Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழகு நிறைந்த ஃபிளமிங்கோ பறவைகள்!

Published By: DIGITAL DESK 3   14 FEB, 2024 | 10:32 AM

image

“ஃபிளமிங்கோ” வலசை பறவைகள் மன்னார் பகுதியில் காணப்படுகிறது. இங்கு உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதாக அறியப்படுகிறது. 

இவ்வாறு இடம்பெயரும் பறவைகளுள், மிகவும் அரிதான மற்றும் மிகவும் உணர்திறன் கொண்ட பறவை ஃபிளமிங்கோ ஆகும்.  தற்போது அவை அனைத்தும் மன்னாரில் குவிந்துள்ளன. 

இடம்பெயர்ந்த காலம் எப்போதுமே பார்வையாளர்களுக்கு ஒரு உற்சாகமான நேரமாக உள்ளது, அவர்கள் மன்னாரின் ஈரநிலங்களில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக செலவழிக்கும் அழகான மற்றும் கம்பீரமான ஃபிளமிங்கோ பறவைகளை ஓய்வு நேரத்தில் பார்க்கவும், ஆச்சரியப்படுத்தவும், படிக்கவும் மற்றும் புகைப்படம் எடுக்கவும் இணையற்ற வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

இந்த வகை பறவைகள் நவம்பரில் மாதம் முதல் ஏப்ரல் வரை தங்கியிருக்கும். அவைகள் இலங்கைக்கு மட்டுமன்றி, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கும் இடம்பெயர்கின்றன.

ஃபிளமிங்கோ பறைவைகளை புகைப்படம் பிடித்த வனவிலங்கு புகைப்பட  கலைஞர் ஏ.எல் முஹமட் ரசீம் தெரிவிக்கையில், 

மன்னாரில் தற்போது சுமார் 3,000 க்கும்  அதிகமான ஃபிளமிங்கோ பறைவைகளை என்னால் அவதானிக்க கிடைத்தது. ஆனால் பல ஆண்டுகளாக எண்ணிக்கையில் தெளிவான ஏற்ற இறக்கத்தை காணக்கூடியதாக உள்ளது. "2012 இல், 12,000 ஃபிளமிங்கோ பறவைகள் இருந்தன, ஆனால் அது 1,500 ஆகவும் குறைந்து  பின்னர் 7,000 ஆக உயர்ந்தது. பின்னர் சென்ற வருடம் 3,000 தெடக்கம் 5,000 வரை  இருந்தது. தற்போது அது 3,000 ஃபிளமிங்கோ பறவையாக உள்ளது." 

அந்த வகையில் இந்த ஃபிளமிங்கோ பறவைகளை காண அதிமான வெளிநாட்வர்கள் வந்துள்ளனர். இந்த வருடம் பல நாட்கள் நான் மன்னார் சென்று இந்த புகைப்படங்களை எடுத்து வருகின்றேன்.

WhatsApp_Image_2024-02-14_at_9.35.05_AM.

WhatsApp_Image_2024-02-14_at_9.35.04_AM_

WhatsApp_Image_2024-02-14_at_9.35.06_AM.

WhatsApp_Image_2024-02-14_at_9.35.09_AM_

WhatsApp_Image_2024-02-14_at_9.35.09_AM.

cfffdf64-8d8c-449d-91ad-9b95b35e8f5c.jpg

WhatsApp_Image_2024-02-14_at_9.35.07_AM_

df853296-b319-4f8e-8439-69a4d4058182.jpg

WhatsApp_Image_2024-02-14_at_9.35.03_AM.

https://www.virakesari.lk/article/176329

  • கருத்துக்கள உறவுகள்

செந்நாரை. 

வீரகேசரிக்கு ஏற்பட்டுள்ள தமிழ் மொழிப் பஞ்சம்  😩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்திமுத்தப் புலவரின் "நாராய் நாராய் செங்கால் நாராய்" - செ .பாஸ்கரன்

கவிஞர்கள் ஏழையாக இருந்து ஊர் ஊராக  திரிந்து பாடிக்கொண்டு இருப்பார்கள். அப்படியான ஒரு கவிஞர்தான் இந்த  சத்திமுத்தபுலவர்.

நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்ற இப்பாடல் எனக்கு பிடித்த பாடல். மிகவும் எளிமையாகப் புரியக்கூடியது. புறநானூற்றுத்தொகுப்பில் இடம் பெற்ற பாடல் என்று தமிழாசிரியர் திரு. வேலையா குறிப்பிட்டுள்ளார். 

 

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

 

வரி பொருள்
நாராய் நாராய் செங்கால் நாராய் நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பழங்கள் நிறைந்த பனைமரத்து கிழங்கை பிளந்தது போன்ற
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் பவளம் போல் சிவந்த கூர்மையான அலகை கொண்ட செங்கால் நாரையே
நீயும் நின் பேடையும் தென் திசைக் குமரியாடி நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடிய பின்
வட திசைக்கு ஏகுவீராயின் வட திசைக்கு திரும்புவீரானால்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி நனைந்த சுவர்களையும் கூரையையும் கனைக்கும் பல்லிகளும் கொண்ட
பாடு பாத்திருக்கும் என் மனைவியை கண்டு வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம்
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து குளிர்காலத்தில் சரியான ஆடையில்லாமல் உடல் மெலிந்துபோய்
கையது கொண்டு மெய்யது பொத்தி போர்வை இல்லாததால் கையைக் கொண்டு உடம்பை பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப் காலைக் கொண்டு என் உடலை தழுவி
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும்

ஏழையாளனை கண்டனம் எனமே

உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள்! 

http://www.tamilmurasuaustralia.com/2019/05/blog-post_26.html

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் வங்காலை சரணாலயம் என்று ஒரு இடம் இருக்கின்றது. அங்கு நிறையவே இந்த பறவைகளுடன், சைப்பிரியன் டக் , இன்னும் நிறைய பறவைகளை காணலாம். அவை பறக்கும் ஒழுங்கை பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.