Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 FEB, 2024 | 05:18 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பொருளாதார பாதிப்புக்கு  மத்தியில் மூன்று வேளை உணவை கூட பெற்றுக் கொள்வதில் பெரும்பாலான மக்கள் போராடுகின்ற சூழ்நிலையில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளத்தை பல இலட்சக்கணக்கில் அதிகரித்துள்ளமை  எந்தளவுக்கு நியாயமானது.

சுயாதீனம் என்றுக் குறிப்பிட்டுக் கொண்டு மத்திய வங்கி தன்னிச்சையான முறையில் செயற்படும் சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு  சம்பளம் அதிகரிக்கப்பட்டதை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது 'மத்திய வங்கியின் புதிய சட்டத்துக்கு அமைய சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும், அது மத்திய வங்கியின் சுயாதீனம்' என்றும்  அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு விரும்பிய வகையில் தீர்மானம் எடுக்க இடமளிக்க கூடாது என்பதற்காகவே 'புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தோம்.

நாட்டு மக்களில் பெரும்பாலானோர் மூன்று வேளை உணவை உட்கொள்வதில் போராடுகிறார்கள். வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் திண்டாடுகிறார்கள்.

இவ்வாறான பின்னணியில் மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பல இலட்ச கணக்கில் சம்பளத்தை அதிகரிப்பது எந்தளவுக்கு நியாயமானது.

கரண்டி தம் கையில் இருப்பதால் மத்திய வங்கி எண்ணம் போல் உணவை பரிமாறிக் கொள்கிறது. ஜனாதிபதியின் பொருளாதார மீட்சி எந்தளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுயாதீனம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தன்னிச்சையாக செயற்படும் சூழலே மத்திய வங்கிக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/176889

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் இவர்களுக்கு இந்த பெரிய சம்பளத்தை கொடுப்பதில் ஆட்ச்சேபனை இருக்க முடியாது. இலாவிடடால் இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டிருக்கும். அதுவும் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக இருந்தபோது மிகவும் சிறப்பாக இருந்தது. 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வங்கி சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் - டயனா கமகே

21 FEB, 2024 | 07:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக மத்திய வங்கியை சுயாதீனப்படுத்திக் கொடுக்கவில்லை.மத்திய வங்கியின் ஆளுநரின் செயற்பாடு முற்றிலும் தவறானது,ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என சுற்றாடல் துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானது.

மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக 'புதிய வங்கி சட்டம் ' இயற்றப்படவில்லை.

நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை.தன்னிச்சையான முறையில் வங்குரோத்து நிலையை அறிவித்தார்.

நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு என்பதை அவர் கவனத்திற் கொள்ளவில்லை.மத்திய வங்கி ஆளுநரின் தவறான தீர்மானத்தால் நாடு என்ற ரீதியில் மீண்டெழ முடியாமல் உள்ளது.

மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் தொழில் செய்யும் அனைவரின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும்.

நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போது மத்திய வங்கியின் ஆளுநர் நகைப்புக்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.ஆகவே மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/176981

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வங்கி ஊழியர்களின் அபரிமிதமான சம்பள உயர்வு தொடர்பில் விமர்சனங்கள்!

மத்திய வங்கி ஊழியர்களின் அபரிமிதமான சம்பள உயர்வு தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தநிலையில் பாராளுமன்ற அனுமதியின்றி சம்பள அதிகரிப்புக்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து மத்திய வங்கியிடம் இருந்து உயர்மட்ட நாடாளுமன்ற குழு அறிக்கையை கோரியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மத்திய வங்கி அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, சம்பள உயர்வு தொடர்பான விடயம் எழுப்பப்பட்டதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இதன்படி சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய வங்கி அடுத்த வாரம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன் மத்திய வங்கியும் அதன் நாணயச் சபையும் அழைக்கப்படும் எனவும் வலேபொட தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மத்திய வங்கி ஊழியர்களின் 70 சதவீத சம்பள அதிகரிப்பு குறித்து, தமது குழு கடும் விமர்சனங்களை கொண்டுள்ளது.

அத்துடன் இது ஒழுக்கக்கேடான செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/293005

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாக சபையின் அங்கீகாரத்துடன் சம்பளம் அதிகரிக்கப்பட்டது; பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தத் தயார் - மத்திய வங்கி 

Published By: VISHNU    25 FEB, 2024 | 05:29 PM

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபையின் அங்கீகாரத்துடனும், தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தமது ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க மத்திய வங்கி தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாகக்கூறி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மத்திய வங்கி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அதேவேளை இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக எழுத்து மூல அவகாசம் கோருமாறு நிர்வாக சபையினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக, நிதியமைச்சராகக் கடமையாற்றும் ஜனாதிபதிக்கு கடந்த 22 ஆம் திகதி  மத்திய வங்கி ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பவைத்ததாகவும்  அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அவகாசத்தின் பின்னர் உரிய பாராளுமன்றக்குழுவின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க மத்திய வங்கி தயாராகவுள்ளதாக அவ்வறிக்கையில் மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177269

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

நிர்வாக சபையின் அங்கீகாரத்துடன் சம்பளம் அதிகரிக்கப்பட்டது; பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தத் தயார் - மத்திய வங்கி 

Published By: VISHNU    25 FEB, 2024 | 05:29 PM

 

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபையின் அங்கீகாரத்துடனும், தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தமது ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

www.virakesari.lk/article/177269

நிர்வாக சபையும் அவர்கள்தான், தொளிட் சங்கமும் அவர்கள்தான். அப்படி என்றால் .................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வங்கி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - உதய கம்மன்பில

Published By: VISHNU   27 FEB, 2024 | 12:02 AM

image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று உபதேசம் வழங்கும் மத்திய வங்கியின் ஆளுநர் தான் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை மத்திய வங்கியின் நிதி சபைக்கு முன்வைத்துள்ளார். மத்திய வங்கியின் பணியாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவ்வாறாயின் அனைவருக்கும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.முறையற்ற வகையில் செயற்படும் மத்திய வங்கி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களின் சம்பளம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவில் அதிகரிக்கப்படாத நிலையில் மத்திய வங்கியின் பணியாளர்களின் சம்பளம் இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று உபதேசம் வழங்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை மத்திய வங்கியின் நிதி சபைக்கு முன்வைத்துள்ளார்.

மத்திய வங்கியின் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காகச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார நெருக்கடியால் மத்திய வங்கியின் பணியாளர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்த்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை அதிகரித்துக் கொள்ளவில்லை தமது இலாபத்தில் தான் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி குறிப்பிடுகிறது. மத்திய வங்கி ஏனைய வணிக வங்கிகளை போல் போட்டித்தன்மையுடன் செயற்படும் நிறுவனமல்ல, கூட்டிணைந்த நிறுவனம். நாணயம் அச்சிடல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை மத்திய வங்கிக்கு உண்டு. ஆகவே தமது நிதியிலிருந்து தான் சம்பளம் அதிகரிக்கப்பட்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமது வளர்ச்சிக்காக மக்கள் மீதே வரி சுமத்தப்படுகிறது. ஆகவே மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு உடனடியாக இடைநிறுத்த வேண்டும். நாட்டு மக்களிடம் ஒன்றைக் குறிப்பிட்டு பிறிதொன்றை செயற்படுத்துதற்கு மத்திய வங்கி மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

புதிய மத்திய வங்கி சட்டத்தின் ஊடாக மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளதால் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் தலையிட முடியாது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இதனையே நாங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். அப்போது ஆளும் தரப்பும், எதிர்தரப்பும் எம்மை விமர்சித்தார்கள். மத்திய வங்கி எவருக்கும் பொறுப்புக் கூற கடமைப்படவில்லை. இதனால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும் என்றார்.

https://www.virakesari.lk/article/177382

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பள உயர்வு: CBSL அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு

பொது நிதிக்கான குழு (COPF) சமீபத்திய சம்பள உயர்வு தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நிர்வாக சபையை அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளது.

CBSL அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர், எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்திய ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து விளக்கம் பெறலாம் என COPF தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

‘X’ பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, COPF இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசியமான எந்தவொரு நடவடிக்கையையும் ஆராயும் என்றார்.

“CBSL சுதந்திரமானது CBSL சட்டத்தின் பிரிவு 80 (2) (a) இன் படி சட்டமன்றத்திற்கு பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டது”

வங்கியின் நிர்வாக சபையினால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் ஊதியத்தின் சமீபத்திய திருத்தம் குறித்து சமீபத்திய பாராளுமன்ற நடவடிக்கைகளில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியதை அடுத்து இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பிறகு, இலங்கை மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் (CBSL) 2024-2026 காலப்பகுதியை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களுடன் மூன்று வருட கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என தெளிவுபடுத்தியது.

இந்த விடயத்தை மேலும் தெளிவுபடுத்திய ஒன்றியம், 2024-2026 ஆம் ஆண்டுக்கான கூட்டு உடன்படிக்கையானது நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் விளைவாகும் என சுட்டிக்காட்டியது.

மத்திய வங்கியின் சம்பளம் ஏனைய சேவைகளை விட அதிகமாக உள்ளது என்பது இரகசியமல்ல என கூறிய ஒன்றியம், அழுத்தம் இல்லாமல் தங்கள் வேலையைச் செய்வதற்கு போட்டி ஊதியம் தேவை என தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/293592

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராட்டம்!

Published By: VISHNU   11 MAR, 2024 | 05:44 PM

image

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக ஆர்வலர்கள் குழுவொன்று திங்கட்கிழமை (11)   மத்திய வங்கிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியது.

'சம்பளத்தை உயர்த்த வெட்கமில்லையா, கடற்கொள்ளையர்களை விட இவர்கள் பெரிய கொள்ளையர்கள், ரூபா உயர்ந்தது - நாடு சரிந்தது - சம்பளம் உயர்த்தப்பட்டது' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

https://www.virakesari.lk/article/178457

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹங்ச அபேரத்னவிடம் கையளித்துள்ளார்.

இன்று கையளிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சரின் இணக்கப்பாட்டைப் பெறுவது கட்டாயமாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Image

https://thinakkural.lk/article/295620

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.