024 | 11:18 PM

image
 

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்த இலங்கை 72 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

wnaindu_hasaranga.png

இந்த வெற்றியுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியம்வாய்ந்த முதுலாவது ரி20 கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்து தொடரைக் தனதாக்கிக்கொண்டது.

03.png

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா ஸத்ரானின் விக்கெட்டை நேரடியாகப் பதம் பார்த்த வனிந்து ஹசரங்க தனது 63ஆவது போட்டியில் 100ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார். மேலும் ஒரு விக்கெட்டை இந்தப் போட்டியில் கைப்பற்றிய அவர் 101 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியுள்ளார்.

02.png

ஆப்கன் சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ரஷீத் கானுக்கு அடுத்ததாக அதிவேகமாக (குறைந்த போட்டிகள்) 100 விக்கெட்களை வீழ்த்தியவர் ஹசரங்க ஆவார். ரஷீத் கான் 53 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

01.png

அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் லசித் மாலிங்கவுக்கு அடுத்ததாக 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்த இரண்டாவது இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க ஆவார். சர்வதேச ரி20 அரங்கில் 100 விக்கெட்களைக் கைப்பற்றிய 11ஆவது வீரராவார்.

இன்றைய போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸின் சகலதுறை ஆட்டம், சதீர சமரவிக்ரம நிதானமாக குவித்த அரைச் சதம், பினுர பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திரண ஆகியோரின் துல்லியமான பந்துவீச்ச என்பன இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின.

இன்றைய போட்டியில் 2 விக்கெட்களைக் கைப்பற்றிய மதீஷ பத்திரண இதுவரை மொத்தமாக 6 விக்கெட்களைக் கைப்பற்றி இந்தத் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் வரிசையில் முன்னிலையில் இருக்கிறார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைக் குவித்தது.

சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் கடைசி ஓவர்களில் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டங்களே இலங்கைக்கு கணிசமான மொத்த எண்ணிக்கையை பெற்றுக்கொடுத்தன.

பெத்தும் நிஸ்ஸன்க (25), குசல் மெண்டிஸ் (23) ஆகிய இருவரும் 23 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் 4 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வாவும் சதீர சமரவிக்ரமவும் 3ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தனஞ்சய 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

முதலாவது போட்டியில் அதிரடியாக அரைச் சதம் குவித்த வனிந்து ஹசரங்க இந்தப் போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 பந்துகளில் 22 ஓட்டங்களை விளாசி ஆட்டம் இழந்தார். (110 - 4 விக்.)

அடுத்து  களம் புகுந்த சரித் அசலன்க (4) நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை.

இந் நிலையில் சதீர சமரவிக்ரமவுடன் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸ் நிதானத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தார்.

முதல் 12 பந்துகளில் 9 ஓட்டங்களைப் பெற்ற அவர் அதன் பின்னர் 10 பந்துகளில் 30 ஓட்டங்களை விளாசி 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 4 சிக்ஸ்களையும் 2 பவுண்டறிகளை அடித்தார்.

மறுபக்கத்தில் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம 42 பந்துகளில் 5 பவுண்டறிகளுடன் 51 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் மொஹமத் நய்ப் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

188 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 17 ஓவர்களில் சகல  விக்கெட்களையும் இழந்து ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் தவறான அடி தெரிவுகளால் விக்கெட்களைத் தாரை வார்த்தனர்.

கரிம் ஜனாத் (28), மொஹமத் நபி (27) ஆகிய இருவரே ஆப்கானிஸ்தான் சார்பாக 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

ஏஞ்சலோ மெத்யூஸ் தனது முதல் இரண்டு ஓவர்களை மிகவும் துல்லியமாக வீசி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைப் கைப்ற்றி ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடியைக் கொடுத்தார்.

அவரை விட பினுர பெர்னாண்டோ 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஏஞ்சலோ மெத்யூஸ்

https://www.virakesari.lk/article/176806

  • nunavilan changed the title to இலங்கை - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புகிறது ஆப்கானிஸ்தான்

Published By: VISHNU   22 FEB, 2024 | 12:28 AM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (21) இரவு நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

02.png

இலங்கையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது, அந்த ஓவரில் கமிந்து மெண்டிஸினால் 14 ஓட்டங்களையே பெறமுடிந்தது. ஒரு வைட் கிடைக்க ஆப்கானிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இலங்கைக்கான விஜயத்தில் ஒற்றை டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் முழுமையாகத் தொல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் தனது கடைசி முயற்சியில் வெற்றியீட்டிய ஆறுதலுடன் நாடு  திரும்புகிறது.

03.png

எவ்வாறாயினும் சர்வதேச ரி 20 கிரிக்கெட் தொடரையும் 2 - 1 எனற ஆட்டக் கணக்கில்  இலங்கை தனதாக்கிக்கொண்டது.

ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

01.png

இந்தப் போட்டியில் களத்தடுப்பில் விட்ட தவறுகளும் பெத்தும் நிஸ்ஸன்க உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற நேரிட்டதும் இலங்கையின் தோல்விக்கு காரணங்களாக அமைந்தன.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 34 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

af.png

ஆனால், குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

அணியில் மீண்டும் இடம்பிடித்த குசல் பெரேரா 2 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 53ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இடது காலில் உபாதைக்குள்ளாகி கடும் சிரமத்தை எதிர்கொண்டார்.

அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார். ஆனால் 60 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவர் மீண்டும் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார்.

அணித் தலைவர் வனிந்து ஹசரங்க முதல் இரண்டு போட்டிகளில் போன்று அதிரடியில் இறங்க முயற்சித்தபோதிலும் இம்முறை அது பலிக்கவில்லை. அவர் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

சதீர சமரவிக்ரமவும் கமிந்து மெண்டிஸும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சமரவிக்ரம 23 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஏஞ்சலோ மெத்யூஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்து 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் கமிந்து மெண்டிஸ் தனது மீள்வருகையில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து அதிரடியை ஆரம்பித்த தசுன் ஷானக்க, இலங்கையின் வெற்றிக்கு 7 பந்துகளில் 23 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 13 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.

அடுத்து களம் புகுந்த அக்கில தனஞ்சய பவுண்டறி அடித்து வெற்றிக்கு தேவைப்பட்ட எண்ணிக்கையை 19 ஓட்டங்களாகக் குறைந்தார். ஆனால், கடைசி ஓவரில் 3 பந்துகள் வீணடிக்கப்பட்டதால் ஆப்கானிஸ்தான் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.

கமிந்து மெண்டிஸ் 39 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 65 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மொஹமத் நபி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது.

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் இலங்கைக்கு எதிராக ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் 200 ஓட்டங்களைக் கடந்ததும் இதுவே முதல் தடவையாகும்.

ஷார்ஜாவில் 2022ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்களை இழந்து பெற்ற 175 ஓட்டங்களே இலங்கைக்கு எதிராக அதன் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இதற்கு முன்னர் இருந்தது.

ஆரம்ப வீரர்களான ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 44 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

இலங்கைக்கு எதிரான ரி20 போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தானின் அதிசிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகவும் இது பதிவானது.

ஹசரத்துல்லா ஸஸாய் 22 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவர் இப்ராஹிம் ஸத்ரான் 10 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார்.

மொத்த எண்ணிக்கை 141 ஓட்டங்களாக இருந்தபோது ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டம் இழந்தார். அவர் 43 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

மொஹமத் நபி, மொஹமத் இஷாக் ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் அக்கில தனஞ்சய 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ரஹ்மானுல்லா குர்பாஸ்.

தொடர்நாயகன்: வனிந்து ஹசரங்க

https://www.virakesari.lk/article/176999

Posted

 

நடுவரை முறையற்ற வகையில் பேசிய வனிந்துவிற்கு போட்டித் தடை

 
image
 

இலங்கை இருபதுக்கு - 20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு இரண்டு சர்வதேச போட்டித் தடையும் கடந்த போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியின் பின்னர் ஒழுக்கமின்றிய முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் அவருக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐ.சி.சி.) இனால் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக வனிந்து ஹசரங்கவுக்கு ஒரு குற்றப் புள்ளியை வழங்கவும் சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் மார்ச் 04 – 06 ஆம் திகதிகளில் நடைபெற்றவுள்ள பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் வணிந்துவுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காது.

ஆப்கானிஸ்தான் அணியுடனான 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டியின் போது, இலங்கை நடுவரான லிண்டன் ஹன்னிபல், போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி ஓவரில் இடுப்புக்கு மேலாக மிக உயரமாக சென்ற பந்தை ‘நோ போல்’ என அடையாளப்படுத்தாமை தொடர்பில், ஊடகவிலளாயர் சந்திப்பின்போது நடுவரை முறையற்ற விதத்தில் பேசி, நடுவரின் முடிவுகளை விமர்சித்ததற்காகவும் வனிந்து ஹசரங்கவுக்கு குறித்த போட்டித்தடையும் அபராதமும் வழங்கப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வனிந்து, குறித்த பந்தை அவரால் சரியாக கணிக்க முடியாவிட்டால், அவர் வேறு தொழிலுக்குச் செல்லலாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177187

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல‌ங்கை அணி ந‌ல்லா விளையாடிச்சின‌ம்

 

ப‌ர்ரும் நிச‌ங்காவின் இர‌ட்டை ச‌த‌ம் அருமை..........வாழ்த்துக்க‌ள்.................இலங்கையின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம்...........3வ‌து 20ஓவ‌ர் விளையாட்டில் ந‌ல்லா விளையாடிட்டு இருந்த‌ போது ந‌ல்ல‌ ஒரு சிக்ஸ் அடிக்கும் போது காய‌ப் ப‌ட்டு வெளி ஏறினார் மைதான‌த்தில் நின்று இருக்க‌னும் மூன்றாவ‌து ம‌ச்சையும் வென்று இருக்கும் இல‌ங்கை அணி...................



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.